Posted in இலங்கை செய்திகள்

உளவு விமானத்தை தேடும் இராணுவம்

இலங்கையில் -உளவு விமானத்தை தேடும் இராணுவம்

இலங்கை – நுவரெலியா பகுதியில் திடீரென வானில் உளவு விமானம் ஒன்று பறந்துள்ளது .

இந்த டிரோன் ரக உளவு விமானத்தை தற்போது இராணுவத்தினர் தேடி வருகின்றனர் .

இந்த உளவு விமானத்தை பறக்க விட்ட்து யார் அவர்களது நோக்கம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன .

இதுவரை இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை

Posted in இலங்கை செய்திகள்

தமிழர் ஆசனங்களை குறைக்கும் நகர்வில் மகிந்தா தீவிரம்

இலங்கையில் –தமிழர் ஆசனங்களை குறைக்கும் நகர்வில் மகிந்தா தீவிரம்

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியின் பாரளுமன்ற தமிழர் ஆசனங்களை மக்கள் விகிதாசார அடிப்படையில் குறைக்கும் நகர்வில் ஆளும் கோட்டபாய அணியினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் .

அதற்கு அமைவாக தமிழர்களின் பல்லை பிடுங்கும் முகமாக இந்த ஆசன குறைப்பு விடயம் அதிரடியாக அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

தமிழர்கள் தனக்கு வாக்கு அளிக்கவில்லை எனவும் சிங்கள மக்கள் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளதாக மார் தட்டும் கோட்டா,மகிந்த அணியினர் இதனை செய்திட துடிப்பதாக தெரியவருகிறது

Posted in இலங்கை செய்திகள்

தப்புமா கோட்டா ஆட்சி ..?தேர்தலில் வெல்வாரா ..?

இலங்கையில் –தப்புமா கோட்டா ஆட்சி ..?தேர்தலில் வெல்வாரா ..?

இலங்கையில் ஆளும் மகிந்த கோட்டா ஆட்சி யின் நீடிப்பு எதிர்வரும் பங்குனி மாத பாராளுமன்ற தேர்தலில் தெரியவரும் வரும் .

தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர கோட்டபாய முனைகிறார் .தப்புமா கோட்டா ஆட்சி..?
கண்சிமான வெற்றி தனக்கு கிடைக்கும் எனவும் அவர் நம்புகிறார் .

அதற்கு அமைவாகவே தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புக்கள் என்பனவற்றை மேற்கொண்டு வருகிறார்

இவரது இந்த விலை குறைப்பின் மூலம் பாரளுமனத்தில் தனி பெரும்பான்மை ஆட்சியை அமைப்பாரா ..?


தப்புமா கோட்டா ஆட்சி ..? இன்று இடம்பெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து பரவலாக தமிழர்கள் மத்தியில் எழுகின்ற கேள்வியாக இது உள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளை வான் கடத்தல் வித்தியாதரன் சாட்சி – சுமந்திரன்

இலங்கையில் -வெள்ளை வான் கடத்தல் வித்தியாதரன் சாட்சி – சுமந்திரன்

இலங்கையில் மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல் கலாச்சாரத்திற்கு முற்று புள்ளியாகவும் அதன் நேரடி சாட்சியாகவும் உள்ளவர் ஊடக யாம்பவன் வித்தியாதரன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் .

வித்தியாதரன் மீது இவரது இந்த திடீர் காதல் மலர்வு ஏன் என்பது புரியவில்லை .


உள்ளக ரீதியாக வித்தியாதரான் புரிந்த கைமாறுக்கு இவ்வாறு தடவும் வைத்தியம் செய்கிறாரா சுமந்திரன் என மக்கள் கேள்விகளை முன் வைக்கின்றனர் .

கூட்டமைப்பில் அங்கம் பெற்று விட கூடாது என்பதற்காகவே வித்தியாதரனை அந்த கட்சியில் இணைக்காது விரட்டியடித்த முக்கிய புள்ளி சுமந்திரன் என்பதை மறந்து இன்று இவ்விதம் உரைக்கிறார் .

இவரது வெள்ளை வான் கூற்று மீளவும் வித்தியாதரனை கைது செய்யவா அல்லது உண்மைகளை வெளியில் எடுத்து விடவா .?

சுமந்திரனின் இந்த தந்திர பொறி எதுக்கு வைக்க படுகிறது ..?
சோழியன் குடும்பி சும்மாவா ஆடும் ..?

Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்கா வீட்டில் பதுங்கிய ரஜிதா

இலங்கையில் -சந்திரிக்கா வீட்டில் பதுங்கிய ரஜிதா

முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித சந்திரிக்காவின் வீட்டில் மறைந்திருந்ததாக புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

இவர் கிரிஷ்மாஷ் தாத்தா வேடத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என சிங்கள ஆளும் வர்க்கம் சார்பான குழு ஒன்று முழங்கி வருகிறது .

மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் அங்கிருந்து ரஜித கைது செய்ய பட்டு சிறைக்கு இழுத்து செல்ல பட்டு அடைக்க பட்டுளளார் .

கோத்தபாய அரசு பழிவாங்கும் வங்குரோத்து தொடர்ந்த வண்ணம் உள்ளது .
இவரை போல மேலும் பலர் கைதகும் நிலை உள்ளதால் சிலர் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர் .

சந்திரிக்காவின் வீட்டில் பதுங்கிய ராஜித தகவல் உண்மை எனின் சந்திரிக்காவும் கைது செய்யப்படும் நிலை தோன்றலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

நீதி துறையில் இந்த அரசு வென்றுள்ளது – விமல் முழக்கம்

இலங்கையில் -நீதி துறையில் இந்த அரசு வென்றுள்ளது – விமல் முழக்கம்

ஆளும் கோட்டபாய அரசு நீதி துறையில் கணிசமான வெற்றியை புரிந்துள்ளது ,
குற்றம் புரிந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்ய பட்டு சிறை படுத்த பட்டுள்ளனர் .

அவர்கள் முன் விரிந்து வீழ்ந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் வழக்கு பதிவு செய்து நீதி துறையில் முன்னெடுக்க பட்டு வருகிறது .

கடந்த காலங்களில் நிலவிய மந்தமான செயல் பாடுகள் அற்று தற்பொழுது அவை வேகம் பெற்றுள்ளது என மகிந்தவின் வாயாக செயல் படும் விமல் வீரவன்சா முழங்கியுள்ளார் .

அலிபாவாவும் நாப்பது திருடர்கள் மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் இவரே இவ்விதம் கூறி செல்கிறார் என்பதை இங்கே கவனிக்க .

Posted in இலங்கை செய்திகள்

ரிசார்ட் பதியுதீன் கைதாகும் நிலை

இலங்கையில் -ரிசார்ட் பதியுதீன் கைதாகும் நிலை

இலங்கையின் முன்னாள் முஸ்லீம் அமைச்சர் ரிச்சர்டு பதியுதீன் கைதாகலாம் என பரபரப்பாக எதிர்பார்க்க படுகிறது .

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்ட இவரை கைது செய்யும் தீவிர நகர்வுகளை மேற்கொள்ள பட்டு வருகின்றனவாம் .

ரஜித கைதான நிலையில் இவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இவர்க்ளுரிய சிறைகள் தயார் செய்ய பட்டுள்ளனவாம் .

மகிந்தவுடன் இணைந்து ரிச்சார்ட் பதியுதீன் வன்னி பகுதியில் பெரும் நாசகார வேலைகளை செய்து வந்துள்ளதும் மக்கள் காணிகள் அபகரிக்க பட்டதும் இங்கே சுட்டி காட்ட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

அரசை மக்கள் வெறுக்க இவரே காரணம் -கோட்டா கண்டு பிடிப்பு

இலங்கையில் -அரசை மக்கள் வெறுக்க இவரே காரணம் -கோட்டா கண்டு பிடிப்பு

இலங்கையில் ஆளும் அரசை மக்கள் வெறுத்து கொள்வதற்கு அரச ஊழியர்களின் அடவாடிகளும் ,அசமந்த போக்கும் காரணமாகிறது .

இவர்களுடன் அதற்கு பொறுப்பான அமைச்சர்கள் அதனை நிவர்த்தி செய்திட தவறியதன் விளைவே இந்த இன்னலுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

அரசை மக்கள் வெறுக்க காரணமான இவர்கள் தமது பொறுப்புக்களை சரிவர செய்து சென்றால் எந்த இடரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் .

இதனை அரச ஊழியர்கள் ,அரசியல்வாதிகளே சரி செய்திட வேண்டும் எனவும் கோட்டபாய முழங்கியுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

கழன்று ஓடிய ரயில் பெட்டி

இலங்கையில் -பயணிகளுடன் கழன்று ஓடிய ரயில் பெட்டி

இலங்கை – கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சில பெட்டிகள் இடையில் கழன்று ஓடியுள்ளன ,

இதனால் பயணிகளுக்கு பாதிப்பு இல்லாத பொழுதும் அவ்வேளை பெரும் பதட்டம் ஏற்பட்டது .மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள பட்டுள்ளன .

பயணிகளுடன் கழன்று ஓடிய ரயில் பெட்டிகள் மீள் பொருத்த பட்டு சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

நான்காம் மாடியில் சிவாஜிலிங்கம்

எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (28) பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய இன்று காலை 9.30 க்கு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் முல்லைத்தீவு வெல்லாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

ஒரு மில்லியன் அமெரிக்கா பணத்துடன் ஒருவர் கைது

இலங்கையில் -ஒரு மில்லியன் அமெரிக்கா பணத்துடன் ஒருவர் கைது

இலங்கையில் – ஒரு மில்லியன் அமெரிக்கா நாணயத்தை போலியாக அச்சிட்டு கள்ள சந்தையில் புளக்கத்தில் விட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .

இவரிடம் இருந்து பித்தளை தகடுகள் ,நாணயங்கள் ,மற்றும் அதற்குரிய ஆவணங்கள் என்பன மீட்க பட்டுள்ளன .

ஒரு மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு மேலாக இங்கிருந்து மீட்க பட்டுள்ளது .கைதான நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

Posted in இலங்கை செய்திகள்

அதிபரை தாக்கிய ஆசாமி

இலங்கையில் -அதிபரை தாக்கிய ஆசாமி கைது

இலங்கை – மொரட்டுவ பகுதியில் ஆளும் ஜனாதிபதி ஆலோசகர் என தன்னை அறிமுகப் படுத்திய ஒருவர் ,அந்த பாடசாலையின் அதிபரை சரமாரியாக தாக்கியுள்ளார் .

பாதிக்க பட்ட அதிபர் வழங்கிய தகவலுக்கு அமைய அதிபரை தாக்கிய ஆசாமி குற்ற புலனைவு துறையினரால் கைது செய்யப்பட்டுளளார் .

அதிபரை தாக்கிய ஆசாமி தொடர்பில் இதுவரை முழுமையான விபரங்கள் வெளியாகவிலை

Posted in இலங்கை செய்திகள்

தீ குழித்து பெண் பலி

வடக்கு -யாழில் – தீ குழித்து பெண் பலி

யாழ்ப்பாணம் -அச்சுவேலி பகுதியில் தீ குளித்து இளம் குடும்ப பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .

தீ குளித்து சாகப் போவதாக கணவனை மிரட்ட உடலில் எண்ணையை ஊற்றியுள்ளார் ,

அவ்வேளை திடீரென உடலில் தீ பற்றி கொண்டநிலையில் பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார் .

பலத்த எரிகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .

தற்செயலாக கணவனை மிரட்ட பெண் எடுத்த முயற்சி அதுவே அவரது உயிரை பறித்து சென்றுள்ளது .


தீ குளித்து இறந்த பெண் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பூட்ட பட்ட மலசல கூடம் -மக்கள் அவதி

இலங்கையில் –பூட்ட பட்ட மலசலகூடம் பயணிகள் அவதி.

கண்டி நுவரெலியா பிரதான பாதையில் தவலந்தன்ன பிரதேசத்தில் கொத்மலை பிரதேச சபையின் அனுசரைனையில் புதிதாக அமைக்கப்பட்ட மலசல கூடம் பூட்டபட்ட நிலையில் உள்ளது .

மலசலகூட தொகுதி பூட்ட ப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இந்த மலைசலகூடத்தின் சில பாகங்கள் தற்போது உடைந்த நிலையிலும்

காணப்படுவதுடன் மக்களின் பணத்தில் அமைக்கபட்டு கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுவது வேதனைக்குறியது.

குறிப்பாக இந்த மலசலகூட தொகுதி இந்த இடத்தில் அமைக்கப்பட்டது வரவேற்கதக்க ஒரு நல்ல விடயமாகும்.

இந்த பாதையின் ஊடாக நாளாந்தம் ஆயிரகணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுவரெலியா பிரதேசத்திற்கு செல்கின்றனர் .

இவர்களுக்கு என ஒரு பொதுவான மலசலகூடம் இல்லை. இவ்வாறான நிலையில் இந்த மலசலகூடங்கள் அமைக்கப்பட்டமை வரவேற்கதக்க ஒன்றாகும் .

இருந்தும் மக்கள் பாவிக்க கூடிய வகையில் நிர்வகிக்காமை வேதனைக்குறியது. இந்த மலசலகூட தொகுதியில்.

ஆண்கள் பாவிக்க கூடிய 02 மலசலகூடமும் பெண்கள் பாவிக்க கூடிய 02 மலசலகூடமும் பராமரிப்பவருக்கு இருப்பிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை உடனடியாக திறந்து மக்கள் பாவனைக்காக வழங்க வேண்டியது பொருப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.

இந்த விடயம் தொடர்பில் கொத்மலை பிரதேச சபை தலைவர் சுசந்த ஜயசுந்தர அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது.

இந்த மலைசல கூடத்திற்கு தேவையான நீரை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றி உள்ளது.

தற்போது அதனை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து நவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வருகின்ற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்த மலைசல கூடம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என்று கூறினார்

பூட்ட பட்ட மலசலகூடம் எப்போது திறக்க பாடும் என மக்கள் காத்துள்ளனர்

பூட்ட பட்ட மலசலகூடம்  - மக்கள்  அவதி
பூட்ட பட்ட மலசலகூடம்  - மக்கள்  அவதி
பூட்ட பட்ட மலசலகூடம்  - மக்கள்  அவதி
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டு கொலை

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நேற்று (26) இரவு குடும்பஸ்தர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா வயது (41) என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளை பிறிந்து வாழ்ந்து வந்த நிலையில்,

உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ள ஒருவர் சுட்டு கொலை .

இந்த நிலையிலே உயிரிழிந்தவர் தங்கி இருந்த வீட்டிற்கு முன் வீதியில் இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு 9 மணியளவில் குறித்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளை வான் சாட்சிகள் சிறையில்

இலங்கையில் –வெள்ளை வான் சாட்சிகள் – சிறையில் அடைப்பு

வெள்ளை வான்-இலங்கையில் கோத்தபாயாவின் ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் நேரடி

சாட்சியாக விளங்கிய இருவர் கடந்த தேர்தலின் பொழுது றஜிதவுடன் இணைந்து சாட்சிகளை கூறினர் .

மேற்படி தகவல் தொடர்பில் கைதான இருவரும் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர் .

இந்த இருவரையும் ஊடக சந்திப்புக்கு அழைத்து பேசிய முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜிதவையும் கைது செய்யும் தீவிர நகர்வில் ஆளும் கோட்டபாய அரசு ஈடுபட்டுள்ளது .

வெள்ளை வான் சட்சிகள் சிறையில் அடைக்க பட்ட நிலையில் றஜிதவும் .சிறையில் அடைக்கும் தீவிரம் வலுப்பெற்றுள்ளது .

இலங்கையில் வெள்ளை வான் சாட்சிகளாக யாராவது மாறினால் நிலைமை இது தான் என்பதை ஆளும் பவுத்த இனவாத கோத்தபாய அரசு அறிவிக்கிறது .

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் தகவல்கள் தெரியவந்தால் இலங்கையில் இருந்து எவரும் அதனை வெளிப்படையாக கூற முடியாத நெருக்கடி இதனால் ஏற்படுகிறது .

இது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்க படும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ரஜிதவை தேடி அதிகாரிகள்

முன்னாள் அமைச்சர் –ரஜிதவை தேடி மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள்

இலங்கை முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜிதாவை தேடி கைது செய்யும் நோக்கில் குற்ற புலனாய்வு துறையினர் நேற்று அவரது களுத்துறை ,மற்றும் கொழும்பு வீடுகளுக்கு சென்றனர் .

அவ்வேளை அவர் அங்கு இருக்கவில்லை ,இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் சுகயீனம் என சென்று படுத்துள்ளார் ,

அங்கு சென்ற அவரையும் குற்ற தடுப்பு பிரிவினர் விடாது துரத்தி சென்று விசாரிக்க சென்றுள்ளனர் .

சிலவேளை இங்கு வைத்தே அவர் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது .


ரஜிதவை தேடி மருத்துவமனைக்கு சென்ற செய்திகள் காட்டு தீயாகபரவி வருவதால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

ஆளும் அரசின் அரசியல் பழிவாங்களின் தொடர்ச்சியே .ரஜிதவை தேடி அலையும் படலம் என தெரிவிக்கப்படுகிறது

ரஜிதவை தேடி
ரஜிதவை தேடி
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையை காட்டில் வீசிய தாய்

நள்ளிரவில் – பிள்ளையை காட்டில் வீசிய தாய் ..!

தான் பெற்ற பிள்ளையை
தனது வீட்டின் அருகில் உள்ள காட்டில் வீசி தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் 36 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்த கொடிய செயலை புரிந்துள்ளார் .

சிசுவின் அழுகுரல் காட்டுக்குள் இருந்து கேட்பதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து சென்ற போலீசார் சிசுவை மீட்டனர் .

பெற்ற பிள்ளையை காட்டில் வீசிய தாய் கைது செய்யப்பட்டுளளார் .


தாயும் சிசுவும் தற்போது குறித்த மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர் .காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இதுவரை பிள்ளையை காட்டில் ஏன் வீசினார் என தெரியவரவில்லை .

Posted in இலங்கை செய்திகள்

29 பேர் சிறையில் அடைப்பு

இலங்கையில் –29 பேர் சிறையில் அடைப்பு .

இலங்கையில் புத்தர் சிலைகளை அடித்து நொறுக்கினர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்ட 29 பேர் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

இலங்கை பவுத்த தேசமாக ஆளும் அரசு அறிவித்துள்ள நிலையில் பெரும் பான்மை சிங்களவர்களை குஷி படுத்த இந்த 29 பேர் சிறையில் அடைக்க பட இழி செயலில் ஆளும் அரசின் நிழல்கள் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .

கைதான 29 பேர் தொடர் விசாரணைகள் இன்றி சிறையில் அடைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

28 000 இரட்டையர்கள் இலங்கையில்-சாதனை

28, 000 இரட்டையர்கள் இலங்கையில் சாதனை

இலங்கையில் – பிறந்த இரட்டையர்களை கணக்கெடுத்து அவர்களை போட்டியில் பங்கெடுக்க முன்னெடுக்க பட்ட நிகழ்வில்

இதுவரை 24 மாவட்டங்களில் இணைத்து சுமார் 28, 000 இரட்டையர்கள் பேர் கலந்து . சாதனையில் இடம்பிடிக்க உள்ளனராம் .

உலகில் அதிகம் கூடிய இரட்டையர்கள் இவர்கள் என்ற பெருமையை இலங்கை தட்டி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது .28, 000 இரட்டையர்கள் இலங்கையில் உள்ளனரா .?

இவர்களை அலரி மாளிகைக்கு அழைத்த மகிந்தா விருந்தளித்து மகிழ்வித்துள்ளாராம் ,

2020 அம ஆண்டு 28, 000 இரட்டையர்கள் இணைந்து சாதனையை நிலை நாட்டை உள்ளனராம்

28, 000 இரட்டையர்கள்
Tagged