Posted in சினிமா

தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை

தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை
எல்லி அவுரம்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார்.

சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பலரும் எதிர்ப்பார்த்திருக்கும் இப்படத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை இணைந்திருக்கும் தகவலை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டரை தனுஷ் அவருடைய வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை எல்லி அவுரம் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருள்ளார். இதன்மூலம் இப்படத்தில் இவர் நடித்து வருவது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Posted in சினிமா

வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்

வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்

ரஜினியின் 169-வது படத்திற்கு 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் இருக்கும் பெயர் குறித்து இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்
ரஜினிகாந்த்


ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம். நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின்

டாக்டர் படங்களை டைரக்டு செய்துள்ளார். விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். ரஜினி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடமும்,

நகைச்சுவை வேடத்துக்கு வடிவேலுவிடமும் பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாராயும், சந்திரமுகி படத்தில் வடிவேலுவும் நடித்து இருந்தனர்.

ரஜினியின் 169-வது படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே எல்லா மொழிக்கும் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில்

பெயர் வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் பாஸ் என்ற பெயரும் இருக்கிறது

என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர்

இதனை உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
    Posted in இலங்கை செய்திகள்

    பொலிஸ் காவலில் இருந்த பெண் மரணம்

    பொலிஸ் காவலில் இருந்த பெண் மரணம்

    மொரவக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

    போருப்பிட்டிய, வரல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    குடும்ப வன்முறை தொடர்பில் மொரவக்க பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

    அதன்படி குறித்த பெண் நேற்று (28) மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்குச் அழைத்து சென்றுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் சுகவீனமடைந்துள்ளார்.

    பின்னர் அம்பியூலன்ஸ் மூலம் மொரவக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனை இன்று (29) நடைபெறவுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      தள்ளாடும் இலங்கை ஒரு டொலர் – 450 ரூபா –

      தள்ளாடும் இலங்கை ஒரு டொலர் – 450 ரூபா –

      நாட்டில் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த வருட இறுதியில்

      அமெரிக்க டொலர் 450 ரூபாயை அடைவதை எவராலும் தடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின் வணிக கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா இதனை தெரிவித்துள்ளார். 

      அந்த வகையில் 230 ரூபாயில் இருந்த அமெரிக்க டொலர் தற்போது 300 ரூபாயாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

        Posted in இலங்கை செய்திகள்

        அடுத்து வரும் தேர்தலில் நாமே வெல்வோம் – மகிந்தா சூளுரை

        அடுத்து வரும் தேர்தலில் நாமே வெல்வோம் – மகிந்தா சூளுரை

        பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

        உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுன கட்டாயமாக வெற்றிப்பெறும்.

        ரணில் மற்றும் சஜித்துடன் இணைந்து செய்யவேண்டிய வேலைகள் எதுவுமே என்னிடத்தில் இல்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

        இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கவில்லை எனத் தெரிவித்த
        பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அரசாங்கம் என்பது பொய்யாகும் என்றார்.

          Posted in இலங்கை செய்திகள்

          நண்பன் நீரில் மூழ்கி மரணிக்க – தப்பி ஓடிய நண்பர்கள்

          பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவனின் மரணம் தொடர்பில் மூன்று மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          குறித்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளதுடன், அவர் வீடு திரும்பாதமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27 ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

          நேற்று (28) குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

          குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், அவருடன் குளித்துக் கொண்டிருந்த ஏனைய மாணவர்கள் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

          மாணவன் காணாமல் போனது குறித்து யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்ற மூன்று மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

          Posted in இலங்கை செய்திகள்

          வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 கொடுப்பனவு

          வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 கொடுப்பனவு

          இலங்கையில் ஆளும் அரசினால் வருமானம் குறைந்த மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபா வாழுங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது

          பணம் இன்றி பொருளாதாரத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் தமது, ஆட்சியினை தக்க வைத்து கொள்ள


          அரசு இவ்விதமான ஆசை ஊட்டும் நகர்வில் ஈடுபட்டு வருகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            இந்தியா – இலங்கைக்கு இடையில் 6 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

            இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

            இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.

            இதன்படி, இலங்கை டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின் நிலையத் திட்டங்களை

            நடைமுறைப்படுத்துதல்
            தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

              Posted in உலக செய்திகள்

              வீடற்றவர்கள் முகாமிற்குள் மோதி சிதறிய கார்- 4 பேர் மரணம்

              வீடற்றவர்கள் முகாமிற்குள் மோதி சிதறிய கார்- 4 பேர் மரணம்

              அமெரிக்கா Salem, Oregon பகுதியில் வீடற்றவர்கள் வீதி ஓராமாக மரங்களின் கீழ் தற்காலிக கூடாரங்கள் அமைத்து அதற்குள் வசித்து வந்தனர்


              அவ்விதம் வசித்து வந்த அந்த மக்கள் முகாமிற்குள் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது

              இதன் பொழுது சம்பவ இடத்தில நல்லவர் பலியாகினர் ,சிலர் காயமடைந்துள்ளனர் ,24 வயதுடைய சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

                Posted in Uncategorized

                தொடராக மோதிய பல வாகனங்கள் – 3 பேர் மரணம்

                தொடராக மோதிய பல வாகனங்கள் – 3 பேர் மரணம்

                அமெரிக்கா Pennsylvania பிரதான சாலையில் 20 க்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின


                இதன் பொழுது சம்பவ இடத்தில மூவர் மரணமாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்தனர்

                அதிக சினோ காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்து பல மணி நேரம் தடை பட்டது

                  Posted in சினிமா

                  பல பெண்களுடன் உறவு -சிக்கிய நடிகர் மன்னிப்பு கேட்டார்

                  பல பெண்களுடன் உறவு -சிக்கிய நடிகர் மன்னிப்பு கேட்டார்

                  மலையாள நடிகர் விநாயகனின் சமீபத்திய சர்ச்சைக்குறிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

                  சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர் விநாயகன்
                  விநாயகன்


                  மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில்

                  நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விநாயகன் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

                  அப்போது அவர் பேசியது, கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து

                  கொள்வது தான் மீ டூ வா? எனவும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று

                  என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன் என்றார்.

                  விநாயகனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை பார்வதி உள்ளிட்ட நடிகைகளும், பெண்கள் அமைப்பினரும் கண்டித்தனர். எதிர்ப்பு வலுத்ததால்

                  விநாயகன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து முகநூலில் வெளியிட்ட பதிவில், ”நான் பெண்களுக்கு எதிராக அதன் தீவிரத்தை அறியாமல் சில கருத்துகளை தெரிவித்து விட்டேன்.


                  இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

                    Posted in சினிமா

                    மீண்டும் நடிக்க வரும் நடிகை லைலா

                    மீண்டும் நடிக்க வரும் நடிகை லைலா

                    கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் படத்தில் 16 ஆண்டு கால இடைவெளிக்கு பின் லைலா மீண்டும் நடித்து வருகிறார்.

                    16 வருட இடைவெளிக்கு பின் மீண்டும் களம் இறங்கிய லைலா
                    லைலா


                    தமிழ் திரையுலகில் நடிகை லைலா கள்ளழகர் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். பின்னர், கார்த்திக் உடன் ரோஜாவனம், அஜித் உடன் தீனா மற்றும் பரமசிவன், சூர்யா உடன்

                    நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து மற்றும் மவுனம் பேசியதே, விக்ரம் உடன் தில் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றார்.

                    கடைசியாக அஜித்தின் திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவரது சிரிப்புக்கு என்றே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இருந்த காலமும் உண்டு. இதன்பின்பு

                    ஈரானிய நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, மும்பைக்கு சென்று குடும்ப வாழ்க்கையில் பயணிக்க தொடங்கி விட்டார். இதனால், நடிப்பு பக்கம் அவர் தலை காட்டவில்லை.

                    மீண்டும் நடிக்க வரும் நடிகை லைலா

                    இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் சர்தார் படத்தில் நடிகை லைலா நடிக்கிறார் என தகவல்

                    வெளிவந்துள்ளது. அவர் முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தும் முடித்து விட்டார்.

                    லைலா நடிப்பதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சிம்ரன் முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றால் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டன. வேறு சில படவேலைகளில் இருந்த

                    சிம்ரன், இந்த படத்திற்கு தேதி கொடுக்க இயலவில்லை. அதனால், இந்த கதாபாத்திரத்திற்கு லைலா சரியாக பொருந்துவார் என படதயாரிப்பாளர்கள்

                    உணர்ந்தனர் என்று படப்பிடிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், 16
                    ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வரும் நடிகை லைலாவை வரவேற்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை – இந்த பணம் பாவிக்க தடை

                      பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை – இந்த பணம் பாவிக்க தடை

                      பிரிட்டனில் தபோது மக்கள் பாவனையில் உள்ள இருபது பவுண்டு மற்றும் ஐம்பது பவுண்டு நோட்டு எதிர்வரும்


                      செப்டம்பர் மதம் இறுதியில் பாவனைக்கு தடை விதிக்க படுகிறது

                      குறித்த நோட்டுக்கள் சுமார் ஒன்பது பில்லியன் கள்ள நோட்டு அச்சிட பட்டுள்ள நிலையில் அதனை தடை செய்யும் நோக்குடன் இந்த நோட்டுக்கள் பாவனையில் இருந்து நீக்க படுகிறது

                      அதற்கு பதிலாக புதிய தாள்கள் அறிமுக படுத்த படுகின்றன


                      எனவே இந்த பணத்தினை பாவனையில் வைத்துள்ள மக்கள் முந்தி கொண்டு வங்கியில் மாற்றிட
                      அல்லது செலவு செய்திட வேண்ட படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கை மக்களுக்கு உதவுங்கள் – இந்தியாவிடம் மனோ வேண்டுதல்

                        இலங்கை மக்களுக்கு உதவுங்கள் – இந்தியாவிடம் மனோ வேண்டுதல்

                        நமது மக்கள் முழுமையான சம உரிமையுள்ள இலங்கை பிரஜைகளாக உதவுங்கள்
                        -தமுகூ இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிப்பு
                        இந்நாட்டில் இன்று குடியுரிமை பிரச்சினை சட்டப்படி தீர்க்கப்பட்டு விட்டாலும்கூட முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக நமது மக்கள்

                        அனைவரும் மாறவில்லை. ஆகவே, இலங்கை அரசுடன் உங்களுக்கு உள்ள நல்லுறவை பயன்படுத்தி, முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர்

                        ஜெய்சங்கரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்தது.
                        கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம்,

                        வே. ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் எம்பி, ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்திய தரப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர்

                        சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

                        இலங்கை மக்களுக்கு உதவுங்கள் – இந்தியாவிடம் மனோ வேண்டுதல்


                        இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளதாவது,
                        இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடிக்கு

                        அனுப்பும்படி தூதுவர் கோபால் பாக்லேவிடம் தந்திருந்த மலையக அபிலாசைகள் ஆவணம் தொடர்பில் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் விளக்கம் அளித்தார்.


                        நிலவரம்பற்ற சமூக சபை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலதிக விபரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டார். மேலும் 13ம் திருத்தம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள மாகாணசபைகள் முழு நாட்டுக்கும் உரித்தான

                        அதிகார பரவலாக்கல் இயந்திரம் என்பது வலியுறுத்தப்பட்டது. நாடு முழுக்க சிதறி வாழும் அனைத்து மலையக மக்களை கூட்டிணைக்கும் அதிகார

                        பரவலாக்கல் இயந்திரமாக நிலவரம்பற்ற சமூக சபை செயற்படுவதை தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என்பது இந்திய வெளிவிவகார

                        அமைச்சருக்கு எடுத்து கூறப்பட்டது. புதிய அரசியலமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள குழுவிடம் இந்த யோசனை சமர்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.


                        இந்திய தரப்பில் மலையக மக்களுக்கு, குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கு கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், வீடமைப்பு ஆகிய துறைகளில் உதவிகளை இன்னமும் விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.

                        உலகளாவிய ரீதியில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டிணைக்கப்படும் செயற்பாடுகளில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களை இன்னமும் முழுமையாக இணைத்துக்கொள்வது பற்றி வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.


                        எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் போது முழு பட்டினியில் இருந்து இலங்கை மக்கள் இந்திய உதவியினால் காப்ப்பாற்றப்பட்டுள்ளனர்.

                        இலங்கை மக்களுக்கு உதவுங்கள் – இந்தியாவிடம் மனோ வேண்டுதல்

                        நன்றி. அதேவேளை நாட்டு மக்களுக்கு உணவளிக்க முடியாத அவமானத்தில் இருந்து இந்நாட்டு அரசாங்கமும் தற்காலிமாக காப்பாற்றப்பட்டுவிட்டது.

                        இந்நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது. தொடர்ந்து வெளியில் இருந்து உணவு வர முடியாதே.

                        நாம் எமக்குள் விரைவில் இவற்றுக்கு தீர்வு காணுவோம் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் வெளிவிவகார அமைச்சருக்கு மேலும் விளக்கம் அளித்தார்.

                          Posted in சினிமா

                          தொகுப்பாளரை அறைந்த நடிகர்: ஆஸ்கார் விருது விழாவில் பரபரப்பு

                          தொகுப்பாளரை அறைந்த நடிகர்: ஆஸ்கார் விருது விழாவில் பரபரப்பு

                          2022-ம் ஆண்டு ஆஸ்கார் விருது விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை விழாவில்

                          பங்கேற்று விருது வென்ற நடிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.

                          94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.

                          அதுபோலவே ஆஸ்கர் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில் ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

                          இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

                          சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ‘கிங் ரிச்சர்ட்’ படத்திற்காக வில்ஸ்மித் வென்றுள்ளார். அப்போது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ்

                          ராக், வில் ஸ்மித்தின் மனைவியின் சிகையலங்காரம் பற்றி அனைவர் முன்பும் கேலி செய்துக்கொண்டிருந்தார்.

                          தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி நகைச்சுவையாகப் பேசினார்.

                          விருதை வழங்கும்போது, பிங்கெட் ஸ்மித்தின் மொட்டையடிக்கப்பட்ட தலையைப் ராக் கூறி கிண்டல் செய்தார். சமீப காலங்களில், முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியாவுடன் பிங்கெட் போராடிக் கொண்டிருப்பதாக கூறினார்.

                          ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைக்கு ஏறி வந்தார். அப்போது, தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின்

                          கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கீழே இறங்கிச் சென்றார்.
                          இந்த காட்சியை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு

                            யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு

                            யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

                            மானிப்பாய் – சுதுமலை, தெற்கைச் சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் மீதே நேற்றைய தினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

                            குறித்த நபரின் வீட்டினுள், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழு அத்துமீறி நுழைந்து


                            தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              பிரதமராகும் ரணில் -வீடு செல்லும் மகிந்தா

                              பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

                              நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

                              அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை துறப்பார் என்றும் அதன்பின்னர், அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

                              அதேபோல, தேசிய அரசாங்கமொன்றை நிறுவி, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கும் கலந்துரையாடப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                              நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் ரீதியில் மாற்றங்களை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,
                              மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமையவே, அரசியல் மாற்றம் செய்யப்படவிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கோட்டா தலைமையில் ,பிம்ஸ்ரெக் மாநாடு இன்று ஆரம்பம்

                              கோட்டா தலைமையில் ,பிம்ஸ்ரெக் மாநாடு இன்று ஆரம்பம்

                              இலங்கை அரசாங்கத்தின் ஊற்பாட்டின் கீழ் ஐந்தாவது பிம்ஸ்ரெக் மாநாடு இன்று (28) கொழும்பில் ஆரம்பமாகிறது.

                              ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்த மகாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதிவரையில் மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

                              பிம்ஸ்ரெக் சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாடு மற்றும் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்ளாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

                              இந்த மாநாட்டில் பிம்ஸ்ரெக் கொள்கைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதுடன் உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படும்.

                              இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

                              கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்ரக் மாநாட்டின் அமைச்சு மட்ட சந்திப்பிலும் அவர்
                              பங்கேற்பார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              முல்லைத்தீவு வீராங்கனைக்கு ,இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்கம்

                              முல்லைத்தீவு வீராங்கனைக்கு ,இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்கம்

                              இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட யுவதி யோகராசா நிதர்சனா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

                              INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நேற்று முன்தினம் (26), சென்னையில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய அணியினர் கலந்துகொண்டனர்.

                              இலங்கை அணி வீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த T.சிறீதர்சன் T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை
                              சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்.

                              முல்லைத்தீவு வீராங்கனைக்கு ,இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்கம்

                              நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் மற்றும் ஒருவர் வெள்ளி பதக்கத்தையும் பெற்றனர்.

                              முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் யோகராசா நிதர்சனா என்ற யுவதியே, தங்கப்பதக்கம் வென்று சாதனை
                              படைத்து நாட்டிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

                                எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

                                அதுருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெற வந்த 85 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                                கடந்த 26ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

                                உயிரிழந்தவர் அதுருகிரிய, போரே, கல்பொட்ட வீதியைச் சேர்ந்த எம். ஜினதாச பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                                வேனில் எரிபொருள் எடுக்க வந்த நபர் வரிசையில் மூன்றாவது நபராக நின்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அத்துருகிரிய பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                உயிரிழந்தவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                சம்பவம் நடந்த போது பெட்ரோல் பங்கில் நெரிசல் ஏதும் இல்லை என பொலிசார் தெரிவித்தனர்.

                                அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.