Author: நலன் விரும்பி
பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்
பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்
பாகிஸ்தானில் அரச இராணுவ தளத்தை இலக்கு வைத்து The Baloch Liberation Army
படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் 19 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்
இதில் சிலரை உயிருடன் சிறை பிடித்து சென்றுள்ளதான தகவலும் உள்ளது
அரச இராணுவ தகவல்களை விட இழப்பு அதிகம் இருக்கலாம் என நம்ப படுகிறது ,தொடர்ந்து அரச இராணுவம் தேடுதல்களை முடுக்கிவிட்டுள்ளது
அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்
அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார்.
அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம்
செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ்.
ஊட்டச்சத்து நிபுணரான இவர், கொரோனா தொற்று நோய் பரவும் நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற
இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தினார். மேலும் கொரோனா நேரத்தில் பெரும்
இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
அதுபோல் சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம்
எழுதினார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார்.
இவருக்கு ஆதரவாக இவரது தந்தை சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் திவ்யா சத்யராஜ் கூறியிருக்கிறார்.
நடிகையின் மச்சங்களை எண்ணிய நடிகர்
நடிகையின் மச்சங்களை எண்ணிய நடிகர்
நடிகையின் மச்சங்களை எண்ணி விட்டீர்களா…? பத்திரிகையாளரின் கேள்வியால் அதிர்ந்துபோன நடிகர்
டி ஜே டில்லு படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
நடிகையின் மச்சங்களை எண்ணி விட்டீர்களா…? பத்திரிகையாளரின் கேள்வியால் அதிர்ந்துபோன நடிகர்
டிஜே தில்லு படத்தின் காட்சி
தெலுங்கு திரை உலகின் பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் படத்தயாரிப்பாளர் சுரேஷ் கொண்டேத்தி. அவர் சந்தோஷம் என்ற வார இதழை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் நடிகரிடம் அறுவறுக்கத்தக்க வகையில் கேட்ட கேள்வியால் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ‘டிஜே டில்லு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது படத்தின் கதாநாயகன் சித்து ஜொன்னாலகடாவிடம், படத்தின் டிரைலரில் குறிப்பிடப்பட்டு உள்ளது போல்,
நிஜத்திலும் நடிகை நேஹா ஷெட்டியின் உடம்பில் மொத்தம் எத்தனை மச்சங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு உள்ளீர்களா? என்று கேட்டு அதிர்ச்சியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தினார்.
இப்படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அதனை குறிப்பிட்டு பேசிய சுரேஷ், “நடிகையின் உடம்பில் 16 மச்சங்கள் உள்ளன என்று படத்தில் கண்டுபிடித்துள்ளீர்கள். அதை போல நிஜ வாழ்க்கையிலும் அவரது
மச்சங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்களா?” என்று நாயகன் சித்துவை நோக்கி கேட்டார். இந்த கேள்வியால் அதிர்ந்துபோன சித்து, எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை மதிக்கத் தெரியாத சுரேஷ் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகை நேஹா ஷெட்டியும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
‘இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. சுரேஷ் பெண்களை மதிக்கும் முறை அவரது கேள்வியின் மூலம் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது’ என்று நேஹா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் தனது கேள்வியை நியாயப்படுத்திய சுரேஷ், ‘நான் எவ்வித இரட்டை அர்த்தத்திலும் அவ்வாறு கேட்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
“இது ஒரு காதல் படம், நான் ரொமான்டிக் கேள்வி கேட்டேன். எனது நோக்கம் தூய்மையானது. தயவு செய்து என்னை தவறான முறையில் பேசாதீர்கள்” என்கிறார் சுரேஷ்.
யாழில் வெடித்த போராட்டம் – முடங்கிய வீதிகள்
யாழில் வெடித்த போராட்டம் – முடங்கிய வீதிகள்
யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது மாவட்ட செயலகத்தின் இரண்டு பிரதான வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருந்து மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்னால் மாவட்ட செயலகத்தின் இன்றைய செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியையும் மறித்தும் போராட்த்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
ஆசிரியையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியையை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலையின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பாடசாலையில் நேற்று (02) கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவுகும் பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட
சர்ச்சை காரணமாக அதிபரும் ஆசிரியையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அபாயா அணிந்துகொண்டு சென்றமையால் இந்த சர்ச்சை வெடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (03) காலை 8.00 மணியலவில் பாடசாலைக்கு
முன்பாக ஒன்று கூடிய பெற்றோர் சிலர், திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று அங்கு ஒன்றுகூடி பதாதைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பினர்.
“அடாவடி ஆசிரியை எமக்கு வேண்டாம்”, “தமிழ் கலாசாரத்தை மிதிக்காதே”, “அதிபரை அடித்த ஆசிரியை வேண்டாம்”, “உனது கலாசாரம் உனக்கு எனது கலாசாரம் எனக்கு” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷமிட்டனர்.
குறித்த இடத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை செய்வதற்கு சிலரை வருமாறு அழைத்தார். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் வினயமாக வேண்டிக் கொண்டார்.
நீதிமன்ற நடவடிக்கை இருப்பதால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை சமுகத்தோடு பேச்சுவார்த்தைக்கு வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
200 கிலோ போதைப்பொருளை கடத்திய கப்பல் சிக்கியது
200 கிலோ போதைப்பொருளை கடத்திய கப்பல் சிக்கியது
ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோகிராம் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும், கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று (03) வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோகிராம் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும், கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று (03) வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா
அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர்
கடற்படையுடன் இணைந்து, சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஈரானில் இருந்து 200 கிலோகிராம் போதைப் பொருளை கடத்திவந்த கப்பலை, கடலில் வைத்தே வழிமறித்துள்ளனர். இதன்போது, சுமார் 200 கிலோகிராம் போதைப்
பொருளை, கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ளனர். எனினும், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் தங்களுடைய பாவனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட கடத்தல் காரர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு இலட்சம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்
ஒரு இலட்சம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்
பொருளாதாரத்தை வலுவூட்டும் கிராமத்துடன் கலந்துரையாடல் வரவு செலவு திட்ட ஒரு இலட்ச வேலைத்திட்டம் இன்று (04) காலை 8.52 மணிக்கு நாடு முழுவதும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டத்திற்கு அமைவாக உற்பத்தி பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்குடன்
மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தேசிய வேலைத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14 ஆயிரத்து 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதற்கமைவாக ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 5 தொடக்கம் 6 வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளை கேந்திரமாக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் தமது தேவையை அவர்களினாலேயே அடையாளம் காணக்கூடிய வகையிலும் அதற்கான திட்டத்தை அவர்களே தேர்ந்தெடுத்து செயற்திறன் மிக்கதாக
முழுமையாக பன்முகப்படுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷவின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம் நிதியமைச்சர் பெசில்
ராஜபக்சவினால் வகுக்கப்பட்டு அவரது வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
போதைக்கு அடிமையான சாரதிகள்
போதைக்கு அடிமையான சாரதிகள்
வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருவோரில் 10
சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தந்தோரை
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஒருநாளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1 ஆயிரத்து 213 பேரில் 145 பேர் போதைபொருளை பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு போதைபொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
சிரேஸ்ட பொலிஸ் ஊடகபேச்சாளரும், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண் கொலை – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது
கர்ப்பிணி பெண் கொலை – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 15 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் 7 மாத கர்ப்பிணியான பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு , அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொலை நடந்த அன்றைய தினமே சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 17 மாத காலம் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படிருந்த நிலையில் மேல் நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகோர ஆட்டிலறி தாக்குதல் -அதிரும் களமுனை
அகோர ஆட்டிலறி தாக்குதல் -அதிரும் களமுனை
சிரியா அரச இராணுவம் Al-Nusra பகுதியில் அமைக்க பட்டுள்ள துருக்கிய ஆதரவு
படைகளின் முன்னரங்க நிலைகள் மீது கடும் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
இந்த தாக்குதலினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது .தொடர்ந்து இரு
தரப்புக்கும் இடையில் பரஸ்பர மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன
கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்
கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்
நையீரியாவின் Zamfara பகுதியில் தீவிரவாதிகளினால் கடத்தி வைக்க பட்டிருந்த 32 பொது மக்களை
அரச இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தி விடுத்துள்ளனர்
இவ்வாறு மீட்க பட்டவர்களை காவல்துறையினர் அவர்தம் குடும்பத்திடம்
ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
இங்கு தொடர் கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்
பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்
கடந்த நான்காவது காலாண்டில் ஆல்பாபெட்டின் விற்பனை 32% உயர்ந்து 7500 கோடி டாலராக உயர்ந்தது.
பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்- பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்குகள் வர்த்தக நேரத்திற்கு பிறகு 8%-க்கும் மெல் அதிவேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து
அந்நிறுவனம் தனது பங்குகளை 1-க்கு 20 என்ற வகையில் பிரித்து தரவுள்ளது. ( ஆல்பபெட்டின் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 19 பங்குகள் கிடைக்கும்.)
இதன்மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும் ஆல்பபெட்டின் பங்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வணிக நிபுணர்கள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் ஆல்பாபெட்டின் விற்பனை 32% உயர்ந்து 7500 கோடி டாலராக உயர்ந்தது. சாதாரண நுகர்வோர் ஆடை மற்றும் பொழுதுபோக்குப் பொருட்களை கூகுளில் தேடுகின்றனர்.
சில்லறை வணிகம், நிதி, பொழுதுபோக்கு மற்றும் பயண விளம்பரதாரர்கள் அதிக
விளம்பரத்திற்காக செலவிடுகிறார்கள். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று பலரையும் இணையதளத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
வணிகர்கள் அதிகம் டிஜிட்டல் விளம்பரங்களில் செலவிட விரும்புகின்றனர். கூகுள்
நிறுவனம் இணைய விளம்பரங்களில் இருந்தே அதிகம் வருமானம் ஈட்டுகிறது. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி கணிக்க முடியாததாக இருக்கிறது.
இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
அது போலி… நம்பாதீங்க… ஷாலினி அஜித்
அது போலி… நம்பாதீங்க… ஷாலினி அஜித்
நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் புதிதாக ஒரு டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டது, இதுதொடர்பாக அஜித் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அது போலி… நம்பாதீங்க… ஷாலினி அஜித் தரப்பில் விளக்கம்
அஜித் – ஷாலினி
பெரும்பாலான சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவிப்புகளையும் அவர்களுடைய ரசிகர்களுடன் உரையாடல்களையும் நகிழ்த்துவர். இதன் மூலம் ரசிகர்களை எளிதில் தொடர்புகொள்ள முடிவதால் பல நடிகர் நடிகைகள்
சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் நேற்று ட்விட்டர் கணக்கு
தொடங்கப்பட்டது. மேலும் அந்த கணக்கில் ஷாலினி புதியதாக தொடங்கப்பட்ட டுவிட்டர் கணக்கு என்று பதியப்பட்டிருந்தது.
இந்த பதிவை கண்டு அவருடைய ரசிகர்களும் நடிகர் நடிகைகளும் அந்த கணக்கை பின் தொடர்ந்தனர். இந்நிலையில் அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்றும்
அதனை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் அஜித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில், “ஷாலினி அஜித்க்குமார் என்ற பெயரில் போலி
ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நடிகை ஷாலினி, டுவிட்டரில் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் நடிகர் அஜித்குமார் சமூக வலைதளங்களில் இருந்து விலகி விட்டார். அவர்
மட்டுமின்றி அவரது குடும்பமே சமூக வலைதளங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அனிதா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
அமைச்சர் அனிதா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.
இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி
நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி
நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கவின் அடுத்து நடிக்கும் வெப் தொடரின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
”நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி
கவின் – ரெபா மோனிகா ஜான்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’
திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இதனிடையில் நடிகர் கவின் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில்
இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார்.
மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி ஆகியோர் இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுவாரசியமாக உருவான இந்த
வெப் தொடரின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கவிழ்ந்த கோழி லொறி – சாரதி கைது
கவிழ்ந்த கோழி லொறி – சாரதி கைது
மட்டக்களப்பு- கொழும்பு வீதி ஊறணி சந்தியில் மோட்டார் சைக்கிளும் கோழிகளை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனமும் மோதிய விபத்தில் மோட்டர் சைக்கிளை
செலுத்திச் சென்ற பெண், படுகாயமடைந்துள்ளார். கோழிகளை ஏற்றிச்சென்ற வாகனமும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று புதன்கிழமை (02) அதிகாலையில் இடம்பெற்ற சம்பவத்தில், படுகாயமடைந்த
பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேசத்தை நோக்கி கோழிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கன்ரர் ரக மட்டக்களப்பில் இருந்து ஊறணிக்கு சென்ற
மோட்டார் சைக்கிளும், ஊறணி சந்தியில் வைத்தே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள மட்டு. தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடம்பர இரண்டு வீடுகளுக்கு சீல்
ஆடம்பர இரண்டு வீடுகளுக்கு சீல்
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய தெமட்டகொட ருவன் என அழைக்கப்படும் ருவன்
சமில பிரசன்னவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளுக்கு சீல் வைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவு இதற்கான தடையை பெற்றுள்ளது.
குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இந்த இரண்டு சொகுசு வீடுகளையும் தனது மனைவியின் பெயரில் தெமட்டகொட ருவன் வாங்கியுள்ளார்.
இந்த வீடுகள் இரண்டும் ரூ. 3 கோடி 46 இலட்சத்துக்கும் மேல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
யாழ் கோண்டாவிலில் காதல் சண்டை – வீடு உடைப்பு
யாழ் கோண்டாவிலில் காதல் சண்டை – வீடு உடைப்பு
கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதலை நடத்தியது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்.வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக காவல்துறையை அலறவிட்ட இலங்கை படகு
தமிழக காவல்துறையை அலறவிட்ட இலங்கை படகு
தனுஷ்கோடி அருகே இரண்டாம் மணல் திட்டில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு குறித்து உளவுத்துறை கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக திங்கட்கிழமை இரவு தனுஷ்கோடி பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மெரைன் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற மெரைன் பொலிசார், உளவுத்துறை மற்றும் சுங்கத் துறையினர் படகை மீட்டு இரவு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
மீட்கப்பட்ட பைபர் படகு புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் இருந்துள்ளது.
படகில் யாரேனும் ஊடுருவினார்களா? அல்லது கடத்தலுக்கு பயன்படுத்த வந்ததா? அல்லது காற்றின் சீற்றத்தில் கரை ஒதுங்கியுள்ளதா? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
படகில் இன்ஜின் பொருத்தப்படும் இடம் சேதமடைந்தும், படகில் மீன்பிடி உபகரணங்கள் இல்லாமல் இருந்ததாக தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்கப்பட்ட படகை சுங்க துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட படகு டிராக்டர் மூலம் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மர்ம படகு குறித்து இலங்கை பாதுகாப்பு படையினரிடம் விசாரித்த போது,
படகின் பதிவு எண் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தது என்றும் ஆனால் படகு காணாமல் போனதாக மீன் துறை மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு இது வரை எந்த முறைப்பாடும் அளிக்கவில்லை எனவும் இதுகுறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மர்மமான முறையில் இலங்கை படகு கரை ஒதுங்கியது தனுஸ்கோடி பகுதி மீனவர்கள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களை விடுங்கள் -கோட்டாவுக்கு ஸ்டாலின் கடிதம்
அவர்களை விடுங்கள் -கோட்டாவுக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத்
தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதம்:-
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 12 மீனவா்கள் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே மீன்பிடிப்பில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு அங்குள்ள காங்கேசன் துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.
இதேபோன்று, மற்றொரு படகில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 6 மீனவா்கள் புதுச்சேரியைச் சோ்ந்த 3 மீனவா்களுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனா்.
2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த 3 வெவ்வேறு சம்பவங்களில் 68 தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் மத்திய அரசு
மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனா். அவா்கள் தாயகம் திரும்பக் காத்திருக்கின்றனா்.
இந்த நிலையில், தமிழக மீனவா்கள் மீண்டும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், மீனவ மக்களிடையே பீதியையும், கொந்தளிப்பையும்
ஏற்படுத்தியுள்ளது. இலங்கைச் சிறைகளில் உள்ள நமது மீனவா்கள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது, மீனவா்களையும் அவா்களது குடும்பத்தினரையும் துயரத்துக்கு ஆளாக்குவதோடு, அந்தக் குடும்பங்களும் வறுமையில் தள்ளப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்தியா, இலங்கை மீனவா்களுக்கு இடையில் உள்ள நீண்டகாலப் பிரச்னையை நிரந்தரமாகத் தீா்க்க, உறுதியான
வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்கள், 2 விசைப் படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.























