Author: நிருபர் காவலன்
சீனாவில் இருந்து இலங்கை திரும்பிய 200 மாணவர்கள்
சீனாவில் இருந்து இலங்கை திரும்பிய 200 மாணவர்கள்
சீனாவில் கற்கை நெறி மேற்கொள்ள சென்றிருந்த சுமார் 200 மாணவர்கள் அங்கிருந்து தற்போது தாய் நாட்டுக்கு மீள
திருப்தி அழைக்க பட்டுள்ளனர் .
இந்த கொர்ன வைரஸ் தாக்குதலில் சிக்கி சீனாவில் இதுவரை நூற்றி ஆறு பேர் பலியாகியுள்ளனர் .
இதனை அடுத்தே இந்த மாணவர்கள் அவசர அவசரமாக நாட்டுக்கு மீள் அழைக்க பட்டுள்ளனர்
விபத்தில் சிக்கிய வாகனம் – சாரதி தப்பி ஓட்டம்
விபத்தில் சிக்கிய வாகனம் – சாரதி தப்பி ஓட்டம்
ஹட்டன், பொகவந்தலா பிரதான வீதியில் டிக்கோயா நகரை அண்மித்த வனராஜா பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து
கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரபத்தனையில் இருந்து நோர்வூட் பகுதியை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு நேற்று இரவு 09 மணி
அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனத்தை செலுத்திய சாரதி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், அதிக வேகமே விபத்துக்கான
காரணம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்தும் 20வது சலங்கை பரதவிழா 16.02.2020
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்தும் 20வது சலங்கை பரதவிழா 16.02.2020 நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சலங்கை பரதவிழா 16.02.2020 அன்று பகல் பன்னிரெண்டு மணிக்கு ஒல்னே சுபுவா ( Aulnay-sous-Bois ) நகரசபை
விளையாட்டரங்க மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இந்நிகழ்வின் விளம்பர பிரசுரத்தைஇ தமது இணையத்தளத்தில் பிரசுரித்து உதவுவதோடு தமது ஊடக
நண்பர்களுக்கும் அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தங்களின் சேவையினை மதித்து தங்கள் கரங்களை இறுகப்பற்றிக்கொள்கின்றோம்.
நன்றி
செ.சுந்தரவேல்
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் full video


வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர்-கோட்டபாயவின் தொடரும் வேட்டை photo
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர்-கோட்டபாயவின் தொடரும் வேட்டை photo
வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக
சிங்களவர் ஓருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில்
எஸ்.எம்.சமன்பந்துலசேன இன்று பதவியேற்றுக்கொண்டார்.
வவுனியா முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் மாலை
அணிவித்து புதிய அரசாங்க அதிபர் வரவேற்கப்பட்டிருந்தார்.
தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் நான்கு மதங்களையும் சேர்ந்த மதகுருமார் ஆசிகளை
வழங்கியிருந்தனர். இதனையடுத்து முன்னாள் அரசாங்க அதிபரின் வரவேற்புடன் புதிய அரசாங்க அதிபர் தனது
கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்திருந்தார்.
இதன் போது முன்னாள் அரசாங்க அதிபருடன் ஐ.எம் கனீபா வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.
திரேஸ்குமார், உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள், புதிய அரசாங்க அதிபரின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.video
நிருபர் – வெடியரசன்



வவுனியாவில் இராணுவத்தால் 11 பேர் கைது- பீதியில் மக்கள் photo
வவுனியாவில் இராணுவத்தால் 11 பேர் கைது- பீதியில் மக்கள் photo
வவுனியாவில் ஏ9 வீதியில் இராணுவமும், பொலிஸாரும் இணைந்து மோப்பநாய் சகிதம் சோதனை
நடவடிக்கையினை கடந்த இரு தினங்களாக மேற்கொண்டிருந்தனர்.
வவுனியா புளியங்குளம், ஓமந்தை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும்
இராணுவமும் இணைந்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகத்திற்கிடமான வீதியால் செல்லும் பேரூந்துகள்
மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன் மோப்ப நாயின் மூலமும்
சோதனையினை மேற்கொண்டிருந்தனர்.
இவ் நடவடிக்கையில் 33கிலோகிராம் கஞ்சா, 35 முதிரை பலகைகள் அத்தோடு பதினொரு பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு தினங்களாக புளியங்குளம், ஓமந்தை அண்மித்து பகுதியில் இரவு பகலாக இராணுவத்தினரும் பொலிஸாரும்
இணைந்து மேற்கொண்ட சோதனையிலே பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நிருபர் – வெடியரசன்






மருத்துவர் மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிவமோகன் MP video
மருத்துவர் மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிவமோகன் MP video
லண்டனில் மரணமடைந்த மருத்துவர் மோகனின் மரண இறுதி நிகழ்வில் வைத்திய கலாநிதியும் ,தமிழ் தேசிய
கூட்டமைப்பின் பாராளும்னற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்
இந்த இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாக்கள் கலந்து கொண்டு மலர் தூவி தமது அஞ்சலியை செலுத்தினர்
அதன் காணொளிகள் கீழ் video
நன்றி – சிவா
பிலிப்பைன்ஸ் போர் கப்பல்கள் 2 இலங்கை வந்தன,
பிலிப்பைன்ஸ் போர் கப்பல்கள் 2 இலங்கை வந்தன,
பிலிப்பைன்ஸ் நடத்துக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் தரித்து
நிற்கின்றன
இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பது ,மற்றும் ஒத்துழைப்பும் தொடர்பிலும் ,இரு நாட்டு கடல்
படைகளுக்கு இடையிலான பயிற்சிகளிலும் இவர்கள் ஈடுபடவுள்ளனர்
மேலும் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கலாச்சார நிகழ்விலும் இவர்கள் பங்கு பெற்றவுள்ளார்
என தெரிவிக்க படுகிறது acciden video
கொழும்பு நோக்கி பயணித்த யாழ் பேரூந்து இராணுவத்தால் திடீர் சோதனை
கொழும்பு நோக்கி பயணித்த யாழ் பேரூந்து இராணுவத்தால் திடீர் சோதனை
வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்துகள் அனைத்தும் விசேட
காவல்த்துறை மற்றும் ,இராணுவத்தால் வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை
பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீத தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றன
இதில் போதைவஸ்துக்கள் கடத்தப்படுவதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே இந்த சோதனை
இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்த்துள்ளனர் .
பலமணி நேரமாக இந்த சோதனை இடம்பெற்றது ,. பயணிகள் இதனால் பீதியில் உறைந்தனர் .fire video
முன்னாள் போராளியை கைது செய்ய விடமாட்டேன் கருணா முழக்கம்
முன்னாள் போராளியை கைது செய்ய விடமாட்டேன் கருணா முழக்கம்
இலங்கையில் -இலங்கை அரசுக்கு எதிராக விடுதலை வேண்டி போராடி வந்த தமிழீழ விடுதலை புலிகளை காட்டி
கொடுத்து அந்த அமைப்பை முற்றாக அழித்த தேச துரோகி கருணா ,தற்போது தான் முன்னாள் போராளிகளை
இலங்கை அரச படைகள் கைது செய்து சிறையில் அடைக்க விடுவேனா என முழங்கியுள்ளார் .
போராளிகளை மீளவும் ம் தனது படையில் இணைகிறார் என தெரிவித்ததை அடுத்து மேற்படி குற்ற சட்டடை
கருணா முன் வைத்துள்ளார்
தேர்தலில் வென்றிடவும் ,கூட்டமைப்பிற்கு களங்கத்தை உருவாக்கவும் கருணா இவ்வாறான செயலில் ஈடுபட்டு
வருகின்றமை குறிப்பிட தக்கது video
மோசடி குற்ற சாட்டில் -விமல் மீது நீதிமன்ற விசாரனை
மோசடி குற்ற சாட்டில் -விமல் மீது நீதிமன்ற விசாரனை
இலங்கையில் ஆளும் கோட்டபாயவின் செல்வாக்கு மிக்க ஒருவராக விளங்கி வரும் விமல் வீரவன்சா மீது
சட்டவிரோதமாக சொத்து சேர்த்த ,மற்றும் மோசடி செய்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கும் வரும் மாதம் 12 ம்
திகதி இடம்பெற உள்ளது .
இந்த நீதிமன்றில் இவர் முன்னிலையாகும் பொழுது கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
அதன் பின்னர் உரிய முறையில் குற்ற சாட்டுக்கள் சமர்ப்பிக்க படவில்லை என கோரி வழக்கு தள்ளுப்படி
செய்ய பட்டு அதன் ஊடக இவர் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர் video
தீயில் எரிந்த கடை,வாகனங்கள் -கண்ணீரில் முதலாளி
லிந்துலை, பாமஸ்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வன்பொருள் கடை (ஹாட்வெயார்), மரத் தளபாட கடை,
கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக
லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீ விபத்து நேற்று (26) இரவு 10 மணி அளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பாமஸ்டன்
பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள வன்பொருள் கடை (ஹாட்வெயார்),
மரத் தளபாட கடை, வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன், கடைக்கு முன்பாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த லொறியும் தீக்கிரையாகியுள்ளது.
லிந்துலை பொலிஸார், மற்றும் பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர்,
தலவாக்கலை மற்றும் நுவரெலியா இராணுவத்தினர், இராணுவத்தின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் தீயை
தீயில் எரிந்த கடை,வாகனங்கள் -கண்ணீரில் முதலாளி
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 6 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீக்கிரையாகிய இவை அனைத்தும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானதாகவும், சம்பவம் இடம்பெற்ற வேளை
உரிமையாளர் இல்லை எனவும், அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருந்ததாகவும், எனினும் அவர்களை எந்தவித
காயங்களும் ஏற்படாமல் காப்பாற்றியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.accident video

கொலை மிரட்டல்- ரஜினிக்கு விசேஷ பாதுகாப்பு
கொலை மிரட்டல்- ரஜினிக்கு விசேஷ பாதுகாப்பு
பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு தெரிவித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது
. இதனால் அவரது வீட்டிற்கு விசேஷ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல்- ரஜினிக்கு விசேஷ பாதுகாப்பு
நடிகர் ரஜினிகாந்த்
சென்னை:
துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியதாக தெரிகிறது. இது குறித்த சி.டி.
ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மற்றும்
விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும், அந்தந்த மாவட்ட கமிஷனர் மற்றும் காவல்துறை
கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
ரஜினி வீட்டு முன், திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர், போராட்டம் நடத்த வந்த நிலையில், தமிழக அரசு,
அவருடைய வீட்டிற்கு விசேஷ பாதுகாப்பு அளித்துள்ளது.
ரஜினி விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறையும் அளித்துள்ளது.
ரஜினிக்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது video
london M 40 வீதியில் எரியும் கார் -தப்பிய சிவமோகன் MP வீடியோ
london M 40 வீதியில் எரியும் கார் -தப்பிய சிவமோகன் MP வீடியோ
தற்போது பிரிட்டன் M 40 வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்து எரிகிறது .
சாரதியின் கட்டு பாட்டை இழந்த கார் மேற்படி விபத்தில் சிக்கியது ,
இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .
காருடன் அதில் பயணித்தவர்களும் எரிந்து கொண்டிருப்பதாக நம்ப படுகிறது ,எனினும் உயிர் சேதங்கள் தொடர்பில் தெரியவரவில்லை
அவ்வழியே பயணித்த அன்பர் அமுதன் அவர்கள் வழங்கிய இந்த காணொளியை இங்கே பதிவு செய்கின்றோம்
மேற்படி காட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் நேரடியாக
பார்வை இட்ட வண்ணம் உள்ளார் .
அவர் பயணித்த வண்டியின் முன்பே இந்த விபத்து
ஏற்பட்டுள்ளது .VIDEO எனினும் இவர்கள் சேதங்கள் ஏதும் இன்றி தெய்வாதீனமாக தப்பித்து கொண்டுள்ளனர்
புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ படங்கள் உள்
புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ
புஸ்ஸல்லாவில் கடைதொகுதியில் தீ மக்களின் உதவியுடன்
கட்டுப்பாடு தீ அணைக்கும் வாகனம் வரவில்லை
கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ
காரணமாக கடை ஒன்று முற்றாக தீக்கு இறையாகி உள்ளது இன்று (25) மாலை ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து பொது மக்களின் உதவியுடன் இந்த தீ கட்டுபாட்டுக்கு
கொண்டு வரப்பட்டது. தீயனைக்கும் வாகனம் இந்த பிரதேசத்தில் இல்லை கண்டியில் இருந்தே வரவேண்டும்.
தகவல் கொடுத்தும் அதுவும் வரவி;ல்லை. அங்குராங்கெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ வீபத்து காரணமாக அங்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருந்தும்
புஸ்ஸல்லாவ பொது மக்களும் இளைஞர்களும் ஒன்றினைந்து தீயை கட்டுபாட்டக்குள் கொண்டு வந்த அதே நேரம் ஏனைய கடைகளுக்கும் தீ பரவாமல்
தடுத்துவிட்டனர். இவர்களின் துரித சேவை பாராட்டுக்குரியது. தீக்கு இறையான கடையின்
பெறு மதிமிக்க பொருட்களும் தீக்கு இறையானது வேதனைக்குரிய ஒன்றாகும்.





லண்டனில் புதுக்குடியிருப்பு பழைய மாணவர் கலை விழா – video
லண்டனில் புதுக்குடியிருப்பு பழைய மாணவர் கலை விழா – video
நேற்று சனிக்கிளை பிரிட்டன் -லண்டன் லூசியம் சிவன் ஆலய மண்படத்தில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய
பழையமாணவர் ஐக்கியராச்சியம் ,என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்ய பட்ட கலை விழா நிகழ்வுகள் இடம்பெற்றன .
இதில் ஆடல் ,பாடல் ,பேச்சு,கவிதை,என தமிழர் கலாச்சார விழுமியங்களை தொட்டு இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன .
மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரும் ,வைத்திய
கலாநிதியுமான சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார் .
மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது ,மிகவும் ஒன்றுபட்ட நிலையில் ,தமதுகுடும்ப
நிகழ்வு போன்று ஒவொரு மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததை கண்டு வியந்தோம் .
கடல் கடந்து வந்த பொழுதும் ,மொழியையையும் ,அதன் கலாச்சாரத்தையும் மறவாது தொடர்ந்து பேணி காக்கும்
செயலில் இங்கு பிறந்து வளர்ந்த எமது சிறுவர்கள் ,இளையவர்கள் ஈடு பட்டதை காண முடிந்தது .
தலைவர் ,செயலர் சிறப்புரைகளை தொடர்ந்து சிறப்பு விருந்தினரும் தமது உரையினை ஆற்றினார் ,
அதில் சங்கத்தின் தோற்றம், நலன் ,மக்கள் ஒருமைப்பாடு,மற்றும் தேசிய அரசியல் தொடர்பாகவும் அவரது பேச்சு விரிந்து பரந்து சென்றது .
மிக ஆளுமைகள் கூடிய நெறிப்படுத்திய நிகழ்வு இனிதே மறு மலர்ச்சியுடன் நிறைவு பெற்றது .
அங்கு நிகழந்த நிகழ்வுகளின் காட்சி தொகுப்புகளில் சில ….
- வன்னி மைந்தன் –










ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்
ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்
தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்காக ரஜினி பட வில்லன் நடிகர் 120 கோடி ரூபாய் சம்பளம்
பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்
தனுஷ்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் இந்தியில்
அறிமுகமானார். இப்படத்திற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் மீண்டும் ஷமிதாப் என்னும் படத்தில்
நடித்தார். இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து பல்வேறு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் இருந்த தனுஷ், தமிழ் படங்களில் கவனம்
செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் தமிழ், இந்தியில் தயாராகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த படத்தை ஆனந்த் எல். ராய் டைரக்டு செய்கிறார்.
அக்ஷய்குமார்
இதில் அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள் தனுசுக்கு ஜோடியாக சாரா அலிகான்
நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் 2.0 படத்தில் அக்ஷய்குமார் வில்லனாக நடித்து இருந்தார். தனுஷ்
படத்தில் நடிக்க அக்ஷய்குமார் ரூ.120 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதை கொடுக்க தயாரிப்பாளர்
ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இலங்கை சகோதரியை வெட்டி கொன்ற சகோதரன்
சென்னையில் இலங்கை சகோதரியை வெட்டி கொன்ற சகோதரன்
தமிழகம் சென்னை வலசைவாக்கத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த சகோதிரி வீட்டுக்கு
சபரிமலைக்கு செல்வர்காக ஐம்பது வயது சகோதரன் சென்றுள்ளார் .
அவ்வேளை ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய வேளையில் சகோதரி மதுவை மறைத்து வைத்து
அருநித்திய நிலையில் வந்துளளர் .
இதனை கண்டுபிடித்த சகோதரன் வாய்தராறில் ஈடு பட்டுளளார் .
இந்த வாய்த் தர்க்கம் முற்றிய நிலையில் அவர் சமையலறை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார் .
சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,
கொலை குற்றத்தில் கொலையாளி கைது செய்ய பட்டு நீதி
விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
சீனா சென்ற 150 இலங்கை மாணவர்கள் அவசரமாக நாட்டுக்கு அழைப்பு
சீனா சென்ற 150 இலங்கை மாணவர்கள் அவசரமாக நாட்டுக்கு அழைப்பு
சீனாவில் பரவி வரும் கொடிய வைரஸ் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் பலர் பலி யாகிவரும் நிலையில் தற்பொழுது சீனாவில் கற்கை நெறியை மேற்கொள்ளும் சுமார் 150
இலங்கை மாணவரக்ளை மீள இலங்கை அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை வெளிநாட்டு அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது
எதிர்வரும் நாட்களில் இவர்கள் அனைவரும் நாடு திரும்பி விடுவார்கள் என நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது
இலங்கையில் கொரன வைரஸ் தாக்குதலில் நால்வர் பாதிப்பு
இலங்கையில் கொரன வைரஸ் தாக்குதலில் நால்வர் பாதிப்பு
சீவல் பரவி வரும்கோண வைரஸ் தாக்குதலில் சிக்கி இலங்கையில் நல்லவர் பாதிக்க பட்டுள்ளனர் .
சீனாவில் கற்கை நெறிக்கு சென்று இலங்கை திரும்பியவர்கள் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மேலும் இந்த நோய் என சந்தேகிக்க படும் சிலரும் கண்டு பிடிக்க பட்டுள்ளனராம்
இதுவரை உலகில் இந்த நோய் தாக்குதலில் சிக்கி சுமார் 70 பேர் இதுவரை பலி யாகியுள்ளனர்
திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
இங்கை – வவுனியா பகுதியில் உள்ள கடை ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்கள் காவல்துறையால்
கைது செய்யப் பட்டுள்ளனர்
கைதானவர்கள் மீது மேற்கொள்ள பட்ட விசாரணைகளில் இவர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதி கடைகளில்
திருடியுள்ளதும் அம்பலமாகியுள்ளது
விசாரணிகளின் பின்னர் இவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது







