Posted in இலங்கை செய்திகள்

தமிழ் மக்களை நாமே காப்பாற்ற போகிறோம் – கோட்டாவின் புலி கட்சி ஊளை

தமிழ் மக்களை நாமே காப்பாற்ற போகிறோம் – கோட்டாவின் புலி கட்சி ஊளை

இலங்கையில் இறுதி போர் முடிவுக்கு வரப் பட்டு விடுதலை புலிகளின் முது நிலை தளபதிகள் படுகொலை செய்யப்பட்டனர்

,கைது செய்ய பட்டவர்கள் சிறைகளில் அடைக்க பட்டு ஊசி அடிக்க பட்டு அவர்கள் மூளை இயல் இலங்கை நிலையில் உள்ளனர்

அவவிதமான மிக காட்டு மிராண்டி தனமான இனப் படு கொலையை நடத்திய இரத்த காடடேறி கொடாத இலங்கையில் ஆட்சி [புரிந்து வருகிறார் .

இவரது பின்புல நிதி பங்களுப்பிடபிடன் உருவான புளிக்காட்சி ஒன்று தாமே தமிழர்களில் ஏக பிரதிநிதிகள் என தற்போது முழங்கி

வருகின்றனர் ,ஊடக போராளி ஒருவரது ஆதரவுடன் உருவாக்க பட்ட கட்சி
முதலாவது பயணத்திலேயே மக்களினால் நிராகரிக்க பட்டது

இதன் உருவாக்கத்தை பொழுதே நாம் மேற்படி கருத்துரை வலியுறுத்தினோம்

செல்ல காசாக உள்ள மேற்படி கட்சி தற்போது தேர்தல் வேளையில் கூட்டமைப்பின் முக்கிய நபரான சிறிதரனை இலக்கு வைத்து பயணித்து வருகின்றனர்

கூட்டமைப்பின் அடிநாதமாக விளங்கி வருபவரும் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள ஒரே ஒருவர் ஸ்ரீதரன் ஆவர் ,தளபதி தீபன்

,கில்மன் போன்றவர்களை போருக்கு கொடுத்த குடும்பத்தில் உதயாமானவர் ஸ்ரீதரன்

இவர் வன்னி மக்களின் செல்ல பிள்ளையாக இன்றுவரை உள்ளார் ,அவ்வாறான இவரை வீழ்த்திவிட கோத்தபாயவின் காசுக்கு ஊளையிடுகிறது இந்த புலி கும்பல்

எல்லா புலி தலைவர்களையும் கொலை செய்த கோட்டா உங்களை மட்டும் வெளியில் விட காரணம் என்ன ..?

தேச துரோகி கருணாவுடன் அருகில் நின்று பாடம் பிடித்து வெளியான உங்கள் காட்சிகளை கொஞ்சம் திரும்பி பாருங்கள் ராசாக்களே

சுவரை கண்டால் நாய்கள் காலை தூக்கும் என்பதை இதை தான் போலும் ,இது புலி கட்சி அல்ல புல்லு கட்சி என்பதே சரியானதாகும் என்பது மக்கள் கூற்று

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் அதிகரித்த கொரனோ – யாழில் 20 பேர் மரணம்

      இலங்கையில் அதிகரித்த கொரனோ – யாழில் 20 பேர் மரணம்

      இலங்கையில் தற்போது கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது

      தற்போது மக்களை ஒன்று கூட வேண்டாம் ஏச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

      ஒருவருக்கு இடையில் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் ,மேலும் இலங்கையில் மருத்துவ மனைகளில் காய்ச்சல்

      என்ற போர்வையில் கொரனோ நோயாளிகள் அனுமதிக்க பட்டுள்ளனர்

      தேர்தல் நெருங்குவதால் மக்கள் ஒன்று கூடி வாக்களிக்க மாட்டார்கள்

      என்ற நிலையில் ஆளும் கோட்டபாய அரசு குறித்த நோய் தொடர்பாண் பாதிப்புக்களை மூடி மறைத்து வருகிறது

      யாழ்ப்பாணத்தில் 20 பேர் இந்த நோயினால் சில நாட்களில் இறந்துள்ளதான தகவல்கள் வெளியாகிறது ,ஆனால் யாழ்ப்பாண

      மருத்துவமனை மேற்படி தகவலை மூடி மறைத்து வருவதாக உள்ளிருந்து கசியும் கசிவுகள் தெரிவிக்கின்றன

      மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ,கலந்து கொள்வதால் இந்த நோயானது அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளதாக உலக

      சுகாதார மையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது- தேர்தல் ஆணையம்

          வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது- தேர்தல் ஆணையம்

          வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் சகல வாக்காளர்களதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

          தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார்.

          கடந்த சில தினங்களாக வாக்களிப்பு நிலையங்களைக் கொண்டு ஒத்திகைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு

          நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகம் அவர் சுட்டிக்காட்டினார்.

          இவற்றைக் கருத்திக்கொண்டு அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு

          வாக்காளர்களைக் தாம் கோருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.

          வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் சகல வாக்காளர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளைக் கழுவிவிட்டு வருவதும் கட்டாயமானது. வாகளிப்பு நிலையத்தில்

          முதலாவது உத்தியோகத்தரிடம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைக் சமர்ப்பித்த பின்னரும் வாக்காளர்கள் கைகளை கழுவ நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

          ஒவ்வொரு வாக்காளருக்கும் தொற்று நீக்கப்பட்ட பேனா அல்லது பென்சில் வழங்கப்படும். வாக்கைச் செலுத்திவிட்டு

          வெளியேறும்போது கைகழுவுவது அவசியமாகும். இந்த ஏற்பாடுகள் காரணமாக வாக்காளர்களுக்கு கிருமி தொற்றக்கூடிய சாத்தியம்

          இல்லையென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்

              Posted in இலங்கை செய்திகள்

              தேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று-ஓய்ந்தது சரவெடி

              தேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று-ஓய்ந்தது சரவெடி

              பொதுத்தேர்தலில்போட்டியிடும்அரசியல்கட்சிகள்மற்றும்சுயேட்சைக்குழுக்களின்இறுதிப்பிரசாரக்கூட்டங்கள்இன்றுஇடம்பெறவுள்ளன.

              பொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன. அதன் பின்னர் பிரசாரக்

              கூட்டங்களை நடத்துவதும், வீடுவீடாகச் சென்று வாக்குக் கேட்பதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும், பதாதைகளைக்

              காட்சிப்படுத்துவதும், சுவரொட்டிகளை ஒட்டுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

              சகல ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளும்

              இன்று நள்ளிரவு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.

              அதேவேளை, நாட்டின் அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரசாரத்திற்காக தயாராகி வருகின்றன.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பிரேமதேசவின் பின்னர் நல்லாட்சி நான் வழங்குவேன் – சஜித்

                  பிரேமதேசவின் பின்னர் நல்லாட்சி நான் வழங்குவேன் – சஜித்

                  தனது தந்தையின் பின்னர் இந்நாட்டில் பொது மக்கள் சகாப்தம் ஒன்றினை

                  தான் ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

                  தனக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள்

                  முன்வைக்கப்பட்டாலும் ´உண்மை ஒருநாள் வெல்லும்´ என அவர் தெரிவித்தார்.

                      Posted in உலக செய்திகள்

                      அமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா

                      அமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா

                      உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக

                      அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                      அமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்

                      சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த

                      வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

                      இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

                      இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

                      தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                      குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

                      வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 59 லட்சத்து 93 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை

                      பெறுபவர்களில் 65 ஆயிரத்து 689 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

                      வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால்

                      இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

                      கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

                      அமெரிக்கா – 47,63,609
                      பிரேசில் – 27,08,876
                      இந்தியா – 16,95,988
                      ரஷியா – 8,45,443
                      தென் ஆப்பிரிக்கா – 5,03,290
                      மெக்சிகோ – 4,24,637
                      பெரு – 4,14,735
                      சிலி – 3,57,658
                      ஸ்பெயின் – 3,35,602
                      ஈரான் – 3,06,752
                      கொலம்பியா – 3,06,181
                      இங்கிலாந்து – 3,03,952

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டனில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்

                          லண்டனில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்

                          நேற்று முன்தினம் மாலை ஆறுமணியாளவில் டம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்


                          காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                          இந்த சம்பவங்கள் Brixton, Hackney and Croydon பகுதியில் வார விடுமுறை நாளில் இடம்பெற்றுள்ளது ,


                          குறித்த குற்ற செயல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                              Posted in உலக செய்திகள் வினோத வீடுப்பு

                              குஜராத் போலீசின் முதல் ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி_ (பெண்ணும் பெண்ணும் திருமணம் )

                              குஜராத் போலீசின் முதல் ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி_ (பெண்ணும் பெண்ணும் திருமணம் )

                              கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், குஜராத் போலீசில் ஒரு ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி பரபரக்க வைத்து விட்டது.

                              பிரீத்தி, ஆவ்னி என்பது அவர்களது பெயர்கள். (பெயர்கள் மாற்றி தரப்பட்டுள்ளன). “உனக்கும் 24 எனக்கும் 24” என்று சொல்லும் வகையில் சம வயதினர். ஒரே பாலினத்தவர் என்றாலும்

                              அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை என்பதே நிலை என உணர்ந்தனர். அதனால் இருவரும்

                              ஒன்றாக வாழ்ந்தனர். நீண்ட காலமாகவே இது நடந்து வந்திருக்கிறது.

                              இது அவர்களுடைய நட்பு வட்டாரத்துக்கும், சக போலீஸ் வட்டாரத்துக்கும் தெரியுமாம்.

                              ஆனால் அவர்களது காதலுக்கு சிக்கல் வந்தது, பிரீத்தியின் பெற்றோர் வடிவத்தில். அவர்கள் பிரீத்தியின் காதலுக்கு

                              போர்க்கொடி தூக்கினர். வீடு தேடிச்சென்று மகளை சந்தித்தனர். “ம்கூம்… இதெல்லாம் சரியில்லைம்மா.. வேலையை விட்டுடு…

                              எங்களோடு வந்துடு” என்று சொல்லிப் பார்த்தனர். பிரீத்தி சம்மதிக்க வில்லை. ஆவ்னியுடனான காதலில் உறுதியாக இருந்தார்.

                              இதுபற்றி பிரீத்தி சொல்லும்போது, “ எங்கள் காதல் உறவை அப்பா, அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. வாழ்க்கையில் நான் விரும்புவது என்ன, என் வாழ்க்கையை நான் எப்படி வாழ

                              விரும்புகிறேன் என்பதில் அவர்களுக்கு கவலையும் இல்லை” என்கிறார். பெற்றோரின் தொல்லை தொடரவே பிரீத்தி, ஆவ்னி

                              ஜோடி மஹிசாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு கடிதம் எழுதினர். அதற்கு சரியான பதில் இல்லை. உடனே அவர்கள் ஐகோர்ட்டை நாடினர்.

                              இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு உஷா ராடா கருத்து தெரிவிக்கையில், “ அவர்கள் இருவரும் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட

                              வாழ்க்கையைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கவலை, அவர்கள் எப்படி தங்கள் போலீஸ் வேலையை செய்யப்போகிறார்கள் என்பதுதான்” என்றார்.

                              ஆனால் இந்த ‘லெஸ்பியன்’ காதல் ஜோடியின் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஜே.தேசாய், இந்த விவகாரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ்

                              பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இது காதல் ஜோடியை நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.

                              இதுபற்றி அந்த காதல் ஜோடியின் வக்கீல் ஜாகீர் ரத்தோடு கூறும்போது, “இவர்கள் கோர்ட்டுக்கு போவார்கள் என்று அவர்கள் (பிரீத்தி பெற்றோர்) எதிர்பார்க்கவில்லை. இந்த பெண்கள்

                              துணிச்சலானவர்கள், படித்தவர்கள். அரசு பணியில் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் விதத்தில் வாழ்வதற்கு தங்களுக்கு உள்ள உரிமைக்காக போராடுவதில் இருந்து அவர்கள்

                              விலகிச்செல்லவில்லை” என குறிப்பிட்டார். அவர் கூறிய கூடுதல் தகவல், இந்த காதல் ஜோடிதான் குஜராத் போலீசில் பகிரங்கமாக அறிவித்துள்ள முதல் லெஸ்பியன் ஜோடி என்பதாகும்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பெற்றோர் இன்றி வாழும் குழந்தைகளை அரசு பொறுப்பெடுக்கும் – புதிய திட்டம்

                                  பெற்றோர் இன்றி வாழும் குழந்தைகளை அரசு பொறுப்பெடுக்கும் – புதிய திட்டம்

                                  இலங்கையி, பலவேறு பட்ட சூழல் காரணமாக பெற்றவர்களை இழந்து

                                  அனாதைகளாக தவிக்கும் குழைந்தைகளை அரசு பொறுப்பேற்று பார்க்க உள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

                                  சிறார் பாதுகாப்பு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது ,
                                  மேற்குலகில்

                                  இவ்வாறான நடைமுறை உள்ளது ,அதனை ஆளும் இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      மெகசின் சிறைச்சாலை வளவில் போதைப் பொருளுடன் பூனை

                                      மெகசின் சிறைச்சாலை வளவில் போதைப் பொருளுடன் பூனை

                                      ஹெரோயின் போதைப் பொருள் உள்ளிட்ட பொருட்களைக்

                                      கொண்ட பொதி கழுத்தில் கட்டப்பட்டு மெகசின் சிறைச்சாலை வளவில்

                                      காணப்பட்ட பூனை ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடிதுள்ளனர்.

                                      இது தொடர்பில் மேலதிக விசாரணைக்காக பூனை தற்போது பொரள்ளை

                                      பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

                                      சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு

                                      அமைய குறித்த பூனை நேற்று (01) பிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                                      இதன்போது, பூனையில் கழுத்தில் பொதியொன்று காணப்பட்டுள்ளது.

                                      அதில் 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் Memory Cardry Card ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

                                      மெகசின் சிறைச்சாலை
                                      மெகசின் சிறைச்சாலை
                                          Posted in இலங்கை செய்திகள்

                                          கிளிநொச்சியில் கூட்டமைப்பு தேர்தல் கூட்டத்தில் தாக்குதல் – டக்கிளஸ் குழு அட்டகாசம்

                                          கிளிநொச்சியில் கூட்டமைப்பு தேர்தல் கூட்டத்தில் தாக்குதல் – டக்கிளஸ் குழு அட்டகாசம்

                                          கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கு

                                          கொண்ட மக்கள் மீது முன்னாள் ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்

                                          சந்திரகுமாரின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

                                          கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பிரச்சார

                                          கூட்டம் நேற்று (01) மாலை அக்கராயன் பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

                                          அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக் கொண்டிருந்தனர்.

                                          பளையில் நடைபெறுகின்ற பிரச்சார கூட்டத்திற்காக சிறீதரன் புறப்பட்டுச் சென்ற பின்னர் குறித்த குழு உள்ளே புகுந்து

                                          பிரச்சாரத்தில் பங்குபற்றிய மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

                                          சம்பவம் தேர்தல் கடமைக்காக நின்ற பொலிஸார் முன்நிலையிலேயே

                                          இடம்பெற்றுள்ளது. இதன்போது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                                          தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                                              கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                              Posted in இலங்கை செய்திகள்

                                              வீட்டுக்குள் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு

                                              வீட்டுக்குள் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு

                                              இலங்கை பல்லத்தர பகுதியில் ஐம்பத்தி இரண்டு வயதுடைய

                                              பெண்மணி ஒருவர் வரத்து வீட்டு வளாகத்தில் சுட்டு படு கொலை

                                              செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

                                              இவரது இந்த படுகொலைகளுக்கான காரணம் தெரியவரவில்லை
                                              பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளது

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  இன்றைய காலநிலை மக்களுக்கு எச்சரிக்கை – கடும் ,மழை ,புயல் வீசும்

                                                  இன்றைய காலநிலை மக்களுக்கு எச்சரிக்கை – கடும் ,மழை ,புயல் வீசும்

                                                  மழை நிலைமை:
                                                  நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது

                                                  இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                                  தென் கடற்பரப்புகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

                                                  காற்று :
                                                  நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து

                                                  வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                                                  காங்கேசந்துறையிலிருந்து மன்னார்இ கொழும்புஇ காலி மற்றும் ஹம்பாந்தோட்டை

                                                  ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது

                                                  அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                                  கடல் நிலை:
                                                  காங்கேசந்துறையிலிருந்து மன்னார்இ கொழும்புஇ காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான

                                                  கடற்பரப்புகள்அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

                                                  நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                                                  பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை (இது

                                                  கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                                  கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய தயார் இல்லை : கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன்பதிலடி

                                                      தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய தயார் இல்லை : கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன்பதிலடி

                                                      கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை என்று தமிழ் மக்கள்

                                                      தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

                                                      தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்த நன்றியை மறந்து விக்னேஸ்வரன்

                                                      அவரை விமர்சிப்பதாகவும் எதிராக செயற்படுவதாகவும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கடந்த சில நாட்களாக

                                                      விக்னேஸ்வரனுக்கு எதிராக செய்துவரும் விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

                                                      தேர்தல் பிரசாரங்கள் நாளை ஞாயிறுக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு

                                                      பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், “நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது தெரியாது.

                                                      ஆனால், எனக்குப் பின்னர் முகவர்கள் நுழைந்து தமிழ் தேசியத்தின் பாதை தடம்புரளாமல் இருக்கவேண்டுமானால் வலுவான

                                                      நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் அவசியம். ஆகவே, புத்திஜீவிகளே, செயற்பாட்டாளர்களே! எம்முடன்

                                                      ஒன்றிணையுங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றேன்.” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

                                                      விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

                                                      எனது அன்புக்குரிய தமிழ் மக்களே,

                                                      வாக்களிப்பு தினத்துக்கு இன்னமும் சில நாட்களே இருக்கின்றன. கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில்

                                                      ஒரு தெளிவான முடிவுக்கு நீங்கள் தற்போது வந்திருப்பீர்கள். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் அந்த நோக்கங்களை அடைவதற்கான எமது அணுகுமுறைகள்

                                                      மற்றும் உபாயங்கள் தொடர்பில் தெளிவான ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் உங்கள் முன்வைத்திருக்கிறோம். இதுவரை

                                                      அதனை நீங்கள் படித்து பார்க்கவில்லையானால் தயவுசெய்து வாக்களிக்க செல்வதற்கு முன்னர் அதனைப் படித்துப்பாருங்கள்.

                                                      எமது பூர்வீகப் பகுதிகளான இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைப் பெறுவதே எமது நோக்கம். ஆனால், வரலாற்று

                                                      படிப்பினைகளின் அடிப்படையிலும் சமகால உலக நடைமுறைகள், முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகள், பூகோள அரசியல், சர்வதேச உறவு கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில்

                                                      இறுதித் தீர்வு தொடர்பில் சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நாம் கோருகின்றோம்.

                                                      அத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும்வரை இடைக்கால தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்பது எமது கோரிக்கை ஆகும். இதனை சாத்தியம் ஆக்குவதற்கும் எமது சமூக,

                                                      பொருளாதார, கலாசார மேம்பாட்டை அடைவதற்கும் நிலத்திலும் புலத்திலும் உள்ள புத்திஜீவிகளை உள்வாங்கி நிறுவன ரீதியான

                                                      கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்படும் ஒரு அணுகுமுறையை முன்மொழிந்திருக்கின்றோம்.

                                                      இங்கு நாம் முதலீடு செய்யவிருப்பது எமது அறிவையே. ஆயுதங்கள்தான் இன்று தமிழ் மக்களிடையே

                                                      மௌனிக்கப்பட்டிருக்கிறதே அன்றி அது எமது அறிவாற்றல் அல்ல. முன்னரைவிட பன்மடங்கு பெருகி உலகம் பூராவும் இன்று அது சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

                                                      இதனை கடந்த 10 வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாக இனங்கண்டு பயன்படுத்தத் தவறியதுடன் ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்பட்டமையே எமது எல்லா

                                                      பின்னடைவுகளுக்கும் காரணம் ஆகும். இந்த அறிவை நாம் எமது நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளில் சரியாகப்

                                                      பயன்படுத்துவோமானால் வெற்றிகள் எம்மை நிச்சயம் தேடி வரும். இதற்கு தமிழ் அரசியல் கட்சிகளிடையே மட்டுமன்றி புலம்பெயர்

                                                      தமிழ் அமைப்புக்கள் மத்தியிலும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமாகும்.

                                                      நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது தெரியாது. ஆனால், எனக்குப் பின்னர் முகவர்கள் நுழைந்து தமிழ் தேசியத்தின் பாதை தடம்புரளாமல் இருக்கவேண்டுமானால் வலுவான

                                                      நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் அவசியம். ஆகவே, புத்திஜீவிகளே, செயற்பாட்டாளர்களே! எம்முடன்

                                                      ஒன்றிணையுங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றேன்.

                                                      இம்முறை தேர்தலில் பெரும் போட்டிகளும் பிளவுகளும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையே இருந்தாலும், தமிழர் அரசியலை

                                                      செப்பனிடுவதற்கும் கொள்கைகள் அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எமது மக்களுக்கு பொறுப்பு கூறும் வகையிலுமான

                                                      ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த அரசியல் பரிமாணம் ஒன்றுக்கு இம்முறை தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.

                                                      தேர்தலுக்கு முன்னர் ஒத்த கொள்கை உடைய எல்லோரையும் ஒன்றிணைக்க எல்லா முயற்சிகளையும் எடுத்தேன். ஆனால் சிலர் இணைந்து செயற்பட முன்வரவில்லை. அவர்களுக்கு தமிழ்

                                                      மக்களின் பிரச்சனைகளைவிட கட்சி நலன் முதன்மையாக இருந்தது போல் தெரிந்தது. நான் இன்றும் சொல்கிறேன்

                                                      இத்தேர்தலின் பின் கூட பலரை இந்தக் கூட்டணியுடன் இணைத்து முன்னோக்கிச் செல்லவே விரும்புகின்றேன்.

                                                      அதனால் தான் ஒத்த கொள்கை உடையவர்களை பலமாகத் தாக்கி எமக்குள்ளே பிளவுகளை ஆழமாக்காமல் பிரச்சாரம் செய்வதை தவிர்த்து வருகின்றேன். ஆனால், பரந்த ஒரு கூட்டணி அமைப்பது

                                                      தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தவறான கருத்துக்கள் கூறப்பட்டுவருவதை நான் அறிவேன். இதேவேளை, தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும்

                                                      ஞாயிறுக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் எனக்கு எதிராக சில அவதூறுகளை வெளியிடும்வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் தலைவர் ஒருவர்

                                                      யாழ்ப்பாணத்தில் வெளியாகும் சில பத்திரிகைகளின் அட்டை பக்கங்களை விலைகொடுத்து வாங்கி இருப்பதாக அறிகின்றேன்.

                                                      தனது அவதூறுகளுக்கு நான் பதில் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் இருக்கும்வகையில் மிகவும் தந்திரமான நகர்வு என்று தான் கருதும் செயல் ஒன்றை அவர் செய்திருப்பதாக நான்

                                                      அறிகின்றேன். தான் மட்டும் தான் புத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கும் இந்த நபர் எமது மக்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதையும் தனது சுத்துமாத்துக்கள் எமது

                                                      மக்களிடம் இனியும் பலிக்காது என்பதையும் இன்னமும் உணரவில்லை போல் தெரிகின்றது. இதே நபர் சில தினங்களுக்கு முன்னர் என்னை அரசியலுக்கு கொண்டுவந்த சம்பந்தனை நான்

                                                      நன்றி உணர்வு எதுவும் இன்றி அவருக்கு எதிராக செயற்படுவதாகவும் விமர்சனம் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

                                                      நான் ஒன்றை அவருக்கு கூறி வைக்க விரும்புகிறேன். அதாவது, அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட சலுகைகள் பணத்துக்காக அவர் வேண்டுமானால் சிங்களக் கட்சிகளுக்கு நன்றியுணர்வுடன்

                                                      இருக்கட்டும். ஆனால், அந்த நன்றி உணர்வை என்னிடம் அவர் எதிர்பார்க்கக் கூடாது. நான் எனது மக்களுக்கே நன்றிக்கடன்

                                                      பட்டுள்ளேன். கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய நான் தயார் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.

                                                      ஆகவே எனதருமை மக்களே, நாம் ஒருபோதும் தமிழ் மக்களின் உரிமைகள், நல்வாழ்வு பாதுகாப்பு ஆகியவற்றுக்கான எமது

                                                      பற்றுறுதியில் இருந்து தளரமாட்டோம். ´மீனுக்கு´ புள்ளடி இட்டு நல்லதொரு மாற்றத்தை தமிழர் வாழ்வில் ஏற்படுத்தும்

                                                      ஆயுதங்களாக உங்கள் வாக்குகள் மாறட்டும்! எமது தமிழ் மக்களின் அரசியல் சமூக, பொருளாதார மாற்றுக்கும் கலாசார அபிலாஷகளை வென்றெடுப்பதற்கும் வலுவூட்டுவதாக அவை அமையட்டும்! இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக

                                                      அவை அமையட்டும்! உங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாக அவை அமையட்டும்! நிதி நிறுவனங்களை உருவாக்கி மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்தவர்களை நிராகரிப்பதாக

                                                      அமையட்டும்! தமது பிள்ளைகளின் பிறந்த நாட்களுக்கு ஜனாதிபதி, பிரதமரை அழைத்து விருந்துகொடுத்தவர்களை விரட்டுவதாக

                                                      அமையட்டும்! அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக அவை அமையட்டும்!

                                                      இதே போலத் தான் பெரும்பான்மையினக் கட்சிகளில் இருந்து இங்கு வந்து போட்டியிடும் வேட்பாளர்களை விரட்டி அடியுங்கள்.

                                                      ஆகவே, மக்களே வீட்டைவிட்டு வெளியே வாருங்கள்! மீனுக்கு வாக்களியுங்கள்!

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          14 பெண்களை துரத்தி குற்றிய குளவிகள் -பேர் மருத்துவமனையில் சிகிச்சை

                                                          14 பெண்களை துரத்தி குற்றிய குளவிகள் -பேர் மருத்துவமனையில் சிகிச்சை

                                                          இலங்கை டிக்கோயா தோட்ட பகுதியில் தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த

                                                          அப்பாவி கூலி தொழிலாளிகளை இலக்கு வைத்து குளவிகள் நடத்திய

                                                          திடீர் விரட்டி குற்றிய தாக்குதலில் பதின் நான்கு அப்பாவி பெண்கள் பாதிக்க பட்டுளள்னர்

                                                          இவ்வாறு பாத்திக்க பட்டவர்கள் டிக்கோயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் கடும் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை

                                                              யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் கடும் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை

                                                              தற்போது நெடுங்கும் பலமான கற்று வீசி வருகிறது இது 60 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது


                                                              இது காங்கேசன் துறை ,பொதுவில் ,கொழும்பு ,காலி ,கம்பந்தோட்டை பகுதிகளை இலக்கு வைத்து நகர்கிறது

                                                              இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி வானொலி அவதானிப்பு மையம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது


                                                              கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கியாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                                                                  Posted in உலக செய்திகள்

                                                                  போதைவஸ்து விமானம் அவுஸ்ரேலியாவில் மடக்கி பிடிப்பு

                                                                  போதைவஸ்து விமானம் அவுஸ்ரேலியாவில் மடக்கி பிடிப்பு

                                                                  Papua New Guinea வில் இருந்து பறந்து வந்த இலகுரக விமானம் ஒன்று அவுஸ்ரேலியாவில் தரை இறங்கிய பொழுது மடக்கி பிடிக்க பட்டுள்ளது


                                                                  இந்த சிறிய ரக விமானத்தில் எண்பது மில்லியன் பெறுமதியான போதைவஸ்துக்கள் இருந்தமை கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                                                  விமானி மற்றும் கூட வந்தவர்கள் கைது செய்ய பிட்டு தீவிர விசாரணைகளுக்கு உட் படுத்த பட்டுள்ளனர்

                                                                  விமானத்தில் அதிக அளவான எடையுடன் தரை இறங்க முற்பட்ட பொழுது இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                                                  போதைவஸ்து விமானம்
                                                                  போதைவஸ்து விமானம்
                                                                      Posted in உலக செய்திகள்

                                                                      இந்தியாவில் ஒரே நாளில் 57,118 பேர் கொரனோவால் பாதிப்பு

                                                                      இந்தியாவில் ஒரே நாளில் 57,118 பேர் கொரனோவால் பாதிப்பு

                                                                      இந்தியாவில் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது ,இந்த நோயினால் பாதிக்க பட்டு கடந்த இருபத்தி நான்கு

                                                                      மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 57,118 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என

                                                                      சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
                                                                      எனினும் இதைவிட பாதிப்பு அதிகம் என தெரிவிக்க படுகிறது

                                                                      எதிர்வரும் இருவரங்களில் பிரிட்டனில் இந்த நோயானது கடுமையாக மக்களை தாக்கும் என தெரிவிக்க பட்டிருந்தாமை குறிப்பிட தக்கது

                                                                          Posted in உலக செய்திகள்

                                                                          பிரபலங்கள் டுவிட்டர் கணக்கை கைக் செய்த 17 வயது வாலிபன் கைது

                                                                          பிரபலங்கள் டுவிட்டர் கணக்கை கைக் செய்த 17 வயது வாலிபன் கைது

                                                                          அமெரிக்காவில் இருந்து மிக பெரும் பணக்காரர்கள் ,பிரபலங்கள் ,அரசியல்வாதிகள் ,வியாபாரிகள் விபரங்களை திருடி அதன்

                                                                          ஊடாக பிட் கொயின் விடயங்களை திருடிய 17 வயது சிறுவனை அமெரிக்கா போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்

                                                                          இவரே இவர்களின் இந்த விபரங்களை திருடி அதன் ஊடாக பணத்தை கொள்ளையடிக்க முயன்றார் என குற்றம் சுமத்த பட்டுள்ளது

                                                                          இவ்வாறு கைதான சிறுவன் தொடர்ந்து விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டு வருகிறார்

                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                              எமது ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை சஜித் – கட்சியை விட்டு ஓடியவர்கள் மீது நடவடிக்கை ரணில்

                                                                              எமது ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை சஜித் – கட்சியை விட்டுஓடியவர்கள் மீது நடவடிக்கை ரணில்

                                                                              இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஒப்பிடபியவர்கள் மெது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என கடைசி தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்

                                                                              அதேவேளை தமது அராசாங்கத்தின் கீழ் எவ்வித இனவாதங்கள் செயல்பாடாது

                                                                              எனவும் ,தூய்மையான ஆட்சியை தாம் தருவோம் என சஜித் பிரேமதாசா முழக்க மிட்டுள்ளார்

                                                                              தேர்தல் பார்ப்புரைகள் முடிவடையும் வேளையில் பிரதான காட்சிகள் மக்கள் மூளையை கழுவும் முறையில் வாக்குறுதிகளை அள்ளி எறிந்து வருகின்றனர்