Author: நலன் விரும்பி
லண்டன் – குறைடன் பகுதியில் இருவர் குத்தி கொலை
லண்டன் – குறைடன் பகுதியில் இருவர் குத்தி கொலை
லண்டன் குறைடன் பகுதியில் இருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,அதிகரித்து செல்லும் கத்தி குத்து தாக்குதல்களை தடுத்து நிறுத்த போலீசார் போராடி வருகின்றனர்
லண்டன் கீத்திரோ வான்நிலையத்தில் – தீவிரவாதி கைது
லண்டன் கீத்திரோ வான்நிலையத்தில் – தீவிரவாதி கைது
லண்டன் கீத்திரோ வான் நிலையத்தில் வைத்து 26 வயதுடைய பிரிட்டன் நாட்டை சேர்ந்த இளம் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் ,இவர் துருக்கி ஊடாக சிரியா சென்று அங்கு ஐ எஸ் படையில் இணைந்து பயிற்சி பெற்ற தீவிரவாதி என்பதாள் கைது செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
படகு மூலம் லண்டனுக்குள் நுழைந்த – 39 ஈரான் நாட்டவர்கள் கைது
படகு மூலம் லண்டனுக்குள் நுழைந்த – 39 ஈரான் நாட்டவர்கள் கைது
ஆங்கில கால்வாயை ஊடறுத்து சிறிய படகுகள் மூலம் லண்டனுக்குள் நுழைந்த 39 ஈரான் நாட்டவர்களை எல்லை கடலோர பாதுகாப்பு படையினர் சிறை பிடித்துள்ளனர் ,கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,தற்போது குறித்த பகுதியில் சுற்றுக்காவல் ரோந்து மூலம் பாதுகாப்பபு பல படுத்த பட்டுள்ளது
கொலையாளியை ஆட்சியில் அமர்த்திய இலங்கையர் – போட்டு தாக்கிய இந்திய உளவுத்துறை ஊடகம்
கொலையாளியை ஆட்சியில் அமர்த்திய இலங்கையர் – போட்டு தாக்கிய இந்திய உளவுத்துறை ஊடகம்
இலங்கையில் பெரிய வெள்ளி தாக்குதலை நடத்தி ஆட்சி கட்டில் ஏறி அமர்ந்திருக்கும் இரத்த கறை படிந்த ,கொலையாளி எவ்வாறு சிறுபான்மையினருக்கு தீர்வை வழங்குவார் ..?

நல்லாட்சிக்கு வித்திடுவார் என இந்திய முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பி நிற்கிறது .இந்தியாவின் எச்சரிக்கையை செவிமடுக்காது ஏழு குண்டு தாக்குதல்களை தேவாலயங்கள் மீது நடாத்தி 269 அப்பாவி உயிர்களை கொன்ற கோட்டபாய எவ்விதம் நல்லாட்சி புரிவார் என மறைத்து கேள்வி எழுப்பி நிற்கிறது .

வெள்ளைவான் ,கடத்தல் ,கொலை ,கப்பம் ,கொள்ளை ,என நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த இவர்கள் எப்படி மக்களை காப்பாற்றுவார் என மக்கள் மனங்களின் உள்ளுணர்வுகளை அபப்டியே படம் பிடித்து கேள்வி எழுப்பி நிற்கிறது . ஆம் தனக்கு எதிராக தமிழர்கள் செயல் பட்டுள்ளதும் ,வாக்குகள் இன்றி வீட்டுக்கு அனுப்பிட ஒன்று பட்டு நின்றது இந்த கொலையாளிகளுக்கு பெரும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது ,
பெற்றவர்களை கொன்று விட்டு பிள்ளைகளிடம் உங்கள் வாக்குகளை தாருங்கள் என கேட்டு வந்த இவர்களுக்கு எப்படி அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதை கூட இந்த முட்டாள் கூட்டம் எண்ணி பார்க்கவில்லை .
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் இலங்கையில் பெரும் நெருடல்களை எதிர்மறை விளைவுகளை சிறுபான்மையினம் சந்திக்க போகிறது என்பதே வலியோடு படர்ந்த இருளாக மாறப்போகிறது என்பதே வெளிச்சம் – வன்னி மைந்தன் –
9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் – உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்
9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் – உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்
பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லாரன்ட், தற்போது என்ஜினீயரிங் படிப்பையும் முடிக்கும் நிலையில் உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் என்ஜினீயரிங் படிப்பில் அவர் சேர்ந்திருந்தார்.
ஆலந்து நாட்டின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் அடுத்த மாதம் (டிசம்பர்) பட்டம் பெற இருக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் வயது பட்டதாரி என்ற சிறப்பை பெற உள்ளார். இவரது நுண்ணறிவு திறன் அளவு (ஐ.கியூ.) 145 அளவுக்கு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.
என்ஜினீயரிங் முடித்த பிறகு இதே பாடப்பிரிவில் ஆய்வு பட்டப்படிப்பில் (பி.எச்.டி.) லாரன்ட் சேர இருப்பதாக கூறிய அவரது தந்தை அலெக்சாண்டர் சைமன்ஸ், அதே நேரம் மருத்துவ பட்டப்படிப்பு ஒன்றையும் அவர் தொடர்வார் என்றும் தெரிவித்தார். லாரன்டின் இந்த அபார திறமையை அவரது தாத்தா-பாட்டிதான் கண்டறிந்ததாக அவரது தாய் லிடியா கூறியுள்ளார்.
ஐந்தோவன் பல்கலைக்கழகம் இதுவரை பார்த்த மாணவர்களிலேயே மிகவும் புத்திசாலியான நபர் லாரன்ட்தான் என பல்கலைக்கழக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
அடுத்த மாதம் தனது என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடிக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை மைக்கேல் கியார்னியிடம் இருந்து பெற உள்ளார். அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து 10 வயதில் பட்டம் பெற்றவர்தான் இந்த மைக்கேல் கியார்னி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழின கொலையாளி கோட்டபாயவுக்கு தமிழர் பகுதியில் செருப்படி
தமிழின கொலையாளி கோட்டபாயவுக்கு தமிழர் பகுதியில் செருப்படி
தமிழின கொலையாளியும் இனப்படுகொலையாளியும் ஆன கோட்டபாய வெட்கமற்று தமிழர் கால்களில் விழுந்து வணங்கி பிச்சை கேட்டு வந்தான் ,அவனுக்கு தமிழர் தேசம் தகுந்த செருப்படியை வழங்கியுள்ளது ,எனினும் மானம் கெட்ட வால்பிடிகள் ஆயிரம் வாக்குகளிற்கு மேல் வழங்கியுள்ளனர் ,பலத்த பணத்தை வாரியிறைத்து பிரச்சாரம் செய்த்த பொழுதும் அவர்களினால் தமிழர் மனங்களை வெல்ல முடியவில்லை ,அரசியல் தெரியாத கோமாளிகள் தமிழர் மனங்களை எப்படி வெல்வது என்று தெரியாது திணறுகிறது இந்த இரத்த காட் டேரிகள்
முகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி
முகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி
இந்த உலகில் எத்தனையோ வினோத சம்பவங்கள் தினம் தினம் நடக்கின்றன. அவற்றில் சில மக்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகின்றன.
இந்நிலையில், முகத்தில் வால் உடைய நாய்க்குட்டி ஒன்று அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகர தெருவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பான ‘மாக்’ அமைப்பு இந்த நாயை மீட்டு பராமரித்து வருகிறது.
இது தொடர்பாக, இந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டெபான் கூறுகையில், ‘7 ஆண்டுகளாக இந்த அமைப்பு, சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறது. குறிப்பாக ஐந்து கால்கள் உடைய நாய்கள், பிறப்பிலேயே உடலுறுப்பு வளர்ச்சி இல்லாத பல நாய்களை கவனத்தில் எடுத்து பராமரித்துள்ளோம். ஆனால் இம்மாதிரி முகத்தில் வால் உள்ள நாய்க்குட்டியை நான் பார்த்ததே இல்லை. கான்சாஸ் நகர தெருவில் சென்று கொண்டிருந்த போது தெருவோரத்தில் பனியில் இந்த குட்டி உறைந்து கிடந்தது. உடனே அதை மீட்டேன். அதற்கு நார்வால் என பெயரிட்டுள்ளேன்’ என்றார்.
நார்வால் என்பது ஆர்க்டிக் கடலில் வாழும் ஒருவகை திமிங்கலம். இந்த திமிங்கலத்தின் தலையில் முன்புறம் தந்தம் போன்ற நீளமான கூர்மையான உறுப்பு இருக்கும்.
நார்வால் திமிங்கலங்கள்
மீட்கப்பட்ட நார்வால் நாய்க்குட்டி கால்நடை மருத்துவரிடம் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்ததில் அந்த வால், நாய்க்குட்டியின் உள் உறுப்புகளோடு எந்த தொடர்பிலும் இல்லை என தெரிய வந்தது. ஆனால் நெற்றியின் நடுவே அமைந்துள்ளது. அந்த வாலை மேலும் கீழும் அசைக்க முடியாது, அதாவது வாலாட்ட இயலாது. இந்த வால் இருப்பதால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. மற்ற நாய்களை போலவே நார்வால் சாதாரணமாகவே இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நாய்க்குட்டி யூனிகார்ன் பப்பி என இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. யூனிகார்ன் என்பது ஒற்றைக் கொம்பு கொண்டு குதிரை போன்ற வடிவில் இருக்கும் புராண கதைகளில் வரும் ஒரு விலங்கு ஆகும்.
இந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
இந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் பாரிகோட் தெஹ்ஸிலில், பாகிஸ்தான் மற்றும் இத்தாலியை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட்டு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்கள் 3000 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டுபிடித்து உள்ளனர். அந்த நகரத்தின் பெயர் பஜீரா. இது 5,000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்திற்கும், கலைப்பொருட்களுக்கும் புகழ் பெற்றது ஆகும்.
இந்த கண்டுபிடிப்பில் இந்து கோவில்கள், நாணயங்கள், ஸ்தூபம், பானைகள் மற்றும் அந்தக் காலத்தின் ஆயுதங்கள் உள்ளன.
கிமு 326ல் அலெக்சாண்டர் தனது படையுடன் பாகிஸ்தானின் ஸ்வாட்டுக்கு வந்து ஓடிகிராம் பகுதியில் நடந்த போரில் எதிரிகளை தோற்கடித்து பஜீரா என்ற சுவர் நகரத்தையும், ஒரு கோட்டையையும் கட்டினார் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அலெக்சாண்டரின் காலத்திற்கு முன்பே அந்த நகரத்தில் மனித வாழ்க்கையின் தடயங்களையும் நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர். அலெக்சாண்டருக்கு முன்பு, இந்தோ-கிரேக்கம், புத்மத், இந்து ஷாஹி மற்றும் இஸ்லாமை பின்பற்றுபவர்கள் அந்த நகரத்தில் வசித்து வந்து உள்ளனர்.
மின்னல் தாக்கி 25 பேர் பலி
மின்னல் தாக்கி 25 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. பாலைவனப்பகுதியான அம்மாகாணத்தின் தார்பார்கர், சங்ஹர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில், கனமழையின் போது மின்னல் தாக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்தோர்
மேலும், 16-க்கும் அதிகாமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதற்கிடையில், மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
facebook அதிரடி வேட்டை -3.2 பில்லியன் போலி கணக்குகளை அகற்றியது
facbook அதிரடி வேட்டை -3.2 பில்லியன் போலி கணக்குகளை அகற்றியது
உலகமக்களை ஆட்டி படைத்தது வரும் facebook போலியாக இயங்கி வந்த சுமார் 3,2 பில்லியன் கணக்குகளை கடந்த இரு மாதத்தில் மட்டும் அகற்றியுள்ளதாக அதன் மையம் அறிவித்துள்ளது ,தனிநபர்கள் ,மற்றும் அரசியல் நலன் கருதி இந்த கணக்குகள் இயங்கி வந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டு இவை அகற்ற பட்டுள்ளதாம்
ஐ எஸ் தீவிரவாதி பிரிட்டனில் அதிரடி கைது
ஐ எஸ் தீவிரவாதி பிரிட்டனில் அதிரடி கைது
பிரிட்டனில் இருந்து துருக்கி வழியாக சென்று ஐ எஸ் படையில் இணைந்து பயற்சி பெற்றதாக கருத படும் 26 வயது நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக பிரிட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ,இவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது
பிரிட்டனில் East Midlands and Yorkshire பகுதியில் வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் East Midlands and Yorkshire பகுதியில் வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் கிழக்கு Midlands மற்றும் Yorkshire நகர பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,தொடர்ந்து மழைப்பொழிவு இடம்பெற்றால் இந்த வெள்ள அனர்த்தம் நிகழும் என தெரிவிக்க பட்டுள்ளதுடன் இது தொடர்பான எச்சரிக்கை மக்களுக்கு விடுக்க பட்டுள்ளது

பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிசூடு – இருவர் பலி – பலர்காயம்
பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிசூடு – இருவர் பலி – பலர்காயம்
அமெரிக்காவில் பிறந்தநாள்நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் சிக்கி 14 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்த நிலையில் -Henry Mayo Newhall மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Denmark நாட்டில் எல்லை சோதனைகள் ஆரம்பம்
Denmark நாட்டில் எல்லை சோதனைகள் ஆரம்பம்
சுவீடன் எல்லை பகுதியில் குண்டு வெடித்த நிலையில் தற்போது டென்மார்க் எல்லை பகுதியில் 1950 ஆண்டுக்கு பின்னர் மீள எல்லை சோதனை சாவடிகள் ஆரம்பிக்க பட்டு சோதனைகள் தீவிர அப்டுத்த பட்டுள்ளன .இதனால் மக்கள் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது
இத்தாலியில் வெள்ளம் – இருவர் பலி – மக்கள் அவதி
இத்தாலியில் வெள்ளம் – இருவர் பலி – மக்கள் அவதி
இத்தாலி Mark’s Square, பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு ஆறு அடிக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது ,இதனால் அந்த பகுதி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன் மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர் ,பாதிக்க பட்ட மக்களுக்கு எவ்விதம் உதவலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதுடன் அவசர மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்ற வண்னம் உள்ளது ,குறித்த பகுதிக்கு அந்த நாட்டு அதிபர் திடீர் பயணத்தை மேற்கொண்டு சென்றுள்ளார்


இறைச்சிக்குள் மறைத்து எடுத்துவர பட்ட 20 மில்லியன் பவுண்டு cocaine மீட்பு
இறைச்சிக்குள் மறைத்து எடுத்துவர பட்ட 20 மில்லியன் பவுண்டு cocaine மீட்பு
பிரிட்டனுக்கும் இறைச்சிக்குள் சுற்றி மறைத்து எடுத்துவரப்பட்ட இருப்பது மில்லியயன் பவுண்டுகள் பெறுமதியான cocaine போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக குற்ற தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர் ,கடத்தல் காரர்கள் பல புதியவழிகளை பின்பற்றுவதாகவும் அதனை கண்டுபிடித்து முறியடிப்பதில் சுங்க பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

சிம்பாவேயில் 200 யானைகள் பலி
சிம்பாவேயில் 200 யானைகள் பலி
சிம்பாவே நாட்டில் திடீரென 200 யானைகள்பலியாகியுள்ளனர் ,அங்கு நிலவு வறட்சி காரணமாக இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் காட்டு யானைகளை காப்பாற்றும் நகர்வில் வனவிலங்கு பாதுகாப்பு துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்


ஆப்கானிஸ்தானில் வெடித்த குண்டு – 7 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் வெடித்த குண்டு – 7 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தான் தலைநகரில் வெடித்து சிதறிய கூண்டில் சிக்கி சுமார் ஏழுபேர் உடல் சிதறி பலியாகினர் ,மேலும்சிலர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்
விடுதலை புலிகளுக்கு மேலும் ஐந்து ஆண்டு இந்தியாவில் தடை
இலங்கையில் விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக மேலும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அந்த அரசு அறிவித்துள்ளது ,இல்லாத புலிகளினால் தமது நாட்டுக்கு ஆபத்து வரும் என கோரி இந்த தடையை இந்தியா அறிவித்துள்ளது ,மேலும் தாம் தடையை நீக்கின் வெளி நாடுகளுக்கு தமது தடையை நீக்கும் என்ற காரணத்தால் இந்த தடையை இந்தியா தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை
இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசு முறை பயணமாக நாளை (புதன்கிழமை) இந்தியா வருகிறார். இங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்க இருப்பதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் சர் டோமினிக் அஸ்குயித் கூறினார்.
அதன்படி குருநானக்கின் 550-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், இங்கிலாந்து வளர்ச்சியில் சீக்கியர்களின் பங்களிப்பின் நினைவாகவும் குருத்வாரா ஒன்றில் வழிபாடு நடத்துவார். மேலும் முதல் மற்றும் 2-ம் உலகப்போரில் காமன்வெல்த் நாடுகளின் சார்பில் பங்கேற்று உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ நிகழ்ச்சி ஒன்றை பார்வையிடுகிறார்.
முன்னதாக இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றத்தை வலிமையுடன் எதிர்கொள்வது குறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை அதிகாரிகளுடன் சார்லஸ் ஆலோசனை நடத்துவார். மேலும் தேசிய பேரிடரை எதிர்கொள்வதற்கு புதிய கண்டுபிடிப்புகளை இந்தியா எவ்வாறு பயன்படுத்துகிறது? என்பது குறித்தும் அவர் அறிந்து கொள்வார்.
தனது 71-வது பிறந்த நாளை 14-ந்தேதி (வியாழக்கிழமை) இந்தியாவிலேயே கொண்டாடும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், சமூக மேம்பாட்டு திட்டங்களில் சிறப்பான பங்களிப்பை செய்தமைக்காக இந்தியருக்கு காமன்வெல்த் விருதையும் வழங்க உள்ளார்.
மேலும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களை சந்தித்து பேசும் சார்லஸ், நிலையான சந்தை நிலவரத்தை கண்டடைவதற்கான ஆலோசனை மற்றும் வழிமுறைகளை அவர்களிடம் கேட்டுப்பெறுவார் எனவும் டோமினிக் அஸ்குயித் தெரிவித்தார்.








