Posted in சினிமா

தீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா – வைரலாகும் வீடியோ

தீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா – வைரலாகும் வீடியோ

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான ரச்சிதா, தனது

தீவிர ரசிகர் ஒருவரின் இல்லத்துக்கு சர்ப்ரைஸாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சின்னத்திரை நடிகையான ரச்சிதா, பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற

சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர உப்புக்கருவாடு

என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரின் இல்லத்துக்கு சர்ப்ரைஸாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரச்சிதா.

மாற்றுத்திறனாளி இளைஞரான அந்த ரசிகருக்கு தான் வாங்கி வந்த இனிப்புகளை ஊட்டி விட்ட ரச்சிதா, அவருக்கு புத்தாடையை பரிசாக வழங்கினார்.

மேலும் அந்த ரசிகரை ஒரு தாயைப் போல ரச்சிதா அரவணைத்த காட்சி

காண்போரை நெகிழச் செய்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Posted in சினிமா

இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ள நிலையில், அதில் விஜய்

கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்
விஜய்


லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியாகி உள்ள படம் மாஸ்டர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம்

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன.

மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக்

உரிமத்தை எண்டமால் ஷைன் இந்தியா நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது.

ஹிரித்திக் ரோஷன்

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக

கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியே நடிக்க

உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈராக்கில் கள்ள கடத்தலில் அமெரிக்கா இராணுவம்

ஈராக்கில் கள்ள கடத்தலில்அமெரிக்கா இராணுவம்

ஈரக்கில் அந்த நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ,அதன் வளங்களை பங்குபோட்டு

கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வருகிறது அமெரிக்கா ,அதற்கு அந்த நாட்டுக்குள்

குழுவாத போரை ஆரம்பித்து தொடர் சுடுகாடாக அந்த மண்ணை மாற்றி

வருவதுடன் தனது கொள்ளையை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளது

அவ்விதம் , தற்பொழுது எண்ணெய் உள்ளிட்ட முக்கிய மூல தாதுக்களை

அந்த மண்ணில் இருந்து இராணுவ வாகனங்கள் ஊடாக கடத்தி

செல்வதை அந்த நாட்டின் முக்கிய ஊடகம் ஒன்று பரபரப்புடன் வெளியிட்டுள்ளது

ஈராக்கை விட்டு அமெரிக்கா இராணுவத்தை வெளியேறும் படி ஈராக்கிய

பாராளுமன்றம் அறிவித்த பின்னரும் அமெரிக்கா படைகள் அங்கிருந்து

அகல மறுத்து வருகிறது ,அவ்விதமான நேரத்தில் இந்த் சுரண்டல்கள்

இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா கப்பல் அருகில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா

அமெரிக்கா கப்பல் அருகில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா

ஈரான் நாட்டை முற்றாக தாக்கி அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல்

அமெரிக்கா கூட்டாக இணைந்து பெரும் படையெடுப்பை நடத்தி வருகின்றன

அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல் மற்றும் ,மிதக்கும் நீர்மூழ்கி கப்பல்கள்

அருகில்
ஈரான் நாட்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

இவை இந்திய கடல் எல்லை ,இந்தியன் ஓசோன் பகுதியில் நிலை எடுத்து

நகர்ந்து வரும் அமெரிக்கா கப்பல்கள் அருகில் இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

மேற்படி சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

1100 மைல்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட குறும் தூர ஏவுகணை

சோதனைகளை ஈரான் நடத்தியது


அப்போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது

இது தாம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள மிக பெரும் செய்தி என ஈரான் தெரிவித்துள்ளது ,


தொடர்ந்து இடம்பெற்று வரும் நாடுகளுக்கு இடையிலான முறுகல் பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் நகர்கிறது

எவ்வேளையும் போர் வெடிக்கும் அபாயத்தை இந்த விடயங்கள் எடுத்து இயம்புகின்றன –

ஈரான் ஏவுகணைகள்
ஈரான் ஏவுகணைகள்
Posted in சினிமா

மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி… வைரலாகும் புகைப்படம்

மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி… வைரலாகும் புகைப்படம்

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி… வைரலாகும் புகைப்படம்
ஆண்ட்ரியா


பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று

வருகிறது. மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில்

ஓடி கொண்டிருக்கும் நிலையில்,படத்தின் வெற்றியை மாஸ்டர் படக்குழு கொண்டாடி வருகிறது.

இதில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா

மோகனனும் நடித்திருந்தார்கள். மேலும் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆண்ட்ரியா

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவையும், புகைப்படங்களையும் ஆண்ட்ரியா தனது

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி
மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி
Posted in சினிமா

வனிதா வீட்டில் மீண்டும் கும்மாளம்

வனிதா வீட்டில் மீண்டும் கும்மாளம்

மீண்டும் வனிதா வீட்டில் நடந்த விஷேசம்
வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வனிதா- பீட்டர் பால் திருமண விசேஷம் அவரது வீட்டில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்ததாகவும் பீட்டர்பாலை தான் பிரிந்து விட்டதாகவும் வனிதா அறிவித்தார். இந்த நிலையில் தற்போது வனிதாவின் வீட்டில் மீண்டும் ஒரு விசேஷ நிகழ்வு நடந்துள்ளது.

வனிதா

வனிதா விஜயகுமார் தனது மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எனது மகள் பெரிய பெண்ணாகி விட்டதாகவும் எனது மகள்கள் உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்..

Posted in சினிமா

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல இந்தி நடிகை மாறி இருக்கிறார்.

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை
நயன்தாரா


நெல்சன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற

படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக கன்னட ரீமேக்

படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜான்வி கபூர்

இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் எல் ராய் இந்தியில் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் இயக்குகிறார்.

நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின்

படப்பிடிப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இந்தியில் குட்லக் ஜெர்ரி என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – காணொளி வெளியானது video in

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – காணொளி வெளியானது

ஈரானின் முக்கிய தளபதியும் இரண்டாம் நிலை ததலைவருமான விளங்கிய

சோலை மானியின் படு கொலைக்கு பழிவாங்கும் முகமாக ஈராக்கில்

உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியது

துல்லியமான இந்த ஏவுகணை தாக்குதல் மூலம் அந்த இராணுவ தளம்

முற்றாக அழிக்க பட்டது ,இதில் 120 பத்துக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர்

மற்றும் மூளை பாதப்பு நோயுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றதாக அமெரிக்கா இராணுவ தலைமையகம் அறிவித்தது

அந்த தாக்குதல் காணொளியை இப்பொழுது ஈரான் வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளது ,


ஈரானை சுண்டக்காய் என கணக்கு போட்ட அமெரிக்காவுக்கு

ஈரான் வழங்கிய ஏவுகணை தாக்குதல்
காட் சட்டை நனைய வைத்துள்ளது

ஈரான் ஏவுகணை ஏ இவ்வாறு எனின் ,வடகொரியாவின்

ஏவுகணைகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கொஞ்சம் எண்ணி பாருங்கள் மக்களே .

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை தா உயிரே

உன்னை தா உயிரே

ஏக்கம் வந்து மனதை தாக்க
ஏனோ உன்னை தேடுது
ஆக்கம் வந்து உன்னில் வாங்க
அன்பை தானே பொழியுது

உந்தன் மொழி காதில் வீழ்ந்தால்
உள்ளம் ஏறி ஆடும்
உலகாளும் கோமகனாய்
உள்ளம் ஏறி பாடும்

அருகினில நீ இருந்தால்
அந்தி வானம் சிரிக்கும்
ஆடை எடுத்து வான் மறைத்து
அது உறக்கம் போடும்

வாழ்க்கை என்ற வட்டத்திலே
வாழ்வு ஒரு சருகு
ஆக்கம் பெற்று முடிந்து விட்டால்
அன்று பொழுது மகிழ்வு

கொஞ்ச நேரம் தழுவையில
கொடும் துயரும் பறக்கும்
அந்த நேரம் மட்டும் தானே
ஆனந்தமே சிறக்கும் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 16-01-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை

    நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை

    ஓடி நடந்த காற்று
    ஓய்ந்து வீழ்ந்தது
    உயிர் குடித்து கொரனோ
    உடலை தந்தது

    காதில் வந்த செய்தி
    கண்ணீர் தந்தது
    காயப்பட்டு நெஞ்சு
    கதறி துடித்தது

    நேற்று வரை
    நெஞ்சில் ஏறி நின்றவன்
    நேரில் பல கதை
    சொல்லி மகிழ்பவன்

    முக நூலில் வந்து
    முகம் தந்தவன்
    முன் வரும் செய்தி
    முன் பகிர்ந்து செல்பவன்

    மலை போல் உடல்
    கட்டு கொண்டவன்
    மாயம் என்னவோ – நீ
    மண்ணில் வீழ்ந்தது …?

    நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை

    உன்னை கொன்ற கொரனோ
    என்னை விடுமோ ..?
    உயிரில் அச்சம் இன்று
    தொற்றி கொண்டது

    பிறந்த நாளில் முந்தி
    வாழ்த்து சொல்பவன்
    பிரியமுடன் மொழி
    எழுதி வைப்பவன்

    நாளை வாழ்த்த என்னை
    நீயும் இல்லையே
    நண்பா உறங்கு
    ஆத்ம சாந்தியே ….!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 15-01-2021
    லண்டனில் கொரனோ நோயினால் 14-01.2021 அன்று உயிர் பிரிந்த நண்பன் இராயரூபன் துயரில் …!

    வன்னி மைந்தன் கவிதைகள்

    நீயா வீழ்ந்தாய்
    நீயா வீழ்ந்தாய்
      Posted in சினிமா

      சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

      சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

      சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

      சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று வெளியானது. இதில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா,

      இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுசீந்திரன்

      இயக்கியுள்ளார். ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கிய இந்த படம், அதையெல்லாம் கடந்து பொங்கலுக்கு வெளியானது.

      இந்த படத்துக்கு சிம்பு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களும்

      கிடைத்துள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஈஸ்வரன் படம் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

      ஈஸ்வரன் பட போஸ்டர்

      ஈஸ்வரன் படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வசூல் செய்து சாதனை

      படைத்துள்ளது. சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.20 லட்சம் வசூல் கிடைத்துள்ளது..

      Posted in சினிமா

      வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’… 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

      வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’… 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

      லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் படத்தின் 2-ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

      வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’… 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
      விஜய்


      லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு

      நேற்று முன்தினம் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.

      கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால், ரசிகர்களை கடந்து திரைத்துறையை

      சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்பதிவு

      தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

      பொதுவாகவே விஜய்யின் படங்கள் இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல்

      சாதனையை முறியடிக்கும். மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால்

      2 நாட்களில் உலகம் முழுக்க ரூ. 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.

      விஜய்

      சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ. 1.21 கோடியும் 2-ம் நாளில் ரூ.1.05 கோடியும் என மொத்தம் ரூ. 2.26 கோடி வசூல் ஆகி இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க முதல் நாள் ரூ.25 கோடியும் இரண்டாம் நாள் ரூ.18 கோடியும் தொட்டுள்ளது. 2 நாட்களில் வசூல் தொகை ரூ.43 கோடியை தாண்டியுள்ளது.

      இந்த வசூல் தொடர்ந்தால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் 5 நாட்களில் தமிழக வசூல் ரூ.100 கோடியை தொடும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளனர். விஜய்யின் படங்களுக்கு தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும் வரவேற்பு இருக்கும். தெலுங்கில் வெளியான மாஸ்டர் படம் முதல் நாளே ரூ.5.74 கோடியை வசூலித்தது. அடுத்த வாரத்துக்குள் மாஸ்டர் படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று திரையுலகம் எதிர்பார்க்கிறது

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்

      லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்

      லண்டனில் மைய படுத்தி இயங்கி வரும் தமிழ் விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளுக்கு மகிந்த கோட்டபாய நேரடியாக தொடர்பை

      ஏற்படுத்து பணத்தை வீசி வருகின்றனர் ,
      மேலும் அவர்களது பைபவங்களுக்கு எல்லாம் வாழ்த்துக்களும் பரிமாறி வருகின்றனர்

      முக்கிய தலைகளுக்கு பணத்தை வீசுவதன் மூலம் , தமிழர் பலத்தை நசுக்கலாம் என கங்கணம் கட்டி சிங்கள தேசம் இயங்கி வருகிறது

      அதற்கு அமைவாக கூட்டமைப்பின் நாரதர் சுமந்திரனை நகர்த்தி அவர் ஊடாக புலிகள் குழுக்கள் ,மற்றும் ஆதரவாளர்களை விலை

      பேசி வாங்கி வைத்துள்ளது சிங்களம் .இதன் பின்னால் சுமந்திரனின் பல நரி விளையாடடுக்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்

      இவரது இந்த தொடர்பில் உள்ளவர்கள் விபரங்கள் விரைவில் வெளியாகும் ,அவ்வேளை பணத்துக்கு ஆசைப்பட்டு தமிழ்

      மக்களினால் துரத்த படும் நிலைக்கு இந்த விலை போனவர்கள் செல்ல போகும் அபாயம் எழப்போகிறது

      இப்பொழுதே மக்கள் கவனித்து பார்க்கலாம் ,புலிகள் நிகழ்வுகள் எவையும் நினைவு கூற படுவது ,இல்லை அவர் தம் நிகழ்வுகள்

      யாவும் மழுங்கடிக்க பட்டு மறக்கடிக்க பட்டு வருகின்றன
      ஆனாலும் தாம் தேசிய வாதிகள் என்றே முழக்கமிடுகின்றனர்

      தமிழர்களே ,குறிப்பாக அகதிகள் எச்சரிக்கியாக இருங்கள் ,பெரும்

      சதி இடம்பெறுகிறது,உங்கள் விபரங்கள் சிங்கள தேசத்திற்கு கைமாறு படுகிறது ,

      சூத்து மாத்து சுமந்திரனின் சூத்து விளையாட்டும் ,அவருக்கு காவடி

      தூக்கும் கூலி குழுக்களும் விரைவில் முட்டை தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்பது நிலையாகிறது

      Posted in சினிமா

      பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? – தீயாய் பரவும் தகவல்

      பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? – தீயாய் பரவும் தகவல்

      பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

      ‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? – தீயாய் பரவும் தகவல்
      பிக்பாஸ் 4 போட்டியாளர்கள்


      பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி வாரத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலக

      போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் வழங்குவார். கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின்,

      பிக்பாஸ் வழங்கிய தொகையை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

      ரம்யா

      அதேபோல் இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி, ரியோ ஆகியோர் இறுதிப்

      போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வழங்கும் தொகையை வாங்கிக் கொண்டு

      வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது உண்மையா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்

      பிக்பாஸ் 4
      பிக்பாஸ் 4
      Posted in சினிமா

      படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை

      படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை

      தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

      படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை
      ரகுல் பிரீத் சிங்
      தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ, தீரன்

      அதிகாரம் ஒன்று, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால்

      பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில்

      பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘மே டே’ என்ற படத்தில் நடிகை ரகுல் நடித்து வருகிறார்.

      இந்த படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ரகுல் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தான்

      தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார்.

      ரகுல் பிரீத் சிங்

      அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 கிலோமீட்டர் சைக்கிளில் செல்வது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.

      மேலும் சைக்கிளில் சென்ற வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

      பிரபல நடிகை
      பிரபல நடிகை
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      ஏன் என்னை ஏமாற்றினாய்

      ஏன் என்னை ஏமாற்றினாய்

      நீ எறிந்த வெடிகுண்டு
      என் மனதை உடைக்கலையே
      என் மீது காதல் கொண்டு
      அது வீழ்ந்தும் வெடிக்கலையே

      குண்டுக்கே என் மீது
      கொலை வெறி காதலடி
      உங்ககேனோ என் மீது
      இல்லையது பிரியமடி …?

      வாய் எல்லாம் பொய்வைத்து
      வழி யோரம் நடப்பவளே
      விழியிரண்டு நீர் கொட்ட
      வீழ்ந்தழுவாய் காத்திரு

      பாவை உன்னை நான் தேடி
      பாதணிகள் தேய்ந்திருச்சு
      அது கூடி என்னோட
      அரை உடல் இழந்திருச்சு

      என்னை காத்த அது இன்று
      எமன் வாயில் சிக்கிருச்சு
      அதுக்குள்ள பாசம் கூட
      உனக்கில்லா ஏன் போச்சு …?

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 13-01-2021

      வன்னி மைந்தன் கவிதைகள்

      ஏன் என்னை ஏமாற்றினாய்
      ஏன் என்னை ஏமாற்றினாய்
        Posted in சினிமா

        நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை

        நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை

        தேச துரோக வழக்கில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது.

        நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை
        கங்கனா ரணாவத்
        நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருதுக்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இந்தி பட உலகில் போதை

        பொருள் புழக்கம் உள்ளது என்றும் போலீஸ் விசாரணை நடத்தினால் முன்னணி நடிகர்கள் சிக்குவார்கள் என்றும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். மராட்டிய அரசையும், மும்பை

        போலீசையும் சாடினார். இதையடுத்து அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. இதனால் மும்பையில் பாதுகாப்பு இல்லை என்று

        வெளியேறிய அவர் பல மாதங்களுக்கு பின்பு மீண்டும் மும்பை திரும்பி இருக்கிறார்.

        கங்கனா ரணாவத்

        இந்த நிலையில் கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து நேரில் அழைத்து 2

        மணிநேரம் விசாரித்தனர். இதையடுத்து தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கனாவும், ரங்கோலியும் மும்பை

        கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 25-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதுவரை கங்கனா மற்றும்

        ரங்கோலியை விசாரிக்கவும், கைது நடவடிக்கை எடுக்கவும் தடைவிதித்து உத்தரவிட்டார்

        Posted in சினிமா

        காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு

        காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு

        பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கராவின் உடல் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் நடத்தி வருகின்றனர்.

        காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு…. போலீஸ் தீவிர விசாரணை
        ஜனார்த்தனன் மூழிக்கரா


        பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கரா. இவர் இங்கிலீஸ் மீடியம், காக்‌ஷி அம்மினி பில்லா, மழமேகப்ரவுள், ரமணம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். முத்தப்பன்

        என்ற மலையாள தொலைக்காட்சி தொடரிலும் நடித்து புகழ் பெற்றார். 50-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறார்.

        ஜனார்த்தனன் கேரள மாநிலம் தலச்சேரியில் வசித்து வந்தார். ஜனார்த்தனனை திடீரென்று காணவில்லை. குடும்பத்தினர் அவரை தேடினார்கள். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில்

        மூடப்பட்டு இருந்த வலை திறந்து இருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தபோது ஜனார்த்தனன் பிணமாக மிதந்தது கண்டு

        அதிர்ச்சியானார்கள். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

        தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜனார்த்தனன் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர் எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்று போலீசார்

        விசாரிக்கிறார்கள். மரணம் அடைந்த ஜனார்த்தனத்துக்கு வயது 60. திருமணம் ஆகவில்லை. அவரது மறைவு மலையாள பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

        Posted in சினிமா

        நடிகைக்கு கொரோனா

        நடிகைக்கு கொரோனா

        தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.

        காஞ்சனா பட நடிகைக்கு கொரோனா
        ராய் லட்சுமி


        தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் தமிழில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில்

        நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.

        இந்நிலையில், நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம்.

        தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

        ராய் லட்சுமி

        நேற்று இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த ராய் லட்சுமி, “காலம் மாறிவிட்டது. நாம் அனைவரும் பாசிடிவ்-க்கு

        பதிலாக நெகட்டிவ் முடிவுகளை தான் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார். கொரோனா பரிசோதனை முடிவுக்காக

        காத்திருப்பதை தான் அவர் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளார் போல தெரிகிறது.

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        பேசும் காதல்

        பேசும் காதல்

        ஏங்க வைத்து ஏங்க வைத்து
        ஏன் கிளியே போனாய்
        எந்த நாட்டு செய்மதியில்
        என்னை தேடி அலைந்தாய்

        உலக நாட்டு உளவுத்துறை
        உன்னை தேடுதோ …?- என்
        உள்ளத்திலே நீ இருந்தாய்
        காணவில்லையே …?

        வானிருக்கும் காலம் மட்டும்
        நீ இருப்பாய்
        வாழும் வரை எந்தன் நெஞ்சில்
        நீ உயிர்ப்பாய்

        நீ தந்த நினைவுகளை
        நான் மறவேன்
        நீ இட்ட முத்தங்களை
        நான் சுவைப்பேன்

        உந்தன் மடி இன்றுவரை
        நெஞ்சம் தேடும்
        அந்த மடி உறங்கிவிட
        ஆயூள் வேண்டும்

        நீ இருக்கும் காலத்திலே
        நான் இறக்க வேண்டும் – உன்
        நீர் விழியை பார்க்க முன்னே
        நான் மறைய வேண்டும்

        நான் இல்லா காலத்திலே
        என் செய்வாயோ ..?
        நீ அழைத்தும் வரமாட்டேன்
        என் செய்வாயோ …?

        உடல் மட்டும் விழி
        முன்னே காண மாட்டேன்
        உள்ளத்திலே நீ இருக்க
        கலங்க மாட்டேன்

        இறக்கும் வரை உன்னுடனே
        நான் வாழ்வேன்
        இது தானே என் காதல்
        புனிதம் என்றேன்

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 12-01-2021

        வன்னி மைந்தன் கவிதைகள்

        பேசும் காதல்
        பேசும் காதல்