Author: நலன் விரும்பி
நட்டத்தில் ஓடும் இலங்கை பேரூந்து – நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் இழப்பு
நட்டத்தில் ஓடும் இலங்கை பேரூந்து – நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் இழப்பு
கொவிட்-19 தொற்றுக ;காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு
நாளாந்தம் சுமார் பத்து மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக
அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்கு வரத்துச் சேவையின் ஊடாக பயணம் மேற்கொள்ளும்
பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததன் காரணத்தினால் போக்கு
வரத்துத் துறை வீழ்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை போக்கு வரத்துச் சபைக்கு சொந்தமான ஐயாயிரத்து 300 பஸ்கள்
நாளாந்தம் குறைந்த வருமானத்திலேயே சேவையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாத 3061 பேருக்கு போலிஸ் எச்சரிக்கை
முகக்கவசம் அணியாத 3061 பேருக்கு போலிஸ் எச்சரிக்கை
முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் முன்னெடுக்காத 3061 பேருக்கு மேல் மாகாணத்தில் கடந்த 24
மணித்தியாள காலப்பகுதியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
முகக்கவசம் அணியாமை தொடர்பில் 2093பேரும் சமூக இடைவெளியைப் முன்னெடுக்காத 968 பேரும் இவ்வாறு
எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 349 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 158 பேரும், ஐய்ஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த 14 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபானங்களை தம்வசம் வைத்திருந்த 206 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட 771 பேரும் இந்த விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்
கனடாவில் மலைப் பகுதியில் கவிழந்த பேரூந்து 3பேர் பலி – பலர் காயம்
கனடாவில் மலைப் பகுதியில் கவிழந்த பேரூந்து 3பேர் பலி – பலர் காயம்
கனடாவின் Jasper National Park பகுதியில் உல்லாச பயணிக்களை காவிய படி பயணித்த பேரூந்து ஒன்று திடீரென சாலையை விட்டு கவிழ்ந்ததில்
அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ,அம்புலன்ஸ் உலங்கு வானூர்தி மூலம் சிலர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

டிரம்ப் தேர்தல் பரப்புரை விளம்பரத்தை அகற்றிய டிவிட்டர் – அதிர்ச்சியில் அமெரிக்கா அதிபர்
டிரம்ப் தேர்தல் பரப்புரை விளம்பரத்தை அகற்றிய டிவிட்டர் – அதிர்ச்சியில் அமெரிக்கா அதிபர்
உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் அதிகம் பயனப்டுத்தி வரும் டுவிட்டர்
தளத்தில் ஆளும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது தேர்தல் பரப்புரை விளம்பரத்தை புரிந்து வந்தார்
மேற்படி இவரது விளம்பரத்தை டிவிட்டர் அதிரடியாக நீக்கியுள்ளது
குறித்த சமூக வலைதளத்தின் இந்த அதிரடி நடவடிக்கியால் டிரம்ப் கடும் கொதிப்பில் உறைந்துள்ளார்
சீனா வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி
சீனா வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி
தெற்கு சீனாவில் குளம் உடைத்து பாய்ந்ததில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில்
சிக்கி இதுவரை பதின் நான்கு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதினால் சொத்து சேத அழிவு அதிகரித்துள்ளது
தற்போது பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன ,மேலும் வெள்ளம் வீடுகளுக்குள் நுழையாத வண்ணம்
தடுப்பு அரண்கள் கட்ட பட்டு வருகிறது
இந்த வெள்ளமானது 15 அடி உயரம் வரை பாய்ந்துள்ளது குறிப்பிட தக்கது

போதைவஸ்து கும்பலை வேட்டையாடும் இராணுவம்
போதைவஸ்து கும்பலை வேட்டையாடும் இராணுவம்
மெக்சிக்கோவில் போதைவஸ்து கடத்தல் குழு பெரும் அட்டூழியம் புரிந்து
வருகிறது ,இவ்வாறான கிரிமினல் குழுவினால் ஆண்டு தோறும் , பலநூறு மக்கள் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்
இவ்வாறானவர்களை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
குறித்த குழுவினர் பதுங்கி இருந்த பகுதியை சுற்றிவளைத்துள்ள இராணுவ முற்றுகை காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம். அரசியல் இலாபம் கருதி அதை நீங்கள் செய்யவில்லை.
3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம். அரசியல் இலாபம் கருதி அதை நீங்கள் செய்யவில்லை.
அரசின் மீது மனோ குற்றச்சாட்டு
வெளிநாட்டு கதை வேண்டாம். இந்த நாடு ஒரு தீவு என்பதால் எமக்கு இயற்கை பாதுகாப்பு கிடைத்தது. அதனால்தான், நோயாளர்
தொகை 3,000 க்குள் நிற்கிறது. ஆனால், நாட்டை முன்கூட்டியே மூடி “லொக் டவுன்” செய்து 3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம். நீங்கள் மார்ச் 19, தேர்தல் வேட்பு இறுதி தினம்
வரை, அதாவது பிரதான எதிர்க்கட்சி உடைவது உறுதியாகும்வரை, அரசியல் இலாபத்தை மனதில் கொண்டு, நாட்டை திறந்து
வைத்தீர்கள். இதனால்தான் முழு நாடும் இன்று பாடுபடுகிறது என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக
மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
தனியார் தொலைகாட்சியில் நேற்றிரவு பிரபல சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வு நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி
சார்பில் மனோ கணேசன், அளவதுவள, அரசு தரப்பில் அருந்திக பெர்னாண்டோ, காஞ்சன விஜயசேகர ஆகிய முன்னாள் எம்பீக்கள்
கலந்துக்கொண்டு கடும் காரசாரமாக விவாதித்த இந்நிகழ்வில் முன்னாள் எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
ஜனாதிபதி, மார்ச் 2 ம் திகதியன்று பாராளுமன்றத்தை கலைத்து, வேட்பு மனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்தார். இதற்கு பதில் அவர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விட்டு, முழு நாட்டையும்
கொரோனாவை எதிர்த்து போராடும் தயார் நிலைக்கு கொண்டு சென்று இருக்கலாம். இதை அவர் செய்யவில்லை.
பொறுப்பற்ற நிலையில் வேட்பு மனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்ததால், நாடு திறந்த நிலையில் இருந்தது. கட்சிகளின் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆங்காங்கே
கட்சி அலுவலகங்களில் கூடினார்கள். அதற்கிடையில் கொழும்பில் பல்லாயிரகணக்கானோர் கூடும் ரோயல்-தோமியன், ஆனந்த-
நாலந்த கல்லூரிகளின் இறுதிப்போட்டிகளையும் நடத்த விட்டு, அதில் ஜனாதிபதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டு கொரோனானவை வளர விட்டீர்கள். வேட்பு மனு முடிந்த மறுநாளே,
அதாவது 20ம் திகதியே நாட்டை “லொக்டவுன்” செய்தீர்கள். அதாவது வரும் ஆபத்து பற்றி தெரிந்துக்கொண்டே, அரசியல் இலாபம் கருதி செயற்பட்டீர்கள்.
பெப்ரவரி 25ம் திகதியும், மார்ச் 5ம் திகதியும் என இரண்டு முறை அன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
பாராளுமன்றத்தில், கொரோனா ஆபத்து பற்றி கேள்வி எழுப்பி, உரை நிகழ்த்தினார். அப்போது நாடு கொரோனா பற்றி
அறிந்திருக்கவில்லை. ஆனால், சஜித் சபையில் பிரதமரையும், சுகாதார அமைச்சரையும் இதுபற்றி எச்சரிக்கை செய்தார். நாட்டை
மூடி, விமான நிலையங்களை மூடி நாட்டை தயார் நிலையில் வைக்க சொன்னார். நீங்கள் சபையில் அவரை கிண்டல் செய்தீர்கள். அவர் சொன்னதை கணக்கில் எடுக்கவில்லை.
இன்று கொரோனா ஒரு சுகாதார பிரச்சினை மட்டும் இல்லை. அது வீட்டு பொருளாதாரத்தையும், நாட்டு பொருளாதாரத்தையும்
நாசமாக்கி விட்டது. நோயில் இறந்து, நோயால் சுகவீனமடைந்து, வருமானம் இழந்து, தொழில்கள் நலிவடைந்து, குடும்ப நிகழ்வுகள்கூட வடத்த முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் நீங்கள்
பொறுப்பு கூற வேண்டும். இனி கொரோனா இரண்டாம் அலை வந்தால் நிலைமை மோசமடையும். அதற்கும் நீங்கள் பொறுப்பு கூற வேண்டும்.
இங்கே நான் அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார துறையினரை குறை கூற வில்லை. இந்நிலையிலும் பொறுப்புடனும், தியாக உணர்வுடனும் செயற்படும் சுகாதார, இராணுவ, போலிஸ்
அதிகாரிகளை நாம் மனதார பாராட்டுகிறோம். அவர்களுக்கு வேண்டிய தேவைகளை கூட நீங்கள் ஒழுங்காக
நிறைவேற்றவில்லை. மார்ச் முதலாம் திகதியன்றே நாட்டை “லொக் டவுன்” செய்யாமல் திறந்து வைத்து, அரசியல் இலாபத்தை மனதில்
கொண்டு இங்கே பொறுப்பற்று செயற்பட்டது, உங்கள் அரசாங்கம்தான். இதை வரலாறு பதிவு செய்யும்.
திருமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது
திருமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது
திருகோணமலைக்கு வெளியே உள்ள ஃபவுல்துடுவ கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது கடற்படையால் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு, கடந்த 17 ஆம் திகதி திருகோணமலைக்கு வெளியே
உள்ள ஃபவுல்துடுவ கடலில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப்
பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 8 டிங்கி படகுகளும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
படகுகளில் இருந்து 557 கிலோகிராம் மீன் மற்றும் பல மீன்பிடி கியர்களையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
சந்தேக நபர்கள் 28 முதல் 56 வயதுக்குட்பட்ட கின்னியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் டிங்கிகள், தடைசெய்யப்பட்ட வலைகள், மீன் தொகை மற்றும் பிற மீன்பிடி சாதனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக
திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநர்க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மாடியில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை
மாடியில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை
மத்தேகொட, சமகி உயன பிரதேசத்தில் மூன்று மாடி
கட்டிடமொன்றில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
குறித்த நபர் அவரது உறவினர் ஒருவரின் வீடொன்றுக்கு சென்று அங்கு
உறவினர்களுடன் மேல் மாடியில் வைத்து பேசிக் கொண்டிருந்த போது
திடீரென குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
34 வயதுடைய மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில், மத்தேகொட
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
புலிகளினால் ஏராளமான சொத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன
புலிகளினால் ஏராளமான சொத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன
பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீளக்கட்டி எழுப்பி
வருவதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளால்
ஏராளமான சொத்து இழப்புக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன என்றும் தெரிவித்தார்.
இன்றையதினம் புங்குடுதீவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டு திட்டத்தினை திறந்து வைத்தபின் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது இலங்கையில் கொரோனா நோய் முற்றாக நீங்கி விடவில்லை நான் வடக்கு
மக்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
அதிலும் குறிப்பாக நீங்கள் மாஸ்க் அணிந்து கட்டாயம் வீதிகளில் பயணிக்க வேண்டும். அதேபோல் நீங்கள் கைகளை நன்றாக கழுவி
உங்களுடைய சுகாதார நடைமுறைகளை பேணுவது அவசியமாகும் ஏனெனில் இலங்கையில் இருந்து இன்னும் கொரோனா முற்றாக நீங்கவில்லை என்றார்.
30 வருடகாலமாக பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகள் மேற்கொண்ட யுத்தத்தின் காரணமாக அழிவடைந்த வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீள கட்டி எழுப்பி
வருவதாகவும் யுத்தம் முடிந்த பின்னர் வடக்கில் ராணுவத்தினரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கல்வி சுகாதாரம் நீர்ப்பாசனம் போன்ற வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. அதேபோல் இராணுவம் மட்டுமல்ல முப்படையினரும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைத் திட்டங்களை
மேற்கொண்டு வருகின்றோம். வடக்கில் உள்ள அப்பாவி தமிழ் மக்களுக்காக இராணுவத்தினர் தற்போது வீதிகளில் இறங்கி வேலைகள் செய்வதை நீங்கள் பார்க்க கூடியதாக இருக்கும்.
அதே போல் தான் ஒரு பெரிய சவாலாக அமைந்தது. இந்த கொரோனா வைரஸ் அதைக் கூட நாம் முற்றுமுழுதாக
இல்லாதொழிக்விட்டாலும் பூரண கட்டுப்பாட்டுக்குள் முப்படையினர் இணைந்து வைத்திருக்கின்றோ
என்னை மக்கள் வெல்ல வைப்பார்கள் – சிங்கள பால் குடி சுமந்திரன் முழக்கம்
என்னை மக்கள் வெல்ல வைப்பார்கள் – சிங்கள பால் குடி சுமந்திரன் முழக்கம்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்டு இன்றுவரை பயணித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் கடந்த
பத்து ஆண்டுகளாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக விளங்கி வரும் சிங்களது பால்குடி சுமந்திரன் பெரும் இடர்களை விளைவித்து வருகிறார்
தொடர்ந்து தமிழீழ,விடுதலை போராட்டம் ,மற்றும் மக்கள் மீதான அடக்குமுறை அனைத்தயும் பிரோயோகித்து
இலங்கையில் இடம் பெற்ற முள்ளி வாய்க்கள் தமிழின
படுகொலையினை மூடி மறைத்து சர்வதேச ரீதியில் சிங்களத்தை காப்பாற்றிய வண்ணம் நகர்ந்து செல்கின்றார்
அண்மையில் விடுதலை புலிகளது ஆயுத போராட்டத்தை கொச்சை படுத்திய சுமந்திரன் கருத்து உலக தமிழர்கள் மத்தியில் கடும் கொதிப்பி கிளப்பியது
தற்போது அதை எல்லாம் மறந்து புலிகளினால் உருவாக்க பட்ட கூட்டமைப்பு எதை செய்தாலும் தமிழர்கள் அதனை வெல்ல வைப்பாராகள் என இறுமாப்பாக பேசியுள்ளார்
மேலும் மக்கள் வாக்கு கிடைக்காவிடினும் போனஸ் ஆசனங்கள் ஊடாக தன பாரளுமன்றம் செல்லலாம் என்ற நிலையில் இவரது திமிர் பேச்சு உள்ளது
எனவே மக்கள் இம்முறை சம்பந்தர் மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கும் தீவிர முயற்சியில் உள்ளனர்
இரண்டு நபர்களும் கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு விரோதமானவர்கள் என்பது அண்மைய சம்பவங்கள் மீளவும் இடித்து உரைக்கின்றன
நாம் எது செய்தாலும் எம்மை மக்கள் வெல்ல வைப்பார்கள் என்ற இவர்களது
இந்த கண்மூடித்தனமான பேச்சுக்கு மக்கள் இம்முறை தகுந்த பதிலடி
கொடுக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் அவாவாக உள்ளது குறிப்பிட தக்கது
பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாவதை ஒருவாரத்திற்கு ஒத்தி வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இருப்பினும் எதிர்வரும் 27 ஆம் திகதி தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் ஐந்து (05) மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிள் PCR முடிவுகள் அடுத்த
சில நாட்களில் வெளிவரவுள்ளது , மூன்று மாணவர்களுக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளது என்பதையம் கருத்திற்கொண்டு, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை
முன்னெடுப்பது எனும் முடிவின் அடிப்படையில், பாடசாலை மாணவர்களை மேலும் ஒரு வாரத்திற்கு சமூகத்திலிருந்து
தனிமைப்படுத்துவது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கக்கூடிய மிகவும் அர்த்தமுள்ள நடவடிக்கை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை 27 இல் ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமான திகதியாக இருக்கும் என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
குறித்த வாரத்தில் தரம் 11, 12 , 13 ஆகிய மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தேர்தலுக்குப் பின்னர் வருகின்ற முதலாவது திங்கட்கிழமையான ஓகஸ்ட் 10 ஆம் திகதி
கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சிறந்த தினமாக இருக்கும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.
இருந்த போதிலும், ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் இராஜங்கனை மற்றும் வெலிக்கந்த கல்வி பிரிவுகளில் எந்த பாடசாலைகளையும்
திறக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கல்வி
அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாணமாக ஆற்றுக்குள் குளித்த ஏழு தேர்தல் அதிகாரிகள் – விரட்டி தாக்கிய மக்கள்
நிர்வாணமாக ஆற்றுக்குள் குளித்த ஏழு தேர்தல் அதிகாரிகள் – விரட்டி தாக்கிய மக்கள்
இலங்கை பொலநறுவை பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்குள் ஏழு பேர் நிர்வாணமாக குளித்த வண்ணம் இருந்தனர்
இவர்களை கண்ணுற்ற கிராம வாசிகள் அவர்களும் தர்க்கம் புரிந்தனர்
அதுவே கைகலப்பாக மாறியது
இதில் மக்கள் அந்த ஏழுபேர் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தினர் ,.
இதில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
ஏனையவர்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் ஏழுபேரும் தேர்தலை கண்காணிக்க நியமிக்க பட்ட அதிகாரிகள்
என தெரிய வந்துள்ளது ,இதனை அடுத்து மேற்படி ஏழு பேரினது பதவிகள் பிடுங்க பட்டு கடமையில் இருந்து துரத்தியடிக்க பட்டுள்ளனர்
அதிகார மமதை எதை எல்லாம் செய்ய வைக்கிறது பாருங்கள்
தனி பெரும்பான்மையுடன் கோட்டா அரசை அமைக்கவேண்டும் – பிக்குகள் வேண்டுதல்
தனி பெரும்பான்மையுடன் கோட்டா அரசை அமைக்கவேண்டும் – பிக்குகள் வேண்டுதல்
நவம்பர் 16 தேசிய இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சமூக ஒப்பந்த யோசனை நேற்று
(2020.07.17) அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐபெரும் யோசனைகள் அடங்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கலாநிதி குணதாச அமரசேகரஇ ஐந்து
வருடங்களின் பின்னர் முழுமையான நாட்டு மக்களுக்காக யோசனை
ஒன்றை சமர்ப்பிப்பதற்கான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்இ இந்த யோசனை செயற்படுத்தப்படும் என்ற பாரிய நம்பிக்கையிலேயே ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம்
கையளிக்கப்பட்டதாக கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒப்பந்தம் சமர்ப்பிப்பது தொடர்பில் நவம்பர் 16 தேசிய இயக்கத்திற்கு பிரதமர் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உட்பட
மகா சங்கத்தினர் மற்றும் நவம்பர் 16 தேசிய அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய வல்லுனர்கள் சிலரும் இணைந்திருந்தனர்.
ரூவாண்டாவில் 57 தீவிரவாதிகள் கைது – அரசு அறிவிப்பு
ரூவாண்டாவில் 57 தீவிரவாதிகள் கைது – அரசு அறிவிப்பு
ரூவாண்டாவில் நிலவி வரும் நீண்ட கொடிய உள் நாட்டு போர் காரணமாக அந்த நாடு கடுமையாகி பாதிக்க பட்டுள்ளது
இவ்வேளை அந்த நட்டு அரசு மேற்கொண்ட விசாரணைகளில் உள் நாட்டில் சதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றனர் என்ற
குற்ற சாட்டில் 57 தீவிரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளதாக விசாரணை கமிட்டி அறிவித்துள்ளது
எனினும் இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் உண்மையான பயங்கரவாதிகள் தானா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளது மனித உரிமை ஆணையம்
ஈரானில் 35 மில்லியன் மக்கள் கொரனோ வைரஸால் பாதிக்க படுவார் – வேகமாக பரவும் இரண்டாம் கட்ட கொரனோ
ஈரானில் 35 மில்லியன் மக்கள் கொரனோ வைரஸால் பாதிக்க படுவார் – வேகமாக பரவும் இரண்டாம் கட்ட கொரனோ
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி பல நாடுகள் மீள முடியாத பெரும் ஆபாயத்தில் சிக்கி வருகின்றன
அவ்விதம் ஈரானும் கடுமையாக பாதிக்க பட்டுள்ளது
82 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஈரான் நாட்டில் எதிர்வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் 35 மில்லியன்
மக்கள் பாதிக்க படும் பேரவலம் எழுந்துள்ளதாக ஈரான் தலைமை அதிபர் Hassan Rouhani தெரிவித்துள்ளார்
சுகாதார துறையின் அபாய அறிவிப்பு ,மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் பின்னர் உலக நாடுகளில் இரண்டாவது கட்ட கொரனோ நோயானது தாக்கும் எனவும்
இதனால் தற்போது இடம்பெற்றதை விட மூன்று மடங்கு அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்படும் என நிபுனர்கள் அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்
அவ்விதம் பிரிட்டனும் இதில் சிக்கி தவிக்கும் என பிரிட்டன் நிபு னர்கள் எச்சரித்துள்ளனர்
கடைகள் பூட்ட பட்டு ஊரடங்கு பிறப்பிக்க படும் நிலை ஏற்படும் எனவும்
குளிர்காலத்தில் ஏற்படும் நோயுடன் இந்த நோயின் தாக்கம் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

அமெரிக்கா தேர்தலை இலக்கு வைத்துள்ள ரசியா ,சீனா -டிரம்ப்பை தோற்கடிக்க சதி
அமெரிக்கா தேர்தலை இலக்கு வைத்துள்ள ரசியா ,சீனா -டிரம்ப்பை தோற்கடிக்க சதி
அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள தேர்தல் டிரம்பை தொறக்கடிக்க வைக்கும் முகமான சதிகளில் ரசியா மற்றும் சீனா
உளவுத்துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக முக்கியஸ்தர் ஒருவ குற்றம் சுமத்தியுள்ளார்
கடந்த முறை ரசியாவின் ஆதரவுடன் டிரம்ப் வெல்ல வைக்க பட்டது போன்று இம் முறையும் ரசியா தனது நலன் சார்ந்த ஒருவரை ஆட்சியில் அமர்த்துவதில் தீவிர நாட்டம் காட்டி வருகிறது
சீனா ,ரசியா இணைந்து மேற்கொள்ளும் உளவு சாதியில் வெல்ல போவது யார் என்ற கேள்வி இங்கே எழுப்ப பட்டுளள்து
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

தீயில் ஏரியும் பிரான்ஸ் முக்கிய பகுதி – தீயணைப்பு படைகள் குவிப்பு
தீயில் ஏரியும் பிரான்ஸ் முக்கிய பகுதி – தீயணைப்பு படைகள் குவிப்பு
தற்போது பிரான்சின் முக்கியமான பகுதியாக விளங்கும் cathedral in the western French city of Nantes,பகுதியில் தீ பற்றி பிடித்துள்ளது
இதனால் குறித்த கட்டிடம் பலமாக பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
இங்கே தற்போது 60 தீயணைப்பு வீரர்கள் குவிக்க பட்டு தீயினை கட்டு படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
இந்த செய்திக எழுதும் வரை தீ முற்றாக கட்டு படுத்தப்படவில்லை என தெரிவிக்க படுகிறது

யாழில் வீட்டின் மீது குண்டு தாக்குதல் – கார் சேதம்
யாழில் வீட்டின் மீது குண்டு தாக்குதல் – கார் சேதம்
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (17)
மாலை பெட்றோல் குண்டு தாக்குதல் வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்
நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத மர்ம கும்பல்
ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற காரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – கோட்டா அறிவிப்பு
ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – கோட்டா அறிவிப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும்
வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (17) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பயணத்தை ஆரம்பித்து பதியதலாவைக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் பிரதேச மக்கள் கேட்டுகொண்டதற்கு அமைய,
பதியதலாவ நகர மத்திய வீதியை நான்கு வழிப் பாதைகளாக விரிவுப்படுத்துமாறு ஜனாதிபதி வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
கிரமான, சேரங்கட மற்றும் மரங்கல கிராமங்களின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக அம்பகென்ஒய திட்டத்தின் கீழ் நீரை
வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி வழங்கிய உத்தரவிற்கு பதிலளிக்கும்போது நீர் வழங்கல்
அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத்பந்து விக்கிரம குறிப்பிட்டார்.
சேனா புழுவினால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான நட்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி முன்னாள்
இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.
மகாவலி காணி தொடர்பாக மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பிரதேசத்தின் குளங்கள் மற்றும் சிறிய நீர்ப்பாசன கால்வாய்களை புனர்நிர்மாணம் செய்வதற்கும் காட்டு யானைகள் கிராமத்தினுள் வருவதை தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
தொழில் வாய்ப்பின்மை தொடர்பாக மக்கள் முன் வைத்த கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி, சுபீட்சத்தின் நோக்கு
சம் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பயிற்சிபெற்ற தொழில்வள அபிவிருத்தியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஜனாதிபதி வருகை தந்திருந்தவர்களுக்கு தெளிவூட்டினார்.
எலுமிச்சை மற்றும் தானியங்கள் உள்ளிட்ட தமது அறுவடைகளை விற்பனை செய்வதற்கு பொருளாதார மத்திய நிலையமொன்றை
ஸ்தாபித்து தருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஜனாதிபதி பதிலளித்தார்.
கிராமங்களில் தொழிநுட்ப பயிற்சிகள் இல்லாத காரணத்தால் இளைஞர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கான தீர்வை
பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கூடியிருந்த மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை கல்வி அமைச்சரிடம்
தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வைத்தியர் திலக் ராஜபக்ஷ இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க மகஓய, 69 சந்தியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்கு வருகை தந்த ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்த மக்களிடம் சுமூகமாக கலந்துரையாடினார்.
பாரம்பரியமாக மற்றும் வன ஒதுக்கீடுகளுக்கு அருகில் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படும் உறுதிபத்திரம் அற்ற
காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பிரதேச மக்கள் முகங்கொடுக்கும் குடிநீர் பிரச்சினை தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
மகஓய சந்தையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மகாசங்கத்தினர் ஆசிர்வதித்தனர். கொவிட் வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு
ஜனாதிபதி முன்னெடுத்த வேலைத்திட்டங்களை மகாசங்கத்தினர் பாராட்டினர்.
கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பழங்குடியினர் பலரும் கலந்துகொண்டனர்.
விமலவீர திசாநாயக்க உகன, பிரதேச சபைக்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.
பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள 300 ஏக்கருக்கும் அதிகமான பயிர் நிலங்களை மீண்டும் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்துவதற்கு தேவையான நீரை வழங்குவதற்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் கைப்பற்றியுள்ள காணிகளை மக்களுக்க வழங்கவும்
திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி, வருகை தந்திருந்தவர்களிடம் குறிப்பிட்டார். பல பிரதேசங்களில் வாழும் மக்கள் முகங்கொடுக்கின்ற குடிநீர், பயிர்ச் செய்கைக்குரிய நீரை
பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் பற்றி குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி உடனடியாக தீர்வை பெற்றுத் தருவது அரசாங்கத்தின் மிக முக்கிய பணியாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நெல் அறுவடைக்கு உத்தரவாத விலையின்றி விற்பனை செய்ய வேண்டாமென்று ஜனாதிபதி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பல பிரதேசங்களில் முன்பள்ளி ஆசிரியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயாணி விஜேவிக்கிரம நாமல்ஒய, சல்கஸ் சந்தி சந்தையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பிரதேசத்தில் தொழிலற்ற பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
அம்பாறை, நாமல்ஒய குளத்தை புனர்நிர்மாணம் செய்வதன் அவசியம் பற்றியும் மக்கள் சுட்டிக்காட்டினர். விமலவீர திசாநாயக்க, அம்பாறை நகர சபை பசுமை பூங்காவிலும் டப்ளியு.டி.வீரசிங்க ஹிங்குரான சந்தையிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
சேனா புழுவினால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்ட ஈடு வழங்கவும் அனுமதியின்றி எத்தநோல் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி வருகை தந்திருந்தவர்களிடம் தெரிவித்தார்.
ஹிங்குரான சீனித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்தல் தொடர்பாக கூடியிருந்த மக்கள் ஜனாதிபதிக்கு தமது பாராட்டை தெரிவித்தனர்








