மரத்தில் ஏறிய ஆடு வைரலாகும் வீடியோ
Posted in உலக செய்திகள்

மரத்தில் ஏறிய ஆடு வைரலாகும் வீடியோ

மரத்தில் ஏறிய ஆடு வைரலாகும் வீடியோ

தமிழகத்தில் ஆடு ஒன்று ,பனை மரம் ஒன்றில் குரங்கு போல தாவி ஏறி விளையாடும் காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .

இந்த ஆட்டின் சுட்டி தனம் பார்ப் பவர்களை கவர்ந்துள்ளதால் ,பல லட்சம் மக்கள் ,இந்த காட்சிகளை வேகமாக பகிர்ந்த வண்ணம் உள்ளனர் .

ஒரே நாளில் உலகம் முழுவதும் இந்த ஆட்டு குட்டி வைரலாக மாறியுள்ளது .

கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
Posted in இலங்கை செய்திகள்

கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

கார்த்திகை நாயகரை கண்ணீரால் தொழுதிடும் நேரத்தில் இந்த துயிலும் இல்லங்கள் துளிர் விடுகிறது .

வாருங்கள் மக்களே என வாசல்கள அழைக்கிறது .

லண்டன் லூசியம் பகுதியில் பொலிஸ் வேட்டை வீடியோ
Posted in உலக செய்திகள்

லண்டன் லூசியம் பகுதியில் பொலிஸ் வேட்டை வீடியோ

லண்டன் லூசியம் பகுதியில் பொலிஸ் வேட்டை வீடியோ

லண்டன் லூசியம் பகுதியில் போலீசாரை நடத்திய வேட்டையில் சிக்கிய காஞ்சா குழு .

துரத்தி பிடித்த காவல்துறையினர் காட்சிகள் இதோ பாருங்கள்

https://www.youtube.com/watch?v=gDxelYMVbwQ
என் தலைவனை பற்றி அறியாத தகவல்கள் - சீமானின் எழுச்சியுரை
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

என் தலைவனை பற்றி அறியாத தகவல்கள் – சீமானின் எழுச்சியுரை 

என் தலைவனை பற்றி அறியாத தகவல்கள் – சீமானின் எழுச்சியுரை 

தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் எழுச்சியுரை சீமான் பேசிய வண்ணம் உள்ளார் .

https://www.youtube.com/watch?v=es6ZuHnjwz4
தலைவர் பிரபாகரன் 68 வது பிறந்தா நாள் இன்று
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் பிரபாகரன் 68 வது பிறந்தா நாள் இன்று

தலைவர் பிரபாகரன் 68 வது பிறந்தா நாள் இன்று

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களது 68 வது பிறந்த நாள் இன்றாகும் .

தலைவர் பிறந்த நாளினை, உலக தமிழர் தமது வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கொண்டாடிய வண்ணம் உள்ளன .

மண்காத்து மடிந்த மாவீரம் எங்கள் தலைவர் பிரபாகரன் .இருந்தால் அவன் தலைவன் ,இறந்தால் அவன் இறைவன் .

தமிழர் நெஞ்சங்களில் அழியாது உறங்கும் ஆலமரம் .அவர் நாளில் அவரை வாழ்த்தி பாடுகிறது மானமுள்ள தமிழர் தேசம் .

பிரபகாரன் பிறந்த நாளான இன்று வெளிவந்துள்ள புதிய பாடல் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

பிரபகாரன் பிறந்த நாளான இன்று வெளிவந்துள்ள புதிய பாடல் வீடியோ

பிரபகாரன் பிறந்த நாளான இன்று வெளிவந்துள்ள புதிய பாடல் வீடியோ

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களது பிறந்த நாளான இன்று புதிய பாடல் ஒன்று வெளிவந்துள்ளது .

தேனிசை செல்லப்பாவின் குரலில் ,இளங்களோ செல்லப்பாவின் இசையில் ,ஸ்ரீகாந்தன் வரிகளில் அழகிய உலகில் ஓர் தலைவன் என்கின்ற பாடல் வெளியாகியுள்ளது .

காலம் கடந்தாலும் தேச தலைவன் நினைவுகள் தமிழர் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும் .

https://www.youtube.com/watch?v=HWn0LDBQp8w
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் பிரபாகரன்
Posted in இலங்கை செய்திகள்

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் பிரபாகரன்

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் பிரபாகரன்

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்.

ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுகந்திரம், எமது கௌரவம்.
தேசிய தலைவர் மேதகு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
தமிழ்

களத்தில் சீமான் | நாம் தமிழர் கட்சி சீமான் அரசியல் & சினிமா
Posted in சீமான் பேச்சு

களத்தில் சீமான் | நாம் தமிழர் கட்சி சீமான் அரசியல் & சினிமா

களத்தில் சீமான் | நாம் தமிழர் கட்சி சீமான் அரசியல் & சினிமா

யார் இந்த சீமான் எவ்வாறு வளர்ந்தார் ,அவரது வளர்ச்சிக்கு காரணம் யார் …?

சீமான் வேறுபட்ட பதிலும் ,வேறுபட்ட சிந்தனையும் .அதனால் எழுந்தான் சீமான் ,காணொளி பாருங்க .

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை

ஐஸ் போதைப் ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை 5 கிராம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண

தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தமை வரவேற்கத்தக்க விடயம் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தனிப்பட்ட ஒருவரின் இலாபத்திற்காக தடை செய்யபட்ட பொருள் என்று அறிந்தும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை மாபெரும் குற்றமாகும்.

கடுமையான தண்டனைகள் ஊடாகவே இவ்வாறான செயற்பாடுகளை முற்றிலும் இல்லாதொழிக்க முடியும். பாதுகாப்பு பொது செயலாளரின் இந்த அறிவிப்பானது வரவேற்தக்க விடயமாகும்.

நாட்டில் 22 வயது முதல் 26 வயதுக்குட்பட்ட தரப்பினரே இந்த போதைப் பொருளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளனர்.

என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ள நிலையில இவ்வாறான கடுமையான தண்டனைகள் ஊடவே இளைய சமுதாயத்தினரை சரியான பாதைக்கிட்டு செல்ல முடியும் எனவும், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.


ஹெட்டியாராச்சியின் இச்செயற்பாடு வரவேற்கதக்கது என தெரிவித்துள்ளார்.பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை.

போதைக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி
Posted in உலக செய்திகள்

ஆண் ஒருவரை நான்கு இளம் பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்

ஆண் ஒருவரை நான்கு இளம் பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்

ஆண் ஒருவரை நான்கு இளம் பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பஞ்சாப்- ஜலந்தரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர்.

இதனையடுத்து காரில் இருந்த இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். அப்போது அந்த பெண்கள் ஸ்பிரே ஒன்றை அவர் மீது அடித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு பறந்தனர்.

பின்னர் மறைவான இடத்தில் காரை நிறுத்தி அவரது கை, கால்களை கட்டி போட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அவர்கள் குடித்துவிட்டு தன்னையும் குடிக்க வற்புறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறினார்.

அதன் பிறகு நான்கு இளம்பெண்களும் மாறி மாறி தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த நபர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதனையடுத்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவரது கை மற்றும் கண்களை கட்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து அவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தவர்கள் என்றும் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும், தன்னிடம் 2 பெண்கள் பஞ்சாப் மொழியில் பேசினர் என அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண்களைத் தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் இது போல் ஒரு ஆணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த 4 பெண்களும் போதையில் இருந்தனரா, எதற்காக இது போல் செய்தனர் என்பதெல்லாம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக பெண்களையும் சிறுமிகளையும் கடத்திச் சென்று தான் பலாத்காரம் செய்து வரும் நிலையில் ஆண் ஒருவரை
இளம்பெண்கள் கூட்டாக பலாத்காரம் செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு முக்கிய அமைச்சுக்கள் தொடர்ந்து ரணில் வசம்
Posted in இலங்கை செய்திகள்

மனித உரிமைகள் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு இடமளிக்க முடியாது

மனித உரிமைகள் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு இடமளிக்க முடியாது

மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடும் எத்தரப்பினரையும் முற்றாக ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரி முதல் பீல்ட் மார்ஷல் வரை அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நேற்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
இந்த விடயத்தைப் பற்றி பேசுவதற்கு முன், நான் நேற்று குறிப்பிட்ட இரண்டு விடயங்களை ஞாபகமூட்ட வேண்டும். ஜனாதிபதியின் மனதில் மூன்று வித அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கூறினார். ஒரு நபருக்கு மூன்று வித அச்சம் ஏற்பட முடியாது என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். விசாலா நகரில் தான் மூன்று வித அச்சம் ஏற்பட்டது. நோய் பற்றிய அச்சம், அமானுஷ்ய அச்சம், மரண அச்சம் என்பன ஒரு சமூகத்தில் ஏற்படலாம். அந்த விடயத்தை தெளிவுபடுத்த ரதன சூத்திரத்தைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒரு மனிதனுக்கு எப்போதும் மூன்று வித அச்சங்கள் ஏற்படுவதில்லை. மரிக்கார் பயம் இருந்தாலும், ஹிருணிகா பயம் இருந்தாலும், ரோசி பயம் இருந்தாலும் அது மூன்று வித அச்சம் ஆகாது.

மேலும், போராட்டத்திற்கு புண்ணியம் கிடைக்க, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று போராட்டத்தை அடக்குகிறார் என நண்பர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மனித உரிமைகள் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு இடமளிக்க முடியாது

போராட்டத்தின் புண்ணியத்தால் அல்ல, இந்த நாட்டின் ஜனாதிபதி போனால், பிரதமர் அந்தப் பதவியை ஏற்க வேண்டும். அதுமட்டுமன்றி சட்டப்படி நான்தான் பதில் ஜனாதிபதியாக இருக்க வேண்டும். இதிலிருந்து வெளியேறுமாறு கூறி எனது வீட்டுக்குத் தீ வைத்தார்கள். ஆனால் நான் விலகவில்லை, அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன்.

எமது எதிர்க்கட்சித் தலைவர், நான் இந்த ஜனாதிபதிப் பதவியை கேட்டு வாங்கியதாக, இன்று கூறினார். நான் இதைக் கேட்கவில்லை. நாட்டின் சூழ்நிலை காரணமாக இதை ஏற்றுக்கொண்டேன்.

மகாநாயக்க தேரர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். நானாக போய் கேட்கவில்லை. நான் கடிதங்கள் எழுதவில்லை. கடந்த மே மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிய கடிதத்தை அவர் இன்று மறந்து விட்டார்.

“ஜனாதிபதி அவர்களே, எதிர்க்கட்சியின் பிரதான கட்சியாக மக்கள் சக்தி கூட்டணியின் தலைமையில் குறுகிய கால அரசாங்கத்தை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் பதவியை ஏற்க நான் தீர்மானிக்கின்றேன்.” என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனது உரையின் பின்னர், இந்த முழு கடிதத்தையும் ஹன்சார்டில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கோட்டாபய ராஜபக்சஷ எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டார். வேண்டுமானால் கட்சி யாப்பில் பார்க்கலாம். ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படலாம். என்னைக் குறை சொல்ல வேண்டாம் அவர்தான் கூறினார், குறைந்தபட்ச காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார்.

எனவே நான் சத்தியப்பிரமாணம் செய்து 02 மாதங்களுக்குப் பின்னர் அவர் பதவியில் இருந்து வெளியேறினார். நீங்கள் தான் அவரைப் போகச் சொன்னீர்கள், நான் அல்ல. அதற்கு நான் என்ன செய்வது?

இராணுவம் பற்றி பேசும் போது இராணுவத்தின் செலவு அதிகரித்துள்ளதாக சிலர் கூறினர். சிலரது கருத்துப்படி இராணுவத்தின் செலவை 24 மணி நேரத்தில் குறைக்க முடியாது. ஒரே நேரத்தில் 25,000 இராணுவ வீரர்களை வீதியில் விட முடியாது. நாங்கள் இப்போது ஒரு திட்டத்தை உருவாக்குகிறோம்.

அதன்படி செயற்பட வேண்டும். இம்முறை அதிக செலவுகளை இராணுவம் ஏற்க வேண்டியிருந்தது. அதை நம்மால் தடுக்க முடியாது. படையினரின் எண்ணிக்கை குறைந்தாலும் பதவி உயர்வுகள் அதிகரித்துள்ளன. இது போன்ற விடயங்களும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன.

மனித உரிமைகள் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு இடமளிக்க முடியாது

இப்போது உணவுப் பாதுகாப்பு திட்டங்களுக்காக இராணுவத்தை நாம் களமிறக்கியுள்ளோம்.

அத்துடன் இராணுவப் பண்ணைகள் மூலம் எமக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது. அந்தப் பொருட்களின் போக்குவரத்துக்கு, தேவையான அளவு இராணுவத்தை பயன்படுத்துமாறும் கூறியுள்ளேன். இராணுவத்தின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக ““Defense 2030″” என்ற அறிக்கையின்படி செயல்படுகிறோம். நமது பாதுகாப்பை நாம் திட்டமிட வேண்டும்.

உலகில் அச்சுறுத்தல் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த நிலைமைகள் மாறி வருகின்றன. 1971 இல் இருந்த அச்சுறுத்தல் அல்ல, 80களிலும் ஈஸ்டர் ஞாயிறன்றும் நடந்தது. இந்த அச்சுறுத்தல்கள் வெவ்வேறு வழிகளில் நடக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் பூகோள அரசியல் எம்மை மையப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து பெரும் வல்லரசுகளும் தலையிட்டுள்ளன. எனவே நாம் இந்து சமுத்திரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2030-க்குள் நமது கடற்படையை அதிகரிக்க வேண்டும்.இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும். விமானப்படையை அதிகரிக்க வேண்டும். ட்ரோனர் தொழில்நுட்பம் தேவை. 2040 இல் இத்தேவை இன்னும் அதிகரிக்கும். இதை எப்படி தொடர்வது என்று நாம் பார்க்க வேண்டும்.

நமது பாதுகாப்புச் செலவைக் குறைத்து அதனை 3% – 4% அளவில் பராமரிக்க வேண்டும். நம்மால் முடிந்தால், நமது பொருளாதார வளர்ச்சியை 8%க்கு கொண்டுவர வேண்டும். அப்போது எம்மிடம் போதுமான நிதி இருக்கும். சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக 8% பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்திருந்ததன் காரணமாகவே அவர்களால் இந்நிலைமைக்கு வரமுடிந்துள்ளது. நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். பழைய முறையில் சிந்திப்பதால் இவற்றைச் செய்ய முடியாது.

அத்துடன் இராணுவத்தில் இருந்து வெளியேறுபவர்கள் சமூகப் பணிகளுக்குப் பங்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும். தொழில்துறை சார்ந்தோர் இன்று நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

நமது இராணுவத்தில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை அந்த இடங்களுக்கு அனுப்புவதன் மூலம் அதனால் உருவாகும் இடைவெளியை நிரப்ப முடியும். அதனால்தான் இராணுவப் பணியில் ஓய்வு பெறும் வயதை 22 இலிருந்து 18 ஆகக் குறைத்துள்ளோம். மற்றவர்களுக்கு இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் இவற்றை புதிதாக திட்டமிட வேண்டும். நாம் புதிதாக சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் புதிய போர்க்கப்பலைத் தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்தப் பலம் நம்மிடம் உள்ளது. பணத்தை மட்டுமே திரட்டிக்கொள்ள வேண்டும்.

பிரித்தானியா 2035 வரை தமக்கு அவசியமான திட்டங்களை வகுத்திருப்பதைக் கண்டேன். நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். நாம் பாதுகாப்பு சபையை சட்டப்படி நிறுவுவோம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி மற்றும் தேசிய பாதுகாப்புச் செயலகம் ஆகியவற்றையும் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, அந்த அதிகாரிகளுக்காக முப்படைக் குழுவொன்றையும் நியமிப்போம். இவற்றை கலந்துரையாடி இந்த சபையில் முன்வைக்கிறேன்.

புதியதாக நல்லதொரு இராணுவத்தை இலங்கையில் உருவாக்க விரும்புகிறோம். இதை செயற்படுத்த, வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரம் ஒன்று தேவப்படுகிறது.
அதேபோன்று, நாம் பொலிஸ் பிரிவு தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் பொலிஸ் பிரிவை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை அறிய “பொதுப் பாதுகாப்பு அறிக்கை” ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளோம். அது குறித்து அமைச்சரிடம் தெரிவித்தேன்.

தற்போது பொலிஸ் கட்டளைச் சட்டம் அருங்காட்சியகத்திற்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளது.

தற்போது கட்டளைச் சட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக நாம் ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

போதைப்பொருள், ஆட்கடத்தல் போன்ற பல பிரச்சினைகள் இன்று உள்ளன. இவற்றிலிருந்து நாட்டை பாதுகாத்தபடி நாம் முன்னேற வேண்டும்.

அன்றைய தினம் இந்த பாராளுமன்றத்தை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாக்க உழைத்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நான் குறிப்பாக நன்றி கூற விரும்புகிறேன். அன்று அவர்கள் இல்லாவிட்டால் இன்று இந்த நாட்டில் பாராளுமன்றமே இருந்திருக்காது. இப்படி உட்கார்ந்து கலந்துரையாட முடியாமல் போயிருக்கும்.

இறைமை மக்களுக்கே உரியது என்று எமது அரசியலமைப்பின் 03 ஆவது சரத்து கூறுகிறது. சட்டமியற்றும் அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை அதிகாரம், சமயம், அடிப்படை உரிமைகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை 04வது பிரிவு விளக்குகிறது . மேலும், மக்கள் நேரடியாக பங்கேற்கும் ஒரே வாய்ப்பு தேர்தல்தான். யாருக்கும் வீதியில் இறங்கி பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது. வன்முறைக்கு இடமில்லை. இராணுவம் இருப்பது இந்த சட்டங்களைப் பாதுகாக்கவே ஆகும்.

அரசாங்கங்கத்தைக் கவிழ்க்க வரும்போது இராணுவம் ஒதுங்கி நிற்க முடியாது. எமது மகாநாயக்க தேரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்போது எம்மால் அமைதியாக இருக்க முடியாது.

அரசியலமைப்பின் 09 ஆவது சரத்தின் பிரகாரம் அவர்களைத் தடுக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு உண்டு. இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமளிக்க முடியாது. மதகுருமார்களை வைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதை அனுமதிக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை.

இன்று சில தேரர்களை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துகின்றனர். பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். தேரர்களுக்கு மதச் செயல்பாடுகள் உண்டு. அந்த நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். இதில் பொதுமக்கள் ஈடுபடுகிறார்கள் என்பது வேறு விடயம்.

ஒரு பல்கலைக்கழக மாணவர் கூட தடுப்புக்காவலில் இல்லை என்பதை கல்வி அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். வசந்த முதலிகே 8-9 வருடங்களாக பல்கலைக்கழக மாணவர்.

நான் 21 வயதில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினேன். முதலிகேவுக்கு வயது 31 என்றாலும் அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரே. ஒரு மாணவருக்கு ஒரு வருடமே மேலதிகமாக வழங்க முடியும். அதன் பிறகு நீங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நானும் மனித உரிமைகளை பாதுகாக்க விரும்புகிறேன்.

அராஜகமும் வன்முறையும் மனித உரிமைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. மனித உரிமைகளைப் பயன்படுத்தி வன்முறை மற்றும் அராஜகத்தை உருவாக்கவும் முடியாது. மனித உரிமைகள் என்ற பெயரில் வன்முறையை ஏற்படுத்துபவர்களை பாதுகாக்க முடியாது.

அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவு நமது அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுகிறது.

அரசியலமைப்பின் பாதுகாப்பு உள்ளிட்ட உட்பிரிவுகள் உட்பட, பொதுப் பாதுகாப்பிற்காக, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவை குறிப்பாக செயல்படுத்தப்படலாம். இவை அனைத்தும் 15/1, 15/2 சரத்துகளில் உள்ளன. இந்த வரம்புகளை மீற முடியாது.

மனித உரிமைகளை காப்பவர்கள் நாங்கள் என்று ஒரு சிலர் இன்று கூறுகிறார்கள், அவர்கள் என்ன செய்தார்கள்? குறைந்த பட்சம் இவற்றை நாம் நடைமுறையில் செய்துள்ளோம். நாங்கள் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளோம். அதற்கு முந்திய அரசாங்கம் ICCPR சட்ட மூலத்தைக் கொண்டு வந்தது.

இவர்கள் மனித உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று வாழ்கின்றனர். அதுதான் யதார்த்தம். யாராவது ஒருவர் சரி எழுந்து நின்று என்னிடம் சொல்லுங்கள் நான் அப்படிச் செய்யவில்லை என்று. இவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நான் தான் அவர்களைப் பாதுகாத்தேன். ஆனால் அவர்கள் இன்று என்னைப் பார்த்தே கூச்சலிடுகிறார்கள். இவ்வாறு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.

சட்டத்திற்கு உட்பட்டு எதையும் செய்யுங்கள். நான் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். நான் ஒத்திவைக்க மாட்டேன். பாராளுமன்றத்தை ஒத்திவைக்க எனக்கு உரிமையும் இல்லை. வீதியில் கூச்சலிடுவதால் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை. கூச்சலிடுபவர்களுக்கு பெரும்பான்மையும் இல்லை. பெரும்பான்மை உள்ளவர்கள் மௌனமாக உள்ளனர். அவ்வாறு அமைதியாக இருக்கும் மக்களுக்கு வாழவும், அவர்களின் உரிமைகளைப் பெறவும் உரிமை உண்டு. அந்த உரிமைகளின்படியே செயல்பட வேண்டும்.

இப்போது மனித உரிமை என்ற போர்வையில் பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய முயல்கிறார்கள். பொலிஸார் மனித உரிமைகளை மீறியிருக்கலாம். அவ்வாறு செய்தவர்கள் இருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம்.

அவசரகாலத்தை உருவாக்கி, கலவரம் போன்றவற்றை ஏற்படுத்தி, அதை தடுக்க பொலிஸாரிடம் செல்லும் போது, பொலிஸார் மீது மனித உரிமை வழக்குகள் தொடரப்படுகின்றன. இது மனித உரிமைகளுக்காக செய்யப்படுவதில்லை, மாறாக பொலிஸாரின் தலையீட்டை நிறுத்துவதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இது தொடர்பில் ஆராயுமாறு நான் சட்டமா அதிபரிடம் கூறினேன். அப்படி செய்தால் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். இந்த விளையாட்டை எப்போதும் தொடர அனுமதிக்க முடியாது.

இராணுவ அதிகாரியாக இருந்தாலும் சரி, பொலிஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி, அனைவரையும் நாம் பாதுகாக்க வேண்டும். மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, எனது தலைமைப் பாதுகாப்பு அதிகாரியையும் பணி நீக்கம் செய்ய முயன்றனர். எனது வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது.

இதன் முக்கிய ஊடகம் சிரச ஆகும். நான் தான் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும். ஆனால் எனது முக்கிய மெய்ப்பாதுகாவலரை நீக்குமாறு அவர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் கேட்கின்றனர். அவர் என்ன தவறு செய்தார்? எனது பிரதான பாதுகாப்புப் பணிப்பாளரையும் நீக்க சிரச விரும்பியது. அவர் அந்த இடத்தில் சம்பந்தப்படவில்லை. எம்மிடம் இருப்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பில் நான் அறிக்கை விடுத்த பின்னர் சிரச ஊடக நிறுவனம் என்னைத் தாக்க ஏழு பேரை அனுப்பியது. ஒவ்வொரு நபரிடமிருந்தும் அறிக்கைகள் எடுக்கப்படுகின்றன. துமிந்த நாகமுவ, விதர்ஷன கன்னங்கர, கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி போன்றவர்களிடம் வாக்குமூலம் பெறுகின்றனர்.

என்னைப் பற்றி பேசுவதற்கு முன், பகிடிவதைகளிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாத்துத் தருமாறு நான் கூறுகின்றேன். பகிடிவதையை எதிர்க்க வேண்டும். அரசாங்கத்தைப் போலவே எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்றே நான் கூறுகின்றேன். அவ்வாறு செய்தால் மீண்டும் வீதிக்கு வந்து அரசாங்கத்தை கவிழ்க்கச் சொல்ல முடியாது.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு சேவையில் உள்ள அனைவருக்கும் உள்ளது. இந்த நிறுவனங்களைப் பாதுகாக்க கோப்ரல் முதல் பீல்ட் மார்ஷல் வரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக அர்ப்பணிப்புடன்
செயல்படும் முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொலிஸ் காரை திருடி சென்ற வெறி குட்டி
Posted in உலக செய்திகள்

பொலிஸ் காரை திருடி சென்ற வெறி குட்டி

பொலிஸ் காரை திருடி சென்ற வெறி குட்டி

சீனா Guangxi மாகாணத்தில் பொலிஸ் காரை அதி போதையில் இருந்த நபர் திருடி சென்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது .

காவல்துறை காரை திருடிய நபர் அதி வேகமாக செழுத்தி சென்று கடை ஒன்றுடன் மோதியுள்ளார் .

இதில் காவல்துறை கார் மற்றும் கடை சேதமடைந்துள்ளது .

குறித்த சம்பவம் அங்கிருந்த மக்களினால் காட்சி பிடிக்க பட்டு தற்போது வெளியிட பட்ட நிலையில் செம வைராலகிய வண்ணம் உள்ளது .

போதை செய்த கோலத்தை பாருங்க .

பிரிட்டனில் கோர விபத்து சிதறிய கார் பெண் பலி
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் கோர விபத்து சிதறிய கார் பெண் பலி

பிரிட்டனில் கோர விபத்து சிதறிய கார் பெண் பலி

பிரிட்டன் A13 in Dagenham. பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று மோதி சிதறியதால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .

குறித்த காரினை நிறுத்தும் படி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்த பொழுதும் ,அதனை செவிமடுக்காது கார் பயணித்த காரணத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

இந்த விபத்தினால் அந்த வழிச்சாலை போக்குவரத்து பல மணித்தியாலம் பாதிக்க பட்டது .

குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ஈரான் துருக்கி எல்லையில் ஈராக் இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள்

ஈரான் துருக்கி எல்லையில் ஈராக் இராணுவம் குவிப்பு

ஈரான் துருக்கி எல்லையில் ஈராக் இராணுவம் குவிப்பு

ஈரான் துர்க்கை எல்லை பகுதியில் தற்பொழுது ஈராக்கிய ஆயுத படிகள் குவிக்க பட்டு எல்லை சோதனைகள் முடுக்கிவிட பட்டுளள்ன .

துருக்கி மற்றும் ஈரான் பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் தகுதல் நடத்தியத்தையே டுத்து தற்போது ,அதி நவீன படை பிரிவினர் வீதி எல்லை கண் கணிப்பு ,மற்றும் சோதனைகள் நடவடிக்கையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

ஈராக் சிரியா ஏழை பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ் போராளிகளை இலக்கு வைத்து ,ஈரான் துருக்கி இராணுவம் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .

நேட்டோ நாடுகளை தாக்கிட தயாராகும் ரசியா |Russia prepares to attack NATO countries
Posted in உளவு செய்திகள்

நேட்டோ நாடுகளை தாக்கிட தயாராகும் ரசியா |Russia prepares to attack NATO countries

நேட்டோ நாடுகளை தாக்கிட தயாராகும் ரசியா |Russia prepares to attack NATO countries

வெற்றி நோக்கி நகரும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள ரசியா ஜனாதிபதி புட்டீன் .

https://www.youtube.com/watch?v=gpsvaml50qk
கொரோனா
Posted in உலக செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிய கட்டுப்பாடுகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிய கட்டுப்பாடுகள்

சீனாவில் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது அந்நாட்டு அரசு.

சமீபகாலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.

கொரோனா கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

சீனாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 31,444 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடத்தவும் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிய கட்டுப்பாடுகள்

இந்நிலையில் செங்சோவின் 8 மாவட்டங்களில் வசிப்பவர்கள் நாளை முதல் 5 நாள்களுக்கு உணவு வாங்கவும், மருத்துவச் சிகிச்சைக்கும் வெளியே வருவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தெற்கில் உள்ள குவாங்சோவின் உற்பத்தி மையத்திலிருந்து வடக்கே பெய்ஜிங் வரையிலான வணிகங்கள் மற்றும் குடியிருப்பு சமூகங்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பெய்ஜிங்கில் ஒரு கண்காட்சி மையத்தில் கொரோனாவுக்கான மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை
அமல்படுத்தப்பட்டு தீவிர கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிள்ளைகள் முன்பாக தாய் கழுத்து வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளைகள் முன்பாக தாய் கழுத்து வெட்டி கொலை

பிள்ளைகள் முன்பாக தாய் கழுத்து வெட்டி கொலை

தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொல்பித்திகம, தல்பத்வெவ பிரதேசத்தில் இருந்து இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் அவரது கணவரைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது பிள்ளையுடன் மனைவி வரும் வழியை மறித்த சந்தேக நபர் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களை துரத்திய சிங்கள கடற்படை

இந்திய மீனவர்களை துரத்திய சிங்கள கடற்படை

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நேற்று (24) மாலை இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்டனர்.

இவ்வாறு துரத்திய சமயம் கடற்படையினர் அவற்றை வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்ததோடு இந்திய படகுகளின் இலக்கங்களையும் குறித்துள்ளனர்.

இதன்போது படகுகள் நின்ற இடங்களை ஜீ.பி.எஸ் கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

13 வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

13 வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி பாத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளன.

அண்மைய நாட்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பெண்களை அனுப்புவது தொடர்பில் முறைகேடுகள் பல இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையிலே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் இலங்கை பெண்களை ஓமான் நாட்டுக்கு கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வாகன விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு வீதி மியாங்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை (24) இடம்பெற்றுள்ளது.

கேகாலையிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைமைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பஸ் வண்டியுடன் மோதியதிலே பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் 33 வயதுடைய அசங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.