Posted in மருத்துவம்

இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை

வலிப்பு வந்தால் இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை

எவ்வாறு ஏற்படுகிறது
மூளையில் உள்ள நரம்பு செல்கள் உட்பட உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு

செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளிப்படுத்தும் விளைவே வலிப்பு நோயாக பாதிப்பு

ஏற்படுத்துகிறது. மூளை பகுதிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை போன்றவற்றால் தழும்புகள் ஏற்பட்டு இருந்தாலோ, ரத்த

கசிவு, தொற்று, மூளையில் பூச்சிகட்டி, மூளை காய்ச்சல் போன்றவற்றால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.

மூட நம்பிக்கை
எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானலும் வலிப்பு ஏற்படலாம். ஆயிரம் பேரில் 3 அல்லது 5 என்ற அளவில் இந்த பாதிப்பிற்கு

ஆளாகியுள்ளனர் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. வலிப்பு நோய் என்பது சமூகத்தில் ஒரு புறக்கணிக்கப்படும் நோயாக

கருதப்படுகிறது. இது குறித்த போதிய விழிப்புணர்வு இன்றளவும் மக்களிடையே இல்லை என்பதே உண்மை நிலை. இன்றைய

சமூகத்தில் தற்போதும் வலிப்பு நோய்க்கு கைகளில் சாவி, கத்தி, சங்கிலி போன்றவைகள் கொடுக்கும் பழக்கம் உள்ளது. இது முற்றிலும் தவறான மூட நம்பிக்கை.

தெரிந்து கொள்ள வேண்டியவை
வலிப்பு ஏற்படும் போது அதற்கான முதலுதவி செய்து உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். இந்த நேரங்களில் பாதிக்கப்பட்ட

நபரை 3 அல்லது 4 நிமிடம் ஒரு நிலையாக படுக்கவைத்து அவரின் உடைகளை தளர்த்தி விடவேண்டும், காற்றோட்டத்தை

விடவேண்டும், வலிப்பின் போது நாக்கை கடித்துக்கொள்வார்கள் அதனை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக

இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவோர் தொடர்ந்து 3 அல்லது நான்கு ஆண்டுகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றது. நூற்றில் 3 பேர் அலட்சியத்தின் காரணமாகவே இறந்துவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

எப்போதும் ஒரு துணை அவசியம். வலிப்பு வருபவர்களை வேலைக்கு அமர்த்தவோ, பள்ளிகளில் சேர்க்கவோ, திருமணம்

போன்ற பல்வேறு சூழலில் ஒதுக்கப்படுகின்றனர். வலிப்பு நோய் வந்த 70 சதவீதம் பேர், மாத்திரை, ஊசிகள் மூலம்

குணமடைகிறார்கள். 30 சதவீத பேருக்கு அறுவை சிகிச்சை முறை அவசியப்படுகிறது.

Posted in மருத்துவம்

வலிப்பு நோயுள்ள பெண்கள் – தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

வலிப்பு நோயுள்ள பெண்கள் – தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

வலிப்பு நோயுள்ள பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? என்ற சந்தேகங்களுக்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம்.

வலிப்பு நோயுள்ள பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?
வலிப்பு நோயுள்ள பெண்


வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு

    கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை

    வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.

    இது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக

    கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத

    வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள்

    கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.

    தன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம்

    செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை

    நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை

    நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின்

      ஒப்புதலுக்கு பின்பே திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு

      நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.

      வலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும்

      எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால்

      வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை.