Posted in இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் -7 பேர் கைது

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் -7 பேர் கைது

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஏழு மாணவர்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழகப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழுவினால் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக

மாணவர் ஒழுக்காற்றுச் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட படி சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கான தண்டனைகளைப் பல்கலைக்கழகப் பேரவை முடிவு செய்துள்ளது.

நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்டு பல்கலைக் கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றங்களின்

தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தண்டனைகள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன.

பேரவைக் கூட்டத் தீர்மானத்தின் படி, முன்றாம் வருட மாணவர்கள் 3 பேருக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் ( இரண்டு அரையாண்டுகள்) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் 4 பேருக்கு

நடப்பு அரையாண்டு காலத்துக்குள் (அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்குரிய இந்த 7 பேருக்கும் கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது.

கற்கை நெறியின் நிறைவில் வகுப்புச் சித்திகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது மற்றும் எதிர்காலத்தில் பல்கலைக் கழகத்தினுள் அவர்கள்

வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது, இழைத்துள்ள குற்றங்கள் கணக்கிலெடுக்கப்படும். தண்டனைகள் விசாரணை

அதிகாரியினால் முன்மொழியப்பட்டு, ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு சிபார்சு செய்யப்பட்டன.

மேலும், தண்டனைகள் அறிவிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் இதே வகையான குற்றச் செயல்களில்

ஈடுபட்டால், மாணவர் பதிவு இரத்துச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் – கொதிப்பில் மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் – கொதிப்பில் மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை

வழங்கியுள்ள போதிலும் யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக ஆரம்பிக்கப்படாமல் இழுபறி நிலை காணப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் கீழ் சுற்றுலாவும், விருந்தோம்பலும் கற்கைகள் அலகொன்றை நிறுவி அதனூடாக சுற்றுலா, விருந்தோம்பல் முகாமைத்துவம்

கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கான பாடத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக சட்டத்தின் பிரகாரம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வணிக, முகாமைத்துவ பீடச் சபை,

பல்கலைக்கழக மூதவை, பேரவை ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் உள்ளகத் தர நிர்ணய அலகின் பரிந்துரையுடன் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனால் 2019 ஆம்

ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற அதன் 1023 ஆவது கூட்டத்தில் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

அதன்படி 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழகங்களில் 2019 / 2020 கல்வி ஆண்டுக்கு சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம்

கற்கைநெறியைத் தொடர்வதற்கான விண்ணப்பமும் பல்கலைக்கழக அனுமதிகளுக்கான கையேட்டின் மூலம் கோரப்பட்டிருந்தது.

சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவ கற்கைநெறி சிறப்புப் பட்டமானது வியாபார நிருவாகமானி (சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம்) ஆக 4 ஆண்டுகள் கொண்ட முழுநேரக்

கற்கையாகவும், 4 வருட காலத்தில் முதலிரண்டு வருடங்களும் முகாமைத்துவ பீடக் கற்கைகளும், 3 ஆம் ஆண்டின் போது

பல்கலைக்கழக நடைமுறைகளுக்கமைவாக சிறப்புத் துறையை மாணவர்கள் தெரிவு செய்யப்படலாம் எனவும் வரையறை செய்யப்பட்டிருந்தது.

கற்றை நெறிக்கான கட்டடம் உட்பட்ட பௌதிக வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காக உயர்கல்வி அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு உட்பட்ட நிதியீட்டங்களும் பெறப்படக் கூடியதாக

இருந்தது. அத்துடன் சுற்றுலாத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற ஒருவரும் கற்கைநெறியின் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

எனினும், பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக சுற்றுலாவும், விருந்தோம்பலும் கற்கைகள் அலகு ஆரம்பிக்கப்படாமல் இழுபறி

நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. நிலமைகளை ஆராய்ந்து கற்றல்

நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகளை மேற்கொள்வதற்காக பேரவையினால் இரண்டு முன்னாள் துணை வேந்தர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஒரு பீடத்தின் உள்ளக முரண்பாடுகளினால் எமது பகுதிக்கு வர வேண்டிய வளங்கள் வீணாய்ப் போகின்றன என்று வணிக

முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த கல்விமான்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.