உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 325 மில்லியனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 325 மில்லியனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் நாட்டின் அவசர வேண்டுகோளை
அடுத்து அமெரிக்கா 325 மில்லியன் டொலர்களுக்கு
முக்கிய ஆயுதங்களை வழங்குகிறது .

இவ்வாறு வழங்க படும் ஆயுத தொகுதியில் ,
கைமஸ் ஏவுகணைகள் ,155 மற்றும் 105 mm ஆட்டிலறி குண்டுகள் ,
டங்கு எதிர்ப்பு ஏவுகணைகள் , தாங்கி கண்ணிவெடிகள் ,
குண்டுகள் உள்ளிட்ட மிக பெருமளவு ஆயுத தளபாடங்கள் வழங்க படுகின்றன .

வரும் வாரம் அளவில் ரஷ்யா மிக பெரும் புதிய ,
யுத்த தந்திரோபயா தாக்குதலை நடத்த தயாராகி வருவதால் ,
இவ்வாறான ஆயுத தொகுதிகளை அவசரமாக அமெரிக்கா வழங்குகிறது .

Error: View 9293b2au4w may not exist
ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
Posted in உலக செய்திகள்

இலவச பணம் வாங்க கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 110 பலி 200 பேர் காயம்

இலவச பணம் வாங்க கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 110 பலி 200 பேர் காயம்

ஏமன் நாட்டில் போரினால் பாதிக்க பட்டு வறுமையில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு தன்னார்வு ஒருங்கிணைப்பு குழு ஒன்று நிதி உதவி வழங்கிட தயாராகி வந்தது .

இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்ள ஆயிர கணக்கில் மக்கள் கூடிய,
கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை
110 பேர் பலியாகினர் ,மேலும் 300 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

காவல்துறையினர் ஆதரவு இன்றி தனித்து செயல் பட்டதால் இந்த பேரவலம்
இடம் பெற்றுள்ளதாக ஏமான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது

Error: View 9293b2au4w may not exist
உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்

உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்

உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்ய நாட்டை சேர்ந்த70வயது பெண்மணிக்கு,ரஷ்ய இராணுவம் 40,000 ruble (£393) தண்டமாக
செலுத்தும் படி கட்டளையிட்டுள்ளது .

தமது நாட்டின் எதிரியை இவ்வாறு அழகன் ,வாலிபன் என
வர்ணித்து ,ரஷ்ய நாட்டை அவமதித்தார் என்ற குற்ற சாட்டில்,
இவருக்கு இந்த தண்டம் அறவிட பட்டுள்ளது .

உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்

கடந்த ஆறு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாக இவை பதிவாகியுள்ளது .


ரஷ்ய இராணுவம் மற்றும் ஜனாதிபதியை இவ்வாறு கீழ்ந் நிலை எண்ணத்துடன் ,வர்ணனைசெய்பவர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வழங்க பட்ட வண்ணம் ,உள்ளமை தொடர்கின்றதை இவை எடுத்து கடடுகின்றன .

Error: View 9293b2au4w may not exist
ஏன் அழுகிறாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் அழுகிறாய்

ஏன் அழுகிறாய்

துணிவு கொண்ட மனிதா – நீ
துளி துளியாய் அழுவதா
இடை வந்த வறுமையால்
இதயம் உடைந்து மாழ்வதா

கவலை இன்று துரத்து
காலில் வேகம் ஏத்து
தெளிவாய் கொஞ்சம் மிதப்பாய்
தேடும் தமிழ் ஆவாய்

முடியாது என்று அஞ்சாதே
முடியும் உன்னால் மறவாதே
சிந்தை தானே முதல் வளமே
செதுக்கு உனை தினமே

நகைத்தாரும் வியக்க வை – இந்த
நாடே மலைக்க வை
நாள் எல்லாம் உனை தினம்
நாடே புகழ வை

முடியும் உன்னால் முன்னேறு
முடிவு தெரிந்து விண்ணேறு
முன் உரையை நீ கூறு
முடிவுரையை நீ மீறு

அழுவதை நிறுத்தி
அகிலம் புரட்டு
ஆனந்தம் கூடும்
அறிவு தேறும்

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-04-2023

மிரட்டும் ரஷ்யா பேய் கப்பல் கடலடியில் கதறும் நேட்டோ
Posted in உளவு செய்திகள்

மிரட்டும் ரஷ்யா பேய் கப்பல் கடலடியில் கதறும் நேட்டோ

மிரட்டும் ரஷ்யா பேய் கப்பல் கடலடியில் கதறும் நேட்டோ

மிரட்டும் ரஷ்யா பேய் கப்பல் நேட்டோ கடலடியில் நாசா வேலை கதறும் நேட்டோ ,பேய் கப்பல்கள் பேயாட்டம் ,மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அமெரிக்காவின் புதிய ஆயுதம் சூடுபிடித்து யுத்தம்
Posted in உளவு செய்திகள்

அமெரிக்காவின் புதிய ஆயுதம் சூடுபிடித்த யுத்தம்

அமெரிக்காவின் புதிய ஆயுதம் சூடுபிடித்து யுத்தம்

அமெரிக்காவின் புதிய ஆயுதம் சூடுபிடித்து யுத்தம் ,ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்தை அடுத்து அமெரிக்கா வழங்கிய பல நூறு மில்லியன் புதிய ஆயுதம் .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்


Error: View 9293b2au4w may not exist
இராணுவம் பயங்கரவாதிகள் மோதல் 24 பேர் பலி
Posted in உலக செய்திகள்

இராணுவம் பயங்கரவாதிகள் மோதல் 24 பேர் பலி

இராணுவம் பயங்கரவாதிகள் மோதல் 24 பேர் பலி

புர்கினா பாசோவில் இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களில்
24 பேர் கொல்லப்பட்டனர்

புர்கினா பாசோவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும்,
இரண்டு தாக்குதல்களில் பாதுகாப்பு படைகள் உட்பட குறைந்தது 24 பேர்
கொல்லப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

டோகோலீஸ் மற்றும் கானா எல்லைகளுக்கு அருகில் உள்ள ,
பிட்டூவில் உள்ள ஒரு கிராமத்தில் மிகக் கொடிய தாக்குதல் நடந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார், இந்த மோதல்களில் 16 துணை ராணுவ வீரர்களும்,நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டதாக கூறினார்.

Error: View 9293b2au4w may not exist
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
Posted in இலங்கை செய்திகள்

36 துப்பாக்கிகள் மீட்பு

36 துப்பாக்கிகள் மீட்பு

அண்மையில் அஹுங்கல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கரந்தெனியவில் உள்ள இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் (MIC) படைப்பிரிவு தலைமையகத்திற்குச் சொந்தமான 36 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 29 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

36 துப்பாக்கிகள் மீட்பு

அதன்படி கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கரந்தெனிய மஇகாவில் சேவைக்காக வழங்கப்பட்ட 36 T-56 துப்பாக்கிகள் அஹுங்கல்ல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குற்றவாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸ் நாயினால் முகாமுக்கு அருகில் உள்ள முட்புதர்களில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஒரு குரங்கிற்கு 25 000 ரூபாய்
Posted in இலங்கை செய்திகள்

ஒரு குரங்கிற்கு 25 000 ரூபாய்

ஒரு குரங்கிற்கு 25 000 ரூபாய்

குரங்குகளை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவிட வேண்டியிருக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் தொடர்பில் “என்ன நடந்தது” நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,

“இந்த திட்டம் சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து எமக்கு வந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களை அமைச்சரவையில் தெரிவிப்போம்.

ஒரு குரங்கிற்கு 25 000 ரூபாய்

இதை செயல்படுத்துவது குறித்து துணைக்குழுவின் ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும். சீனாவில் உள்ள 1000க்கும் அதிகமான உயிரியல் பூங்காக்களுக்கு வழங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அவர்கள் இதனை உடனடியாக செயல்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த மாதம் சுமார் 1000 குரங்குகளை கொண்டு செல்ல அனுமதி கேட்டார்கள்.

ஆனால் அப்படி அனுமதி கொடுக்க முடியாது. ஒரு குரங்கிற்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் செலவிட வேண்டி ஏற்படும்.

விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கூண்டு வகை உள்ளது என்று ஏற்கனவே கூறியுள்ளனர்.

இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டு பேசினாலும் இறைச்சிக்கு விலங்குகளை அனுப்ப மாட்டோம். ஒரு குரங்கை 50,000 அல்லது 75,000 கொடுத்து சாப்பிட அந்த மக்களுக்கு என்ன பைத்தியமா?

ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
Posted in உலக செய்திகள்

ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர சவுதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசும் முயற்சித்தது.

இந்த இரு நாடுகளின் மறைமுக போரால் அந்நாட்டில் வீரர்கள் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது, உலகின் மிக பெரிய மனித பேரிடரில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அந்நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர். இந்த நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில், ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்க முடிவாகி இருந்தது. நிதியுதவியை பெற மக்கள் கூட்டம் பெருகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 78 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

இதுபற்றி அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் காலேக் அல் ஆக்ரி கூறும்போது, வார இறுதியில், இஸ்லாமிய புனித மாதம் ரமலான் முடிவையொட்டி, சிலர் இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

அவர்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இதனால், திட்டமிடல் இன்றி பரவலாக நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது.

அதனை பெற மக்கள் ஓடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில் பலர் உயிரிழந்தும், 13 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

எனினும், இந்த சம்பவங்களை பார்த்து கொண்டு இருந்த, அந்த பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மற்றும் யாஹியா மோசென் ஆகியோர் கூறும்போது, கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் முயற்சியாக துப்பாக்கி ஏந்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வானை நோக்கி சுட்டனர்.

அப்போது, மேலே மின்கம்பி மீது குண்டுபட்டு வெடித்து உள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் தப்பிக்க நாலாபுறமும் ஓடியுள்ளனர் என கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிருபர்கள் உள்பட மக்கள் யாரையும் உள்ளே விடாமல் பள்ளியை பூட்டினர். இந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொலிசாரின் விசாரணை நடந்து வருகிறது.

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பலி

கோர விபத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பலி

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது.

உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது

சிவப்பு முட்டை 920 ரூபாய்
Posted in இலங்கை செய்திகள்

சிவப்பு முட்டை 920 ரூபாய்

சிவப்பு முட்டை 920 ரூபாய்

சிவப்பு முட்டை 920 ரூபாய் இன்று முதல் அமுலாகும் வகையில் முட்டை கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ், இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை நிற முட்டை 880 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு நிற முட்டை 920 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சிவப்பு முட்டை 920 ரூபாய்

அதேநேரம், வெள்ளை நிற முட்டை ஒன்று 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்று 46 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலைக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிர்ணய விலைக்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது

கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன
Posted in உலக செய்திகள்

கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன

கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன

கனடா நாடு வ உக்ரைனுக்கு வழங்கிய Leopard 2 ரக யுத்த டாங்கிகள் வந்தடைந்துள்ளது .

மேற்கு போலந்து வழியாக இந்த டாங்கிகள் எடுத்து செல்ல
படுகின்ற காட்சிகள் வெளியாகி ,
உக்ரைன் வந்தடைந்து விட்டன என்பது ஆதார படுத்தின .

இதே போன்று ஜெர்மன் ,.மேலும் சில நாடுகள் அவசர ஆயுத உதவியாக
இந்த ஆயுதங்களை வழங்கியுள்ளன .

கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன

உக்ரைன் கேர்சன் பகுதிக்கு பயணித்த ,
புட்டீன் அவர்கள், புதிய தாக்குதல்களை நடத்தும் நோக்குடன்
முன் கள தயாரிப்பில் நேரடியாக இறங்கியுள்ளார் .

விரைவில் உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து,
அதிரடி தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது .

இலைதுளிர் காலம் ஆரம்பிக்க பட்ட நிலையில் ,
புதிய வேக தாக்குதல்களை நடத்த ரஷ்ய ,
தயாராகி வருவதை இவை காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா அதிரடி தாக்குதல் 7000 இராணுவம் கைது
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா அதிரடி தாக்குதல் 7000 இராணுவம் கைது

ரஷ்யா அதிரடி தாக்குதல் 7000 இராணுவம் கைது

ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்தியதில் 7000 உக்ரைன் இராணுவம் ரஷ்யா இராணுவத்தினரிடம் சரண் அடைந்துள்ளனர் .


இந்த கைது சம்பவம் உக்கிரைன் இராணுவத்தினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Error: View 9293b2au4w may not exist
பேருந்து விபத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்தில் ஒருவர் பலி 10 பேர் படுகாயம்

பேருந்து விபத்தில் ஒருவர் பலி 10 பேர் படுகாயம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்து கிளிநொச்சி டிப்போக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.

நானு ஓயாவில் பெட்ரோல் குண்டு பொதி சிக்கியது
Posted in இலங்கை செய்திகள்

நானு ஓயாவில் பெட்ரோல் குண்டு பொதி சிக்கியது

நானு ஓயாவில் பெட்ரோல் குண்டு பொதி சிக்கியது

நானு ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிலாஸோ மேல் பிரிவு தோட்டத்தில் பெட்ரோல் குண்டு தயாரிக்க கூடிய உபகரணங்கள் அடங்கிய பொதி ஒன்றை நானு ஓயா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நானு ஓயா பொலிஸாக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிலாஸோ தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (18) மாலை விரைந்த பொலிஸார் தனி வீடொன்றுக்கு அருகில் இருந்து இப் பொதியை கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றியுள்ள பொதியில் பெட்ரோல் நிரப்பப்பட்ட போத்தல்கள்,வயர்கள்,முக்கோண பட்டாசுகள் உட்பட பல பொருட்கள் அடங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிலாஸோ தோட்ட மேல் பிரிவில் தோட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு அப்பால் தனியாக வீடு ஒன்று இருக்கிறது.

நானு ஓயாவில் பெட்ரோல் குண்டு பொதி சிக்கியது

இந்த வீட்டுக்கு அருகில் வாசல் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக அனாதரவாக விடப்பட்ட நிலையில் பரிசு பொதிக்கு ஒட்டப்படும் காகிதத்தில் பொதி செய்யப்பட்ட பெட்டி ஒன்று இருந்துள்ளது.

இதை அருகில் உள்ள வீட்டு பையன் ஒருவன் அவதானித்து வந்துள்ளான். யாரும் இப் பெட்டியை எடுத்து செல்லாத நிலையில் சந்தேகம் கொண்ட அப் பையன் பெட்டிக்குள் என்னதான் இருக்கு என பரிசோதித்துள்ளான்.

அப்போது பெட்டியை பிரித்த போது உள்ளே திரவம் நிரப்பப்பட்ட போத்தல்கள்,

மற்றும் வயர்கள்,பட்டாசுகள் இருப்பதை அவதானித்து இது தொடர்பாக அயலவர்களிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில், நானு ஓயா பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிலாஸோ தோட்டத்திற்கு விரைந்த நானு ஓயா பொலிஸார் பொதியை மீட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தயார் நிலையில் இராணுவத்தினர்
Posted in இலங்கை செய்திகள்

தயார் நிலையில் இராணுவத்தினர்

தயார் நிலையில் இராணுவத்தினர்

கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் குறிப்பிட்டார்.

ரஷ்யா அதிரடிதாக்குகள் இடிந்த கட்டிடங்கள் பலர் காயம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா அதிரடிதாக்குகள் இடிந்த கட்டிடங்கள் பலர் காயம்

ரஷ்யா அதிரடிதாக்குகள் இடிந்த கட்டிடங்கள் பலர் காயம்

ரஷ்ய ராணுவம் வழமைக்கு மாறாக உக்ரைன் கேர்சன் பகுதிமீது,
சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் சிக்க பொதுமகன் ஒருவர் பலியானார்,
மேலும் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .

பலர் கால் ,மற்றும் கைகள் இந்த நிலையில் காண படுகின்றனர் .
டசின் கணக்கான வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன .

ரஷ்யா இராணுவம் பலத்த முன்னேற்ற நகர்வை மேற்கொண்ட
வண்ணம் உள்ளது .

உக்ரைன் கிழக்கு முன்னரங்க நிலையான பக்மூட் .டொன்ஸ்டெக் பகுதிகள் மீது
சரமாரி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பக் மூட் பகுதியை முற்றாக கையக படுத்தும் வெற்றி தாக்குதலை நோக்கி
ரஷ்ய வாடகை இராணுவமான வாக்கினர் குழு நடத்திய வண்ணம் உள்ளது .
குண்டுகளினால் உக்கிரைன் கிழக்கு அதிர்ந்த வண்ணம் உள்ளது .

Error: View 9293b2au4w may not exist
ஜப்பான் கடற்படை கண்காணிப்பு விமானம் வீழ்ந்தது
Posted in உலக செய்திகள்

ஜப்பான் கடற்படை கண்காணிப்பு விமானம் வீழ்ந்தது

ஜப்பான் கடற்படை கண்காணிப்பு விமானம் வீழ்ந்தது

ஜப்பானில் கடலோர காவல்படை விமானம்
விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான ,
இலகுரக விமானம் ஒன்று ,ஒய்டாவின் தென்மேற்கு மாகாணத்தில்
விபத்துக்குள்ளானது,.

அவ்வேளை அதில் இருந்த பணியாளர்கள் இருவர் காயமடைந்ததாக ,
உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்,
உசா நகரில் காலை 10:00 மணிக்கு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதாக ,
கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர் .

காட்டு பகுதியில் விமானம் வீழ்ந்துள்ளதால் மீட்பு ,
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
விபத்து தொடர்பான விசாரணை ஆரம்பிக்க பட்டுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி வெளியானது

தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி வெளியானது

2023 ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைச்சேரி இன்னும் விடுவிக்காததால் ஏப்ரல் 25 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.