Author: நிருபர் காவலன்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 241 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மேலும் 6,846 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சிகளுக்கு ரூ.14 கோடி, சிறப்பு மற்றும்
தேர்வு நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சீமான் காருக்குள் இருக்கும் அதிசியம் – வீடியோ
சீமான்காருக்குள் இருக்கும் அதிசியம் – வீடியோ
இந்த வண்டி வாங்க அண்ணனுக்கு உதவிசெய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் இதயம்
திறந்து நன்றி தெரிவிக்கிறேன். அண்ணனின் ஓட்டுனர் அன்புசெழியனை நினைவுகூறுகிறேன்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி
கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமானது
கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி கர்ப்ப கால தடுப்பூசி பல தொற்றுகளில் இருந்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றும். கர்ப்ப காலத்தில்
தாய்மார்களிடம் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கருவில் வளரும் குழந்தைக்கு போகும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு போடப்படும் தடுப்பூசி குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நோய்கள்
எதுவும் வராமல் காக்க உதவும். குழந்தை பிறந்தவுடன் மிகவும் மென்மையாக இருப்பதால் உடனே எல்லா தடுப்பூசிகளும் போட முடியாது.
கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி:
கர்ப்பம் தரிப்பதற்கு முன் ஒரு சில நோய்களுக்கான தடுப்பூசிகளை பெண்கள் போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.
- ரூபெல்லா ஒரு வைரஸ் நோய். ரூபெல்லா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படும். பொதுவாக இது சாதாரணமான காய்ச்சல்.
- ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால், கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
- கருக்கலைவு மற்றும் குழந்தை முன்னதாக பிறப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். ரூபெல்லா நோய் எதிர்ப்பு சக்தியை இரத்தப் பரிசோதனை மூலமாக
- மதிப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். ரூபெல்லா தடுப்பூசி போட்ட 1 மாதத்திற்கு கருத்தரிக்கக்கூடாது.
- கர்ப்பிணி பெண்ணுக்கு சிக்கன்பாக்ஸ் தொற்று ஏற்பட்டால் அது கருவில் இருக்கும் குழந்தையை மிகவும் பாதிக்கும். குழந்தைப் பருவத்தில் ஒருபோதும் சிக்கன்
- பாக்ஸ் வராத மற்றும் அதற்கு தடுப்பூசி போடாத பெண்கள் சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி குறித்து தங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக பேச வேண்டும்.
- ஹெபடைடிஸ் பி – இந்த வைரஸ் நோய் ஒரு தாயிடமிருந்து தனது குழந்தைக்கு செல்லக்கூடும்.
- கர்ப்பமாவது குறித்து திட்டமிடுபவர்கள் ஹெபடைடிஸ் பிக்கு தடுப்பூசி போடுவது குறித்து தங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:
பொதுவாக, செயலிழந்த வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைக் கொண்ட தடுப்பூசிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கலாம். நேரடி வைரஸ்கள் கொண்ட தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:
- டெட்டனஸ் டோக்ஸாய்டு (டி.டி) – இந்த தடுப்பூசி தாய் மற்றும் குழந்தையை டெட்டனஸுக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம், பொதுவாக இது நான்காவது மாதத்திற்குப் பிறகு இரண்டு முறை வழங்கப்படுகிறது.
- TdaP- டெட்டனஸ் டோக்ஸாய்டு, குறைக்கப்பட்ட டிப்தீரியா டோக்ஸாய்டு மற்றும் அசெல்லுலர் பெர்டுசிஸ் தடுப்பூசி. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் ஒவ்வொரு கர்ப்ப காலத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது, இது கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்கு இடையில்
கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி
- வழங்கப்படுகிறது. மூன்று தீவிர நோய்களிலிருந்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் இது பாதுகாக்கிறது.
- ரியா மற்றும் ஹூப்பிங் இருமல் (பெர்டுசிஸ்) தடுப்பூசி போடப்படும். எனவே முதல் 6 வாரங்களில் குழந்தையைப் பாதுகாக்க இந்த தடுப்பூசி முக்கியமானது.
- காய்ச்சல் தடுப்பூசி / ஷாட் – செயலற்ற காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பானது.
- இது கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம், ஆனால் பொதுவாக காய்ச்சல் காலத்தில் நவம்பர் முதல் மார்ச் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய தடுப்பூசிகள்:
கர்ப்ப காலத்தில் சிக்கன் பாக்ஸ் (வெரிசெல்லா), எம்.எம்.ஆர் தடுப்பூசி (தட்டம்மை மற்றும் ரூபெல்லா), இன்ஃப்ளூயன்ஸா நேசல் ஸ்ப்ரே போன்ற தடுப்பூசிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகள்:
கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பிற்காக உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. தடுப்பூசிக்கும் கருச்சிதைவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தடுப்பூசிகளின் பக்க விளைவுகள்:
மற்ற மருந்துகளைப் போலவே தடுப்பூசிகளும் வலி, சிவத்தல், தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம், லேசான காய்ச்சல், தசை வலி, சோர்வு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பக்க விளைவுகளில் பெரும்பாலானவை லேசானவை. அவை தானாகவே போய்விடும்.
பயணம் மற்றும் கர்ப்பம்:
ஒரு கர்ப்பிணிப் பெண் வெளிநாடுகளுக்குச் சென்றாலோ அல்லது நோய்த்தொற்றுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிக்குச் சென்றாலோ, ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற கூடுதல்
தடுப்பூசிகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். நோய்த்தொற்று ஆபத்து அதிகம் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
அதில் திருப்தி இல்லையென்றால் அவதியுறும் பெண்கள்
அதில் திருப்தி இல்லையென்றால் அவதியுறும் பெண்கள்
பெண்களிடம் பாலியல் விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களது பாலியல் செயல்பாட்டிற்கு தற்போதைய இயந்திரமய வாழ்க்கைமுறை எதிராக அமைந் திருக்கிறது.
அதனால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ
, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை.
அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய் விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள்
கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது. இந்த நிலையை மாற்ற பெண்கள் முன்வரவேண்டும். அதற்கு கணவரின் பங்களிப்பு மிக முக்கியம்.
அதில் திருப்தி இல்லையென்றால் அவதியுறும் பெண்கள்
பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பொதுவாக இரவு
நேர உறவின்போது, ‘நாளை என்ன சமையல் செய்வது?’ என்ற யோசனையில் பெரும்பாலான பெண்கள் ஆழ்ந்துபோகிறார்கள். ‘இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’
என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது. இதை எல்லாம் புரிந்துகொண்டு கணவனும்- மனைவியும் திட்டமிட்டு மனஅமைதியோடு தாம்பத்யத்தில் ஈடுபடவேண்டும். மனைவியின்
அன்றாட வேலைகளை கணவரும் பங்கிட்டு, மனைவி சுமைதாங்கியாக ஆகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாம்பத்ய உறவு மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். திருப்தியான உறவுக்கு பின்பு தம்பதி களிடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் அடியோடு
நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகல மாய் வாழ்க்கையை நகர்த்துவார்கள். அடுத்த முறை இணை வதையும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். தாம்பத்யத்திற்கு பின்பு உடல்வலியும்,
தலைவலியும் நீங்கும். உடல் நெகிழ்ச்சி யாகி அதில் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளை செய்வார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், நன்றாக தூங்கவும் செய்வார்கள்.
திருப்தியான உறவு தம்பதிகளுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி, அவர்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்” என்றும் சொல்கிறார்கள்.
என்கூட சண்டை செஞ்சு பாரு : சீமான் ஆவேச பேச்சு video
என்கூட சண்டை செஞ்சு பாரு : சீமான் ஆவேச பேச்சு video
சீமான் அண்ணா மாதிரி யாரலையும் பேச முடியாது, யாராலாயும் செயல்படவும் முடியாது, ஒன்று
படுவோம் நாம்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நமது சின்னம் விவசாயி , நாம் தமிழர்
இன்றைய சூழலில் உங்களை போன்று எந்த ஒரு தலைவரும் இப்படி பேசி நான் கண்டதில்லை
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
சவூதி விமானங்கள் ஏமன் மீது அகோர தாக்குதல்
சவூதி விமானங்கள் ஏமன் மீது அகோர தாக்குதல்
சவூதி நாட்டு போர் விமானங்கள் ஏமான் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானிய அதரவு படைகள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது
இதன் போது ஈரானிய ஆதரவு படைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக சவுதிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
இதே கிளர்ச்கி படைகள் சவூதி நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்த நிலையில்
இந்த வான் வழி தாக்குதல் ஊடாக தனது பதிலடி தாக்குதலை சவூதி நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது
பள்ளி வாசலுக்குள் புகுந்து தாக்குதல் 205 பேர் காயம்
பள்ளி வாசலுக்குள் புகுந்து தாக்குதல் 205 பேர் காயம்
ஜேருசேலம் பகுதியில் உள்ள Al-Aqsa Mosque பள்ளி வாசலுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த
இஸ்ரேலிய இராணுவம் ,போலீசார் அங்கு தொழுகையில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்திய
தாக்குதலில் சிக்கி 205 பேர் படுகாயமடைந்துள்ளனர்
இஸ்ரேலின் இந்த அத்து மீறல் நடவடிக்கைக்கு துருக்கி மாற்று ஈரான் என்பன தமது கண்டனங்களை தெரிவித்துள்ளன
மூளைக்காய்ச்சலால் வரும் பாதிப்பு
மூளைக்காய்ச்சலால் வரும் பாதிப்பு
பல்வேறு காய்ச்சல்கள் பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருந்தாலும், அதிக விழிப்புணர்வு இல்லாத நோய் மூளைக்காய்ச்சல். இது உயிரை பறிக்கும் ஆபத்து கொண்டது.
குறிப்பாக, குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் அதிகம் பாதிக்கக்கூடியது. ஏழை நாடுகளில் மூளை காய்ச்சலின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவில், மூளை காய்ச்சல், ஜப்பானிய மூளை காய்ச்சல் நோய்களால் பாதிப்புக்கு ஆளாகும் 15 வயதுக்கு உட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளில் 10 ஆயிரம் பேர்
இறந்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதிலிருந்தே அதன் தீவிரத்தை புரிந்துகொள்ளலாம்.
இது கடுமையான மூளை தொற்று நோய். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை மூளை காய்ச்சல் என்றும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை
‘ஜப்பானிய மூளை காய்ச்சல்’ எனவும் மருத்துவ அறிவியல் சொல்கிறது. மூளை காய்ச்சலை ‘மெனிஞ்சைடிஸ்’ என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தமிழில் மூளைச்சவ்வு அழற்சி என்று பெயர்.
இந்த நோய் வர வேறு சில நோய்களும்கூட காரணமாக இருக்கலாம். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, கக்குவான், இருமல், மலேரியா அல்லது காது தொற்று போன்ற நோய்கள் வந்தால்,
கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நோய்கள் மூளைச்சவ்வு அழற்சியில் கொண்டுபோய் விட்டுவிடலாம்.
குழந்தைகளுக்கு காசநோய் இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு காசநோய் கிருமியால் சில நேரம் மூளைச்சவ்வு அழற்சி ஏற்படலாம். தாய்க்கு காசநோய் இருந்தால்
பிறக்கும் குழந்தைக்கு சில மாதங்களில் காசநோய் தொடர்பான மூளைச்சவ்வு அழற்சி சில நேரம் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவர்கள்.
அது மட்டுமல்லாமல் மூளை காய்ச்சல் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. இரண்டு முதல் 15 நாட்கள் வரை அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். உடனே எச்சரிக்கை அடைந்து பாதிக்கப்பட்டவரை
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும். காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, குழந்தை மிகவும் நோயுற்றுக் காணப்படுவது, கழுத்தையும் தலையையும் பின்னோக்கி
வளைத்துப் படுத்திருப்பது, தலையை கால் முட்டிகளுக்கு கொண்டு போக முடியாதபடி முதுகு விறைப்பாக இருப்பது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலை உச்சியின் மென்பகுதி மேல் நோக்கி புடைத்திருப்பது ஆகியவை மூளை காய்ச்சலின் அறிகுறிகள்.
மூளைக்காய்ச்சலால் வரும் பாதிப்பு
இவை மட்டுமல்லாமல் பொதுவாக வாந்தியும் இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தை எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும் அல்லது எரிச்சலுற்றதாக காணப்படும். எதையும் சாப்பிடாது. சில நேரம் வலிப்பு ஏற்படலாம். வழக்கத்துக்கு மாறான அசைவுகளும் உடலில் காணப்படும்.
பெரும்பாலும் நினைவு இழக்கும்வரை குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே போகும். இதில் காசநோய் கிருமியால் ஏற்படும் மூளை காய்ச்சல் மெதுவாக பல நாட்கள் அல்லது
சில வாரங்களுக்கு பிறகுதான் அறிகுறிகளை காட்டும். மற்றப் பாதிப்புகளால் வரும் மூளை காய்ச்சல் மிக விரைவாக வெளிப்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
இவையன்றி, நோய் வராமல் தடுப்பது நம் கையிலும் உள்ளது. முதலில் வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். குப்பையகளை சேர்க்கக்கூடாது. தண்ணீர்
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ஆதரவு படைகள் எட்டு பேர் மரணம்
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ஆதரவு படைகள் எட்டு பேர் மரணம்
சிரியாவின் Hama and Latakia பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் ஈரான் ஆதரவு படைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய வான் வழிதாக்குதலில் சிக்கி எட்டு பேர் மரணமாகியுள்ளனர்
இஸ்ரேல் மீது முற்றுகை தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக ஈரான் பெரும் தாக்குதல்
தயாரிப்பை நகர்த்தி செல்லும் நிலையில் அதனை முறியடிக்கும் தீவிர நகர்வில் இஸ்ரேல் ஈடுபட்ட வண்ணம் உள்ளது
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் நேர்த்தியான தாக்குதல்களை இஸ்ரேலிய உளவுத்துறை புரிந்த வண்ணம் உள்ளது
விரிந்து செல்லும் இந்த தாக்குதல் களம் பெரும் போர் ஒன்றுக்கு இரு நாடுகளையும் அழைத்து செல்லும் நிலை ஏற்படலாம் என அஞ்ச படுகிறது
அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் ஈரான்
அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் ஈரான்
ஈரான் நாட்டு தயரிப்பிலான ஏவுகணைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான இராணுவத்தளமாக விளங்கும் Ain al-Assad மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதே தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்த நிலையில் மீள சனிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த வாரம் தொடர்ச்சியாக அமெரிக்காவின் இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்
நடத்த பட்டு வருவது ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இருப்புக்கு பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்திள்ளது
தமது பழி வாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
ஹிஸ்புல்லா ஏவுகணை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஹிஸ்புல்லா ஏவுகணை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பிற்கு ஈரான் வெளிப்படையாகவே ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது
இவ்விதம் குறும் தூரம் மற்றும் நீண்டதூர ஏவுகணைகளையும் அது வழங்கியுள்ளது
ஈரான் வழங்கும் இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் நாட்டின்மீது தாக்குதல் தொடுப்பதற்கான முதல் திட்டம் என இஸ்ரேல் உளவுத்துறை மோப்பம் பிடித்த நிலையில்
தமது நாட்டின் எல்லை பகுதிகளில் ஆபத்தாக விளங்கும் கிஸ்புல்லா ஏவுகணை நிலைகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி அழித்து வருகிறது
இவ்விதம் சிரியா ,லெபனான் எல்லையில் உள்ள சிரியா ஹிஸ்புல்லா நிலைகள் மீது தொடர் தாக்குதலை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது
எதிரிகள் முந்திட முன்னர் தாம் முந்திட வேண்டும் என்ற போரியல் கோட் பாட்டிற்கு ஏற்ப இஸ்ரேல் தாக்கி அழிக்கும்
களமுனை ஊடாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிய பிரபல நடிகை
ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிய பிரபல நடிகை
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல நடிகை, தனது அறக்கட்டளையின் மூலம் உதவி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு
மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின்
பெர்னாண்டஸ் தனது அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார். தனது அறக்கட்டளையின் மூலம் ஏழை மக்களுக்கு நேற்று மும்பையில் அவர் உணவு வழங்கினார்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
இது குறித்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியிருப்பதாவது: “பசித்தவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் அமைதி தொடங்குகிறது என்று அன்னை தெரசா கூறினார்.
அதன்படி இந்த கடினமான காலத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்வதை நான் கவுரமாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்
மக்களை காப்பாத்துங்க முதல்வரே – மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் வேண்டுகோள்
மக்களை காப்பாத்துங்க முதல்வரே – மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் வேண்டுகோள்
கொரோனா காலத்திலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்
கூறியிருப்பதாவது: “திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் திமுக 172 இடங்களில் வென்று ஆட்சியில் அமர்ந்தது.
அதன் பின் 25 ஆண்டுகளுக்கு பிறகு, கலைஞர் இறந்த பிறகு 125 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக, தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றது, ஸ்டாலின்
அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, தாத்தாவிற்கு ஏற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார்.
சிவக்குமார்
முதல்வர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கொரோனா காலத்திலிருந்து நம் மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும், காலையிலிருந்து மாலை வரை மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா, ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தா, வெண்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க. மேலும் தமிழ் மொழி,
விவசாயம், உழவர் சந்தை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
• கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
• தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது.
• உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி
• காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
• அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள்
முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள்
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள்
வரவேற்றனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.
அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:
- கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல்
- அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்.
ஆவின் பால்
- தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.
- தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி
- பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை
- பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.
- முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு
- பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப்பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘உங்கள் தொகுதியில்
- முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,
- பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதன்படி மாண்புமிகு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.
சர்வதேச நீதிமன்றில் ஈரான் படுகொலைகள் – நெருக்கடியில் குற்றவாளிகள்
சர்வதேச நீதிமன்றில் ஈரான் படுகொலைகள் – நெருக்கடியில் குற்றவாளிகள்
ஈரானில் 1988 ஆண்டு இடம்பெற்ற பெரும் மனித படுகொலை தொடர்பான விசாரணையை நடத்தி
பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை வேண்டியுள்ளது
இதன் அடிப்படையியில் சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு நிறுத்த பட்டு
,குறித்த குற்றங்கள் விசாரிக்க பட்டு அதிகாரத்தில் இருந்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒழிக்க தொடங்கியுள்ளன
35 வருடங்களின் பின்னர் கிளற படும் இந்த படுகொலைகள் பெரும் நெருக்கடியை ஈரானுக்கு
ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது ,இது போன்றே இஸ்ரேல் ,மியன்மார் படுகொலைகளும் விசாரிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டனில் மூவரை வெட்டி கொன்ற கமல்
லண்டனில் மூவரை வெட்டி கொன்ற கமல்
லண்டன் ஈலிங்க் பகுதியில் மூன்று இந்திய சகோதரர்களை துடி துடிக்க வெட்டி கொன்ற Kamal Sohal என்ற கொலையாளி கைது செய்யப் பட்டான்
இருபத்தி இரண்டு வயதுடைய இந்த கொலையாளி நடத்திய கொடூர கொலை வெறித்தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியாகின
மேற்படி காணொளி காட்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின
பெரும் கத்தியுடன் வீதியால் ஓடும் காட்சிகள் அங்கு பொருத்த பட்டிருந்த இரகசிய கமராக்களில் சிக்கிய நிலையில் அவன் கைது செய்யப் பட்டான்
நீதிமன்றில் இடம் பெற்று வந்த விசாரணைகளில் இவன் கொலையாளி என நிரூபிக்க பட்டுள்ளதால் பல்லாண்டு சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
அகதிகள் என லண்டனுக்குள் நுழைந்து இவ்விதமான கேடு கட்ட செயல்களில் இவர்கள் ஈடுப்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது
வடக்கு லண்டனில் பெண்களை கற்பழித்த நபர் கைது
வடக்கு லண்டனில் பெண்களை கற்பழித்த நபர் கைது
வடக்கு லண்டன் பகுதியில் மூன்று பெண்களை மிரட்டி கற்பழித்த குற்ற சாட்டில் 25 வயது கறுப்பினத்தை
சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேலும் தாக்குதல் ,கொலை அச்சுறுத்தல் ,திருட்டு
போன்ற 14 குற்ற சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
இவர் மீதான குற்றச் சாட்டுக்கள் உறுதி படுத்த பட்டுள்ள நிலையில் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரவுடி குழுக்களினால் ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது பொது மக்கள் சேவைக்கு இடையூறாக
செயல் பட்டாலோ அவர்கள் தொடர்பான தகவலை தமக்கு தெருவிக்கும் படி போலீசார் வேண்டியுள்ளனர்
இவ்வாறானவர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட்டு பாதுகாப்பான சமூகமாக மக்கள் வவாழ வழிசமைக்க வேண்டும் என்பது போலீசார் நிலைப்பாடாக உள்ளது
லண்டனில் பெண்களை கற்பழித்த தமிழ் தெரு ரவுடிகள் கைது
லண்டனில் பெண்களை கற்பழித்த தமிழ் தெரு ரவுடிகள் கைது
லண்டன் மிச்சம் டூட்டிங்கம் பகுதியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட பெண்
வழங்கிய தகவலை அடுத்து மிச்சம் டூட்டிங் தமிழ் காவாலி தெரு ரவுடிகளை குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்
குறித்த ரவுடி கும்பல் தொடர்பான முழு தகவல் திரட்டில் ஈடுபட்ட போலீசார் பலரை கைது
செய்துள்ளதுடன் இவர்களுடன் தொடர்பு பட்ட மேலும் பலரை கைது செய்யும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
குற்றங்கள் நிரூபிக்க பட்டால் இவர்களுக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
மேலும் மிச்சம்,டூட்டிங் பகுதியில் உள்ள தமிழர்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில்
குறித்த கஞ்சா ,கட்டை பாவனை கும்பல் முற்றாக கைது செய்ய படும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டுள்ளன
தமிழர் சமூகத்திற்கு இடையூறாகவும் ,கேடாகவும் இந்த கும்பல் சில கடையோரங்களில் குழுமி நின்று அவ்வழியாக செல்லும் தமிழர்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர்,
என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் இரகசியமாக பொருத்த பட்ட காமராக்கள் மூலம் இவர்கள் நகர்வுகள் கணடறிய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கொரனோ காலத்தில் இவ்வாறான சமூக விரோத செயல் பாட்டில் ஈடுபட்ட பல் தேசிய குழும
குழுக்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,கடந்த ஆறு வாரங்களில் மட்டும் 1800 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
சுடலையில் எரிக்க முன் எழுந்த மூதாட்டி- ஓடிய மக்கள் – வீடியோ
சுடலையில் எரிக்க முன் எழுந்த மூதாட்டி- ஓடிய மக்கள் – வீடியோ
இந்திய சத்தீஸ்கர் பகுதியில் 72 வயது மூதாட்டி ஒருவர் இறந்து விட்டதாக கூறி அவரது சடலத்தை
குடும்ப உறவினர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்
இறுதி கிரியைகள் யாவும் இடம் பெற்று சுடலையில் எரிக்க தயாரான பொழுது அவர் சவப்
பெட்டிக்குள் இருந்து எழுந்த செயலை கண்டு அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர்
ஆனால் உறவினர்களை அவரை அழைத்து சென்று மீள மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்
,மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
























