Posted in இலங்கை செய்திகள்

பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு 7 வருட சிறை

பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு
7 வருட சிறை

அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் ஊடாக பல மில்லியன் அமெரிக்கா டொலர்களை மோசடி செய்த

இலங்கையில் பிறந்த பிரித்தானியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பிரித்தானியாவின் கர்னார்போன் கிரவுன் நீதிமன்றத்தின் ஊடாக 7 வருடங்களும் 8 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

41 வயதான மைக்கல் கினானே என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் திட்டம் மூலம் 8 மில்லியன் டொலர் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் மீது, பணச்சலவை உள்ளிட்ட மேலும் சில குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

இளங்கலை பெல்காமை பகுதியில் காணமல் போன

வயதான பெண்மணி ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் .

குளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் இவர் சடலமாக மீட்க பட்டுளளார் .

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக தெரியவரவில்லை

போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வைரசுக்கு மருந்து கண்டு பிடித்த தமிழர் – வீடியோ

கொரனோ வைரசுக்கு மருந்து கண்டு பிடித்த தமிழர் – வீடியோ

சீனாவை தயமாக கொண்டு பரவி வரும் கொடிய கொரனோ வைரஸ் நோய்க்கு தமிழர்கள் இருவர் இணைந்து கண்டு பிடித்துள்ள மருந்து

இவர்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைத்து விருது வழங்கி வைக்கும் ஏற்பாடுகளில் தீவிரம் காட்ட பட்டு வருகிறது

முழுமையான விபரத்தை காணொளியில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Posted in இலங்கை செய்திகள்

விடுதலை புலிகள் எங்க இருக்கு ..? சீமான் கேள்வி வீடியோ

தமிழீழ விடுதலை புலிகளை அழித்து விட்டதாக சிங்கள அரசு அறிவித்துள்ளது ,இவ்வாறான நிலையில் புலிகள் எங்கே இருக்கிறாங்க என சீமான் கேள்வி எழுப்பியுள்ளளார்

நாம் புலிகள் மற்றும் பிரபாகரனை முன் நிறுத்தியே போராடடத்தை முன் எடுப்போம் என சீமான் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

லண்டன் இலங்கை தூதரகம் முன்பு தமிழர்கள் போராட்டம் – வீடியோ

லண்டன் இலங்கை தூதரகம் முன்பு தமிழர்கள் போராட்டம் – வீடியோ

பிரிட்டன் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக ,இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை

புறக்கணித்து கறுப்பு கொடி போராட்டத்தில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் திரண்டு சென்று இந்த போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதித்துள்ள இலங்கை பவுத்த பேரினவாத அரசு தமிழர்களை தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கு வருகிறது

தமிழர்களை படு கோரமாக கொலை செய்த கோட்ட பாய அந்த நாட்டின் அதிபராக உள்ளார் .

இதற்கு எதிராகவே இந்த மக்கள் அங்கு திரண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

இங்கு கலந்து கொண்ட மக்களை அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் காணொளிகள் மற்றும் நிழல் படங்கள்

என்பனவற்றை பிடித்து மேலும் தமிழருக்கு மிரட்டலை விடுத்துள்ளனர்

இந்த போராட்டத்த்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை சென்றால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும்

முன் மாதிரி நடவடிக்கையில் ஒன்றாக இந்த செயலை சிங்களம் புரிகிறது full video

லண்டன் இலங்கை தூதரகம்
லண்டன் இலங்கை தூதரகம்
https://www.youtube.com/watch?v=HdZlZBWniq8
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கைவிடப்பட்ட வயற்காணிகளில் பயிர்ச்செய்கை ஆரம்பித்து வைப்பு

வவுனியாவில் கைவிடப்பட்ட வயற்காணிகளில் பயிர்ச்செய்கை ஆரம்பித்து வைப்பு

‘கைவிடப்பட்ட வயற்காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளல்’ நிகழ்வின் வவுனியா மாவட்டத்திற்கான

உத்தியோகபூர்வ நிகழ்வானது வெங்கலச் செட்டிக்குள பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவித்தோட்டம் கிராமத்தில் நடைபெற்றது.

நாடு பூராகவும் கைவிடப்பட்ட வயற் காணிகளை விவசாய காணிகளாக மாற்றி பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு

வருகின்றது. அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கான நிகழ்வானது கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் செட்டிகுளம்

கமநலசேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் அருவித் தோட்டம் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், வவுனியா நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் கே.இமாஷலன், திணைக்கள

உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பினர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு கைவிடப்பட்ட நிலத்தில் பயிற்செய்கை நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தனர்.

வவுனியாவில் கைவிடப்பட்ட வயற்காணிகளில்
வவுனியாவில் கைவிடப்பட்ட வயற்காணிகளில்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கம் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்துகிறது மனோ கணேசன்

அரசாங்கம் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்துகிறது

மனோ கணேசன்

மனோ கணேசன்
தேசிய சுதந்திர தின நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை, சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில், நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி,

தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது. ஒரு இலங்கையனாக வெட்கமும், கவலையும் அடைகிறேன் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு,

இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தன் டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

தமது சமூக தள செய்தி பற்றி மேலதிக விளக்கம் கேட்ட போது, இந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என மனோ கணேசன் எம்பி கூறினார்.

இன்றைய சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவில்லை. கடந்த ஆட்சியில் 2016ம் ஆண்டு

சுதந்திர தின நிகழ்வில் ஆரம்பிக்கபட்ட தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை பாடும் வழமை, இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரம்

என்ற முறையில் மனோ கணேசன், அமைச்சரவை உபகுழு மூலம் முன்னெடுத்திருந்தார்.

இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என்ற செய்தி பரவிய நிலையில் இது

தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் கவனத்துக்கு இதை பலமுறை மனோ கணேசன் கொண்டு வந்தார். நேற்று மனோ கணேசன், “இந்த கடைசி

தருணத்திலாவது, நல்ல முடிவை எடுங்கள்” என ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. video

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்குவது? வெளியான தகவல்

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்குவது? வெளியான தகவல்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியல் ஆசனத்தினை தேர்தலில் போட்டியிட்டு

தோல்வியடைந்தவர்களுக்கு வழங்க கூடாது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் போட்டி நிறைந்த களமாக அமையவுள்ளது. இவ்வாறான போட்டிக்களத்தில் பலரும் போட்டியிட விருப்பம் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இம்முறை அதிகப்படியான ஆசனங்களை வடக்கு கிழக்கில் கைப்பற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனையையும் அவர்களது அபிலாசைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரேயொரு

கட்சியாக உள்ளது தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பதனை எவரும் மறந்துவிட முடியாது.

இந்தவகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தினை பிரதிபலிபார்கள்

என்பது உண்மை. அதனடிப்படையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பலமான ஆரோக்கிமிக்க வேட்பாளர்களை களத்தில் இறக்கும்.

அதிக ஆசனங்களை கைப்பற்றுவதால் கூட்டமைப்புக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு

தோல்வியடைந்தவர்களுக்கு வழங்காமல் இளைஞர்களுக்கும் கல்வியியலாளர்களுக்கும் மக்களின்

வேதனைகளை அறிந்த சமூக சேவகர்களுக்கும் வழங்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Posted in சினிமா

காதல் இளவரசி -நயன்தாரா காதல் முறிந்ததுvideo

காதல் இளவரசி -நயன்தாரா காதல் முறிந்தது

வாலிபர்களின் காதல் கன்னியாகவும் ,காதல்

இளவரசியாகவும் விளங்கி வரும் நயன்தாரா ,விக்கினேஸ்

சிவனின் புதிய காதல்

முறிந்துள்ளதாக இந்த காணொளி தெரிவிக்கிறது ,காணொளியை பாருங்கள் ,காதல் தோல்வியை பகிருங்கள்

https://www.youtube.com/watch?v=Ubtg6ZBFDRQ&feature=youtu.be
Posted in இலங்கை செய்திகள்

பேஸ்புக் காணொளியால் உயிரை விட்ட இராணுவ சிப்பாய்

பேஸ்புக் காணொளியால் உயிரை விட்ட இராணுவ சிப்பாய்

இலங்கையில் 36 வயதுடையஇளம் இராணுவ சிப்பாய் ஒருவர் பேஸ்புக் காணொளி ஒன்றினால் மரணமாகியுள்ளார்

அதில் பதிவிட பட்ட காணொளியில் மரம் ஒன்றின் சாறினை குடித்து வந்தால் நோய் தீரும் என தெரிவிக்க பட்டு நபர் ஒருவர் காணொளியை வெளியிட்டார் .

அவரது இந்த காணொளியை பார்வை டட இந்த இராணுவ சிப்பாய் அதனை நம்பி பருகி வந்தார் ,

ஆனால் அவரது உடலில் குறித்த இலை விஷத்தை பரப்பிவிட தற்பொழுது உயிரை விட்டுளளார்

Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 679கைதிகள் விடுதலை

சுதந்திர தினத்தை முன்னிட்டு 679 கைதிகள் விடுதலை

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 679 சிறைக் கைதிகளுக்கு

பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பொது மன்னிப்பு பெற்றுள்ள 679 சிறைக் கைதிகளுள் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான கைதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வைரஸ் தாக்குதல் 425 பேர் பலி -20400 பேர் பாதிப்பு

கொரனோ வைரஸ் தாக்குதல் 425 பேர் பலி -20400 பேர் பாதிப்பு

உலகில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 425 பேர் பலியாகியுள்ளனர்

,மேலும் 20400 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

இரண்டு நாட்களில் மட்டும் சுமார் இருபதாயிரம் பேர் புதிதாக இந்த நோயில் சிக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர தினத்திற்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (04) 1079 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

இன்று இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதி மறுக்கப்பட்ட நாட்டில்

சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு என்கின்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமல்

ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

உறவினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாதம் இலங்கையில் தலை தூக்க அனுமதியேன் கோட்டா

பயங்கரவாதம் இலங்கையில் தலை தூக்க அனுமதியேன் கோட்டா

இலங்கை ஒற்றை ஆட்சியுடைய அரசாங்கமாகும். சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட

ஜனநாயக குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலணித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று இன்றோடு 72 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இன்றைய தினம் அரச தலைவர் என்ற வகையில் நீங்கள் பெற்ற சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உறுதி பூண்டே உங்களுக்கு உரை நிகழ்த்துகிறேன். இந்த

சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்குமாக தன்னை அர்ப்பணித்த சிங்கள,

தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பேகர் ஆகிய தலைவர்களுக்கு தனது பெறு மதிப்பை செலுத்துகிறேன்.

இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்போடும் வாழும் உரிமை உண்டு. அவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையும்

சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமை போன்று கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையையும் தாம்

எப்போதும் உறுதி செய்வோம். எந்தவொரு பிரஜைக்கும் தாம் விரும்பும் மதத்தினை வழிபடுவதற்கான உரிமையும் நாம் எப்போதும் மதிப்போம்.

தத்தமது நண்பர்களை தெரிவு செய்வது போன்று அமைதியான ஒன்று கூடலுக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும்

உரிமையுண்டு. இலங்கையின் பிரஜை ஒருவர் தான் தெரிவு செய்துக் கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக அரசியல்

செயல்பாட்டில் சம்பந்தபடும் உரிமையை நாம் எப்பொழுதும் பாதுகாப்போம்.

இவை அனைத்தும் எவராலும் சவால் விட முடியாத மனித உரிமைகள் என்றே கருதுகிறோம். ஜனநாயகத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்தும் போது, எம்மால்

சரிசமப்படத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. நிறைவேற்றுத் துறை, சட்டவாக்கத் துறை, மற்றும் நீதிமன்ற துறையானது அதன்போது மிக முக்கியமானது.

அதிகார பரவலாக்கத்தின் போது, மத்திய அரசு மற்றும் பண்முகப்படுத்தப்பட்ட பொறுப்புக்களுக்கு இடையே சிறந்த உரிமைப்பாடு இருக்க வேண்டும்.

அரச தலைவர் என்ற வகையில் சேவைபுரியும் நோக்கு எனக்குள்ளது. ஜனாதிபதியாக இன, மத, கட்சி அல்லது வேறு பேதங்கள் இன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களையே

நான் இன்று பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எந்தவொரு ஜனநாயக ரீதியிலான சமூகத்திலும் நன்மைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும், வலுவான நிறைவேற்றுத்

துறைக்கும் சட்டவாக்க துறையும், அத்துடன் தன்னாதிக்கம் உள்ள நீதிமன்றமும் தேவைப்படுகின்றது.

ஒரு நாட்டின் இருப்புக்காக இன்றியமையாத இந்த முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் எந்த ஒரு வகையிலும் மக்களின் நம்பிக்கை சீர்கெடுமானால் அது ஒரு நாட்டின்

அராஜகத்திற்கு காரணமாகும். ஆகையால் அனைத்து தரப்புக்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை

நாட்டின் நலன் கருதியும் மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கும் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

தேசிய பாதுகாப்பை போன்று மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும் நாங்கள் முக்கிய கவனம்

செலுத்துவோம். பங்கரவாதத்திற்கு வழிவகைக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்த நாட்டில் செயற்படுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

நாடு பூராகவும் பரவியுள்ள போதைப்பொருள் இடையூறுகளில் இருந்து பிள்ளைகளை மீட்கும் வரை பெற்றோருக்கு சுதந்திரம் இல்லை.

அரச நிறுவனங்களினுள் ஊழல்கள் மோசடிகள் இருக்கும் வரையில் பொதுமக்களுக்கு சுதந்திரம் இல்லை. ஆகையால் இயல்பான மக்கள் வாழ்வுக்கு அழுத்தம் செலுத்துகின்ற

அனைத்து இடையூறுகளையும் ஒழிப்பதற்காக சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த நடவடிக்கைகளை வினைத்திறன்

ஆக்குவதற்கு தேவையான சீர்த்திருத்தங்களை தற்போது பாதுகாப்பு துறையினுள் ஆரம்பித்துள்ளோம்.

சிந்திக்கும் சுதந்திரத்தினையும் எழுதுவதற்கான சுதந்திரத்தினையும், நான் முழுமையாக உறுதிப்படுத்துவேன்.

அப்போது தான் தத்துவ ஞானிகள் போன்று உயர்மட்ட கலை ஆக்கங்களும் உருவாகும். உங்கள் மனசாட்சியின் படி செயற்படுமாறு நாங்கள் அனைவரிடமும்

கேட்டுக்கொள்கிறேன். எப்போதும் நாட்டை பற்றி சிந்தியுங்கள். ஏனைய சகோதர நாட்டு மக்களை பற்றி சிந்தியுங்கள். அரசியல் தேவைகளை பற்றி மட்டும்

சிந்திக்காது உங்கள் செயல்களினாலும், சொற்களினாலும் நாட்டுக்கு தீமை ஏற்படுமா அல்லது நன்மை ஏற்படுமா என்று சிந்தித்து செயற்படுங்கள்.

வரலாற்றினால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று மிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக எம்முடன்

ஒன்று சேருமாறு அனைத்த இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலத்திற்கு பிரார்த்திக்கிறேன். என்றார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 244 இராணுவ தளபதிகள் அதி உயர் தளபதிகளாக பத்தவி உயர்வு

இலங்கையில் 244 இராணுவ தளபதிகள் அதி உயர் தளபதிகளாக பத்தவி உயர்வு

இலங்கையின் 72 டாவது சுதந்திர தின நிக்கலவை அடுத்து தற்பொழுது 17 இராணுவ தளபதிகள்

பிரிகேடியர்களாகவும்,45 பேர் கேணல்களாகவும் 49 பேர் லெப்டினன் கேணல் ,42 பேர் மேயர்களாகவும் லெப்டினன் களாகவும் பதவி உயர்த்த பட்டுள்ளனர் .

இறுதி போரில் இவர்கள் அனைவரும் சவேந்திர சில்வாவின் கீழ் பணியாற்றியவர்க்ள என்பது குறிப்பிட தக்கது

,அவ்வாறானவர்களுக்கே இந்த பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

சம்பள பொதி வேண்டாம் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமே வேண்டும்

சம்பள பொதி வேண்டாம்
ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமே வேண்டும்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை ஏற்படுத்த உள்ளதாக அன்மையில் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த சம்பளம் வருகின்ற மார்ச்

மாதம் முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த சம்பள அதிகரிப்பு அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து சம்பள பொதியாக வருகைக்கான கொடுப்பனவு தேயிலை விலை கொடுப்பனவு ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி மற்றும்

ஏனைய கொடுப்பனவுகள் அடங்களாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட கூடாது. ஜனாதிபதி அவர்கள் தேர்தல் காலத்தில் இதனை ஒரு வாக்குறிதியாகவும் கூறியுள்ளார்.

அந்த வகையில் வருகின்ற மார்ச் மாதம் முதல் இந்த அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவை கட்டாயம் வழங்க

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்

முன்னால் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள். (04.02.2020)

நுவரெலியா மாவட்டம் ஜபோரஸ்ட்; பிரம்லி தோட்ட மக்களின் அன்றாட தேவைக்காக பாராளுமன்ற

உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் வினியோக திட்டத்தை மக்கள் பாவனைக்ககாக

கையளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் பொழுது இளைஞர்களுக்கான விளையாட்டு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்.

பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சனைகள் இருந்த போதும் அந்த பிரச்சனைகளில் முதல் இடம் பிடிப்பது சம்பள பிரச்சனையே. நாங்கள் அமைச்சராக இருந்த போது

ஐம்பது ரூபாய் அதிகரிப்பதற்கு முயற்சிகள் செய்தோம் கிடைக்கவில்லை. அதற்கு முழ முற்றுக்கட்டையாக

இருந்தது இந்த கம்பனிகள் தான். அதே போல் இதற்கும் கம்பனிகள் முற்றுக்கடடையாக இருந்து விடக் கூடாது.

பெருந்தோட்டங்கள் நட்டம் அடைந்துள்ளதாக கூறியே சம்பள அதிகரிப்பிற்கு கம்பனிகள் தடையாக இருக்கின்றனர். ஆனால் கம்பனிகள் தோட்டத்தை துப்பரவு

செய்து உரம் போட்டு விலைச்சலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதில்லை. தோட்டங்களில் உற்பத்திக்கான எந்தவிதமான அபிவிருத்தி

செயற்பாடுகளும் செய்யாமல் எப்படி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். தோட்டங்கள் நட்டம் அடைவதற்கு கம்பனிகளே காராணமாக இருக்கின்றன.

பெருந்தோட்ட கம்பனிகள் 23 இல் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க கூடிய வருமானம் உள்ள பல கம்பனிகளும் உள்ளன. சில கம்பனிகள் அவ்வாறு இல்லாததினால் ஆயிரம் ரூபா

சம்பள இலுத்தடிப்பிற்கு காரணமாக இருக்கின்றது. எது எவ்வாறாயினும் அரசாங்கம் அறிவித்தது போல் ஆயிரம்

ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று மேலும் அவர் கருத்து தெரிவித்தார்

சம்பள பொதி வேண்டாம் ஆயிரம்
சம்பள பொதி வேண்டாம் ஆயிரம்
Posted in சினிமா

திருமணமான 2 வாரங்களில் 5-வது கணவரை பிரிந்த நடிகை பமீலா ஆண்டர்சன்

திருமணமான 2 வாரங்களில் 5-வது கணவரை பிரிந்த நடிகை பமீலா ஆண்டர்சன்

பிரபல ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன், காதலித்து திருமணம் செய்த 5வது கணவரை விவகாரத்து செய்திருக்கிறார்.

திருமணமான 2 வாரங்களில் 5-வது கணவரை பிரிந்த நடிகை பமீலா ஆண்டர்சன்
பமீலா ஆண்டர்சன்


பிரபல ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். இவருக்கு வயது 52. பாடகர்கள் டாம்மி லீ, கிட் ராக், ‘போக்கர்’

விளையாட்டு வீரர் ரிக் சாலமன் ஆகியோரை திருமணம் செய்து, விவாகரத்து செய்தவர்.

12 நாட்களுக்கு முன்னர் பிரபல ஆலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே

இது ஐந்தாவது திருமணம். ஏற்கனவே நான்கு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள்.

30 வருடங்களுக்கும் மேலாக காதலித்துவந்த இருவரும் கடந்த ஜனவரி 20-ந்தேதி அன்று, மலிபுவில் திருமணம்

செய்து கொண்டார்கள். மலிபு நகரில், தனிப்பட்ட முறையில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ஜான் பீட்டர் – பமீலா ஆண்டர்சன்

திருமணம் ஆகி, இரண்டு வாரங்களே ஆன நிலையில், இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பமீலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருமண உறவில் நமக்கு என்ன வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவர் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை

பரிசீலிக்க சில காலமாகும். ஆகையால், நாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Posted in உளவு செய்திகள்

வானில் பாய்கிறது ஈரான்satellite ballistic missiles – வீடியோ

வானில் பாய்கிறது ஈரான்satellite ballistic missiles – வீடியோ

ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் பெரும் பனிப்போர்

மூண்டுள்ள நிலையில் ,பதட்டம் அதிகரித்து செல்கிறது

,அவ்வாறான வேளையில் ஈரான்

தற்பொழுது இந்த வார இறுதிக்குள்

இந்த அதிரடி வேலையை செய்கிறது …காணொளியில்

முழுமையான விபரம் full video

https://www.youtube.com/watch?v=Ik5egpx06f0
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் உரம் தட்டுபாடு காரணமாக மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சி

நுவரெலியாவில் உரம் தட்டுபாடு காரணமாக மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சி

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

நுவரெலியாவில்; உரம் தட்டுபாடு காரணமாக மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது கடைகளில் போதிய அளவு தேவையான உரம் இல்லை இதனால் நுவரெலியா

விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலை தொடருமானால் மரக்கரியின் விலை மேலும் அதிகரிக்கும். அரசாங்கம் தனது தேர்தல் காலத்தில் உரத்தை

மானியமாகவும் இலவசமாகவும் வழங்குவதாக வாக்குருதி வழங்கியது இருந்தும் காசு கொடுத்து கூட வாங்குவதற்கு இன்று உரம் தட்டுப்பாடாக காணப்படுகின்றது. தேர்தல்

காலத்தில் இலவசமாக உரத்தை வழங்குவதாக கூரிய அரசாங்கம் காசு கொடுத்தாவது உரத்தை விவசாயிகள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

கூறுகின்றார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி

வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.
நுவரெலியா மாவட்டம் ஐபோரஸ்ட் தோட்டம் மூன்றாம் பிரிவு ஸ்ரீ விஷ்னு ஆலயத்தின் பரிபாலன சபையின்

வேண்டுக்கோலுக்கு அமைய சமையல் பாத்திரங்கள் ஆலய நிர்வாக சபையிடம் வழங்கும் நிகழ்வு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. (03.02.2020) இதன் போது கருத்து

தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

அன்மையில் பெய்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தினால் மரக்கரிகள் பாதிப்பிற்கு உள்ளானது. மரக்கரி தோட்ட தொழிலாளர்களுக்கும்

தோட்டங்களில் தொழில் செய்ய முடியவில்லை. தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய மண் கழிதன்மை அடைந்தமையினால் மரக்கரிகளின் வளர்;ச்சி விகிதம்

குறைவடைந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு போடப்பட்ட சேதன மற்றும் அசேதன உரங்கள் வெள்ளத்தில் அடித்து

செல்லபட்டுள்ளது. ஏற்கனவே போடப்பட்ட சில மரக்கிகள் மழை கராணமாக அழுகியுள்ளன. தற்போது தொடர் வரட்சி நிகழ்கின்றது.

இந் நிலையில் மரக்கரி உற்பத்தியில் ஈடுப்பட்டோரும் விற்பனைகளில் ஈடுப்பட்டோரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். நுவரெலியா விஷேட பொருளாதார

மத்திய நிலையத்திற்கும் போதுமான அளவில் மரக்கரிகள் வராததினால் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்ப முடியாமலும் இருக்கின்றது. தற்போது இந்த காலநிலை

மாற்றதினால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு என்ன தான் தீர்வு. இவர்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்குமா

அல்லது மானியங்கள் கிடைக்குமா என்று விவசாயிகள் அங்களாகின்றனர்.

இவ்வாறான நிலையில் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன் வர வேண்டும்

உரத்தை இலவசமாக வழங்குவதாக அரசாங்கம் கூறியுள்ள நிலையில் காசு கொடுத்தாவது பெற்றுக் கொள்ள

நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உர கடைகளில் ஒரு கிலோ உரத்தை கூட வாங்க முடியாத நிலையில்

மரக்கரி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்று மேலும் கருத்து தெரிவித்தார்

நுவரெலியாவில் உரம் தட்டுபாடு
நுவரெலியாவில் உரம் தட்டுபாடு
Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய பசில் இலங்கை வந்தார்

தப்பி ஓடிய பசில் இலங்கை வந்தார்

நலலாடசகி அரசாங்கத்தில் கைது விசரண்சிங்க்ளில் சிக்கி தவித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ்சா தற்போது

சகோதரன் கோத்தபாய ஆட்சி ஏற்பட்டுள்ளதல் மீளவும் இலங்கை திரும்பியுள்ளார்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு செய்லபடுவது

என்பது தொடர்பிலும் அதன் வெற்றி கனிகளை பறிக்க

செயல் படும் நோக்குடன் அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ளார்