கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
இலங்கை கொழுப்பு தேவாலயங்களில் நடத்த பட்ட குண்டு தாக்குதலை தடுக்க தவறினார்கள் என்கின்ற குற்ற சாட்டில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
மைத்திரிக்கு 100 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் அரச புலனாய்வாளர் தலைவர் நிலந்த ஜேவர்த்தன 75 மில்லியன் ,முன்னாள் காவல்துறை அதிபர் பூஜித்த ஜேசுந்தர 75 மில்லியன் ,முன்னாள் பாதுகாப்பபு செயலர் கோமஸ்ரீ பெர்னாண்டோ 50மில்லியன் ,
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
முன்னாள் குற்ற புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் , இழப்பீடு வழங்க உத்தரவிட பட்டுள்ளது .
மேலும் காயமடைந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் ரூபா வழங்க வேண்டும் என உத்தரவிட பட்டுள்ளது .
இந்த குண்டு வெடிப்பில் 269 பேர் பலியாகியும் 500 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தமை குறிப்பிட தக்கது .
கனடா தமிழர் காதை அடித்து கிழித்த பெண்
கனடா தமிழர் காதை அடித்து கிழித்த பெண்
யாழ்ப்பாணத்தில் கனடாவில் இருந்து சென்ற ஆண் ஒருவரது காதை அடித்து கிழித்துள்ளார் ,அங்கிருந்த பெண் ஒருவர் .
காரைநகர் கசூரினா பீச்சில் குளித்து கொண்டிருந்த கனடா நபர் போதையில் ,இளம் பெண் ஒருவரிடம் தகாத வார்த்தைகளை பேசி சீண்டியுள்ளார் .
ஆத்திரமுற்ற பெண் அவர் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை காத்திருந்து அவரது கன்னத்தில் ஓங்கி விட்ட அறையில் ,அவரது காது கிழிந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார் .
வீர மங்கைக்கு வாழ்த்துக்கள் என நெட்டிசன்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பறக்க விட்ட வண்ணம் உள்ளனர்.
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழக நிதி உதவி பொருட்களை இராணுவம் வழங்கியது
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழக நிதி உதவி பொருட்களை இராணுவம் வழங்கியது
ஊரியன்கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பரிசு
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வாகரை, ஊரியன்கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கு நிகழ்வு, ஊரியன்கட்டு பாடசாலை மண்டபத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் வை. மங்களதர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கௌரவ அதிதிகளாக வாகரை பிரதேச 233 ஆவது படைப் பிரிவின் பிரிக்கேடியர் வசந்த கேவகே, நாவலடி கஜபா ரெஜிமன்ட படைப்பிரிவின் உயர் அதிகாரி லசந்த, கல்குடா வலயக் உளவளத் துறை உதவி கல்விப் பணிப்பாளர் விஷ்வ ஜித்தன் ஆகயோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுமார் 200 குடும்பங்களுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினர் இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.
இலங்கையில் வெளிநாட்டு ஆடம்பர கப்பல் 785 பேருடன் தரிப்பு
இலங்கையில் வெளிநாட்டு ஆடம்பர கப்பல் 785 பேருடன் தரிப்பு
உலகில் மிக பெரும் ஆடம்பர பயணிகள் கப்பல் ஒன்று 785 பயணிகளுடன் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது .
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கையில் ,
இரண்டு நாட்கள் தரித்து நின்று தனது திசை நோக்கி பயணிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
இந்த நிலையில், பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து மருதானை பகுதியில் வைத்து சந்தேக நபர் தப்பிச்செல்ல முயற்சித்தபோது, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளராக பணியாற்றிய,
ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
பிரிட்டனில் உள்ள தபால் கந்தோரின் பிரதான கணினி கட்டமைப்புக்குள் நுழைந்து சைபர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதனால் சர்வதேச பொதி அனுப்புதல் ,மற்றும் கடிதங்கள் வினியோகம் தடை பட்டுள்ளது .
,பொதி சேவைகளும் தாமதகமாகியுள்ளாதால் இழப்புகள் ஏற்பட்டுள்ளன .
இராணுவத்தை உக்கிரைனில் விலக்க தயாராகும் ரசியா
இராணுவத்தை உக்கிரைனில் விலக்க தயாராகும் ரசியா
உக்கிரேன் நாட்டில் இருந்து தமது இராணுவத்தை விலக்கிட ,
ரசியா ஜனாதிபதி புட்டீன் தயாராகி வருகிவதாக முக்கிய ஊடக நபர் தெரிவித்துள்ளார் .
இது உறுதி எனவும் ,பேச்சுக்களின் மூலம் இது சாத்தியமாகும் என அவர் அடித்து கூறியுள்ளார் .
அப்படி என்றால் ரசியா விதிக்க போகும் விதிகளுக்கு கட்டுப்பட்டு,
உக்கிரைன் பேச்சுக்கு செல்லுமா என்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
புட்டீன் நெருங்கிய ஊடக நபர் வெளியிட்டுள்ள,
இந்த தகவல் போரால் பாதிக்க பட்ட நாடுகளும் ,
மக்களும் வரவேற்று கொள்கின்றனர் .
அடம் பிடிக்கும் உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி அமைதிக்கு
திரும்புவரா .
உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு
உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு
உக்கிரைன் நாட்டின் சொலிடர் பகுதியில் காணாமல் போன ,பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரண்டு இராணுவ சிப்பாய்களில் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர்கள் இறந்துள்ளதை ரசியாவின் ஆதரவு ஊடகம் ,ஒன்று காட்சிகளுடன் காண்பித்து ,குறித்த விடயத்தை அறிவித்துள்ளது .
இவ்விதம் ஏற்படலாம் என்பதை ,கடந்த தினம் நாம தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது
வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது
இலங்கை இருபாலை பகுதியில் வீடு புகுந்து கணவன் மனைவிக்கு வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது செய்யப் பட்டுள்ளார் .
பாத்து நாட்களாக ரகசிய இடம் ஒன்றில் மறந்திருந்த பொழுது ,காவல்துறையினரால் குறித்த நபர் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .
இவரது கோழிக்கூட்டுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் ,வாள் ஒன்றும் மீட்க பட்டுள்ளது .
யாழ்ப்பாணத்தில் தற்போது வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணபடுகிறது .
குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களில் சிக்கி சம்பவ இதில் 20 பேர் பலியாகினர் .
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் யாவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .
குருதிஸ் போராளிகளை வேட்டையாடும் துருக்கி
குருதிஸ் போராளிகளை வேட்டையாடும் துருக்கி
ஈராக் வடக்கு பகுதியில் தளம் அமைத்து தாயக மீட்புக்கு போராடி வரும் குருதீஸ் போராளிகள் நிலைகளை இலக்கு வைத்து ,துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
துருக்கி நடத்தி வரும் இந்த தாக்குதல்களில் சிக்கி அப்பாவி குருதீஸ் மக்கள் பலியாகி வருகின்றனர் .
துருக்கி நடத்திய விமான தாக்குதல்களில் சிக்கி 67 குருதீஸ் போராளிகள் சாவடைந்துள்ளனர் .
தொடர்ந்து சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
துப்பாக்கி சூடு ஒருவர் படுகொலை
துப்பாக்கி சூடு ஒருவர் படுகொலை
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் ,குடும்பஸ்தர் சுட்டு கொலை செய்யப் பட்டுளளார் .
பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டு ,மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த நபர் மீது, பற்றைக்குள் மறைந்திருந்த நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளார் .
சடலம் மீட்க பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளது .
இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
போதையை ஒழிப்போம் – மாணவர்களை காப்போம்
போதையை ஒழிப்போம் – மாணவர்களை காப்போம்
பொத்துவில் ரோயல் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் “போதையை ஒழிப்போம் – மாணவர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளில்
திருகோணமலை முதல் பொத்துவில் அருகம்பை வரையிலான தனி நபர் சைக்கிளோட்டம் இன்று (11) காலை 6.30 மணியளவில் கிழக்கு மாகாண சபை முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சைக்கிள் ஓட்டத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
(திருமதி) ஜே.ஜே.முரளிதரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின்
பிரதிப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(அபு அலா)
இந்தியாவின் சீனாவை அழிக்கும் ஏவுகணை சோதனை
இந்தியாவின் சீனாவை அழிக்கும் ஏவுகணை சோதனை
இந்தியா புதிய வகை பிரிதிவி இரண்டு ரக ஏவுகணையையை,
வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது .
காலை 11.35 மணியளவில் ஒடிசா பாலசோருக்கு அருகிலுள்ள ,
சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்டது .
இந்த ஏவுகணையானது 350 கிலோமீற்றர் வரை சென்று,
இலக்குகளை துல்லியமாக தக்கவல்லது .
இந்தியாவின் சீனாவை அழிக்கும் ஏவுகணை சோதனை
மேலும் இந்த ஏவுகணையால்,
ஒரு போர் கப்பலை சுமந்து செல்லும்,
வல்லமை கொண்டதாக உள்ளது .
திரவ உந்துவிசை இரட்டை இயந்திரங்களால்,
செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது .
.
சீனா பாகிஸ்தானின் முக்கிய இலக்குகளை,
துல்லியமாக இந்த ஏவுகணைகள் மூலம் தாக்கியழிக்க முடியும் ,
என்கிறது இந்தியா இராணுவம்.
இந்தியாவின் இந்த ஏவுகணை சோதனையால்,
இந்திய மக்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
போலி அம்புலன்ஸ் சாரதி கைது
போலி அம்புலன்ஸ் சாரதி கைது
அவுஸ்ரேலியாவில் போலி அம்புலன்ஸ் சாரதி ஒருவர் கைது செய்ய பாட்டுள்ளார் .
இவரை தனது நன்பையின் சீருடையை பெற்று அவசரகால உதவி மருத்துவ ஊழியராக தன்னை அறிமுக படுத்தி நடித்து வந்துள்ளார் .
இவரது இந்த போலிமுகம் ஒருநாள் அமபலமானது .
தற்போது இந்த பெண் கைது செய்யப்பட்டுளளார் .
இவர் மீது 26 குற்றங்கள் சுமத்த பட்ட நிலையில் ,குற்றத்தை ஒப்பு கொண்டு சிறை தண்டனை பெற்றுளளர் .
குப்பை வண்டியில் தூங்கும் துப்பரவு தொழிலாளி
குப்பை வண்டியில் தூங்கும் துப்பரவு தொழிலாளி
மாநகர சபை குப்பை அள்ளும் தொழிலாளியாக பணிபுரியும் நபர் ஒருவர்,
அந்த குப்பை வண்டியின் பின் புறத்தில் அயர்ந்து தூங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது
அதே சாலையில் காரில் பயணித்த நபர் ஒருவர்,
அதனை படம் பிடித்து வெளியிட்டு விட்டார் .
அதுவே இப்பொழுது உலகம் தழுவிய நிலையில் வைரலாகி வருகிறது .
இவருக்கு மக்கள் உதவிகள் வழங்கிட தயாராகி வருகின்றனர் .,
ஒரு காட்சி ஒன்றின் ஊடக ,
துப்பரவு பணியாளரை கோடீஸ்வரராக மாற்ற முனைந்துள்ள ,
செயல் வியப்பில் ஆழ்த்தி வருகிறது .
கோட்டா மஹிந்தவுக்கு தடை விதித்தது கனடா
கோட்டா மஹிந்தவுக்கு தடை விதித்தது கனடா
1983 முதல் 2009 வரை.இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கேணல் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு கனடா தடை விதித்துள்ளதாக கனேடிய வெளிவிகார அமைச்சு, இன்று (10) அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை கனடாவுக்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர்களின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் அதேவேளை,
அவர்களுக்கு கனடாவில் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
2023 வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஊடாக, அனைத்து அமைச்சுக்களின் செலவீனங்களில் இருந்தும் 5 வீதத்தை
குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு பல சவால்களைக் கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது. வெளிநாட்டு கடன் உதவியை பெற முடியாத நிலையில நாடு உள்ளது. பொருளாதாரப் பிரச்சினை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று
அஞ்சப்படுகின்றது. எனவே இதற்கான ஒரு முன்னெச்சரிக்கையாக இவ்வருடம் அனைத்து அமைச்சுக்களினதும் மூலதனச் செலவு தவிர்ந்த மீள் எழும் செலவில் இருந்து 5 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
அத்துடன், அமைச்சுக்களின் நாளாந்த செலவுகள் உட்பட அமைச்சுக்களின் செலவுகளை இயன்றவரை குறைத்துக் கொள்ளுமாறு அனைத்து
அமைச்சுக்களுக்கும் நிதி அமைச்சின் ஊடாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இம்மாதம் சமூர்த்தி கொடுப்பனவு வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், அந்தக் கொடுப்பனவை மிக விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமூர்த்திக் கொடுப்பனவுகள் என்பவற்றை வழங்குவதற்கு
அரசாங்கமும் நிதி அமைச்சும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக் காட்டினார்.
துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும்
துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும்
பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும் ஒன்பது நாட்களில், வட்டப் பாதையில் தனியாகப் பயணம் செய்துள்ளார்.
தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பழுகாமத்தில் ஆரம்பித்து 1299கிலோமீற்றர் பயணம் செய்து, மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்த இடத்திலே அவரது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
பாலச்சந்திரன் நிரோஜன் பயண விபரங்களாவன:
முதலாம் நாள் மட்டக்களப்பின் பழுகாமத்திலிருந்து 123கிலோமீற்றர் பயணம் செய்து, திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவரைக்கு சென்று, இரண்டாம் நாள் அங்கிருந்து 154கிலோமீற்றர் தூரம் பயணித்து முல்லைத்தீவிற்கு சென்றுள்ளார்.
9ஆம் நாள் 25ஆவது கிலோமீற்றர் தூரத்தைக் கடக்கும் போது பயகரமான மிருகங்களைச் சந்திக்க நேர்ந்ததாக பாலச்சந்திரன் நிரோஜன் தெரிவித்தார்.
உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்
உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த வருடம் (2022) ஒக்டோபர் மாதத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பினால், முன்பள்ளிகளுக்கு அனுசரணை
வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், நிகழ்ச்சித்திட்டமான ‘வறுமையினால் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போஷாக்கு மற்றும் வளர்ச்சி மட்டத்திற்குப் பாதிப்பேற்படாது பேணுதல் தொடர்பாக மட்டக்களப்பு,
அம்பாறை மாவட்டங்களின் சுகாதாரத் துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தத்தம் பிராந்தியங்களில் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் நிலைப்பாடு தொடர்பாக முன்வைத்தனர்.
உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 558 முன்பள்ளிகளில் 18584 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இவர்களில் 209 முன்பள்ளிகளின் 6749 சிறார்களுக்கு தலா
மாணவருக்கு 100 ரூபா வீதம் 53.9மில்லியன் ரூபா நிதி காலை உணவு விநியோகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள சிறுவர்களின் போஷாக்குஇ உளவள செயற்பாடுகள், போதைப்பொருட்களுக்கு எதிரான பாடசாலை மட்டச்செயற்பாடுகள் என்பன குறித்து மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் சமர்ப்பித்தார்.
பெற்றோர்கள் பொருளாதார சிக்கலில் சிரமப்படுவதால், பாடசாலை மாணவர்களின் போஷாக்கு மட்டத்தைப் பேணுவதற்காக வழங்குவதற்கு எதிர்பார்க்கும், உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கஞ்சி
மா, பிஸ்கட் போன்றவற்றை வழங்கும் திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவி அவசியப்படுவதை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ. எல். எம். ரிபாஸ் வலியுறுத்தினார்.
அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் எதிர்காலத்தில் ஒத்துழைப்புத் திட்டமொன்றை மேற்கொள்வதற்கு உடன்பட்டார்.
பொருளாதார தளம்பல் காரணமாக மாவட்டத்தில் அதிகரித்து வரும்; பாடசாலை இடைவிலகல், சிறுவர் துஷ்பிரயோகம், கிராமங்களிலிருந்து
நகர்ப்புறங்களுக்கான மாணவர்களின் புலம்பெயர்வு, தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்தல் போன்றவை தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மாணவர்களின் கல்விமட்டத்தை அதிகரிப்பதற்கு சுயமாக நிலைத்திருக்கும் தன்மை, சமூக உளவள ஆதரவு, ஆளுமை விருத்தி என்பவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் தேவை குறித்தும் வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட வைத்திய அதிகாரிகள்இ கல்வித்துறை உயர் அதிகாரிகள்இ
யுனிசெப் அமைப்பின் உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.









































