Author: நிருபர் காவலன்
உக்கிரைனில் ரஷ்யா தோற்கும் அமெரிக்கா புற்றினுக்கு எதிராக போர் குரல்| உலக செய்திகள்
உக்கிரைனில் ரஷ்யா தோற்கும் அமெரிக்கா புற்றினுக்கு எதிராக போர் குரல்| உலக செய்திகள்
இலங்கை செய்திகள் |உக்கிரைன் மீதான ஆக்கிரமிப்பு போரில் ரஷ்யா
படு தோல்வியை சந்திக்கும் என போலாந்தில் வைத்து
அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
உக்கிரைன் மீதான ஆக்கிரமிப்பு போரின் ஊடக
நேட்டோவை உடைத்து விடலாம் என , கற்பனை கண்ட
புட்டீன் தோல்வியை தழுவியுள்ளார் .
மேலும் எமது ஆதரவு உக்கிரைனுக்கு இருக்கும் வரை,
ரஷ்யா வெற்றியடையாது என,
அமெரிக்கா ஜனாதிபதி பைடன் தெரிவித்தார் .
அமெரிக்காவின் இந்த பேச்சு ரஷ்யாவை கொதிப்பில்
உறைய வைத்துள்ளது .
உள்நாட்டு கடன் பொறியிலும் சிக்கியுள்ள இலங்கை| இலங்கை செய்திகள்
உள்நாட்டு கடன் பொறியிலும் சிக்கியுள்ள இலங்கை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ஜனவரி முதல் பெப்ரவரி 15 வரையான காலப்பகுதியில், திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பத்திரங்கள் மூலம் அரசாங்கம் 1,033
பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
உள்நாட்டில் பெற்ற கடன்களை செலுத்துவதற்கு கடன்களை பெற்றுக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சினைக்குரிய சூழ்நிலை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு கடனை செலுத்த தவறிய அரசாங்கம் உள்நாட்டு
கடன் பொறியிலும் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை| இலங்கை செய்திகள்
21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும்
செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி, 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கஞ்சா செடிகள் சிக்கின| இலங்கை செய்திகள்
கஞ்சா செடிகள் சிக்கின | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பனாமுர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பனாமுர தொடம்வத்த பகுதியில் நேற்று (21)முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 26,635 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் இதிகாட்டிய மற்றும் முள்எட்டியாவல பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 50 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தள பிரதேசத்தில் கடும் நில நடுக்கம் |இலங்கை செய்திகள்
புத்தள பிரதேசத்தில் கடும் நில நடுக்கம் |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | இலங்கை புத்தளம் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .
ஒரு வினாடி மட்டும் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
பறவைகள் ,மயில்கள் என்பன பலமாக
கத்திய வண்ணம் இருந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் எரிந்து நாசமான மருந்துகள்|இலங்கை செய்திகள்
தீ விபத்தில் எரிந்து நாசமான மருந்துகள்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .
எவ்வாறாயினும், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீ விபத்தில் எரிந்து நாசமான மருந்துகள்|இலங்கை செய்திகள்
நேற்று (21) மாலை 5.45 மணியளவில் மருந்துப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் புகை மூட்டத் தொடங்கியதையடுத்து, வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாகச் செயற்பட்டு அம்பலாங்கொடை பொலிஸாருக்கு அறிவித்து தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
பின்னர் காலி தீயணைப்பு பிரிவினரை வரவழைத்து தீயை அணைத்து பல மருந்துகளை காப்பாற்றியதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினால் மருந்துகளுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை கணக்கிடப்படவில்லை.
அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ள காதலனுடன் இணைந்து கணவன் மாமாமியை வெட்டி கொன்ற மனைவி | உலக செய்திகள்
கள்ள காதலனுடன் இணைந்து கணவன் மாமாமியை வெட்டி கொன்ற மனைவி | உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா கவுதமாவில் மனைவி ஒருவர் தனது கள்ள காதலனுடன் இணைந்து
கணவன் மாமியை வெட்டி கொன்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்
இடம் பெற்றுள்ளது .
கள்ள காதலனுடன் இணைந்து கணவன் மற்றும் மாமியை ,
கொன்று அவர்கள் உடல்களை துண்டு துண்டாக வெட்டி கவுதமாலாவின் பல பகுதிகளில் பையில் கட்டி வீசியுள்ளனர் .
மேற்படி சடலங்கள் உடல்பாகங்கள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,
தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் ,காவல்துறையினர் .
மனைவி மற்றும் அவரது நண்பர் ,கள்ள காதலன் ஆகியோரை கைது
செய்துள்ளனர்
கணவன் மாமியை கள்ள காதலனுடன் இணைந்து ,
மனைவி வெட்டி கொன்ற சம்பவம் ,
நாடு தழுவிய நிலையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
வெடித்து சிதறிய தொழில் சாலை பலர் காயம்| உலக செய்திகள்
வெடித்து சிதறிய தொழில் சாலை பலர் காயம்| உலக செய்திகள்
உலக செய்திகள் | ஓஹியோவின் ஓக்வுட் அருகே உலோகத் தொழிற்சாலை ஒன்றில்,ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,
13 பேர் காயமடைந்துள்ளனர்.
வடகிழக்கு ஓஹியோ அவசரகால மீட்புப் பிரிவுகள் துரிதமாக செயல் பட்டு தேரினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
எனினும் தொழில் சாலை முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது .
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
யாழில் வெள்ளைக்காரியின் 140 ஏக்கர் பண்ணை 10 .000 தென்னைகள்| இலங்கை செய்திகள்
யாழில் வெள்ளைக்காரியின் 140 ஏக்கர் பண்ணை 10 .000 தென்னைகள்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் வெள்ளைக்காரி ஒருவர் 140 ஏக்கரில் பண்ணை செய்கிறார் .
இந்த பண்ணையில் தற்போது 10.000 தென்னைகள் வளர்க்க படுகின்றன .
அதாவது பல்லாண்டு பயிர் செய்கை இடம்பெறுகிறது .
அதற்குள் ஆடு மாடு கோழிகள் ,தென்னை ஏனைய பல்லாண்டு பயிர்களும் உற்பத்தி செய்ய படுகின்றன .
நமது இலங்கையர்கள் அங்கிருந்து மண் சரியில்லை தண்ணி இல்லை என்ற காரணங்களை கூறியவாறு காலத்தை கடத்தியவாறு செல்கின்ற ,கால கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன .
வெள்ளைக்காரியி பெயரில் பெரும் அரசியல் முதலை ஒன்று பணம் விளையாடுகிறது.
சும்மா ஒரு ஆடம்பர கடை போட்டாலே வெள்ளை வான் தந்து நிற்கிறது .இதற்குள்ள அம்மணியை செய்திட இலங்கை அரசு விட போகிறதா என்ன .
காதில பூ கந்தசாமி .ஆனால் அவருக்கு எம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .
மீன்பூனை நடமாடுவதால் முடங்கிய மக்கள் |இலங்கை செய்திகள்
மீன்பூனை நடமாடுவதால் முடங்கிய மக்கள் |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல்ரீ லெதன்டி தோட்டக் குடியிருப்புகளுக்கு அண்மையில், மீன்பூனை(Fish cat) நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் அந்த தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.
மீன்பூனைகள் தங்களுடைய குட்டிகளுடன் இவ்வாறு நடமாடுகின்றன. பற்றைக்காட்டுக்குள் வசிக்கும் இவ்வாறான மீன்பூனைகள், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், கோழிகளை கொன்று தின்றுவிடுகின்றன என்றும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்பூனை நடமாடுவதால் முடங்கிய மக்கள் |இலங்கை செய்திகள்
இவ்வாறு, நேற்று (21) சுற்றித்திரிந்த மீன்பூனைகள் தொடர்பில், நல்லத்தண்ணி வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, தோட்டத்துக்கு விரைந்த அதிகாரிகள், மீன்பூனைகளின் நடமாட்டத்தை அவதானித்தனர்.
தோட்டங்களுக்கு அண்மையில் இருக்கும் பற்றைக்காடுகளுக்கு தீ மூட்டுவதால், இவ்வாறான மிருகங்கள், குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீன்பிடி பூனைகள் மனிதர்களுக்கு எவ்விதமான
தீங்குகளையும் விளைவிக்காத போதிலும்,
செல்லப்பிராணிகளை கொன்று தின்றுவிடுகின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர்.
உக்கிரைனில் ஜோ பைடன் கொதிப்பில் ரஷ்யா |உலக செய்திகள்
உக்கிரைனில் ஜோ பைடன் கொதிப்பில் ரஷ்யா |உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் உக்கிரைன் தலைநகர் வந்தடைந்துள்ளார் .
இவரது வருகையை அடுத்து ரஷ்ய கொதிப்பில் உறைந்துள்ளது .
உக்கிரைன் வெற்றி கொள்ள மேலும் ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது .
உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் அஞ்சாதீர்கள் என்பதை
காண்பிக்க அமெரிக்கா ஜோ பைடன் இந்த பயணம் அமைந்துள்ளது .
பிரிட்டன் பிரதமர் சென்று வந்த பின்னர் ஜோ பைடன் பயணித்திருப்பது குறிப்பிட தக்கது .
காரை ஏற்றி நாய்க்குட்டிகளைக் கொன்ற பெண்ணுக்குப் பிணை|இலங்கை செய்திகள்
காரை ஏற்றி நாய்க்குட்டிகளைக் கொன்ற பெண்ணுக்குப் பிணை|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |நாய் குட்டிகள் இரண்டின் மீது காரொன்றை ஏற்றிய குற்றச்சாட்டின் கீழ் 27 வயதான பெண் ஓட்டுனர் மதுரட்ட பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ரிகிலகஸ்கட வீதி கதுரகடே பட்டியப்பெலெல்ல பகுதியில், வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் கடந்த 17 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
வாகனமேற்றி நாய்க்குட்டிகள் கொல்லப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து மதுரட்ட பொலிஸ்க்கு கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
காரை ஏற்றி நாய்க்குட்டிகளைக் கொன்ற பெண்ணுக்குப் பிணை|இலங்கை செய்திகள்
அந்தப் பெண், பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் அளிக்க வந்த சமயத்தில், மிருகவதைத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அந்தப் பெண், வலப்பன நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டபோது,குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அதனையடுத்து ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் அப்பெண் விடுவிக்கப்பட்டார்.
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி புகையிரத பாதையின் கிரிவல்லபிட்டிய பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 60 வயதுடையவர் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாராளுமன்றத்தினுள் போராட்டம்| இலங்கை செய்திகள்
பாராளுமன்றத்தினுள் போராட்டம்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |தேர்தலை நடத்துமாறு கோரி பாராளுமன்றத்தினுள் சற்றுமுன்னர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது முதல் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் கோரி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டனர்.
தேர்தலை பிற்போடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் முன்னிலையாகி தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர், இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
எனினும், அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அனைத்து அரசியல்
கட்சிகளும் இருக்கையில் இருந்து எழுந்து கண்டன பதாகைகளை ஏந்தியவாறு
சபையின் நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிபதிகளின் வரி குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு| இலங்கை செய்திகள்
நீதிபதிகளின் வரி குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |நீதிபதிகளின் சம்பளத்தில் வருமானம் ஈட்டும் போது வரி செலுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம்
ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்
இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா பஞ்சாப் ஜகட்புர பகுதியில்
நபர் ஒருவரை மூவர் அடங்கிய ரவுடி குழு ஒன்று
இரும்பு கம்பிகள் ,பொல்லுகள் கொண்டு தாக்கும்
காணொளி ஒன்று வைராலகி வருகிறது .
மிக க்கொடூரமாக அந்த வயதான மனிதரை ,
மூன்று தெரு ரவுடிகள் தாக்கும் காட்சிகள் பார்ப்பவர்கள்
பதற வைக்கிறது .
இந்த காணொளியானது காவல்துறைக்கு கிடைக்க ,
பெற்ற நிலையில் மூவரையும் கைது செய்திடும்
நகர்வில் ஈடுபட்டுளள்னர் .
பலத்த எலும்பு முறிவுகளுக்கு உள்ளான நிலையில்
அவர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
பூங்காவில் பதுங்கிய முதலை மடக்கி பிடிப்பு|உலக செய்திகள்
பூங்காவில் பதுங்கிய முதலை மடக்கி பிடிப்பு|உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா தலைநகர் நியூ யார்க்
பகுதியில் பூங்காவில் நான்கு அடி முதலை ஒன்று பிடிக்க பட்டுள்ளது .
குறித்த பூங்காவில் நீருக்குள் பதுங்கிய படி
வருகை தந்த முதலையை இவ்விதம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
குறித்த பகுதியில் பறவை இனங்கள் என்பனவும் உள்ளன .
இந்த முதலை பிடிக்க பட்ட நிலையில் அவை தப்பித்துள்ளதாக அங்கு வருகை தந்த மக்கள் தெரிவித்தனர்.
இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்| இலங்கை செய்திகள்
இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து யப்பான் மிட்சுபிஷி மற்றும் தாய்சே நிறுவனங்கள் என்பன ஓட்டம் எடுக்கின்றன .
இதை போன்று இறுக்கமான கட்டுபாடுகள் தொடர்ந்து நீடிக்குமென்றால்,
ஜெர்மன் நிறுவனங்களும் இலங்கையில் இருந்து ,
வெளியேறும் என ஜேர்மன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது .
தொடர்ந்து தமது அரசியலை பாதுகாக்கும் நோக்கில் ,
குறிவைத்து இலங்கை அரசு செயல்படுகிறது, என்ற குற்ற சாட்டுக்கள்
வலுப்பெற்றுள்ளன .
உக்கிரைன் ரஷ்ய கடும் மோதல் | உலக செய்திகள்
உக்கிரைன் ரஷ்ய கடும் மோதல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |உக்கிரைன் ரஷ்ய இராணுவதிற்கு நடத்த பட்ட
கடும் மோதல்களில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
உக்கிரைன் கிழக்கு பகுதிகளை மீள் கையக படுத்தும் நோக்குடன் ,
பலத்த சூட்டாதாரவுடன் படையெடுப்பை
மேற்கொண்ட ரஷ்ய படைகள் மீது நடத்த பட்ட முறியடிப்பு,
தாக்குதலில்.
சிக்கி 820 ரஷ்யா இராணுவத்தினர் பலியாகியும்
விமானம் மற்றும் ஆறு டாங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக,
உக்கிரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
பலத்த இழப்புக்கள் மத்தியில் பக்மூட் நகரின் நுழைவாயிலை ,
தாம் மீட்டுள்ளதாக ரஷ்யா இராணுவம் அறிவித்துள்ளது .
முன்னரங்க டாங்கிகள் ,பீரங்கிகள், சூட்டு தாக்குதலை ,
நடத்திய வண்ணம் ,ரஷ்யா முனேற்ற நடவடிக்கையை,
மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
இவை இன்றைய முக்கிய எதிரி நியூஸ் ஆக முதன்மை இடம் பிடித்துள்ளது .
கடும் வெள்ளம் 36 பேர் மரணம் | உலக செய்திகள்
கடும் வெள்ளம் 36 பேர் மரணம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரேசில் நாட்டில் இடம் பெற்ற கடும்
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .
ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன .
வீதிகள் பல இடிந்து வீழ்ந்துள்ளது .
இதனால் வீடுகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்க பட்டிருந்த ,
வாகனங்கள் நீரில் மூழ்கியும் ,மண்ணுக்குள் புதைந்து காணப்படுகின்றன .
கனமழை வெள்ள பெருக்கில் ஏற்பட்ட
அனர்த்தம் காரணமாக இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.





































