Tag: ஒரு முறை உன்னை தா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்
ஒரு முறை உன்னை தா …!
ஒரு முறை உன்னை தா …!
வீடு வந்து என்னை தேடும்
வெண்ணிலா நீ தானோ
உன்னை தேடி நான் ஏங்கும்
உயிர் காதல் இது தானோ
மாலை ஒரு வேளை
மயக்கும் அதி காலை
நீ வந்தால் போதும்
நிகழ்ச்சிகள் தொடரும்
விடியாத இரவுக்குள்
மடியாத போர்வைக்குள்
உன்னோடு வாழும் வாழ்தால் தானே
உயிராகி மிஞ்சும் நாட்கள் தேனே
வீசிய வலைக்குள் விளையாடும் மீன்கள்
விட்டு உயிர் போகும்
கட்டுடல் அழகும் கரையாத கூந்தலும்
பட்டுடல் போகும் பாதியில் பாரும்
நிலையில்லா வாழ்வுக்குள்
நித்தம் போராட்டம்
நினைவழியா கனவுக்குள்
நீயே என் தேரோட்டம்
ஓடும் நதியாய் தேடி வரவா
ஒரு நாளும் மறக்கா முத்தமிடவா
நெஞ்சுக்குள் வாழும் சாமியடி
நீ வந்தால் வாழ்வேன் ஆண்டுநூறடி …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 30-12-2021
- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,
- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்
- ஜோர்டானில் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் துப்பாக்கி சூடு
- வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூட்டாளரை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பேருந்து பறிமுதல்













