Author: நலன் விரும்பி
சிதறிய இந்திய விமானம் – பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
சிதறிய இந்திய விமானம் – பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
இந்திய மாசிலமான கேரளாவில் நடந்த விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு
நேற்று வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானத்தில் 184 பயணிகள்
மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணம் செய்துள்ளனர்
கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த இந்த விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் அப்போது
ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு
பாகங்களாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த அருகில் வசித்து வந்த கிராமத்தினர் உடனடியாக சம்பவம்
நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் இங்கு மீட்பு படையினர் விரைந்து சென்று விமான
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விமானத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 பேர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால்
கேரள விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதில் விமானி, துணை விமானியும் உள்ளடக்கம் ஆகும்.
இதற்கிடையில், இந்த விபத்தில் விமானத்தில் உயிரிழந்த 17 பேர் தவிர எஞ்சிய 173 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15
பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை சுவரில் 15 அடி உயரத்திற்கு புதிய வேலி!
வெலிக்கடை சிறைச்சாலை சுவரில் 15 அடி உயரத்திற்கு புதிய வேலி!
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில்
போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள்
வீசப்படுவதை தடுக்கும் விதமாக புதிய பாதுபாப்பு வேலியொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைசாலையின் பெண்கள் பிரிவில் தொடர்ச்சியாக போதைப்பொருள்
உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவது கண்காணிக்கப்பட்டுள்ளதாக
சிறைச்சாலை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, 15 அடி உயரத்துடன் கூடிய புதிய பாதுகாப்பு வேலியொன்றை
அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை
முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.
இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை
இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலிமற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில்
மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது
மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின்
வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச்
சூழவுள்ள ஏனைய பிரதேசங்களில் காற்றின் Nவுகம் அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும்
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு வரையிலும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பிரதேசம்
வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும்.
பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது
கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
தேசத்தை கட்டியெழுப்பும் புதிய பயணம் சில தினங்களில்- மகிந்தா முழக்கம்
தேசத்தை கட்டியெழுப்பும் புதிய பயணம் சில தினங்களில்- மகிந்தா முழக்கம்
தேர்தல் மூலம் தமக்கு கிடைத்த வெற்றியினை மக்கள் மயப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை
முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாய்நாட்டை பாதுகாத்து சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தை மக்களின் அங்கீகாரத்துடன் ஆரம்பிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சமயத்தலைவர்களை இன்று சந்தித்த போதே பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்தார்
19ஆவது திருத்தச் சட்டம் ,அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்
19ஆவது திருத்தச் சட்டம் ,அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வலுவான
அரசாங்கத்தை உருவாக்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக நேற்ற முன்தினம் (05) நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெறப்பட்ட அமோக வெற்றிக்குப்பின்னர் இன்று (07) நடைபெற்ற முதலாவது
ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்ததுடன் , நாட்டுக்கு இடையூராகவுள்ள அரசியலமைப்பின்
19ஆவது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகளை புதிய பாராளுமன்றத்தில் தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
ஜனாதிபதியுடன் இணைந்து சிறந்த முறையில் பணியாற்றக் கூடிய பாராளுமன்றத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பம்
கிடைத்திருப்பதினால், சௌபாக்கிய தொலை நோக்கு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலின் போது ஜனாதிபதி வழங்கிய தலைமைத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வெற்றிக்காக முன்னாள்
அமைச்சர் பசில் ராஜபக்ஷ மகத்தான பணியாற்றியதாக ஜி.எல்.பீரி;ஸ் கூறினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன்
இணைந்து கூட்டணி அமைந்து மகத்தான வெற்றியின் பங்களார்களாகிய சகருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நன்றிகளை தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் தயாரானது
பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் தயாரானது
பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கு அமைவாக ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவுக்கு 17 தேசியப்பட்டியல் உறுப்பினர்களை
நியமிப்பதற்கான உரிமை கிடைத்துள்ளது.
இதற்கமைய 17 பேரின் பெயர்ப்பட்டியலை பொதுஜன பெரமுன இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைத்தது.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சட்டத்தரணி சாகர காரியவசம், அஜித்
நிவாட் கப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி, ஜயந்த
வீரசிங்க, மஞ்சுளா திசாநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித்த ஹேரத், கெவிது குமாரதுங்க, முஹமட்
முஸ்ஸமில், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, பொறியியலாளர் யதாமினி குணவர்த்தன, கலாநிதி சுரேன் ராகவன், டிரான் அலஸ்,
விசேட வைத்திய நிபுணர் சீத்தா அரம்பேபொல, ஜயந்த கெட்டகொட,
முஹமட் பலில் மர்ஜான் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர.
191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்
191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்
டுபாயில் இருந்து இந்தியா நோக்கி பறந்து சென்று தரை இறங்கிய
எயர் இந்தியா விமானம் ஒன்று
விபத்தில் சிக்கியது
இந்த விபத்தில் 191 பயணிகள் விமானத்தில் இருந்தனர் ,இதில் இருவர் பலியாகினர்
மேலும் பல படுகாயமடைந்துள்ளனர் ,அதிக மழைகாரணமாக தரை இறங்கும் பொழுது இந்த சம்பவம் ஏற்பட்டுளது
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,எனினும் பல நூறு மக்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்

திருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்
திருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் நடைபெற்ற
பாராளும்னற தேர்தலில் திருகோணமலையில்
இடம்பெற்ற போட்டியாளர்கள் மத்தியில் அதிக குறைவான வாக்குகளை பெற்று தெரிவாகியுள்ளார்
மக்கள் மத்தியில் ஏற்படுத்த பட்ட சர்ச்சை கருத்துக்கள் வாயிலாக மயிரிழையில்
சம்பந்தர் இவ்விதம் தப்பித்தார் .தமிழ் மக்கள் வழங்கிய தண்டனை
என்பது நெத்தியடியாக இடம்பெற்றுள்ளது
சுமந்திரனுக்கு வக்காளத்து வாங்கி தமிழ் தேசியத்தை தொடர்ந்து இழித்து
செல்லும் கும்பல்களுக்கு இனி என்ன நடக்கும் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது
வரும் தேர்தல் கூட்டமைப்பிற்கு மிக சவால் நிறைந்த ஒன்றாக மாற்றம் பெறும் என்பதில் சந்தேகமில்லை
ஐக்கிய மக்கள் சக்தி
எஸ்.எம் தௌபீக் – 43, 759
இம்ரான் மஹ்ரூப் – 39,029
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கபில நுவன் அத்துகோரல – 30, 056
இலங்கை தமிழரசு கட்சி
ஆர்.சம்பந்தன் – 21, 422
மைத்திரிபால சிறிசேன வெற்றி
மைத்திரிபால சிறிசேன வெற்றி
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடைபெற்ற பொதுத் தேர்தலில்
வெற்றி பெற்றுள்ளார். இவர் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு 111,137 வாக்குகளைப் பெற்று பட்டியலில் முதலாவது இடத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இந்த கட்சியின் சார்பில் இந்த மாவட்டத்தில் மேலும் மூவர் பாராளுமன்ற
உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். றொசான் ரணசிங்க
90,615 வாக்குகளையும், சிறிபால கம்லத் 67,917 வாக்குகளையும், ஏ.அத்துகோரளை 45,795 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இதேவேளை இந்த மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்
சார்பில் கிங்ஸ் லோரன்ஸ் 22,392 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..
இந்த தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 327168
வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கை
தமிழரசுக் கட்சிக்கும்
தேசியப்பட்டியலில் 1 ஆசனம் கிடைத்ததினால் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மக்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-
ஓன்பதாவது பாராளுமன்றத்துக்காக நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்த கட்சிக்கு தேர்தலில் 6,853,690 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கமைவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களை
கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு மொத்த வாக்குகளின் அடிப்படையில் 17 தேசியப்பட்டியல் ஆசனங்கள்
கிடைத்துள்ளன. இதற்கு அமைவாக இந்த கட்சிக்கான மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 145 ஆகும்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை அமைத்து தேர்தலில்
போட்டியிட்ட முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணி 2,771,980 வாக்குகளைப் பெற்று 47
ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இந்த கட்சிக்கும் தேசிய பட்டியலில் 7 ஆசனங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து இக்கட்சிக்கு மொத்தமாக 54 ஆசனங்கள் உரித்தாகின்றது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இந்த தேர்தலில் படு தோல்வியடைந்துள்ளது. இந்த
கட்சி 249435 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியுள்ளது. இருப்பினும் தேசிய பட்டியல் மூலம் 1 ஆசனம் கிடைத்துள்ளது.
இதேவேளை இந்த தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 327168 வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கும்
தேசியப்பட்டியலில் 1 ஆசனம் கிடைத்ததினால் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மக்கள்
விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு மொத்தமாக 445958 வாக்குகளை பெற்ற போதிலும் அதற்கு 2
ஆசனங்களே கிடைத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய பட்டியலில் 1 ஆசனம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக இந்த கட்சியின் ஆசன எண்ணிக்கை 3 அகும்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 61464 ஆகும். இதற்கு 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 67692 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை
கைப்பற்றியுள்ளது. இதற்கு தேசிய பட்டியல் மூலம் 1 ஆசனம் கிடைத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 66579 வாக்குகளைப்
பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது. முஸ்லிம் தேசிய முன்னணி 55981 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது. தமிழ்
மக்கள் தேசிய கூட்டணி 51301 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43319 வாக்ககளைப் பெற்றது. இதற்கு 1 ஆசனம் கிடைத்துள்ளது. தேசிய காங்கிரஸ் 39272
வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34428 வாக்குகளைப் பெற்று 1
ஆசனத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை எங்கள் மக்கள் சக்தி 67758 வாக்குகளை பெற்று 1 தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை
இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை
இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பதிவு செய்துள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட இந்தக்கட்சி குறுகிய காலத்தில் இம்முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில்
மகத்தான வெற்றியை பெற்று நாட்டின் பாரம்பரிய அரசியல் கட்சிகளை சவாலுக்கு உட்படுத்தி இலங்கையின் அரச
அதிகாரத்தை ஜனநாயக ரீதியான பாராளுமன்றத் தேர்தலின் மூலம் கைப்பற்றிய முதலாவது அரசியல் கட்சி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வாக்களித்த 58 லட்சம் வாக்காளர்களினதும் எதிர்பார்ப்புக்களை உறுதிப்படுத்தும்
வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற இந்த கட்சியை பசில் ராஜபக்ஷ ஸ்தாபித்தார்.
2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன மகத்தான வெற்றியை
ஈட்டியது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக
போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஒன்று ஸ்ரீ ஸ்தாபிக்கப்பட்ட குறுகிய
காலத்தில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்கிய பெருமையும் பொதுஜன பெரமுனவை சாரும். நேற்று முன்தினம் (ஓகஸ்ட் மாதம்
5ஆம் திகத) இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவிற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் குறுகிய காலப் பகுதியில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அதிகாரத்தை கைப்பற்றிய
கட்சியாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்
தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்
இதுவரையில வெளியான 11 மாவட்ட ரீதியிலான தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைவாக பிரதமர் மஹிந்த ராயபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியில் திகழ்கின்றது.
இதற்கு அடுத்தபடியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த மாவட்டத்திலும் எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.
அநுராதபுரம் மாவட்டம்
லங்கா பொதுஜன பெரமுன – 344458 – ஆசனங்களின் எண்ணிக்கை 7
ஐக்கிய மக்கள் சக்தி – 119788 – ஆசனங்களின் எண்ணிக்கை 2
களுத்துறை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன – 448,699 – ஆசனங்களின் எண்ணிக்கை 8
ஐக்கிய மக்கள் சக்தி – 171,988 – ஆசனங்களின் எண்ணிக்கை 2
நுவரெலிய மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 230389 – ஆசனங்கள் 5
ஐக்கிய மக்கள் சக்தி – 132008 – 3 ஆசனங்கள்
மாத்தறை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 352,217 – ஆசனங்களின் எண்ணிக்கை – 6
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 72,740 – ஆசனங்களின் எண்ணிக்கை – 1
காலி மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 430334 – ஆசனங்களின் எண்ணிக்கை – 7
ஐக்கிய மக்கள் சக்தி – 115456 – ஆசனங்களின் எண்ணிக்கை – 2
பொலன்னறுவை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன – 180,847 – ஆசனங்களின் எண்ணிக்கை 4
ஐக்கிய மக்கள் சக்தி – 47,781 – ஆசனங்களின் எண்ணிக்கை 1
இரத்தினபுரி மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 446,668 – ஆசனங்களின் எண்ணிக்கை – 8
ஐக்கிய மக்கள் சக்தி – 155,759 – ஆசனங்களின் எண்ணிக்கை – 3
திருகோணமலை மாவட்டம்
ஐக்கிய மக்கள் சக்தி – 86394 – ஆசனங்களின் எண்ணிக்கை – 2
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 68681 – ஆசனங்களின் எண்ணிக்கை – 1
லங்கை தமிழ் அரசுக் கட்சி – 39570 – ஆசனங்களின் எண்ணிக்கை – 1
மாத்தளை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 188779 – ஆசனங்களின் எண்ணிக்கை – 4
ஐக்கிய மக்கள் சக்தி – 73955 – ஆசனங்களின் எண்ணிக்கை – 1
கேகாலை மாவட்டம்:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 331573 – ஆசனங்களின் எண்ணிக்கை 7
ஐக்கிய மக்கள் சக்தி – 131317 – ஆசனங்களின் எண்ணிக்கை 2
மொனராகலை மாவட்டம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 208193 – ஆசனங்களின் எண்ணிக்கை 5
ஐக்கிய மக்கள் சக்தி – 54147 – ஆசனங்களின் எண்ணிக்கை 1
மகநுவர மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 477,446 – 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 234,523 – 4 ஆசனங்கள்
குருநாகல் மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 649,965 – 11 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 244,860 – 4 ஆசனங்கள்
புத்தளம் மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 220,566 – 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 80,183 – 2 ஆசனங்கள்
முஸ்லிம் தேசிய முன்னணி – 55,9811 – ஆசனம்;
கம்பஹா மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 807,896 – 13 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 285,809 – 4 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 61,833 – 1 ஆசனம்
திஹாமடுல்ல மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 126,012 – 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 102,274 – 2 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 43,319 – 1 ஆசனம்
தேசிய காங்கிரஸ் – 38,911 – 1 ஆசனம்
ஹம்பாந்தோட்டை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 280,881 – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 51,758 – 1 ஆசனம்
மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 79,460 – 2 ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 67,692 -1 ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428 -1 ஆசனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 33,424 – 1 ஆசனம்
யாழ்ப்பாணம் மாவட்டம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 112,967 – 3 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 55,303 – 1 ஆசனம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 49,373 – 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 45,797 – 1 ஆசனம்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 35,927 – 1 ஆசனம்
கொழும்பு மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 674,603 – 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 387,145 – 6 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 67,600 – 1 ஆசனம்
வன்னி மாவட்டம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 69,916 – 3 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42,524 – 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி – 37,883 -1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 11310- 1ஆசனம்
பதுளை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 309,538 – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 144,290 – 3 ஆசனங்கள்
திருமலையில் 2 ஆசனங்களை பறிகொடுத்த கூட்டமைப்பு – சம்பந்தர் தோல்வியாம் …?
திருமலையில் 2 ஆசனங்களை பறிகொடுத்த கூட்டமைப்பு – சம்பந்தர் தோல்வியாம் …?
திருமலை தேர்தல் தொகையில் மூன்று வேட்பாளர்களை தெரிவு செய்யும் போட்டி இடம்பெற்றது , இதில் மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர்
சஜித்,கூட்டமைப்பு ,கோட்டா கட்சியை சேர்ந்த ,தலா ஒருவர் தெரிவு செய்ய பட்டுள்ளனர்
இம்முறை இங்கே கூட்டமைப்பு தனது இரு ஆசனங்களை இழந்துள்ளது
இங்கே போட்டியிட்ட சம்பத்தார் படுதோல்வி அடைந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினு இதனை அந்த கட்சி உறுதி படுத்தி தெரிவிக்கவில்லை
பிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா
பிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா
பிரான்சில் 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளது.
பிரான்சில் 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்புகள் உயர்வு
கோப்புபடம்
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிரான்ஸில் 24 மணி
நேரத்தில் 1,695 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது, இது மே 30-ம் தேதிக்குப் பிறகு நாட்டில் பதிவான மிக அதிகமான கொரோனா பாதிப்புகள் ஆகும்.
மே 30 ஆம் தேதி அன்று பிரான்சில் சுமார் 1,828 கொரோனா பாதிப்புகள் பதிவானது. எனினும், மருத்துவமனைகள் மற்றும் தீவிர
சிகிச்சை பிரிவுகளில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் குறைந்துள்ளதாக சுகாதார அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 30,305 ஆக உள்ளது. ஐரோப்பாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் இங்கிலாந்து
மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக 3 வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.
லெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்
லெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்
லெபனான் நாட்டு துறைமுகத்தில் நடந்த அதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலியான நிலையில், துறைமுக அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலி – லெபனான் துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் கடந்த 4-ந் தேதி மாலை அதிபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
மனித வரலாற்றில் அணுசக்தி இன்றி நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தாக பதிவு செய்யத்தக்க அளவில் இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெடி விபத்தில் அந்த துறைமுகம் உருக்குலைந்து சின்னாபின்னமானது. 135 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து
நடுரோட்டுக்கு வந்து விட்டனர். மக்கள் தங்கள் அன்றாட தேவைகளான, அத்தியாவசிய தேவைகளான உணவு, உடைகள், உறைவிடம் இல்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த கோர விபத்துக்கு காரணம், துறைமுகத்தில் பாதுகாப்பற்ற சேமிப்புகிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம்
நைட்ரேட்தான் என்று அந்த நாட்டின் அதிபர் மைக்கேல் அவுன் உறுதி செய்துள்ளார்.
லெபனான் விபத்து
அதே நேரத்தில், இந்த விபத்துக்கு காரணம், அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு, ஊழல், தவறான நிர்வாகம் ஆகியவைதான்
என்று பெய்ரூட் மக்கள் ஆவேசத்துடனும், கோபத்துடனும் குற்றம் சுமத்துகின்றனர்.
அந்த நகரில் 2 வார கால அவசர நிலை அறிவித்து, அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெய்ரூட் நிலை குறித்து அந்த நாட்டின் சினிமா பட இயக்குனர் ஜூட் செஹாப், பி.பி.சி. டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், “
பெய்ரூட் அழுது கொண்டிருக்கிறது. அலறிக்கொண்டிருக்கிறது. மக்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள்.
அவர்கள் சோர்வாகவும் இருக்கிறார்கள். இந்த விபத்துக்கு காரணமானவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்தி நீதி வழங்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு” என குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து பெய்ரூட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிற சாடியா எல்மேச்சி நவுன் என்ற உள்ளூர்வாசி கூறும்போது, “நாங்கள் திறமையற்ற அரசால்
வழிநடத்தப்படுகிறோம் என்பதை நான் எல்லா நேரத்திலும் அறிவேன். இது தகுதியற்ற அரசு. ஆனால் அவர்கள் இப்போது செய்திருப்பது முற்றிலும் கிரிமினல் குற்றம்” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே விபத்துக்கு காரணம் என கருதப்படுகிற பெய்ரூட் துறைமுக அதிகாரிகளை அந்த நாட்டு அரசு வீட்டுக்காவலில் வைத்தது.
நாட்டின் சுப்ரீம் பாதுகாப்பு கவுன்சில், இந்த வெடிவிபத்துக்கு காரணமானவர்கள் அதிகபட்ச தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது.
சம்பவம் நடந்த பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு ‘சீல்’ வைத்துள்ளனர்.
மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களையும், உயிர் பிழைத்தவர்களையும் தொடர்ந்து தேடி வருகின்றனர். டஜன் கணக்கிலானவர்களை காணவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு மத்தியில் பல நாடுகள், லெபனானில் பரிதாப நிலையில் உள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன. பிரான்ஸ் நாட்டில்
இருந்து லெபனானுக்கு மீட்பு படையினர், மருத்துவ சாதனங்கள், 500 பேருக்கு சிகிச்சை அளிக்க ஏற்ற விதத்தில் நடமாடும் கிளினிக் ஆகியவற்றுடன் 3 விமானங்கள் விரைவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பிய நாடுகள், ரஷியா, துனிசியா, துருக்கி, ஈரான், கத்தார் ஆகிய நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்புகின்றன. மருத்துவ நிபுணர்களையும், மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி வைக்க தயார் என இங்கிலாந்து அறிவித்துள்ளது.
கூட்டமைப்பு மகத்தான வெற்றி 15 பிளஸ் போனஸ் ஆசனங்கள் 17 ..?
கூட்டமைப்பு மகத்தான வெற்றி 15 பிளஸ் போனஸ் ஆசனங்கள் 17 ..?
தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை அமோக வெற்றியை பெற்று வீறு நடை போடுகிறது
தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட மேற்படி கட்சிக்கு தமிழர்கள் தோற்றுவிடாமல் தொடர்ந்து தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்
ஆனால் சம்பந்தர்,சுமந்திரன் போன்றவர்களின் ஈழ தேசிய விடுதலைக்கு எதிரான கருத்துக்கள் மக்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தியது
கூட்டமைப்பு இம்முறை பலத்த இழப்பை சந்திக்கும் என்ற நிலையில் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த கூட்டமைப்பின் மீது வீச
பட்ட போலியான பிரச்சாரங்கள் அதன் வெற்றியை தீர்மானிக்க வைத்துள்ளது
சம்பந்தர் சுமந்திரன் மீதான விமர்சனங்கள் மட்டுமே வைக்க பட்டது ,ஆனல் சிங்கள அரச கூலிகளுக்கு துணைபோன ஊடகங்கள் புரிந்த
போலியான பொய்யான விமர்சனங்கள் ஊடாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்று மகத்தான சாதனையை படைத்தது தமது இருப்பை தக்க வைத்துள்ளது
ஆனல் அடுத்து வரும் தேர்தலில்ஸ் அஜித் அணியினர் யாழ்ப்பாணத்தை வன்னியை இலக்கு வைத்து புதியவர்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்
அவ்வாறு தெரிவு செய்யப்பட உள்ளவர்கள் நாமறிந்தவரை மக்கள் மத்தியில் நல்மதிப்பு பெற்றவர்கள்
இவர்கள் ஊடாக மக்கள் வாழ்வாதாரங்கள் ,அடிப்படை பிரச்சனைகள் ,வேலை வாய்ப்புக்கள் தீர்க்க பட்டால் கூட்டமைப்பு
கோட்டை சுருண்டு விழும் நிலைகள் எதிர் வரும் தேர்தல்களில் ஏற்படலாம்
எனவே இம்முறை இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு
மக்களுக்குரிய உடனடி உதவிகளை செய்திட வேண்டும் தவறின் மக்கள்
இந்த பேராதரவு தொடர்ந்து நீடிக்குமா என்பதும் ,தொடர்ந்து தமிழ் தேசிய வாத நிலை வெற்றி பெறுமா என்பதும் கேள்வியே .
அரசியல் என்றும் ஒரு நேர் கோட்டில் பயணிப்பதில்லை
கடந்த காலங்களில் விட்ட தவறுகளை திருத்தி கூட்டமைப்பு
பயணித்தால் தொடர்ந்து இது போன்ற மக்கள் ஆதரவை தக்க வைத்து கொள்வார்கள்
அது தவறின் வென்று விட்டோம் என்ற மகிழ்வில் மறை கழன்ற சுமந்திரன் போன்றவர்களின் கீழ் நிலை தேசிய இழிவு பேச்சுக்கள் மேலும்சிதைவுகளை ஏற்படுத்தும்
இந்த கூட்டமைப்பின் ஒன்று பட்ட பலத்த வெற்றியை ,கோட்டாபய நிச்சயம் விரும்ப மாட்டார் ,அப்படி என்றால் தமிழர்களுக்கு வழங்க
படும் உதவிகள் தீர்வுகளை இவர்கள் வேண்டும் என்ற கலாம் கடத்தி ,மக்கள் மனதில் வெறுப்புணர்வை தூண்ட கூடும்
இது பெரும் நெருக்கடி நிறைந்த ஒன்றாக கூட்டமைப்பு மாற்றம் பெறும் ,அவை எவ்வாறு எதிர்கொண்டு கூட்டமைப்பு பயணிக்க
போகிறது என்பதை வைத்து அதன் அடுத்து வரும் வெற்றி தீர்மானிக்க படும் என்பதை அடித்து கூறலாம்
15 ஆசான்கள் கிடைத்துள்ளது போனஸ் ஆசனங்கள் இரண்டு கிடைக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது அவ்விதம் எனின் 17
ஆசான்களுடன் கூட்டமைப்பு கம்பீரமாக வலம் வர போகிறது
இதனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள் என மக்கள் சமூகம்
நம்புகிறது ,சிந்தித்து செயல் படுமா தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ..?
நன்மை பெறுமா தமிழ் தேசிய இனம் ..?
- வன்னி மைந்தன் –
கிளிநொச்சி கூட்டமைப்பு வெற்றி – மண் கவ்விய டக்கில்ஸ்
கிளிநொச்சி கூட்டமைப்பு வெற்றி – மண் கவ்விய டக்கில்ஸ்
யாழ் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி – 31,156
சுயேட்சை குழு 5 – 13339
ஐக்கிய மக்கள் சக்தி – 3050
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2528
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522
மட்டக்களப்பு மாவட்ட கல்குடா முடிவு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி
மட்டக்களப்பு மாவட்ட கல்குடா முடிவு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் -20622
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -17312
ஐக்கிய மக்கள் சக்தி -15394
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -12064
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 10879
இதுவரை வெளிவந்த முடிவுகளில் கோட்டா முன்னிலையில்
இதுவரை வெளிவந்த முடிவுகளில் கோட்டா முன்னிலையில்
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் அதே சிங்கள இனவெறி பகுதியில் ,அனைத்து தொகுதிகளையும் கோட்டபாயா வென்று சாதனை படைத்துள்ளார்
இரண்டாம் நிலையில் சஜித் பிரேமதாச உளளார் ,மூன்றாம் நிலையில் ரணில்







