16 நாடுகளில் இருந்து உக்கிரைனுக்கு ஆயுதங்கள்
Posted in உலக செய்திகள்

16 நாடுகளில் இருந்து உக்கிரைனுக்கு ஆயுதங்கள்

16 நாடுகளில் இருந்து உக்கிரைனுக்கு ஆயுதங்கள் .

உக்கிரைனில் ரஸ்யா இராணுவத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ளவும் ,
மேலும் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கவும் ,
16 நாடுகளில் இருந்து ஆயுதங்கள் வழங்க படுகின்றன .

இவ்வாறு வழங்க படும் ஆயுதங்களில் டாங்கிகள்,
கவச வண்டிகள் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ,விமானங்கள்,
பீரங்கிகள் ,பீரங்கி குண்டுகள் என்பன உள்ளடக்க படுகின்றன .

ஒரே தடவையில் பல நாடுகளில் இருந்து
பெருமளவு ஆயுதங்கள் குவிக்க படுகிறது . .

ரசியா என்கின்ற ஒரு நாட்டை எதிர் கொள்ள,
இதுவரை இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் ஆயுத உதவி புரிந்துள்ளன .

எனினும் ரசியாவின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
அடிமேல் அடிவாங்கி உக்கிரைன் நொந்து வெந்து தணிகிறது .

Posted in உலக செய்திகள்

உக்கிரைன் மீது ரஸ்யா கடும் தாக்குதல்

உக்கிரைன் மீது ரஸ்யா கடும் தாக்குதல்

உக்ரேனின் ஐந்து பகுதிகளை இலக்கு வைத்து,
ரஷ்ய இராணுவத்தினர் .குரூஸ் ரக ஏவுகணைகளை கொண்டு ,
கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன .

இந்த தாக்குதல்களால் அந்த பகுதி குண்டுகளினால்
அதிர்ந்த வண்ணம் இருந்ததது .

எனினும் ரசியாவின் இந்த திடீர் ஏவுகணை தாக்குதலில் ,
ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .

வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை ,
ரஸ்யா நடத்தியுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிகின்றன.

வரும் மணித்தியாலங்களில் இதன் சேத விபரங்கள் ,
தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அண்ணாவின் துணையுடன் போதை கொடுத்து சிறுமி துஸ்பிரயோகம்

அண்ணாவின் துணையுடன் போதை கொடுத்து சிறுமி துஸ்பிரயோகம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து,

இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த நிலையில் சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் குன்றிய குறித்தம சிறுமி அண்ணனின் நண்பர்களால் போதைப் பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹெரோயினுக்கு அடிமையான சிறுமியின் அண்ணன் அவனது நண்பர்களிடம் ஆயிரம் ரூபா பணத்தினை வாங்கிவிட்டு நான்கு பேரை அழைத்துக்கொண்டுவந்து சிறுமியுடன் ஒன்றாக இருக்க வைத்துள்ளார்.

அண்ணாவின் துணையுடன் போதை கொடுத்து சிறுமி துஸ்பிரயோகம்

சிறுமியின் தந்தை கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தயார் வீதிவேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது

சிறுமிக்கு இளைஞர்கள் ஒருவகையான இன்ப்பை கொடுத்துவிட்டு அதனை உண்ட சிறுமி மயக்கநிலைக்கு சென்ற நிலையில் சிறுமியினை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

பிரதேச செயல அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக குறித்த சிறுமி 25.01.2023 இன்று மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட போது இந்த விடையம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரியால் புதுக்குடியிருப்பு
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

No posts found.
200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச வங்கியில் ரூ2கோடி பெறுமதியான நகைகள் மாயம்

அரச வங்கியில் ரூ2கோடி பெறுமதியான நகைகள் மாயம்

அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமற்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளே இவ்வாறு மாயமாகியுள்ளன.

கடனைப் பெறுவதற்காக அடகு வைக்கப்பட்ட தங்கப் நகைகளுக்கான வட்டியை புதுப்பிக்க வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றபோது, ​​அவர் அடகு வைத்திருந்த தங்க நகை காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வங்கியின் முகாமையாளர் தலைமைக் காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அரச வங்கியின் மட்டக்களப்பு தலைமை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட உள்ளகப் பரிசோதனையினை மேற்கொண்டனர்.

​​அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களைத் தவிர, வாடிக்கையாளர், மற்ற 12 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள் அடங்கிய பொதிகளையும் காணவில்லை என கண்டறியப்பட்டது.

2022 ஜனவரி முதல் டிசெம்பர் வரை அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள தங்க நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் இரண்டு சாவிகள் வங்கியின் இரண்டு அதிகாரிகளின் வசம் இருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள்
காணாமல் போனமை தொடர்பில் விசேட விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

No posts found.
குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

நேற்று (25) இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசங்குளம் வீதியில் நேற்று பிற்பகல் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பூவரசங்குளம் வீதியில் பயணித்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 41 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், ஹொரணை – கொழும்பு வீதி, பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாலியகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் பின்னால் வந்த பஸ்ஸின் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

யக்கமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மரதன்கடவல – வாழைச்சேனை வீதியில் ஹபரணை பகுதியில் இருந்து மரதன்கடவல நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் சென்றவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கணேவல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 65 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மொரகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்

No posts found.
வீட்டில் இறந்த காட்டு யானை
Posted in இலங்கை செய்திகள்

வீட்டில் இறந்த வீட்டில் இறந்த

வீட்டில் இறந்த காட்டு யானை

காட்டு யானையொன்று வீட்டு முற்றம் ஒன்றில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர் ஏற்றம் பிரதேசத்தில் காட்டு யானையொன்று கடந்த புதன்கிழமை (25) உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
Posted in இலங்கை செய்திகள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான

www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமீத் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

No posts found.
ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்

ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்

ஜேர்மனியின் கீலில் இருந்து ஹாம்பர்க் நோக்கிப் பயணித்த ,
பிராந்திய ரயில் ப்ரோக்ஸ்டெட் நிலையத்திற்கு வருவதற்கு சற்று முன்னர்,
சந்தேக நபர் பல பயணிகளைத் கத்தியால் தாக்கியுள்ளார் .

இதில் இருவர் உயிரிழந்தும் ஏழுபேர் காயமடைந்தனர் .

சந்தேக நபரும் பலத்த காயமடைந்த நிலையில் ,
கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கத்தி தாக்குதலை நடத்தியவர் பலஸ்தீனியர் என தெரிவிக்க பட்டுள்ளது .

இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது .

அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி - ஒருவர் மரணம் 8 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி – ஒருவர் மரணம் 8 பேர் காயம்

அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி – ஒருவர் மரணம் 8 பேர் காயம்

அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடர் ஒன்று ,
திடீரென தீ பிடித்து எரிந்தது .

இதன் பொழுது அதில் ஒருவர் உயிரிழந்தார் ,
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் பலர் தீ பரவியதும் ,
மாடியில் இருந்து உயிர் தப்பிக்க குதித்துள்ளனர் .

இவ்வாறு குதித்தவர்களில் ,
சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த தீ விபத்துக்கான கரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை

​​​​​​​மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை

ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் ,
ஹாங்காங் சரக்கு கப்பல் மூழ்கியது.
முக்கிய கப்பலில் பயணித்த 9 பேரைக் காணவில்லை

ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில்,
செவ்வாய்க்கிழமை இரவு சரக்குக் கப்பல் மூழ்கியது

14 சீனர்கள்,
மற்றும் எட்டு பர்மியர்கள் உட்பட 22 பணியாளர்களுடன்,
ஒரு சரக்கு கப்பல் தென்மேற்கு நாகசாகி மாகாணத்தின் கடற்கரையில் ,
மூழ்கியதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதுவரை 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்

பிலிப்பைன்ஸ் விமானப்படை
பயிற்சி விமானம் ஒன்று படான் மாகாணத்தில் நெல் வயலில் வீழ்ந்து நொறுங்கியது .

இரண்டு விமானிகளுடன் பறந்து கொண்டிருந்த ,
மார்ச்செட்டி SF260 விமானம் விழுந்துள்ளது ..

இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர் .
விமானிகள் சடலங்கள் மீட்க பட்டு எடுத்து செல்ல பட்டுள்ளன .

குறித்த விமான விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

மைக்ரோசொப்ட் சில சேவைகள் முடக்கம்
Posted in உலக செய்திகள்

மைக்ரோசொப்ட் சில சேவைகள் முடக்கம்

மைக்ரோசொப்ட் சில சேவைகள் முடக்கம்

அமெரிக்காவின் முதன்மை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சேவைகள்,
ஒரே நேரத்தில் முடங்கியுள்ளது .

இதனால் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மைக்ரோசொப்ட் ,
பாவணையாளர்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

மைக்ரோசொப்ட் Teams , Outlook சேவைகளும் செயல் இழந்துள்ள நிலையில்
விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மைக்ரோசொப்ட் சில சேவைகள் முடக்கம்இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ளதுஎன தெரிவிக்க படுகிறது

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்
Posted in இலங்கை செய்திகள்

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து ,ஒட்டு கேட்க மட்டும் மக்களின் வேலிகளை எட்டி தட்டி பார்க்கும் ,அரசியல் வியாபாரிகளின் கேடுகெட்ட செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்களின் சேவகர் என கூறும் , இந்த அரசியல் வியாபாரிகள் ,தேர்தல் முடிவுற்றதும் காணாமல் போய்விடுகின்றனர் .

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்


தேர்தல் வரும் பொழுது பிரபாகரனும் ,புலிகளும் மீளவும் உயிர்ப்பிக்க பட்டு
மேடைகளில் புலிகளின் பரப்புரைகள் அவர் தம் பாடல்கள் ஒளிபரப்ப பட்டு ,புலிகளாக மாற்றம் பெறுகின்றனர் .

தேர்தலில் வென்றிட புலிகளை தேடும் இந்த அரசியல் கோமாளிகள் ,தேர்தல் முடிந்ததும் ,புலிகள் மற்றும் ,மக்களை மறந்து விடுவது தொடரத்தான் செய்கிறது .

இவர்களை இவ்வேளை விரட்டியடிக்க வேண்டியது மக்கள் பொறுப்பாகும் .

No posts found.
உக்கிரனுக்கு 200 டாங்கிகள்
Posted in உலக செய்திகள்

உக்கிரனுக்கு 200 டாங்கிகள்

உக்கிரனுக்கு 200 டாங்கிகள்

உக்கிரைன் இராணுவத்தினருக்கு உதவும் முகமாக ,
மேற்குலக மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து ,
உக்கிரனுக்கு 200 டாங்கிகள் வழங்க உள்ளன .

இந்த டாங்கிகள் ,ஜெர்மன்,பிரிட்டன்,போலந்து, அமெரிக்கா ,
உள்ளிட்ட நாடுகள் பிரதானமாக பங்கேற்று வழங்க உள்ளன .

இந்த டாங்கிகள் வருகை ரசியாவுக்கு ,
மிக பெரும் சவாலாக மாற்றம் பெறும் என ,
மேற்குலக நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது .

உக்கிரனுக்கு 200 டாங்கிகள்

எந்த ஆயுதங்கள் வந்தாலும் அதனை உடைத்து தகர்த்து ,
நாம் இலக்கு நோக்கி பயணித்து வெற்றி பொருவோம் ,
என ரசியா வீராப்புடன் தெரிவித்துள்ளது .

மேற்குலக நாடுகளின் ஆயுத பாவனைகளுக்கு எதிராக,
ரசியா ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் ,
புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய ,
ஆயுதங்களை அவசரமாக தயாரித்த வண்ணம் உள்ளன .

அவை விரைவில் களத்திற்கு எடுத்துவர படவுள்ளன .
ஆயுத சோதனைகளின் களமாக ,
தற்போது உக்கிரேன் போர்க்களம் ,
மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

சிசு ஒன்று சடலமாக மீட்பு – 15 வயது சிறுமி கைது

சிசு ஒன்று சடலமாக மீட்பு – 15 வயது சிறுமி கைது

ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை நேற்று (24) காலையில் மீட்டதுடன் சிசிவை பிரசவித்த 15 சிறுமி

ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் அந்த பகுதியிலுள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற

நிலையில் புதிய காட்டுப்பள்ளி வீதியில் உள்ள 15 வயதுடைய சிறுமியின் வீட்டை சோதனை நடவடிக்கையின் போது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டதையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

சிசு ஒன்று சடலமாக மீட்பு – 15 வயது சிறுமி கைது

கர்ப்பமாடைந்த சிறுமி பாடசாலை செல்வதை நிறுத்திய நிலையில் சம்பவதினமான நேற்று காலை 9 மணியளவில் சிறுமி தனது வீட்டில்

குழந்தையை பிரசவித்துள்ளதையடுத்து பிறந்த சிசுவை சிறுமியின் வீட்டின் முன்னாள் உள்ள பாழடைந்த காணியில் வீசி எறிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுமியையும் சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலமாக மீட்ப்பட்ட சிசுவை பிரேத பரிசோதனைக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
ஆபத்தான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி
Posted in உலக செய்திகள்

ஆபத்தான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

ஆபத்தான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும் நடிகருமான விளங்கி வரும் விஜய் ஆண்டனி ,
பிச்சைக்காரன் திரடபடத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் . .

இந்த திரைப்படம் மலேசியாவில் படமாக்க பட்ட பொழுது ,
கடலில் வேகப் படகுகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி சிதறியதில் ,
விஜய் ஆண்டனி முகம் சிதைவடைந்து பலத்த காயங்களுக்கு உள்ளானார் என செய்திகள் பரவின .

தற்போது அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் ,
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ,
ஓய்வு பெற்று வருவதாக முக்கிய நடிகர்கள் ,இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர் .

இதனை அடுத்து பரவிய வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்க பட்டுள்ளது .

ATM கொள்ளைவெளியான புதிய தகவல்
Posted in இலங்கை செய்திகள்

ATM கொள்ளைவெளியான புதிய தகவல்

ATM கொள்ளைவெளியான புதிய தகவல்

கம்பளை பகுதியில் இருந்த ATM இயந்திரத்தை தூக்கிக்கொண்டு முகமூடி அணிந்த திருடர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை – கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் சந்தேக நபர்கள் நால்வர் ATM இயந்திரத்தை முழுமையாக அகற்றி அங்கிருந்து கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வேனில் வந்த முகமூடி அணிந்த நபர்கள், அங்கு பணியில் இருந்த காவலாளியை கட்டி போட்டுள்ளனர்.

பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை அகற்றி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்த கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன்,
பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேனின் சாரதி வேனுக்குள் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்

No posts found.
கிழக்கில் கன மழை 150 M ஆக பதிவு
Posted in இலங்கை செய்திகள்

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,
தேசிய வளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது.

2023 ஜனவரி25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2023 ஜனவரி25ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் தென்கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில்
தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால்
ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No posts found.
தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்
Posted in உலக செய்திகள்

தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்

தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்

அமெரிக்கா தென்-மத்திய வயோமிங்கில் தவறான வழியில் ,
வாகனத்தை சாரதி ஒட்டி சென்றதால் ,
ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர் ,
மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

வயோமிங் நெடுஞ்சாலை காவல்துறை ரோந்து அறிக்கையின் படி,
அலட்சிய போக்கின் காரணமாக , வாகனம் ஓட்டியதாக,
சாரதி கைது செய்யப் பட்டுள்ளார்.

கைதானவர் நீதி விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
இந்த விபத்தினால் அந்த வழி சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்க பட்டது.

கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது
Posted in இலங்கை செய்திகள்

கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது

கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ‘ஸ்ரீலங்காபிமன்ய’ விருது வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதியின் செயலாளர், 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விருதை வழங்குவார் என தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடி சந்தர்ப்பத்தில் கரு ஜயசூர்ய முக்கிய பங்கு வகித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்க, சேர் ஆர்தர் சி. கிளார்க், லக்ஷ்மன் கதிர்காமர், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்,
கிறிஸ்டோபர் கிரிகோரி வீரமந்திரி மற்றும் அஹங்கமகே டியூடர் ஆரியரத்ன ஆகியோர் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

No posts found.