Posted in உலக செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்றும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 17 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,; தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 9 பேர் கத்தாரில் இருந்தும், 3 பேர் குவைத்தில் இருந்தும், ஒருவர் டில்லியில் இருந்தும், 22 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும்,

ஒருவர் ஹரியானாவில் இருந்தும், 6 பேர் டில்லியில் இருந்தும் வந்தவர்கள். இதன் மூலம் தொற்று உறுதியானவர்களின்

எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனையடுத்து

வீடுதிரும்பியவர்களின் எண்ணிக்கை 17, 527 ஆக அதிகரித்துள்ளது. 15,413 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      விஸ்வமடு வெடிபொருள் கடற்படையினரால் மீட்பு

      விஸ்வமடு வெடிபொருள் கடற்படையினரால் மீட்பு

      விஸ்வமடு, உடையார் கட்டு பிரதேசத்தில் சுமார் 40 கிலோகிராம்

      டிஎன்டி ரக வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

      உடையார்கட்டு பகுதியில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீப்பாயிருந்து குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

      இந்த வெடிபொருள் தொகுதி, மனிதாபிமான நடவடிக்கையின் போது

      தமிழீழ விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட

      கைவிடப்பட்டிருக்கலாம் என நம்ப படுவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

      குறித்த வெடிபொருட்கள் இலங்கை கடற்படையின் வெடிபொருள் அகற்றும்

      பிரிவினரால் பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்கள் கைது

          விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்கள் கைது

          இலங்கைக்கு உல்லாச பாயணிகளாக வருகை தந்து விசா இயன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்கள்


          காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

          கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

              Posted in இலங்கை செய்திகள்

              மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமாகவிஜயசந்திரன் ஏகமனதாக நியமனம்

              மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமாகவிஜயசந்திரன் ஏகமனதாக நியமனம்

              ம.ம.மு யின் பதில் பிரதி செயலாளர் நாயகமாக பேராசிரியர் விஜயசந்திரன் ஏகமனதாக நியமனம்.
              செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ்

              மலையக மக்கள் முன்னணியின் பதில் பிரதி செயலாளர் நாயகமாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும்

              நிதிச்செயலாளருமான பேராசிரியர் விஜயசந்திரன் ஏகமனதாக மத்திய குழவிலும் அரசியல் உயர் பீடத்திலும் தெரிவு

              செய்யப்பட்டுள்ளார் என கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் ஊடகங்களுக்கு நேற்று (08.06.2020) தெரிவித்துள்ளார்.

              இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

              ஏற்கனவே கட்சியின் பிரதி செயலாளராக பேராசிரியர் விஜயசந்திரன் கட்சியின் உயர் பீடத்தால்

              நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் பிரதி செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு என்னுடன் இணைந்து சிறப்பாக செயற்பட்டு வந்தார்.நான்

              சுகவீனமுற்றிருந்த காலப் பகுதியில் அவர் பதில் செயலாளராக நாகமாக என்னுடைய வேலைகளையும் அவரே பாரத்து வந்தார்.

              ஆனால் நாங்கள் அனுசா சந்திரசேகரனை கட்சிக்குள் உள்வாங்கிய பின்பு அவருக்கு பொறுத்தமான பொறுப்பான ஒரு பதவியை

              வழங்க வேண்டும் என எங்களுடைய மத்திய குழு தீர்மானித்த பொழுது பேராசிரியர் விஜயசந்திரன் தானாக முன்வந்து தன்னுடைய பிரதி செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்தார்.

              அதன் பின்பே அனுசா சந்திரசேகரன் கட்சியின் பிரதி செயலாளராக நிமிக்கப்பட்டார்.ஆனால் அவர் தன்னுடைய

              பதவியை பொறுப்பாக நிறைவேற்றவில்லை.கூட்டங்களுக்கு முறையாக சமூகமளிக்கவில்லை.நான் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே என்னுடைய பொறுப்புகளையும்

              நிறைவேற்றினேன்.ஆனால் இன்று அவர் கட்சியின் மத்திய குழு அரசியல் உயர்பீடங்களின் தீரமானத்திற்கு எதிராக தண்ணிச்சையாக தனியாக சுயேச்சை குழுவில் தலைமை

              வேட்பாளராக போட்டியிடுவதன் காரணமாக பிரதி செயலாளராக அவர் செயற்படுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

              எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இது தேர்தல் காலம் என்பதால் செயலாளருடைய தேவை அதிகமாக இருக்கும் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு பதில் பிரதி செயலாளர்

              நாயகமாக மீண்டும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் நிதிச்செயலாளருமான பேராசிரியர் விஜயசந்திரன் பிரதி பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

              அனுசா சந்திரசேகரன் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்;.அவரை

              கட்சியில் இருந்து வெளியேற்றியிருப்பதாக வெளியான தகவல் தவறானது என்பதையும் இந்த நேரத்தில் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கை கல்வி திட்டத்தில் மாற்றம்

                  இலங்கை கல்வி திட்டத்தில் மாற்றம்

                  தயாரிக்கப்பட்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிசீலித்துள்ளார்.

                  இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. இதில் தேசிய கல்விக் கொள்கையை வகுக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராயப்பட்டது.

                  சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புக்கள்

                  என்ற தொனிப்பொருளில் புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்படுகிறது.

                  இந்த முயற்சியில் எட்டப்படும் தீர்மானங்கள் நாட்டின் மீதும்இ எதிர்கால சந்ததி மீதும் தாக்கம் செலுத்துவதால்இ சகலரும்

                  இணங்கக்கூடிய கொள்கையைத் தயாரிப்பது முக்கியமானது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

                  இந்தக் கொள்கை பற்றிய இறுதி அறிக்கையை அங்கீகரிப்பதற்கு முன்னதாகஇ அதனை குறைந்தபட்சம் இரு மாதங்களேனும் சமூகக்

                  கருத்தாடலுக்கு உட்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் ஒன்லைன் கல்வி முறைமையை கூடுதலாக

                  பிரபலப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார்

                      Posted in இலங்கை செய்திகள்

                      பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

                      பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

                      பாதாள உலக குழு உறுப்பினரான அமில பிரசன்ன ஹெட்டிஹேவா என அழைக்கப்படும் ´சன்சைன் சுத்தா´ மீது துப்பாக்கிப்

                      பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபருக்கு

                      உதவி புரிந்த சந்தேகத்தின் பேரில் தலங்கம பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                      கடந்த மாதம் 30 ஆம் திகதி மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக வைத்து

                      மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சன்சைன் சுத்தா காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          சிறைச்சாலையில் 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

                          சிறைச்சாலையில் 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

                          இன்று (09) காலை நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 61

                          கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              தென்னங்காணிகளை பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

                              தென்னங்காணிகளை பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

                              நாட்டில் தற்பொழுதுள்ளஅனைத்து தென்னங்காணி தொடர்பான 1921ஆண்டு இலக்கம் 46 இன் கீழான தெங்கு அபிவிருத்திசட்டத்தின்

                              கீழ் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது.

                              இதற்கமைவாக எதிர்காலத்தில் தெங்கு உற்பத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மூலமான சேவைகள்

                              மற்றும் ஏனைய நிதியுதவி வேலைத்திட்டத்திற்கு தெங்கு உற்பத்தி சபையில் பதிவுசெய்யப்பட்ட தென்னங்காணிகள் மாத்திரமே தகுதிபெறும்.

                              நாட்டில் தற்பொழுதுள்ள தென்னங்காணிகள் தொடர்பாக சரியான தரவுகளை முன்னெடுத்தல், காணிஅபிவிருத்தி திட்டத்தை வகுத்தல்

                              , தென்னங்காணிகள் மூலமான அறுவடைகளை சரியான முறையில் கண்காணித்தல் மற்றும் தென்னங்காணிகளை

                              பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை முன்னிலைப்படுத்தி தெங்கு உற்பத்தி சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                              இது தொடர்பாக மேலதிக தகவல்களை பிரதேச தெங்கு அபிவிருத்தி அதிகாரிகள் மூலமும், 0112861011 மற்றும் 0766904804 என்ற

                              தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தெங்கு உற்பத்தி சபையின் தகவல் பிரிவுடன் தொடர்பு கொண்டு அல்லது 1920 என்ற உடனடி

                              தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மகிந்தவுக்கு சுப்பிரமணிய சுவாமி வக்காளத்து

                                  தமிழ் மக்கள் சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என்பது தனக்கு நன்கு

                                  தெரியும் என்று இந்திய பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரும் அந்;நாட்டின்

                                  ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

                                  இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் அவ்வாறு குறிபிபிட்டுள்ளார்..

                                  எச்சரிக்கை நிலவிய சந்தர்ப்பங்களில் அவற்றை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளும் திறன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      வவுனியாவில் தீ வைத்து எரிக்க பட்ட இளம் பெண்

                                      வவுனியாவில் தீ வைத்து எரிக்க பட்ட இளம் பெண்

                                      வவுனியா பகுதியில் இருபத்தி ஒன்பது வயதுடைய இளம் பின்

                                      ஒருவர் அயல் வீட்டாரினால் தீ வைத்து எரிக்க பட்ட நிலையில்

                                      மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

                                      இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது
                                      பெண்ணின் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைக்க பட்டுள்ளது

                                      இந்த தீவிபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

                                          Posted in உலக செய்திகள்

                                          அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி.

                                          அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி.

                                          இங்கிலாந்து நாட்டில் மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்த ஜிம் மர்பி என்ற நபர், தனது அறுவை சிகிச்சையை செல்போனில்

                                          ‘செல்பி’ படம் எடுத்து அதை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ‘வாட்ஸ்-அப்’மூலம் பகிர்ந்து கொண்டார்.

                                          மூளை அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி


                                          மூளை அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி
                                          லண்டன் :

                                          இங்கிலாந்து நாட்டில் ஜிம் மர்பி என்ற 54 வயது நபர், மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர்

                                          ஹல் என்ற இடத்தில் உள்ள ஹல் ராயல் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைப்பகுதிக்கு

                                          மட்டுமே மயக்க மருந்து கொடுத்து, சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக அறுவை சிகிச்சை நடந்தது.

                                          அறுவை சிகிச்சையை அவர் தனது செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்து அதை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும்

                                          ‘வாட்ஸ்-அப்’மூலம் பகிர்ந்து கொண்டார். முதலில் அதைப் பார்த்த யாருமே நம்பவில்லையாம்.

                                          இதுபற்றி அவர் கூறுகையில், “அறுவை சிகிச்சையின் போது நம்பிக்கையாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று நான்

                                          முடிவு செய்தேன். அதனால் விழித்திருந்தேன். அறுவை சிகிச்சையை நான் ரசித்தேன். அறுவை சிகிச்சை கருவிகளின்

                                          சத்தத்தை மூழ்கடிக்க நான் இசை கேட்டேன். நண்பர்களுடன் பேசினேன்” என்றார்.

                                          இதில் குறிப்பிடத்தக்க அம்சம், மர்பியை போன்று அவரது மனைவிக்கும் மூளையில் கட்டி இருந்து 18 ஆண்டுகளுக்கு முன்பு

                                          சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளனவாம். மர்பின் மூளை அறுவை சிகிச்சை ‘செல்பி’ படம், சமூக ஊடகங்களில் வைரலானது.

                                              Posted in உலக செய்திகள்

                                              அமெரிக்காவில் இரண்டு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

                                              அமெரிக்காவில் இரண்டு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

                                              கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு

                                              அடைந்தோர் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

                                              உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

                                              இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

                                              கொரோனா வைரஸ் தொற்று

                                              அமெரிக்காவில் இன்று புதிதாக 6,658 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில்

                                              கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 20,14,107 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனா

                                              தொற்றுக்கு மேலும் 176 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 1,12,645 ஆக அதிகரித்துள்ளது. மேலும்

                                              அமெரிக்காவில், கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 7,63,303 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்

                                                  Posted in உலக செய்திகள்

                                                  கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்

                                                  கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்

                                                  உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

                                                  கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்: சிங்கப்பூர் பிரதமர் சொல்கிறார்
                                                  சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்


                                                  கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்

                                                  பட்டாலும் உலகம் முழுவதும் அனைவருக்கும் கிடைக்க பல மாதங்கள் ஆகும் என்று கருதப்படுகிறது.

                                                  இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக அனைவருக்கும் கிடைக்க குறைந்தது ஓராண்டு ஆகும்

                                                  என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் லிசியென்லூங் பேசியதாவது:-

                                                  கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் முழுவதும் அனைவருக்கும் பரவலாக

                                                  கிடைக்க குறைந்தது ஒரு ஆண்டாகும். அநேகமாக ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகலாம்.

                                                  நாம் கொரோனா வைரசுடன் நீண்ட நாட்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அது காசநோய் போன்ற ஆபத்தான தொற்று நோயுடன்

                                                  கடந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருவதுபோல் கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

                                                  சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசால்

                                                  பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கும், புதிய தொற்றுகள் உருவாகாமல்

                                                  தடுப்பதற்கும் சோதனைகள் முடுக்கிவிடப்படும். நாம் முற்றிலும் கணிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.

                                                  கொரோனா பரிசோதனை

                                                  கொரோனா தொற்று மனித இனம் நீண்ட காலத்துக்கு பிறகு சந்தித்து இருக்கும் மிகப்பெரிய ஆபத்தான நெருக்கடியாகும்.

                                                  கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து சிங்கப்பூர் இன்னும் வலிமையான மேம்பட்ட நாடாக மீண்டும் வரும். கிருமி தொற்றுக்கு முன் இருந்த உலகளாவிய பொருளாதாரத்துக்கு சிங்கப்பூர்

                                                  விரைவில் திரும்ப போவதில்லை. இதனால் சில தொழில்துறைகள் நிரந்தரமாக மாற்றப்படும். பல தொழில்துறைகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

                                                  இவ்வாறு அவர் பேசினார்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      சிறிலங்காவின் ஜனாதிபதி நோக்கி விரலை நீட்டியுள்ள கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் !

                                                      சிறிலங்காவின் ஜனாதிபதி நோக்கி விரலை நீட்டியுள்ள கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் !

                                                      2009ம் ஆண்டு போருக்கு பின்னராக நடந்தேறிய பாரிய தொடர்பில் சரியானதொரு புலனாய்வு விசாரணையினை அனைத்துலக சமூகம் பெரிதாக செய்திடவில்லை என்பதோடு, பல

                                                      ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொலையுணக் காரணமாக, சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதியே இறுதிப்போரின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என மத்திய அமெரிக்க

                                                      கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் தெரிவித்துள்ளார்.


                                                      கடந்த தேர்தலுக்கு பின்னராகவும் தமிழ்மக்கள் அச்சங்கொண்டு வாழ்வதைப் தன்னால் புரிந்து கொள்ள முடிவதறகு இப்போது

                                                      நாட்டின் அதிபராக இருப்பவர்தான் உள்நாட்டுப் போரின் குருதி தோய்ந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்

                                                      என்பதே காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் தெரிவித்துள்ளார்.

                                                      சமீபத்தில் நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையவழி அரசவை அமர்வின் தொடக்கநாள் நிகழ்வின் போது

                                                      சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுப்போதே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

                                                      நடந்த குற்றங்களுக்கான உரிய புலானய்வுவிசாரணையினை செய்யப்படாமல் இருக்கின்றமை இன்னமும் தொடர்வதோடு, அனைத்துலக சமூகம் கூடுமான விரைவில் இதனைச் சரிசெய்தாக

                                                      வேண்டும் எனவும் சர்வதேச சமூகத்தினை நோக்கி கோரிக்கையினை விடுத்துள்ள அவர், தற்போதை உலகின்

                                                      ஆபத்தான போக்குள்ளேயே ஈழத்தமிழ் மக்கள் தமது போராட்டத்தை நடத்தியாக வேண்டிய நிலை உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                                                      அவரது உரையின் முழுவடிவம் :

                                                      நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்பேரவையில் உரையாற்ற என்னை அழைத்தமைக்காக முதற்கண் நன்றி சொல்ல

                                                      விழைகிறேன். எனக்களித்த தனிப் பெருமையெனக் கொண்டு, உங்கள் அன்பழைப்பை ஆழ்ந்து போற்றி மகிழ்கிறேன்.

                                                      உங்களது அரசவை ஈழத்தமிழ் மக்களை ஒன்றுசேர்ப்பதிலும் அமைதிக்கும் விடுதலைக்கும் நீதிக்குமான பெருமுயற்சியில்

                                                      அவர்களை ஒற்றுமைப்படுத்துவதிலும் முதன்மைப் பங்கு வகிக்கும் தனித்துவமான ஓரமைப்பு ஆகும்.

                                                      இந்த அரசவையின் பிறப்பு தமிழர்களின் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் வாழும் தமிழர்களின் நெஞ்சகத்தே சுடர் விடும் உறுதிக்கும் ஊக்கத்துக்கும் எதிர்ப்புணர்வுக்கும் சான்றாகும்.


                                                      இந்தச் சீரிய பேரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தலைமையின் மகத்தான அமைப்புத் திறன்களையும் படைப்பாற்றலையும் மெய்ப்பித்துக் காட்டுவதாக உள்ளது.

                                                      பன்னாட்டுச் சூழல்

                                                      அநேகமாய் வாழ்க்கைத் துறைதோறும் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் பன்னாட்டுலகச் சூழலில் அரசவை கூடியுள்ளது. மாற்றங்கள் மட்டுமல்ல, உறுதியின்மைகளும் பேராபத்துகளும்

                                                      பெருத்த அறைகூவல்களும் கூட இச்சூழலில் நிறைந்துள்ளன. வாய்ப்புகளும் நிறைந்திருப்பதாக நான் நம்புகிறேன்.


                                                      நம்மில் மூன்றாம் உலகில் வாழ்வோர்க்கு அந்த அறைகூவல்கள் இன்னும்கூட அழுத்தமானவை.
                                                      மிகவும் உடனடியான சிக்கல் என்றால், புவியைப் பிடித்தாட்டும் உலகளாவிய பெருந்தொற்று நோயைத்தான் சொல்ல வேண்டும்.

                                                      இந்த நோய்க்கிருமி தொடர்ந்து பரவிக்கொண்டும், உலகெங்கும் நூறாயிரக்கணக்கான சாவுகள் விழக் காரணமாகிக் கொண்டும் இருக்கிறது.

                                                      அதன் முழுத் தாக்கம் இன்னும் மெய்ப்பட்டு விடவில்லை; ஆனால் இப்போதே உலகின் ஆகப்பெரிய, ஆக முதன்மையான பொருளியலமைப்புகளில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கக்

                                                      காண்கிறோம். இது உலகளாவிய பொருளியல் சுணக்கத்தின் தொடக்கமாக அமைந்து விடுமென நம்பப்படுகிறது. இவ்வாறான

                                                      நேரங்களில் அநேகமாய் எப்போதுமே வளர்பருவ உலகின் மக்களினங்களே சிக்கன நடவடிக்கைகளின் சுமைதாங்கிகள் ஆகின்றனர்.

                                                      மறுபுறம் நாமெல்லாம் எவ்வளவு நெருக்கமாய் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை இந்த கொவிட்-19 நோய்க்கிருமி நமக்குச் சொல்கிறது. கெடுவாய்ப்பாக உலகத் தலைவர்களில் சிலர் இந்த

                                                      உண்மைநிலையை உள்வாங்கத் தவறி விட்டதாகத் தோன்றுகிறது; நோய்க்கிருமியிலிருந்து விடுபட நம் செல்வவளங்களைப்

                                                      பயன்படுத்தாமல் இவர்களில் சிலர் அற்பப் பூசல்களில் ஈடுபட்டுள்ளனர்.

                                                      காலநிலை மாற்றத்துக்கும் முகங்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். நீங்களே கூட, வரலாற்றில் வந்துற்ற படுமோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றான ஆழிபேரலையால்

                                                      துயருற்றீர்கள். கடுஞ்சூறாவளிகள், வறட்சிகள், பெரும்புயல்கள், வெள்ளப்பெருக்குகள் முன்னைக்காட்டிலும் அடிக்கடியும் கூடுதல் வலுவோடும் தாக்குவதுதான் புதிய செய்தி.

                                                      சமூகக்களத்தில் நாடுகளுக்கிடையிலும் அந்தந்த நாட்டுக்குள்ளேயுமான ஏற்றத்தாழ்வு வளர்ந்து சமூகப் பொருளியல் அமைப்பை நார் நாராகக் கிழித்துப் போடும் ஆபத்துள்ளது.

                                                      ஆண்டுக்கு ஆண்டு செல்வக் குவிப்பும் வளர்ந்து வரும் சார்பியல் வறுமையும் முற்றிச் செல்கின்றன. செல்வந்தருக்கும் வறியவர்க்குமான உடையார்க்கும் இல்லார்க்குமான இடைவெளி

                                                      குடாக்கடல் போல் விரிந்துள்ளது. ஒருபுறம் வறுமை வளர்ந்து செல்ல, மறுபுறம் வீண்விரயம் மீப்பெருமளவில் தலைவிரித்தாடுகிறது.

                                                      உச்சத்திலும் உச்சமான படைக்கலன்கள் செய்வதற்குக் கோடானுகோடி டாலர்கள் செலவிடப்படுகின்றன. சாவு வணிகர்கள் நம்முலகின் பல்வேறு பகுதிகளிலும் பூசல்களைத் தூண்டி

                                                      வருகின்றார்கள். இவற்றில் பலவும் மாந்தக் குல இருப்பையே அச்சுறுத்தும் அளவுக்கு ஆபத்தானவை. இது போதாதென்று நமது

                                                      விண்வெளியை இராணுவமயமாக்குவது பற்றியும் பேசக் கேட்கிறோம். மிகவும் ஆபத்தான இந்தப் பன்னாட்டுலகச்

                                                      சூழலில்தான் ஈழத்தமிழ் மக்கள் தமது போராட்டத்தை நடத்தியாக வேண்டும்.

                                                      இன்றைய உலகில் நிலவும் இந்த நிலைமைகளில் இந்நேரத்துக்கான ஆகச் சிறந்த போராட்ட வடிவத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அமைதிவழி என்பது வீர்மிகு தமிழ் மக்களின் நியாயமான

                                                      நலன்களை மக்களிடையே கொண்டுசெல்லவும் வளர்த்தெடுக்கவும் ஆகப்பெரும் வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

                                                      பெருந்திரளான மக்கள் தமது நியாயமான குறிக்கோளில் இன்னும் பெரிய அளவில் பங்கேற்கவும், பன்னாட்டுலகத் தோழமையை ஈட்டவும் ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

                                                      மக்களை அணிதிரட்டவும், தமிழர்களுக்கும் மற்ற ஆற்றல்களுக்கும் இடையில் பரந்த ஒற்றுமை ஏற்படச் செய்யவும் ஆகச் சிறந்த வாய்ப்பை அது எற்படுத்திக் கொடுக்கும்.

                                                      இப்போது நீங்கள் ஈடுபட்டுள்ள போராட்ட வடிவம் சிறிலங்காவின் ஏனைய மக்கள் பிரிவினரிடையே அமைதியை விரும்பும் ஜனநாயக

                                                      ஆற்றல்களுடன் நேசக் கூட்டணிகள் அமைத்துக் கொள்ளவும் உங்களுக்கு உதவும் என்பது என் நம்பிக்கை.

                                                      சமவுரிமைகளுக்கும் நீதிக்குமான உங்கள் போராட்டங்கள் எழுபத்திரண்டு ஆண்டுகள் முன் 1948இல் நாடு சுதந்திரம் பெற்ற

                                                      காலத்தில் தொடங்கியவை ஆகும். உங்கள் இயக்கம் செறிவான பட்டறிவு பெற்று, நீதியும் நிகர்மையுமான குறிக்கோளில் உரம் பெற்றதாகும்.

                                                      சுதந்திரம் பெற்ற நேரத்திலிருந்து போரட்டத்தின் தன்மை மாறியது. தேசியக் குறிக்கோள்களை அடைய முயலாமல் புது

                                                      வகையானதொரு காலனியாதிக்கம் வளர்ந்து, காலனியாதிக்கம் செலுத்தியவர்களும் செலுத்தப் பெற்றவர்களும் ஒரே நாட்டில் வாழும் நிலை ஏற்பட்டதே காரணம்.

                                                      அடுத்தடுத்த சிறிலங்க அரசுகள் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக முயன்றன. இதற்காக, அவர்களை நிரந்தரமாகவே உரிமை மறுக்கப்பட்டவர்களாக வைத்துக் கொள்ளும் சட்டங்கள்

                                                      இயற்றப்பட்டன. 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தேசிய ஓர்மையை வார்ப்பதற்கு எதிரான பேரிடியாயிற்று.

                                                      அது மெய்ந்நிலையில் இரு தேசங்களைத் தோற்றுவித்தது. ஒன்று ஒடுக்குண்ட தேசம், மற்றது ஒடுக்கும் தேசமெனத் தோன்றியது.

                                                      தமிழ்மக்கள் ஒதுக்கப்படும் நிலையும் ஒரு மக்களினப் பண்பாட்டின் மிக அடிப்படைக் கூறாகிய அவர்தம் மொழி இழிவுபடுத்தப்படும் நிலையும் இந்தச் சட்டத்திலிருந்து தொடங்கின. புகழ்மிகு தமிழ்

                                                      நூலகம் போன்ற பண்பாட்டு நிறுவனங்கள் அழிக்கப்பட்டன. இது மனிதகுலத்திற்கே இழப்பாயிற்று.


                                                      அதுமுதல் இந்தப் போராட்டம் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கான சமராயிற்று. இந்த உரிமை ஐக்கிய நாடுகளும்

                                                      பன்னாட்டுலக அமைப்புகளும் அங்கீகரித்துள்ள உலகு தழுவிய உரிமை ஆகும்.

                                                      மக்களது பண்பாட்டின் மீதான தாக்குதலும் விட்டுக்கொடாமையும் நவீனக்கால வரலாற்றில் மிக மூர்க்கமான உள்நாட்டுப் போர்களில் ஒன்றுக்கு இட்டுச் சென்றன. நீண்டநெடிய போரில்

                                                      ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். அவர்களில் பெரும்பாலார் தமிழர்கள். இங்கேயும் போராட்ட வடிவங்களின் முக்கியத்துவம்

                                                      நமக்குப் புலப்படுகிறது. போராட்டம் நியாயமானதே. தமிழர்களின் நியாயமமான போராட்டத்தையும் கூட பயங்கரவாதச் செயல்களாக சாக்கிட்டு தமிழர்களின் தேசிய விடுதலைக் குறிக்கோளைச்

                                                      சிறுமைப்படுத்தவும், அப்பாவித் தமிழ் மக்கள் மீது பாரிய அளவில் கொடுந்தாக்குதல் தொடுக்கவும் செய்தனர்.

                                                      குறிப்பாக அந்தப் போரின் இறுதிக் கட்டங்கள் குருதிதோய்ந்தவை, காட்டுவிலங்காண்டித்தனமானவை என்றே சொல்லலாம். இறந்தவர் தொகை பற்றிய மதிப்பீட்டில் சற்றே பெரிய வேறுபாடுள்ளது.

                                                      மிகவும் குறைத்து மதிப்பிட்டால் கூட 40.000 பேர் மடிந்தனர். அவர்கள் பெரும்பாலும் அப்பாவிப் பொதுமக்கள். 70,000 பேர் மடிந்தாகச் சொல்லும் செய்திகளும் உள்ளன.

                                                      நடந்தவற்றில் பெரும்பகுதி சிறிலங்காவின் ஆய்தப்படைகள் இனவழிப்பு செய்த தன்மைகளைச் சுட்டிநிற்கிறது.

                                                      ‘சூட்டுத் தவிர்ப்பு’ வலையம் என்று ஒப்புக்கொண்ட இடத்திலும் கூட ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

                                                      மருத்துவமனைகளும் கல்விக் கூடங்களும் பிறவகை முகன்மைக் கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன. மேலும், சித்திரவதை இடம்பெற்றது பற்றியும், ஆயிரக்கணக்கானோர்

                                                      காணாமற்செய்யப்பட்டது குறித்தும், அதே போது பாலியல் வல்லுறவு ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

                                                      சிறிலங்காவில் இந்நிலைமை கெடுவாய்ப்பாகக் குடும்ப அரசவம்ச ஆட்சி தலையெடுப்பதற்கான சூழல்களையும்

                                                      தோற்றுவித்திருக்கிறது. சமூக வாழ்க்கையில் பல எதிர்மறை நிக்ழ்ச்சிப்போக்குகளுக்கு இது வழிகோலி விட்டது.

                                                      இதனால் ஊழலும், வேண்டியவர்களுக்குச் சலுகையும், அன்றாடச் சமூக வாழ்வில் பயங்கரமும் தலையெடுத்திருப்பதாகச் சில குழுக்கள் அறிக்கையளித்துள்ளன.

                                                      இந்நிலைமைகளில் சர்வாதிகாரம் செழிப்பது பற்றி வரலாறு நமக்குப் பாடம் நடத்துகிறது. இது சில நேரம் ஒற்றைச் செயலில் வெளிப்படாமல் பல செயல்களின் திரட்சியில் வெளிப்படுகிறது.

                                                      இதன் முதலடிகள் மக்களுக்குரிய விடுமைகளையும் உரிமைகளையும் பையப்பைய அரித்தெடுப்பதாகும். முதலில்

                                                      சிதைக்கப்படும் உரிமைகளில் ஒன்று கருத்து வெளியிடுவதற்கான உரிமை ஆகும்.

                                                      இதன் நீட்சியாக வருவது அரசியல் வகையிலும் பிற வகையிலும் பொது வாழ்வில் இருப்பவர்களை மனம்போன போக்கில்

                                                      தளைப்படுத்துவதாகும். தொடர்ந்து பெண்களைக் கேடுறுத்துவதாகும். அவர்களில் பலர் அச்சத்தில் வாழ நேரிடுகிறது,

                                                      2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின் அப்போது நடந்த ஆயிரக்கணக்கான குற்றங்கள் பற்றிய செய்திகளைப் புலனாய்ந்திடப் பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை என்பது மிக

                                                      மிக வருந்தத்தக்கது. இன்றும் அதே நிலை தொடர்கிறது. பன்னாட்டுலகச் சமுதாயம் கூடுமான விரைவில் இதனைச் சரிசெய்தாக வேண்டும். சிறிலங்காவில் கடைசியாக நடந்த

                                                      தேர்தலுக்குப் பின் இன்னுங்கூட இதற்கான தேவை கூடியுள்ளது. உங்கள் நாட்டில் தமிழ்மக்கள் அச்சங்கொண்டு வாழ்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இப்போது நாட்டின் அதிபராக

                                                      இருப்பவர்தான் உள்நாட்டுப் போரின் குருதி தோய்ந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்; அப்போதுதான் பெரும்பாலும் பொதுமக்கள் கொலையுண்டார்கள்.

                                                      எனவேதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பணி இத்துணை முக்கியத்துவம் பெறுகிறது.


                                                      பன்னாட்டுலகக் களத்தில் அறிவூட்டினால் போதாது. சிறிலங்காவில் கட்டமைப்புகள் கட்டியெழுப்பவும் மக்களிடம் நம்பிக்கை வளர்க்கவும் வேண்டிய தேவை உள்ளது.

                                                      இந்தப் பெரும்பணியில் பன்னாட்டுலகத் தோழமையைக் கட்டியெழுப்புவது போலவே சிறிலங்காவில் உரிமைநேய

                                                      மக்களுடன் இணைப்புகளை வளர்த்தெடுக்க வேண்டியதும் முக்கியமானது.
                                                      தமிழர்களின் போராட்டம் என்பது அமைதிக்கும் ஆய்த

                                                      நீக்கத்துக்குமான போராட்டத்தில் ஒரு பகுதியாகும். பாலத்தீன மக்களும் உலகெங்கும் ஏனைய ஒடுக்குண்ட மக்களும் நடத்தி வரும் எதிர்ப்பியக்கத்தின் பிரிக்கவொண்ணாப் பகுதியாகும்.

                                                      நம் உலகமயப்பட்ட உலகில் பன்னாட்டுலகத் தோழமை பெரிதும் பொருள்பொதிந்தது. சுரண்டப்படும், ஒடுக்கப்படும் அனைவரின்

                                                      நன்னலனுக்கும் உங்களது வெற்றி பங்களிக்கும். அதே போல் பன்னாட்டுலகில் அடையும் நன்மைகளும் உங்கள் போராட்டங்களில் தாக்கங்கொள்ளும்.

                                                      இறுதியாக, முதலில் உங்கள் மக்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கோரியும், தேசிய ஒடுக்குமுறையிலிருந்து அவர்களின் விடுமைக்காகவும் விடுதலைக்காகவும் நீங்கள்

                                                      எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் குவியட்டுமென வாழ்த்துகிறேன் என கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் தெரிவித்துள்ளார்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          கோட்டாவுக்கு ரணில் ஆலோசனை

                                                          கோட்டாவுக்கு ரணில் ஆலோசனை

                                                          கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த தான் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றியிருந்தால் மே மாத இறுதியில் நாட்டை வழமையான நிலைமைக்கு

                                                          கொண்டுவந்திருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

                                                          சிறிகொத்தாவில் நேற்று (07) இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

                                                          கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் நாளொன்றுக்கு ஐயாயிரம் வரையிலான பரிசோதனைகளை

                                                          மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

                                                          மார்ச் 24 ஆம் திகதி நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் 102 ஆக காணப்பட்டதாகவும் ஆனால் இன்று தொற்றாளர்களின்

                                                          எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்து, 11 உயிரிழப்புகளும் பதிவாகியதாக அவர் குறிப்பிட்டார்.

                                                          தனது வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

                                                          பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரை 75,239 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அப்படி பார்த்தால் நாளொன்றுக்கு 690 பரிசோதனைகளே இடம்பெறுவதாக கூறினார்.

                                                          அதன் பிரதிபலனாகவே தற்போது கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ கடந்துள்ளதாகவும், உரிய வகையில்

                                                          பரிசோதனைகளை நடத்தியிருந்தால் தொற்றாளர்களை 500 க்குள் கட்டுப்படுத்தியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

                                                          அசியல் ரீதியான நம்மைகளை பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தாகவும், இதற்கு இந்தியாவிடம்

                                                          இருந்தும் சீனாவிடம் இருந்தும் நன்​கொடைகளை பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

                                                          உலக வங்கி 230 மில்லியனை நன்கொடையாக வழங்கியதாக தெரிவித்த அவர் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம்

                                                              மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம்

                                                              மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று ஞாயிற்றக்கிழமை (7)

                                                              மதியம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

                                                              நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. குறித்த பஸ் நிலையம் இன்று

                                                              ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளினால் திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

                                                              குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம்

                                                              அன்ரனி டேவிட்சன் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி நிதிகள்

                                                              இணைந்து குறித்த பேரூந்து நிலையத்தை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தனர்.

                                                              இந்நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் , மன்னார் நகர சபையின் செயலாளர், நகர சபையின் உப தலைவர்,

                                                              உறுப்பினர்கள், அரச, தனியார் போக்குவரத்து சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். நாட்டில் கொரோனா வைரஸ் #

                                                              பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார முறைப்படி அரசின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக குறித்த பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது#

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  தீவக மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு இந்தியா உதவி

                                                                  தீவக மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு இந்தியா உதவி

                                                                  தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று

                                                                  கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                                                                  யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிளுக்கும் அமைச்சர் டக்ளஸ்

                                                                  தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சரினால் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது. மேலும்,

                                                                  இந்திய நிதியுதவியுடன் ஆரோ பிளான்ட் திட்டத்தின் ஊடாக தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சரவை

                                                                  பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் குறித்த பிரச்சினையை தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

                                                                  அதேவேளை, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு

                                                                  வரப்பட்ட நிலையில், அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த கூட்டத்திற்கு

                                                                  அமைச்சரினால் அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு

                                                                  அமைச்சரனால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      யாழ் கொழும்பு புகையிரத சேவை இன்று ஆரம்பம்

                                                                      யாழ் கொழும்பு புகையிரத சேவை இன்று ஆரம்பம்

                                                                      நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுருந்ததன்

                                                                      காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

                                                                      இன்றிலிருந்து யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.45 மணிக்கு

                                                                      கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9. 45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

                                                                      எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய

                                                                      ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது புகையிர நிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை

                                                                      மேற்கொள்ளப்பட்ட பின்னர் பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          களனிவௌி ரயில் பாதையில் போக்குவரத்து தாமதம்

                                                                          களனிவௌி ரயில் பாதையில் போக்குவரத்து தாமதம்

                                                                          களனிவௌி ரயில் பாதையில் கொடகம ரயில் நிலையத்திற்கு அருகில்

                                                                          மரமொன்று உடைந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக ரயில் தாமதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

                                                                          இதன் காரணமாக இன்று காலை குறித்த பாதையில் பயணிக்கவிருந்த சில ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

                                                                          கொடகம பிரதேசத்தை ஊடருத்து இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் மரமொன்று ரயில் பாதையின் மீது உடைந்து வீழ்ந்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

                                                                              Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                                              Manchester பகுதியில் கோடாலி முனையில் மக்களை மிரட்டிய நபர் – சுற்றி வளைத்த பொலிஸ்

                                                                              Manchester பகுதியில் கோடாலி முனையில் மக்களை மிரட்டிய நபர் – சுற்றி வளைத்த பொலிஸ்

                                                                              பிரிட்டன் Manchester பகுதியில் உள்ள காட்டுப்புற பகுதி ஒன்றுக்குள் மக்களை

                                                                              கோடாலி முனையில் பணயமாக வைத்து மிரட்டிய நபர் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                                              சம்பவத்தை அறிந்து விரைந்து சென்ற போலீசார் திடீரென சுற்றி வளைத்தனர்

                                                                              நாய் அணியினர் ,மற்றும் ஆயுத போலீசார் வரவழைக்க பட்டு நபர் முற்றுகைக்கு உள்ளானார்


                                                                              இதில் கோடாலி எறிந்த நபர் தப்பி ஓடாது காவலதுறையில் சரண் அடைந்தார்

                                                                              இந்த செயலுக்கு உரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
                                                                              ,காயமடைந்த நிலையில்

                                                                              மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
                                                                              மேலதிகமாக எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை

                                                                              விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

                                                                              Manchester பகுதியில் கோடாலி
                                                                              Manchester பகுதியில் கோடாலி