பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை- இலங்கை அறிவிப்பு

Spread the love

பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை- இலங்கை அறிவிப்பு

அடுத்த வாரம் முதல் பொது மக்கள் தினமாக திங்கட்கிழமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மனங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேவே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

60 வருட காலமாக பொது மக்கள் தினமாக புதன் கிழமை இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த அமைச்சர் அன்றைய தினத்தில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவதினால் அமைச்சர்கள்

பாராளுமன்றத்திற்கு சமுகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

  1. திங்கட்கிழமையை அரச நிறுவனங்களில் ‘பொதுமக்கள் தினம்’ ஆகப் பிரகடனப்படுத்தல்

அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக மக்களுக்கு இலகுவான வகையில் புதன்கிழமையை தற்போது ‘பொதுமக்கள் தினம்’ ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும்

திங்கட்கிழமை ‘பொதுமக்கள் தினமாக’ பிரகடனப்படுத்தினால் மக்களுக்கு மிகவும் இலகுவாக அமையுமென யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றிலிருந்து திங்கட்

கிழமை ‘பொதுமக்கள் தினமாக’ பிரகடனப்படுத்தவும், அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின்

தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த தினத்தில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply