Author: நலன் விரும்பி
இலங்கை கடற்படையினால் பானமவில் நிறுவப்பட்ட புதிய நீர் சறுக்கல்
இலங்கை கடற்படையினால் பானமவில் நிறுவப்பட்ட புதிய நீர் சறுக்கல்
பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்டு கிளப் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.
பானம கடற்கரையில் நிறுவப்பட்ட இந்த புதிய வசதிகள், தென்கிழக்கு கடற்படைப் பிராந்திய
கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கமகேவினால் இம்மாதம் 25ம் திகதி வைபவரீதியாக திறக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பகுதியில் நீர்சறுக்கள் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த
வசதிகள் கடற்படையின் வளம் மற்றும் நிபுணத்துவமிக்க ஆளணியினை பயன்படுத்துவதன் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கரையோரத்தில் பானம ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகவும், நாட்டின் நீர் சறுக்கல் விளையாட்டிற்கு புகழ்பெற்ற இடமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கிய பேரூந்து – 13 பேர் காயம்
விபத்தில் சிக்கிய பேரூந்து – 13 பேர் காயம்
இலங்கை மாத்தளை பகுதியில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த பயணிகள் பேரூந்து
சாலையை விட்டு விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்
,மேலும் பேரூந்து பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
வீட்டின் மீது விழுந்த வீதி; சிறுமி காயம்
வீட்டின் மீது விழுந்த வீதி; சிறுமி காயம்
கண்டி பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி- உடபோவல வீதியின் ஒரு
பகுதி, வீடொன்றின் மீது சரிந்து விழுந்ததால், 13 வயது சிறுமியொருவர் காயமடைந்து,
பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (26) இரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்
இதன்போது வீட்டில் அவரது தந்தையுடன் சிறுமி மாத்திரமே இருந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை அவரது தந்தை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது.
இடிந்து விழுந்த வீதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் மற்றும் கங்கவட்டகோரல பிரதேசசபைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த விடயம் தொடர்பில்
உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலகத்தால்
கங்கவட்டகோரல பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த வீதியின் பல இடங்களிலும் இவ்வாறு வெடிப்பு காணப்படுவாகவும்,
எதிர்வரும் காலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் மணசரிவு ஏற்படும் என்றும்
பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்திடம் இருந்த 11 ஏக்கர் காணி விடுவிப்பு
இராணுவத்திடம் இருந்த 11 ஏக்கர் காணி விடுவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள மக்களின் காணிகளில் 11 ஏக்கர்
காணிகள் இராணுவத்தினரிடம் இருந்து இன்று (28) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து மக்கள் புதுக்குடியிருப்பில் மீள குடியமர்ந்த போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார்
19 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீள்குடியேறிய மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தபோதும் எந்தவித தீர்வுகளும்
கிடைக்கப்பெறாத நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் 3 ஆம் திகதி குறித்த பகுதியில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட 19 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரி 49
குடும்பங்களை சேந்தவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.
போராட்டம் ஆரம்பித்து சுமார் 1 மாத காலத்தில் குறித்த காணிகளை 3 கட்டங்களாக விடுவிப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. இருப்பினும் முதலாவது பகுதி காணிகள் விடுவிக்கும்
வரை தாம் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்த மக்கள் குறித்த உறுதிமொழிகளுக்கு அமைய முதற்கட்டமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட 7.75 ஏக்கர் காணி விடுவிப்போடு தொடர் போராட்டத்தை நிறுத்தினர்.
புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட 7.75 ஏக்கர் காணி விடுவிப்பை தொடர்ந்து மீதமுள்ள 29 பேரினது 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட
கட்டடங்களை அகற்றிய பின்னர் 3 மாதத்திற்குள் விடுவிக்கப்படும் எனவும் மீதமுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த காணி சுமார் 4 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமை குறித்தும் குறிப்பாக சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் 682 ஆவது படைப்பிரிவு முகாம் கைவேலிப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளபோதும் இன்று வரை மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை
எனவும் குற்றம் சுமத்தி இருந்ததோடு இராணுவம் மிக விரைவாக தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதிகாரிகள் தமது காணிகளை விரைவில்
பெற்றுத்தர வேண்டும் எனவும் தாம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படட நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் குறித்த காணிகளில் பதினொரு ஏக்கர் காணி இன்று (28) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக
இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பொன்னம்பலம் வைத்தியசாலை
அமைந்திருந்த ஒரு சிறு பகுதியை தவிர ஏனைய காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணமோசடி காவல்துறை அதிகாரி கைது
பணமோசடி காவல்துறை அதிகாரி கைது
இலங்கை வந்துரம்ப பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர் பத்து லட்சம் ரூபா பணம்
லஞ்சமாக பெற்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
சாமீப காலங்களாக இவ்வாறான குற்ற சாட்டுக்கலில் சிக்கி சில காவல்துறை அதிகாரிகள் கைது
செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது
சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு
சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு
சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு காணப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சீமெந்து விலையை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்கள்,
“இரண்டு நாட்களில் இதனை நிறுத்த முடியாது. எப்படியும் 2 மாதங்களாவது செல்லும். சீமெந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் டொலர் பிரச்சினையாகும். இதனால் சிறு விலை அதிகரிப்பு ஏற்படக்கூடும்.”
சமீபத்தில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மூடை சீமெந்து 1,098 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறாயினும், உரிய வகையில் சீமெந்து கிடைப்பதில்லை எனவும், அவ்வாறு கிடைக்கும் சீமெந்து பல்வேறு விலைகளின் கீழ் கிடைப்பதாகவும் விற்பனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
“ஒரு தடவைக்கு 100 சீமெந்து மூடைகள் தான் கிடைக்கின்றன. 10 நிமிடங்களில் அவை முடிந்து விடுகின்றன.”
இதன் காரணமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தரப்பினர், சீமெந்து கல், பூந்தொட்டி மற்றும் பூங்கா அலங்கார பொருட்கள் உற்பத்தியாளர்கள் வருமான வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சீமெந்து இறக்குமதியாளர்கள் நேற்று (27) பிற்பகல் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
´´எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் சந்தைக்கு சீமெந்தை பெற்றுக் கொடுக்க இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனஙக்ள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்”. என்றார்.
சீனாவை பாராட்டிய மகிந்தா – இந்தியாவுக்கு ஆப்பு
சீனாவை பாராட்டிய மகிந்தா – இந்தியாவுக்கு ஆப்பு
இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்களின் முன்னிலையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாராட்டினை தெரிவித்தார்.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள் நேற்று (27) அலரி மாளிகையில் சந்தித்தபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொவிட் தொற்று நிலைமையை கட்டுப்படுத்தல் மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு வாழ்த்து தெரிவித்த சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள், அதற்கு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
சீன மக்கள் வங்கி (PBOC) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) இடையிலான 10 பில்லியன் சீன யுவான் மதிப்பிலான இருதரப்பு நிதி பரிமாற்ற ஒப்பந்தமானது, உலகளாவிய முதலீட்டாளர்களின்
உணர்வை வலுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என சீன தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு நிறைவு மற்றும் இரப்பர் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை ஆகியவற்றை குறிக்கும்
2022ஆம் ஆண்டானது, இலங்கை – சீன இருதரப்பு உறவின் மிக முக்கியமான ஆண்டாக விளங்கும் என சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த மாதம் வரவிருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி மற்றும் சீன பிரதமரின் சார்பில் சீன தூதுவர் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அண்ணாத்த டிரைலரை கொண்டாடிய தனுஷ்
அண்ணாத்த டிரைலரை கொண்டாடிய தனுஷ்
அண்ணாத்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகழ்ந்து பதிவு செய்திருக்கிறார்.
இது தலைவர் திருவிழா… அண்ணாத்த டிரைலரை கொண்டாடிய தனுஷ்
ரஜினி
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கு இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி
பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீசர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தனுஷ் பதிவு
இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பல பிரபலங்களும் ரஜினியை புகழ்ந்து இந்த டிரைலரை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர்
தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘அண்ணாத்த, வின்டேஜ் ரஜினிசம், முத்து, அருணாசலம், படையப்பா படங்களின் அதிர்வுகளை பார்க்க முடிகிறது. திரையில் பார்க்க
ஆர்வமாக காத்திருக்கிறேன். இது தலைவர் திருவிழா’ என்று பதிவு செய்து இருக்கிறார்
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்
சவுந்தர்யா ரஜினிகாந்த் – மு.க.ஸ்டாலின்
இளைய மகளான சவுந்தர்யாவின் ஹூட் (Hoote) ஆப்பை கடந்த திங்கட்கிழமை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தினார். எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக
மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை, தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் மற்ற சமூக வலைத்தளங்கள் போல, இந்த hoote செயலி
பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவில் தெரிவித்து இருந்தார்.
ஹூட் ஆப் அறிமுக விழாவில் பேசிய சவுந்தர்யா, கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி
வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் சவுந்தர்யா. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
அவர்களை சந்தித்து ‘Hoote’ App-ஐ பற்றி விவரித்து, அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
கை கட்டப்பட்ட நிலையில் இனியா
கை கட்டப்பட்ட நிலையில் இனியா
சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இனியா, புதிய போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.
கை கட்டப்பட்ட நிலையில் இனியா… வைரலாகும் புகைப்படம்
இனியா
‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா
இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’.
நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை சொல்லும் விதமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இனியா
காபி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இதில் கை கட்டப்பட்ட நிலையில் இனியா நிற்கும் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு தலைவர் இல்லை – அமீர் – கொதிக்கும் மக்கள் video
பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு தலைவர் இல்லை – அமீர் – கொதிக்கும் மக்கள் video
தமிழின தேசிய தலைவர் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு தலைவர் இல்லை என இயக்குனர் அமீர்
அவர்கள் அறிவித்துள்ள கூட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
சமீப காலங்களாக இவரது பேச்சு மாறி சுழன்றடித்து வருவதை காண முடிகிறது
இவரது இந்த பேச்சின் பின்னால் தமிழர்கள் இவருக்கு எதிராக கொதித்து எழுந்துள்ளதும் எதிர்
காலத்தில் இவர் தயாரிக்கும் திரைப்படங்களை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என கணிக்க பெறுகிறது
click here video
- யேமன் அரசு ஹவுதி மோதல்
- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்
- ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலி
- இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலி
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்
மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கும்
காணொளியுடன் தொடர்புடைய சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட் பிரதி பொலிஸ்மா அதிபராக
இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஒன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.
வீதியில் மிதக்கும் மனித சடலங்கள் – எகிறும் கொலைகள்
வீதியில் மிதக்கும் மனித சடலங்கள் – எகிறும் கொலைகள்
எட்டியாந்தோட்டை- மலல்பொல கிராம உத்தியோகத்தர் பிரிவின் அமுஹேன பிரதேசத்திலுள்ள
காட்டுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காணப்பட முடியாத வகையில் பழுதடைந்துள்ளதாகவும் எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த ருவன்வெல்ல பதில் நீதவான் நிமல் புஸ்பகுமார, மரண
விசாரணையை நடத்தியதுடன், நேற்றைய தினமே சடலம் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இச்சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மிருசுவிலில் வீடு புகுந்து தாக்குதல்
யாழ்ப்பாணம் மிருசுவிலில் வீடு புகுந்து தாக்குதல்
மிருசுவில் – தவசிக்குளம் பகுதியில், நேற்று (26) இரவு, வீடொன்றுக்குள் அயல்வீட்டார் அத்துமீறி
புகுந்து மேற்கொண்ட தாக்குதலில், வயோதிப தம்பதிகள் காயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில், 69 வயதான கணவனும் 52 வயதான அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர்.
அயல்வீட்டார் தம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தம் மீது தாக்குதலை மேற்கொண்டதாக, தாக்குதலுக்கு இலக்கான தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் -கோடாலி வெட்டு
யாழ்ப்பாணத்தில் -கோடாலி வெட்டு
இளவாலை – உயரப்புலம் பகுதியில், நேற்று (26) இரவு, குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்ததில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த 18 வயதுடைய அளைஞனும்; 30 வயதுடைய நபருமே, இவ்வாறு கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
உறவினர்களுக்கு இடையிலான முரண்பாடு நேற்றைய தினம் இரவு முற்றிய நிலையிலேயே,
கோடாரி வெட்டு தாக்குதல் நடைபெற்று உள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒன்று சேர்ந்த தமிழின துரோகிகள்
ஒன்று சேர்ந்த தமிழின துரோகிகள்
யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை
யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை
பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் என்னை துரோகியாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன்பிடியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராயும் வகையிலும் எதிர்காலத்தில்
வாகரையில் மீன்பிடி தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்
தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரின் அழைப்பினையேற்று இன்று விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது வாகரை மீன்பிடி திணைக்கள காரியாலய வளாகத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு விசேட சந்திப்பில் மீனவர்களுடன் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர்
வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வாகரை பிரதேசத்தில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள்
குறித்து கேட்டறிந்து கொண்ட அமைச்சர் முக்கியமாக வாகரை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றினை அமைப்பது குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் வாகரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்தி இங்கிருந்து தனித்துவமான மீன் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் உயர்த்துவதற்கு விசேட நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.
ரஜனிக்கு தமிழ் எழுத தெரியாது – மகள் அதிரடி பேட்டி
ரஜனிக்கு தமிழ் எழுத தெரியாது – மகள் அதிரடி பேட்டி
தமிழகத்தில் சூப்பர் ஸ்ட்டாராக விளங்கி வரும் ராஜனிக்கு தமிழ் எழுத தெரியாது என அவரது
மகள் சவுந்தர்யா
பர பரப்பாக தெரிவித்துள்ளார்
மேற்படி விடயம் தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது
கோட்டா கொலைக்கு ஆதாரம் இல்லை – சிங்கள கூலி ஊளை
கோட்டா கொலைக்கு ஆதாரம் இல்லை – சிங்கள கூலி ஊளை
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா ,மற்றும் மகிந்த கூட்டு முயற்சியில் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டனர்
மேற்படி கொலைக்கு ஐநாவில் வழங்குவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என இலங்கை தமிழ்
ஊடக வியலாளர் என்ற போர்வையில் ராசுக்குட்டி சிங்கள கூலி ஒன்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது
சிங்கள இராணுவ தளபதியின் மகளாக விலங்கு யோகினி இளையராஜா மகனால்வழங்க பட்ட
இசை ஒன்றில் அழைக்க பட்டு பாடல் பாடுவிக்க பட்டுள்ளது
மேற்படி விடையத்தால் ஆத்திரமுற்ற தமிழர்கள் கொந்தளித்துள்ளார் ,அவ்வேளையே மேற்படி
கருத்தை சிங்கள கூலி கூவியுள்ளது
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து விஜய் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்
விஜய்
விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை
ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார்.
ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். இளம் தலைமுறையினரை
ஊக்குவிக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்களோ என்னவோ தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
விஜய்
இந்தச் செய்தி விஜய் எட்டியவுடன் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து அவர்களின் வெற்றி விபரங்களைக் கண்காணித்துச் சொல்லக் கட்டளையிட்டார். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளில்
விஜய்யின் அலுவலகம் பரபரப்பானது. தொடர்ந்து வந்த தேர்தல் நிலவரங்களை உன்னிப்பாகக்
கவனித்து இறுதியாக 110 பேர் வெற்றி பெற்ற விபரம் வந்தவுடன் மக்கள் மன்றத்து ஆட்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த பல நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற மக்கள் மன்ற
நிர்வாகிகளை நேற்று அழைத்துப் பாராட்டியிருக்கிறார். வெற்றி பெற்ற குழுவினரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டிருக்கிறார் விஜய்.
தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை
தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தனி நீதிபதி கூறிய கருத்துக்கள் தன்னை புண்படுத்தின என முறையிட்டுள்ள விஜய், அதனை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். என்றாலும், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு
விசாரணையின்போது, பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்து தேவையற்றது.
உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் கார்
வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
















