Author: நிருபர் காவலன்
டிரம்பை கண்ட இடத்தில கைது செய்ய ஈரான் பிடி விறாந்து பிறப்பிப்பு
டிரம்பை கண்ட இடத்தில கைது செய்ய ஈரான் பிடி விறாந்து பிறப்பிப்பு
அமெரிக்காவின் ஆளும் அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஈரானின் இரண்டாம்
நிலை தலைவரும் ,புரட்சி காவல் படையின் தளபதியாகவும் விளங்கிய
சொலை மானியை படுகொலை செய்ததாக அறிவித்தார் ,இதனை அடுத்து ,
தற்போது அமெரிக்காவின் ஆளும் அதிபர் டிரம்பை கண்ட இடத்தில் கைது செய்யும் பிடி விறாந்தை ஈரான் பிறப்பித்துள்ளது
எதிர்வரும் இருபதாம் திகதியுடன் வீட்டுக்கு செல்ல உள்ள நிலையில் இந்த
விடயத்தை ஈரான் புரிந்துள்ளது, உலகில் டிரம்ப் நடமாடும் சுதந்திரம்
முடக்க படுகின்ற செயலுக்கு ஒப்பானதாக இதனை பார்க்க முடிகிறது
இலங்கையின் கோட்டபாய ,மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் முடக்க
பட்ட நிலையில் இவரது பயணங்களும் மட்டு படுத்த பட்ட ஒன்றாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது
ஈரானா கொக்கா .
ஈரானின் ஒரு பில்லியன் பணத்தை முடக்கிய அமெரிக்கா
ஈரானின் ஒரு பில்லியன் பணத்தை முடக்கிய அமெரிக்கா
ஈரான் ,உலக நாடுகளில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும்
இதற்கு, இவர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது
இவ்வாறான ஈரான் ஆதரவு சக்தியின் ஊடக கையாள பட்ட சுமார் ஒரு
பில்லியன் பவுண்டுகளை உலகம் தழுவிய நிலையில் தாம் மீட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
தமது உலக பயங்கரவாதத்தை மறைத்து ,தமக்கு எதிராக எதிர்த்து வளரும்
நாடுகளை அடக்கி அடி பணிய வைத்து அதன் வளங்களை சுருட்டி ஏப்பம் இடுவதில் அமெரிக்கா முன்னிலை வகித்து வருகிறது ,
கோட்டை மாட்டி உலக மகா கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றதாக
பாதிக்க பட்ட மக்கள் கூட்டம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா நிறுவனங்களுள் புகுந்து ஆவணங்களை திருடி சென்ற ரசியா கைக்கர்கள்
அமெரிக்கா நிறுவனங்களுள் புகுந்து ஆவணங்களை திருடி சென்ற ரசியா கைக்கர்கள்
அமெரிக்காவின் முக்கிய அரச மற்றும் ,இராணுவ நிறுவனங்களுக்குள்
புகுந்த ரசியாவின் கைக்கர்கள் முக்கிய ஆவணங்கள் திருடி
சென்றுள்ளதாக அமெரிக்கா வெளியாக உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது
மேற்படி கணனி தாக்குதல் மற்றும் ,ஆவண திருட்டுக்களை
ரசியாவே புரிந்துள்ளது தமக்கு தெரியும் என தெரிவித்துள்ளது
இது போன்றே அமெரிக்காவும் இவ்வாறன செயலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
கொரோனா விதிமீறல் – நடிகர் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது வழக்கு
கொரோனா விதிமீறல் – நடிகர் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது வழக்கு
கொரோனா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகர் சொஹைல் கான், அவரது மகன் மற்றும் சகோதரர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா விதிமீறல் – நடிகர் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு
இந்தி திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளவர் சொஹைல் கான். இவரது சகோதரர் அர்பாஸ் கான்.
அவரும் நடிகராக உள்ளார். சொஹைல் கான் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
சொஹைலுடன், அவரது சகோதரர் அர்பாஸ் கான் மற்றும் அவரது மகன் நிர்வாண் கான் ஆகியோரும் வந்தனர். உலகம் முழுவதும்
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவின் மும்பை நகருக்கு வந்திறங்கிய சொஹைல் கான் உள்ளிட்ட 3 பேரையும் ஓட்டல்
ஒன்றில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.
எனினும், இதனை கவனத்தில் கொள்ளாமல் 3 பேரும் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் அறிந்து 3 பேருக்கு
எதிராகவும் மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது
போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். சொஹைல் உள்பட 3 பேரையும் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
ஈரானை தாக்கிட -விமான தாங்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா
ஈரானை தாக்கிட -விமான தாங்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை அடுத்து தற்போது மத்திய கிழக்குகடல்
பகுதிஜி நோக்கி புதிதாக விமான தாங்கி கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது
இந்த அமெரிக்காவின் படை நகர்வை கண்டு ஈரான் அஞ்சுமா அல்லது சீறி பாய்ந்து பட்டத்து தாக்குமா ..?
ஈராக்கில் அமெரிக்கா இராணுவ நிலைநிகள் மீது வீழ்ந்து வெடித்த ஈரான்
ஏவுகணைகளினால் அமெரிக்கா இராணுவம் மூளை கலங்கிய நிலையில் இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது
அவ்விதமான நாசகார ஆயுதங்களை வைத்திருக்கும் ஈரானுடன் அமெரிக்கா மோதுகிறது ,இதுபோலவே வடகொரியாவை மிரட்டி
பார்த்து வாலை சுருட்டி கொண்டது ,இப்போது அதன் தலைவரை இரகசியமாக கொலை செய்யும் நகர்வில் அமெரிக்கா ஈடுபட்டு
வருகிறது ,அதுபோன்ற நடவடிக்கையை தொடராக ஈரானிலும் தொடரும் என எதிர் பார்க்கலாம்
வரும் காலங்களில் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் , அமெரிக்கா
கூட்டாக போட்டும் தள்ளும் நாடவடிக்கையை தீவிர படுத்தும் கள காட்சிகள் கண் முன்னே விரிகிறது

ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் -20 வீதம் தயார் என்கிறது ஈரான்
ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் -20 வீதம் தயார் என்கிறது ஈரான்
ஈரான் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி அணுகுண்டு
தயாரிக்க பயனப்டுதாபடும் மூல கூறான யுரேனியம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
தற்போது இருபது வீதம் இவை நிறைவடைந்து விட்டதாக கூறி வரும் ஈரின் விரைவில் நாம் அடுத்த அத்தியாயத்தில் காலாடி பதிப்போம் என்கிறது
ஆனால் ஈரானோ அதற்கு நாம் விடமாட்டோம் என்கிறது ,ஈரானிடம் அணுகுண்டு
தயாரிப்பு கைமாறும் எனின் அது தமது நாட்டின் அழிவுக்கு முக்கிய காரணமாக மாறிவிடும் என இஸ்ரேல் கருதுகிறது ,
அதற்கு அமைவாக ஈரானின் முக்கிய மூலையை கொலையும் செய்தது
,அதனை அடுத்து தமது செயல்பாட்டை இரட்டிப்பு முழுவேக வீச்சில் ஈரான் ஈடுபட்டுள்ளது
குறித்த ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாப்பாக
வைத்துள்ளதுடன் ,குறித்த மையத்தை சுற்றி ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது
இஸ்ரேலின் நிலைப்பாடு குறித்த கூடத்தை தாம் தாக்கி அழிப்போம் என்பதாக
உள்ளது ,அவ்வாறு தாக்க பட்டால் அதுவே மூன்றாம் உலக போராக வெடிக்கும் அபாயம் உள்ளமை குறிப்பிட தக்கது
மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய நடிகர் கைது
மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய நடிகர் கைது
பிரபல இந்தி நகைச்சுவை நடிகர், மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய நடிகர் கைது
முனாவர் பாரூகி
பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகி. குஜராத்தை சேர்ந்த இவர் பொது மேடைகளில் சர்ச்சை கருத்துகளை பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் இந்தூர் டூகான் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது இந்து கடவுள்கள்
பற்றியும், மத்திய மந்திரி அமித்ஷா குறித்தும் அவதூறான கருத்துகளை பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின.
முனாவர் பாரூகி மீது நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ மாலினி லட்சுமணன் சிங் மகன் ஏக்லவ்யா சிங்
கவுர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாவர் பாரூகியை கைது செய்தனர். அவருடன் மேலும் 4 பேரும் கைதானார்கள்.
முனாவர் பாரூகி,
முனாவர் பாரூகி உள்பட கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் மத உணர்வை தூண்டுதல், கவனக்குறைவான செயலால்
தொற்றுநோயை பரப்ப காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈராக்கில் வான்படை பாதுகாப்புடன் குவிக்க பட்ட அமெரிக்கா இராணுவம்
ஈராக்கில் வான்படை பாதுகாப்புடன் குவிக்க பட்ட அமெரிக்கா இராணுவம்
ஈராக்கில் இருந்து விலக மறுத்து வரும் அமெரிக்கா இராணுவம் தொடர்ந்து அங்கு நிலை கொண்டு வருகிறது ,
ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து அங்கிருந்து இராணுவம் விலக்க
படுமென தெரிவிக்க பட்ட நிலையில் தற்போது Ain al-Asad Airbase இராணுவ
தளத்தில் வான்படை விமானங்கள் பாதுகாப்பு வழங்க 200 இராணுவத்தின் கனரக ஆயுதங்கள் ,மற்றும் வாகனங்களுடன் குவிக்க பட்டுள்ளனர்
மேற்படி படை குவிப்பு ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது
ஐ எஸ்
தீவிரவாதிகளின் தாக்குதலை கட்டு ப்படுத்தவே மேற்படி இராணுவ குவிப்பை
தாம் மேற்கொள்வதாக அமெரிக்கா இராணுவம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிட தக்கது
நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்
நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்
நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… இயக்குனர் பாரதிராஜா படவிழாவில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்
பாரதிராஜா
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து
பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக
ஈஸ்வரன் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா,
முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் பாரதிராஜா பேசும்போது, நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பார்த்து பழகிய சிம்பு வேற.. சிம்பு ஒரு ஒழுக்கமான மனிதர். ஏழு
மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுகிறார். ஒரே டேக்கில் சாதாரணமாக நடித்து விட்டு
சென்று விடுகிறார். சிம்புக்கு எதுவும் மறைக்கத் தெரியாது. இப்போ சிம்புவை நான் ரொம்ப நேசிக்கிறேன். என்றார்.
ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வையாபுரி
ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வையாபுரி
தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த நடிகர் வையாபுரி யின் புதிய கெட்டப் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வையாபுரியின் புதிய கெட்டப்
வையாபுரி
கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் வையாபுரி, தற்போதைய
இளையதலைமுறை நடிகர்களுடனும் நடித்து வருகிறார். காமெடி
நடிகராக மட்டுமே பரிச்சையமான வையாபுரி, ‘பிக் பாஸ்’
நிகழ்ச்சிக்குப் பிறகு காமெடி வேடங்களுடன் குணச்சித்திர
வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவார், என்ற நம்பிக்கையை பல
இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், புத்தாண்டில் புது முயற்சி மேற்கொள்ளும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடிகர் வையாபுரி நடத்தியுள்ளார். மிக
வித்தியாசமான கெட்டப்போடு இருக்கும் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைராகி
வருவதோடு, இளைஞர்கள் அந்த புகைப்படங்களை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.
வையாபுரி
“யாரு…ஹாலிவுட் நடிகரா இவரு, இல்லப்பா நம்ம ஊரு வையாபுரிப்பா…”, ”தினேஷ் கார்த்திக் செமயா இருக்காருல, யோவ் அது
வையாபுரி யா” இப்படி பல வகையில் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி
வெளியிட்டு வர, தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காகியுள்ளது வையாபுரியின் புகைப்படங்கள். பிரபல
காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, வையாபுரி தோற்றத்தை இப்படி ஸ்டைலிஷாக மாற்றி இருக்கிறார்.
பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி
பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி
ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு, பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… என்று கூறியுள்ளார்.
பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி
சிம்பு
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில்
நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் சிம்பு பேசும்போது, இத்தனை நாள் நான் எப்படி இருந்தேன், எப்படி இப்படி மாறினேன், இந்தப் படம் எப்படி உருவானது, எப்படி
முடிந்தது என்று உண்மையிலேயே எனக்கும் தெரியவில்லை. அதான் உண்மை. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். எங்க
பார்த்தாலும் நெகட்டிவ் ஆக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் பொறாமை, போட்டி, குறை சொல்வது என்று இருக்கிறார்கள்.
அட்வைஸ் பண்றதை எல்லாரும் நிறுத்தவேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து அட்வைஸ் கேட்பதை
நிறுத்திக்கொள்ளுங்கள். மனசு சுத்தமாய் இருந்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும். நான் வாழ்க்கையில் ஒரு சமயத்தில்
கஷ்டப்பட்டேன் என்றால் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதனால் தான் உடல் எடை கூடியது. படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை.
இறைவன் எங்கேயும் இல்லை. உள்ளத்தில் தான் இருக்கிறார். உள்ளத்தை சரி செய்தேன். இப்போ எல்லாம் நன்றாகவே நடக்கிறது
. எல்லோரிடமும் அன்பை செலுத்துங்கள். ரசிகர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். பேச ஒன்றுமில்லை இனிமேல்
செயல்தான். அடுத்தடுத்து என்னுடைய நடிப்பில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. ஈஸ்வரன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

சிரியாவின் முக்கிய பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கிய துருக்கி
சிரியாவின் முக்கிய பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கிய துருக்கி
சிரியாவின் அலெப்போவின் Jabal Anadanபகுதியில் இருந்து தமது இராணுவத்தை
முற்றாக விலக்கியுள்ளது ,இடம் பெற்று வரும் சமரச முயற்சிகளின் பயனாக இந்த படை விலக்கல் இடம் பெற்றுள்ளது
எனினும் மறுபுறத்தே இராணுவ குவிப்பை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,
தேவை ஏற்படாது போது தமது இராணுவம் முற்றாக அங்கிருந்து விலக்க
படும் என துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத் தக்கது

அமெரிக்கா மிரட்டல் – அணுஉலைகளை சுற்றி ஏவுகணைகளை குவித்துள்ள ஈரான்
அமெரிக்கா மிரட்டல் – அணுஉலைகளை சுற்றி ஏவுகணைகளை குவித்துள்ள ஈரான்
அமெரிக்காவின் இராணுவ மையங்களை இலக்கு வைத்து ஈராக்கில் ,ஈரானின்
ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்த ,இதன் தாக்குதல்
எதிரொலியாக டிரம்ப் பலத்த மிரட்டலை ஈரானுக்கு விடுத்திருந்தார் ,இந்த
நிலையில் தற்பொழுது ஈரான் தமது அணு உலைகள் அருகில் ஏவுகணை வான் தடுப்பு ஏவுகணைகளை குவிந்துள்ளது
அரண்களாக குவிக்க பட்டுள்ள இந்த ஏவுகணைகளினால் பெரும் பதட்டம் நிலவுகிறது
அமெரிக்காவின் நாசகார நீர்மூழ்கி உள்ளிட்ட கப்பல்கள் ஈரான் அருகில்
சுற்றிய வண்ணம் உள்ளன ,அவ்வாறான நிலையில் இந்த ஏற்பாட்டை
ஈரான் செய்துள்ளமை விரைவில் பெரும் தாக்குதல் ஒன்று வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே
புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே திடீரென்று தனது புகைப்படங்களை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி
தீபிகா படுகோனே
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போஸ்டுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துள்ளார். அதோடு டிபியும்
மாற்றப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபிகா படுகோனே
அவரது அக்கவுண்டுகள் ஹாக் செய்யப்பட வில்லை என்றும், அவரே
புகைப்படங்களை வேண்டும் என்றே நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்
புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்
இசையமைப்பாளர் டி இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் இமான் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய
பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் டி.இமான்.
இமான்
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. முழுக்க இயேசு
கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது.
என்னை நீ மறந்து விடு
என்னை நீ மறந்து விடு
உடைந்து போன உன் நினைவுகளை
கடந்து போக நினைக்கிறேன்
மறந்து போய் ஏனோ
மனதில் வந்து முளைக்கிறாய் …?
என் மனதை நீயன்று
எடுத்தெறிந்து போகையில
உன் நினைவால் நானன்று
உருவிழந்து தவித்தேனே
உன் பதிப்பில் பிழை வைத்து
என் படைப்பை அழித்தவளே
என் மனதை வெட்டையில
ஏன் மனமே துடிக்கலையோ ..?
சில காலம் உன் நினைவால்
சிறைபட்ட என் வாழ்வு
மறு வாழ்வு தேடியின்று
மறுபடி முளைக்குதடி
இவ்வேளை நீ வந்து
இதயத்தை தட்டுறியே
தந்தவன் தாலியதை
தாமரையே என் செய்வாய் ..?
மாறாத நினைவுகளை
மனதில் புதைத்து விட்டு
ஆறான விழி நீரை
அன்பே துடைத்து விடு
வன்னி மைந்தன்
ஆக்கம் 01-01-2021

புதிய ஏவுகணை சோதனக்கு தயராகி வரும் வடகொரியா
புதிய ஏவுகணை சோதனக்கு தயராகி வரும் வடகொரியா
வடகொரியா தனது நாட்டின தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு
தொடராக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது
அவவிதம் விரைவில் குரும்தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணை
சோதனையில் அது ஈடுபட உள்ளதாக தெரிவிக்க படுகிறது
அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல் எல்லையில் உள்ள வடகொரியா
தமது நாட்டின் பாதுகாப்பு கருதி தாம் இவ்விதமான சோதனைகளில்
ஈடுபட்டு வருவதாக கூறிவருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
இஸ்ரேல் ஈரானில் மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்
இஸ்ரேல் ஈரானில் மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்று வரும் நிலையில்
ஈரானின் முக்கிய தளபதிகள் ,தலைவர்களைஇஸ்ரேல் தொடராக கொலை செய்து வருகிறது
இவ்வாறான ஆத்திர மூட்டும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஊடாக மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது
இவ்வாறு நீடித்து செல்லும் எனின் அது உலக நாடுகளின் அமைதிக்கு
பங்கம் ஏற்படுவதுடன் அமெரிக்காவின் வல்லாதிக்கம் வீழ்ச்சி உறும் நிலைக்கு இது இட்டு செல்லும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
சொலைமானி கொலையை மறக்க முடியாது – பழி வாங்குதல் தொடரும் ஈரான்
சொலைமானி கொலையை மறக்க முடியாது – பழி வாங்குதல் தொடரும் ஈரான்
ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் முக்கியஇராணுவ தளபதியாக விளங்கிய
சொலைமானியை அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து கூட்டாக படுகொலை
புரிந்தது ,இந்த படுகொலையை தாம் மறந்து விட மாட்டோம் எனவும்
அதனை புரிந்தவர்கள் பழிவாங்க படுவார்கள் என ஈரான் அறிவித்து இருந்தது
அமெரிக்கா இராணுவ மையங்கள் இலக்கு வைத்து தாக்க பாட்டு வரும்
வேளையில் மீளவும் இதனை ஈரான் தெரிவித்து வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெத்த மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? – சிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்
பெத்த மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? – சிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு, பாடகி சின்மயி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெத்த மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? – சிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்
சிவானி, அகிலா, சின்மயி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின்
உறவினர்கள் வந்தனர். அதில் முதல் நபராக வந்த சிவானியின் அம்மா, சிவானியை வறுத்தெடுத்தார். சிவானியின் அம்மா நடந்து
கொண்ட விதம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு பக்கம் சிவானியை அவரது அம்மா கண்டித்ததற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு
நிகழ்ச்சி என்று பார்க்காமல் தனது மகளை இவ்வாறு திட்டி அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சின்மயி
இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “நான் பிக்பாஸ்
நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை, ஆனால் அந்த தாய் தன் மகளை அசிங்கப்படுத்தியதை நான் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் தவறாக தெரிகிறது.
ஊர்ல 4 பேர் என்ன சொல்வாங்கனு சொல்லி பல அம்மாக்கள் தங்களுடைய மகள்களை அசிங்கப்படுத்துகிறார்கள். நீங்கள் பெற்றோர் எனில், தயவு செய்து உங்கள் மகளின்
குணாதிசயங்களை அசிங்கப்படுத்துவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் பேசுங்கள்” என சின்மயி கூறியுள்ளார்.







