Posted in சினிமா

வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்
விக்னேஷ் சிவன், நயன்தாரா


2021 புத்தாண்டு தினத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில்

புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ்

திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா

நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் அதில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இனிய புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள். இப்போது நாம் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத கட்டத்தை கடந்து விட்டோம். தற்போது 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா

இந்தாண்டு சிறந்த தருணங்களுடனும், மகிழ்ச்சியாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும், அமைதியாகவும், திருப்தியாகவும் அமைய அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று அவர்

குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
Posted in சினிமா

விஜய் பட நடிகர் திடீர் மரணம்

விஜய் பட நடிகர் திடீர் மரணம்

ரஜினியுடன் பாட்ஷா படத்திலும் விஜயுடன் குருவி படத்திலும் நடித்த நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

ரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்
நர்சிங் யாதவ்


பிரபல தெலுங்கு நடிகர், நர்சிங் யாதவ். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் அனைத்து படங்களிலும் பார்க்கலாம்.

தமிழில், ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா, ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை, சுசீந்திரன்

இயக்கத்தில் விக்ரம் நடித்த ராஜபாட்டை, சக்தி, ரம்யா நம்பீசன் நடித்த ஆட்டநாயகன், பிரபு சாலமன் இயக்கத்தில் சார்மி நடித்த

லாடம், விஜய், த்ரிஷா நடித்த குருவி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

நர்சிங் யாதவ்,

கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நர்சிங் யாதவ், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி

உயிரிழந்தார். நர்சிங்கின் மரணத்திற்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Posted in சினிமா

நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்

நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்

முதல்வரிடம் நடிகர் விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்
விஜய்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலை மாற்றி 100 சதவீத

இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வரை சந்தித்தபோது வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதில், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில்,

பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். ஆனால்,

திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் எண்ணிக்கை 50 சதவீதம் என்ற நிலையே நீடிக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி, விஜய்

ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவின்போது, தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றும்,

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படமாக வெளியிடலாம் என்றும் திரைத்துறையினர் எண்ணியிருந்தனர்

. இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் வந்தது எப்படி

காதல் வந்தது எப்படி

நான் நடந்த வீதியில
நீ வந்த வேளையில
நான் தொலைந்து போனேனே
நாயகியை நினைந்தேனே

நீ பேசும் போதெல்லாம்
நித்தம் நான் இரசிக்கிறேன்
நிகழ் காலம் உன் மடியில்
நீண்டுறங்க துடிக்கிறேன்

நாளை என்ற நாளதனை
நான் எண்ண மறுக்கிறேன்
நாடி வந்து உன்னடியில்
நான் கூட துடிக்கிறேன்

சிரிப்பாலே கதை பேசி
சிறை வைத்து போபவளே
என்ன உந்தன் மந்திரமோ
என்னை சுற்ற வைத்த தந்திரமோ …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 01-02-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் வந்தது எப்படி
காதல் வந்தது எப்படி
    Posted in சினிமா

    எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

    எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

    சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.

    விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்

    ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்

    லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

    இந்த சந்திப்பின்போது, தியேட்டர்களில் பார்வையாளர்கள் அனுமதியை

    50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    Posted in சினிமா

    சண்டைக்காட்சியில் காயமடைந்த ஆர்யா

    சண்டைக்காட்சியில் காயமடைந்த ஆர்யா

    ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நடிகர் ஆர்யா காயமடைந்துள்ளார்.

    சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்து காயமடைந்த ஆர்யா
    ஆர்யா
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா,

    விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’

    படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர்

    இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆர்யா

    அண்மையில் ஆர்யா நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது டூப் போடாமல் நடித்த ஆர்யா, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில்

    அனுமதிக்கப்பட்ட ஆர்யா, சிகிச்சை முடிந்த கையோடு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து எஞ்சியுள்ள சண்டைக் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளார். தன்னால் படப்பிடிப்பு தடைபட்டுவிடக் கூடாது

    என்ற காரணத்துக்காக நடிகர் ஆர்யா, வலியையும் பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்தது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    சவுதி இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்

    சவுதி இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள் – வீடியோ

    சவூதி நாட்டின் உயர் ரக உளவு விமானம் ஒன்றினை கவுதி கிளர்ச்சி படைகள்

    சுட்டு வீழ்த்தியுள்ளனர் ,தமது கட்டு பாட்டு பகுதியின் மேலாக பறந்து

    உளவு பார்த்தலில் ஈடுபட்ட போது சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் மேலும்

    இவ்வாறான அத்துமீறல்களை சவூதி தொடுத்தால் இவ்வாறு தொடராக

    அவர்கள் விமானங்கள் சுட்டு வீழ்த்த படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

    எனினும் சவூதி மேற்படி அமைப்பு மீது தொடர் வான்வழி

    தாக்குதல்களை எம்தற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    இராணுவ விமானத்தை
    இராணுவ விமானத்தை
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    ஹிஸ்புல்லா போராளிகளிடம் ஒருலட்சம் ஏவுகணைகள் -தகருமா இஸ்ரேல் ..?

    ஹிஸ்புல்லா போராளிகளிடம் ஒருலட்சம் ஏவுகணைகள் -தகருமா இஸ்ரேல் ..?

    ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பிடம் கடந்த வருடம்

    இரண்டு மடங்கு ஏவுகணைகள் கிடைக்க பெற்றுள்ளதாக முக்கிய உளவுத்துறை மையம் அறிவித்துள்ளது

    இஸ்ரேல் மீதான தாக்குதலை மையபடுத்தியே மேற்படி ஏவுகணைகள்

    குவிக்க பட்டுள்ளன ,ஈரானில் இஸ்ரேலினால் படுகொலை செய்ய

    பட்ட சோலைமானியே இந்த ஒழுங்கு படுத்தல்களை புரிந்ததாக சுட்டி காட்ட பட்டுள்ளது

    தம் நாட்டின் மீது பெரும் தாக்குதல்களை தொடுத்து பெரும் அழிவை

    ஏற்படுத்த ஈரான் முயன்று வருவதான குற்ற சாட்டை இஸ்ரேல் முன் வைத்து

    வரும் நிலையில் ,ஈரானின் முக்கிய மூளைகளை ஓசை படாமல் இஸ்ரேல் கொன்று வருகிறது

    இவ்வாறு தொடரும் இந்த பனிப்போரின் உச்சம் நாடுகளுக்கு

    இடையில் பெரும் மோதலாக வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது

    ஏவுகணை
    ஏவுகணை
    Posted in சினிமா

    பண்ணைவீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்

    பண்ணைவீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்

    இந்தி நடிகர் சல்மான் கான் தனது 55-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

    பண்ணைவீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சல்மான் கான்


    இந்தி சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான்கான். இவர் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

    இவர் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்தார். இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    இந்நிலையில், நடிகர் சல்மான் கான் இன்று (டிசம்பர் 27) தனது 55-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார். தனது பிறந்தநாளையொட்டி

    நேற்று இரவே மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணைவீட்டிற்கு சல்மான் கான் சென்றார்.

    அங்கு தனது நண்பர்கள் மற்றும் பாலிவுட் துறையினருடன் இணைந்து சல்மான் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    55-வது பிறந்தநாளை கொண்டாடிவரும் சல்மான் கானுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    சல்மான் கான்
    சல்மான் கான்
    Posted in சினிமா

    வைரலாகும் நடிகையின் நீச்சலுடை புகைப்படம்

    வைரலாகும் நடிகையின் நீச்சலுடை புகைப்படம்

    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வாலின் நீச்சல் உடை புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    வைரலாகும் சாக்‌ஷி அகர்வாலின் நீச்சலுடை புகைப்படம்
    சாக்ஷி அகர்வால்
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம்

    உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

    தற்போது சாக்‌ஷி சின்ட்ரெல்லா, டெடி, புரவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    நடிகை சாக்‌ஷி அகர்வால் எப்போதும் சமூகவலைதளத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருவார். உடற்பயிற்சி, ரசிகர்களுக்கு அறிவுரை என வீடியோ, கவர்ச்சி புகைப்படங்களை

    பதிவு செய்து வரும் சாக்‌ஷி தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    சாக்ஷி அகர்வால்

    விடுமுறைக்காக கோவா சென்று இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் அங்கு இருக்கும் கடற்கரையில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார்.

    தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.

    நீச்சலுடை புகைப்படம்
    நீச்சலுடை புகைப்படம்
    Posted in மருத்துவம்

    பசியை போக்க இதை சாப்பிடுங்க

    பசியை போக்க இதை சாப்பிடுங்க

    தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம்.

    இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


    தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம்.

    இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர் சாத்விக உணவாக

    கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, கார உணவை சாப்பிட்டோ அசிடிட்டி பிரச்சினையை

    எதிர்கொள்பவர்கள் ஒரு டம்ளர் மோர் பருகலாம். வயிற்றுக்கு நன்மை பயக்கும். கூந்தல் மற்றும் சருமத்திற்கும் ஆரோக்கியம்

    சேர்க்கும். மோரின் ஐந்து ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

    எடை இழப்பு: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், நொதிகளும் நிறைந்திருக்கின்றன. கலோரிகள் மிகவும் குறைவு. கொழுப்பு

    பசியை போக்க இதை சாப்பிடுங்க

    அறவே இல்லை. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். மோரில் கால்சியம்,

    பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் உள்ளிட்ட பல தாதுக்களும் உள்ளன. பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.

    நீரிழப்பு: உடலில் இருந்து அதிகப்படியான திரவம் வெளியேறும் போது, உடல் ஒட்டுமொத்த ஆற்றலையும் இழக்கக்கூடும். சிலருக்கு மயக்கமும் உண்டாகும். நீரிழப்புதான் அதற்கு காரணமாகும்.

    வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை நீரிழப்புக்கான பொதுவான அறிகுறிகள். கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க உப்பு, சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து மோர்

    தயாரித்து பருகலாம். இவற்றில் இருக்கும் அதிகப் படியான எலக்ட்ரோலைட்டுகள் நீரிழப்பை ஈடு செய்ய உதவும்.

    வலுவான எலும்புகள்: தினமும் உடலுக்கு 1000 மி.கி கால்சியம் தேவை. ஒரு கப் மோர் சுமார் 284 மில்லி கிராம் கால்சியத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் அன்றாட கால்சியம் தேவைகளில் 28

    சதவீதத்தை பூர்த்தி செய்துவிடலாம். வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறையும். கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

    ரத்த அழுத்தம்: மருத்துவ வழிகாட்டுதல் களின்படி, 130/80 என்ற அளவீட்டில் ரத்த அழுத்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோரில் பயோ ஆக்டிவ் புரதம் ஏராளமாக காணப்படுவதாக ஒரு ஆய்வில்

    கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தினமும் மோர் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இதயம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படாது.

    மலச்சிக்கல்: வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குவதற்கு பண்டைய காலங்களில் இருந்து மோர் பயன்படுத்தப்படுகிறது. குடல் பிரச்சினைகளை சரிசெய்து

    மலச்சிக்கலை நீக்கிவிடும். மேலும் செரிமான அமைப்பை சரிசெய்யவும் மோர் உதவும்

      Posted in சினிமா

      புதிய தொழில் தொடங்கிய காஜல்

      புதிய தொழில் தொடங்கிய காஜல்

      தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

      புதிய தொழில் தொடங்கிய காஜல் அகர்வால்
      காஜல் அகர்வால்
      தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். காஜல் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ’ஆச்சார்யா’ படத்திலும் தமிழில் ’இந்தியன் 2’

      மற்றும் பேய் படம் ஒன்றிலும் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த

      சில வாரங்களுக்கு முன் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடிய காஜல், தற்போது மீண்டும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

      இந்த நிலையில் காஜல் அகர்வால் தன் கணவருடன் இணைந்து வீட்டு உள் அலங்கார பொருட்கள் விற்பனை மற்றும் இண்டீரியர் டெக்கரேட் பிசினஸ் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் மூலம்

      வீட்டை அலங்கரித்து தருவதுடன். வீட்டுக்கு தேவையான மெத்தை, தலையணை உள்ளிட்ட அலங்கார பொருட்களை ஆன்லைனிலும்

      விற்பனை செய்கிறார்கள். அதோடு, இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பர படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார் காஜல்.

      காஜல் அகர்வால்

      பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகியிருக்கிறார்கள். உதாரணமாக அசின், ஜெனிலியா போன்றவர்களைச் சொல்லலாம். தற்போது காஜல் புது தொழில்

      தொடங்கியிருப்பதைப் பார்த்து, ரசிகர்கள் இவரும் நடிப்பை விட்டு விலகப்போகிறாரா என சந்தேகித்து வருகின்றனர்.

      Posted in சினிமா

      ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்

      .ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்

      நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

      நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்
      ரஜினிகாந்த் – கமல்ஹாசன்

      சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில

      தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

      இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

      இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

      அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

      நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும் இன்று இரவு மருத்துவமனையில்

      இருப்பார் எனவும் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

      இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலமடைந்து விரைவில் குணமடைய ரசிகர்கள், சினிமா துறையினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

      இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் குணமடைய வாழ்த்து

      தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்த்ல் வெளியிட்டுள்ள பதிவில்,

      ’நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth (ரஜினிகாந்த்)’

      என பதிவிட்டுள்ளார்.

      Posted in சினிமா

      பிரபல நடிகர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

      பிரபல நடிகர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

      பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

      பிரபல நடிகர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – திரையுலகினர் அதிர்ச்சி
      அனில் நெடுமங்காடு
      மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர். நாடக நடிகரான இவர், சுமார் 20

      வருடங்களுக்கு முன் ஒரு பிரபல மலையாள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.

      இதன் பின்னர் மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கடந்த சில வருடங்களாக இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறியுள்ளன. பிரித்விராஜ், பிஜு மேனன்

      ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தில் இவர் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் பரபரப்பாக பேசப்பட்டது.

      இந்நிலையில் ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும் பீஸ் என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த

      படத்திற்கான படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தொடுபுழா என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டார்.

      அனில்

      மாலையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ள மலங்கரா அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அனில்

      தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றனர். ஆனால் ஆழமான பகுதி என்பதால் அவரை காப்பாற்றுவதில் முதலில் சிரமம் ஏற்பட்டது.

      ஆனாலும் சிறிது நேரத்திற்குப் பின் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நடிகர் அனில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது

      உடல் பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

      Posted in சினிமா

      2020-ல் திரையுலகை உலுக்கிய மரணங்கள்

      2020-ல் திரையுலகை உலுக்கிய மரணங்கள்

      கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்தாண்டு மரணமடைந்தனர். அவற்றின் தொகுப்பை காணலாம்.

      சேது முதல் சித்ரா வரை… 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் – முழு தொகுப்பு
      2020-ல் மரணமடைந்த சினிமா பிரபலங்கள்


      2020, சினிமா மற்றும் சின்னத்திரைக்கு மிக மோசமான ஒரு வருடம் தான். இந்தாண்டு திரையுலகில் எதிர்பாராத மரணங்கள், அதிர்ச்சி தரும் தற்கொலைகள் என ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதன் தொகுப்பை காணலாம்.

      திரையுலகை உலுக்கிய மரணங்கள்
      திரையுலகை உலுக்கிய மரணங்கள்

      விசு

      விசு

      எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு. சினிமாவில் குடும்ப சென்டிமென்டை வைத்து ஏராளமான படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கும் இவர்

      சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அவரது அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சிறு நீரகக் கோளாறு காரணமாக

      அவதிப்பட்டு வந்த விசு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22 மார்ச் 2020 அன்று மரணம் அடைந்தார்.

      சேது

      சேதுராமன்

      நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான டாக்டர் சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வாலிப

      ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் சேதுராமன் ஒரு தோல் சிகிச்சை நிபுணரும் கூட. இவர் தனியாக கிளினிக் நடத்தி வந்தார். ஏராளமான சினிமா

      பிரபலங்கள் அவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி இரவு திடீரென

      ஏற்பட்ட மாரடைப்பால் சேதுராமன் மரணமடைந்தார். 34 வயதில் அவர் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

      ஜீன் டெய்ச்

      ஜீன் டெய்ச்

      துறுதுறுவென சேட்டைகள் செய்யும் குட்டி எலியும், அதை துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகள் நிறைந்த தொடர் தான் டாம் அண்ட் ஜெர்ரி. வயது வரம்பின்று அனைவரும் பார்த்து ரசிக்கும் இந்த கார்ட்டூன் தொடரை இயக்கியவர் ஜீன் டெய்ச். ஆரம்ப காலத்தில் ராணுவத்திலும், விமானியாகவும் பணியாற்றிய இவர் பின்னர் கார்ட்டூன் இயக்கி வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி காலமானார். அவருக்கு வயது 95.

      இர்பான் கான்

      இர்பான் கான்

      30 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வந்தவர் இர்பான் கான். ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ள அவர், ஹாலிவுட்டிலும் தி அமேசிங் ஸ்பைடர் மேன், லைஃப் ஆப் பை, ஜுராசிக் வேர்ல்டு போன்ற படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இர்பான் கான் (வயது 53) கடந்த ஏப்ரல் 29-ந் தேதி காலமானார். கடந்த சில ஆண்டுகளாக லண்டன் சென்று புற்றுநோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

      ரிஷி கபூர்

      ரிஷி கபூர்

      40 ஆண்டுகளாக பாலிவுட் படங்களில் நடித்து வந்த ரிஷி கபூர், கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு அமிதாப் பச்சனுடன் 102 நாட் அவுட் என்கிற படத்தில் நடித்தார். இதையடுத்து ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அமெரிக்கா சென்று ஓராண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

      சிரஞ்சீவி சர்ஜா

      சிரஞ்சீவி சர்ஜா

      தென்னிந்திய சினிமாவை உலுக்கிய மரணங்களில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணமும் ஒன்று. நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சர்ஜா கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்தார். 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். சிரஞ்சீவி சர்ஜா (வயது 39)கடந்த 2018-ம் ஆண்டுதான் பிரபல நடிகையான மேக்னா ராஜை காதலித்து கரம்பிடித்தார். சிரஞ்சீவி சர்ஜா உயிரிழக்கும் போது அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

      சுஷாந்த் சிங்

      சுஷாந்த் சிங்

      பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் என்றால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம். இவரது மரணம் கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்திருந்தார். 34 வயதே ஆன சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தற்கொலையா? கொலையா? என சந்தேகம் எழுந்த நிலையில், அவரது மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாக அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

      இயக்குனர் சாச்சி

      இயக்குனர் சாச்சி

      கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் சாச்சி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிருத்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடித்த அனார்களி படத்தின் மூலம் இயக்னராக அறிமுகமானார். இவரது இரண்டாவது படமான அய்யப்பனும் கோஷியும் இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரிக்குவித்தது. 48 வயதே ஆன இயக்குனர் சாச்சி கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

      சாட்விக் போஸ்மேன்

      சாட்விக் போஸ்மேன்

      உலக மக்களை பெரிதும் கவர்ந்த படம் அவெஞ்சர்ஸ். இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் உலக மக்களிடையே மிகவும் பிரபலம். அந்த வகையில் இப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சாட்விக் போஸ்மேன். 43 வயதான இவர் கடந்த 4 வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு பேரிழப்பு என்றே சொல்லலாம்.

      வடிவேல் பாலாஜி

      வடிவேல் பாலாஜி

      சின்னதிரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. இவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு போல் காமெடி செய்வதால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார். பிரபல காமெடி நிகழ்ச்சிகளான ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 42.

      புளோரண்ட் பெரேரா

      புளோரண்ட் பெரேரா

      நடிகர் விஜய்யின் புதிய கீதை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவனர் புளோரண்ட் பெரேரா. இதையடுத்து இவர் கயல், எங்கிட்ட மோதாதே, வேலையில்லா பட்டதாரி 2, ராஜா மந்திரி, தொடரி போன்ற படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி இவர் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி உயிரிழந்தார்.

      எஸ்.பி.பாலசுப்ரமணியம்

      எஸ்.பி.பாலசுப்ரமணியம்

      பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் மரணம், இசை உலகுக்கே பேரிழப்பு என்றே சொல்லலாம். பாடும் நிலா என்றழைக்கப்படும் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பின்னணி பாட்கராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கினார். பாடகர் எஸ்.பி.பி. கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி லேசான கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனாவில் இருந்த மீண்ட அவர் உடல்நலக்குறைவு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

      ஷான் கானெரி

      ஷான் கானெரி (முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்)

      ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. இதில் முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷான் கானெரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த அக்டோபர் 31-ந் தேதி காலமானார்.

      தவசி

      தவசி

      ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு நடிகராக அறிமுகமானார் தவசி. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்த இவர், அப் படத்தில் இடம்பெற்ற ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற டயலாக்கின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்திலும் இவர் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தவசி கடந்த நவம்பர் 23-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

      சித்ரா

      சித்ரா

      பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் தனது காதலரான ஹேம்நாத்தை பதிவு திருமணம் செய்து கொண்டார். வரும் பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரான ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

      ஷாநவாஸ்

      ஷாநவாஸ்

      மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ் (வயது 37). இவரது சொந்த ஊர் நரணிபுலா. கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற மலையாள படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடாவிட்டாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து பிரபல நடிகர் ஜெயசூர்யாவை கதாநாயகனாக வைத்து “சூபியும் சுஜாதாவும்” படத்தை இயக்கினார். இந்தாண்டு ஓடிடி-யில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தனது அடுத்த படத்திற்காக கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஷாநவாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் மூளைச்சாவு அடைந்ததால் டிசம்பர் 23-ந் தேதி உயிரிழந்தார்

      Posted in சினிமா

      ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

      ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

      அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

      ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
      ரஜினி
      ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து

      செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.

      இருப்பினும் நடிகர் ரஜினிகாந்துக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும்

      தனிமைப்படுத்திக்கொண்டனர். மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

      இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

      Posted in சினிமா

      வைரலாகும் அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் வேடம்

      வைரலாகும் அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் வேடம்

      எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

      மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி

      வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில்

      ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.

      எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில்

      பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராக 1 மணிநேரம் நடித்தது வெறும் கெளரவம் மட்டும் அல்ல பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர்

      ஏ.எல். விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தலைவரின் நினைவாக இந்த புகைப்படங்களை இன்று வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

      அரவிந்த் சாமியின் டுவிட்டர் பதிவு

      இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமி அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக கமெண்ட் செய்து

      வருகின்றனர். தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      சிவப்பு கடல் பகுதியில் குவிக்க பட்ட இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பல் – தகருமா ஈரான் ..?

      சிவப்பு கடல் பகுதியில் குவிக்க பட்ட இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பல் – தகருமா ஈரான் ..?

      ஈரானின் கடல் ஆதிக்கத்தையும் அதன் ஆயுத தயாரிப்புக்களை கட்டு படுத்தும் நோக்கில் தாக்குதல்களை மேற்கொள்ளும் முகமாக

      இஸ்ரேலின் நீர் மூழ்கி கப்பல் அணிகள் சிவப்பு கடல் பகுதியில் நகர்த்த பட்டுள்ளன ,மேற்படி நீர் மூழ்கி கப்பலுக்கு துணையாக

      காப்பு வழங்கும் துணை போர் கப்பல்களும் அனுப்பி வைக்க பட்டுள்ளன

      இவை எவ் வேளையும் ஈரான் கடல் அருகே செல்ல கூடும் எனவும் ,திடீர் தாக்குதல்களை நடத்தலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது

      அணு ஆயுத சோதனையில் விரைவில் ஈரான் வரலாற்று தடம் பதிக்க உள்ள நிலையில் ,அதன் செயல் திறன் இயக்கத்தை

      முடக்கும் நகர்வில் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக இணந்து செயல் பட்டு வருவதும் ,அதன் மூளையாக செயல் படும் முக்கிய நபர்களை கொன்று வருகின்றது

      இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் ஈரான் அணுகுண்டு சோதனையில் வளர்ச்சி பெறுமா என்பதே இப்போதுள்ள

      கேள்வியாகும் ,வடகொரியா போன்று ஈரானும் வளர்ந்து விடும் என்பதால்

      முளையில் கிள்ளி எறிய இஸ்ரேல் துடிக்கிறது என்பதை சமீப தாக்குதல்கள் காண்பிக்கின்றன

      இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பல்
      இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பல்
      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      அமெரிக்கா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் அமெரிக்கா

      அமெரிக்கா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் அமெரிக்கா

      ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் தூதரகம் மற்றும் இராணுவ நிலைகளை

      இலக்கு வைத்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஈரான் Katyusha rockets ஏவுகணை தாக்குதலை நடத்தியது

      எட்டு ரொக்கட்டுக்கள் இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது ,இதனை

      அடுத்தே மேலும் ஈரான் இது போன்ற தாக்குதல்களை மேற்கொண்டால்

      அது பெரும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா ஆளும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள்ளார்

      இவரது இந்த மிரட்டலுக்கு ஈரான் விரைவில் மேலும் அதிரடி

      தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in உலக செய்திகள் சினிமா

      ரஜனிக்கு கொரனோ- தனிமை படுத்தி கொண்டார்

      ரஜனிக்கு கொரனோ- தனிமை படுத்தி கொண்டார்

      தமிழ் திரையுலகின் நாயகனாக வலம் வரும் ரஜனிகாந்த் அண்ணாத்த

      படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் ,இதில் அந்த படப்பிடிப்பு கொட்டகையில்

      இருந்த எட்டு பேருக்கு கொரனோ பரவிய நிலையில் தற்பொழுது படபிடிப்பு

      நிறுத்த போட்டுள்ளதுடன் ,அங்கிருந்த அனைவருக்கும் சோதனைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

      இதனை அடுத்து ரஜனி கைதராபாத்தில் தன்னை தனிமை படுத்தி கொண்டுள்ளார் ,


      இவருக்கு கொரனோ தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருத படுகிறது