Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா -பாகிஸ்தான் விமான படை தளபதிக்கு இடையில் சந்திப்பு

மகிந்தா -பாகிஸ்தான் விமான படை தளபதிக்கு இடையில் சந்திப்பு

இலங்கை அளவும் பிரதமர் மகிந்த ராஜ[பக்ஸ்சா மற்றும் பாகிஸ்தான் விமான படை தளபதிக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பபு தொடர்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இறுதி போரின் பொழுது இலங்கைக்கு பாகிஸ்தான் பாரிய இராணுவ உதவிகளை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – அம்மணி சாள்ஸ் உத்தரவு

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – அம்மணி சாள்ஸ் உத்தரவு

இலங்கை வடக்கு ஆளுநராக பதவி ஏற்று கொறட்டை விட்டு வந்த அம்மணி சாள்ஸ் அவர்கள் தற்பொழுது நித்திரையால் எழுந்துள்ளார் .

கல்வி நிலையங்களில் மேற்கொள்ள படும் பகிடி வதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுளளார் .

போரால் பாதிக்க பட்டு வறுமைக்குள் சிக்கி தவிக்கும் மக்களுக்கும் ,வீடுகளற்று அநாதரவாக தவிக்கும் மக்களுக்கும் இவர் உதவிகள் எதனையும் வழங்க வில்லை

ஆளுநராக இருந்து அதன் ஊடாக மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கலாம் ,ஆனால் ,அதனை செய்யாது

தட்டி கழித்து சிங்கள மத்திக்கு காவடி எடுத்து வருவதை இவரது செயல் பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

ஜனநாயக நாட்டில் மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசியல் பிரதிநித்துவம் அவசியம்

ஜனநாயக நாட்டில் மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசியல் பிரதிநித்துவம் அவசியம்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுபபினர் வே.இராதாகிருஸ்ணன்

ஜனநாயக நாட்டில் மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசியல் பிரதிநித்துவம் அவசியம் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தாலே எதனையும்

மக்களுக்காக செய்ய முடியும். மக்களும் தங்களுக்கு தேவையானதை அரசியல் பிரதிநிதிகளிடம் சென்று செய்துக் கொள்வார்கள் இதுவே உண்மையானது.

இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான ஒரு அரசியல் பிரதி நிதிநிதியை தெரிவு செய்துக் கொள்ள வேண்டும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தற்போது நாட்டில்

நடக்கும் ஆட்சி மக்கள் ஆட்சி முன்னைய காலங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படுவது போல் மன்னராட்சி நடைபெறவில்லை என்று கூறுகின்றார் நுவரெலியா

மாவட்ட பாராளுமன்ற உறுபபினரும் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் (06.02.2020)

நுவரெலியா மாவட்டம் இராகலை புரூக்சைட் செல்வகந்த தோட்டம் சில்வர்கண்டி பிரிவில் மக்கள் பாவனைக்காக பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன்

அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கபட்ட கொங்ரீட் பாதைகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு

உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் இம்முறை வெளிவந்த உயர்தர பெறுபேற்றின்

அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கபட்டனர்

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

தற்போது இந்த நாட்டில் நடக்கும் ஆட்சி மக்கள் ஆட்சி முன்னைய காலங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படுவது போல் மன்னராட்சி நடைபெறவில்லை.

மக்கள் தங்கள் பிரச்சனைகளை; அரசியல் பிரதிநிதிகளிடம் சென்று கூறி அதற்கான திர்வினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு அவர்கள் அவர்கள் சார்பான ஒருவரை பிரதேச

சபைக்கோ மாகாண சபைக்கோ பாராளுமன்றத்திற்கோ தெரிவு செய்துக் கொள்ள வேண்டும். அரசாட்சியில் அரசேனே மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து

சேவை செய்வான். தற்போது அந்த அரசாட்சி இல்லை. மக்கள் ஆட்சியே இருககின்றது. மக்கள் ஆட்சியை

மக்களளே செய்ய வேண்டும். அதற்காக மக்கள அனைவரும் பாராளுமன்றம் செல்ல முடியாது. அவர்

கள் சார்பாக ஒருவரை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்ய வேண்டும். ஜனநாயக ஆட்சியில் ஜனாதிபதி பிரதமர் பாராளுமன்றம் மாகாண சபைகள் உள்ளுராட்சி சபைகள்

ஆகிய காணப்படுகின்றன. இவற்றுக்கு மக்கள் சார்பாகவே பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றன. அதற்து மக்கள தங்களின் வாக்குரிமையை பயன்படுத்தி வருகின்றனர்.

இனி வரும் காலங்களில் பொது மக்கள் தங்களின் வாக்குரிமையை சரியாக பயன்படுத்தி உங்களுக்கு என்று

ஒரு அரசியல் பிரதிநிதியை பெற்றுக் கொள்ளுங்கள். என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் மக்களின்
ஜனநாயக நாட்டில் மக்களின்
Posted in இலங்கை செய்திகள்

ஆலயத்திற்கான சமையல் பாத்திரங்கள் வழங்கிய – மு அமைச்சர்

ஆலயத்திற்கான சமையல் பாத்திரங்கள் வழங்கிய – மு அமைச்சர்

நுவரெலியா மாவட்டம் ராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட ஐபோரஸ்ட் தோட்டம் இலக்கம் இரண்டு ஆலய நிர்வாக

சபையின் வேண்டுகோலுக்கு அமைய முன்னால்

அமைச்சரும் தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்

முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி ஓதுக்கீட்டின் மூலம்

ஆலயத்திற்கான சமையல் பாத்திரங்கள் ஆலய பரிபாலன சபையிடம் கையளிக்கப்பட்டது

ஆலயத்திற்கான சமையல்
ஆலயத்திற்கான சமையல்
Posted in சினிமா

செல்பி எடுத்த நடிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம்

செல்பி எடுத்த நடிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம்

செல்பி எடுத்த காரணத்தால் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணிக்கு போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

செல்பி எடுத்த நடிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு
சஞ்சனா கல்ராணி


நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தமிழ், கன்னட படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பெங்களூரு இந்திரா நகரில் சமீபத்தில் சொகுசு

காரில் நண்பருடன் சென்று கொண்டிருந்த சஞ்சனா கல்ராணி, வாகனம் ஓட்டியபடியே மொபைல் போனில்,

‘செல்பி’ எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

சஞ்சனா கல்ராணி

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய அவருக்கு, போலீசார், ‘நோட்டீஸ்’ அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தனர். சஞ்சனா படப்பிடிப்புக்காக, துபாய்

சென்றிருந்ததால் கால அவகாசம் கோரியிருந்தார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவர், போக்குவரத்து போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்று, இணை

போலீஸ் கமி‌ஷனர் ரவிகாந்தே கவுடாவை சந்தித்தார். ‘பொறுப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு, நான்

செய்திருக்கக்கூடாது’ எனக் கூறி மன்னிப்பு கோரினார். செய்த தவறுக்கு 2,000 ரூபாய் அபராதம் செலுத்தினார்.

செல்பி எடுத்த நடிகைக்கு
செல்பி எடுத்த நடிகைக்கு
Posted in சினிமா

ஐடி ரெய்டு – சினிமா பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல்

ஐடி ரெய்டு – சினிமா பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல்

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய

சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐடி ரெய்டு – சினிமா பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல்
அன்புச்செழியன்
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில்.

விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில்

தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

நேற்று திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்

சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள், ‘பிகில்’ பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர், சென்னை சாலிகிராமம் மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனையில் ஈடுபட்டனர்.

விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர்

இன்று 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு

சொந்தமான இடங்களிலும் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில்

இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியனின் நண்பர் சரவணன் வீட்டிலிருந்து ரூ.17.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய், பிகில் படத்திற்காக 30 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்து உள்ளது. நடிகர் விஜயின் வருமானம் குறித்து

வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் வாக்குமூலம் வாங்கி

வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ. 77 கோடியை வருமான

வரித்துறையினர் பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

பிறந்த பிள்ளைக்கு கொரனோ வைரஸ்

பிறந்த பிள்ளைக்கு கொரனோ வைரஸ்

சீனாவில் பிறந்த பிள்ளைக்கு கொரனஸ் வைரஸ் தாக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது


சீனாவின் குவான் மாகாணத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு பிறந்த சிசுவிற்கே இந்த நோய் தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இதுவரை 563 பேர் பலியாகியும் சுமார் 28018 பேர் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்

மேலும் இதன் நோய் பரவல் தீவிரமாக பரவி வருகிறது .

இந்த நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் ஐந்து மருத்துவ மனைகளை அமைக்கும் பணியில் சீனா அரசு ஈடுபட்டுள்ளது

மேலும் இந்த நோயினை கண்டு பிடித்த மருத்துவருக்கும் இந்த நோய் தாக்கி அவரும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இந்தியா செல்லும் மகிந்தா -போராட்டம் நடத்த தமிழர் தயார்

இந்தியா செல்லும் மகிந்தா -போராட்டம் நடத்த தமிழர் தயார்

இந்தியவனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு இலங்கை ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ்சா செல்கின்றார் ,

இவரது இந்த பயணத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தயராகி வருகின்றனர்

இலங்கை தமிழர்கள் பல்லாயிரம் பேர் படுகொலை செய்துள்ள இவரை கைது செய்ய வேண்டும் என கோரியே

மேற்படி போராட்டம் நடத்திட தமிழர்கள் முனைந்து வருவதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பொலிஸ் சடலமாக மீட்பு

அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பொலிஸ் சடலமாக மீட்பு

இலங்கை மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் தமிழ் போலீசார் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்

இவரது இந்த படுகொலைக்கு காண காரணம் உடனடியாக தெரியவரவில்லை .போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

அடித்து கொலை செய்ய
அடித்து கொலை செய்ய
Posted in இலங்கை செய்திகள்

பயணிகள் பேரூந்து நேரெதிர் மோதல் 20 பேர் காயம்

பயணிகள் பேரூந்து நேரெதிர் மோதல் 20 பேர் காயம்

திருகோணமலை, தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 2 பயணிகள் பஸ் மோதி

விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (06) அதிகாலை தம்பலாகாமம் 99 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சடலம் தம்பலாகாமம் வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து சென்ற தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே

இவ்வாறு மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் தனியார் பஸ் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயணிகள் பேரூந்து நேரெதிர்
பயணிகள் பேரூந்து நேரெதிர்
Posted in இலங்கை செய்திகள்

14 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

14 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

இலங்கையில் பதின் நான்கு காவல்துரை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது .


பதவி உயர்வு பெற்று கொண்ட இவர்களே இவ்விதம் இடமாற்றம் செய்ய பட்டுள்ளனர்
என இலங்கை போலீஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

சுதந்திர தினத்தின் பின் இடம்பெற்ற முதலாவது இடமாற்றம் இதுவாகும் என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சிறையில் இருந்து ஐந்து இராணுவத்தினர் விடுதலை

சிறையில் இருந்து ஐந்து இராணுவத்தினர் விடுதலை

இலங்கை சிறைகளில் குற்றநபிகளின் அடிப்படையில் தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகளில் சுமார் ஐந்து பேர் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

ஆளும் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

யாழ் நெல்லியடியில் விபத்து ஒருவர் பலி

யாழ் நெல்லியடியில் விபத்து ஒருவர் பலி

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கியதால்

பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார் ,21 வயது வாலிபர் ப்டுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார் .

அதிவேகமாக மோட்டார் சைக்கிள் பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in மருத்துவம்

6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்

6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்

நமது இரண்டு கண்களிலும் தெளிவான பார்வை மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் கண்களை 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்
கண் பரிசோதனை


நமது இரண்டு கண்களிலும் தெளிவான பார்வை மிகவும் அவசியம். நல்ல பார்வை இருப்பின் குழந்தைகள் சுறு சுறுப்புடன் இருப்பர்.

எந்த குழந்தையும் எனக்கு பார்வை குறைவாக உள்ளது என்று சொல்ல மாட்டார்கள். ஒவ்வொருவரும் கண்களை 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

நீரழிவு நோயும் பாதிப்பும்

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பின் எந்த பிரச்சினையும் இல்லை. வருமுன் காப்பது சிறந்தது. சர்க்கரை அளவு அன்கண்ட்ரோல் நிலையில் பொதுவாக 5 வருடங்களுக்கு

மேல் இருப்பின் ரெடினாவில் அசாதாரண நிலை ஏற்படுகிறது. அதாவது சாதாரண ரத்த நாளங்கள் அடைபடுதல் அல்லது புது ரத்த நாளங்கள் உருவாகுதல், ரத்த

நாளங்கள் உடைபட்டு ரத்த கசிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக ரத்தகசிவு ஏற்படின் திடீரென்று பார்வை இழப்பு ஏற்படும். இந்த பாதிப்புகள் அனைத்தும்

கட்டுப்படுத்த முடியுமே தவிர குணப்படுத்து வது கடினம். அதுவும் டயாபடிஸ் கண்ட்ரோலில் எப்பொழுதும் இருந்தால் மட்டுமே. தேவைப்படின் மருத்துவர் லேசர் பயன்படுத்த

நேரிடும். எனவே டயாபடிஸ் உள்ள ஒவ்வொரு வரும் 6 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக கண்களை

பரிசோதித்தல் வேண்டும். மேலும் கண்களில் பூச்சி பறப்பது போன்று தென்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும்

கண்புரையும் பார்வையும்

லென்ஸ் ஆனது ஒரு சில காரணங்களால் ஒளி ஊடு ருவும் தன்மையை இழந்து விடுகிறது. இதைத்தான் நாம் கண்புரை (Cataract) என் கிறோம். கண்புரை இருப்பின் தூரப்பார்வை

மங்கி அருகில் தெளிவாக தெரிதல், வாகன முகப்பு லைட் ஒளி சிதறி தெரிதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். கண்புரைக்கு அறுவை சிகிச்சை முறையில் IOL

பொருத்துவதால் (கண்பரசுதல) நல்ல பார்வை கிடைக்கும். நல்ல பார்வை கிடைக்க ரெடினா நன்றாக இருப்பது மிகவும் அவசியம். தற்பொழுது நவீன முறையில் அறுவை சிகிச்சை

செய்வதால் உடனே வீடு திரும்பும் வசதி, குறைந்த நாட்கள் இடைவெளி யில் அன்றாட வேலைகளை செய்வது, போன்ற சிரமம் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை உள்ளது.

கண்பிரஷர்

கண்பிரஷருக்கும், உடம்பு பிரஷருக்கும் (பிளட் பிரஷர்) சம்பந்தம் கிடையாது. நமக்கு தெரியாமலே பார்வை குறைந்து கொண்டே போய் 70% nerve damage ஆனபின்பு தான்

அறிகுறிகள் தென்பட கூடும். எனவே 40 வயதிற் குட்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண்களை ஒரு வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கண்களை பாதுகாக்க வேண்

டும். குடும்பத்தில் யாரேனும் Glaucoma இருந்தால் பிள்ளை களுக்கும் பரிசோதனை செய்தல் அவசியம். மருத்துவ ரின் ஆலோசனைப்படி மருந்துகள் பயன்படுத்துவதால் கண்ணீர்

அழுத்தம் கட்டுக்குள் வைக்க முடியுமே தவிர சரிசெய்வது கடினம். நல்ல நிலையில் உள்ள கண் நரம்பை பாதுகாத்தால் மட்டும் தான் மருந்து, பாதிக்கப்பட்ட நரம்பை சரி

செய்வதற்கு அல்ல என்பதை Glaucoma உள்ளவர்கள் புரிந்து மருந்தை கவனமாக மருத்துவ ரின் ஆலோசனைப்படி குறித்த நேரத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

Posterior capsular Opacity Surgery செய்த பிறகு பழையது போல் பார்வை மங்கலாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று PCO எனும் நிலை.

அறுவை சிகிச்சைக்கு பின் மங்கலான பார்வை 1 வருடத்திலோ 5 வருடம் கழித்தோ எப்பொழுது வேண்டும் என்றாலும் இந்நிலை ஏற்படலாம். பார்வை மங்கி விட்டது

என்று வருத்தப்பட தேவையில்லை. PCO இருப்பின் Yag laser உதவியுடன் அதை சரி செய்தால் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம்.

இவ்வாறு டாக்டர் பென் ஐ கேர் சென்டர் டாக்டர்கள் பென் ரவீந்திரன், டாக்டர்.பிரவின் தாம்சன் தெரிவித்தனர்.

Posted in சினிமா

சின்மயி மனு நிராகரிப்பு…. டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி தேர்வு

சின்மயி மனு நிராகரிப்பு…. டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி தேர்வு

சின்மயி மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சின்மயி மனு நிராகரிப்பு…. டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி தேர்வு
ராதாரவி


டப்பிங் யூனியன் தேர்தல் வரும் 15ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின்

சார்பில் சின்மயி போட்டியிட்டார். இதையடுத்து கடந்த மாதம் 30ந்தேதி மனு தாக்கல் செய்வதற்காக சென்னை

வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சின்மயி வந்தார்.

’மீ டூ’ விவகாரத்தின் போது டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே டப்பிங் யூனியனில் இருந்து

நீக்கப்பட்ட சின்மயி உள்ளே வரக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து சின்மயி மனு தாக்கல் செய்தார்.

ராதாரவி

ஆனால், உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவரது மனு ஏற்று கொள்ளப்படுமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய சின்மயி, எந்த

காரணமும் இல்லாமல் விளக்கமும் கொடுக்காமல் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது ஏன்? வாழ்நாள்

உறுப்பினர் அட்டை வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பாடகி சின்மயி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் டப்பிங் யூனியன்

தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம

வவுனியா வைத்தியசாலையில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம

கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் 24வயதுடைய வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் இன்று (05.02)

காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

வடமாகாண சமுதாய வைத்திய நிபுனர் வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்தார்.

வவுனியாவை சேர்ந்த 24வயதுடைய குறித்த யுவதி சீனா நாட்டிக்கு கல்விக்காக சென்ற நிலையில் கடந்த 28ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

குறித்த யுவதிக்கு மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் இருந்தமையினால் குறித்த யுவதி சிகிச்சைக்காக வவுனியா

மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு இன்று (05.02) காலை சென்று அவரது விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெகு தொலைவில் தான்

வசித்துள்ளார். எனினும் மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் போன்ற விடயங்கள் கொரோனா வைரஸின் அறிகுறிகளாக

இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட விசேட விடுதியில் தங்கப்பட்டு,

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியசாலையான யாழ்ப்பாணம் போதனா

வைத்தியசாலைக்கு மாலை 3.00 மணியளவில் நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த யுவதிக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு பின்னரே குறித்த யுவதி கோரோனா வைரஸ் தொற்றுக்கு

உள்ளாகியுள்ளரா? என்ற விடயத்தினை உறுதிப்படுத்த முடியுமென மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

ஏ9 வீதியில் கோர விபத்து : மாணவன் உட்பட மூவர் படுகாயம்

ஏ9 வீதியில் கோர விபத்து : மாணவன் உட்பட மூவர் படுகாயம்

வவுனியா கண்டி வீதியில் இன்று (05.02) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன்

உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின்

கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த இரு துவிக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவன் மற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த

நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் இரு துவிச்சக்கரவண்டிகளும் பட்டாரக வாகனத்தின் சில்லினுள் அகப்பட்டு முழுமையாக

சேதமடைந்துள்ளதுடன் பட்டாரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொருப்பதிகாரி காமினி திஸாநாயக்க

தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏ9 வீதியில் கோர விபத்து
ஏ9 வீதியில் கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

தங்களுடைய இருப்புக்காக ஒற்றுமையினை சிலர் தவிர்க்கின்றனர் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து

தங்களுடைய இருப்புக்காக ஒற்றுமையினை சிலர் தவிர்க்கின்றனர் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை என்ற விடயத்தில் சிலர் தங்களுடைய இருப்பினை

தக்கவைப்பதற்காக, ஒற்றுமையினை நிராகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

காணொளிவாயிலாக ஜேர்மன் டோர்ட்முன்ட் நகரில், இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே,

தமிழ்ஊடகங்களுக்கு இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஊடகர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை என்ற விடயத்தில்

மக்களின் எதிர்பார்ப்பு என்பது புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. நாம் அதனை நிராகரிக்கவில்லை.

எல்லோருடனும் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். முனைகின்றோம். ஆனால் கடந்த பத்து

ஆண்டுகளில் ஒற்றுமைக்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.

என்னைப் பொறுத்தவரை, அன்று பல இயக்கங்கள் காணப்பட்டிருந்தன. அப்போதும் இந்த ஒற்றுமை என்ற

விடயம் பேசப்பட்டுத்தான் இருந்தது. ஆனால் ஒற்றுமை வரும் என்று காத்திருக்காமல், தெளிவானதொரு நிகழ்ச்சி

நிரலுடன் தமது செயற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்தனர். மக்கள் அவர்கள் அங்கீகரித்து அவர்களின் பின்னால் நின்றனர்.

அந்த வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில், ஒற்றுமை வரும் வரை காத்திருக்காமல், எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையினை மையப்படுத்திய நீதிக்கான

செயற்பாடாகட்டும், அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கமாகட்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கான

சட்ட நடவடிக்கையாகட்டும் நாம் அனைத்து செயற்பாடுகளையும், அனைவரும் இணைந்ததாகவே

முன்னெடுக்க விரும்புகின்றோம். இதன் அடிப்படையில் பல அமைப்புக்களுடன் பேசியிருந்தோம். சில விடயங்களில் ஒன்றாக செயற்பட்டிருந்தாலும் அது நீடிப்பதில்லை.

தமிழீழம் என்ற இலக்கிலோ, அதனை அடைவதற்கான வழியிலோ தெளிவான பார்வை அமைப்புகளிடத்தில்

காணப்படும் நிலையில், இணைந்து கொள்வதில் எங்கே தடை இருக்கின்றது என்பதில்தான் கேள்வியாக இருக்கின்றது.

என்னைப் பொறுத்தவரை தங்களுடைய இருப்பினை தக்கவைப்பதற்காக, ஏதோவொரு காரணங்களை

முன்வைத்து சிலர் ஒற்றுமையினை நிராகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் 500 கிலோ கஞ்சா மீட்பு

யாழில் 500 கிலோ கஞ்சா மீட்பு

யாழில் கடந்த ஐந்து நாட்களில் மேற்கொள்ள பட்ட விசேட தேடுதல்களின் பொழுது சுமார் 500 கிலோ கேரளா கஞ்சா மீட்க பட்டுள்ளது

கடந்த தினம் மட்டும் காங்கேசன்துறை கடல் பகுதியில் சுமார் 113 கிலோ கஞ்சா மீட்க பட்டுள்ளது
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய படையினரை மீள அழைக்கும் இராணுவம் – மன்னிப்பு கலாம் மேலும் நீடிப்பு

தப்பி ஓடிய படையினரை மீள அழைக்கும் இராணுவம் – மன்னிப்பு கலாம் மேலும் நீடிப்பு

இலங்கையில் ஏற்பட்ட போரின் பொழுது தப்பி ஓடிய சுமார் ஐம்பதாயிரம் படைகளையும் மீள வந்து இராணுவத்தில்

இணையும் படி இராணுவம் வேண்டுதல் விடுத்துள்ளது

இவ்வாறு தப்பி ஓடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கி மீளவும்

இராணுவத்தில் இணையும் காலம் நீடிக்க பட்டுள்ளது