Author: நலன் விரும்பி
ஐ எஸ் படைகள் விற்ற பெண்களை நாட்டுக்கு அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ்
ஐ எஸ் படைகள் விற்ற பெண்களை – நாட்டுக்கு அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ்
ஐ எஸ் படைகளின் கோர படையில் சிக்கி தவித்த இன மக்களில் Yazidi இந மக்கள் முக்கிய பங்கு வகித்தனர் .
அதில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் செல்வந்தர்களுக்கு விலை பேசி விற்றது கொடிய ஐ எஸ் படைகள் ,
அவ்வாறான இன கூட்டத்தை சேர்ந்த சுமார் 27 குடும்பங்களை ஈராக்கில் இருந்து அழைத்து பிரான்சில் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்துள்ளது பிரான்சு அரசு . ,.
இவர்களுக்கான வாழ்வுரிமை அனைத்தும் வழங்க பட்டு தமது இன மக்கள் போல அவர்களை இரு கரம் கூப்பி அழைத்து வந்து மகிழ்ச்சி ஊட்டி நிற்கிறது ,இந்த மாந்தநேயம் மக்கள் விழிகளை உருக வைத்துள்ளது
சீனாவின் புதிய விமான தாங்கி கப்பலை படம்பிடித்து வெளியிட்ட அமெரிக்கா – முறுகல் உச்சம்
சீனாவின் புதிய விமான தாங்கி கப்பலை படம்பிடித்து வெளியிட்ட அமெரிக்கா – முறுகல் உச்சம்
உலக வல்லாதிக்க அரசாக உருவெடுத்து வரும் சீனா தனது இராணுவ பலத்தை அதிகரித்து செல்கிறது ,உலக அரசியல் ஒழுங்கில் ஏற்பட்டு வரும் திடீர் எதிர்மறை மாற்றங்கள் மூன்றாம் உலக போரை தோற்றுவிக்கும் அபாயம் நெருங்கி வரும் நிலையில் உலக சண்டியர்கள் வேகமாக தமது இராணுவ தளபாட தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதுடன் ,நாடுகளை உடைக்கும் முயற்சிகளில் அதி தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் .
அந்த வகையில் சீனா தற்போது புதிதாக நிர்மாணித்து வெள்ளோட்ட சோதனைகள் விட்டுள்ள புதியவகை Type 001A விமான தங்கி கப்பல் தற்போது சீனாவின் Yulin Naval தளத்தில் தரித்துள்ளது ,இது Sanya நகரின் அருகில் உள்ளதாகும் .குறித்த விமான தாங்கி கப்பலில் J-15 Flying Shark multirole விமானங்கள் மற்றும் Z-18 உலங்குவானூர்திகள் என்பன நிறுத்த பட்டுள்ளன ,மேற்படி கப்பலையே அமெரிக்கா தனத்து செய்மதி ஊடக படம் பிடித்து வெளியிட்டுள்ளது .
இந்த செயலானது நாங்கள் உங்களை தீவிரமாக கண்காணித்து கொண்டு இருக்கிறோம் எமது கழுகு பார்வையில் இருந்து தப்பித்து கொள்ள முடியாது என்ற செய்தியை மிரட்டும் தொனியில் அமெரிக்கா வெளியிட்டுள்ளது .
கொங்கொங் கலவரம் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் இந்த விடயம் முதன்மை பெற்று செல்வது விரைவில் மூன்றாம் உலக யுத்தம் ஆசிய பகுதியில் இருந்து வெடிக்கும் என்றே அவதானிக்க முடிகிறது .- வன்னி மைந்தன் –
லிபியாவில் சுட்டு வீழ்த்த பட்ட இத்தாலி போர் விமானம்-அதிர்ச்சியில் இராணுவம்
லிபியாவில் சுட்டு வீழ்த்த பட்ட இத்தாலி போர் விமானம்
இத்தாலி நாட்டு படைகள் பயன் படுத்திய உளவுரக டிரோன் விமானம் ஒன்று லிபியா பகுதியில் வைத்து மர்ம நபர்களினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,
தமது கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை காணவில்லை என தெரிவித்திருந்த இராணுவம் தற்போது விபத்தில் சிக்கி வீழ்ந்துள்ளதாக கதை விட்டுள்ளது ,
உண்மையில் மர்ம ஆயுத குழு ஒன்றினால் இந்த விமானம் மக்கள் நாடமாட்டம் கூடிய பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்த பட்டுள்ளது . குறித்த பகுதியில் லிபிய இராணுவம் மற்றும் விடுதலை போராளிளை கண்காணிப்பதில் ஈடுபட்டு கொண்டிருந்த விமானமீ சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
கனடாவில் வேலைத்தளத்தில் இறந்த நபர்
கனடாவில் வேலைத்தளத்தில் இறந்த நபர்
கனடா -ஒன்ராறியோ அருகில் உள்ள Sudbury construction நிறுவனம் ஒன்று கடுகதி வேக பாதையில் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் அங்கு இடம்பெற்ற விபத்தில் பலியானார் .
அப்போது பொறியியலாளர் ஒருவர் மேல் கனரக பாரம் தூக்கி இயந்திரம் பின்புறமாக வீழ்ந்து கொண்டிருந்ததை அவதானித்து தப்பிக்க குதித்த அவர் அதில் பலியானார் .
மேற்படி வழக்கு சுமார் இரண்டு வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில் தற்போது குறித்த நிறுவனத்திற்கு 125.000 தண்டம் அறவிட்டு தணடனையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது .
ஊழியர் பாதுகாப்பாற்ற முறையில் நடத்தியமை ,பாதுகாப்பு பொறிமுறைகள் கையாளமை போன்ற குற்ற சாட்டுக்குள் முதன்மையாக வைக்க பட்டுள்ளன .
இருவரை வீட்டுக்குள் கொன்று வீசிய பெண் கனடாவில் நடந்த பயங்கரம்
இருவரை வீட்டுக்குள் கொன்று வீசிய பெண் கனடாவில் நடந்த பயங்கரம்
கனடா- Melvin Street, in Sudbury’s பகுதியில் வீடொன்றுக்குள் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் ,மேற்படி மரணம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது .
33 வயதுடைய பெண் மேற்கொண்ட இரண்டாவது கொலை இது ,குறித்த நபர் இவருடன் ஒன்றித்து வாழ்ந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது.
,நீதிமன்ற விசாரணைகளில் இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .
கனடா வடக்கு Ontario- கிரிமினல்கள் கூடாரமாக இடம்பிடித்து சாதனை
கனடா வடக்கு Ontario- கிரிமினல்கள் கூடாரமாக இடம்பிடித்து சாதனை
கனடா உலக நாடுகளில் மதிப்பு நாடுகளில் ஒன்றாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ள பொழுதும் ,அங்கும் வன்செயல்கள் உருவாகி வருகின்றன .
,கனடாவின் வடக்கு ஒன்ராறியோ பகுதி கிரிமினல் கூடாரமாமாக மாறியுள்ளது
,கற்பழிப்பு ,கொலை ,கொள்ளை என வன்செயல்கள் இங்கு அதிகரித்து கனடாவின் பாதுகாப்பற்ற பத்து பகுதிகளில் ஒன்றாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது .
,மேற்படி வன்செயல்களை தடுக்க பல நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக குற்ற தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர் .
ரயிலை பிடிக்க ஓடி வாங்க கனடாவில் நடந்த சுவாரஸ்யம்
ரயிலை பிடிக்க ஓடி வாங்க கனடாவில் நடந்த சுவாரஸ்யம்
கனடா ரொராண்டோ பகுதியில் பெண் ஒருவர் தான செல்லும் ரயிலை தவற விட்டு விட்டார் ,உரிய நேரத்திற்கு செல்ல வேண்டியவர் தாமதமானதால் ரயில் புறப்பட்டு விட்டது ,
திகைத்து போன பெண் தனக்கு அவசர உதவி தேவை எனவும் உரிய இடத்திற்கு தன்னை அழைத்து செல்லும் படி அவசர உயிர் பாதுகாப்பு இலக்கத்திற்கு அழைத்து உதவி , கோரியுள்ளார் ,
அவர்களோ சாறி என கையை விரித்து விட்டனர் ,உரிய நேரத்திற்கு சென்றால் இந்த பிரச்னை ஏற்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இலக்கத்திற்கு உயிர்பாதுகாப்பிற்கு மட்டும் அழைக்கும்படி மக்களை வேண்டியுள்ளது குறித்த சேவை மையம் . இது தாங்க பெண் புத்தி .
லண்டன் Ilford டில் வாலிபனை குத்தி கொன்று காரை எரித்த மர்ம கும்பல்
லண்டன் Ilford டில் வாலிபனை குத்தி கொன்று காரை எரித்த மர்ம கும்பல்
லண்டன் Fullwell Avenue, Ilford, டில் வாலிபனை குத்தி கொன்று காரை எரித்து சென்றுள்ளது மர்ம கும்பல் ஒன்று ,மேற்படி சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது ,இதுவரை எவரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
15 மில்லியன் பவுண்டுகளை -லண்டனில் இருந்து டுபாய்க்கு கடத்தியவர்கள் சிக்கினார்
15 மில்லியன் பவுண்டுகளை -லண்டனில் இருந்து டுபாய்க்கு கடத்தியவர்கள் சிக்கினார்
லண்டனில் இருந்து துபாய்க்கு 15 மில்லியன் பவுண்டுகளை சூட்கேசில் வைத்து கடத்தி சென்ற குழு ஒன்றை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .மேலும் இவர்கள் டுபாயில் இருந்து லண்டனுக்கு 17 பேரை கடத்தி சென்றதும் கண்டறிய பட்டுள்ளது ,போலீசாரின் நீண்ட நாள் கண்காணிபின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது ,கைதானவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உளள்து
ஈரானில் அரசுக்கு எதிரான கலவரத்தில் 106 பேர் பலி
ஈரானில் அரசு திடீரென எரிபொருள் விலையினை இரு மடங்காக அதிகரித்த நிலையில் அரசுக்குக்கே திராக மக்கள் போராட்டம் வெடித்தது ,இதில் இதுவரை சுமார் 106 பேர் பலியாகியுள்ளதாகமனித உரிமை மையம் அறிவித்துள்ளது ,தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருகிறது பின்புலத்தில் அமெரிக்கா இஸ்ரேல் இயங்குவதாக அரசு குற்றம் சுமத்தியுளளது
நாம் ஆட்சிக்கு வந்தால் 150,000 கவுன்சில் வீடுகள் கட்டி கொடுப்போம் – முழங்கிய தொழில் கட்சி
நாம் ஆட்சிக்கு வந்தால் 150,000 கவுன்சில் வீடுகள் கட்டி கொடுப்போம் – முழங்கிய தொழில் கட்சி
பிரிட்டனில் பிரதமரை தெரிவு செய்யும் புதிய தேர்தல் இடம்பெறவுள்ளது ,இதில் தாம் அதிகாரத்தில் அமர்ந்தால் மக்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் 150 ஆயிரம் கவுன்சில் வீடுகளை 2024 ஆம் ஆண்டுக்குள் சுமார் 75 பில்லியன் பவுண்டுகளில் கட்டி வழங்குவோம் என தொழில் கட்சி முழங்கியுள்ளது ,அது தவிர சம்பள உயர்வு தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளனர் ,தேர்தல் நெருங்கும் வேளையில் இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் பெரும் சமர் வெடித்து பறக்கிறது .
அமெரிக்கா அதிரடி நடவடிகை -ஹாங்காங் மீது பாய்ந்தது பொருளாதார தடை
அமெரிக்கா அதிரடி நடவடிகை -ஹாங்காங் மீது பாய்ந்தது பொருளாதார தடை
ஹாங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை
அமெரிக்கா பொருளாதார தடை
பீஜிங்:
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது.
ஆனால் சீனாவில் உள்ள சுதந்திரம், ஹாங்காங்கில் கிடையாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுதந்திரத்தைத்தான் ஹாங்காங் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நீதித்துறை சுதந்திரத்திலும் சீனாவின் தலையீடு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த மே மாதம், கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா ஹாங்காங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜனநாயக ஆர்வலர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய மசோதாவை திரும்பப்பெற்றது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.
ஹாங்காங் போராட்டம்
சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள், ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்குபவர்கள் மீது வெளிப்படையான விசாரணை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.
தொடர்ந்து 6 மாதங்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த போராட்டம் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா, ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறது. போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதாக சீனா மற்றும் ஹாங்காங் அரசை அமெரிக்கா ஏற்கனவே கண்டித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஹாங்காங் போராட்டம் தொடர்பாக 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதில் முதல் மசோதா ஹாங்காங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும்.
அதே போல் “ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019” என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்ட மசோதா ஹாங்காங் போலீஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடைசெய்யும்.
அத்துடன் இந்த மசோதா, ஹாங்காங்கில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும்.
இதற்கிடையே ஹாங்காங் விவகாரம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவுக்கான அமெரிக்கா தூதருக்கு சீன வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.
தமிழ்நாட்டு புலிகள் கட்சிகள் வாயை மூடிக்கொண்டு இருக்கவும் – கோட்டா சீற்றம்
தமிழ்நாட்டு புலிகள் கட்சிகள் வாயை மூடிக்கொண்டு இருக்கவும் – கோட்டா சீற்றம்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள இரத்த காட்டேரி கோத்தபாய தமிழ் நாட்டில் உள்ள புலி கட்சிகள் தமது வாய்களை மூடி கொண்டு அமைதியாக இருக்கவும் என கடுமையாக சாடியுள்ளார் ,உணர்வு பூர்வமாக பேசுவதாயின் பேசுங்கள் அது தவிர்த்து பேச நினைப்பின் வாயை மூடி கொண்டு இருங்கள் என சாடியுள்ளார் ,இது நாம் தமிழர் சீமானை மையமாக வைத்தே கோட்டபாய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவதானிக்க முடிகிறது
பிரிட்டனில் தொற்று நோய் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் தொற்று நோய் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் தற்போது கடும் குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் மூச்சு விட முடியாதது தினறி வருவதாகவும் ,இதனால் உடல் சூடு ஏற்பட்டு மக்கள் அவதியுருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் ,வீட்டில் விலங்குகள் ,வளர்ப்பவர்கள் மற்றும் தூசு படிமங்கள் ஊடக இந்த நிலை ஏற்படுவதகவும் இதனை தவிர்க்க குறித்த விடயங்களில் கவனம் செலுத்து படி வேண்ட படுகிண்றீர்கள்
,போர்வைகள் ஊடாக எழும் தூசு படிவஙள் ,விலங்குகள் தோல் தூசுகள் என்பனவற்றாலும் இவை ஏற்படுகின்றனவாம் . எனவே இது தொடர்பாக மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்டி கொள்ள படுகிண்றீர்கள்
பிரிட்டனில் -£105 மில்லியனை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் இன்று செவவாய்க்கிழமை இடம்பெற்ற யூரோ மில்லியன் குழுக்களில் பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 105 மில்லியன் பவுண்டுகளை தட்டி சென்றுள்ளார் ,மிகவும் பரபரப்பாக இடம்பெற்ற இந்த குழுக்களில் குறித்த நபர் வெற்றியை தட்டி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .
The winning numbers this time were 08, 10, 15, 30 and 42 – and the Lucky Star numbers were 04 and 06.

கொலண்டில் இருந்து -லண்டனுக்கு லொறி மூலம் கடல்வழியாக கடத்தப்பட இருந்த 25 பேர் மடக்கி பிடிப்பு
கொலண்டில் இருந்து -லண்டனுக்கு லொறி மூலம் கடல்வழியாக கடத்தப்பட இருந்த 25 பேர் மடக்கி பிடிப்பு
கொலண்டில் இருந்து -லண்டனுக்கு லொறி மூலம் கடல்வழியாக கடத்தப்பட இருந்த 25 பேர் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் ,இவர்கள் கொலண்டில் இருந்து கப்பல் ஊடாக லண்டணுக்குள் நுழைய முயன்ற லொறிக்குள் சுமார் 25 பேர் அடைத்து ஏற்றி வரப்பட்டனர் .அங்கு இடம்பெற்ற சோதனையின் பொழுது இவர்கள் சிக்கினர் .
Rotterdam. டாமுக்கு அருகில் உள்ள , Vlaardingen என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,சம்பவ இடத்திற்கு 20 அம்புலன்ஸ் அனுப்பி வைக்க பட்டது எனினும் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை .லண்டனுக்கு லொறியில் கடத்தி வரைபட்டவர்கள் இறந்த நிலையில் 39 மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இந்த மனித கடத்தல் கண்டு பிடிக்க பட்டு தடுக்க பட்டுளள்து குறிப்பிடதக்கது
பிரிட்டன் வீதியில் வீழ்ந்து கிடந்த பெரும் தொகை பணம்
பிரிட்டன் வீதியில் வீழ்ந்து கிடந்த பெரும் தொகை பணம்
பிரிட்டன் – County Durham பகுதியில் பை ஒன்றுக்குள் மடித்து வைக்க பட்ட நிலையில் இருபது பவுண்டுகள் அடங்கிய சுமார் இரண்டாயிரம் பண பை ஒன்று கைவிட பட்ட நிலையில் கண்டெடுத்த நபர் ஒருவர் அதனை காவல்துறையில் ஒப்படைத்தார் ,மேற்படி பணத்தை ஒப்படைத்த நபருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது ,இபப்டியும் மனிதர்கள்
பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்
பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்
பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் வரலாறு காணாத வகையில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சி
இது குறித்து தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாஜித் ஷா கூறியதாவது:-
பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமார் 27,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகப்படியான டெங்கு காய்ச்சல் பரவலை பாகிஸ்தான் தற்போது எதிர் கொண்டுள்ளது.
அதே சமயம் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2011-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 370 பேர் உயிரிழந்தனர். ஆனால் நடப்பாண்டில் இதுவரை 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
டெங்குவை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்
காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் பலமுறை இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. கார்கில் போர் போன்ற மிகப்பெரிய யுத்தங்களும் நிகழ்ந்து பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சமீபத்தில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
அணு ஆயுதத்தைத் தாங்கியபடி கண்டம் விட்டு கண்டம் சென்று 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணையை இந்தியா கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கையும் தாக்கியது.
இந்த சோதனை நடந்து இரண்டு தினங்கள் ஆகி உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம், ‘ஷகீன் -1’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இன்று சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவ கட்டளை படைப்பிரிவின் செயல்பாட்டு தயார்நிலையை சோதிக்கும் நோக்கில், ஷகீன்-1 ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 650 கி.மீ. வரை அனைத்து வகையான ஆயுதங்களையும் தாங்கிச்செல்லக்கூடியது என பாகிஸ்தான் ராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியா திடீர் ராணுவ பயிற்சி
வடகொரியா திடீர் ராணுவ பயிற்சி
கொரியா எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையை விரைந்து நடத்திட நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வடகொரியாவின் விமானப்படை திடீர் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த ராணுவ பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.
நேற்று விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், “வடகொரியாவின் ராணுவத்தை வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்குவதற்கும், போருக்கு தயார் நிலையில் இருப்பதற்கும் இப்படி அறிவிப்பு இல்லாமல் ஒரு பயிற்சியை மேற்கொள்வது அவசியம்” என கூறினார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரியா விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் “கிம் ஜாங் அன், நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என குறிப்பிட்டார்.







