Tag: ஐந்தாண்டு காதல்
ஐந்தாண்டு காதல் இரும்புக்கு இரையானது
ஐந்தாண்டு காதல் இரும்புக்கு இரையானது
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் எனஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி (வயது 28) வயதுடைய யுவதியே புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும்
இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
ஐந்தாண்டு காதல் இரும்புக்கு இரையானது
பதுளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கைby நிருபர் காவலன்
- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியதுby நிருபர் காவலன்
- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டதுby நிருபர் காவலன்













