Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கிய வான் – 17 பேர் காயம்

இலங்கையில் -விபத்தில் சிக்கிய வான் – 17 பேர் காயம்

இலங்கை – அங்குருவதொட்ட பகுதியில் வான் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்தா சுமார் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

விபத்தில் சிக்கிய வான் பலத்த சேதமடைந்துள்ளது .
பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

விபத்தில் சிக்கிய வான் மீட்கப்பட்டு பொலிஸார் சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளதுடன் ,தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

நாடு தழுவிய ரீதியில் இடம் பெரும் விபத்துக்களில் அதிகமானவை சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாகவே என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி 3 பேர் பலி

இலங்கையில் –விபத்தில் சிக்கி 3 பேர் பலி – 2 பேர் காயம்

இலங்கை – இரத்தினபுரி லொறி மற்றும் அரச பேரூந்து ஒன்று நேரத்து மோதி விபத்தில் சிக்கியதில் ,அதில் பயணித்த சுமார் மூன்று பேர் பலியாகினர் .மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .


விபத்தில் சிக்கி இறந்த நபர்கள் உயிர் பலிக்கு சாரதிகள் அலட்சிய போக்கே காரணம் என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

விபத்தில் சிக்கி நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமையும் .

இந்த விபத்தில் சிக்கி பலியாகும் உயிர் பலியை தடுத்து நிறுத்த பொலிசார் திரணி அற்று திகைத்து நிற்பதும் குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

தமிழ் ஒன்றாக வேண்டும் -சித்தார்த்தன்

இலங்கையில் –தமிழ் ஒன்றாக வேண்டும் என சித்தார்த்தன் தெரிவிப்பு .

தமிழ் – மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்து.

இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆகையினால் இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழ் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியமென.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

கைது பீதி – ரஜித ஒழிந்தார்

முன்னாள் அமைச்சர் – ரஜித வைத்திய சாலையில் அனுமதி .கைது எதிரொலியாம் .

கைது பீதி எதிரொலியாக முன்னாள் அமைச்சர் ரஜிதவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுளளார் .

–இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் ,தற்போது முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித சிறை செல்லும் நிலையில் சிக்கியுள்ளார் .

தொடர்ந்து அவரது இரு இல்லங்கள் மீதும் நடத்த பட்ட திடீர் தேடுதலை அடுத்து தற்பொழுது அவர் சுகஜீனம் என கோரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

கைது பீதி எதிரொலியே இந்த நிலைக்கு ரஜித சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தன் மீது சேறு பூசியவர்களை சிறையில் அடைக்கும் தீவிர நகர்வில் கோட்டபாய ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த வீடு – தவிக்கும் குடும்பம் – photo

நுவரெலியா பகுதியில் –தீயில் எரிந்த வீடு – தவிக்கும் குடும்பம் .கண்ணீர் கதை

வெதமுல்ல தோட்டம் கெமினதன் தோட்டத்தில் கடந்த 15.12.2019 ஏற்பட்ட தீயில் எரிந்த வீடு அழிந்துள்ளது ;

தங்களது வீட்டையும் வீட்டு பொருட்களையும் அணைத்து ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றது 02 பிள்ளைகளுடன் கூடிய ஒரு இளம் குடும்பம்

இந்த குடுபம் உதவிகளுக்காக நுவரெலியா பிரதேசத்தற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த வேலையில் நுவரெலியாவில் சந்திக்கும்; வாய்பு கிடைத்தது.

இவர்கள் இரண்டு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு இருவரும் ஏதோ கவலையுடன் செல்வதை கண்டேன்.

உடனே என்ன பிரச்சனை ஏன் கவலையாய் செல்கின்றீர்கள் என்று வினாவிய போது. தாய் கண்ணீர் மழ்க தீயில் எரிந்த வீடு நிலமையை கூறினார்.

எங்களது வீடு கடந்த 15 ஆம் திகதி தீ பித்து தீக்கு இறையாகி விட்டது. நான் வீட்டை விட்டு வெளியில் சென்று விடு திரும்பும் போது வீடு தீ பிடித்து எரிந்துக் கொண்டு இருந்து.

அயலவர்களின் உதவியுடன் தீயில் எரிந்த வீடு கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தலும் வீட்டு பொருட்கள் பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள்

ஜனவரி மாதம் பாடசாலைக்கு செல்ல வாங்கிய அனைத்து உபகரங்களும் சில ஆவனங்களும் எங்கள் நாள்வரின் உடைகளும் சாப்பாட்டு பொருட்களும் முற்றாக எரிந்து விட்டது.

நான் தோட்டத்தில் தொழில் வேலை செய்கின்றேன் கணவர் கொழும்பில் கூலி வேலை செய்கின்றார்.

தோட்டத்தில் வீடு தரததினால் சொந்தமாக சிறுக சேர்த்த பணத்தில் இருந்து தற்காலிகமாக கட்டிய வீடே இது.

தற்போது வீடும் எரிந்து விட்டது. அயலவர் ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக தங்கி வருகின்றோம். எங்களுக்கு வீடும் இல்லை வீட்டு பொருட்களும் இல்லை சாப்பிட சாப்பாடு கூட இல்லை.

இந் நிலையில் எங்களுக்கு ஒரு வீடும் தேவையான பொருட்களையும் எங்களது பிள்ளைகள் கல்வி கற்பதற்கு தேவையான உதவிகளை செய்து எங்கள் வாழ்வை மீள் கட்டியெழுப்ப உதவி செய்யுமாறு கூறினார்

கணவர் ஏ.வினாயகமூர்த்தி மனைவி கே.பொண்மலர் மகன்மார்கள் வி.திலக்சன் (12) இவர் இறம்பொடை இந்து கல்லூரியில் தரம் 08 வி.விதுசன் (07) ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயத்தில் தரம் 08 கல்வி பயின்று வருகின்றனர்.

மேற்படி குறித்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு தேவையான எந்தவிதமான பொருட்கள் உடைகள் உபகரணங்கள் எதுவும் இல்லை.

இந்த குடுபம் தங்களின் வாழ்வை கொண்டு செல்ல நல்லுல்லம் படைத்தவர்களிடம் இருந்து உதவிகளையும் தங்களுக்கான ஒரு பொருத்தமான வீட்டையும் எதிர்பார்க்கின்றனர்.

சம்பந்தபட்டவர்கள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த குடும்பத்திற்கு உதவிட விரும்புவார்கள் எம்மை தொடர்பு கொள்ளவும் .

கண்ணீரில் தவிக்கும் இந்த வறுமை குடும்பத்திற்கு தமிழர்களே உதவி புரியுங்கள் ,நீங்கள் வழங்கும் சிறு உதவி இந்த குடும்பத்தை வாழ வைக்கும் 0094 777375053

மேல் உள்ள தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு குறித்த குடும்பத்திற்கு உதவிகளை புரியுங்கள் ,மேலதிக தொடர்புகளிற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

நாம் தமிழராய் நாம் இணைவோம் ,உயிர்காப்போம் ,ஒன்றிணைந்து கரம் கொடுப்போம் .ஒன்றுபட்டு எழுவாய் தமிழா .கண்ணீர் துடைக்க கரங்கள் தருவாய் தமிழா .

முற்றாக தீயில் எரிந்த வீடு
கண்முன்னே தீயில் எரிந்த  வீடு
திடீரென தீயில் எரிந்த  வீடு
இலங்கையில் தீயில் எரிந்த  வீடு
Posted in இலங்கை செய்திகள்

மனோ கணேசன் -கோட்டாபயவுக்கு கடிதம்

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தமுகூ தலைவர் மனோ கணேசன் கடிதம்.

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி.

இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இத்தகைய முடிவு, இலங்கையின் அரசியலமைப்பில் இணை ஆட்சி மொழியாகவும், இணை தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் மொழியை புறந்தள்ளி

இலங்கையை மொழி இனரீதியாக பிரிக்கும் ஒரு பிரிவினைவாத செயல் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

உங்கள் பதவியேற்பு நிகழ்வின் ‘அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக செயற்படுவேன்’ என்று நீங்கள் நாட்டுக்கு தந்த உங்கள் உறுதிமொழியின் அடிப்படையில்

தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை அகற்றும் இந்த முடிவை ரத்து செய்ய துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்

என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தமது டுவீடர், முகநூல் தளங்களிலும் பதிவுகளை மேற்கொண்டுள்ள மனோ கணேசன் எம்பி,

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ள தமது கடிதத்தில் மேலும் கூறியுள்ளாதாவது,

மூன்று மொழிகளையும் பேசி, எழுதி, தேசிய மொழிகள் மூலம் தேசிய ஒருமைபாட்டை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட கட்சி தலைவர் என்ற முறையிலும்,

67 வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதை உறுதி செய்ய பாடுபட்ட ஒருவன் என்ற முறையிலும்,

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரங்களை கையாண்ட முன்னாள் அமைச்சர் என்ற முறையிலும் நான் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இந்தியாவின் பெருமகன் ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் சீடனாக, கொல்கத்தா சாந்தி நிகேதனில் பயின்ற, நமது நாட்டு தேசிய கவிஞர் அமரகோன் அவ்வேளையில் எழுதி,

இசையமைத்த, அன்றைய தேசிய பாடல்தான், பின்னாளில் நமது தேசிய கீதமாக அங்கீகாரம் பெற்றது என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

இந்த தேசிய கீதத்தை இலங்கையின் தமிழ் அறிஞர் நமசிவாயம் அவர்கள், வரிக்குவரி அப்படியே தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

ஒரே அர்த்தத்தில், ஒரே இசை வடிவில், நமது தாய் நாட்டை, “நமோ நமோ மாதா” என சிங்களத்திலும், “

நமோ நமோ தாயே” என தமிழிலும் பாடும் தேசிய கீதம் எமக்கு கிடைத்துள்ளது எமது அதிஷ்டமாகும் என நான் நினைக்கிறேன்.

இதை பிரதானமாக கொண்டு மொழி உரிமைகளை பயன்படுத்தி நாம் இந்நாட்டில் வாழும் இரண்டு மொழிகளை பேசும் இனத்தவர்களையும்

இலங்கையர்களாக ஒன்று சேர்ப்போம் என் நான் உங்களுக்கு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன்.

அதிகார பகிர்வை வலியுறுத்தும் அரசியலமைப்பின் 13ம் திருத்தம் தொடர்பாக உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.

எனினும் மொழியுரிமை என்பது 13ம் திருத்தம் மூலம் எமது அரசியலமைப்பில் உட்புகுத்தப்படவில்லை.

16ம் திருத்தம் மூலமாக மொழியுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பின் 4ம் அத்தியாயத்தில், இலங்கையின் இணை ஆட்சி மொழிகளாகவும்,

தேசிய மொழிகளாகவும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அதேவேளை ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

“ஒரே நாடு, மூன்று மொழிகள்” என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத,

பிரிவினைவாதிகளை தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என உங்களை வேண்டுகிறேன்.

உங்கள் அரசில் இருக்கின்ற சிலர், “ஒரே மொழி” என்ற கொள்கையை முன்னெடுக்க முயல்கின்றனர்.

இத்தகையை கொள்கைதான் 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு அடுத்து வந்த பல்லாண்டுகளாக இந்த நாட்டை படுகுழியில் தள்ளியது

. உண்மையில் ஒரே மொழி என்று சொல்லும் போது ஒரே நாடு என்ற கொள்கைதான் பலவீனமாகிறது.

இவர்கள், உலகில் எங்கேயும் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் கிடையாது என்று கூறுகின்றனர். இது பிழையான தகவல். உலகில் பல நாடுகளில் தேசிய கீதம்,

அவ்வந்த நாடுகளில் பேசப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பாடப்படுகின்றன.

சில நாடுகளில் ஒரே கீதத்தில் இரண்டு மொழி வரிகள் இடம்பெறுகின்றன.

அதேவேளை பதினைந்து தேசிய மொழிகளை கொண்ட இந்தியாவின் தேசிய கீதம் இந்தி மொழியில் இருக்கின்றது என்றும் இதே சிலர் கூறுகின்றனர்.

இதுவும் பிழை. இந்தியாவின் தேசிய கீதம், இலங்கை தேசிய கீதத்தை எழுதிய அமரகோனின் குருவான ரபீந்திரநாத் தாகூர் அவர்காளால் தமது தாய்மொழி வங்காளியில் எழுதப்பட்டது.

வங்காள மொழி இந்தியாவின் சிறுபான்மையினரின் மொழியாகும்.

அதற்காக நாம் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என நாம் கூறவில்லை. தமிழிலும் பாடுவோம் என்றுதான் கூறுகிறோம்.

சிங்கள, தமிழ் நாடுகளை தவிர்த்து, இலங்கை நாட்டை கட்டி எழுப்புங்கள். தமிழிலும் இலங்கை தேசிய கீதத்தை பாடுவது தேசாபிமான நடவடிக்கை ஆகும்.

சில போலி தேசிய வாதிகள், மொழி இனங்களை ஒன்று சேர்க்கும் இந்த தேசாபிமான நடவடிக்கையை நிறுத்தி விட முயல்கிறார்கள்.

அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என உங்களை நான் கோருகிறேன்.என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார் .

Posted in இலங்கை செய்திகள்

மின்சார கார்கள் 7000இலங்கையில் இயக்கம்

இலங்கையில் -மின்சார கார்கள் 7000இலங்கையில் இயக்கம்

மின்சார கார்கள் 7000 இலங்கையில் தற்போது இயக்கத்தில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,மின்சார கார்கள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்குடன் உலகம் தழுவிய நிலையி உருவாக்க பட்டுள்ளது .

இந்த காரே தற்போது இவ்வாறு சேவைக்கு விடப்பட்டுள்ளதாம் .இலங்கையில் மின்சார கார்கள் வருகை பெரும் மகிழ்வை தோற்றுவித்துள்ளது .

ஐரோப்பாவில் 2040 ஆண்டிற்கு பின்னர் எரிபொருள் கார்கள் பாவனை முற்றாக தடை செய்ய படுகிறது .மின்சார கார்கள் பாவனைக்கு வருகிறது

அதுபோலவே இலங்கையிலும் மேற்கொண்டால் மிக சிறப்பு என மக்கள் கருதுகின்றனர்

மின்சார கார்கள் இயக்கம் மனித உயிர்களுக்கு ஆபத்து அல்லாத ஒன்று என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித கைது..?

ராஜித கைது – வீட்டுக்குள் நுழைந்த உளவுத்துறை முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித வை கைது செய்துள்ளனரா.? .

கொழும்பு மற்றும் களுத்துறை பகுதியில் இருந்த ரஜித வீட்டுக்குள் நுழைந்த குற்ற புலனாய்வு துறையினர் அவரை கைது செய்து சென்றுள்ளனராம் .

என தகவல்கள் வெளியாகவும் பொழுதும் இதுவரை அவரை கைது செய்யமுடியவில்லை என வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் ரஜித நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை அடுத்தே இவரது கைது இடம்பெற்றுள்ளது ,

இது திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் என தெரிவிக்க படுகிறது .இவரை போல மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

திருமலையில் குப்பை பொறுக்கிய இந்திய கடல்படை தளபதி

திருமலையில் குப்பை பொறுக்கிய இந்திய கடல்படை தளபதி

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய கடல்படை தளபதி தனது அணிகளுடன் திருமலையில் உள்ள கடல்பகுதியில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார் .

இராணுவ கடற்படை அதிகாரியாக உள்ள போதும் அதனை தாண்டி இவர் இந்த சுத்தம் புரியும் பணியில் ஈடுபட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை குவித்த வண்ணம் உள்ளது .

இந்தியா விரும்பும் திருமலையில் குப்பை பொறுக்கிய இந்திய தளபதி வீர சாதனை தான் போலும்

திருமலையில் குப்பை
திருமலையில்   குப்பை
Posted in இலங்கை செய்திகள்

மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட பாதை திறப்பு

நுவரெலியா மாவட்டம் உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு உட்பட்ட பெரிக் தோட்டத்திற்கு 01 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட கொங்ரீட் பாதை .

பாவனையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக.

மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிஸ்ணன் அவர்களின் தலைமையில் மில்லியன் ரூபா நடைபெற்றது.

இந் நிகழ்வில் தோட்ட பொது மக்கள் உட்பட கட்சியின் உயர் அங்கத்தினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மில்லியன் ரூபா செலவு மக்களை குசியில் அமர்த்தியுள்ளது .

மில்லியன் ரூபா
மில்லியன் ரூபா
Posted in இலங்கை செய்திகள்

A/L பரிட்ச்சை விபரம் நாளை வெளியீடு

A/L பரிட்ச்சை விபரம் நாளை வெளியீடு

இலங்கையில் நடைபெற்று முடிந்த A/L பரிட்ச்சை சோதனை முடிவுகள் நாளைய தினம் வெளியிட படும் என அறிவிக்க பட்டுள்ளது .

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காத்துள்ள மாணவர்களுக்கும் இந்த A/L பரிட்ச்சை புள்ளி விபரம் பெரும் அதிர்ச்சியாகவும் ,

சிலருக்கு இனிப்பாகவும் அமைய போகிறது .
மேலும் பல தற்கொலைகளும் நடக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

மூன்று முக்கியஸ்தர்களை கைது செய்ய நடவடிகை

மூன்று முக்கியஸ்தர்களை கைது செய்ய தீவிர நடவடிகை இலங்கையில் ஆளும் இனவாத பவுத்த வெறிபிடித்த கோட்டபாய அரசு ஈடுபட்டுள்ளது ,அரசியல் பாழிவாங்கும் நகர்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது ,

கடந்த ஆட்சி கவிழ்ப்பு ,மற்றும் அதற்கு துணை போன மூன்று முக்கியஸ்தர்களை கைது செய்யும் தீவிர நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

அந்த வகையில் தற்பொழுது மூன்று முக்கியத்ர்களான மங்கள சமரவீர .பொன் சேகா ,ராஜித ,உள்ளிட்ட மேலும் மூவரை கைது செய்யும் நகர்வுகள் முடுக்கிவிட பட்டுள்ளனவாம் .

மூன்று முக்கியதர்கள் கைது செய்யப்பட்டதால் சர்வதேசத்தின் எதிரொலிகள் வேறாக இருக்கும் எனவும் ஒரு அணி தெரிவிக்கிறது ,ஆனால் அவற்றை எல்லாம் கோட்டா அரசு கண்டு கொள்வதாக இல்லை .

இவரது வெற்றியை மூன்று வல்லாதிக்க நாடுகள் தடுத்த பொழுதும் இவர்கள் சிங்கள மக்கள் வாக்கின் ஊடாக வெற்றியை பெற்றுள்ளார் ,இதற்கு கூட்டமைப்பும் ஆதரவு உள்ளக ரீதியாக உண்டு .

என அந்த புற வடடரங்கள் அடித்து கூறுகின்றன ,கோட்ட பாயாவுடன் பேச்சில் சுமந்திரன் ஈடுபட்ட பொழுது இவை தெரிவிக்க பட்டதாம்

Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களுக்கு வெள்ள அழிவு உதவி இல்லை

தமிழர்களுக்கு வெள்ள அழிவு உதவி இல்லை

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தமிழர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ,

இரணைமடு குளம் திறக்க பட்ட நிலையில் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ,இதனால் சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளன .

இதுவரை பாதிக்க பட்ட தமிழர்களுக்கு ,மக்களுக்குரிய உதவிகள் கிடைக்கவிலை என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றன .

மக்களின் வாழ்வாதாரத்தின் உயர்த்துவோம் என கூவி வரும் கோட்டா அரசு தமிழர்களுக்கு தொடர்ந்து புறம் தள்ளி வருகிறது .


எனக்கு வாக்கு அளிக்க முடியாது உள்ளவர்களுக்கு ஏன் நாங்கள் உதவி செய்திட வேண்டும் என்றே கோட்டா இனவாத அரசு கேள்விகளை கேட்கிறதாம் என மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

சிவாஜிலிங்கம் நான்காம் மாடிக்கு அழைப்பு – கோட்டா அரசு கெடுபிடி

சிவாஜிலிங்கம் நான்காம் மாடிக்கு அழைப்பு – கோட்டா அரசு கெடுபிடி

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கோட்டபாய ,மகிந்த அதிகாரத்தில் அதே தமிழர்கள் அழிக்க பட்ட நாளினை நினைவு கூர்ந்தமைக்காக சிவாஜிலிங்கம் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்க பட்டுளளார் .

சிவாஜிலிங்கம் ,கோட்டா கும்பலுக்கு எதிராக ஜனாதி பதி தேர்தலில் போட்டியிட்டவர் ,

கோட்டா அரசு அதிகாரத்த்தில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை அரசியல் பழிவாங்கல்கள் தீவிரம் பெற்று வருகின்றன ,

அதன் தொடர்ச்சியே சம்பிக்க ,ராஜித ,தொடர் சிவாஜிலிங்கம் விசாரணைகள் அமைய பெற்றுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

மானிப்பாயில் தெரு ரவுடிகள் அட்டகாசம்

மானிப்பாயில் தெரு ரவுடிகள் அட்டகாசம்

மாணிபப்பாயில் கட்டாக்காலி தெரு ரவுடிகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளனர் .

மானிப்பாயில் உள்ள மூன்று வீடுகளுக்குள் புகுந்த மேற்படி கும்பல் அந்த வீட்டு பொருட்களை அடித்து சேதமாக்கியுள்ளன ,

மேலும் பேனா முனை காரர் ஒருவரது வீடும் சேதமாக்க பட்டுள்ளது .
யாழில் வாள்வெட்டு குழுக்களை அடக்குவோம் என கோட்டா அரசு அறிவித்து சில தினங்களில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன .

மானிப்பாயில் வீடுகளை உடைத்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில்
மானிப்பாய் போலீசார் ஈடுபட்டுள்ளனராம்

Posted in இலங்கை செய்திகள்

80 வயது முதியவர் – மதிய வங்கி ஆளுனரா..? – மங்கள கேள்வி

80 வயது முதியவர் – மதிய வங்கி ஆளுனரா..? – மங்கள கேள்வி

இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசில் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டார் ,இவருக்கு சுமார் 80 வயதாகிறதாம் .

80 வயது முதியவர் ஒருவர் மத்திய வங்கிக்கு ஆளுநராக நியமிக்க வேண்டுமா என மங்கள சமரவீர சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளளார் .

இந்த 80 வயது முதியவர் பல்கலைக்கழக பேராசிரியராக பணி புரிந்தவரும் ,அதை விட கோட்டாவுக்கு மிக நெருங்கியவர் என்ற வகையில் அவரை இந்த பகுதிக்கு கோட்டா நியமித்துள்ளாராம்

இடுகுவே தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

ஒரு லட்சம் ஈழ அகதிகள் -இலங்கை கடத்த முயற்சி

இந்தியாவில் ஒரு லட்சம் ஈழ அகதிகள் -இலங்கை கடத்த முயற்சி

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக உயிர் பாதுகாப்பபு தேடி அண்டை நாடான இந்தியாவுக்கு சென்றனர் ,

அங்கு சென்ற ஒரு லட்சம் ஈழ அகதிகளுக்கு தமிழக அரசு உரிய கவனம் செலுத்தாமை உள்ளதும் அவர்களை கேவலமாக நடத்துவதும் தொடர்ந்த வண்னம் உள்ளது .

,பலத்த கெடுபிடிகள் மத்தியில் அந்த ஈழ மக்கள் வாழ்வு நாள்தோறும் கழிகிறது ,

அங்கு பிறந்த சிறுவர்களுக்கு கூட அந்த நாட்டு குடியுரிமை வழங்க படுவதில்லை.


இவ்வாறான சூழல் இந்தியாவில் வசிக்கும் ஒரு லட்சம் ஈழ அகதிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நகர்வில் தமிழின கொலையாளி ஆளும் கோட்டா அரசு முனைப்பு காட்டி வருகிறது .

இந்தியாவில் ஒரு லட்சம் ஈழ அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரும் தொடர் நகர்வில் இந்திய மத்திய அரசுடன் இலங்கை சுற்று பேச்சுக்களை மேற்கொண்டு வருகிறது .

இந்த ஒருலட்சம் பேரில் பலரை புலிகள் என இலங்கை அரசு முத்திரை குதியுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வாள் வெட்டு குழுக்கள் யாழில் ஒழிக்க படும் -பொலிஸ்

வாள் வெட்டுக் குழுக்கள்ஒழிக்க படும் -பொலிஸ்

வாள் வெட்டு குழுக்கள்- யாழில் இயங்கும் ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டு குழுக்கள் செயற்படுகின்றன.

அவற்றை அடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். புதிய ஆண்டிற்குள் அவர்கள் அனைவரையும் எம்மால் ஒழிக்க முடியும்.

யாழில் வாள்வெட்டு குழுக்களை முற்றாக அழிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் நெருக்கடி ஏற்படும் இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் நெருக்கடி ஏற்படும் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் 43 ஆவது கூட்ட தொடரில் இலங்கை பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என அரசு அறிவித்துள்ளது .

இறுதி போரில் போர்குற்றங்களி புரிந்து ஆட்சியில் அமர்ந்துள்ள அரசு முதன் முறையாக நேரடியாக இந்த எதிர்ப்பை சந்திக்க உள்ளது ,

அதனை அடுத்தே இம்முறை பெரும் நெருக்கடி நிறைந்த ஒன்றாக இது அமையும் எனவும் ,

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் மேலும் கால அவகாசம் வழங்கும் நிகழ்வுகள் அங்கு இடம்பெறுவது கடினம் என இலங்கை முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் கடந்த ஆட்சியில் பொறுப்பு கூறலுக்கு பதில் கூற தவறியதன் விளைவே இந்த நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இராணுவ சிப்பாய்க்கு வாள்வெட்டு

இராணுவ சிப்பாய்க்கு வாள்வெட்டு

இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் தான் பணி புரியும் காவலரணில் பணிபுரிந்து விட்டு திரும்பி கொண்டிருந்த பொழுது சில நபர்களினால் வாள்வெட்டுக்கு உள்ளாக்க பட்டுளளார் .

பலத்தகாயமடைந்த இராணுவ சிப்பாய் தற்போது அமருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொள்ள படத்தை குரல்தரவல்ல இராணுவ அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்