Author: நிருபர் காவலன்
வீட்டிலேயே நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர்
வீட்டிலேயே நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நடிகையை வீட்டிலேயே மிகவும் எளிமையாக இயக்குனர் ஒருவர் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
வீட்டிலேயே நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர்
மனோஜ் பீதா – ஷாலினி வட்னிகட்டி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல திருமணங்கள் எளிமையாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெறும்
திரைப்பிரபலங்களின் திருமணம் கூட மிகவும் எளிமையாகவும் நடைபெற்று வருகிறது.
அப்படி தற்போது தமிழில் ‘வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதாவிற்கும் நடிகை ஷாலினி வட்னிகட்டிக்கும் இன்று வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது.
மனோஜ் பீதா – ஷாலினி வட்னிகட்டி
இத்திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். முறையான பாதுகாப்பு
நடைமுறைகளை கடைபிடித்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

சினிமாவாகும் கேரள விமான விபத்து சம்பவம் flight accdent
சினிமாவாகும் கேரள விமான விபத்து சம்பவம்
கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை மையமாக வைத்து சினிமா உருவாகிறது.
சினிமாவாகும் கேரள விமான விபத்து சம்பவம்
விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படம்
வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம்
கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த
விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.
விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில்
கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
கேலிகட் எக்ஸ்பிரஸ் பட போஸ்டர்
இந்நிலையில், இந்த விபத்தை மையமாக வைத்து மலையாளத்தில் ‘கேலிகட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.
இதனை மாயா என்பவர் இயக்குகிறார். கதை, திரைக்கதையை மஞ்சீத் மரன்சேரி எழுதுகிறார். டேக் ஆப் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சொலைமானி யின் பெயரில் புதிய ஏவுகணை சோதனை செய்த ஈரான் -அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா video
சொலைமானி யின் பெயரில் புதிய ஏவுகணை சோதனை செய்த ஈரான் -அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா video
அமெரிக்காஇஸ்ரேல் கூட்டு உளவுத்துறை சதியால் படு கொலை செய்ய ப்பட்ட ஈரானின் முக்கிய இராணுவ தளபதியும் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராக விளங்கிய சொலைமானியின்
மரணத்தை அடுத்து தற்போது ஈரான் புதிய வகை ஏவுகணை ஒன்றை தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
குறித்த ஏவுகணைக்கு martyr Hajj Qassem Soleimani என்ற பெயரை வைத்துள்ளது ,
இது தமிழீழ,விடுதலை புலிகள் பசீலன் , குமரப்பா என்ற பெயர்களை வைத்து பாரிய அதிர்ச்சி தரும் பீரங்கியை தயாரித்து ,ஏவிய செயலுக்கு ஒப்பானதாக உள்ளது
ஈரான் அறிமுக படுத்தியுள்ள இந்த ஏவுகணையின் தூர வீச்சு 1,400 கிலோ
மீட்டர்கள் என தெரிவிக்க பட்டு அந்த சோதனை காட்சியின் காணொளியும் வெளியிட பட்டுள்ளது
தொடர்ந்து தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி புதிய
பலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளது
முன்னைய ஏவுகணைகளை விட இது மேப்பட்ட திரவ வடிவில் சென்று
தாக்கும் ஏவுகணை வடிவமைப்பை தாங்கி அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்
சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்
பிரபல நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்
சல்மான் கான்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். வாரிசு நடிகர்களால் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படும் சர்ச்சையில் இவரது
பெயரும் அடிபடுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
மானை தெய்வமாக வணங்கும் பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கான் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அந்த இனத்தை சேர்ந்த
பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கிறார். அவர் சல்மான்கானை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
சல்மான் கான்
இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியான ராகுல் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் பரிதாபாத் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது சல்மான்கானை சுட்டுகொல்ல சதி
நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. சல்மான்கானை சுட்டுக் கொல்ல பாந்தராவில் உள்ள அவரது வீட்டை உளவுபார்த்து எப்போது வீட்டுக்கு வெளியே வருகிறார் என்பதை கண்காணித்ததாகவும்.
கொலை திட்டத்தை அரங்கேற்ற பிஷ்னோய் உத்தரவுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி
எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி
எஸ்.பி.பி.க்கு பாடகி ஒருவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரவிய நிலையில், அதுகுறித்த சம்பந்தப்பட்ட பாடகியே விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி
எஸ்.பி.பாலசுப்ரமணியம், மாளவிகா
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை
பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாடகி மாளவிகா மூலமாகத் தான் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று பரவியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவியது. கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் மாளவிகா
எஸ்.பி.பி. கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறி ரசிகர்கள் அவரைத் திட்டி வந்தனர். இதை பார்த்த பாடகி மாளவிகா
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: எஸ்.பி.பி. கலந்து கொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஜூலை மாதம் 30ம் தேதி நடைபெற்றது. ஜூலை 31ம்
தேதி நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பாடகிகளில் நானும் ஒருத்தி. அப்போது எனக்கு கொரோனா இருந்திருந்தால் என்னுடன்
இருந்த மற்ற 3 பாடகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோருக்கும் எளிதில் பரவியிருக்கும்.
மாளவிகா
என் சகோதரியும் அந்த நிகழ்ச்சியில் பாடியதாக கூறுகிறார்கள். உண்மையில், அவர் பாடகி இல்லை. தற்போது அவர்
அமெரிக்காவில் வசித்து வருகிறார். அப்படி இருக்கையில், அவர் எப்படி அந்த நிகழ்ச்சியில் பாடியிருக்க முடியும்?
கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 5 மாதங்களாக என் வீட்டிற்கு பணிப் பெண் கூட வருவதில்லை. கடந்த 5 மாதங்களாக நான் வெளியே செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிக்காகத் தான்
முதல்முறையாக வெளியே சென்றேன். என் காரில் டிரைவருக்கும் எனக்கும் இடையே ஷீல்டு வைக்கும் அளவுக்கு நான் எச்சரிக்கையுடன் இருந்தேன்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி.பி சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நானும் 8ம் தேதி கொரோனா பரிசோதனை
செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று
இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு கொரோனா தொற்று இல்லை.
தயவு செய்து இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்பாதீர்கள். வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து
கவலைக்கிடமாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக
இருக்கிறது. இதேபோல் வசந்தகுமார் எம்.பி.க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர் 5 நாட்கள் சென்னை
ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள
எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டார்
எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ஆனால் கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் நலம்பெற வேண்டி திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
கொலம்பியா போராளிகளுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா
கொலம்பியா போராளிகளுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா
ஈரான் நாட்டு இரண்டாம் நிலை இராணுவ தளபதி சொலைமானி படுகொலை செய்ய பட்ட நிலையில் ஈரான் தற்போது அமெரிக்கா பல் நாட்டு படைகள் ஆக்கிரமித்துள்ள நிலைகளை நோக்கி தனது நகர்வை வேகாமாக செலுத்தி வருகிறது
அவ்விதம் தற்பொழுது கொலம்பியாவில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கு
ஈரான் ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு அரச அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்
ஈரானின் இந்த நேர்மறை திடீர் முடிவுகள் ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதுடன்
தமது கொள்கை நோக்கின் பிரகாரம் மத்திய கிழக்கு முதல் வல்வளைப்பு
செய்துள்ள அமெரிக்கா நேச படைகளை அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும்
முகமாக இவ்விதம் கிளர்ச்சை படைகளை தூண்டி விட்டு
வேடிக்கை பார்ப்பதாக தெரிவிக்க படுகிறது
கொலம்பியா அமெரிக்காவின் நேச நாடுகளில் ஒன்றாக உள்ளதும்,
இங்கே போதைவஸ்து ,மனித படு கொலைகள் அதிகரித்து செல்கின்ற நாடக விளங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
விஜய், சூர்யா பற்றி சர்ச்சை கருத்து – மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு
விஜய், சூர்யா பற்றி சர்ச்சை கருத்து – மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு
நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்து வரும் மீரா மிதுனின் உருவ பொம்மை எரித்து கலாம் இயக்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
விஜய், சூர்யா பற்றி சர்ச்சை கருத்து – மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சமூக வலைத்தளத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் பற்றி பல
விமர்சனங்களை வைத்திருந்தார். இதைக் கண்டித்து நடிகர்கள் சூர்யா, விஜய்யின் ரசிகர்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
இந்த விமர்சனங்களுக்கு எதிராக சூர்யா, விஜய்யின் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்து வீடியோ
வெளியிட்டார். இதனை கண்டித்து கலாம் சேவை மையம் சார்பில் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
மீரா மிதுன்
இந்த புகாரை மீரா மிதுன் கேலி செய்து பதிவு செய்ததாக, மீரா மிதுனின் உருவ பொம்மைகளை எரித்து, புதுச்சேரி கலாம் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுஷாந்தின் தங்கை என்னிடம் தவறாக நடக்க முயன்றார் : காதலி குற்றச்சாட்டு
சுஷாந்தின் தங்கை என்னிடம் தவறாக நடக்க முயன்றார் : காதலி குற்றச்சாட்டு
சுஷாந்தின் தங்கை தன்னிடம் தவறாக நடக்க முயன்றாதாக நடிகை ரியா சக்ரபோர்தி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
சுஷாந்தின் தங்கை என்னிடம் தவறாக நடக்க முயன்றார் : ரியா பரபரப்பு குற்றச்சாட்டு
சுஷாந்த் சிங் ராஜ்புட், பிரியங்கா சிங், ரியா சக்ரபோர்தி
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34) மும்பையில் உள்ள குடியிருப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது தற்கொலை அல்ல, கொலையாக
இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வந்தனர். இதனிடையே நேற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தி சுஷாந்தின் தங்கை பிரியங்கா மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
இதுகுறித்து ரியாவின் வக்கீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரியாவும் சுஷாந்தும் பழக ஆரம்பித்த சில
நாட்களில் அவ்வப்போது ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் சென்று தங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த சமயத்தில்
சுஷாந்தின் தங்கை பிரியங்கா சிங்கும் அவரது கணவரும் சுஷாந்த் வீட்டில் இருந்துள்ளனர்.
ரியா சக்ரபோர்தி
ஒருமுறை பார்ட்டிக்கு சென்றிருந்தபோது சுஷாந்தின் தங்கை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் ஆண், பெண் என வித்தியாசமின்றி வரம்பு மீறி நடந்துகொள்ள ஆரம்பித்தாராம்.
பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததும், சுஷாந்தும் அவரது தங்கையும் மீண்டும் மது அருந்த ஆரம்பிக்க, ரியாவோ சுஷாந்தின் அறைக்கு சென்று தூங்கிவிட்டாராம்.
திடீரென நள்ளிரவில் விழிப்பு வந்து எழுந்து பார்த்தபோது சுஷாந்தின் தங்கை பிரியங்கா தன்னை கட்டிப்பிடித்தபடி தன்னருகில் படுத்திருந்ததையும், தன்னிடம் அத்துமீறி
நடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்த ரியா, மறுநாள் சுஷாந்திடம் இதுபற்றி கூறிவிட்டு கோபத்துடன் தனது வீட்டுக்கு சென்றாராம்.
இதுகுறித்து சுஷாந்த் தனது தங்கையை திட்டியதாகவும், பின்னர் வந்த நாட்களில் சுஷாந்தின் குடும்பத்தினர் ரியாவிடம் பேசுவதை
தவிர்த்தார்களாம். அதனால் தான் சுஷாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் பட்டியலில் ரியாவின் பெயரை வேண்டுமென்றே சேர்க்கவில்லை” என்று ரியாவின் வக்கீல் கூறியுள்ளார் .
வடகொரியா அதிபர் சகோதரிக்கு அதி உயர் பதவி – பீதியாகும் எதிரி நாடுகள்
வடகொரியா அதிபர் சகோதரிக்கு அதி உயர் பதவி – பீதியாகும் எதிரி நாடுகள்
வட கொரியா அதிபரும் உலகை மிரள வைத்து வரும் இளம் வயதுடையவராக விளங்கி வரும் கிங் யோங் உன் தனது உடன் பிறந்த சகோதரிக்கு முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்
கொள்கை மற்றும் ,மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தற்போது சகோதரியிடம் வழங்க பட்டுள்ளது
இவரது கொள்கை முடிவுகளினால் ஏற்பட்ட பாதிப்பு வடகொரியா பின்னிலைக்கு தள்ள செல்ல காரணம் என கூற பட்டு வந்தது
அவ்விதமான ஒருவர் தனது சுமையை குறைக்கும் முகமாகவும் ,துரித
வேலைகளை நகர்த்தி செல்லும் முகமாக சகோதரியிடம் இந்த பதவியினை வழங்கியுள்ளார்
இதனால் பெரும் மன அழுத்தத்தில் சிக்கி தவித்து வந்த அவர் சற்று நின்மதி
மூச்சு விடும் நிலைக்கு தள்ள பட்டுள்ளார் என அந்த நாட்டின் முக்கிய உளவுத்துறை மையம் அறிவித்துள்ளது
இவரது இந்த திடீர் மாற்றம் எதிரி நாடுகளை கலங்க வைத்துள்ளது ,சகோதரி
கிங் யோங் உனை விட மிக மோசமானவர் என்ற கருத்து ஆழமாக வேரோடி படர்வதை அவதானிக்க முடிகிறது
எனினும் இந்த விடயத்தை மாற்றி பேசி வருகிறது அமெரிக்கா உள்ளிட்ட உளவுத்துறை நிறுவனங்கள் ,
மேலும் வடகொரியா அதிபர் உடல் நிலை மோசமாக சென்றுள்ளது என்ற போர்வையில் பரப்புரை செய்து வருகின்றனர்
உடல் எடை அதிகரிப்பால் மூச்சு திணறலுக்கு உள்ளாகி வருகிறார் என்ற சொல்லாடல்களை அந்த நிறுவனங்கள் பாவிக்கின்றன
இது அந்த உளவுத்துறை சொல்வது போன்று உண்மையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

எந்த முக கவசம் அணிவது பாதுகாப்பானது
எந்த முக கவசம் அணிவது பாதுகாப்பானது
இந்தியாவில் ஆரம்பத்தில் முக கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறாதபோதும், இப்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று அணியத்தொடங்கி இருக்கிறார்கள்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிற வரையில், தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக
கவசம், தனிமனித இடைவெளி, கைச்சுத்தம் ஆகிய மூன்றும்தான் பாதுகாப்பு கவசங்களாக பயன்படும் என உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகிறது.
இந்தியாவில் ஆரம்பத்தில் முக கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறாதபோதும், இப்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று அணியத்தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் 14 விதமான முக கவசங்களை அமெரிக்காவில் டர்ஹாம் நகரில் அமைந்துள்ள டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து இருக்கிறார்கள்.
இந்த ஆய்வில் பங்கேற்பாளர் ஒருவருடைய மூச்சில் இருந்து நீர்த்துளிகள் சிதறடிக்கப்படுவதை ஒப்பிட்டு பார்த்தார்கள்.
இதில் சாதாரணமாக சுகாதார ஊழியர்கள் அணிகிற வால்வுகள் இல்லாத என்-95 முக கவசங்கள்தான் மிகவும் பயனுள்ள முக கவசம்
என்று அவர்கள் கண்டறிந்தனர். நெக் பிளஸ் வகை முக கவசம்தான் மிக குறைவான பயன் அளிக்கத்தக்கது. உண்மையில் இந்த வகை
முக கவசம்தான் தொற்று அபாயத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வினை நடத்திய ஆராய்ச்சியாளர் மார்டிட்டின் பிஷ்ஷர் கூறுகையில், “எந்த முக கவசமும் அணியாமல் அளவிடப்பட்ட துகள்களின்அளவை விட நெக் பிளஸ் வகை முக கவசம்
அணிகிறபோது அதில் உள்ள துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தோம். நாங்கள் மக்கள் முக
கவசங்கள் அணிவதை ஊக்குவிக்கிறோம். ஆனால் அவர்கள் வேலை செய்கிற முக கவசங்களை அணிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்கிறார்.
பண்டனாஸ் வகை முக கவசம் மோசமான முக கவசத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பின்னலாடை முக கவசம் மூன்றாவது மோசமான முக கவசம் என கண்டறிந்துள்ளனர்.
அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிகிற சர்ஜிக்கல் முக கவசம், ஆய்வில் நன்றாக வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது நல்ல முக கவசங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பாலிபுரொபைலின் முக கவசம் மூன்றாவது சிறந்த முக கவசம்.
கையால் செய்யப்பட்ட பருத்தி முக கவசமும் நன்றாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சாதாரண உரையாடல்களில் கணிசமான எண்ணிக்கையிலான
நீர்த்துளிகளை அகற்றுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிற முக்கிய தகவல்கள்:-
- மக்கள் பேசுகிறபோது சிறிய அளவில் நீர்த்துளிகள் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இருமல்
- ,
- தும்மல் இன்றி பேசுவதின் மூலமும் தொற்று பரவலாம்.
- கொரோனா தொற்றை விரட்டியடிக்க முக கவசம் அணிவது எளிய வழி.
- பாதி நோய் தொற்று அறிகுறிகளை காட்டாத நபர்களிடம் இருந்து வந்தவை. ஆனால் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தாங்கள்
- பாதிக்கப்பட்டிருப்பது தெரியாது. அவர்கள் இருமும்போது, தும்மும்போது, ஏன் பேசும்போது கூட தொற்று பரவுகிறது.
- எல்லோரும் முக கவசம் அணிந்தால், நீர்த்துளிகள் 99 சதவீதம் வரை வேறொருவரை அடைவதற்கு முன் தடுத்து நிறுத்த முடியும்.
பொடுகு, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பூண்டு
பொடுகு, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பூண்டு
முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. மேலும் பொடுகு, முகப்பரு பிரச்சனைகளுக்கும் பூண்டு தீர்வு தருகிறது.
முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 15
நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து அப்படியே மறைவதைக் காணலாம். பூண்டை இடித்துக்கொள்ளுங்கள். பின் ஆலிவ்
எண்ணெயை கடாயில் ஊற்றி காய்ச்சி அதில் இடித்த பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த
எண்ணெய்யை வடிகட்டி தலையின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை
அலசுங்கள்.இப்படி தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.
பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. அவை,
- பூண்டில் ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.
- பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது
- பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
- முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது, இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.
- தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய்
எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ்
செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.
பூண்டுடன் தேன் சேர்த்து முடி உதிர்வுக்கான சிகிச்சையில் பயன்படுத்தலாம். 8 பல் பூண்டை எடுத்து மசித்து, இரண்டு ஸ்பூன்
அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் உச்சி முதல் நுனி வரை தடவவும்.
பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். 20 நிமிடம் கழித்து, வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு
முறை இந்த தீர்வைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
அதைபண்ண காத்திருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
அதைபண்ண காத்திருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், விக்னேஷ்
சிவனும் பரிகார பூஜைக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பரிகார பூஜைக்காக காத்திருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால் 2019 முடிந்து 2020 தொடங்கி கொரோனா தடையும் 5 மாத காலம்
அமலான நிலையில் அவர்கள் திருமண பேச்சு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.
நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில்
நடித்து வருகிறார். இந்த படங்கள் முடியவதற்குள் அடுத்த 2021ம்
ஆண்டும் முடிந்துவிடும் அப்படியென்றால் திருமணம் எப்போது
என்று மறுபடியும் ஒரு கேள்வியுடன் ஜோதிடரை குடும்பத்தினர்
அணுகிக் கேட்ட போது ஒருமுறை நயன்தாரா, விக்னேஷ் சிவன்
ஜோடியாக திருநாகேஸ்வரம் சென்று பரிகார பூஜை செய்து வந்தால் திருமணம் நிச்சயம் என்று கூறி உள்ளனர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
கொரோனா ஊரடங்கில் கோயில் தரிசனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்தபின் அவர்கள்
தரிசனம் செய்யக் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்களாம். அதன்பிறகு திருமண அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.
பணத்தை விட அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்
பணத்தை விட அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்
தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா, பணத்தை விட அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என கூறியுள்ளார்.
பணத்தை விட அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் – ராஷி கண்ணா
ராஷி கண்ணா
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம்
வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய
வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல்
தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு: “நான்பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். கதை பிடிக்காமல் போனால் அந்த படத்துக்கு
பத்துகோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொன்னால்கூட நிச்சயமாக நடிக்க மாட்டேன். அதே நேரம் கதை பிடித்து இருந்தால்
தயாரிப்பாளர் எவ்வளவு குறைவாக சம்பளம் தருவதாக சொன்னாலும் ஒப்புக்கொண்டு நடித்து விடுவேன்.
ராஷி கண்ணா
நடிகைக்கு ஆத்ம திருப்திதான் முக்கியம். பணம் முக்கியம் இல்லை. நான் பணத்துக்கு இரண்டாவது இடம்தான் கொடுப்பேன். கதை
தேர்வில் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும் உங்களுக்கு ஏன் தோல்விகள் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம். சில கதைகள் கேட்கும்போது மிகவும் நன்றாக இருக்கும்.
இது பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் நடிப்போம். ஆனால் அது திரையில் வரும்போது வேறுமாதிரி மாறிப்போய்
விடுகிறது. வெற்றி தோல்வி என்பது நமது கையில் இல்லை. ஆனாலும் கதை தேர்வு செய்வதை மட்டும் நம் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு ராஷி கண்ணா கூறினார்.
உடலுறவு கொள்ளும்போது மாரடைப்பு ஏற்படும் – எச்சரிக்கை
உடலுறவு கொள்ளும்போது மாரடைப்பு ஏற்படும் – எச்சரிக்கை
உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.
துல்லியமாக 4,557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்கு பிந்தைய ஒரு மணி நேரத்திலும்
ஏற்பட்டு இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள்.
மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் உள்ளது. உடலுறவு மாரடைப்பிற்கு முக்கிய காரணி என்று சொல்லும் முதல் ஆய்வு
இதுதான் என்கிறார் சிடார்ஸ் சினாய் இதய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சுமீத் சக்.
இந்த ஆய்வறிக்கை, அமெரிக்க இதய கழகம் ஒருங்கிணைத்த சந்திப்பில் சமர்பிக்கப்பட்டது.
இதயம் முறையாக செயல்படாதபோது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயம் துடிப்பது உடனே நிற்கிறது. இதனால் சுயநினைவை
இழக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் சுவாச இயக்கமும் நிற்கிறது. ‘கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சை’ அளிக்காதபோது, அவர்கள் இறக்கவும் நேரிடுகிறது.
இதய இயக்க கோளாறிலிருந்து (Heart attack) இது முற்றிலுமாக வேறுபடுகிறது. ஹார்ட் அட்டாக், இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நிற்பதால் ஏற்படுகிறது.
உடலுறவால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது முன்பே அறிந்த ஒன்று. ஆனால், மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்பு முன்பு அறியாத ஒன்று.
மருத்துவர் சுமீத் மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள அவருடைய சகாக்களும், 2002 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில்
மாரடைப்புக்கு உள்ளான போர்ட்லாண்ட் மற்றும் ஒரிகன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், உடலுறவினால் ஏற்படும் மாரடைப்புகள் 1 சதவீதத்துக்கும் குறைவானதாக இருந்து இருக்கிறது. அப்படி மாரடைப்புக்கு
உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். அதுவும் குறிப்பாக நடுத்தர வயதுகாரர்கள், ஆஃப்ரிக்கன்- அமெரிக்கன்கள் மற்றும் முன்பே இதய நோய் உள்ளவர்கள்.
சுமீத்,”இந்த கண்டுப்பிடிப்புகள்,கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு உணர்த்த பயன்படும்.” என்கிறார்.
ஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில்
ஈடுப்படகூடாது என்று பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை வலியுறுத்துகிறது.
ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம்
ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம்
ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், ரத்தம் உறையாமை நோய். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு
அதுதான் ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடும்.
ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம் என்ன?
ரத்தம் உறையாமை நோய்
கையில் சிறிய காயம் ஏற்படுகிறது. உடனே ரத்தம் வழிகிறது. சில நிமிடங்களில் ரத்தம் வெளியேறுவது தானாகவே நின்றுவிடுகிறது, அல்லவா?
அப்படி ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், அதுதான் ரத்தம் உறையாமை நோய்.
ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடும்.
இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய். உலகில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுவதாகப் புள்ளி
விவரங்களும் கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய்
ஏற்படலாம். எனவே, இதைப் பரம்பரை நோய் என்றும் கூறுகிறார்கள்.
ரத்த உறவில் திருமணம் செய்வதன் மூலம், இந்நோய் அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தாயின் கருவில் உருவாகும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடே
இந்நோய் ஏற்படக் காரணம். இந்த நோய் உள்ளவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உடலில் எங்கும்
காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம் காரணமாக ஏற்படும் ரத்தக்கசிவு சிக்கலை உண்டாக்கிவிடும். சிலருக்கு எந்தக்
காரணமும் இல்லாமல்கூட ரத்தக் கசிவு ஏற்படலாம் என்கிறார்கள், நிபுணர்கள்.
இந்த நோயை எப்படிக் கண்டுபிடிப்பது?
பிறந்த குழந்தைக்குத் தொப்புள்கொடி விழுந்த பிறகு ரத்தம் நிற்காமல் வெளியேறுவது, பல் விழுந்த பிறகு அல்லது பல் எடுத்த பிறகு தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படுவது, உடலில் எங்கேயாவது
காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு நிற்காமல் இருப்பது, உடலில் நீல நிறத் தழும்புகள் தோன்றி மறைவது, கால் மூட்டுகள் மீண்டும் மீண்டும் வீங்கி வலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ரத்தம்
உறையாமை நோய் இருக்கலாம். இந்நோயை குணப்படுத்துவது மிகவும் கடினம். ரத்தம், பிளாஸ்மா செலுத்துவது மற்றும் உறை
நிலை மருந்துகளைச் செலுத்துவது என முறையான சிகிச்சையின் மூலம் மட்டுமே இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்பது, மருத்துவர்களின் அறிவுரை.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?
பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?
முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம். காபி குடிக்கும் பழக்கமும்
முகப்பருவிற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
முகப்பரு அற்ற தெளிவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது. இன்றைய சுற்றுச்சூழல், வெப்பம் எனப் பல
காரணிகளுடன் போராடி சருமத்தை காப்பாற்ற பல முயற்சிகளும் நாம் எடுக்கிறோம். முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம்.
பால் பொருட்கள், காரசார உணவுகள், ப்ரெட், பொரித்த உணவுகள் போன்ற பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் முகப்பருவுக்கு காரணம். காஃபி கூட உங்கள் முகப்பருவுக்குக் காரணம் எனச்
சொன்னால் ஆச்சர்யமாவீர்கள் தானே? ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். “அதிகமாக காஃபி உட்கொள்ளும் பழக்கம்
உள்ளவர்களுக்கு முகப்பரு வரும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஹார்மோனின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருவின்
அடிப்படைக் காரணி. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை ஆகியவற்றை உணவில் தவிர்த்தல் வேண்டும். சுத்தமான
பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை
தூண்டிவிடுகிறது. அதுவே தேவையற்ற கலோரிகளை உடலில் சேரவும் வழிவகுத்து முகப்பருவுக்கு காரணமாகிவிடுகிறது.
தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
தோலின் ஆரோக்கியத்திற்கு நிறைய தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம் என நாம் அனைவரும் அறிவோம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனாலும் சரும பிரச்சனைகள்
ஏற்படும். “காஃபி விரைவில் கழிவாகி சிறுநீர் வழியாக வெளியேறும். அதிக காஃபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும் போது
இயல்பாகவே நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். இப்படி உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்.
எனவே, காஃபி தானே என்று அலட்சியம் அதிலும் அளவோடு இருந்தால் தேவையற்ற முகப்பருக்கள் தானாகவே தடுக்கப்படும்.
சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு
சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு
உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் ஆயுத ,அரசியல் ,பொருளாதாரம் தற்போது பல நாடுகளை மிரள வைத்து வருகிறது
தொடர்ச்சியாக தாமே 2050 இல் வல்லரசாக திகழ்வோம் என கங்கணம் கட்டும் சீனா முக்கியமான நாடுகளின்
உளவுத்துறைக்குள் புகுந்து முக்கிய நபர்களை விலைக்கு வாங்கி அந்த நாடுகளின் உளவு தகவல்களை திருடி வருகிறது
இவ்விதம் அமெரிக்காவின் வெளியாக மற்றும் உள்ளக உளவுத்துறை நபர்களுக்கு பல லட்சம் டொலர்களை வழங்கி
அமெரிக்கா இராணுவ விடயங்களை கடத்தி கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது
அமெரிக்காவினால் தயாரிக்க பட்ட முக்கிய ஆயுத உற்பத்தி இரகசிய
ஆவணங்கள் சீனாவின் கைகளுக்கு மாறியது எப்படி என்ற தேடுதலில் அமெரிக்கா உளவுத்துறை தீவிரமாக செயல் பட்டது
இதன் பொழுது மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
கைதானவர்கள் தாம் சீனாவிடம் பணத்தை பெற்று கொண்டதாக ஒப்பு கொண்டுளள்னர் .மேலும் இவர்கள் என்னவெல்லலாம்
வழங்கினார்கள் என்ற விபரத்தை கேட்டு அமெரிக்கா இராணுவ மையம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது
எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்
எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், தனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்ததாகவும் அதை மறுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்
தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம்
வாங்கும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி திறமையாக செயல்பட்டு வருவதாக சமூக வலைத்தளத்தில் பாராட்டி கருத்து பதிவிட்டு
இருந்தார். இதற்கு விமர்சனங்கள் கிளம்பின. பா.ஜனதா கட்சியில் சேர அவர் முடிவு செய்து விட்டதாகவும் பேசினர்.
கங்கனா ரணாவத்
இதற்கு பதில் அளித்துள்ள கங்கனா ரணாவத், ‘எனக்கு பா.ஜனதா கட்சி எம்.பி தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க முன்வந்தது. நான்
ஏற்கவில்லை. எனது தாத்தா காங்கிரஸ் கட்சியில் 15 வருடங்கள் எம்.எல்.ஏவாக இருந்து இருக்கிறார். பா.ஜனதா கட்சியில்
சேரப்போகிறேன் என்று பலரும் கூறுகின்றனர். எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை. நடிப்பின்
மீதுதான் ஆர்வம். ஆனாலும் எனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவேன். அதை நிறுத்த மாட்டேன்” என்று கூறியுள்ளார்
காஜலுக்கு திருமணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்
காஜலுக்கு திருமணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்…. விரைவில் தொழிலதிபரை மணக்கும் காஜல்?
காஜல் அகர்வால்
2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி
கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ்
பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக
உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் அவரைப்பற்றி அவ்வப்போது திருமண வதந்திகள் வந்துள்ளன.
இதற்கு அவர் பல முறை மறுப்பு தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அவருக்கு திருமண நிச்சயதார்த்தம்
நடந்து முடிந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி வெளியான செய்திகள் உண்மை இல்லை என்று கூறிய காஜல் அகர்வால்,
விரைவில் திருமணம் நடக்கும் என்றும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
காஜல் அகர்வால்
இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் அந்த விழாவில் தெலுங்கு தயாரிப்பாளரான
பெல்லங்கொண்டா ஶ்ரீனிவாஸ் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மணமகனின் பெயர் கவுதம் என்றும் அவர்
தொழிலதிபர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







