காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன்
Posted in இலங்கை செய்திகள்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன்

நாட்டின் துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக துறைமுகங்கள் , கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்தில் அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அலைதாங்கி உட்பட பல்வேறு தேவைகளை உருவாக்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர்; தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கொழும்பு துறைமுகம், கொள்கலன் முனையங்கள் மட்டுமன்றி பயணிகள் கப்பல்களுக்கான துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

=

இந்த வருடத்தில் துறைமுகத்தறையில் சுமார் 39 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.கடந்தவருடத்தில் இத்தொகை 15.5 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் .எதிர்காலத்தில் மேலும் 6 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் கூறினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒடுக்கீடு தொடர்பில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில்,சமகால அரசாங்கம்

துறைமுகத்தின் அபிவிருத்திக்காக பாரிய தொகை நிதியை செலவிட வேண்டியுள்ளது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 480 அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.

இதனை அரசாங்கமே வைத்திருக்க வேண்டுமென துறைமுக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கிழக்கு முனையத்தை அரசாங்கமே மேம்படுத்த வேண்டும்.
இந்த நோகத்துடனேயே அரசாங்கம் செயல்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறினார்.

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

He 02 1பல்வேறு திறன்களைக் கொண்ட விசேட தேவையுடையவர்கள் இருப்பதனால், அவர்களின் படைப்புத் திறமைகளை நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக திறம்பட பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

விசேட தேவையுடையோரின் நலனுக்காக ,புதிய வேலைத்திட்டம்

news.lk Disable Ranilஅரச நிறுவனங்களில் விசேட தேவையுடையோரின் நலன் தொடர்பில் நிலவும் குறைபாடுகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அது தொடர்பில் ஆராய்ந்து அத்துறைகளில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தலைமைச் செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சமூக

வலுப்படுத்துகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளர் நீல்

பண்டார ஹபுஹின்ன, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தலைமைச் செயலகத்தின் பணிப்பாளர் அனுராதா ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போராளிகள் வசம் வீழ்ந்த கிராமங்கள் தப்பி ஓடும் அரச இராணுவம்
Posted in உலக செய்திகள்

போராளிகள் வசம் வீழ்ந்த கிராமங்கள் தப்பி ஓடும் அரச இராணுவம்

போராளிகள் வசம் வீழ்ந்த கிராமங்கள் தப்பி ஓடும் அரச இராணுவம்

சோமாலியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் ,அல் சபா போராளிகள் ,இழந்த தமது பகுதிகளை மீளவும் மீட்டுள்ளனர் .

சோமாலியா  Deynunay நகர் மீளவும் அல் சபா இராணுவத்தினரிடம் வீழ்ந்துள்ளது .

தொடர்ந்து அரச இராணுவம் தப்பி ஓடிய நிலையில் ,இதுவரை மிக முக்கிய இரண்டு நகர் ,அல் சபா போராளிகள் வசம் வீழ்ந்துள்ளது .

ஏமன் படைகள் வசம் இருந்து கிடைக்க பெற்ற அதி நவீன ஆயுதங்களை பயன் படுத்தி ,அல் சபா ஜிகாத் போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

சோமாலியா அரச இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல் .

பலஸ்தீனம் காசா பகுதியில், இஸ்ரேலினால் நிறுவ பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

பலஸ்தீன குழு போராளிகளினால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றே ,இஸ்ரேல் கட்டு பாட்டு பகுதி நோக்கி வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பால்ஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்த கூடும் என ,எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
வீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் மரணம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் மரணம்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் மரணம்

துருக்கி Sakarya மாகாண பகுதியில் இலகுரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .

இதன்பொழுது அந்த விமானத்தில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் .

இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இந்த விபத்து எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவிலை .

Error: View 9293b2au4w may not exist
47 பொக்கோ கராம் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

47 பொக்கோ கராம் சுட்டு கொலை

47 பொக்கோ கராம் சுட்டு கொலை

நையீரியாவில் அரச இராணுவம் நடத்திய திடீர் தேடி அழிப்பு தாக்குதலில் 47 பொக்கோ கராம் அமைப்பினர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் 45 மேற்பட்டவர்கள் காயம்,அடைந்துள்ளதஹ்க நையீரிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

தொடர்ந்து குறித்த போராட்ட குழு மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்
Posted in உலக செய்திகள்

இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்

இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்

மெஸ்சிக்கோ Valparaiso பகுதியில் ஆயுதம் தங்கிய குழுவினர் நடத்திய தாக்குதலில் இரு காவல்துறையினர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

குறித்த பகுதியில் போதைவஸ்து குழுக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிது .

இவர்களை கட்டு படுத்த காவல்துறையினர் நடவாடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

அவ்வாறே காவல்துறையினரை கண்ணுற்ற குழுக்களை அவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .

150 இலட்சத்திற்கு சிறுநீரக விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

150 இலட்சத்திற்கு சிறுநீரக விற்பனை

150 இலட்சத்திற்கு சிறுநீரக விற்பனை

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பாரியளவிலான சிறுநீரகக் கடத்தல் இடம்பெற்றுள்ளது

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பேசப்பட்ட இந்தக் கடத்தல் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்திய நிலையில் விசாரணைகள் கொழும்பு குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் தங்களுடைய சிறுநீரகத்தை வழங்கியுள்ளதாகவும் சந்தேகநபர்களுக்கு ஒரு சிறுநீரகத்திற்காக 150 இலட்சம் கொடுப்பதாக உறுதியளித்த போதிலும் பணம் வழங்கப்படவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஒன்றரை வயது குழந்தையின் தாயாரும் உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இக்குழுவினர் வேறு பல தனியார் மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.

இணையம் மூலம் கடத்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

150 இலட்சத்திற்கு சிறுநீரக விற்பனை

சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகமும் உடனடி நடவடிக்கை எடுத்து, குறித்த வைத்தியசாலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் தற்காலிகமாக நிறுத்தியது.

அத்துடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பூர்வாங்க அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு நியமிக்கப்பட்ட குழுவிற்கு அறிவித்துள்ளது.

குறித்த வைத்தியசாலை தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

அதன் பிரகாரம், இந்த வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் மற்றும் ஏனைய அதிகாரிகளை அழைத்து வாக்குமூலம் பெற உள்ளதாக உக்குஸ்ஸாவுக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளின் முடிவுகள் விரைவில் நாட்டுக்கு தெரியவரும் வரை “அத தெரண உகுஸ்ஸா”
தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கும்.

25 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ
Posted in இலங்கை செய்திகள்

25 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ

25 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ

ஹட்டன் – நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகேகொடையில் இருந்த வெலிமடைக்குச் செல்வதற்காக வந்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

வேகக்கட்டுப்பாடின்மையே இவ்விபத்துக்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துள்ள நிலையில் உயிர்சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கும் ஹட்டன் பொலிஸார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே
விபத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டு,
Posted in இலங்கை செய்திகள்

அடிகாயங்களுடன் வாலிபன் சடலம் குளத்தில் இருந்து மீட்பு

அடிகாயங்களுடன் வாலிபன் சடலம் குளத்தில் இருந்து மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இருந்து இன்று இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

இதில், முல்லைத்தீவு – மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பகிரதன் என்ற இளைஞரே விநாயகபுரம் கந்தன் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திலினி வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

திலினி வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு

திலினி வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வீட்டில் நேற்று (02) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மின்சார சபையை மேற்கோட்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள சுமார் நான்கரை இலட்சம் ரூபாய் மின்கட்டணத்தை செலுத்தாமையே இதற்கு காரணம் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வத்தளை அவெரிவத்தை எட்வர்ட் ஒழுங்கையில் திலினி பிரியமாலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வாடகை அடிப்படையில்
வசித்து வந்த வீட்டிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்சஷவிற்கு நல்லாசி வேண்டி விசேட பூஜை

மஹிந்த ராஜபக்சஷவிற்கு நல்லாசி வேண்டி விசேட பூஜை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவிற்கு நல்லாசி வேண்டி பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.

சர்வதேச இந்துமத பீடம் ஏற்பாட்டில் ஆலய தர்மகர்த்தா ராஜேந்திர செட்டியார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

கெளரவ அதிதியாக இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத், முன்னாள் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பாளர் கலாநிதி இராமச்சந்திர பாபுசர்மா குருக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் அரசியல் பிரமுகர்கள், சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சமய வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின் கோயில் நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்தினார்

பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

நீச்சல் தடாகத்தில் மூழ்கி வாலிபன் பலி

நீச்சல் தடாகத்தில் மூழ்கி வாலிபன் பலி

வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பன்னல, மாகந்துர பகுதியில் மேலதிக வகுப்பு மாணவர்கள் 80 பேர் அந்த பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த நிலையில், குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாணவர்கள் குழு ஒன்று நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது, ​​குறித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

சடலம் ஹலவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான
மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டிக் டாக் எடுக்கும்போது கடலில் விழுந்த இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

டிக் டாக் எடுக்கும்போது கடலில் விழுந்த இளைஞன்

டிக் டாக் எடுக்கும்போது கடலில் விழுந்த இளைஞன்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர் ஒருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார்.

இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் ‘ரிக் ரொக்’ எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை
உயிருடன் மீட்டெடுத்ததுடன், மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்தனர்.

முத்தம்
Posted in இலங்கை செய்திகள்

மாணவனுக்கு முத்தம் கொடுத்த டீச்சர்

மாணவனுக்கு முத்தம் கொடுத்த டீச்சர்

15 வயதுடைய மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியை ஒருவரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் 42 வயதுடைய தாய் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் இருப்பதாகவும், தாயின் சகோதரியிடமே (சித்தி) பாதிக்கப்பட்ட மாணவன் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவனின் சித்தி வீட்டை விட்டுச் சென்றபோது, ​​சந்தேகநபரான ஆசிரியை வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன்போது சித்தி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது, மாணவனும், ஆசிரியையும் ஒன்றாக இருப்பதையும், மாணவனுக்கு ஆசிரியை முத்தம் கொடுப்பதையும் கண்ட சித்தி வெளிநாட்டிலுள்ள தாயாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் தொலைபேசிக்கு ஆசிரியை காதல் வார்த்தைகள் கூறி குறுஞ்செய்தி
அனுப்பியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எயிட்ஸ் நோயினால் 600 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எயிட்ஸ் நோயினால் 600 பேர் பாதிப்பு

எயிட்ஸ் நோயினால் 600 பேர் பாதிப்பு

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் ஒப்பீட்டளவில் பெண்களை விட ஆண்களுக்கே வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துள்ளதாகவும், தொற்றாளர்களில் 20 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற ரீதியில்

பதிவாகியுள்ளதாகவும், இளம் வயதினரிடையே இந்த அதிகரிப்பு காணப்படுவதாகவும் இலங்கை பாலியல் சுகாதார மற்றும் எச்.ஐ.வி மருத்துவ நிபுணர் விசேட வைத்தியர் மஞ்சுளா ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார் .

உலக அளவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 38.4 மில்லியனாகும். கடந்த ஆண்டில் மாத்திரம் 1.5 மில்லியன் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் 0.1 சதவீதத்திற்கும் குறைவானதாகவே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 410 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலான

காலப்பகுதியில் 429 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 600 ஆக பதிவாகலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் மூலமாக ஏனையோருக்கு வைரஸ்
பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. அத்துடன் நீண்டகால மருத்துவ சிகிச்சைகளை பெற்றாக வேண்டும். மேலும் வெறுமனே உடலுறவு மூலமாக

மட்டுமே எச்.ஐ.வி வைரஸ் பரவும் என கருதக்கூடாது. இரத்தம் மூலமாகவும் பரவும். எனவே இரத்ததானம் செய்யும் வேளையிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். தாயிடம் எச்.ஐ.வி தொற்று இருக்குமானால் பிள்ளைகளுக்கு

கடத்தப்படும் எனவும் வைத்தியர் தெரிவித்தார். எனினும் இலங்கையை பொறுத்தவரையில் தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்று

கடத்தப்படாத நாடக இலங்கை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது என்றார்.

.

இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவத்திடமிருந்து ஜனாதிபதிக்கு சிறப்புப் பை

இலங்கை இராணுவத்திடமிருந்து ஜனாதிபதிக்கு சிறப்புப் பை

ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான சிறப்புப் பை (Attaché Case) இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர்களால் இந்த சிறப்புப் பை வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் பயணம் செய்யும் போது முக்கியமான மற்றும் இரகசியமான ஆவணங்களை எடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பையை (Attaché Case) பயன்படுத்துவது மரபாகும்.

இந்த உலக பாரம்பரியத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, சர்வதேச தரத்திற்கு அமைவாக அவ்வாறான பை ஒன்றை உருவாக்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் விசேட பணிப்புரைக்கமைய, இராணுவத் தளபதியின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் விவரக்குறிப்புகளின்படி,

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் தலைமையிலான துறைசார் நிபுணர்கள் குழு, சிறப்பு தொழில்நுட்பத்துடன் தனித்துவமான வடிவமைப்பாக இந்த பையை உருவாக்கியது. .

இது ஒரு ஜனாதிபதிக்கு பின்னர் மற்றுமொரு ஜனாதிபதி பயன்படுத்தக்கூடிய நீடித்து நிலைத்திருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்

விக்ரமசிங்க அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்ததுடன், அதற்கமைய பாதுகாப்பான மற்றும் திட்டமிடப்பட்ட முறையில் உயர்தர தோலைப் பயன்படுத்தி இந்தப் பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கையொப்பத்தைப் பெறுவதற்காக, அமைச்சுகள் நாளாந்தம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அதிக எண்ணிக்கையிலான கோப்புகளை அனுப்புகின்றன, மேலும் ஆவண கோப்புறைகளுக்காக செலவிடப்படும்

பணத்தை குறைக்க அனைத்து அமைச்சுகளுக்கும் இத்தகைய பையை பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், தேவையான பைகளை இராணுவம் தயாரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு உயர்தரத்துடன் வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பையைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டதுடன், இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து கலைஞர்களையும் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட
ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

வங்கி கணக்குகளை ஹேக் செய்த 8 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வங்கி கணக்குகளை ஹேக் செய்த 8 பேர் கைது

வங்கி கணக்குகளை ஹேக் செய்த 8 பேர் கைது

வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்த குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு இரண்டு உக்ரேனியர்கள் மற்றும் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.

நவம்பர் 24 ஆம் திகதி சந்தேக நபர்கள் வணிகரின் வங்கிக் கணக்கிற்கு அனுமதியற்ற அணுகலைப் பெற்று அதிலிருந்து 13.7 மில்லியன் ரூபாயை மற்றுமொரு கணக்குக்கு மாற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் நவம்பர் 30ஆம் திகதி கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, டிசெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கணினி குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த பொலிஸார், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், வங்கிக் கணக்குகளை
அடிக்கடிச் சரிபார்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது - அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது – அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு

ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது – அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு

உக்கிரேனில் ரசியா இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளன .

இந்த போர்க்குற்ற அறிவிப்பின் ஊடாக ரசியாவுக்கு எதிரான நாவடிக்கையை மேற்கொள்ள இரு நாடுகளும் முனைந்து வருகின்றன .

போர் குற்ற சாட்டு அறிவிக்க பட்டால் ,அந்த நாட்டின் தலைவர் ,மற்றும் இராணுவ தளபதிகள் வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியாது .

அவ்வாறு பயணித்தால் ,அவரகள் கைது செய்யப் பட்டு கொலண்டில் உள்ள சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் பார படுத்த படுவார்கள் என்பது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்

பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்

பலஸ்தீனம் மேற்கு கரை காசா பகுதியில் வைத்து ,பலஸ்தீன போராளி குழு ஒன்று மூன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணைகள் மத்திய தரை கடலில் உள்ள, இலக்கை சென்று தாக்கியுள்ளது என்கிறது போராளி குழுக்கள் .

இதன் மூலம் இஸ்ரேல் நாட்டி அணைத்து பாகங்களையும் ,இந்த ஏவுகணைகள் மூலம் தாக்கலாம் என்கிறது குறித்த போராளிகள் அமைப்பு .

பலஸ்தீன போராளிகள் நடத்திய இந்த ஏவுகணை சோதனையை அடுத்து காசா பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள கூடும் என எதிர் பாக்க படுவதால் பதட்டம் நிலவுகிறது .

Error: View 9293b2au4w may not exist