Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

லெபனான் குண்டு வெடிப்பு -200 க்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணை

லெபனான் குண்டு வெடிப்பு -200 க்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணை

லென்பான் தலைநகர் பேரூந்தில் உள்ள மிக பெரும் துறைமுகத்தில்

நடத்த பட்ட இஸ்ரேல் விமான குண்டு தாக்குதலை அடுத்து அங்கு

வைக்க பட்டிருந்த ஆயுதங்கள் ,ரொக்கட்டுக்கள் என்பன வெடித்து சிதறின

மேற்படி குண்டு வெடிப்பு தொடர்பாக அங்கு பணியாற்றிய முக்கிய

அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்த இராணுவ முக்கிய

தலைமையகம் ஒன்றில் பணியாற்றியவர்கள் சுமார் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இந்கு வந்திறங்கிய ஆயுதங்கள் தொடரப்பாக

தகவல் வழங்கியது யார் என்பதும் அவர்களை கண்டு பிடிக்கும் நகர்வில் லெபனான் புலானய்வு துறை ஈடுபட்டுள்ளது

இவர்கள் தேடும் அந்த முக்கிய இரட்டை உளவாளிகள் சிக்குவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகவும்

வரும் வாரங்களில் இவை தொடர்பான பல்வேறு பட்ட பூதாகார விடயங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கலாம்

லெபனான் குண்டு வெடிப்பு
லெபனான் குண்டு வெடிப்பு
      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      சிரியா அரச இராணுவத்தை காட்டி கொடுத்த முக்கிய அதிகாரி கைது

      சிரியா அரச இராணுவத்தை காட்டி கொடுத்த முக்கிய அதிகாரி கைது

      சிறிய அரச இராணுவத்தின் தொலை தொடர்பு பிரிவிற்கு

      நியமிக்க பட்டிருந்த முக்கிய அதிகாரி ஒருவர் எதிரிகளுக்கு சிரியா

      இராணுவத்தின் நகர்வுகளை காட்டி கொடுத்த வண்ணம் இருந்துள்ளார்

      நீண்ட காலமாக இவரது தகவல் வழங்குதல் மூலம் குறித்த

      இராணுவம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது

      இதனை மோப்பம் பிடித்த குறித்த நாட்டின் உளவுத்துறை தகவல்

      ஊடாக ஜெனரல் Ma’an Hussein கைது செய்ய பட்டுள்ளார்

      அவரது பதவிக்கு இப்பொழுது அதிரடியாக அசாத்தின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கும்

      ஜெனரல் l Mueen Qassem நியமிக்க பட்டுளளார்

      இந்த சம்பவம் அந்த இராணுவத்திற்கும் பெரும் களையெடுப்பை நடத்தி வருகிறது

      சிரியா அரச இராணுவத்தை
      சிரியா அரச இராணுவத்தை

      ,

          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          எங்கள் முக்கிய நபரை உங்கள் நாட்டில் காணவில்லை -சிரியாவை மிரட்டும் அமெரிக்கா

          எங்கள் முக்கிய நபரை உங்கள் நாட்டில் காணவில்லை -சிரியாவை மிரட்டும் அமெரிக்கா

          அமெரிக்கா நாட்டின் முக்கிய ஊடக நபர் ஒருவர் சிரியாவில் காணாமல்

          போயுள்ளளார் எனவும் அவரை உடனடியாக கண்டு பிடித்து தரும் படி

          அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா அரச அதிபருக்கு கடிதம் எழுதி கேட்டுள்ளார்

          இவ்வாறு அமெரிக்கா அதிபர் ஒருவரால் எங்கே என கேட்க படும் இந்த நபர் சாதாரண ஊடக நபரா .?

          கண்டிப்பாக இல்லை அமெரிக்கா இராணுவ உளவுத்துறையால் பயிற்றுவிக்க

          பட்ட இராணுவத்தை சேர்ந்த உளவுத்துறை நபர் ஒருவர் ,ஊடக நபராக வேடமிட்டு

          உள்ளே நுழைந்து தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு இருந்துள்ளார்

          அவ்வாறான நபர் ஒருவரையே இப்பொழுது அமெரிக்கா காணவில்லை

          என தேடுகிறது ,அமெரிக்காவின் இந்த மிரட்டலான பதிலுக்கும் சிரியா

          அரச அதிபரின் பதில் எதுவாக இருக்கும் என மக்களே எதிர் பார்கின்றீர்கள் …?

          ஈராக்கி போல சிரியாவை அழித்து விடலாம் என எண்ணிய அமெரிக்காவுக்கு சிரியா

          ஒரு பொறி களமாக மாற்றம் பெற்றுள்ளதும் பெரும் அவமானத்தை உலக பரப்பில் ஏற்படுத்தியுள்ளது


          அதற்கு ரசியா நேரடி தாக்குதல் படை நகர்வுகள் ஆகும் என்பதை இங்கே அடித்து கூறலாம்

              Posted in சினிமா

              யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் – தௌலத் தயாரிப்பாளர்

              யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் – தௌலத் தயாரிப்பாளர்

              முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தௌலத் படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அலி கூறியுள்ளார்.

              யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் – தௌலத் தயாரிப்பாளர்
              யோகிபாபு


              ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தௌலத்’. இந்த

              திரைப்படத்தை பற்றி யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த டுவிட்டர்

              செய்தியில், தனக்கும் ‘தௌலத்’ படத்திற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை; நான் நடிக்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

              இதுபற்றி தயாரிப்பாளர் முகம்மது அலி கூறும்போது, ‘தௌலத்’ படத்தை தயாரிக்க முடிவு செய்தபோதே, இப்படத்தின் முக்கியத்

              திருப்பமாக கதாநாயகனும், வில்லனும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் காட்சியில் யோகிபாபுவைத் தான் நடிக்க வைக்க

              வேண்டுமென்று தீர்மானித்து தான் நடிக்க வைத்தோம். அவரும் நல்லபடியாக நடித்துக் கொடுத்தார். ஆனால், அதன்பின் அவர்

              நடித்த பல படங்கள் வரிசையாக வெற்றி பெற்று பரபரப்பான நடிகராக மாறினார்.

              தௌலத் தயாரிப்பாளர்

              அவர் நடித்த காட்சிக்காக டப்பிங் பேச வராமலும் இழுத்தடித்தார். நானும் அவருக்காக 9 மாதங்கள் காத்திருந்தேன். அதன்பின்தான் டப்பிங் பேசி கொடுத்தார். அவர் முன்பே டப்பிங் பேசி முடித்து

              இருந்தால் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம். அவர் குறித்த நேரத்தில் டப்பிங் பேசாததால் படம் வெளியாக தாமதமாகி மன உளைச்சலும் பண இழப்பும் ஏற்பட்டது.

              ஆனால், அதையும் விட நடித்துவிட்டு இப்போது நான் நடிக்கவில்லை என்று கூறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு நிறுவனத்திடம் விலைபேசி இப்படத்தை வெளியிட

              திட்டமிட்டிருந்தேன். ஆனால், இந்த செய்தி என்னை இடிபோல் தாக்கிவிட்டது. மேலும், அவர் கூறியது போல் அவர் புகைப்படத்தை மட்டும் போஸ்டரில் போட்டு நாங்கள் விளம்பரம் செய்து

              சம்பாதிக்க நினைக்கவில்லை. அப்படி செய்யவும் மாட்டோம். நான் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்த ஒரு நடிகர் தன்னை விளம்பரம்

              செய்யக்கூடாது என்று கூறுவது சரியா? தர்மமா? நியாயமா? யார் மீதோ உள்ள காழ்ப்புணர்ச்சியால் என் மீது பாய்ந்துள்ளார். யோகி

              பாபு மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை. எந்த நடிகரும் இதுபோல் எந்த தயாரிப்பாளர் வயிற்றிலும் அடிக்க வேண்டாம்’ என்றார்.

                  Posted in சினிமா

                  சாப்பாட்டுக்கே வழியில்லை… உதவி கேட்கும் வில்லன் நடிகர்

                  சாப்பாட்டுக்கே வழியில்லை… உதவி கேட்கும் வில்லன் நடிகர்

                  கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் சாப்பாட்டுக்கே வழியில்லை என்று பிரபல வில்லன் நடிகர் உதவி கேட்டிருக்கிறார்.

                  சாப்பாட்டுக்கே வழியில்லை… உதவி கேட்கும் வில்லன் நடிகர்
                  சூர்யகாந்த்


                  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து

                  செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக

                  பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள்

                  வேலையில்லாமல் இருக்கும் துணை நடிகர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கி உதவினார்கள்.

                  படப்பிடிப்புகளுக்கு அரசு இன்னும் அனுமதி வழங்காததால் துணை நடிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

                  இந்நிலையில் பாக்யராஜின் ‘தூரல் நின்னு போச்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூரியகாந்த் சாப்பாட்டுக்கே

                  வழியில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

                  சூர்யகாந்த்

                  இதுகுறித்து சூர்யாகாந்த் கூறுகையில், பாக்யராஜ் தான் என்னை ‘தூரல் நின்னு போச்சு’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார்.

                  பாரதிராஜாவின் மண்வாசனை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறேன். கடைசியாக

                  கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.

                  தற்போது திரைப்பட படப்பிடிப்புகளும் இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளும் சரியாக நடக்கவில்லை. அதனால் பொருளாதார

                  ரீதியாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு மருந்து மாத்திரை

                  வாங்கவே ரூ.1500 செலவாகிறது. அதை வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. சாப்பாட்டுக்க வழியில்லாமல் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

                      Posted in உலக செய்திகள் சினிமா

                      ஆபத்தான நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

                      ஆபத்தான நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

                      கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர்

                      எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்தது; ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

                      இதேவேளை அவரது மகன் எஸ்.பி.பி.சரண், உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை என்றும், நலமாகவே இருக்கிறார்

                      என்று மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.. தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா

                      தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

                      இதேவேளை நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல்

                      தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

                      தமிழகத்தை பொறுத்தவரையில் 31 எம்.எல்.ஏக்கள், 4 எம்.பிக்கள், ஆளுநர் என பல முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                      அந்த வகையில் சினிமா உலகின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

                      இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

                      இதனிடையே நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாகவும்

                      அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


                      தொடர்ந்து மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                      74 வயதாகும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

                      சிறந்த பின்னணிப்பாடகருக்காக 6 முறை தேசிய விருதும், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                      Posted in சினிமா

                      பிகினி உடையில் மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்

                      பிகினி உடையில் மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்

                      மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

                      பிகினி உடையில் மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்
                      மாளவிகா மோகனன்


                      கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின்

                      மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ்

                      இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள

                      மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

                      மாளவிகா மோகனன்

                      கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா

                      மோகனன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவேற்றி

                      வருகிறார். அந்த வகையில், பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

                      சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன

                      Posted in உலக செய்திகள் சினிமா

                      நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

                      நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

                      நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                      நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று
                      நிக்கி கல்ராணி


                      கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

                      இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நிக்கி கல்ராணி தனது
                      டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

                      இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு

                      கொரோனா தொற்று உறுதியானது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன்.

                      எனது கவனித்துக்கொண்ட நெருங்கிய சொந்தங்களுக்கும்,
                      முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி

                      தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தொடர்ந்து ஆதரவளித்த சென்னை மாநகராட்சிக்கு


                      எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

                      Posted in சினிமா

                      நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா… வைரலாகும் புகைப்படம்

                      நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா… வைரலாகும் புகைப்படம்

                      இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக இருக்கும் மனோபாலா, நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கி இருக்கிறார்.

                      நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா… வைரலாகும் புகைப்படம்
                      மனோபாலா


                      “புதிய வார்ப்புகள்” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோபாலா. இந்த படத்தில் பாரதிராஜாவின்

                      உதவி இயக்குநராகவும் இவர் அறிமுகமானார். 1982ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் மனோபாலா.

                      கார்த்திக், விஜயகாந்த் மற்றும் மோகன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். ரஜினியை

                      வைத்து ‘ஊர் காவலன்’ என்ற வெற்றி படத்தையும் மனோபாலா இயக்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்தரம் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

                      மனோபாலா

                      தற்போது இவர் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். இளம் நடிகர்கள், நடிகைகள் போட்டோஷூட் எடுத்து சமூக

                      வலைத்தளத்தில் வெளியிடுவது போல், மனோபாலாவும் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டிருக்கிறார். இளமை நாயகன்

                      என்ற டைட்டிலுடன் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

                      நடிகர்கள் நடிகைகளுக்கு
                      நடிகர்கள் நடிகைகளுக்கு
                      Posted in சினிமா

                      சர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா

                      சர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா

                      தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதையில் நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

                      சர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா
                      நயன்தாரா


                      நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அவரது படங்கள் முன்னணி

                      கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் குவிக்கவும் செய்கின்றன. தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

                      இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின்

                      தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியானது.

                      இதில் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை

                      நடந்ததாகவும் அவர் ரூ.4 கோடி சம்பளம் எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தில் நடிக்க நயன்தாரா

                      மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்தை மீறி தகாத உறவில் ஈடுபடும் சர்ச்சை கதாபாத்திரம் என்பதால் நடிக்க

                      மறுத்து விட்டதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

                      நயன்தாரா

                      நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். ஊரடங்கு முடிந்ததும் இந்த படம் திரைக்கு

                      வருகிறது. நெற்றிக்கண், ரஜினியின் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.

                      Posted in சினிமா

                      பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா

                      பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா

                      லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது அடையாளங்களில்

                      ஒன்றான கண் கண்ணாடியை ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா ஏலம் விட்டுள்ளார்.

                      தனது பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா
                      மியா காலிஃபா

                      கடந்த சில நாட்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த

                      அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                      கட்டடத்தைச் சுற்றி 10 கி.மீ வரை இருந்த அனைத்து கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. வெடிவிபத்துக்கு அரசின் அலட்சியமே

                      காரணம் என மக்கள் வீதியில் திரள, ஒட்டுமொத்த அரசும் ராஜிமானா செய்தது.

                      லெபனானை பூர்வீகமாக கொண்ட ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா, வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி

                      திரட்டுவதற்காக தனது அடையாளங்களில் ஒன்றாக கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார்.

                      தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. “Anything for my country?” என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

                        Posted in சினிமா

                        என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? – அமிதாப்பச்சன் காட்டம்

                        என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? – அமிதாப்பச்சன் காட்டம்

                        65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

                        என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? – அமிதாப்பச்சன் காட்டம்
                        அமிதாப்பச்சன்


                        கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகளில் 65 வயதை தாண்டியவர்கள் பங்கேற்க கூடாது என்று மராட்டிய மாநில

                        அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்ததை எதிர்த்து கோர்ட்டில் தொடர்ந்து வழக்கில் அரசின் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு 65

                        வயதுக்கு மேற்பட்டோர் படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

                        இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது: “65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற

                        அரசின் நிபந்தனை எனது மனதை மிகவும் பாதித்தது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்ல கூடாது.

                        அவர்கள் வேலை செய்ய லாயக்கு இல்லாதவர்கள் என்று அரசு நிர்வாகம் முடிவு செய்தது.

                        அமிதாப்பச்சன்

                        அப்படியென்றால் என்னைபோன்ற 78 வயதுக்காரர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? இது மிகவும் கஷ்டமான முடிவு. இந்த

                        தடையை திரைப்பட சங்கம் கோர்ட்டுக்கு கொண்டு சென்று தீர்ப்பின் மூலம் நீக்கியதால் பிரச்சினை தீர்ந்து விட்டது.

                        ஆனால் கோர்ட்டு தடையை நீக்குவதற்கு முன்னால் என்னை போன்றவர்கள் மனரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்?

                        நாங்கள் சினிமாதான் தொழில் என்று இருக்கிறோம். நடிப்பை விட்டு நான் வேறு தொழில் செய்வதற்கு ஏதாவது வழி இருந்தால்

                        ஆலோசனை சொல்லுங்கள்.” இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

                          Posted in சீமான் பேச்சு

                          ராஜீவ் கொலையாளி – சீமான் வீடியோ

                          இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் கனதி ஒரு இன படுகொலையாளி என சீமான் தெரிவித்துளளார்

                          அவர் என்ன பாயங்கரம் செய்தார் ? புலிகள் எப்படி பயங்கரவாதிகள் ஆனார்கள் இதோ

                          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                          MiG-29 விமான பாகங்களை வடகொரியாவுக்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியது

                          MiG-29 விமான பாகங்களை வடகொரியாவுக்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியது

                          உலக நாடுகளை மிரளவைத்து வரும் வடகொரியா தற்பொழுது தனது இராணுவ பலத்தில் முன்னிலை வகித்து வருகிறது

                          இவ்வேளை அந்த நாடு பயன்படுத்தும் MiG-29 ரக போர்

                          விமானங்களுக்கு பயன் படுத்த படும் இயந்திரங்கள் ,மற்றும் பிற

                          உதிரி பாகங்களை கள்ள சந்தை ஊடாக கடத்தி விற்க முனைந்த கும்பல்

                          ஒன்று மடக்கி பிடிக்க பட்டுள்ளது முக்கிய உளவுத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

                          கைதானவர்கள் கிரிமினல் கும்பல் என குறித்த நாட்டின் முக்கிய உளவுத்துறை

                          நிறுவனம் அறிவித்துள்ளது ,
                          அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா

                          மாற்று வழிகளில் கள்ள சந்தை ஊடக தனது வர்த்தகத்தை திறம்பட செய்து வருகிறது

                          இதுவே அமெரிக்காவுக்கு பெரும் தலை இடியாக மாறியுள்ள வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                              Posted in சினிமா

                              விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு – இயக்குனர் பாரதிராஜா கண்டனம்

                              விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு – இயக்குனர் பாரதிராஜா கண்டனம்

                              நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

                              விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு – இயக்குனர் பாரதிராஜா கண்டனம்
                              விஜய் – சூர்யா


                              பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ்

                              நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது நடவடிக்கையால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

                              அண்மையில் தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் பெரிய அளவில் உள்ளது என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் அனைவருமே நெப்போட்டிசத் தயாரிப்புகள் என்று மீரா மிதுன் கடுமையாக

                              விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக ஊடகங்களில் கடுமையாக

                              விமர்சித்தனர். விஜய் ரசிகர்கள் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர்.

                              மீரா மிதுனும் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று கூறி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

                              இந்நிலையில் நடிகர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் அவதூறு பேச்சு குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

                              பாரதிராஜா

                              இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:-

                              நடிகர் சங்கம் உள்பட எந்த சங்கமும் எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பு அளிக்கிறது. நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது.

                              அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும்

                              பணியை சூர்யா செய்து வருகிறார். மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் நடிகர் விஜய். பல்வேறு

                              அடித்தளங்கள் அமைத்து விஜய்யும் சூர்யாவும் உயரத்துக்கு வந்துள்ளனர்.

                              இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

                              Posted in சினிமா

                              கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர்

                              கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர்

                              பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான வி.சாமிநாதன், கொரோனா தொற்றால் இன்று மதியம் காலமானார்.

                              கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர்
                              தயாரிப்பாளர் சாமிநாதன்


                              லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனதின் மூன்று பங்குதாரர்களில் ஒருவர் வி.சாமிநாதன் (67). இவர் இன்று

                              (திங்கட்கிழமை) மதியம் 2.30 மணிக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் அரசு வழக்கப்படி இறுதி சடங்கு நடைபெறும்.

                              இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை

                              காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து,

                              உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக,

                              உன்னைத்தேடி, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட இருபத்தி

                              ஐந்துக்கும் மேல் பிரமாண்டமன படங்களை தயாரித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

                              இவர் கடந்த பத்து நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு லட்சுமி என்ற

                              மனைவி மற்றும் அசோக், அஸ்வின் (கும்கி) ஆகிய மகன்களும் உள்ளனர். அன்னாரது மறைவுக்கு திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

                                Posted in சினிமா

                                அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்

                                அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்

                                தமிழ் மொழியில் பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் பிரியா ஆனந்த், அவர்கள் காதலர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார்.

                                அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்
                                பிரியா ஆனந்த்


                                பிரியா ஆனந்துக்கும், அதர்வாவுக்கும் காதல்… இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்றும், பிரியா ஆனந்துக்கும்,

                                கவுதம் கார்த்திக்கும் காதல்… இருவரும் திருமணம் வரை நெருங்கி விட்டார்கள் என்றும், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

                                அந்த இரண்டு கதாநாயகர்களில் பிரியா ஆனந்த் மனம் கவர்ந்தவர் யார்? என்று அவரிடமே கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் சொல்கிறார்:-

                                கவுதம் கார்த்திக் – அதர்வா

                                “அதர்வா, கவுதம் கார்த்திக் இருவருமே என் நண்பர்கள். அவர்கள் என் காதலர்கள் அல்ல. இதை நாங்கள் மூன்று பேருமே

                                தனித்தனியாக உறுதி செய்து இருக்கிறோம். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் என்ற முறையில் இருவருமே

                                விரும்புகிறார்கள். அதேபோல் என் நண்பர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல சினேகிதியாக நான் விரும்புகிறேன்’’ என்றார்.

                                Posted in சினிமா

                                முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா.

                                முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா.

                                தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் ஜெனிலியா, தன்னுடைய முதல் பட நாயகனுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்து இருக்கிறார்.

                                முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா
                                ஜெனிலியா


                                சங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாய்ஸ். இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

                                இந்தப் படத்தில் சித்தார்த், பரத், நகுல், தமன், மணிகண்டன் மற்றும் ஜெனிலியா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இதில் சித்தார்த் –

                                ஜெனிலியா ஜோடியின் நடிப்பு அதிகளவில் பேசப்பட்டது. இந்த ஜோடி தமிழில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில்

                                பல படங்களில் நடித்தார்கள். அதில் ஒரு திரைப்படம் தான் ‘பொம்மரிலு’. இந்த படம் தமிழில் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்ற

                                பெயரில் ரீமேக் ஆனது. ஆனால், இதில் ஜெயம் ரவி-ஜெனிலியா நடித்து இருந்தார்கள்.

                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                என்னை கைது செய்

                                என்னை கைது செய்

                                மரம் கொத்தி போலாகி – உன்
                                மனம் கொத்த போறேண்டி
                                மாளிகையை கட்டி விட
                                மனதை நீ தந்திடடி

                                செயல் இழக்க ஏவுகணை
                                செலுத்த நீ வேணாண்டி
                                செவ்வாயில் இறங்கிடுவோம்
                                செவ்விதலே வந்திடடி

                                முத்து மணி பல்வரிசை
                                முன்னே என்னை இழுக்குதடி
                                முழுமதியே உன் உடலில்
                                முழுதா மனம் சொக்குதடி

                                விற்ற மீன் மாத்திரையாய்
                                விவேகம் தந்தவளே
                                கந்தக ஆலையிலே
                                கன ரகம் செய்யாதே

                                இறுதி போர் முற்றுகையாய்
                                இதயத்தை வைக்காயோ ..?
                                இலங்கை இராணுவமாய்
                                இன்று கைது செய்யாயோ ..?

                                வன்னி மைந்தன்
                                ஆக்கம் -04-08-2020

                                வன்னி மைந்தன் கவிதைகள்

                                  Posted in சினிமா

                                  விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை

                                  விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை

                                  பிகில் படத்தில் நடித்த நடிகை ஒருவர் விஜய்க்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை கொடுத்திருக்கிறார்.

                                  விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை
                                  விஜய்


                                  பிகில் படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் நடித்திருந்தவர் நடிகை ஆதிரை சவுந்தரராஜன். இவர் கடந்த ஆண்டு பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் விஜய்க்கு வித்தியாசமான மறக்கமுடியாத கிஃப்ட் ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார்.

                                  சமீபத்தில் ஆதிரை சவுந்தரராஜன் அளித்த பேட்டி ஒன்றில், “பிகில் பட ஷூட்டிங்கின் போது எங்கள் அணியில் இருப்பவர்கள்

                                  அனைவரும் விஜய்க்கு பிறந்தநாள் பரிசளித்தார்கள். நானும் கொடுத்தேன்.

                                  ஆதிரை சவுந்தரராஜன்

                                  நான் வாங்கியிருந்த பிறந்தநாள் பரிசு சற்றே வித்தியாசமானது. ‘பிகில்’ படத்தில் இடம்பெறுவது போன்று மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு அணிகள் இருப்பது போல் கதாபாத்திரங்கள்

                                  பொம்மைகளாக இருந்தன. அதை நம் கைகளில் வைத்து விளையாடமுடியும். இந்த கேமில் எங்கள் அணியின் கோச்

                                  விஜய்யின் கேரக்டரையும் அவரது ஜெர்சி எண் மாறாமல் அப்படியே இணைத்திருந்தேன்.

                                  இந்தப் பரிசைப் பார்த்த விஜய், உண்மையிலேயே பிகில் அணியைப் பார்ப்பதுபோல் உணர்வதாகக் கூறினார். சில நேரங்களில் தான் இதில் விளையாடுவதாகவும் விஜய் சொன்னார்.

                                  எனது பரிசுப் பொருளைப் பார்த்து திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய் மறக்கமுடியாத பரிசுப் பொருள் என்று கூறியது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.