Author: நிருபர் காவலன்
கட்டுநாயக்கவில் மின்சார தூண்டிப்பினால் விமான பயணங்கள் தாமதம்
கட்டுநாயக்கவில் மின்சார தூண்டிப்பினால் விமான பயணங்கள் தாமதம்
இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்சார தூண்டிப்பால் மூன்று நாடுகளுக்கான விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டதாக விமான நிலையம் அறிவித்துள்ளது ,எனினும் இந்த மின்சார தூண்டிப்பிற்கான காரணம் தெரியவரவிலை
அயோத்தில் பாபர் மசூதியில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் உத்தரவு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
‘இந்த வழக்கில் தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது.
பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை.
மசூதி கட்டப்பட்ட இடத்தில் கட்டுமானம் இருந்ததை தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது.
ஆங்கிலேயர் வருகைக்கு முன், அந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தி உள்ளனர் என்பது பயணக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
எனவே, சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம்.
இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும்’ என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்களை கடலுக்குச செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
மீனவர்களை கடலுக்குச செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
இலங்கை கடல் பகுதியில் மீனவர்களை செல்ல வேண்டாம் என தெரிவிக்க பட்டுள்ளது ,பலத்த புயல் கரையோரங்களை தாக்கும் என்பதால இந்த அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது ,மக்களே உசார்
புயல் தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்ட 15 வீடுகள்
புயல் தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்ட 15 வீடுகள்
இலங்கையை தாக்கிய கோர புயலில் சிக்கி சுமார் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன ,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பாதிக்க பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளது ,தொடர்ந்து புயல் தாக்கம் இருக்கும் என தெரிவிக்க படுகிறது

கோட்டாவே ஜனாதிபதி ஆவர் – விமல் வீரவன்சா முழக்கம்
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய மிக சிறந்த வெற்றியை பெறுவார் என விமல் வீரவன்ச முழங்கியுளளார் .இவருக்கு எதிராக பல சூழ்ச்சிகள் மேற்கொள்ள பாடுவதாகவும் அதனை முறையடித்து இவர் உரிய வெற்றியை தீர்க்க தரிசனமாக பெறுவார் என அடித்து விட்டுள்ளார் .இறுதி சுற்று பிரச்சாரங்கள் தீவிரம் பெற்று வரும் நிலையில் களம் சூடு பிடித்துள்ளது
பிரதமர் பதவி பறிபோகும் கவலையில் – ரணில்
இலங்கையில் ஆளும் பிரதமர் பதவி பறிபோகும் கவலையில் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,புதிய பிரதமரை தெரிவு செய்வேன் என சஜித் முழங்கி வரும் நிலையில் இலங்கை அரசாரசியல் அமைப்புக்கு அமைவாக தான செயல் படுவேன் என ரணில் தெரிவித்துள்ளதுடன் ஜனநாயகத்தை பல படுத்த வேண்டிய தேவையும் உள்ளது என அவர் சுட்டி காட்டியுள்ளார்
மன்னார் மாவட்டத்தை சொர்க்க புரிபோல மாற்றுவேன் – சஜித்
மன்னார் மாவட்டத்தை சொர்க்க புரிபோல மாற்றுவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் ,இதனால் இவரது அலை அங்கு ஓங்கி வீசுகிறது ,வாக்குறுதிகளி அள்ளி வீசி வருகின்றார்
கட்டுநாயக்க வான் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு
இலங்கை கட்டு நாயாக்க வான்நிலையத்தில் இன்று திடீரென மின்சாரம் துண்டிக்க பட்டது ,இதனால் அங்கு பயணிகள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது .இந்த மின்சார தூண்டிப்புக்கான காரணம் தெரியவரவில்லை
என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு
என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு
சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர். கமல் இந்த விழாவில் பேசத் தொடங்கியதும் ரஜினியை ஆர்.கே அவர்களே என்று அழைத்து தொடங்கினார்.
அவர் பேசியதாவது:- இந்திய திரைப்பட துறையில் ரஜினியை தாமதமாக கவுரவித்து இருந்தாலும் சரியான நபரை தான் கவுரவித்து இருக்கிறார்கள். அவர் சினிமா வாழ்க்கைக்காக எடுத்துக்கொண்ட சிரத்தை எனக்கு சற்றும் குறையாதது. எங்களது பாணி தான் வெவ்வேறு. நாங்கள் அப்போதே ஏ.வி.எம். மரத்தடியில் பேசி தெளிவாக முடிவு எடுத்தோம்.
ஒருவருக்கு ஒருவர் நட்பாகவும் மரியாதையாகவும் இருந்துகொள்ள வேண்டும் என்பது நாங்கள் பேசி முடிவெடுத்தது தான். எங்களுக்கு ரசிகர்கள் உருவாவதற்கு முன்பு எங்களது முதல் ரசிகர்கள் நாங்கள் தான். எனக்கு அவரும், அவருக்கு நானும் ரசிகர்களாக இருப்போம். என்றும் நாங்கள் தெளிவாக இருப்போம். ஹேராம் போன்ற படங்கள் ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த்
நானும் ரஜினியும் பேசியதை எல்லாம் காசு வந்த பிறகு எடுக்காமல் விட்டால் தான் தவறு. நான் மட்டும் அல்ல மணிரத்தினமும் அவற்றை எடுத்து வருகிறார். முதல் படத்திலேயே மணிரத்தினத்தை பார்த்து வியந்தது உண்டு. அதே வியப்பு ரஜினிக்கும் இருந்தது தெரியும். தளபதி டைட்டிலை ரஜினி சொன்னபோது என் காதுகளுக்கு முதலில் கணபதி என்று விழுந்துவிட்டது. எனவே பிடிக்கவில்லை என்றேன்.
விநாயகருக்கான டைட்டிலாக இருக்கிறதே என்று கேட்டேன். பின்னர் தெளிவாக சொன்னதும் தான் அற்புதமான டைட்டில் என்றேன். எங்கள் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் நாங்கள் தனிமையில் பேசிக்கொள்வதை கேட்டால் அவர்கள் அதிர்ச்சியடைவார்கள். ஆச்சர்யப்படுவார்கள்.
பாலச்சந்தர் சிலையாக இங்கே இருக்கிறார். நிலையாக என்றுமே இருப்பார். பாலச்சந்தர், அனந்து இரண்டு பேர் தொலைபேசி எண்களும் என் போனில் இருந்து அழிக்க முடியாதவை. கடந்த மாதம் கூட தனிமையாக நினைத்தபோது அனந்து சார் எண்ணுக்கு அழைத்தேன். அது அவரது வீடு என்றதும் கண்கலங்கிவிட்டேன்.
அப்போது அவர்கள் 8-ந்தேதி பிறந்தநாள் என்றார்கள். தெரியும் என்றேன். அந்த தேதியில் பாலச்சந்தருக்கு சிலை திறப்பது சிறப்பான ஒன்று. பாலச்சந்தர் சார் சிலை இங்கே வைத்ததால் அவர் என்னை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் இருக்கும்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன்
ராஜ்கமல் நிறுவனத்தின் 50-வது படம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறரை வைத்து படங்கள் தயாரிக்கும் அளவுக்கு நீங்கள் இந்த நிறுவனத்தை வளர்த்து விட்டிருக்கிறீர்கள். அவ்வை சண்முகி ராஜ்கமலுக்காக ஓகே சொல்லி வைத்து இருந்த கதை. வேறு ஒரு தயாரிப்பாளர் கேட்டதும் கொடுத்தோம். தசாவதாரம் படமும் அப்படி தான். மணிரத்தினத்துக்கும் எனக்கும் எண்ண ஓட்டம் ஒன்றுதான்.
வைரமுத்துவின் முதல் பாடலை கேட்டு அவர்தான் வேண்டும் என்று அடம் பிடித்து அழைத்தவன் நான். பின்னர் அவரது புத்தகம் ஒன்றை அவருக்கே மனப்பாடமாக வாசித்து காண்பித்து அசத்தினேன். இவர்கள் எல்லாம் சேர்ந்து தூக்கி நிறுத்திய ராஜ்கமல் தான் இன்று நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. எங்களின் பயணம் அற்புதமான பயணம். சினிமா துறையில் கோபம், அவமானம், அவமரியாதை எல்லாமும் வரும். இருந்தும் எங்களை யாராலும் பிரிக்க முடியவில்லை.
முக்கியமாக நானும் ரஜினியும். இத்தனை ஆண்டுகளாக இணைபிரியாத நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் கைகளை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் சந்தித்தால் எல்லாவற்றையும் பேசிக் கொள்வோம். இருவருக்கும் இடையே போட்டு கொடுப்பது இதனாலேயே குறைந்துவிட்டது. இந்த நிறுவனத்தை தாங்கி பிடித்தது நிறைய பேர். ராஜ்கமலை நடத்தியவர்கள் நடத்துபவர்கள் தான் இந்த விழாவுக்கு காரணம்.
நான் பிறந்த விழாவை விட அதிகம் கொண்டாடும் விழா ராஜ்கமல் பிறந்தநாள் விழா. ரஜினி ஐகான் விருது பெறுவதற்கு போனில் வாழ்த்து சொல்லி விட்டேன். நேரிலும் சொல்லிக் கொள்கிறேன். அவர் திரைப்படத்துறைக்கு வந்த முதல் ஆண்டே ஐகான் ஆகிவிட்டார். சிவாஜி போல அறிமுகமான முதல் ஆண்டே ஐகான் ஆனவர் அவர். 44 ஆண்டுகள் தாமதமாக செய்து இருந்தாலும் செய்தவர்களுக்கு நன்றி. ராஜ்கமலை கவனிப்பவர்கள் தொடர்ந்து கவனியுங்கள். தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

இங்கே அன்பு இருக்கிறது அது வெல்லும். நான் அலுவலகம் அமைக்க போகிறேன் என்றதும் இங்கே படம் எடுக்க போகிறேன் என்றார் பாலச்சந்தர். அவர் படப்பிடிப்புக்காக காத்திருந்து பின்னர் தான் அலுவலகம் திறந்தோம். அவர் தடம் பதித்த இடத்தில் அலுவலகம் அமைவது எனக்கு சிறப்பு.
இவ்வாறு கமல் பேசினார்.
மம்முட்டி பட ரிலீசுக்காக திருமண தேதியை மாற்றிய ரசிகர்
மம்முட்டி பட ரிலீசுக்காக திருமண தேதியை மாற்றிய ரசிகர்
கேரள மாநிலம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் மேமன் சுரேஷ். இவர் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகர். மம்முட்டி படம் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது இவரது வழக்கம். மேமன் சுரேசுக்கு வருகிற 21-ந் தேதி திருமணம் செய்ய அவரது வீட்டாரால் தேதி குறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மம்முட்டி நடிப்பில் மாமாங்கம் என்ற புதிய திரைப்படம். மேமன் சுரேசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் வெளியாக இருந்தது. தன்னுடைய திருமண நாளிலேயே தனக்கு பிடித்த நடிகரின் திரைப்படமும் வெளியாக உள்ளது என்பதால் தனது திருமணத்தை மேமன் சுரேஷ் கடந்த மாதம் 30-ந் தேதிக்கு மாற்றி வைத்திருக்கிறார்.

மம்முட்டி
மேமன் சுரேசுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது. புது மனைவியுடன் தனக்கு பிடித்த மம்முட்டியின் திரைப்படத்தை வருகிற 21-ந்தேதி முதல் நாளே பார்க்கலாம் என்று சந்தோஷமாக காத்திருக்கிறார்.
வைரலாகும் அமலாபாலின் குளியலறை படம்
வைரலாகும் அமலாபாலின் குளியலறை படம்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார்.

அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிசியாக இருந்த அமலா பால் சமீபத்தில் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அமலா பால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றையும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அமலாபால்
இந்நிலையில் அவர் தற்போது பூக்கள் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில் மேலாடை இல்லாமல், ஜன்னல் வழியாக அருகில் செல்லும் ஓடையை வேடிக்கை பார்த்தப்படி போஸ் கொடுத்த படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் – சல்மான் கான்
ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தீம் மியூசிக் உடன் கூடிய வீடியோ போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
இதனை தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் மோகன்லால் மற்றும் இந்தியில் சல்மான் கான் ஆகியோர் வெளியிட்டனர். இதன் தீம் மியூசிக் மற்றும் ரஜினியின் ஸ்டைலான லுக் ஆகியவற்றுக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தி போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சல்மான் கான், “என் வாழ்த்துகள் வெறும் சூப்பர் ஸ்டாருக்கு அல்ல, ஒரே சூப்பர் ஸ்டாருக்கு” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், சல்மான் கான்
தர்பார் வரும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். ஆதித்யா என்பது படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசின் மகன் பெயர். அருணாச்சலம் என்பது முருகதாசின் அப்பா பெயர். ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ரஜினி, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.
மாட்டு ஏறாவூரில் ஆயுதங்கள் மீட்பு
மாட்டு ஏறாவூரில் ஆயுதங்கள் மீட்பு
இலங்கை மாட்டு ஏறாவூரில் பகுதியில் மறைத்து வைக்க பட்டிருந்த ஒருத தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்க பட்டுள்ளன ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது
கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் கற்பழிப்பு
கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் கற்பழிப்பு
இலங்கையில் கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் ஒருவர் கூட வந்த நபர் ஒருவரால்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுளளார் ,பாதிக்க பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்ய பட்டுளளார் .
இந்த தமிழரை தெரியுமா ..? மக்களே அவசரம் பாருங்க – வீடியோ
ஈழ தமிழ் வாலிபர் ஒருவர் புலம் பெயர் நாடு ஒன்றில் வீடற்று வீதியில் குளிரில் நடுங்கியபடி ,டென்ட் ஒன்றுக்குள் வசிக்கும் காட்சியும் ,உணவு இன்றி பட்டினியோடு வசிக்கும் நிலையம் பார்க்கும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
எம்முடன் தொடர்பு கொள்ள 00447536707793
யாழில் சஜித் – வெள்ளமென திரண்ட மக்கள்
யாழில் சஜித் – வெள்ளமென திரண்ட மக்கள்
இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச வடக்கு தமிழர் வசிக்கும் யாழ்ப்பாணம் ,சென்றார் ,அங்கு மக்கள் மத்தியில் பேசிய அவர் தனது திட்டங்கள் தொடர்பாகவும் தமிழருக்கு முக்கிய விடயங்களை தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளார் ,இவரது நிகழ்வுக்கு கலந்து கொண்ட மக்களை கண்ணுற்ற மகிந்தா அணியினர் சீற்றத்தில் உறைந்துள்ளனர்
ராணாவுடன் காதலா? – ரகுல் பிரீத் சிங்
ராணாவுடன் காதலா? – ரகுல் பிரீத் சிங்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். அவர் பாகுபலி நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரகுல் பிரீத் சிங் இதற்கு விளக்கமளித்துள்ளார்
அவர் கூறியுள்ளதாவது: “எங்கள் இருவரது வீடும் மிக அருகில் தான் உள்ளது. நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே ராணாவை தெரியும். நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். நான் சிங்கிள் தான். இதுவரை யாரையும் காதலித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை” என கூறியுள்ளார்.
ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங் தமிழில் யுவன், தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன், தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே. 14, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை – இலியானா
யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை – இலியானா
தமிழில் நண்பன் படத்தில் நடித்து பிரபலமான இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவுக்கும் ஆண்ட்ரூ என்பவருக்கும் நீண்ட நாட்களாக இருந்த காதல் இப்போது முறிந்துள்ளது.
இலியானா அளித்த பேட்டி வருமாறு:-
இனிமேல் யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை. இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் வாழ்க்கை முறையை மாற்றி புதிய வழியில் வாழப்போகிறேன். உங்கள் மீது அக்கறையோடு இருங்கள். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரம் மற்றவர்களை நம்ப வேண்டி வரும். அந்த நேரத்தில் அவர்கள் மீது சார்ந்து இருக்க நினைப்போம். ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நம்மோடு இருப்பார்களா? என்பது தெரியாது. நாம் மட்டும் மனப்பூர்வமாகவும், கண்மூடித்தனமாகவும் நம்பி அவர்களை அனுசரிப்போம். அப்படி இருக்க கூடாது. நம்மை பற்றி அதிகம் யோசிக்க வேண்டும்.
இலியானா
வாழ்க்கையில் எது நடந்தாலும் முதலில் நமக்காக இருப்பது நாம் மட்டும்தான். அதனால் என்மீது நான் அதிக அக்கறை எடுக்கிறேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை நன்றாக வைத்துக்கொள்கிறேன். இது நமது வாழ்க்கை. நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்”.
இவ்வாறு இலியானா கூறினார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிவாஜிலிங்கம் உருக்கம்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிவாஜிலிங்கம் உருக்கம்
இலங்கையில் இடம்பெற உள்ள தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை , எனவே இவர்களை தமிழர்கள் இந்த தேர்தலில் புறம்தள்ளி ஒதுக்குவார்கள் என அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் .ஒன்று பட்ட மக்கள் சக்தியை இவ்வேளையில் தமிழ் கட்சிகள் காண்பிக்க தவறிவிட்டதை மேற்படி விடயம் காண்பிக்கிறது என அவர் தெரிவித்துளளார்
துப்பாக்கி சூடு ஒருவர் பலி – எகிறும் ஆயுத கலாச்சாரம்
துப்பாக்கி சூடு ஒருவர் பலி – எகிறும் ஆயுத கலாச்சாரம்
இலங்கை படுக்க பகுதியில் உள்ள கிளப்பு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுளளார் ,
இந்த படுகொலை தாக்குதல் ஏன் மேற்கொள்ள பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளன










