Posted in இலங்கை செய்திகள்

பிளேட்டினால் கைகளை வெட்டும் மாணவர்கள்

பிளேட்டினால் கைகளை வெட்டும் மாணவர்கள்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள்

பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளார்கள் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர்.

பின்னர் குருதியை கடதாசி மூலம் துடைத்துவிட்டு, கிருமிதொற்று நீக்கி (sanitizer) காயத்தின் மேல் வீசிறிக்கொண்டதாக நேரில் பார்த்த சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவரை ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஒருவித உளவியல் பிரச்சினையாக கூட இருக்கலாம் என தெரிவிக்கும் வைத்தியர்கள், மாணவர்களுடன்


உரையாடி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    Posted in சினிமா

    ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை.- கமல் மகள்

    ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை.- கமல் மகள்

    என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை.

    பெண்கள் கொண்டம் வாங்கினால் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை அக்‌ஷரா ஹாசன்.

    அறிமுக இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளார்.

    பெண்களின் பதின்பருவ ஆசைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஒரு சிலரிடம் ஆதரவையும், பலரிடம் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இப்படத்தில்

    ஹீரோயினாக நடித்திருக்கும் அக்ஷரா ஹாசன் ஒரு காட்சியில் கடைக்கு சென்று காண்டம் வாங்குவார். இதையடுத்து அவர் கலந்துக் கொண்ட நேர்க்காணல் ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அக்‌ஷரா ஹாசன், ”இங்க பாலியல் உணர்வை பெண்கள் கன்ட்ரோல் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அது முடியாது,

    நாங்களும் மனிதர்கள் தான். என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை. நீங்கள் பாதுகாப்பாக உடலுறவு செய்கிறீர்கள்.


    ஒழுங்காக உடலுறவு நடக்கிறது. அதில் என்ன பிரச்னை?” எனக் கேட்டுள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    மனைவியை குத்தி கொன்ற கணவன் – சோகத்தில் கிராமம்

    மனைவியை குத்தி கொன்ற கணவன் – சோகத்தில் கிராமம்

    மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

    நேற்று (30) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சவுக்கடி முருகன் கோவில் வீதியை அண்டி வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா என்பவரே மார்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கத்தியால் குத்தப்பட்டு, இரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் வீட்டு வாசலில் வீழ்ந்து கிடந்துள்ளார்.

    உறவினர்களால் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணின் கணவன் சிவரஞ்சன் தயாளகுமார் (வயது 40) தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவரஞ்சான அவரது கணவனால் ஏற்கெனவேயும் பலமுறை தாக்கப்பட்டுள்ளார் எனவும் கொலை செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவரஞ்சனாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 13 தையல் கட்டுக்கள் இடப்பட்டு, குணமடைந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனா 16 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றே தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் பராமரித்து வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    பொருளாதார நெருக்கடி – நாடு மூடப்படும் அபாயம்

    சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

    எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை

    முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஆகையால் சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம்


    யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன

      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
      Posted in இலங்கை செய்திகள்

      ஆலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

      ஆலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

      வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தினுள் இன்று (31) அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

      குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ

      இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சடலம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

      குறித்த நபரின் சடலத்திற்கு அருகே பயணப்பொதியொன்றும் காணப்படுவதுடன் குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

        Posted in Uncategorized

        துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்

        துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்

        ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் Turkish Zelikan
        இராணுவ முகாம் மீது கடுமையான ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

        இதில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

        இந்த தாக்குதலை குருதீஸ் போராளிகள் நடத்தி உள்ளதாக தெரிவிக்க படுகிறது

          Posted in Uncategorized

          அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம் 17 பேர் மரணம் – மின்சாரம் இன்றி வீடுகள் தவிப்பு

          அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம் 17 பேர் மரணம் – மின்சாரம் இன்றி வீடுகள் தவிப்பு

          அவுஸ்ரேலியா New South Wales பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பேருக்கு காரணமாக இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்

          மேலும் பல்லாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் சிக்கியுள்ளனர்

          தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்ற பட்டுளள்னர்

            Posted in Uncategorized

            உக்கிரேன் தலை நகரை சுற்றி குவிக்க படும் ரஷியா இராணுவம்

            உக்கிரேன் தலை நகரை சுற்றி குவிக்க படும் ரஷியா இராணுவம்

            உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் அருகில் ரசிய இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்

            இந்த இராணுவ குவிப்பு மேலும் பெரும் மோதலை அங்கு தோற்றுவிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது


            ஒரு மாதம் கழிந்து நடத்த பட்டு வரும் மோதல்களில் இதுவரை நான்கு மில்லியன் உக்கிரேன்
            மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              சீனா ஒப்பந்தம் தட்டி பறிப்பு: இலங்கைக்கு 3 தீவுகளில் மின்உற்பத்தி நிலையம் கட்டி கொடுக்கிறது இந்தியா

              சீனா ஒப்பந்தம் தட்டி பறிப்பு: இலங்கைக்கு 3 தீவுகளில் மின்உற்பத்தி நிலையம் கட்டி கொடுக்கிறது இந்தியா

              யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த மின் திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி அதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

              சீனா ஒப்பந்தம் தட்டி பறிப்பு: இலங்கைக்கு 3 தீவுகளில் மின்உற்பத்தி நிலையம் கட்டி கொடுக்கிறது இந்தியா
              BIMSTEC-ல் கலந்து கொண்ட ஜெய்சங்கர் (PTI PHOTO)
              இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று உள்ளார். இதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியாவிடம் செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் முன்னிலையில் கையெழுத்தானது.

              யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு, அனலைத் தீவு ஆகிய தீவுப்பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவை சேர்ந்த சினோசோர்- எடெக்வின் நிறுவனத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்து இருந்தது.

              தமிழகத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இலங்கை தீவுகளில் சீன நிறுவனம் மின் உற்பத்தி பணியை தொடங்க அனுமதி அளிப்பது தமிழகத்தை ஒட்டிய பாக். வளைகுடா பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கும் என மத்திய அரசு அப்போதே தனது அதிருப்தியை இலங்கை அரசிடம் தெரிவித்தது.

              இந்த நிலையில் மின் உற்பத்தி திட்டப் பணிகளை கடனுக்கு பதிலாக மானிய அடிப்படையில் நிறைவேற்றி தருவதாக இந்தியா இலங்கையிடம் தெரிவித்தது.

              இதையடுத்து மின் திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த இலங் கைக்கான சீன தூதர், இலங்கையின் இந்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டை பாதிக்கும் என்றார்.

              இதற்கிடையே கடல்சார் மீட்பு கூட்டு மையம் அமைக்க இந்தியா இலங்கை அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வாய்ப்பு உருவாகி இருப்பதால் வடக்கு பகுதியில் பாயின்ட் பெட்ரோ, பெசாலை, குருநகரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க இந்தியா உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

              இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த மின் திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி அதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

              முன்பு சீன நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

              தமிழ்நாட்டுக்கு அருகே உள்ள இலங்கை யாழ்ப்பாணத்தில் சீனா கால் பதிக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் இந்தியா நடவடிக்கை எடுத்து சீனாவிடம் மின் திட்டங்களை
              தட்டி பறித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

              Posted in சினிமா

              விஜய்யுடன் இணையும் பிரபல இந்தி நடிகை

              விஜய்யுடன் இணையும் பிரபல இந்தி நடிகை

              பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் பிரபல இந்தி நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

              விஜய்யுடன் இணையும் பிரபல இந்தி நடிகை
              கிரித்தி சனோன்


              விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

              அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட்

              திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

              இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

              இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.இப்படத்தில்

              விஜய்க்கு ஜோடியாக ‘ராஷ்மிகா மந்தனா’ நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. பிறகு தமன்னா நடிப்பதாக கூறப்பட்டது.

              இந்நிலையில் இப்படத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை ‘கிரித்தி சனோன்’ கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் இதற்குமுன் இந்தியில்

              வெளியான ஹவுஸ்ஃபுல்4, பரேலி கி பர்ஃபி,
              போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

                Posted in சினிமா

                விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை

                விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை

                தமிழ் தெலுங்கு என படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை விமானத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ
                ஷா ரெப்பா


                தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் ‘ஓய்’ என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் ஈஷா ரெப்பா. தெலுங்கு திரையுலகின் முன்னணி

                நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது. கிடைத்த இடத்தை விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி

                புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

                நடிகை ஈஷா ரெப்பா தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த ஸ்கை
                டைவிங் சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  யாழில் வாலிபன் கைகள் கட்ட பட நிலையில் மீட்பு

                  யாழில் வாலிபன் கைகள் கட்ட பட நிலையில் மீட்பு

                  புத்தூர் மேற்கு, நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞன் இரண்டு நாள்களின் பின்னர் கைகள் கட்டடப்பட்ட நிலையில் நேற்று (30) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

                  புத்தூர் மேற்கு, நவக்கிரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞனை கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

                  சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                  வீட்டு வளாகத்தில் இருந்து எவரோ பாய்ந்து வெளியே செல்வதை அவதானித்த இளைஞன் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் என்றும், வெளியே சென்ற இளைஞனை வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

                  அதன்பின்னர் இளைஞன் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது அவரது கைபேசி வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

                  அதேநேரம், கடந்த 12ஆம் திகதி இளைஞரின் வீட்டுக்கு வந்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் வெட்டுக்காயத்துக்கு உள்ளான இளைஞரின் தந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

                  அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

                  சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

                  இந்த நிலையில் இரண்டு நாள்களின் பின்னர் இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில் நேற்று மாலை நவக்கிரி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் மீட்கப்பட்டார்.

                  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனிடம் சிகிச்சையின் பின்னர் வாக்குமூலம் பெறப்படும் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஹட்டனில் பெரும் பதற்றம் – அரச பேரூந்துகள் மறிப்பு

                    ஹட்டனில் பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. வானங்கள்

                    அனைத்தும், பஸ் தரப்பிடத்துக்கு முன்பாக இருக்கும் அரசமர சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

                    பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு மற்றும் வெளியிடங்களுக்கு புறப்பட்ட இ​.போ.ச பஸ்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன.

                    தங்களுக்கு டீசல் கொடுக்காமல், இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு மட்டுமே எப்படி, டீசல் கொடுக்கமுடியும்
                    என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கேட்கின்றனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      ரணில் திடீர் ஆலோசனை – கோட்டாவுக்கு ஆப்பு வைப்பாரா

                      ரணில் திடீர் ஆலோசனை – கோட்டாவுக்கு ஆப்பு வைப்பாரா

                      ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா சிறிகொத்தாவில் திடீரென கூடி கட்சி முக்கியஸ்தர்களிடம் பேசி வருகிறார்

                      இந்த சந்திப்பில் நாட்டு நிலைமை மற்றும் தமது செயல்பாடுகள் தொடர்பில் பேச பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இந்த கோழிகளை சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை

                      கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புடன், மாத்தளை மாவட்டத்தில் கோழி

                      பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலைக்கும் விற்கும் செயற்பாடு முன்​னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

                      எனவே, மாத்தளை மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கோழி இறைச்சி விற்பனை

                      செய்யப்பட்டால், அவற்றை கொள்வனவு செய்ய வேண்டாம் என,கோழி இறைச்சி விற்பனையாளர்கள் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

                      பண்ணைகளில் வேலை செய்யும் பணியாளர்களைப் பயன்படுத்தி சில இடைத்தரகர்கள் இவ்வாறான செயல்களை செய்வதாகவும் குறிப்பாக பண்டிகைக்

                      காலங்களில் இவ்வாறு உயிரிழக்கும் கோழிகளை வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பாமல், நுகர்வோரின் வீடுகளுக்கே நேரடியாக


                      அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

                        Posted in Uncategorized

                        பாக்குநீரிணையை கடந்து சாதனை படைத்த 14 வயது தமிழக சிறுவன்

                        பாக்குநீரிணையை கடந்து சாதனை படைத்த 14 வயது தமிழக சிறுவன்

                        இந்தியா ,இலங்கைக்கு இடையில் உள்ள பாக்கு நீரிணையை தமிழகம் தேனீ

                        மாவட்டத்தை சேர்ந்த சினேகன் என்ற 14 வயது சிறுவன் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார் 19.45 நிமிடங்கள் நீதி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்

                        தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒருநாள் இடைவிடாது இந்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்

                        அதிக சிறு வயது கொண்ட சிறுவனின் இந்த சாதனை சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
                        பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

                          Posted in Uncategorized

                          இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி நால்வர் மரணம்

                          இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி நால்வர் மரணம்

                          இலங்கையில் கடந்த தினம் இடம்பெற்ற கொரனோ பாதிப்பில்


                          சிக்கி நால்வர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            10 மணிநேரம் மின்வெட்டு

                            10 மணிநேரம் மின்வெட்டு

                            இன்று இலங்கையின் பல் வேறு பகுதிகளில் பத்து மணிநேரம் மின்சார

                            தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

                            நாடு பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன

                            இதனால் தொழில் துறை உள்ளிட்ட வர்த்தக செயற்பாடுகள் பாதிக்க பட நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              காணாமல் போன டீவி நடிகை – சடலமாக மீட்பு

                              காணாமல் போன டீவி நடிகை – சடலமாக மீட்பு

                              அமெரி லோஸ் அஞ்சல் பகுதியில் காணாமல் போன டீவி நடிகையான Lindsey Pearlman சடலமாக மீட்க பட்டுளளார்

                              43 வயதுடைய இவர் சடலமாக மீட்க பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              மேற்படி நடிகையின் கொலை தொடர்பில் போலீசார் புலன் விசாரணைகளை நடத்திய வண்ணம் உள்ளனர்
                              இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                Posted in Uncategorized

                                இஸ்ரேல் தலைநகரில் ஐவர் சுட்டு கொலை – பதட்டத்தில் நாடு

                                இஸ்ரேல் தலைநகரில் ஐவர் சுட்டு கொலை – பதட்டத்தில் நாடு

                                இஸ்ரேல் மத்திய நகர் மீது ஆயுதங்களுடன் நுழைந்த நபர் ஒருவர் திறந்தவெளி சூட்டு தாக்குதலை நடத்தினார்
                                இதில் ஐவர் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர்

                                குறித்த ஆயுத தாரி காவல்துறையினரால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
                                ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது ,

                                இஸ்ரேல் முசுலீம் நாடுகள் மீது தொடராக வலிந்து தாக்குதலை நடத்தி பல முக்கிய

                                நபர்களை கொன்று குவித்து வரும் நிலையில் மொஸாட்டுக்கே தண்ணி காட்டி இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                                மேற்படி சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது