Author: நிருபர் காவலன்
ராஜீவ் கொலையில் விடுவிக்க பட்ட நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தல்
ராஜீவ் கொலையில் விடுவிக்க பட்ட நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தல்
இந்தியாவில் ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்க பட்டு வதைக்க பட்டவர்கள் நீதிமன்றினால் விடுவிக்க பட்டனர் .
இவ்வாறு விடுவிக்க பட்ட இலங்கையை சேர்ந்த நால்வரையும் ,இலங்கைக்கு நாடு கடத்தும் படி இந்திய உள்துறை அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது .
இலங்கைக்கு இவர்கள் சென்றாக அங்கு இவர்கள் புலிகள் என்ற போர்வையில் சிங்கள படைகளினால் சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கையில் 634 பொருட்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் 634 பொருட்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் 634 பொருட்களின் விலைகள் மீளவும் அதிகரிக்க பட்டுள்ளன .புதிய வரவு செலவு அறிக்கையின் பிரகாரம் இந்த விலை அதிகரிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து அதிகரித்து செல்லும் இந்த விலை வாசிகள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுவதால் மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் .
கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்
கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்
கல்முல்ல பகுதியில் வான் ஒன்று விபத்தில் சிக்கி கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
மகனை வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு கட்டுநாயக்காவில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த பொழுதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சாரதி நித்திரை துக்கத்தினால் ,அவரது கட்டு பாட்டை இழந்த வான் விபத்தில் சிக்கியது .இதன் பொழுதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவுதி அரேபியா
எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவுதி அரேபியா
ஏமான் நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றை சவூதி அரேபியா இராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர் .
இந்த எண்ணெய் கப்பலானது Al-Hudaydah துறை முகம் அருகில் பயணித்து கொண்டிருந்த பொழுது சிறை பிடிக்க பட்டுள்ளது .
சவுதிக்கு ஏமன் நாட்டுக்கும் இடையில் கடும் போர் இடம்பெற்று வரும் நிலையில் ,ஏமன் நாட்டு கப்பல்களை சவூதி இராணுவம் சிறை பிடித்த வண்ணம் உள்ளது .
அதன் தொடர்ச்சியாக இந்த எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது ,நாடுகளுக்கு இடையில் மீளவும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
இது போன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்ற பொழுதே, சவூதி விமான தளம் மீது ஏமான் இராணுவ படைகள் ,ஏவுகணை தாக்குதல் நடத்தி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
உக்கிரேனை தாக்கும் வடகொரியா ஏறிகணைகள்
உக்கிரேனை தாக்கும் வடகொரியா ஏறிகணைகள்
உக்கிரேன் மீது ரசியா ஆக்கிரமிப்பு போரினை தொடுத்துள்ளது .இந்த போரில் ரசியாவுக்கு வடகொரியா நீண்ட தூர ஆட்டிலறி பல்குழல் ஏவுகணைகளை வழங்கியுள்ளது .
அதுபோலவே தென் கொரியா உக்கிரேனுக்கு வழங்கியுள்ளது .இதனால் இரு கொரியாவின் எறிகணைகள் உக்கிரேனில் மோதிய வண்ணம் உள்ளது .
தற்போது உக்கிரேன் போர் முனையானது. பல நாடுக்ளின் ஆயுத சோதனை களமாக மாற்றம் பெற்றுள்ளது .
இந்த ஆயுத சோதனைகள் உதவி என்கின்ற போர்வையில் நடக்கின்றன .இவ்வாறான நகர்வுகள் மிக பெரும் பேரழிவை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது .
ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்
ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்
ரசியா இராணுவத்தின் இரு சிப்பாய்களை சிறை பிடித்த உக்கிரேன் மக்கள் ,அவர்களை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
கேர்சன் பகுதியில் இருந்து ரசியா இராணுவம் விலக்கியதாக அறிவிக்க பட்டது .
ஆனால் ஐநூறுக்கு மேற்பட்ட ரசியா இராணுவத்தினர், மக்கள் உடையில் மறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்தது .
அதனை தொடர்ந்து நடத்த பட்ட தேடுதலில் ,சிவில் உடையில் மறைந்திருந்த இரண்டு ரசியா சிப்பாய்கள் ,மக்களினால் பிடிக்க பட்டு, இவ்விதம் ,மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்க பட்டுள்ளனர் .
இவை மனித உரிமை மீறலாகவே பார்க்க படுகிறது .
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
இஸ்ரேல் இராணுவத்தின் போர் விமானங்கள் ஏவிய எட்டு ஏவுகணைகளில் எட்டில் ஐந்தை, தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது .
மேலும் மூன்று ஏவுகனைகள் Homs மாகாணத்தின் இராணுவ இலகுக்குகளை தாக்கியதில் ,இரண்டு இராணுவத்தினர் பலியாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளதாக சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
சிரியா மீது தொடர் வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
காதலியை துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலன்
காதலியை துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலன்
இந்தியா டில்லி பகுதியில் காதல் தகராறு காரணமாக ,காதலியை துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலன் சிறை பிடிக்க பட்டார் .
நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது ,அதன் பின்னர் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர் .
தன்னை திருமணம் முடிக்கும் படி காதலி வலியுறுத்தி வந்துள்ளார் .அதனால் எழுந்த சண்டை காரணமாக ,காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் .
கோபத்தில் காதலியை கொலை செய்த பின்னர் செய்வதறியாது திணறிய காதலன் ,காதலியின் உடலை துண்டு துண்டுகளாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் வைத்து ,இரவு நேரங்களில் பல பகுதிகளுக்கு சென்று உடலின் துண்டுகளை வீசியுள்ளார் .
காதலியின் தோழி ஒருவர் தந்தையை தொடர்பு கொண்டு இரண்டு மாதமாக மகளின் தொலைபேசி செயல் இழந்துள்ளது, எதாவது தெரியுமா என வினவிய பொழுதே, தந்தை காவல்துறையில் மகளை காணவில்லை என்வும் ,குறித்த நபருடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் .
இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் ,இந்த கொலை சம்பவம் அம்பலமாகியுள்ளது .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
உடனடி அரிசி மாவு தோசை | Instant rice flour dosa recipe in tamil
உடனடி அரிசி மாவு தோசை | Instant rice flour dosa recipe in tamil
மொறு மொறு உடனடி அரசி மாவு தோசை செய்ஞ்சி சாப்பிடலாம் வாங்க .
மிக இலகுவாக உளுந்தே இலலாம எப்படி தோசை செய்வது .அதை தாங்க இதில் பார்க்க போகிறோம் .
அரிசி மாவு தோசை செய்வது எப்படி ..?
உடனடி அரிசிமாவு தோசை செய்முறை ஒன்று
ஒரு மிக்சி எடுத்து கொள்ளுங்க ,அதில
ஒரு கப் அரசி மா அல்லது வறுத்த மாவு ,அது கூட அரை கப் வேக வைத்த சாதம் ,தேவையான உப்பு ,கடலை மாவு இரண்டு கரண்டி ,கூடவே தேவையான தண்ணி சேர்த்து நனறாக அரைத்து எடுங்க .
உடனடி அரிசி மாவு தோசை | Instant rice flour dosa recipe in tamil
அரைத்ததன் பின்னர் சோடா உப்பு ,எலுமிச்சை பழசாறு போட்டு மிக்ஸ் பண்ணி .தோசை கல்லில் மாவை ஊற்றி மேலே கொஞ்ச எண்ணெய் தெளிச்சு அப்படியே மொறு மொறு போல சுட்டு எடுங்க
உளுந்தே இல்லாம மிக சுவையான அரிசிமாவு உடனடி தோசை ரெடியாடிச்சு
.
அப்புறம் என்ன இன்றே ஆரம்பியுங்க ,செம சுவை கூடவே மிக இலகுவான வழிமுறை .இது எனக்கு ரெம்பவே பிடிச்சிருக்கு மக்களே.
உடனே செஞ்சு அசத்துங்க .
கேசரி மிருதுவாக இப்படி செஞ்சு அசத்துங்க | Secrets of Kalyana Kesari | Rava Kesari in Tamil
கேசரி மிருதுவாக இப்படி செஞ்சு அசத்துங்க | Secrets of Kalyana Kesari | Rava Kesari in Tamil

கேசரி கல்யாண வீட்டுக்கு இப்படி மிருதுவாக இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே.மிக சுவையான தரமான ,கடை சுவையில் எப்படி ரவா கேசரி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .
இந்த ரவை கேசரி செய்வது எப்படி ..?
ரவா கேசரி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
வாங்க கேசரி செய்முறைக்குள் போகலாம் .
கடாயில அரை கப் அளவு நெய் சூடாக்கி கொள்ளுங்க .கூடவே முந்திரி பருப்பு ,திராட்சை பாதம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
இப்போ இதனை நெயில் இருந்து வெளியிலே எடுத்திடுங்க .
இப்போ அதே கடையில அதே நெய்யில ரவையை சேர்த்து நன்றாக வறுத்து எடுங்க .இப்போ அதே ரவையில் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸ் பண்ணிடுங்க .
கேசரி மிருதுவாக இப்படி செஞ்சு அசத்துங்க | Secrets of Kalyana Kesari | Rava Kesari in Tamil
அப்புறம் ஏலக்காய் தூள் ,சேர்த்து கொதிக்கும் சூடான தண்ணி சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .
அப்புறம் ஊற வைத்த குங்கும பூ தண்ணி சேர்த்திடுங்க .நனறாக கலக்கி வாங்க .
அதன் பின்னர் மூன்று கரண்டி ஒயில் சேர்த்து 8 நிமிஷமே அப்படியே வேக வைத்திடுங்க .
இப்போ இதில் முன்னர் வறுத்து வைத்த எல்லாத்தையும் போட்டு கலக்கி 3 நிமிஷம் வேக வைத்திடுங்க .
அவ்வளவு தாங்க மிக சுவையான தரமான கடை சுவையில் கல்யாண வீட்டு ரவா கேசரி செய்தாச்சு .அப்புறம் இதை சாப்பிட்டு பார்த்து சுவையை எங்களுக்கு சொல்ல்லுங்க மக்களே .
மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்
மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்
மட்டக்களப்பில் கடந்த 48 மணித்தியாலத்தில் மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர்களில் , ஒரு பாடசாலை மாணவியும் உள்ளடங்கும் என கண்டறிய பட்டுள்ளது .
இவை கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil
இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil
நம்ம வீட்டில இட்லி போடி மிக இலகுவாக எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாமா வாங்க .
சுலபமான முறையில் ,சுவையாக உடனடியாக இட்லி பொடி தயாரிப்பது எப்படி..?
உங்கள் கேள்விக்கு இதோ செய்முறை விளக்கம்
இட்லி பொடி செய்வது எப்படி ..?
இட்லி செய்வதற்கு தேவியான பொருட்கள் என்ன ..?
சுவையான இட்லி பொடி செய்முறை ஒன்று
இந்த பொடி செய்திட காடயில ஒரு கப் அளவு உளுந்து பருப்பு போடு வறுத்திடுங்க .உளுந்து வாசம் வரும் வரை வறுத்திடுங்க .
உளுந்து கலர் மாறியதும் உளுந்தை நிப்பாட்டி கொள்ளுங்க .
இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil
அதே கடையில அரை கப் அளவு கடலைப் பருப்பு போட்டு அதனையும் ,அதே போல வறுத்து எடுத்திடுங்க .
அப்புறம் வெள்ளை எள்ளு சேர்த்து அதனையும் நன்றாக வறுத்து எடுத்திடுங்க .
அதே கடையில 10 வறுமிளகாய் நன்றாக கலர்மாறி வரும் வரை வறுத்து எடுத்திடுங்க .இறுதியாக கருவேப்பிலையும் போடு அதுபோலவே, வறுத்து எடுத்திடுங்க .
இப்போ சீரகம் மிளகு சேர்த்து இத்தனையும் வறுத்து எடுத்திடுங்க .
வறுத்த எல்லா பொருளையும் மிக்சியில் போட்டு ,உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக மாவு போல அரைத்து எடுத்திருங்க .
இப்போ செமையான இட்லி பொடி ரெடியாடிச்சு .இட்லி பொடி கூட நல்லெண்ணெய் கலந்து சாப்பிடுங்க .
அவ்வளவு தாங்க .சுலபமாக வேலை முடிஞ்சிருச்சு.
200 வருட வேம்பு சரிந்து முறிந்து வீழ்ந்து உடைந்த வீடுகள்
200 வருட வேம்பு சரிந்து முறிந்து வீழ்ந்து உடைந்த வீடுகள்
யாழ்ப்பாணம் கச்சரிக்கு அருகில் நிலைத்து செழிப்பு தந்த ,200 வருட பழமை வாய்ந்த வேம்பு மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது .
இந்த வேம்பு மரம் சரிந்து வீழ்ந்ததில் அருகில் உள்ள வீட்டு மதில்கள் உடைந்தன .
எனினும் உயி சேதங்கள் ஏற்படவில்லை .
இதனால் வீதி போக்குவரத்தில் சாற்று நெரிசல் ஏற்பட்டது .
15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்
15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்
இலங்கை கண்டி புஸ்ஸலாவவை பகுதியில் 15 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளார் .
கடந்த 30 ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயுள்ளார் .
ஒரே ஒரு மகளான இவர் காணாமல் போயுள்ளதால் பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
காணாமல் போன சிறுமியை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு
யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழிப்பறி தொடர்பான சி.சி.ரி.வி. பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.
சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது
விபத்தில் தந்தை மகள் பலி
விபத்தில் தந்தை மகள் பலி
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம பஸ்யால வீதியில் கொட்டகந்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த தந்தை மற்றும் மகள் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மகளும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
கல்எலிய பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மகளும் 54 வயதுடைய தந்தையுமே இதில் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக வகுப்பு முடிந்து தந்தை தனது மகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது இந்த விபத்து நடந்துள்ளது.
தப்பியோடிய கார் சாரதியை பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது அவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மயங்கி விழுந்த 44 மாணவிகள்
மயங்கி விழுந்த 44 மாணவிகள்
மாத்தளை– கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று (15) காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளில் சிலர் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த மாணவிகள்
என்பதுடன், வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயங்கி விழுந்த 44 மாணவிகள்
இவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இன்று காலை பாடசாலையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இதில் கலந்துகொண்ட போதே, மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.
இதனையடுத்து மாணவிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மாணவிகளின் நிலை சாதாரணமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்
சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்
சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் – இலங்கையுடன்
இணைந்து திருகோணமலை, கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை ஊடாக நடாத்திய சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்
நேற்றும் (14) இன்றும் (15) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அன்டென் அனஸ்ரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் யாழ்ப்பாண அலுவலக துணைத் தூதர் ஸ்ரீ ராக்கேஷ் நட்ராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுதேச
மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் திருகோணமலை நகரசபை செயலாளர் வி.ராஜசேகர்
உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த விழிப்புணர்வுக் கண்காட்சியில் நீரிழிவு நோய்க்கான இரத்தப்
பரிசோதனைகளுடன் மருத்துவ ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அத்துடன், நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்தி சுக வாழ்வுடன் வாழவேண்டும் என்ற ஆலோசனை வழிமுறைகள் பற்றிய தெளிவான
விளக்கங்களை வைத்தியர்கள் வழங்கி வைத்து அதுதொடர்பிலான வழிகாட்டி கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், திருகோணமலை கேம்பஸ் உள்ளகப்பயிற்சி வைத்தியர்களினால் யோகாப் பயிற்சி செய்முறைகளும் செய்து காட்டப்பட்டு அதுதொடர்பிலான
விளக்களை அதிதிகளுக்கும், பொதுமக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்ட
அதேவேளை பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்காக அந்த உணவு
வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அபு அலா –
வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும்.
வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும்.
எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெற்று அன்றையதினம் மாலை ஐந்து மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும். வரவு செலவுத்திட்ட
குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம திகதி முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை இடம்பெறும். இதன் வாக்கெடுப்பு டிசம்பர் எட்டாம் திகதி மாலை இடம்பெறும்.
இன்று முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர்ந்த வாரத்தின் அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் கூடும். வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில் வாய்மொழிமூல
பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளை கேட்க முடியாது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
டிசம்பர் ஒன்பதாம் திகதி பாராளுமன்றம் கூடும். அன்றையதினம் வாய்மொழிமூல பதில்களை
எதிர்பார்க்கும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அல் சபா தலைவரை காட்டிக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா
அல் சபா தலைவரை காட்டிக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா
சோமாலியா அரசுக்கு எதிராக போராடி வரும் ,அல் சபா அமைப்பினரின் தலைவரை காட்டி கொடுப்பவருக்கு ,பத்து மில்லியன் அமெரிக்கா டொலர்கள் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .
இந்த அமைப்பினருக்கு எங்கிருந்து நிதி செல்கிறது ,என்பதை கண்டறியும் நோக்குடனும் ,அவர்களுக்கு நிதி வழங்கி வரும் நபர்களை கைது செய்திடவும் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது .
பின்லாடனை காட்டி கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தது போல ,அல் சபா தலைவரும் மற்றும் முக்கிய நபர்களுக்கும் இந்த சன்மானம் அறிவிக்க பட்டுள்ளது .
அப்படி என்றால் விரைவில், அல் சபா புலிகளை போல அழிக்க பட போகின்றனர் என்பது தெளிவாகிறது .





































































