Author: நிருபர் காவலன்
இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ்
இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு சமீப நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி அங்கு ஒரே நாளில் 49 ஆயிரத்து 156 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகி உள்ளது. குறிப்பாக தொடர்ந்து 6-வது
நாளாக 40 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதுவரை மொத்தம் 84 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திங்கட்கிழமை 45 பேர் கொரோனாவுக்கு
பலியானதை தொடர்ந்து இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 629 பேர் இறந்து உள்ளனர். தற்போது அங்கு 7 ஆயிரத்து 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், 78 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் அட்டூழியம்
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ராணுவம் போராடி வருகிறது.இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் சோகோட்டோவில் உள்ள கோரோனியோ நகருக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியதில் 30 பேர் கொன்று குவிப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
மோட்டார் சைக்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தால் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
புழல் ஏரியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
புழல் ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஷட்டர்களும் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,772 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 23 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.
புழல் ஏரியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புழல் ஏரியில் 84 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. முழு கொள்ளளவை விரைவில் எட்ட உள்ளதால் இந்த ஏரியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஏரியின் ஷட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்பதை கேட்டறிந்தார். எவ்வளவு தண்ணீர் வருகிறது. குடிநீருக்கு எவ்வளவு தண்ணீர் தினமும் திறக்கப்படுகிறது என்பதனை கேட்டறிந்தார்.
புழல் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதில் நடந்து சென்றும் பார்வையிட்டார். அவருக்கு பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா விரிவாக விளக்கி கூறினார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் விஜயராஜ் குமார், தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி உடன் இருந்தனர்.
புழல் ஏரியை பார்வையிட்ட பிறகு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் குன்றத்தூர் அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். அவரை அங்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்றார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது, எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்ற விவரங்களை மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது ஏரியை திறப்பது பற்றி முன் கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும். அவ்வப்போது உள்ள நிலவரத்தை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கதவணை பகுதிக்கும் சென்று பார்வையிட்டார். ஏரியின் கரைகள் எந்த அளவு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் விஜயராஜ் குமார் மற்ற அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை
தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி – கரிக்கட்டைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் முந்தல் பொலிஸார், மதுரங்குளி
கரிக்கட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக நபர் ஒருவருடன் தவறான தொடர்பை பேணி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (18) அறையொன்றில் இருந்துகொண்டு தனது கள்ளக் காதலனுக்கு இரவு நேரச் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த போது அங்கு வருகை தந்த குறித்த பெண்ணின் மகன் இதனைப் பார்த்ததுடன்
கடுமையாகவும் கண்டித்துள்ளதுடன், தாயின் கள்ளக் காதலனை வீட்டை விட்டு வெளியே போகுமாறும் கூறியுள்ளார்.
தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை
இதையடுத்து தாயின் கள்ளக் காதலனுக்கும், இளம் குடும்பஸ்தரான மகனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அந்த வாய்த்தர்க்கம் முற்றியதால் ஆத்திரமடைந்த தாயின் கள்ளக் காதலன் அருகிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து குறித்த இளம் குடும்பஸ்தரான கள்ளக் காதலியின் மகனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கேகாலை – அலவ பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார்.
இந்த நிலையில் சுகயீனமடைந்துள்ள தனது தாயை பார்ப்பதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்றே மன்னித்து விடு
இன்றே மன்னித்து விடு
வாயோடு வாய் வைத்து
வந்து வழி பேசி நின்றேன்
நீயுரைத்த மொழி கேட்டு
நீர் விழியோடு யான் தவித்தேன்
ஆறாத என் மொழிகள்
ஆறாண்டாய் வாட்டியதோ …?
சுட்டெரிக்கும் வார்த்தை என்றால்
சூட்டோடே சொல்லி விடு
வார்த்தையால் உனை கொன்று
வாழ்வதென்ன வாழ்வோ …?
வளர் பிறையின் முழு நிலவே
வாழும் போதே புரிந்து விடு
திட்டமிட்டு வாயில் வந்து
திட்டுவது யான் அல்ல
திட்டங்களை மூழ்கடிக்க
திரிபுகளாய் வீழ்ந்திருக்கும்
உச்சி முதல் உள்ளம் வரை
உயிரே வலிக்குதடி
பகுத்தறிவை படித்து வைத்து
பக்குவத்தை நட்ட பின்னர்
உன்னை வசை பாட
உயிரே நான் நினைத்ததில்லை
என் உயிலில் மாற்றமதை
எண்ணுறவே கண்டு விடு
எட்டாண்டு உயிர் வாழும்
என் உடலோ புரிந்து விடு
இறக்கும் முன்னர் ஒரு முறை
இன்றே மன்னித்து விடு
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-10-2021
லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்
லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்
லண்டன் கென்ட் பகுதியில் உள்ள வேக சாலை ஒன்றில் பயணித்த லொறி ஒன்றுக்குள் பதுங்கி
வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் அதில் இருந்து குதித்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன
மேற்படி சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அமெரிக்காவில் கத்தி வெட்டு மூவர் காயம் – சுட்டு கொன்ற போலீசார்
அமெரிக்காவில் கத்தி வெட்டு மூவர் காயம் – சுட்டு கொன்ற போலீசார்
அமெரிக்கா Arkansas State பகுதியில் நடத்த பட்ட திடீர் கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர் ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஊழியர் மீதும் கத்தி
வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இதனை அடுத்து அவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
சமீப காலங்களாக இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
வெடித்து சிதறிய குண்டு 17 பேர் காயம்
வெடித்து சிதறிய குண்டு 17 பேர் காயம்
பாகிஸ்தான் நாட்டின் காவல்துறை வாகனத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட ஊந்துருளி குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்
இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதகாக சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன
தலிபான்கள் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் பாகிஸ்தானில் இந்த குண்டு தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
30 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
30 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
நையீரியாவில் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் முப்பது பேரை சுட்டு படுகொலை செய்துள்ளனர்
தீவிரவாதிகளின் வெறியாட்டத்தில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிவருகின்றனர்
இராணுவத்தினர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்ற போதும் இவ்வாறான அதிரடி
தாக்குதல்களில் மக்கள் பலியாகி வருவதாக இராணுவம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்
அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு மற்றும் இராயங்க செயலராக விளங்கிய கொலின் பவூல் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி தனது 84 வது வயதில் மணமாகியுள்ளார்
கறுப்பின மக்களின் முதலாவது அதி உயர் அதிகாரியாக இவர் அமெரிக்கா வரலாற்றில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்
இவர் கடும் போக்கு நிலையை கொண்டவர் என்பதும் ,புலிகள் தொடர்பில் அதே நிலையை கட்டிபிடித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
குதிக்கால் வலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்
குதிக்கால் வலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலியை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
பெண்களின் வீட்டு வேலைகளை செய்வது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணி புரிவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.
அதே நேரம் தங்களது ஆரோக்கியத்தை பேணுவதில் தவறி விடுகிறார்கள். இதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
அதில் முக்கியமானது 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலி. இதை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
குதிக்கால் வலிப்பதற்கான காரணங்கள்
- உடல் பருமன் அதிகரிப்பதாலும் குதிக்கால் வலி ஏற்படும்
- காலணிகளை காலுக்கு தந்தவாறு அணியாமல் பெரிதாக ஹீல்ஸ் வைத்து அணிவதன் மூலம் குதிக்கால் வலி உண்டாகும்.
- ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிக்கால் வலி வரலாம்.
- அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதாலும் குதிக்கால் வலி ஏற்படும்.
குதிக்கால் வலியை போக்கக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்
- ஒரு வாணலியில் அரிசித்தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துகொள்ள வேண்டும். அதை பருத்தி துணியில் மூட்டையாக கட்டிக்கொள்ள வேண்டும்.
- இதைக்கொண்டு குதிக்கால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.
- நொச்சி இலை சாற்றில் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்த வேண்டும்.
- இரவில் உறங்க செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை குதிக்காலில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் குதிக்கால் வலி நீங்கும்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் எடையை குறைக்கலாம். இதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
குதிக்கால் வலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்
திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதை தொடர்ந்து பருகுவதன் மூலம் குதிக்கால் வலி கட்டுப்படும்.
- வில்வக்காயை நெருப்பில் சுட்டு அதை கொண்டு குதிக்கால் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
- பாதங்களுக்குரிய எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து விடுபடலாம்.
இன்றே இவரை விரட்டு
இன்றே இவரை விரட்டு
சுட்டு வீழ்த்தடா பகைவனை – இந்த
சுட்டு காட்டை ஒழியடா நாட்டிடை
ஒற்றுமை பேனா தமிழனை – தலை
ஒடித்து போடடா காட்டிடை
லட்சங்கள் வீசும் பகைவனின் – கால்
நக்கியே பிழைக்கும் நாய்களை
கொத்தியே எறிதல் முறையடா – தமிழ்
கோடிகள் வாழ்ந்திட புரியடா
அறத்தினை கொன்றவன் நாட்டிடை
அண்டியே வைத்தால் தீட்டடா
வாலாட்டும் இந்த நாய்களால்
வையத்தில் முளைக்குத்து கேடடா
வீடே முதலெனே நினைப்பவர் – இன
விடியலுக்கு வேலியாய் நிற்பவர் – முகத்தில்
தூவெனெ துப்படா – இந்த
துரோகியை இன்றே வீழ்த்தடா
கோபத்தில் களையாய் பொங்கடா
கொடியோர் செயல் விழ பாயடா
நாளை தமிழர் ஆளவே
நம்பிக்கை நட்டு வையடா ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 18-10-2021
வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
தீ விபத்து
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது.
அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வீட்டில் தீப்பற்றி எரிவதை உணர்ந்து அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.
ஆனால் அதற்குள் வீட்டின் நாலாபுறமும் தீ சூழ்ந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போனது. இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பெண்கள் மற்றும் 2 மாத பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
ஆக்ரோஷமாக பாயும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
கோட்டயம்:
கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முண்டகாயம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலரைக் காணவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
சென்னை உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னை உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கடந்த 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- சிக்கலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்
கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தங்கி உள்ள அப்பார்ட்மெண்ட்.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையொட்டி அடுக்குமாடி குடியிருப்பு முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இதே போன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகும். அமைச்சராக இருந்த காலத்தில் அவர் தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கரின் சகோதரர் நடத்தி வரும் மதர் தெரசா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதர் தெரசா பாலிடெக்னிக், கல்வி நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, கொரோனா கால கட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் 43 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 29 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, மதர் தெரசா கல்வி நிறுவனங்கள், திருவேங்கைவாசலில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல் குவாரி, புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சேட் என்ற அப்துல் ரகுமான் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமான வீடு, கிராப்பட்டி பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினர் குருபாலன் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை தொடர்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டில் விஜயபாஸ்கரின் சகோதரி வீடு மற்றும் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் அஜய்குமார் வீட்டில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.
அஜய்குமார் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேவேரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ராமநாதபுரம் எஸ்.என்.வி. கார்டனில் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கூடுதல் டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
அனைத்து இடங்களிலும் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
சேத்துப்பட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை வெளியிட உள்ளனர்.
43 இடங்களில் இன்று நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கணக்கான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
உன்னை காதலிக்கிறேன்
உன்னை காதலிக்கிறேன்
குப்பையில கிடந்த என்னை
குளிப்பாட்டி எடுத்தவளே
மனிதனாக நட்டு வைத்து
மறந்தின்று போவதெங்கே ..?
இதய வங்கியில
இன் முகத்தை வைத்தேனே
அங்கமெல்லாம் உனை தொடர
அன்பே சிறை பட்டனே
சுட்டெரிக்கும் வெயில் பட்டு
சுடுகின்ற என் உடலில்
குளிர்கின்ற உன் நினைவு
குழந்தை போல் கத்துதே
தேகமதில் தென்பு தந்து
தேர்வெழுத வெல்ல வைத்து
நட்பை நட்டவளே – உனை
நான் மறந்து போவதுவோ ..?
எல்லாமும் செய்தவளே
என் மனதை காணலையோ ..?
உன்னிடத்தில் வச பட்டேன்
உள் மனதை புரியலையோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 17-10-2021
பிரிட்டனுக்குள் படகுமூலம் நுழைந்த 60 அகதிகள்
பிரிட்டனுக்குள் படகுமூலம் நுழைந்த 60 அகதிகள்
பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை கடந்து படகுமூலம் அறுபது சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கென் பகுதியில் நுழைந்துள்ளனர்
ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிந்த நிலையில் அகதிகள் வரவு அதிகரித்து காணப்படுகிறது
மேற்படி அகதிகள் நுழைவை தடுக்கபிரிட்டன் பல்வேறு பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்த பொழுதும் அவை பயனளிக்கவில்லை என தெரிவிக்க படுகிறது
அத்துமீறி நுழைந்த – இஸ்ரேலிய விமானங்கள்
அத்துமீறி நுழைந்த – இஸ்ரேலிய விமானங்கள்
லெபனான் நாட்டின் வான் பரப்பிற்குள் இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளது ,
மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில்முறுகளை ஏற்படுத்தியுள்ளது
லெபனான் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த இஸ்ரேல் வெளியாக உணவுத்துறை நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் பலி – பலர் காயம்
உலக
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் பலி – பலர் காயம்
அமெரிக் டெஸ்சல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் காவல்துறை சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார்
மேலும் இரண்டிற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
17 அமெரிக்கர்களை கடத்திய தீவிரவாதிகள்
17 அமெரிக்கர்களை கடத்திய தீவிரவாதிகள்
கைட்டியில் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்த 17 அமெரிக்கா நாட்டவர்களை அந்த நாட்டில் போராடி வரும் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்
கடத்தியவர்களை விடுவிக்க அமெரிக்கா அரசு பேரம் பேச்சில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது







