Author: நிருபர் காவலன்
கொத்து றொட்டியில் பழுதடைந்த இறைச்சி
கொத்து றொட்டியில் பழுதடைந்த இறைச்சி
கடந்த 09ம் திகதி ஆனைப்பந்தியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கொத்து றொட்டி வாங்கிய ஒருவர், பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து றொட்டி காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனிற்கு முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மாநகர பொது சுகாதார பரிசோதகர்கள் குழு குறித்த கடையினை பரிசோதித்தது.
பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்ட நிலையில் உணவகத்திற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் பு.ஆறுமுகதாசனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் கடை சீல் வைக்கப்பட்டது.
கொத்து றொட்டியில் பழுதடைந்த இறைச்சி
இன்றையதினம் (26) வழக்கு நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, உணவக உரிமையாளரிற்கு எதிராக சுமத்தப்பட்ட 09 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என இனங்கண்ட நீதிமன்றம் 45,000 ரூபாய் தண்டம் விதித்தது.
அத்துடன் கடையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கடையினை மீள திறக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்
யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்றிரவு (25) இனந்தெரியாத குழு வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்திய வன்முறைக் கும்பல் தப்பிச் சென்ற நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது
வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது
இராணுவ மயமாக்கல் தற்போது பௌத்த மயமாக்கலாக மாறி வருகின்றது என்றும் தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு, கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளை சட்டங்கங்கள்
தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும்
தெரிவிக்கையில்,
“யுத்தம் முடிவடைந்துள்ள எங்களின் பிரதேசத்தில் யுத்தம் நடைபெறுவதை போன்று இராணுவ
மயமாக்கல் காணப்படுகின்றது. வீதிகள், அரச நிலங்கள் என எல்லா இடங்களிலும் அவர்கள்
இருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது
அவ்வாறு இருந்துகொண்டு இராணுவ முகாம்களில் அவசர அவசரமாக புத்தரின் சிலைகள் மற்றும்
பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிக்கின்றனர். இராணுவ மயமாக்கல் பௌத்த
மயமாக்கலாக மாறியுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற சிறப்புரிமைகளையும் மீறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரனை கைது செய்துள்ளனர். தனியார் காணியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டதை
ஜனநாயக ரீதியில் போராடிய பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதென்றால் சட்டம்,
பல்லிண மக்கள் அற்ற நாடாகதான் இந்த நாட்டை பார்க்க வேண்டியுள்ளது.
ஓர் இனம் இன்னுமோர் இனத்தையும், ஒரு மதம் இன்னுமொரு மதத்தையும் அடக்கி ஆளும்
வகையிலேயே ஆட்சியாளர்கள் செயற்படுகின்றனர்.
இவ்வாறாக இராணுவ மயமாக்கல் மூலம் பெளத்த மயமாக்கலையும், மகாவலி அதிகார சபையின்
மூலம் இனப்பரம்பலை வடக்கு, கிழக்கில் திணிப்பதையும், தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு,
கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அரசாங்கமும்,
ஜனாதிபதியும் இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்
வானில் ஏவுகணை யுத்தம் உடைந்து வீழ்ந்த விமானங்கள்
வானில் ஏவுகணை யுத்தம் உடைந்து வீழ்ந்த விமானங்கள்
வானில் ஏவுகணை யுத்தம் உடைந்து வீழ்ந்த விமானங்கள் ,
எரியும் கட்டடங்கள் அலறும் அபாய ஒலி ,
ஈரான் ஏவுகணையில் 1500 கிலோ குண்டு அலறும் இஸ்ரேல்
ஈரான் ஏவுகணையில் 1500 கிலோ குண்டு அலறும் இஸ்ரேல்
ஈரான் ஏவுகணையில் 1500 கிலோ குண்டு அலறும் இஸ்ரேல் , வெடித்தால் அரை கிலோமீட்டர் பகுதி தூளாகும் ,
தூதுவர் ஜூலி சுங் – ஆளுநர் செந்தில் சந்திப்பு
தூதுவர் ஜூலி சுங் – ஆளுநர் செந்தில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று, வியாழக்கிழமை (25) இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதற்கும் மாகாணத்தின் பலதரப்பட்ட சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் கலந்துரையாடப்பட்டது என்று ஜூலி சுங் டுவிட் செய்துள்ளார்.
பாடசாலைகளுக்கு விடுமுறை
பாடசாலைகளுக்கு விடுமுறை
நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (26) முதல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதால் இவ்வாறு இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது
ஆசிரியர் மீது தாக்குதல் 17 மாணவர்கள் கைது
ஆசிரியர் மீது தாக்குதல் 17 மாணவர்கள் கைது
புத்தளம் – தில்லையடியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது
சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை
சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை
பதின்ம வயது சிசிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறைறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டின் அடிப்படையில் அந்தப் பகுதி இராணுவ முகாமில் பணியாற்றிய இராமச்சந்திர ஆரியரட்ண என்ற இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். அவர் கடமையிலிருந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று நேற்று தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.
மேலும், இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை எதிரி வழங்கவேண்டும் என்பதுடன், 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பளித்தார்
ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி
ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி
ஜப்பானில் வாலிபன் வெறி செயல் ,இரு போலீசார் ஒருபெண்ணை வெட்டியும் ,
சுட்டு கொன்றுள்ள பயங்கரம் இடம்பெற்றுள்ளது .
30 வயதுடைய வாலிபர் இந்த வெறி செயலை செய்துள்ளதாக
போலீசார் தெரிவித்துள்ளனர் .
ஜப்பான் நாகானோ பகுதி காவலப்பிரிவில் கடமையாற்றும் ,
இரு போலீசார் பலியானார்கள் .மேலும் 72 வயது பெண்மணியும் ,
குத்தி கொலை செய்யப் பட்டுள்ளார் .
ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி
என்னை காப்பாற்றுங்கள் என பண்ணை வீடு ஒன்றுக்குள் ,
பெண் அடைக்கலம் தேடினார் ,எனினும்
அதற்குள்ளாக அவர் உயிரிழநதார் .
ஜப்பான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள,
இந்த சம்பவ பின்புலம் ,பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது .
இறந்த மக்கள் போலீசாருக்கு மலர்களை ,
வைத்து, அஞ்சலியை செலுத்தி வருகின்றனர் .
லண்டன் பிரதமர் வீடு கதவை உடைத்த கார்
லண்டன் பிரதமர் வீடு கதவை உடைத்த கார்
பிரிட்டன் பிரதமர் வசிக்கும் டவுனிங் வீதியில் உள்ள,
அவரது வீட்டு கதவை கார் ஒன்று மோதியது .
எனினும் கார் சேதமான நிலையில் காணப்படுகிறது ,
குறித்த காரினை ஒட்டி சென்ற சாரதி ,
கிரிமினல் குற்ற வழக்கில் கைது செய்யப் பட்டுளளார் .
வேகமாக காரை செலுத்தி சென்றதால் ,
இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
கார் நுழையவாயில் கதவுடன் மோதியதை அடுத்து ,
ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
உக்ரைனுக்கு ஆதரவக பிரிட்டன் ஆயுதங்களை வழங்கி வரும் இவ்வேளையில் ,
ஆளும் சுனெக் வசிக்கும் வீட்டு கதவுடன் ,கார் மோதி சிதறியுள்ளமை குறிப்பிட தக்கது .
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 18 பேர் லொறிக்குள் சடலமாக மீட்பு
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 18 பேர் லொறிக்குள் சடலமாக மீட்பு
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக லொறி ஒன்றுக்குள்,
அடைத்து செல்ல பட்டு ,நடத்த பட்ட மனித கடத்தல்
பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
ஆப்கான் நாட்டை சேர்ந்த பதினெட்டு பேர், ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக
பல்கெரியாவில் ,லொறி ஒன்றுக்குள் அடைத்து அழைத்து செல்ல பட்டனர் .
அந்த லொறிக்குள் காற்று ஓட்டம் இல்லாத நிலையில் ,
அவர்கள் யாவரும் மூச்சு திணறி பலியான நிலையில் ,
சடலங்களாக ,பல்கெரியா அதிகாரிகளினால் மீட்க பட்டனர் .
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 18 பேர் லொறிக்குள் சடலமாக மீட்பு
கடந்த மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பிலான ,
வழக்கு விசாரணைகள் முடிவுற்ற பின்னர் ,
தற்போது சடலங்கள் ஆப்கானுக்கு திருப்பி அனுப்பி வைக்க பட்டது .
வெளிநாட்டு வாழ்கை தேடி வரும் நம்மவர்கள் ,
இவ்வாறு உயிர்பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து
செல்கிறது ..
கடல் வழியாக பயணித்த 14.000 பேர் பலியான ,
சோக சம்பவமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
பிரிட்டன் பிரதமர் வீட்டு கதவை உடைத்தெறிந்த கார்
பிரிட்டன் பிரதமர் வீட்டு கதவை உடைத்தெறிந்த கார்
பிரிட்டன் பிரதமர் வீட்டு கதவை உடைத்தெறிந்த கார் ,
குவிக்க பட்ட ஆயுத பொலிஸ் .
பிரிட்டன் பிரதமர் வீட்டு கதவை உடைத்தெறிந்த கார்
மூடப்படும் ஆடைத் தொழிற்சாலைகள்
மூடப்படும் ஆடைத் தொழிற்சாலைகள்
ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,பல்வேறு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மூடப்படும் ஆடைத் தொழிற்சாலைகள்
இந்நிலை நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் கூட பாதிப்பதாகவும், குறித்த ஆடைத் தொழிற்சாலைகள்மூடப்பட்டால்,அங்கு பணிபுரியும் மக்களின் தொழிலுக்கு என்ன நடக்கும் என நினைத்துப் பார்க்கமுடியாதுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பிய போதேஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தையிட்டி விகாரை இரகசியமாக திறந்துவைப்பு
தையிட்டி விகாரை இரகசியமாக திறந்துவைப்பு
சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.
இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் குண்டுதாரிகள் பாதுகாப்பு தீவிரம்
வவுனியாவில் குண்டுதாரிகள் பாதுகாப்பு தீவிரம்
வவுனியா நகரப்பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா – இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலத்திற்கு இன்றைய தினம் சென்ற இருவர் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்குவைத்து இந்த பகுதிக்குள் இரண்டு குண்டுதாரிகள் நடமாடித்திரிவதுடன், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் என்ற தகவலை கூறிச்சென்றுள்ளனர்.
வவுனியாவில் குண்டுதாரிகள் பாதுகாப்பு தீவிரம்
குறித்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் உத்தியோகபூர்வமாக குறித்த தகவல் வவுனியா பொலிஸாரால் எமக்கு வழங்கப்படவில்லை என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தகவல் காரணமாக நகரப் பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
பக்மூட்டை விட்டு வெளியேறும் ரஷ்யா கூலிப்படை
பக்மூட்டை விட்டு வெளியேறும் ரஷ்யா கூலிப்படை
ரஷ்ய கூலிப்படை இராணுவமான வாக்னர் குழு ,
பக்மூட் பகுதியில் இருந்து விலகி செல்கின்றது ,
அவர்கள் கட்டு பட்டது பகுதிகளில் ,
ரஷ்ய அரச இராணுவம் நிலை நிறுத்த பட்டுளள்து .
வாக்னர் குழுவானது முற்றாக எதிர் வரும் யூன் முதலாம் திகதி ,
வெளியேறி விடுவார்கள் என தெரிவித்துளளார் .
பக்மூட்டை விட்டு வெளியேறும் ரஷ்யா கூலிப்படை
ஆதாவது ஆறு நாட்களில் உக்ரைன் கிழக்கு முன்னரங்க,
பக்மூட் பகுதியில் இருந்து விலகி விடுவார்கள் என அறிவித்துள்ளது .
உக்ரைன் போரில் ரஷ்ய வாடகை இராணுவமே பலத்த வெற்றி வாய்ப்புகளை ,
ரஸ்யாவுக்கு ஈட்டி கொடுத்தது .
வாக்னர் குழு விளையாடும் ரஸா இராணுவம் மீது உக்ரன் ,வெளிநாட்டது படைகள் இனைந்து
தாக்குதல் நிகழ்த்த படலாம் என்பதால் முன்னரங்க நிலைகளில் பதட்டம் நிலவுகிறது
ஈரான் புதிய ஏவுகணை சோதனை பீதியில் இஸ்ரேல்
ஈரான் புதிய ஏவுகணை சோதனை பீதியில் இஸ்ரேல்
ஈரான் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் ,
இஸ்ரேல் தலைநகரை தாக்கும் ஏவுகணையால் பீதியில் இஸ்ரேல் ,
ஈரான் புதிய ஏவுகணை சோதனை பீதியில் இஸ்ரேல்
இஸ்ரேல் இராணுவத்திற்குள் நுழைந்து இரகசியங்களை திருடிய ஈரான்
இஸ்ரேல் இராணுவத்திற்குள் நுழைந்து இரகசியங்களை திருடிய ஈரான்
இஸ்ரேல் இராணுவத்திற்குள் நுழைந்து இரகசியங்களை திருடிய ஈரான் ,
இஸ்ரேலை குழப்பி தப்பிய கைக்கர்கள் ,
இஸ்ரேல் இராணுவத்திற்குள் நுழைந்து இரகசியங்களை திருடிய ஈரான்
ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா மற்றும் ஜப்பான் – இலங்கை சங்கம் இணைந்து டோக்கியோவில் நடத்திய காலை உணவு சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கலந்து கொண்டார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவை சந்தித்தார்.
ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
இதன்போது நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மீண்டும் எமது நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு இதன் போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.


















































