Posted in இலங்கை செய்திகள்

தமிழ் தீவிரவாதம், – சுமந்திரன்- போட்டு தாக்கு video

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு ஆளுநராக தன்னை அமர்த்தும் மாறு கருணா அடம் பிடிப்பு

வடக்கு ஆளுநராக தன்னை அமர்த்தும் மாறு கருணா அடம் பிடிப்பு

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதிக்கு தன்னை அஙளுநராகி நியமிக்கும் படி கருணா கோத்தபாயவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .பலத்த பரபரப்புக்கு இடையில் ஆறு ஆளுநர்கள் நியமிக்க பட்டுள்ள நிலையில் கருணாவுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்க படலம் என முக்கிய நபர்கள் பேசிக்கொள்கின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைந்த -ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள்

தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைந்த – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கேகாலை மாவட்டம் யட்டியன்தொட்ட கனேபொல தோட்டம் மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது (18) தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு நேரடி விஜயம் ஒன்னினை இன்று (21) மேற்க் கொண்டு மக்களிடம் நிலமையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை பெற்றுச் சென்றுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

அணைத்து வழக்குகளில் இருந்து கோட்டபாய விடுதலை

இலங்கையை கோட்டபாய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள நிலையில் அவர் மீது சுமத்த ப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுதலை செய்ய பட்டுளளார் .மைத்திரி ,ரணில் ஆட்சியில் இவர்கள் மீது தொடராக வழக்குகள் பதிவிட பட்டன ,அதில் இருந்து தற்போது இவர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

காலி கடற்கரை கரை ஒதுங்கிய -கடல் நாய்கள்

தென்னிலங்கை சிங்களவர்கள் அதிகம்வசிக்கும் காலி கடல்பகுதியில் கடல் நாய்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .இந்த கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு இங்கு கரை சேர்ந்தன என்பது தொடர்பில் தெரியவரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

6 ஆளுனர்கள் பதவி ஏற்பு

6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம் பின்வருமாறு,

மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் – லலித் யு கமகே
ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே
தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே
வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ

Posted in இலங்கை செய்திகள்

திறக்க படும் சிறை கதவுகள் – வெளியே வரும் குற்றவாளிகள்

திறக்க படும் சிறை கதவுகள் – வெளியே வரும் குற்றவாளிகள்

இலங்கையில் மகிந்த ஆட்சியின் பொழுது பல் வேறு பட்ட மோசடிகள் மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்ய பட்டு சிறை அடைக்க பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிகள் உள்ளிட்ட,தமிழின துரோகி கூட்டங்கள் தற்போது வெளியில் வர தயாராகின்றன .

,அடுத்து வரும் சில தினங்களில் இந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதுடன் அதி உயர் பதவிகளிலும் அங்கம் வகிப்பார்கள் என உள்ளிருந்து வரும் கசிவுகள் தெரிவிக்கின்றன .

கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
Posted in இலங்கை செய்திகள்

சஜித் புதிய கட்சி ஆரம்பிக்கிறார் – உடைகிறது யானை கட்சி

சஜித் புதிய கட்சி ஆரம்பிக்கிறார் – உடைகிறது யானை கட்சி

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தனது கட்சி நபரை வெல்ல விடாது சகுனி வேலை பார்த்த ரணில் குள்ள நரித்தனத்தால் அந்த கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது

,தலைவர் பதவியில் இருந்து ரணில் விலக மறுத்து வரும் நிலையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் நகர்வில் சஜித் பிரேமதாசா களத்தில் குதித்துள்ளார் ,

இதனால் யானை கட்சி தனது பலத்தை இழந்து காணமல் போகும் நிலை உருவாகியுள்ளதாக அவரது சகாக்கள் தடாலடியாக தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

அடித்து பொழியும் மழை – வெள்ளத்தில் மூழ்க தயாராகும் சிங்கள பகுதிகள்

அடித்து பொழியும் மழை – வெள்ளத்தில் மூழ்க தயாராகும் சிங்கள பகுதிகள்

இலங்கை- வடக்கு – வடமத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக மலை வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது ,இதனால் தென் இலங்கை இனவாத சிங்கள பகுதிகள் கடும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது ,குளத்து நீர் மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் வெள்ள பெருக்கெடுக்கும் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் -அண்ணன் பிரதமர் ,தம்பி ஜனாதிபதி –

இலங்கையில் -அண்ணன் பிரதமர் ,தம்பி ஜனாதிபதி –

இலங்கையில் ஹிட்லர் குடும்பம் ஆட்சியில் உள்ளது கண்டு தமிழர் சமூகம் பீதியில் உறைந்துள்ளது ,மகிந்த பிரதமராகவும் ,தம்பி கோட்டபாய ஜனாதிபதியாகவும் ஆளும் சரச்வதிகார ஆட்சி இலங்கை வரலாற்றில் கரு நாளாக படிந்துளளது

Posted in சினிமா

குழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா

குழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா

நடிகை சமந்தா கோலிவுட், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு உரையாடும் போது அவரிடம் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்பது தான்.

சமந்தா, நாக சைதன்யா

இதற்காக ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி சலித்துப்போன சமந்தா, ’வருகின்ற 2022-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ந் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார். நடிகை சமந்தா தனது செல்ல நாய் குட்டியின் முதலாவது பிறந்தநாளை சமீபத்தில் கணவருடன் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Posted in சினிமா

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் – சாய் பல்லவி

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் – சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

சாய் பல்லவி

அந்த வகையில் ஒரு பிரபல துணி விற்பனை மால்கள் வைத்துள்ள நிறுவனம் சாய் பல்லவியை தங்கள் விளம்பரத்தில் நடிக்கவைக்க பேசியுள்ளது. ஒரு வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தரவும் தயார் எனவும் கூறியுள்ளனர். ஆனால் சாய் பல்லவி மறுத்துவிட்டார்.

Posted in சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றார் ரஜினி

சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றார் ரஜினி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க முடிவு செய்த மத்திய அரசு, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவித்திருந்தது.

குத்துவிளக்கு ஏற்றிய ரஜினி

இந்த நிலையில் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதான “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” எனும் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு விருது வழங்கினர்.

விருது வாங்கியபின் ரஜினிகாந்த் பேசியதாவது: “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

காலியில் – பற்றி எரிந்த மருத்துவமனை

காலியில் – பற்றி எரிந்த மருத்துவமனை

தென்னிலங்கை சிங்களவர்கள் அதிகமாக வசிக்கும் காலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் ஐந்தாவது மாடி கட்டிடத்தில் திடீரென தீப்பற்றி கொண்டதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,இந்த தீ பற்றலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

Posted in மருத்துவம்

மாதவிடாய் பிரசவத்தின் பின் எப்போது தொடங்கும்

பிரசவத்தின் பின் எப்போது மாதவிடாய் தொடங்கும்

பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சியை பற்றி குழம்பவும், கவலைப்படவும் செய்கிறார்கள்.

அவர்கள் முந்தைய ஒன்பது மாதங்களில் மாதவிடாய் இல்லாமல் இருந்திருப்பார்கள்.

புதிதாக அம்மாவானவர்கள் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஆச்சரியப்படுவார்கள்.

இங்கு அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும், தாய்ப்பாலூட்டுவது எப்படி மாதவிடாயை பாதிக்கிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.

கர்ப்பகாலத்தின் முக்கியமான விஷயங்களில் ஒன்று பெண்களுக்கு இந்த 9 மாதமும் மாதவிடாய்ஏற்படாது என்பது தான்.

அவர்கள் துணிகளையோ அல்லது நாப்கின்களையோ இந்த மாதங்களில் மாற்ற வேண்டியிருக்காது. இந்த சமயத்தில் இது அவர்களுக்கு விடுதலை அளித்திருந்தாலும்,

பிரசவத்தின் பின் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு மாதவிடாய்ஏற்படலாம். இதற்கென எந்த தேதியையும், கால நேரத்தையும் குறிப்பிட முடியாது.

ஒவ்வொரு பெண்ணின் உடலும் அவர்களுக்கென தனி அட்டவணையுடன் இயங்கி கொண்டிருக்கிறது.

மாதவிடாய் பிரசவத்தின் பின் எப்போது தொடங்கும்

தாய்ப்பாலூட்டும் போது மாதவிடாயானது அதிகபட்சமாக 7 முதல் 8 மாத காலம் வரை நீடிக்கிறது. சில பெண்களுக்கு குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்கு பிறகே

ஏற்படுகிறது. ஆனால், இதை பற்றி கவலைப்படுவதற்கு ஏதுமில்லை. உங்கள் உடலுக்கான நேரத்தை விட்டு விடுங்கள்.

நீங்கள் விரைவில் பழைய நிலைக்கு திருப்பிவிடுவீர்கள்.

1 உங்கள் குழந்தை தாய்ப்பால் குடித்தும் அதிக நேரம் உறங்கினால், உங்களுக்கு மாதவிடாய்விரைவில் ஏற்படும்.

2 உங்கள் குழந்தை திட உணவுகளை சாப்பிட துவங்கிவிட்டால், உங்கள் மாதவிடாய் முடிவடைய போகிறது என்பதன் அறிகுறியாகும்.

சில நேரங்களில் தாய்ப்பாலூட்டும் போது, நீங்கள் இரத்த கறைகளை கவனித்திருப்பீர்கள்.

இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். இந்த கறைகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும், இதற்கென நேரம் காலம் எல்லாம் கிடையாது.

குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது.

இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும். இது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட அடர்சிவப்பு நிறத்திலும் அதிக அளவிலும் இருக்கும்.

நீங்கள் உபயோகிக்கும் நாப்கின்கள், 4 மணிநேரம் மட்டுமே பயன் தரும். நீங்கள் அவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்..

Posted in மருத்துவம்

மாரடைப்பு வர காரணம் என்ன

நெஞ்சு வலிக்காமலேயே மாரடைப்புஏற்பட்டால், அதை ‘சைலன்ட் அட்டாக்‘ என்பர். அதிகம் மாரடைப்பு வருவதற்கு காரணம் என்ன ..? தெரியுமா..?

வயது முதிர்ந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும் இவ்வகை மாரடைப்புஏற்படும் வாய்ப்பு அதிகம்.

அதே போல எவ்வித உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை

பார்ப்பவர்களுக்கும் வலியில்லா மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல்வயிறு, தோள்பட்டை, கழுத்து வலி, சில

நேரங்களில் தலை வலி, மயக்கம் போன்றவை கூட இம்மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், திடீரென்று மூச்சு வாங்குதல்,

வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால், இது மாரடைப்பா என்பதை இ.சி.ஜி., மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறை எக்கோ பரிசோதனை, டிரெட்மில் எனப்படும் பரிசோதனை ஆகியவற்றை செய்ய வேண்டும்.

இப்பரிசோதனைகளின் போது நமது நாடித்துடிப்பு 100-க்கும் மேல் செல்லும். எனவே இதயத்தின் வேலைப்பளு கூடுகிறது. இவ்வாறு கூடும்போது,

மாரடைப்பு வர காரணம் என்ன

இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறதா? என தெரிந்துகொள்ளலாம். இதயத்திற்குரிய முக்கிய பரிசோதனைகளை வருடத்திற்கு ஒரு முறை செய்வது

நல்லது. அவ்வாறு செய்தால் இதயத்தின் சிறுகோளாறுகளை கூட உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். வலியில்லா மாரடைப்பை தவிர்க்கலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களில் மாரடைப்புவரும் வாய்ப்பு குறைவு.

மாதவிடாய் நின்றவுடன் மாரடைப்புக்கான வாய்ப்பு ஆண்களை விட அதிகம். நம் நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வியல் முறையும் மாரடைப்புக்கான முக்கிய

காரணமாகும். பல பெண்கள் முறையாக உடற்பயிற்சி செய்வதில்லை. மாறாக தொலைக்காட்சியில் அதிக நேரம் மூழ்கிவிடுகின்றனர். அப்போது ஏதாவது

நொறுக்குத்தீனியையும் சாப்பிடுகின்றனர். மேலும் இப்போதைய பெண்கள் எளிதில் மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர்.

சிறிய வி‌‌ஷயங்களை கூட சகிக்கும் தன்மை இல்லை. எனவே பெண்கள் மாரடைப்பில் இருந்து தப்பிக்க சோம்பலான வாழ்வியல் முறையில் இருந்து விடுபட வேண்டும்

அதிக இரதம் அழுத்தத்தை குறைக்க உங்களை குஷி படுத்துங்கள் ,மாரடைப்புஎனும் கொடிய யமன் உங்களை நெருங்கி வர மாட்டான் .

Posted in மருத்துவம்

மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தலாமா?

பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தலாமா?நமது நாட்டில் மாதவிலக்கு காலத்தில் கோவில்களுக்கு செல்ல கூடாது என்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல்

பெண்கள் முக்கியமான விஷேசங்கள், பக்கத்து வீட்டு சுப நிகழ்ச்சிகள், சுற்றுலா செல்லுதல் போன்ற காரணங்களுக்காக மாதவிடாயை தள்ளிப்போட

நினைக்கின்றனர். இன்றும் சிலர் மாதவிடாய் ஏற்படுவதை உடலில் நடக்கும் சாதாரண ஆரோக்கிய நிகழ்வாக

கருதுவதில்லை. இதனால் தான் மாதவிடாயை சிறிது காலம் தடுத்து வைத்திருக்க மாத்திரைகளை

பயன்படுத்துகின்றனர். இது சரியான தீர்வா இல்லையா என்பதை இந்த பகுதியில் காணலாம்.

மாதவிலக்கு ஏற்படுவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பாக உணர செய்யக்கூடிய நாப்கின்கள் அதிகம் கிடைக்கின்றன. மாதவிலக்கை தடுத்து வைப்பதற்கு பதிலாக அது போன்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்தலாம்.

மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தலாமா?

மாதவிலக்கை தடுக்கும் மாத்திரைகள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்காது. சிலருக்கு அது

ஒவ்வாமையை உண்டாக்கும். பெண்களின் கர்ப்பப்பை பூ போல மென்மையானது. அதனை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்கள் மருந்தின் பெயரை சொல்லி தாமே கடைகளில் மாத்திரைகளில் வாங்கி கொள்கின்றனர்.

ஆனால் இவ்வாறு வாங்குவது மிகவும் தவறு. கர்ப்பபையின் நிலைகளை பொருத்து மாத்திரைகள் மாறுபடும்.

எனவே மருத்துவரிடன் சென்று கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து உங்களது கர்பப்பையின் நிலைக்கேற்ற மாத்திரைகளை சாப்பிடுவதே நல்லது.

உங்களது ஆரோக்கிய பின்னனி தெரியாமல் மாத்திரைகளை சாப்பிடுவது முற்றிலும் தவறு

. அவ்வாறு சாப்பிட்டால், உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம்.

சிலருக்கு ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

வெளிநாடுகளில் வலி நிவாரணிகள், ஹார்மோன் பிரச்சனைகளை உண்டாக்கும் மாத்திரைகளை நீங்கள் மருத்துவரின்

ஆலோசனை பெறாமல் மருந்து கடைகளில் வாங்க முடியாது. ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லை. நாமே மருந்தின் பெயரை சொல்லி மாத்திரைகளை

வாங்கிக்கொள்கிறோம். மாத்திரைகள் உண்டாக்கும் பின்விளைவுகளை பற்றி தெரியாமல் அதனோடு விளையாடி,

ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கிறோம் என்பது தான் உண்மை.

நீங்கள் இயற்கையாக உண்டாகும் மாதவிடாயை மருந்துகளை உபயோகித்து தள்ளிப்போடுவதால்,

பின்னாளில் உங்களுக்கு மிக அதிக அளவு உதிரப்போக்கும், முன்பு எப்போது இல்லாத அளவுக்கு உடல் வலியும் உண்டாகும்.

Posted in இலங்கை செய்திகள் வினோத வீடுப்பு

வீதியின் நடுவே தோன்றிய பெருங்குழி – தப்பிய கார்கள்

வீதியின் நடுவே தோன்றிய பெருங்குழி – தப்பிய கார்கள்

தெற்கு ரசியாவின் city of Tyumen பகுதியில் திடீரென வாகன நெரிசல் கொண்ட வீதியின் நடுவே பெரும் குழி தோன்றியது ,இது அங்கிருந்த நீர் குழாய் வெடித்து ஏற்பட்ட குழி என கண்டறிய பட்டுள்ளது .எனினும் அந்த சாலை வழியாக சென்றா கார்களுக்கு சேதங்கள் ஏற்படவிலை

Posted in இலங்கை செய்திகள்

உலங்குவானூர்தி பயணத்திற்கு மகிந்த -கோட்டபாய பணம் செலுத்தினர் – விமான படை

உலங்குவானூர்தி பயணத்திற்கு மகிந்த -கோட்டபாய பணம் செலுத்தினர் – விமான படை

இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவான கோட்டாபய தனது பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அனுராதபுரம் சென்றார் ,அந்த பயணத்திற்கு உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டன ,மேற்படி உலங்குவானூர்தி பயணத்திற்கு மகிந்த -கோட்டபாய பணம் செலுத்தினர் -என விமான படை அதிரடியாக அறிவித்துள்ளது , கடந்த ஆட்சியின் பொழுது விமான பயணங்களுக்கு பணம் செலுதாது சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் சட்ட சிக்கலில் இவர்கள் சிக்கி தவித்தமை குறிப்பிடத்தக்கது