Author: நிருபர் காவலன்
பிழையான தகவலை வழங்கிய நபர் கைது
பிழையான தகவலை வழங்கிய நபர் கைது
அக்குரன பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என 118 என்ற அவசர இலக்கத்திற்கு தவறான தகவலை வழங்கிய சந்தேக நபர் ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18 ஆம் திகதி இரவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 118 என்ற அவசர இலக்கத்திற்கு அக்குறன நகரில் ஏதாவது நாசவேலைகள் இடம்பெறும் என தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதன்படி, பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், பல விசேட பொலிஸ் குழுக்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட தகவல் தவறானது என பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
Featured
சிங்கள தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும்
சிங்கள தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும்
எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார்.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு குடிமகன் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது,
அவர் அல்லது அவள் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் கோரலாம். அந்த உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும்
அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் தேசிய மொழிகளாகக் கருதப்படுவதாகவும், ஒரு நாடு என்ற வகையில் அரச துறையில் மட்டுமன்றி வேறு எந்தப் பணியிலும் சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் பிரதான மொழிகளாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் அரச கரும மொழிப்; பாடத்தை கையாள்வதற்கான தனியான பிரிவு ஒன்று இருப்பதாகவும், நாட்டின் அரச கரும மொழிக் கொள்கையை அரசியலமைப்பில் உள்ளடக்கி அதற்கு அதி முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசியலமைப்பிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Featured
எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து
எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து
நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் உயர்ந்த மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் மதிப்பை எடுத்துரைப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
பரஸ்பர நல்லிணக்கத்துடனும், மனிதாபிமான நெருக்கத்துடனும் நாம் நடந்து கொண்டால்,உலகம் இதனைவிட மிகவும் அமைதியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து
பரோபகார அடிப்படையில் சமூகத்தில் வசதியுள்ளோர் இல்லாதோர் இடைவெளியைக் குறைத்து அனைவருக்கும் சகோதரத்துவ கரங்களை நீட்டும் ஒரு வாய்ப்பாகவும் இந்த பெருநாளைக் குறிப்பிடலாம்.
நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்க இவ்வாறான கலாசார,சமய நிகழ்வுகள் மூலம் கிடைக்கின்ற ஆதரவு அளப்பரியது.குறிப்பாக பல்லாண்டு காலம் இந்நாட்டு சகோதர முஸ்லிம் மக்கள் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், இலங்கையின் அடையாளத்தில் முஸ்லிம் சகோதரர்களும் பங்குதாரர்களாவர்.
அதனை நாம் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்வதுடன்,மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் நல்லிணக்கப் பாதைக்கும் துணிச்சலுடன் உழைக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.
Featured
1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிந்தன
1700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிந்தன
வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1,700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் வெப்பதற்கு மத்தியில் வவுனியா வடக்கில் நேற்று(20) மாலை திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.
இதன்போது, வவுனியா வடக்கு ஓடைவெளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காய்த்து அறுவடைக்கு சில வாரங்களே இருந்த 1,700க்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து அழிவடைந்துள்ளன.
அத்துடன், ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் உள்ள விவசாயிகள் பலரின் வாழ்வாதாரமாக இருந்த பப்பாசி, வாழை, கத்தரி உள்ளிட்ட பயன்தரு மரங்களும் புகையிலை செடிகளும் காற்றில் முறிந்து அழிவடைந்துள்ளன.
தமது வாழ்வாதரமாக மேற்கொண்ட பயிர்கள் அழிவடைந்தமை காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
Featured
சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் ஜோடி கைது
சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் ஜோடி கைது
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவன் மனைவி ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்கு வியாழக்கிழமை (21) இரவு 03 பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட கும்பல் கார் ஒன்றில் வந்து இறங்கி , விடுதி மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும் , கண்காணிப்பு கெமரா கட்டுப்பாட்டு தொகுதியை உடைத்து தம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் விடுதி உரிமையாளர் தெரிவித்தார்.
சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் ஜோடி கைது
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விடுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்றின் அலுவலகமொன்று இயங்குவதுடன் உரிமையாளர் அரசியல் கட்சியின் அமைப்பாளராகவும் செயற்படுகிறார்.
ஆனபோதும் அரசியல் கட்சி அலுவலகத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பதுடன் குறித்த தாக்குதலுக்கு தனிப்பட்ட குடும்ப விவகாரமே காரணம் என்று தெரியவருகிறது.
இந்நிலையில் விடுதி உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Featured
இசைக்கு இன்று பிறந்த நாள்
இசைக்கு இன்று பிறந்த நாள்
ஈழம் வாழ எங்களுக்கு
இசை பாடினான்
இறுதி வரை எங்களுக்காய்
உயிர் ஆகினான்
மூச்சடங்கும் வரை எமக்காய்
முன் நிற்பவன்
முன்னே பல தடை வந்தும்
முயல் போல பாய்பவன்
ஆழம் மரமாகி எமக்கு
நிழல் தந்தவன்
அண்ணனவன் அருகிருந்து
ஆசி பெற்றவன்
ஈழம் ஆளும் பொழுது
என்னை ஏற்றவன்
இசை பாடி எனக்கு
உயிர் கொடுத்தவன்
மாலை போட்டு என்னை
மனம் தரித்தவன் -செல்லப்பா
அறம் பலகூறி என்னை
ஆளாக்கி வைத்தவன்
இன்று உந்தன் நாளிலே
இதயமதால் பாடுகிறேன்
இன்று போல என்றும் வாழ
இறைவனிடம் வேண்டுகிறேன் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-04-2023
தமிழீழ தேசிய பாடகர் மாமனிதர் தேனிசை செல்லப்பா ஐயா பிறந்த நாள் வாழ்த்து பா
தேனிசை செல்லப்பாவுக்கு இன்று அகவை 82
தேனிசை செல்லப்பாவுக்கு இன்று அகவை 82
தமிழீழ தேசிய பாடகர் தேனிசை செல்லப்பாவுக்கு இன்று அகவை 82 ஆகும் .
தனது மதுர குரலினால் தேசிய உயிர்ப்புக்கு உரமேற்றி ,
உயிர்கொடுத்து பாடி வீரம் சேர்த்த பெருமகன் .
அறம் வாழ தன் வாழ் நாளை தியாகம் செய்து
விடுதலைக்கு அர்ப்பணித்த பெருமகனார் ,பிறந்த இந்த நாளில் அவரை வாழ்த்தி வணங்குகிறோம்
இன்று போல மேலும் நூறாண்டு வாழ எங்கள் அப்பா ,பாசறை பாணர் செல்லப்பாவுக்கு
இனிய நாள் வீர தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
Featured
பிறந்த நாள் துப்பாக்கி சூடு 4 பேர் பலி 32 பேர் காயம்
பிறந்த நாள் துப்பாக்கி சூடு 4 பேர் பலி 32 பேர் காயம்
அமெரிக்கா அலபாமாவில் ,பிறந்தநாள் விழாவில் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டில் நான்கு வாலிபர்கள் கொல்லப்பட்டனர் மேலும்
32 பேர் காயமடைந்தனர்.
இந்த சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள்
இடம்பெற்று வந்தன .இதன் பொழுது நான்கு இளம் வாலிபர்கள்
கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்த பட்டனர் .
கொலை குற்ற சாட்டை ஒப்புக்கொண்ட குற்றவாளிகளுக்கு
சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ,
ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .
பிரிட்டனில் காரை திருடிய வாலிபர்கள்
பிரிட்டனில் காரை திருடிய வாலிபர்கள்
பிரிட்டன் புறநகர் பகுதி ஒன்றில்,
வீட்டுக்கு முன்பாக இயக்க நிலையில் இருந்த ,
கார் ஒன்றை, வாலிப திருடர்களினால் , திருடி செல்ல முயன்ற
பயங்கரம் நிகழ்ந்துள்ளது .
காரினை திருட முயன்ற வாலிபனை கண்ணுற்றதும் ,
காருக்குள் இருந்து அவரை தள்ளி விழுத்தி காரை காப்பற்றுகிறார் .
,அனால் அந்த திருட்டு வாலிபனோ
சரமாரியாக கார் உரிமையாளரை தாக்குகிறார் .
பிரிட்டனில் காரை திருடிய வாலிபர்கள்
அதன் பின்னேர் பென்ஸ் ரக காரில் தொலைவில் நின்ற குழுவினர்
ஓடி வந்து தாக்குதலை நடத்துகின்றனர் .
மனைவி இதனை கண்ணுற்று போலீசாருக்கு தெரிவிக்கவும் ,
குறித்த திருட்டு குழு அங்கிருந்து தப்பி சென்றது .
மக்களே இவ்வாறு கார்களை லக் அடிக்காது ,
இயக்க நிலையில் விட்டு செல்லாதீர்கள் .
இது ஒரு விழிப்புணர்வு பதிவாக இங்கே பதிவிடுகிறோம் .
விழித்து கொள்ளுங்கள் எம் மக்களே .
தாக்க வந்த விமானங்கள் உடைத்தெறிந்த ஏவுகணைகள்
இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வந்த விமானங்களை
ஏவுகணைகள் பாய்ந்து சென்று
தாக்க வந்த விமானங்கள் உடைத்தெறிந்த ஏவுகணைகள்
இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வந்த விமானங்களை
ஏவுகணைகள் பாய்ந்து சென்று உடைத்தெறிந்தன .
தீயில் எரியும் கிராமங்கள் ,அழிக்க பட்ட மக்கள் வாழ்விடங்கள் .
இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி
இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில்,
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்தியா வீரர்கள்
பலியாகியுள்ளனர் .
இராணுவத்தினரை இலக்கு வைத்து காத்திருந்த தீவிரவாதிகள்
இராணு வண்டி அண்மித்ததும் திடீர் தாக்குதலை நடத்தினர் ,
இதில் பஞ்சாப் ராணுவ வீரர்கள் வாகனம் தீப்பிடித்து எரிந்து,
அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் பலியாகினர் .
இந்திய படைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் ,
இராணுவத்தினர் மத்தியில்
பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் ,
சுற்றி வளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .
பார்ப்பவர்களை மிரள வைக்கும் சீனா இராணுவ நாய்கள்
பார்ப்பவர்களை மிரள வைக்கும் சீனா இராணுவ நாய்கள்
சீனா இராணுவத்தினர் வளர்த்து வரும் நாய்களுக்கான பயிற்சிகள் ,
பார்ப்பவர்களை மிரள வைத்துவருகிறது .
நெருப்பு ,நீர்,மதில்கள் ,வீட்டு கூரைகள் ,முள் கம்பிகள் ,மற்றும் சதுப்பு நிலங்கள் ,என்பனவற்றுக்குள் எவ்வாறு கடக்க வேண்டும் என்பது,
தொடர்பாக பயிற்சிகள் வழங்க படுகின்றன .
நாய்களும் வழங்க படும் பயிற்சிகளை ,
அவை திறம்பட செய்து அசத்தி வருகின்றனர் .
போர் காலங்களில் இந்த நாய்களின் செயல்பாடுகள் ,
குண்டுகள் கண்டு பிடித்தல் ,மனிதர்களை காட்டி கொடுத்தால்,
போன்ற விடயங்களில் முதன்மையான பங்கு வகிக்கும்
என தெரிவிக்க படுகிறது .
இந்த நாய்கள் ஒன்றின் விலை 50 லட்சம் ரூபாய்கள் என படுகிறது .
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 விமானங்கள்
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 விமானங்கள்
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 போர் விமானங்கள் ,
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில்
இஸ்திரேலை சுற்றி ஈரானின் போர் விமானங்கள் ,ஏவுகணைகள் குவிக்க பட்டுள்ளன ,
இதனால் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் விசேட நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி இன்று (21) காலை 8.45 மணியளவில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் தொடக்கம் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரை மக்கள் மதில் ஒன்றை அமைக்க கத்தோலிக்க திருச்சபை இன்று திட்டமிட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 8 மணி முதல் கொழும்பு – நீர்கொழும்பு நெடுஞ்சாலையில் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையில் இந்த மக்கள் மதில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
Featured
புதிதாக 1320 வைத்தியர்கள் நியமனம்
புதிதாக 1320 வைத்தியர்கள் நியமனம்
நாட்டில் வைத்தியர்கள் 1,320 பேருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர்.
புதிதாக 1320 வைத்தியர்கள் நியமனம்
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதுடன், அதிக எண்ணிக்கையான வைத்தியர்கள் ஒரே தடவையில் நியமனம் பெறுவதற்கு முடிந்தமை இந்நாட்டின் சுதந்திர சுகாதார சேவைக்குக் கிடைத்த வெற்றி என சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அத்துடன் தற்போது வருடாந்தம் மருத்துவக் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1,500 இலிருந்து 1,800 வரையாகும். அதனை 5,000 வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய அதனை இலக்காகக் கொண்டு நாட்டின் சுகாதாரத் துறையை எதிர்காலத்தில் மேலும் முன்னேற்றுவதற்கு உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து நாடு பூராகவும் காணப்படும் வைத்தியசாலைகளில் இணைக்கப்படும் புதிய வைத்தியர்கள், வைத்தியப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த வைத்தியர்கள் மாத்திரமே வைத்தியர்களாக நாட்டின் சுகாதாரத் துறையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Featured
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தோற்கடிப்போம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தோற்கடிப்போம்
மகாசங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், பல் இன அமைப்புகள் மற்றும் சிவில் சமூகம் உட்பட பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு
எதிராகவுள்ளதாகவும், மல்வத்து தேரர் கூட இச்சட்டம் மிகவும் பயங்கரமான சட்டம் என குறிப்பிட்டுள்ளார் எனவும், அந்த அறிக்கையை தானும் ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரும் அரச மிருகத்தனம் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் இந்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிப்பதே இந்த அரசாங்கத்தின் ஒரே நோக்கமாக
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தோற்கடிப்போம்
அமைந்துள்ளதாகவும், இந்நோக்கத்தை முறியடிக்க அனைத்து முற்போக்கு சக்திகளையும் திரட்டி வருவதாகவும், பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை போற்றும் அனைவரும் இணைந்து இதனை முறியடித்து பொதுமக்கள் மற்றும்
சிவில் அமைப்புகளுடன் இணைந்து அரசாங்கம் அமுல்படுத்தவுள்ள இந்த சர்வதிகார எதோச்சதிகார சட்டத்தை முற்றாக தோற்கடிக்கத் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Featured
IMF கடமைப்பாடுகளில் ஒன்றை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது
IMF கடமைப்பாடுகளில் ஒன்றை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கண்காணிக்கக்கூடிய திட்டக் கடமைப்பாடுகளில் 25 சதவீதத்தை இலங்கை 2023 மார்ச் மாத இறுதியில் எட்டியுள்ளது. எனினும் முக்கியமான ஒரு பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது.
இது வெரிட்டே ரிசேர்ச் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘The IMF Tracker’ எனும் ஆன்லைன் கண்காணிப்பான் மூலம் தெரியவந்துள்ளது.
இவற்றுள் பல கடமைப்பாடுகள் “முந்தைய நடவடிக்கைகளாக” வகைப்படுத்தப்பட்டதுடன் அவை சர்வதேச நாணய நிதிய சபையின் இறுதி ஒப்புதல் கிடைப்பதற்கு முன்னதாக இலங்கையால் நிறைவேற்றப்பட்டது.
இதன் இறுதி கடமைப்பாடு, ஆன்லைன் வெளிப்படைத்தன்மை தளத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும்.
IMF கடமைப்பாடுகளில் ஒன்றை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது
இது தொடர்பான பின்வரும் தகவல்களை அரையாண்டு அடிப்படையில் குறித்த தளம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது: (i) அனைத்து குறிப்பிடத்தக்க பொது கொள்முதல் ஒப்பந்தங்கள் (ii) முதலீட்டுச் சபையின் கீழ்
வரி விலக்குகளைப் பெறும் அனைத்து நிறுவனங்களின் பட்டியல் (iii) ஆடம்பர வாகன இறக்குமதிகளுக்கு வரி விலக்குகளைப் பெறும் தனிநபர்கள் மற்றும்
நிறுவனங்களின் பட்டியல். அத்தளம் 2023 மார்ச் முதலாம் திகதிக்குள் முழுமைப்படுத்தப்பட வேண்டியிருந்த நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் கூட அது பூரணப்படுத்தப்படவில்லை.
போதுமான தகவல் இல்லாமையும் இதில் கவலைக்குரிய ஒரு விடயமாகும். மார்ச் மாத இறுதியில், கண்காணிக்கப்படக்கூடிய திட்டக் கடமைப்பாடுகளில் 9 சதவீதமானவற்றின் முன்னேற்றம் எமது கண்காணிப்பானில் “unknown
(தெரியாதவை)” என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு எந்தத் தகவல்களும் பொதுவெளியில் கிடைக்கவில்லை.
IMF திட்டத்தில் மேற்கொள்ளப்படும் உரிய நேர முன்னேற்றங்கள் இரண்டு நன்மைகளைக் கொண்டுள்ளது என்று வெரிட்டே ரிசேர்ச் குறிப்பிடுகிறது.
முதலாவதாக, பல (அனைத்தும் அல்ல) செயல்களால் விளையக்கூடிய பொருள் ரீதியான நன்மைகள் ஆகும்.
இரண்டாவதாக, இது இலங்கையின் ஆட்சியின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தி, கடந்த கால கடன் சுமையை மறுசீரமைப்பதற்கும் எதிர்கால பொருளாதார மீட்சிக்கான பாதையை விரைவுபடுத்துவதற்குமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும்.
2023 மார்ச் 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் உள்நோக்கக் கடிதத்துடன் பதிவுசெய்யப்பட்ட 100 அடையாளம் காணப்பட்ட கடமைப்பாடுகளை ‘The IMF Tracker’ தற்போது கண்காணித்து வருகிறது.
இந்த கடமைப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் காலக்கெடுவை நன்கு புரிந்துகொள்வதற்கும் கண்காணிப்பதற்கும் இந்த தளம் இலங்கை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உதவும்.
Featured
அமெரிக்கா நீர் மூழ்கியை சுற்றிவளைத்த ஈரான்
5 மில்லியன் மாயம் விசாரணைக்கு மத்திய வங்கி ஆதரவு
5 மில்லியன் மாயம் விசாரணைக்கு மத்திய வங்கி ஆதரவு
2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது, இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் ரூ. 5 மில்லியன் பெறுமதியான (ரூ. 5,000 நாணயத்தாள் வகை) காசுக்கட்டு குறைவடைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக உள்ளக ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.
5 மில்லியன் மாயம் விசாரணைக்கு மத்திய வங்கி ஆதரவு
பொலிஸ் விசாரணைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை முழுமையாக விசாரணை செய்வதற்கும் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள், செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி எடுத்து வருகின்றது.
பொலிஸ் அதனுடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தொடர்ந்தும் அதன் ஆதரவினை வழங்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது
Featured
ரஷ்ய விமான நிலையத்தில் வீழ்ந்து வெடித்த உக்ரைன் விமானம்
ரஷ்ய விமான நிலையத்தில் வீழ்ந்து வெடித்த உக்ரைன் விமானம்
ரஸ்யா நாட்டுக்குள் உள்ள விமான நிலையம் ஒன்றுக்குள் உக்ரைன்
விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்து சிதறியுள்ளது .
உக்ரைனில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படும் ஆளில்லா விமானம்,
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் வெடித்து சிதறியது.
பிஸ்கோவ் விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கிய ட்ரோனில்
வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .
ரஷ்ய விமான நிலையத்தில் வீழ்ந்து வெடித்த உக்ரைன் விமானம்
இது கமரா பொருத்தப்பட்ட குவாட்காப்டர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளது .
.கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,
விமான நிலையத்தின் மீது திடீரென வீழ்ந்து நொறுங்கியது .
விமான நிலையத்தின் விமானம் நிறுத்தும் பகுதியில் ,
ஆளில்லா விமானம் விழுந்துள்ள பொழுதும் அங்கு
தரித்து நின்ற விமானங்களுக்கு சேதங்கள்
ஏதும் ஏற்படவில்லை என ரஷ்ய தெரிவித்துள்ளது .
இந்த விமான ஊடுருவல் தாக்குதலை அடுத்து ,
பழிவாங்கும் தாக்குதல்களை உக்ரைன் கிழக்கு ,
முன்னரங்க பகுதியில் ரஷ்ய மேற்கொண்ட வண்ணம் உள்ளது .























































