ஒரு முறை உன்னை தா …!
வீடு வந்து என்னை தேடும்
வெண்ணிலா நீ தானோ
உன்னை தேடி நான் ஏங்கும்
உயிர் காதல் இது தானோ
மாலை ஒரு வேளை
மயக்கும் அதி காலை
நீ வந்தால் போதும்
நிகழ்ச்சிகள் தொடரும்
விடியாத இரவுக்குள்
மடியாத போர்வைக்குள்
உன்னோடு வாழும் வாழ்தால் தானே
உயிராகி மிஞ்சும் நாட்கள் தேனே
வீசிய வலைக்குள் விளையாடும் மீன்கள்
விட்டு உயிர் போகும்
கட்டுடல் அழகும் கரையாத கூந்தலும்
பட்டுடல் போகும் பாதியில் பாரும்
நிலையில்லா வாழ்வுக்குள்
நித்தம் போராட்டம்
நினைவழியா கனவுக்குள்
நீயே என் தேரோட்டம்
ஓடும் நதியாய் தேடி வரவா
ஒரு நாளும் மறக்கா முத்தமிடவா
நெஞ்சுக்குள் வாழும் சாமியடி
நீ வந்தால் வாழ்வேன் ஆண்டுநூறடி …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 30-12-2021
- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது
- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்
- 100 மி.மீ-க்கு மேல் கனமழை
- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்
- தீபாவளியை முன்னிட்டு தமிழ்வழிப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை












