Author: நலன் விரும்பி
சுத்து மாத்து சுமந்திரனுக்கு – தவராசா நெத்தியடி
சுத்து மாத்து சுமந்திரனுக்கு – தவராசா நெத்தியடி
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய நபராகவும் தமிழ் தேசிய மக்களை இழிவு படுத்தும் நயவஞ்சக
செயலில் ஈடுபட்டு வரும் சுமந்திரனுக்கு ,பிரபல சட்டத்தரணியும் ,வித்தியா கொலையில் சிக்கி தன்னை அவமதித்து கொண்ட திரு தவராசா அவர்கள் தற்பொழுது நெத்தியடி வழங்கியுள்ளார்
சுமந்திரனை தான் ஒரு சட்டதரணி என்ற நிலையில் அரசியல் கட்சிகள் ,மக்களை மிரட்டி வருகிறார் ,இவருக்கு எங்கே எப்படி
பல்லு பிடுங்க வேண்டும் என்பதை இலங்கையில் செய்து கொள்ள முடியாது ,
ஆதலால் இந்த ஆட்டத்தை இவர் ஆரம்பிக்க அதற்கு இவரே மருந்து என கண்டு பிடித்து தவராசா மூலம் நெத்தியடி வழங்க பட்டுள்ளது
மாவையின் தமிழரசு கட்சியில் இணைந்து கொள்ள தவராச முன் வந்திருந்தார் ,அவ்வேளை புலிக்குட்டிக்கு ஆதரவாக களம் இறங்கிய
தவராசா வித்தியா கொலையில் சிக்கி தனது அரசியல் பயணத்திற்கு புதைகுழி வெட்டி கொண்டார் .
அன்று அவர் அந்த வழக்கில் ஆயராகி இருக்க விட்டால் தவராசா இலங்கை அரசியலில் பேச படும் நபராக மாற்றம் பெற்று இருப்பார்
என்னுடன் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அங்கிருந்து கைபேசியில் பேசி தனது நிலை பாட்டை தெளிவு படுத்திய சாமானியர் .ஆதல் இன்றுவரை அவரை மதிக்கிறேன்
ஆனால் ஆளுமையுள்ள ஒருவர் ஒரு கற்பழிப்பு வழக்கால் திசை மாறி போனது ,கவலையே .எனினும் சுமந்திரனுக்கு தக்க
வேளையில் தகுந்த பதிலடி வழங்கிய அவருக்கு எதிரியின் பாராட்டுக்கள்
பிறந்த நாளில் -பிரிட்டன் பார்க்கில் இரு சகோதரிகள் வெட்டி கொலை
பிறந்த நாளில் -பிரிட்டன் பார்க்கில் இரு சகோதரிகள் வெட்டி கொலை
பிரிட்டன் Fryent Country Parkஇல் பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடி கொண்டிருந்த இரு சகோதரிகள் அங்கு வந்த நபர்களினால்
திடீரென கோரமாக வெட்டியும் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர்
பிறந்த நாள் நிகழ்வு மரண நிகழ்வாக முடிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்றவண்ணம் உள்ளன
ஐக்கிய தேசிய கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம்
ஐக்கிய தேசிய கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம்
ஐக்கிய தேசிய கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி கொடுப்பார்கள் என்பது பகல் கனவு. தொழிலாளர்கள்சார் அங்கத்தினர்களிடம் அவர்கள்சார்
பிரச்சனைகளை பேச முடியாதவர்கள் எங்க மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொடுக்க போகின்றார்கள். ஆரம்ப காலம் முதல் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கும்
அரசாங்கத்தின் கொடுப்பனவு ஐம்பது ரூபாயையும் இல்லாமல் ஆக்கியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினரே இவர்களை வருகின்ற பொது தேர்தலில் ஓரம் கட்ட வேண்டும் என கூறுகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர்களுடனான சந்திப்பு ஒன்று நுவரெலியாவில் இன்று நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வேட்பாளர்
ஐக்கிய தேசிய கட்சியின் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அமளிதுமளி ஏற்பட்டு
தொழிலாளர் பிரதிநிதிகள் சிரிகொத்தவையில் இருந்து வெளியேரிய சம்பவம் பாபரும் அறிந்த விடயம். இவர்களுக்கே
இப்படி என்றால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இதே நிலை தான்.
பொதுவாக ஐ.தே.க தொழிலாளர்சார் கட்சியல்ல. முதலாளிமார்சார் கட்சி என்பது யாபருக்கும் தெரியும். இவர்கள் முடிந்தளவு முதலாளிமார்களின் நலன் குறித்தே செயற்படுவர். மலையக
பெருந்தோட்டங்களை எடுத்துக் கொண்டால். 95 வீதமான தோட்டங்கள் தனியார் முதலாளிமார்களுக்கே சொந்தமானது. இந் நிலையில் இவர்கள் எப்படி பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம்
ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வருவார்கள். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்தையின் பொழுது
அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தவர் ஐ.தே.கட்சியின் அமைச்சர் நவீன் திசாநாயக்க இவரே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக
இருந்தவர். இவர் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிடுகின்றார். இவருக்கு பெருந்தோட்ட மக்கள் நல்ல பாடம் ஒன்றினை கற்பிப்பர் என நினைக்கின்றேன்.
தற்போது பொது தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் முடிந்தவுடன் பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குதல் குறித்து பேச்சுவார்தை நடாத்த வேண்டும். அதற்கு ஒரு
திடமான அரசாங்கம் வேண்டும். அதுவும் தொழிலாளர்கள் சார்பில் அக்கரை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதற்கு
பொருத்தமானது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்று நினைக்கின்றேன். இதற்கு முன்னர் அனைத்து கட்சிகளுடனும் அந்ததந்த கட்சிகள் சார்பான
அரசாங்களிடமும் பேசி இருக்கின்றோம் ஆனால் இது வரைக்கும் கிடைக்கவில்லை. என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
கடற்கரைகளை சுத்தம் செய்யும் சிங்கள கடற்படை
கடற்கரைகளை சுத்தம் செய்யும் சிங்கள கடற்படை
தீவின் அழகிய கடற்கரைகளை பாதுகாக்கும் நோக்கில், காலி முகத்திடம்
கடற்கரை மையமாகக் கொண்டு 2020 ஜூன் 09 ஆம் திகதி மற்றொரு
கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை கடற்படை மேற்கொண்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ‘நீல பசுமை
சுற்றுச்சூழல் திட்டத்தின்‘ கீழ் தீவைச் சுற்றியுள்ள அழகான கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படை பல கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் குழு காலி முகத்திடம் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றுள்ளது.
இவ்வாரான திட்டங்கள் மூலம் எதிர்காலத்திலும், தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளின் அழகை மேம்படுத்த கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஆட்டோ சங்கத்தின் தலைவர் அடித்து கொலை
ஆட்டோ சங்கத்தின் தலைவர் அடித்து கொலை
கடந்த இரவு ,இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி
சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன குழு ஒன்றினால் பலமாக தக்க பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்
மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்
காவல்துரையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் தொடரும் இவ்விதமான படுகொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,376 மில்லியனாக அதிகரிப்பு
இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,376 மில்லியனாக அதிகரிப்பு
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,376 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் 1,813,688 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது. அதற்கான
காசோலை நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம்
கையளிக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
தேசிய நூலகம், ஆவணவாக்கல் சேவைகள் சபை 250,000 ரூபாவையும் இலங்கை செஸ் சம்மேளனம் 1,000,000 ரூபாவையும்
நிதியத்திற்காக ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தனர். அமைச்சர்களான பந்துல குணவர்த்தன மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
திரு ஹசன்த குருகே 100,000 ரூபாவையும் பஸ்னாகொட நீர்த்தேக்க திட்டம் 28,739.17 ரூபாவையும் அன்பளிப்பு செய்துள்ளனர். தற்போது
இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,376,767,920.06 ரூபாவாகும்.
உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர்.
இலங்கைக்கு -ஜேர்மன் அரசாங்கம் 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவி
இலங்கைக்கு -ஜேர்மன் அரசாங்கம் 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவி
ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை
அரசாங்கத்தினால் கீழ் கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.
1 . தொழில் பயிற்சித் திட்டம் – 7 மில்லியன் யூரோ இளைஞர்களுக்காக அவர்களின் கோரிக்கைக்கு அடிப்படையிலான
தொழில் பயிற்சியை வழங்குவதே இந்த திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.
2 . சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை அபிவிருத்தித் திட்டம் – 3.5 மில்லியன் யூரோ இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்
துறையினருக்கு சர்வதேச சந்iதையில் நிலவும் போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கக்கூடிய வசதிகளை செய்துகொடுப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
- கல்வி மற்றும் மேலாண்மை நிபுணத்துவ நிதி– 0.5 மில்லியன் யூரோ புதிய திட்டங்களை வகுக்கும்போது தேவையான
- ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், சிறிய அளவிலான
- திட்டத்திற்கு நிதியை ஒதுக்குவதற்கும், ஜேர்மன் நிபுணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்கள் GIZ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். தொழில் பயிற்சி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துறைகளின் அபிவிருத்திக்காக இலங்கை
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பல வழிகளில் பங்களிப்பு செய்து தொழில் நுட்பம் மற்றும் நிதி
உதவிகளை வழங்கி ஜேர்மன் அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கிவருகிறது.
மேற்படி விடயங்களுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று நிதி மற்றும் கொள்ளை அபிவிருத்தி அமைச்சில்
இடம்பெற்றது. நிதி அமைச்சின் செயலாளர், திரு.எஸ்.ஆர்.ஆடிகல இலங்கையின் சார்பிலும் இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதுவர்
திரு.ஜோன் ரோட் (Mr. Jorn Rohde) ஜேர்மன் அரசாங்கத்தின் சார்பிலும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். வெளிநாட்டு
வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அஜித் அபேசேகர மற்றும் GIZ நிறுவனத்தின் இலங்கைகான பிரதிநிதி
திருமதி. கிறிஸ்டின் இயன்வ்ல்ட் (Christiane Einfeldt) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடஅனுமதி
மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடஅனுமதி
மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் மற்றும் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பு கீழ்வருமாறு அமையும்:
- மதவழிபாட்டுத் தலங்கள்
மத வழிபாடுகளுக்காக கீழ்கண்ட வரையறைக்குட்பட்டதாக தனிநபர்கள் ஒன்று கூடுவதற்காக 2020ஆம் ஆண்டு ஜுன் - மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்படுகின்றது.
• சுகாதார பாதுகாப்பு தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து எத்தகைய மதவழிபாட்டுத் தலங்களிலும் (அந்த வழிபாட்டு
தலத்திற்குட்பட்ட கட்டிடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒன்றுகூடக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
• இருப்பினும் சமூக இடைவெளியை பாதுகாத்து 50 தனிநபர்கள் அல்லது ஒன்றுகூடக்கூடிய இடவசதி இல்லாத மதவழிபாட்டுத்
தலங்களில் பொதுவாக அந்த நிலப்பகுதியில் கூடியிருக்கக்கூடிய எண்ணிக்கையில் அரைவாசிக்கு மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியும்.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்குட்பட்டவகையில் தனியார் வகுப்புக்களை 2020 ஜுன் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
• சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படும் இடத்தில் இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பாதுகாத்து ஒரு மேலதிக வகுப்புக்காக கலந்துகொள்ளக்கூடிய ஆகக்கூடிய
மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் 100 பேருக்கு (100) அல்லது சம்பந்தப்பட்ட வகுப்பறைக்குள்/ மண்டபத்திற்குள் கற்பித்தலுக்கு வசதியற்ற
இடத்தில் பொதுவாக அந்த இடத்தில் மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில்
அரைப்பங்கினர் மாத்திரம் பங்குகொள்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த அனைத்து அனுமதியும் வழங்கப்படுகின்றமை COVD 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார
வழிகாட்டிகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் முழுமையான வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாகவேயாகும்.
வெடித்த குண்டு சிதறிய – இராணுவம்
வெடித்த குண்டு சிதறிய – இராணுவம்
ஆப்கானிஸ்தான் volatile எல்லை பகுதியில் ரிமோர்ட் கொன்ரோல் மூலம்
நடத்த பட்ட கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்
இரண்டு இராணுவத்தினர் பலியாகியும் .மூவர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது
இந்த குண்டு தாக்குதலை அடுத்து தற்பொழுது அந்த பகுதியில் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்
நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்
வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான 1,350 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், முத்துகள் ஆகியவை அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்
நிரவ் மோடி
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட
தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு
மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதற்கிடையே, ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.
இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரது நிறுவனங்களுக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 கிலோ எடையுள்ள
பட்டை தீட்டப்பட்ட வைரம், முத்துகள், வெள்ளி நகைகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1,350 கோடி ஆகும்.
நேற்று ஹாங்காங்கில் இருந்து மும்பைக்கு இவை வந்து சேர்ந்தன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டப்படி, இப்பொருட்கள்
முறைப்படி பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
5வது முறையாக பதவியேற்ற இஸ்ரேல் பிரதமர்
5வது முறையாக பதவியேற்ற இஸ்ரேல் பிரதமர்
கொரோனாவுக்கு பின் இந்தியா – இஸ்ரேல் நல்லுறவு குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.
5வது முறையாக பதவியேற்ற இஸ்ரேல் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி
சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா
வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு நாட்டு
தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனாவுக்கு பின் இந்தியா – இஸ்ரேல் நல்லுறவு குறித்து எனது நண்பர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன்
கலந்துரையாடினேன். 5-வது முறையாக பிரதமர் பதவி ஏற்றிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். வரும் நாட்களில்
இரு நாடுகளின் நல்லுறவு மேலும் வலுப்பெறும் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், கம்போடியா பிரதமருடன் கலந்துரையாடியது குறித்து மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவை
கட்டுப்படுத்துவது குறித்து கம்போடியா பிரதமர் ஹன் சென்னுடன் பேசினேன். இந்தியாவும், கம்போடியாவும் கலாச்சாரம் மற்றும்
வரலாற்று தொடர்புகளைக் கொண்டுள்ளன. அந்நாட்டுடன் உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்
கொரனோவால் மயங்கி வீழ்ந்த பெண் – வீட்டை போக கதறும் பரிதாபம் – வீடியோ
கொரனோவால் மயங்கி வீழ்ந்த பெண் – வீட்டை போக கதறும் பரிதாபம் – வீடியோ
இன்று சற்று முன்னர் பிரான்ஸ் அந்தோணி மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற சென்ற தமிழர் ஒருவர் அங்கு கதிரையில்
அமர்ந்திருந்த ஆபிரிக்க இன குழுமத்தை சேர்ந்த கறுப்பின பெண் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து வீட்டார் .
சோதனையில் அவருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
அந்த அதிர்ச்சியில் உறைந்து போன அவர் தான் வீடு செல்ல போவதாக ,வீட்டை விடும் படி கதறும் காட்சியே இவை
ஆனால் இந்த காணொளியை படம் பிடித்த தமிழருக்கு இது தொற்றியுள்ளதாக என்பது தொடர்பாக தெரிய வரவில்லை full video

அந்தமான் நிகோபரில் நிலநடுக்கம்
அந்தமான் நிகோபரில் நிலநடுக்கம்
அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிகோபரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நிலநடுக்கம்
போர்ட்பிளேர்:
அந்தமான் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 2.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு
மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு
பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பிரேசிலை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு
பரிசோதனை செய்யும் டாக்டர்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர்
எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு
உள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.42 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலில் கொரோனாவுக்கு 1,185 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 500- ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்-
பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்-
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தனது பிறந்தநாளான இன்று உயிரிழந்திருப்பது, உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்- சோகத்தில் ஆழ்ந்த உறவுகள்
ஜெ.அன்பழகன் எம்எல்ஏ
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம்
அடைந்தார். அவருக்கு வயது 62. இதன்மூலம் முதல் முறையாக எம்எல்ஏ ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார். அவரது இறுதிச்சடங்கு கண்ணம்மாபேட்டையில் இன்று நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் ஜெ.அன்பழகன். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்சென்னை மாவட்ட திமுக
செயலாளராக இருந்தவர். கட்சிப் பணிகளை திறம்படச் செய்து முடித்து கட்சி தலைமையிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றவர்.
ஜெ.அன்பழகன் எம்எல்ஏ
அரசியல் மட்டுமின்றி திரைப்படத்துறையிலும் கால்பதித்தவர் ஜெ.அன்பழகன். அரசியல் பணிகளுக்கு மத்தியில் திரைப்பட
விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவர். அன்பு பிக்சர்ஸ் பெயரில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் என்ற படத்தை தயாரித்துள்ளார்.
ஆதரவாளர்களை அன்புடன் அரவணைத்து செல்லும் குணம் கொண்ட அன்பழகனுக்கு இன்று பிறந்தநாள். எப்படியும் அவர் குணமடைந்துவிடுவார், பிறந்தநாளை கொண்டாடவேண்டும் என
உறவினர்களும், ஆதரவாளர்களும் நினைத்திருந்தனர். ஆனால், பிறந்தநாளான இன்று அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரது மறைவு
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மழை நிலைமை:
கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்விருத்தியடைந்துள்ளதுடன் அது
மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக
அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில்
நாட்டிற்கு கிழக்காக மற்றும் வடகிழக்காக உள்ள கடற்பரப்புகளில்சில இடங்களில் பலத்த மழையோ அல்லது
இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது
தென்மேற்குதிசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையானஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த
கடற்பரப்புகளிலும்காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த
கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையானஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த
கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்)
பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
குண்டு வெடித்ததில் ஒருவர் பலி
குண்டு வெடித்ததில் ஒருவர் பலி
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் டைனமெட் வெடி
மருந்து வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (09) மதியம் 1.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மீன் பிடிக்காக டைனமட் வெடி தயார் செய்யும் போது டைனமைட் வெடித்து சிதறியதில் டைனமைட் தயார் செய்தவர் உட்பட இருவர்
படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
இவ்வாறு வெடிப்புச் சம்பவத்தின் போது கிண்ணியா இடிமன் -5, கிண்ணியா பகுதியை சேர்ந்த செயினுலாப்தீன் நவாஸ் வயது (35),
உடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார் எனவும் மற்றொருவர் கிண்ணியா, பெரியாற்றுமுனையை சேர்ந்த ஜௌபர் ரிசான் வயது
(26) உடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்தவர் எனவும் தெரியவருகிறது.
படுகாயமடைந்த ரிசான் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 விடுதலை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 விடுதலை
நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொள்ளுபிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் 53 உறுப்பினர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவானினால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனம்
அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனம்
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர
நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவிலுள்ள இலங்கையர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்
மாலைதீவிலுள்ள இலங்கையர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்
மாலைதீவிலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.
மாலைதீவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினூடாக மாலி மற்றும் மாலிக்கு வெளியிலிருக்கும் இலங்கைச் சமூகத்தினருக்கு
மத்தியில் விநியோகிக்கும் பொருட்டு, உலர் உணவுப் பொருட்கள் உட்பட 10,000 கிலோ (2000 பொதிகள்) அத்தியாவசியப்
பொருட்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது. குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் காரணமாக மாலைதீவு அரசாங்கத்தால் சிவப்பு எச்சரிக்கை
அறிவிக்கப்பட்டுள்ளதும், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கான அணுகல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுமான
கிரேட்டர் மாலியில் பாதிப்படைந்தவர்களால் முகங்கொடுக்கப்பட்டு வரும் பல சிக்கல்களைத் தணிக்கும் முயற்சி இதுவாகும்.
2020 ஜூன் 7, ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் சரக்கு விமானத்தினூடாக கட்டணங்கள் எதுவுமின்றி இலவசமாக இந்த உதவிப் பொருட்களை மாலைதீவுக்கு எடுத்துச் சென்றதனுடாக
இந்த நோக்கத்திற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஒத்துழைத்துள்ளது. வழங்கப்பட வேண்டிய இந்த தனிப்பட்ட உதவிப் பொருட்கள் ஒவ்வொன்றும் 18
பொருட்களை உள்ளடக்கியதுடன், இதில் உடனடி உணவுப் பொதிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் போன்ற அடிப்படைப்
பொருட்கள் மற்றும் சமூகத்தால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகியவை உள்ளடங்கும்.
ஏறத்தாழ 7000 இலங்கையர்கள் தற்போது மாலைதீவிலிருந்து மீள நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதுடன், அவர்களுள் கிட்டத்தட்ட 2000 பேர் கிரேட்டர் மாலியில் காணப்படுகின்றனர். இலங்கையர்கள்
புறப்படுவதற்கு முன்னர், பணம் செலுத்தும் அடிப்படையில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மாலைதீவு
அதிகாரிகளுடன் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஏற்கனவே கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
பெரும்பாலான தலைநகரங்களில், இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலமாகவும், இலங்கை சமூகத்தைச் சேர்ந்த சங்கங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன்
ஒன்றிணைந்தும் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதனூடாக வெளிநாடுகளில் குடியேறிய சமூகங்களுக்கு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள்
தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றன. நாட்டிற்கு மீளத் திரும்பி வர எதிர்பார்ப்போரை மீள அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தொடர்ந்தும் உதவி வரும் அதே வேளையில், சாத்தியமான
சந்தர்ப்பங்களில் குறித்த இடங்களில் ஏற்படும் மருத்துவ அவசரநிலைகளுக்கும் அவர்கள் உதவிகளை மேற்கொள்கின்றார்கள்.








