இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை

Spread the love

இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை

இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பதிவு செய்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட இந்தக்கட்சி குறுகிய காலத்தில் இம்முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில்

மகத்தான வெற்றியை பெற்று நாட்டின் பாரம்பரிய அரசியல் கட்சிகளை சவாலுக்கு உட்படுத்தி இலங்கையின் அரச

அதிகாரத்தை ஜனநாயக ரீதியான பாராளுமன்றத் தேர்தலின் மூலம் கைப்பற்றிய முதலாவது அரசியல் கட்சி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வாக்களித்த 58 லட்சம் வாக்காளர்களினதும் எதிர்பார்ப்புக்களை உறுதிப்படுத்தும்

வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற இந்த கட்சியை பசில் ராஜபக்ஷ ஸ்தாபித்தார்.

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன மகத்தான வெற்றியை

ஈட்டியது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக

போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஒன்று ஸ்ரீ ஸ்தாபிக்கப்பட்ட குறுகிய

காலத்தில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்கிய பெருமையும் பொதுஜன பெரமுனவை சாரும். நேற்று முன்தினம் (ஓகஸ்ட் மாதம்

5ஆம் திகத) இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவிற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் குறுகிய காலப் பகுதியில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அதிகாரத்தை கைப்பற்றிய

கட்சியாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

Author: நலன் விரும்பி

Leave a Reply