இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை

இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை

இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை ,முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாவட்ட 01 ஆம் இலக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சதுன் விதானகே இன்று (30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில், மனுஷ நாணயக்கார சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த வழக்கில் ஆஜரானார்.

இந்தத் தடை உத்தரவு திலக்சிறி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாணயக்காரவுக்கு எதிராக எந்தவொரு அவதூறான அறிக்கைகளை

வெளியிடுவதிலிருந்தோ அல்லது ஈடுபடுவதிலிருந்தோ தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த வழக்கு ஒகஸ்ட் 07 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை
Posted in உலக செய்திகள்

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை

பிரிட்டன் நாடனது ,தமது நாட்டுக்குள் கடல்வழியாக நுழையும் ,
சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ,ரூவாண்டாவுக்கு நாடு கடத்திட தீர்மானித்தது .

இதனை அடுத்து மனித உரிமை அமைப்புகளினால் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்க பட்டது ,அதனை அடுத்து நடந்த பட்ட விசாரணைகளில் நீதிபதி ருவாண்டா நாடானது பாதுகாப்பன அல்லது ,எனவும் ,அவ்வாறு அந்த நாட்டை கருத முடியாதது என தீர்ப்பை வழங்கியுள்ளார் .

லண்டன் ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்ப நீதிமன்றம் தடை

இதனால் ஆளும் சுனெக் ஆட்சிக்கு மிக பெரும் ,
அடியாக இது அமைந்துள்ளது

எதிர் வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று கொள்ளும் நோக்குடன் ,
அகதிகள் வரவை கட்டு படுத்த
ஆளும் சுனெக் ஆட்சி கடும் போக்கை கடை பிடித்து வருகிறது .

இந்த கடும் போக்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருவது,
வேறும் யாரும் அல்ல ,
பிரிட்டனில் அமைச்சராக உள்ள இந்தியா அம்மணி தான்