மாம்பழ அறுவடையில் சாதனை
Posted in இலங்கை செய்திகள்

மாம்பழ அறுவடையில் சாதனை

மாம்பழ அறுவடையில் சாதனை

இலங்கையில் மாம்பழ அறுவடை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023ல் நீடித்த வறண்ட வானிலையும், அதைத் தொடர்ந்து பெய்த மழையும் மாம்பழ அறுவடையை அதிகரிக்கச் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மாம்பழங்கள் பயிரிடப்படுவதாகவும், குறிப்பாக ஏற்றுமதிக்காக பயிரிடப்படும் TEJC மாம்பழம், விலை குறைவினால் உற்பத்தி தடைப்படலாம் எனவும் அண்மையில் வலியுறுத்தப்பட்டது.

எனவே, மா பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்த வேண்டுமா என்பது குறித்த அறிவியல் அறிக்கையை தன்னிடம் வழங்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

மாம்பழ அறுவடையில் சாதனை

அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பக்கழக தரவுகளின்படி, இந்நாட்டில் விளையும் அனைத்து வகையான மாம்பழங்களின் வருடாந்த அறுவடை சுமார் 250 மில்லியன் பழங்கள் ஆகும்.

எவ்வாறாயினும், 2023-24 மாம்பழ பருவம் அந்த அளவைத் தாண்டியுள்ளதாக தற்போதைய தரவு உறுதிப்படுத்தியுள்ளது என்று திணைக்களம் கூறுகிறது.

இதன் காரணமாக ரூ.800 முதல்1000 வரை விலை போன 1 கிலோகிராம் TEJC மாம்பழம் தற்போது ரூ. 400 முதல் 500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் யார் மஹிந்த பதில்

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் யார் மஹிந்த பதில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வேட்பாளரை நிறுத்துவது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக மேலும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்களின் விருப்பங்களுக்கு கவனம் செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அமைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாக்குதலை ஆரம்பித்த இரான் எரியும் இராணுவ தளங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

தாக்குதலை ஆரம்பித்த இரான் எரியும் இராணுவ தளங்கள்

தாக்குதலை ஆரம்பித்த இரான் எரியும் இராணுவ தளங்கள்

தாக்குதலை ஆரம்பித்த இரான் எரியும் எதிரிகள் இராணுவ தளங்கள் ,
எகிறி வெடித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ,விமானங்கள்

வீடியோ

இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்

இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்

இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம் ,
சற்றும் எதிர் பாரத கார் தாக்குதல் .

அதிர்ச்சியில் உறைந்துள்ள மக்கள்

வீடியோ

அடி கொடுத்த ஹவுதி மூழ்கும் நிலையில் அமெரிக்கா கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

அடி கொடுத்த ஹவுதி மூழ்கும் நிலையில் அமெரிக்கா கப்பல்

அடி கொடுத்த ஹவுதி மூழ்கும் நிலையில் அமெரிக்கா கப்பல்

செங்கடல் அருகே பயணித்த அமெரிக்காவின்
கழுகு கப்பல் மீது ஏமன் படைகள் கப்பல் ஏவுகணை மூலம் தாக்குதல் .

கப்பல் பலத்த சேதமடைந்த நிலையில் நகர முடியாது சிக்கியுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு வெடித்து பறக்கும் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு வெடித்து பறக்கும் ஏவுகணைகள்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு வெடித்து பறக்கும் ஏவுகணைகள்

காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவ டாங்கிகள்,
காசா போர் படை குழுவால் அழிப்பு .

எல்லையோர கிராமங்களை நோக்கி வெடித்து பறக்கும் ஏவுகணைகள்

வீடியோ

அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஏமன் படைகள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஏமன் படைகள் கடும் தாக்குதல்

அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஏமன் படைகள் கடும் தாக்குதல்

அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஏமன் படைகள் செங்கடலில் வைத்து
கடும் தாக்குதல் .

சேதங்கள் ஏதும் கப்பலுக்கு ஏற்படவில்லை என அமெரிக்கா
தெரிவிப்பு

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

உலகின் முதல்தர நாடாக மாற்றும் புதிய பயணம் பொங்கல் வாழ்த்துச் செய்தி சஜித்

உலகின் முதல்தர நாடாக மாற்றும் புதிய பயணம் பொங்கல் வாழ்த்துச் செய்தி சஜித்

இலங்கைவாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் முகமாக பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாள் தொடர்பில் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

மானுட வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்து நாம் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறோம். உலகிற்கு உயிர் கொடுக்கும் சூரிய பகவானை வழிபடுவது பண்டைய காலத்திலிருந்தே நடந்து வருகிறது. தைப்பொங்கல் பண்டிகை இந்த சூரிய பகவான் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கை மற்றும் மரியாதைக்காக நடத்தப்படும் ஒரு சிறப்பு விழாவாக இந்த தைப்பொங்கள் திருவிழாவை சுட்டிக்காட்டலாம்.

தைப்பொங்கல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறந்த நிகழ்வாகும், மேலும் இந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்ல எண்ணங்களைச் சேர்க்கும் பண்டிகை என்றும் அழைக்கலாம்.

உலகின் முதல்தர நாடாக மாற்றும் புதிய பயணம் பொங்கல் வாழ்த்துச் செய்தி சஜித்

புதிய அறுவடையை சூரிய பகவானுக்கு படைத்து அடுத்து வரும் ஆண்டில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர வேண்டப்படுகின்றது.

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்மிக்க ஆண்டின் முடிவில் இன்னும் பல சவால்களுடன் இன்னுமொரு ஆண்டிற்குள் நுழைந்துள்ளோம்.

இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான இயற்கையின்

ஆசீர்வாதங்களை இந்தத் தைப்பொங்கள் தினத்தில் பெற்று உலகின் முதல்தர நாடாக மாறுவதற்கான புதிய பயணத்திலும் புதிய மாற்றத்திலும் இணைந்து கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை இத்தருணத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

15 000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் திட்டம்

15 000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் திட்டம்

அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் 15,000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வீடு திருத்த வேலைகளுக்காக இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படும் என அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் ஊடாக பயனாளிகளுக்கு இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டு வீடமைப்பு அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 7,650 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15 000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் திட்டம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் முதல் வேலைத்திட்டமாக ‘அனைவருக்கும் வீடு’ வீடமைப்பு கடன் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், கடந்த காலத்தில் பல்வேறு அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட 98,000 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அதிகார சபை கூறுகிறது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தலைவர் ரஜீவ் சூரியாராச்சி

தெரிவித்தார். இது தவிர, 94 கிராமங்களில் 2,063 வீடுகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 690 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 337 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மாத்தளை, கிளிநொச்சி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில வீட்டுக் கிராமங்களின் நிர்மாணப் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக செலவிடப்படும் மொத்தத் தொகை 1,200 மில்லியன் ரூபாவாகும். இதில் 803 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

நிர்மாணப் பணிகளின் இறுதிக்கட்டத்தில் வீடுகளுக்காக 397 மில்லியன் ரூபா பெறப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

15 000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் திட்டம்

இந்திய உதவியின் கீழ் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஒரு பயனாளிக்கு 5 இலட்சம் ரூபாவும், திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் 100,000/= ரூபாவும் மொத்தமாக 6 இலட்சம்ரூபாவும்

உதவித்தொகை மீளப் பெறாத அடிப்படையில் வழங்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

கடந்த 2020-2023 ஆகிய மூன்று ஆண்டுகளில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது தீவு முழுவதும் நிர்மாணிக்க ஆரம்பித்த 37,356 வீடுகளில் 30,894 வீடுகளைப் பூரணமாக நிர்மாணித்து முடித்துள்ளது. மேலும் 6462

வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை, மிஹிந்து நிவஹன, விரு சுமித்துரு, செவன மற்றும் சேவாபிமானி உட்பட 15 வீடமைப்பு உதவித் திட்டங்களின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டுத் திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.18717.771 மில்லியன் ஆகும். இதுவரை 17146.078 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட திட்டங்களுக்குத்

தொடர்புடைய திறைசேரி நிதி, செவன நிதி, உள்ளக உற்பத்தி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் பெறப்பட்ட பணத்தின் மூலம் வீட்டுத் திட்டங்களுக்கான பணம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவிக்கிறது.

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொலிஸ் சுற்றிவளைப்பு 952 சந்தேக நபர்கள் கைது

பொலிஸ் சுற்றிவளைப்பு 952 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் ‘யுக்திய மெஹெயும’ நடவடிக்கையின் கீழ் நேற்று (14) முதல் இன்று (15) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 952 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் அளவுகளில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹெராயின் 276 கிராம்
ஐஸ் 2 கிலோ 98 கிராம்
போதை மாத்திரைகள் 4,310

வீடியோ

தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்

தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் உழவர் திருநாளான தமிழ் தைத்திருநாளினை இன்று (15) கொண்டாடி வருகின்றனர்.

இந்த திருநாளினையொட்டி நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் இன்று அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மலையகத்தில் உள்ள ஆலயங்களிலும் தைத்திருநாளினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ

மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று சூரிய உதயமான 6.34 இற்கு அடுப்பு மூட்டி சூரிய பொங்கல் வைத்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து எல்லாம் வல்ல விநாயகர் பெருமானுக்கு மேள தாள இசை முழங்க,விசேட பூஜைகள் இடம்பெற்று வசந்த மண்டபபூஜை மற்று அலங்கார அபிசேகங்கள் இடம்பெற்றன.

தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்

ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சந்திராநந்த சர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பிரதேசத்தில் உள்ள பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்து மக்களின் தலையாய கடமைகளில் ஒன்றான நன்றி மறவாமை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் தைப்பொங்கல் தொன்று பாரம்பரியமாக கடைபிடித்து வரும் ஒன்றாகும். மனிதனின் வாழ்வாதாரத்திற்கும்

விவசாயத்திற்கும் உதவிய சூரிய பகவான் முதல் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பது இந்த தைப்பொங்களின் அடிப்படை தத்துவமாவதுடன்

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இன்று மலையகம் எங்கும் பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வீடியோ

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை தைத் திருநாள் வாழ்த்து

விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை தைத் திருநாள் வாழ்த்து

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும்.

வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல் திருநாள் குறிக்கிறது. தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு நகரும்போது, நிகழும் மங்களகரமான அறுவடைக் காலத்தின் ஆரம்பமாக தைத்திருநாள் அமைந்துள்ளது.

இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடைக்காக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அறுவடையின் செழுமைக்கு வித்திட்ட இயற்கை, கால்நடைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் மனதார நன்றி கூறுவதே பண்டிகையின் நோக்கமாகும்.

விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை தைத் திருநாள் வாழ்த்து

இரண்டு வருடங்களாக விவசாயிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் நாடு வெற்றிப் பாதைக்குள் பிரவேசிக்கும் வேளையில் தைப்பொங்கல் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகிறது.

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம்.

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாடளாவிய ரீதியில் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. அந்த அனைத்து பணிகளும் வெற்றியளிக்க இம்முறை தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.

அதேபோல் தைப்பொங்கல் நமக்கு சகவாழ்வையும் மதிப்பையும் போதிக்கிறது. அதற்கமைய நாட்டின் எதிர்காலத்துக்கான புதிய எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கு ஒருதாய் மக்களாக முன்னேற்றம் அடைய வேண்டும் என அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளும் அதேநேரம், தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

வீடியோ

இஸ்ரேலை கடுமையாக தாக்க போகிறோம் காசா அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேலை கடுமையாக தாக்க போகிறோம் காசா அறிவிப்பு

இஸ்ரேலை கடுமையாக தாக்க போகிறோம் காசா அறிவிப்பு

இஸ்ரேலை கடுமையாக தாக்க போகிறோம் என
காசா போற படைகள் திரென அறிவிப்பு

வீடியோ

இஸ்ரேலுக்குள் வெடித்த காசாவின் ஆயிரக்கணக்கான ரொக்கட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேலுக்குள் வெடித்த காசாவின் ஆயிரக்கணக்கான ரொக்கட்

இஸ்ரேலுக்குள் வெடித்த காசாவின் ஆயிரக்கணக்கான ரொக்கட்

இஸ்ரேலுக்குள் வெடித்த காசாவின் ஆயிரக்கணக்கான ரொக்கட் ,
அறிவித்த இஸ்ரேல் ,சாதனை படைத்த சமர்களம்

வீடியோ

செங்கடலில் இரு கப்பல்கள் விபத்தில் சிக்கின ஹவுதி தாக்குதலா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

செங்கடலில் இரு கப்பல்கள் விபத்தில் சிக்கின ஹவுதி தாக்குதலா

செங்கடலில் இரு கப்பல்கள் விபத்தில் சிக்கின ஹவுதி தாக்குதலா

செங்கடலில் வழியாக பயணித்த இரு சரக்கு
கப்பல்கள் விபத்தில் சிக்கின கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது .

ஹவுதி தாக்குதலால் இவை விபத்தில் சிக்கினவா என்பது தொடர்பாக
அவை ஏதும் தெரிவிக்கவில்லை

வீடியோ

பிரிட்டனில் பங்கு சந்தையை குழப்பி சரிவை ஏற்படுத்த முனைந்த 6 பலஸ்தீனியர் கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பிரிட்டனில் பங்கு சந்தையை குழப்பி சரிவை ஏற்படுத்த முனைந்த 6 பலஸ்தீனியர் கைது

பிரிட்டனில் பங்கு சந்தையை குழப்பி சரிவை ஏற்படுத்த முனைந்த 6 பலஸ்தீனியர் கைது

பிரிட்டனில் பங்கு சந்தை வர்த்தகத்துக்கு இடையூறு விளைவித்து மிக பெரும் இழப்பை ஏற்படுத்த முனைந்த பலஸ்தீனத்தை சேர்ந்த ஆறு பேரை தாம் கைது செய்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது

இவ்வாறு கைதானவர்களில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் என தெரிவிக்க பட்டுள்ளது .

திங்கட்கிழமை பங்கு வர்த்தகத்தை குழப்பும் நோக்குடன் இவர்கள் செயல்பட திட்டமிட்ட நிலையில், லீவர்போல் ,கிழக்கு லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறது காவல்துறை .

வீடியோ

ஹவுதிகள் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை அமெரிக்கா கவலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹவுதிகள் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை அமெரிக்கா கவலை

ஹவுதிகள் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை அமெரிக்கா கவலை

ஹவுதி படைகள் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை .

சுரங்கத்தில் பதுக்கியுள்ளதால் கண்டுபிடிக்க முடியவில்லை என
அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது

வீடியோ

லெபனான் தாக்குதலில் இஸ்ரேல் படைகள் பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

லெபனான் தாக்குதலில் இஸ்ரேல் படைகள் பலர் காயம்

லெபனான் தாக்குதலில் இஸ்ரேல் படைகள் பலர் காயம்

லெபனான் போர் படைகள் நடத்திய தாக்குதலில்,
இஸ்ரேல் இராணுவ படைகள் பலர் காயம் அடைந்துள்ளதாக
தெரிவிப்பு .

காசா போர் படைகளை ஆதரிப்பதாக ஈரான் அறிவிப்பு

வீடியோ

பொருளாதார நெருக்கடியால் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொருளாதார நெருக்கடியால் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்

பொருளாதார நெருக்கடியால் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்

ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில்

வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் களையிழந்து காணப்படுகின்றன.

மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் மன்னார் மாவட்டத்தில் வீதிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

ஒரு சில கடைகளில் மாத்திரம் கரும்புகளையும் பொங்கல் விற்பனை பொருட்களையும் காணக்கூடியதாக உள்ள போதும் அந்த கடைகளும் மக்கள் வரவில்லாமல் வெறிச்சோடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம்

இஸ்ரேல் தலைநகர் ஹைபா துறைமுக அண்மித்த பகுதியில் பாரிய
வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம் .

இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அடித்து மூட பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

வீடியோ