Author: நிருபர் காவலன்
மின்னல் தாக்கத்தில் இருவர் பலி
மின்னல் தாக்கத்தில் இருவர் பலி
மின்னல் தாக்கத்தினால் இருவர் பலியாகியுள்ளனர். அதிலொருவர் 1990 அம்புலன்ஸ் சாரதியாவார்.
மொனராகலை, கொணகங்கார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்தரங்கன்ன பிரதேசத்தில் வயல்வெளியில் வேலைச்செய்துக்கொண்டிருந்த இருவரே பலியாகியுள்ளனர்.
அம்புலன்ஸ் சாரதி (வயது 32), திருமணம் முடிக்காத இளைஞன் (வயது 31) ஆகியோரே கடந்த 27ஆம் திகதியன்று பலியாகியுள்ளனர்.
மின்னல் தாக்கத்தில் இருவர் பலி
வயல்வெளியில் வேலைச் செய்துக்கொண்டிருந்த போது கடுமையான மழை பெய்தமையால், அங்குள்ள வாடியில் இருவரும் அமர்ந்திருந்துள்ளனர். அதில் ஒருவரின் அலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் போதே கடுமையான மின்னல் வெட்டியுள்ளது. அதன் பின்னரே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அவ்விருவரும் இருந்த வாடி தீப்பற்றி எறிவதை கண்ட, சாரதியின் தாய், கூக்குரல் எழுப்பியுள்ளார். அதன்பின்னர், கிராமவாசிகள் இணைந்து வாடிக்குச் சென்றுள்ளனர். எனினும், அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. சுமணசிறி குணதிலக்க
இலங்கை வந்த விமானத்தில் ஒருவர் உயிரிழப்பு
இலங்கை வந்த விமானத்தில் ஒருவர் உயிரிழப்பு
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில், குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல் -605 என்ற விமானத்திலேயே மரணம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரத்னலிங்கம் ராமலிங்கம் என்ற 75 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்
நடாஷா எதிரிசூரிய கைது
நடாஷா எதிரிசூரிய கைது
பௌத்தமதம், பௌத்த பாடசாலைகள் மற்றும் அதில் பயிலும் மாணவ, மாணவிகளை அவமதிக்கும் வகையில் “மொடாஹிமானய” எனும் தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே நடாஷா எதிரிசூரிய, கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கபூரை நோக்கி பயணிப்பதற்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோதே, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் இவர் ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை கையளிக்கப்பட்டார்.
நடாஷா எதிரிசூரிய கைது
கல்கிஸை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதான இந்தப் பெண், மலேசியா கோலாலம்பூரை நோக்கி சனிக்கிழமை (28) அதிகாலை 12.05க்கு புறப்படவிருந்த மலேசியா விமானச் சேவைக்குச் சொந்தமான எம்.எச்.178 என்ற விமானத்திலேயே பயணஞ்செய்யவிருந்தார்.
அந்தப் பெண்ணுடன் பயணம் ஹேன்நாயக முதியன்சலாகே பெத்தும் பண்டார எகொடவத்த என்பவரும் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.
எனினும், நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதன் பின்னர், தன்னுடைய பயணத்தை அவர், கைவிட்டுள்ளார் என்றும், விமான நிலையத்தில் இருந்து அந்நபர் திரும்பிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விருவரும் மலேசியா கோலாலம்பூருக்குச் சென்று அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் சிங்கபூருக்குச் செல்லவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெலன்ஸி சீற்றம் 220 ரஷியன் மற்றும் பெலாரஷ்ய நிறுவனங்களுக்கு தடை
ஜெலன்ஸி சீற்றம் 220 ரஷியன் மற்றும் பெலாரஷ்ய நிறுவனங்களுக்கு தடை
உக்ரைன் ஜனாதிபதி விளாதிமீர் ஜெலன்சி ரஷ்ய மற்றும் ,
பெலேரூஸ் நாடுகளை சேர்ந்த நிறுவங்கள் ,
மற்றும் முக்கிய நபர்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளார் .
இவரது பொருளாதார தடைகள் ஊடாக அந்த நிறுவனம் ,
இயங்க முடியா நிலையிலும் ,உலகளாவிய நிலையில்,
முடக்க படும் நிலைக்கு அழைத்து சென்றுள்ளார் .
ஜெலன்ஸி சீற்றம் 220 ரஷியன் மற்றும் பெலாரஷ்ய நிறுவனங்களுக்கு தடை
இவ்வாறு தடை விதிக்க பட்டவர்களில் ,பல பழுதுபார்க்கும் ,
ஆலைகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் ,
பெலாரஷ்ய நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளார்.
விஞ்ஞானிகள் மற்றும் ஆலை தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட ,
51 ரஷ்ய நபர்களுக்கு எதிராக Zelenskyy பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
தனிநபர்கள் தவிர, ரஷ்யாவுடன் தொடர்புடைய 220 சட்ட நிறுவனங்களுக்கும் பொருளாதாரத் தடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் உக்ரைன் கிழக்கு பகுதிகளில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குளத்தில் வீழ்ந்த போனை மீட்க்க குளத்தை அழித்த அரச அதிகாரி
குளத்தில் வீழ்ந்த போனை மீட்க்க குளத்தை அழித்த அரச அதிகாரி
இந்தியாவில்அரசு அதிகாரி ஒருவர் குளத்தின் அருகே நின்று செல்பி
எடுக்க முயன்றுள்ளார் .அப்பொழுது அந்த சாம்சங் போன் ,
ஒன்று குளத்தில் வீழ்ந்து மூழ்கியது .
சாக் ஆனா அவர் தனது 1200 டொலர் பெறுமதியான கைபேசியை ,
மீட்க அந்த குளத்தில் ,இருந்த 2.1 மில்லியன் லீட்டர் ,
தண்ணியை நீர் இறைக்கு இயந்திரத்தை வைத்து அகற்றியுள்ளனர் .
குளத்தில் வீழ்ந்த போனை மீட்க்க குளத்தை அழித்த அரச அதிகாரி
மூன்று நாள் இவர் மேற்கொண்ட முயற்சியால் குளத்தின் நீர் முற்றாக அகற்ற பட்டது ,
நீரில் வீழ்ந்த போன் மீட்க பட்ட பொழுதும் ,அது பழுதடைந்த
நிலையில் காணப்பட்டுள்ளது .
அதிக வெப்பம் நிறைந்த பகுதியில் நீருக்கு அலையும் ,
இவ் வேளையில் ,தனது அதிகாரத்தை துஷபிரோயகம் செய்து ,
இவர் மேற்கொண்ட இந்த செயலினால் ,இவர் அரச பணியில்
இருந்து நீக்க பட்டார் .
உணவாயு ஆய்வளார்க விளங்கும் ,இந்த அரச அதிகாரியே ,
இவ்வாறு செயல் பட்டுள்ளார் என்பதே
மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இஸ்ரேல் கடற்படையை அலறவிட்ட ஈரான் விமானங்கள்
இஸ்ரேல் கடற்படையை அலறவிட்ட ஈரான் விமானங்கள்
இரு நாடுகளுக்கு இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது
சுத்தம் செய்துகொண்டு இருந்தவரை மோதிய வாகனம்
சுத்தம் செய்துகொண்டு இருந்தவரை மோதிய வாகனம்
அச்சுவேலி – வல்லை, பருத்தித்துறை பிரதான வீதியில், வீட்டுக்கு முன்னால் சுத்தம் செய்து கொண்டு இருந்தவர் மீது வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயங்களுக்குள்ளாகினார்.
இதில் சீனியர் சந்திரகாந்தன் என்ற 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.
வாகனத்தை செலுத்தியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும், இவர் வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்
பாலியல் சேஷ்டை விட்டவர் கைது
பாலியல் சேஷ்டை விட்டவர் கைது
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
சனிக்கிழமை (27) மாலை பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்த மாணவியிடமே குறித்த நபர், பாலியல் சேஷ்டை புரிய முயன்றுள்ளார்..
தாக்குதலுக்குள்ளான மாணவி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியின் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாலியல் சேஷ்டை விட்டவர் கைது
இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் பெண் மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு, சில மாணவிகள் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸாரை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
மணமகள் மீது அசிட் வீச்சு
மணமகள் மீது அசிட் வீச்சு
திருமண வைபவத்துக்கு தயாராகி கொண்டிருந்த மணமகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த அந்தப் பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
மத சடங்குகளுடன் காலி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பெண்ணின் முன்னாள் காதலனே அசிட் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்றும் அவரை தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடித்த குண்டு அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
வெடித்த குண்டு அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா கப்பல் மூழ்கடிப்படும் எச்சரிக்கை .சுற்றி வளைக்கும் அமெரிக்கா கப்பல்களினால் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்
பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்
பதுரலிய, ஹெடிகல்ல காலனி,பொல்துன்ன பிரதேசத்தில் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டதாக கூறப்படும் 24 வயதான பேரனை கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் லீலாவதி விக்ரமசிங்க என்ற பெண்மணியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்மணி, சந்தேக நபர் வசித்து வந்த வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் தனது தாயாருக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி இந்த கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்
பாட்டியின் சிகிச்சைகளுக்காக தாயின் பணம் செலவிடப்படுவதால், ஆத்திரமடைந்து, சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு மதுபானம் அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ள சந்தேக நபர், தனது பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, உடலை அருகில் உள்ள காட்டிற்குள் இழுத்துச் சென்று போட்டுள்ளார்.
சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் குறித்து பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் 23 பேர் சுட்டுக் கொலை அதிர்ச்சி தகவல்
இலங்கையில் 23 பேர் சுட்டுக் கொலை அதிர்ச்சி தகவல்
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸாரின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில், “2019 ஆம் ஆண்டில் 273 கொலைகள் பதிவாகியுள்ளன, 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 2023 இல் 146 நாட்களுக்குள் 239 கொலைகள் பதிவாகியுள்ளன. இது தினசரி 1.6% அதிகரிப்பாகும். இந்த நிலைமை இலங்கைக்கு ஏற்புடையதல்ல.” என்று குற்றப் பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சமூகத்திலும் குற்றவாளிகள் மத்தியிலும் ஆயுதங்கள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுப்பதற்கு வெற்றிகரமான வலுவான புலனாய்வு வலையமைப்பை இலங்கை பொலிஸார் விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
12 நிமிடத்தில் இஸ்ரேலை அழிக்கும் ஈரான் ஏவுகனை பதட்டதில் இஸ்ரேல்
12 நிமிடத்தில் இஸ்ரேலை அழிக்கும் ஈரான் ஏவுகனை பதட்டதில் இஸ்ரேல்
ஈரானின் புதிய ஏவுகனை சோதனை , அணுகுண்டு உலைகளை தாக்கிட தயாராகும் இஸ்ரேல் ,பதட்டமாகும் மத்திய கிழக்கு
ஓய்வது பெற்ற இராணுவத்தினரை போருக்கு அழைக்கும் அரசு- தப்பி ஓடும் இராணுவம்
ஓய்வது பெற்ற இராணுவத்தினரை போருக்கு அழைக்கும் அரசு- தப்பி ஓடும் இராணுவம்
சூராடனில் ஆளும் அரசுக்கு எதிராக துணைப்படைகள்,
கடும் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
சூடானின் பாதுகாப்பு அமைச்சகம், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்,
மற்றும் திறமையான மக்களை ஆயுதம் தாங்கும் படி கோரிக்கை விடுத்துள்ளது .
ஓய்வது பெற்ற இராணுவத்தினரை போருக்கு அழைக்கும் அரசு- தப்பி ஓடும் இராணுவம்
இதனால் ஓய்வு பெற்ற வீரர்கள் நாட்டை விட்டு தப்பி சென்ற வண்ணம் உள்ளனர் .
துணை படைகள் அரச இராணுவத்தின் ஆளுகை ,
பகுதிகள் பலவற்றை மீட்டவாறு முன்னேறிய வண்ணம் உள்ளனர் .
விரைவில் தாலிபான்களை போல சூடனும்,
ஆட்சியை பறிகொடுத்து தப்பி ஓடும் நிலை ஏற்பட போகிறது .என்பதையே
ஆளும் அரசின் சீர் கேடித்தனமான செயல்கள் கோடிட்டு காட்டுகின்றன .
நாயை பறிக்க வந்த ஆயுத திருடனை போட்டு தாக்கிய வீர பெண்
நாயை பறிக்க வந்த ஆயுத திருடனை போட்டு தாக்கிய வீர பெண்
அமெரிக்கா சிகாகோ பெண் ஒருவர், தனது பிரான்ஸ் புள் நாயுடன் ,
நடை பயில வழமை போல சென்றார் .
இதனை கண்காணித்த ஆயுத திருடன் ஒருவன் ,துப்பாக்கி முனையில்
அந்த விலை உயர்ந்த நாயை திருடி செல்ல முயன்றுள்ளான் .
தன்னை தாக்கி ,வெட்டி விட்டு ,அந்த நாயை பறித்து கொண்டு திருடன் தப்பி
ஓடிவிட்டார் .
இந்த நாய்க்கு கள்ள சந்தையில் அதிக மதிப்பு உள்ளதால் ,
பல ஆயிரம் டொலருக்கு விற்பனை செய்திடலாம் என்பதால் ,இந்த நாயை திருடன்
திருடி சென்றுள்ளான் .
இந்த திருட்டு குற்ற சாட்டு தொட்ரபில் ,இதுவரை எவரையும் கைது செய்யப்படவில்லை
பல இளைஞர்களை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது
பல இளைஞர்களை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது
இளைஞர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.
பல இளைஞர்களை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது
அதன்படி, பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை, தெமோதர பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகள் இந்த இரு பெண்களையும் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாளை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களைத் தவிர, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதேவேளை, தென்கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 51 பேரிடம் பண மோசடி செய்து இரண்டரை மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த தென்கொரிய நபர் ஒருவர் கொட்டாவ பகுதியில் வைத்து இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த நபர் அலங்கார மீன் ஏற்றுமதி தொடர்பான தொழில் தொடங்க இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உரிய சட்ட அனுமதி கிடைக்காததையடுத்து, தென்கொரியாவில் இளைஞர்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை ஏமாற்றியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய தென்கொரிய பிரஜை நாளை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு
அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு
அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (26) மாலை 6.30 மணியளவில் அவிசாவளை தல்துவ சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமூடி அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது
மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது
மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்
எரியும் உக்ரைன் நகரங்கள் தப்பி ஓடும் மக்கள்
எரியும் உக்ரைன் நகரங்கள் தப்பி ஓடும் மக்கள்
வெடித்த கடும் யுத்தம் ,மருத்துவமனைகள் மீது ரஷ்ய தாக்குதல்
இலங்கையில் சட்டரீதியாக கஞ்சா பயிர்ச்செய்கை
இலங்கையில் சட்டரீதியாக கஞ்சா பயிர்ச்செய்கை
இலங்கையில் சட்டரீதியாக கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முதலீட்டாளர் ஒருவரதும், முதலீட்டுச் சபையினதும் பங்களிப்புடன், பரீட்சார்த்தமாக கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.











































