சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு
சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு
இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு பல பகுதிகளில் சாராய கடைகள் அடித்து பூட்ட மதுவாரி திணைக்களம் முடிவெடுத்துள்ளது .
மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியாக கழிக்கவும் ,குடி மகன்கள் தொல்லை இல்லாது அந்த நாளை கழிக்க இந்த நடவடிக்கை எடுக்க படுகிறது .
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
கடந்த 24ஆம் திகதி ரீயூனியன் தீவில் தரையிறங்கிய 46 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் 69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ளனர்.
இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் இன்று காலை தீவை சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பிலிருந்து சென்றவர்கள் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
43 ஆண்கள், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 46 பேர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
13 முதல் 53 வயதிற்குட்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் , மட்டக்களப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
விமானம் மூலம் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 46 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே 69 பேருடன் சென்ற மற்றொரு படகு குறித்த தீவை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018 மார்ச் மற்றும் 2019 ஏப்ரலுக்கு இடையில், இலங்கையிலிருந்து 275 பேர் ரீயூனியனுக்கு சென்றுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து நான்கு கப்பல்கள் மொத்தம் 122 பயணிகளுடன் தீவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகலிடம் கோரி விண்ணப்பித்த 397 புலம்பெயர்ந்தவர்களில் 121 பேர் பிரான்ஸுக்கு சொந்தமான தீவில் இருக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 1300 விமானங்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட 1300 விமானங்கள்
உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவத்தின் 1300 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
மிரளும் ஏவுகணைகள் டாங்கிகள் என்பனவும் அழிக்க பட்டுள்ளன .
முழுமையாக தெரிந்து கொள்ள காணொளி பாருங்க
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
உக்கிரேனில் ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,
பெரும் இழப்பை ஏற்படுத்தி .வருகின்றன
இவ்வாறான விமானங்களை ,
சுட்டு வீழ்த்துவது மிக மிக கடினமாக உள்ளது .
அதனால் இஸ்ரேல் நாட்டின் புதிய தொழில் நுட்பம் அடங்கிய ஏவுகணைகள் ,
மற்றும் தற்கொலை விமானங்களை கண்டறியும் ,
புதிய தொழில்நுட்ப கருவிகளை உக்கிரேனுக்கு இஸ்ரேல் .வழங்கியுள்ளது
கடந்த சில வரங்களாக இஸ்ரேல் ஈரான் தற்கொலை ,
விமானங்கள் தாக்குதல் திறன் செயல் இழந்து போயுள்ளதாக,
பரப்புரை செய்து வந்தது .
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
அவை யாவும் பொய் என்பதை,
ஈரான் காணொளி மூலம் ஆதாரமாக வெளியிட்டு,
இஸ்ரேல் முகமூடியை கிழித்தது .
அதனை தொடர்ந்து தற்பொழுது ,
இஸ்ரேல் தமக்கு ஈரான் விமானங்களினால் ஆபத்து உள்ளது என்பதை அறிந்து ,
அதனை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை மற்றும் கருவிகளை வழங்கியுள்ளது .
இப்பொழுது உக்கிரேன் போர்க் களத்தில் ,
இஸ்ரேல் ஈரான் நேரடியாக மோதுகின்றன .
தவிர புதிய தொழில் நுட்பத்துடன் ,
ஆயுதங்களை தயாரிக்கவும் அவை முயற்சிகளை
மேற்கொள்ளகின்றன .
உக்கிரேன் போர் களம் ,நாடுகளின் ஆயுத சோதனை களமாக ,
மாற்றம் பெற்றுள்ளதை மீளவும் இந்த சம்பவங்கள் உறுதி படுத்துகின்றன .
ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கிய ரஷ்யா வெடித்த போர்
ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கிய ரஷ்யா வெடித்த போர்
உக்கிரேன் மீதான போரில் ஆதிக்கம் செலுத்த ரசியாவுக்கு ,
கரும்புலி விமானங்களை ஈரான்
வழங்கியது .
இந்த தற்கொலை விமானங்கள் தாக்குதல் ,உக்கிரைன் .
இஸ்ரேல் ,அமெரிக்கா நேட்டோ நாடுகளுக்கும் பெரும் நெருக்கடியாக ,
மாற்றம் பெற்றுள்ளன .
இந்த உக்கிரேன் போர்க்களத்தை சாதகமாக பயன் படுத்திய ஈரான் ,.
தற்கொலை விமானங்களை தயாரித்து ரசியாவுக்கு வழங்கிட முடிவு செய்துள்ளது .
அதற்கு பதிலாக ரசியா ஈரானுக்கு,
அணுசக்தி தொழில்நுட்பத்தை கைமாறாக வழங்குகிறது .
இந்த செயல் பாடு உலக நாடுகளின் அமைதிக்கு மிக பெரும் அச்சறுத்தல் என்கிறது ,உக்கிரேன் ,இஸ்ரேல் .
உக்கிரைன் ரசியா போரினால் ஈரானுக்கு அதிஷடம் அடித்துள்ளது எனலாம் .
உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை ,
காணாமல் ஆக்குவோம் என ஈரான் விடுத்த மிரட்டல் ,
இந்த அணுசக்தி அணுகுண்டு தயாரிப்பின் மூலம் நிகழ்ந்து விடுமோ,
என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது .
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
உக்கிரேனில் ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,
பெரும் இழப்பை ஏற்படுத்தி .வருகின்றன
இவ்வாறான விமானங்களை ,
சுட்டு வீழ்த்துவது மிக மிக கடினமாக உள்ளது .
அதனால் இஸ்ரேல் நாட்டின் புதிய தொழில் நுட்பம் அடங்கிய ஏவுகணைகள் ,
மற்றும் தற்கொலை விமானங்களை கண்டறியும் ,
புதிய தொழில்நுட்ப கருவிகளை உக்கிரேனுக்கு இஸ்ரேல் .வழங்கியுள்ளது
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
கடந்த சில வரங்களாக இஸ்ரேல் ஈரான் தற்கொலை ,
விமானங்கள் தாக்குதல் திறன் செயல் இழந்து போயுள்ளதாக,
பரப்புரை செய்து வந்தது .
அவை யாவும் பொய் என்பதை,
ஈரான் காணொளி மூலம் ஆதாரமாக வெளியிட்டு,
இஸ்ரேல் முகமூடியை கிழித்தது .
அதனை தொடர்ந்து தற்பொழுது ,
இஸ்ரேல் தமக்கு ஈரான் விமானங்களினால் ஆபத்து உள்ளது என்பதை அறிந்து ,
அதனை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை மற்றும் கருவிகளை வழங்கியுள்ளது .
இப்பொழுது உக்கிரேன் போர்க் களத்தில் ,
இஸ்ரேல் ஈரான் நேரடியாக மோதுகின்றன .
தவிர புதிய தொழில் நுட்பத்துடன் ,
ஆயுதங்களை தயாரிக்கவும் அவை முயற்சிகளை
மேற்கொள்ளகின்றன .
உக்கிரேன் போர் களம் ,நாடுகளின் ஆயுத சோதனை களமாக ,
மாற்றம் பெற்றுள்ளதை மீளவும் இந்த சம்பவங்கள் உறுதி படுத்துகின்றன .
மனைவியை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவன்
மனைவியை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவன்
பொரளை, சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (13) இரவு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவன்
கொலையை செய்த நபர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான நீதவான் மரண விசாரணை இன்று (14)
நடைபெறவுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் 11 மாத சிசுவை கற்பழித்த பெரியப்பா
யாழில் 11 மாத சிசுவை கற்பழித்த பெரியப்பா
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பிறந்து 11 மாதமான பெண் சிசுவை அவரது பெரியப்ப கற்பழித்துள்ளார் .
கற்பழிப்பு குற்ற சாட்டில் பெரியப்ப கைது செய்யப்பட்டு நீதிமன்றின் முன் நிறுத்த பட்டுள்ளார் .
கிளைமோர் வெடிகுண்டு மீட்பு
கிளைமோர் வெடிகுண்டு மீட்பு
இலங்கை பகுதியில் கிளைமோர் வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன.
வெலிகந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வாழைமரத்துக்கு அடியில் ,புதைக்க பட்ட நிலையில் ,காணப்பட்ட குண்டு ,வெடிகுண்டு செயல் இழக்கும் படையினரால் மீட்க பட்டுள்ளது .
குறித்த குண்டு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள்
பிரிட்டன் தபாற்கந்தோரை முடக்கிய ரசியா கைக்கர்கள்
பிரிட்டன் தபாற்கந்தோரை முடக்கிய ரசியா கைக்கர்கள்
பிரிட்டன் தபால் கந்தோர் சில நாட்களாக .
சர்வதேச பொது சேவைகள் ,தபால் சேவைகள் என்பனவும் முடங்கியுள்ளன.
ராயல் மெயில் பிரதான கணணிக்குள் நுழைந்த கைக்கர்கள் ,அதன் சேவைகளில் தடங்களை ஏற்படுத்தி ,சேவைகளை முடக்கின .
இதனால் அதன் சேவையில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது .
இந்த தடங்களை புரிந்தது ரசியா நாட்டை சேர்ந்த ,
கைக்கர்கள் என ராயல் மெயில் தெரிவித்துள்ளது .
ரசியா நாட்டின் மீது போரை நடத்தி வருவதில் ,
பிரிட்டன் ஆயுதங்கள் முக்கியமானதாகும் .
அதற்க்கு பழிவாங்கும் தாக்குதலாக முக்கிய நிறுவனங்களை ,
இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது .
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டு மக்களின் நலன்சார்தவை அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழில் இன்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டு மக்களின் நலன்சார்தவை அல்ல வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது.
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளகின்றன என்றார்.
இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை
.
இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை
பலஸ்தீனம் மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்தில் ,
மூன்று அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .
தனது மகனை பாதுகாக்க போராடிய தந்தை மீது தாக்குதல் நடத்தி ,
சுட்டு கொன்றுள்ளனர் .
இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன மக்கள்,
தொடர்ந்து சொல்லென்னா
துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
இந்த இஸ்ரேல் வெறியர்கள் புரிந்த ,
இனப் படு கொலைக்கு இதுவரை சர்வதேச கூண்டில் நிறுத்தப்படவில்லை .
தொடராக நடத்தி வரும் மனித படுகொலைகளுக்கு .
இதுவரை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்காது உள்ளமையும் ,
சர்வதே நீதிமன்றில் நிறுத்து தண்டிக்காது உள்ள செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ரஷ்ய துருப்புக்களுக்கு மேம்படுத்தப்பட்ட டாங்கி
ரஷ்ய துருப்புக்களுக்கு மேம்படுத்தப்பட்ட டாங்கி
ரஷ்ய துருப்புக்களுக்கு மேம்படுத்தப்பட்ட T-90M ப்ரோரிவ் ,
பிரதான போர் டாங்கிகளின் புதிய தொகுப்பை வழங்கியுள்ளது .
இந்த டாங்கிகளில்
அடுத்த தலைமுறை ரியாக்டிவ் கவசம்,
புதிய பீரங்கி, மேம்பட்ட தகவல் தொடர்பு மற்றும்,
அதிக சக்தி வாய்ந்த எஞ்சின் ஆகியவை உள்ளன.
இதன் தாக்குதல் திறனும் ஐந்து மைல்களுக்கு உள்ளான நிலைகளை ,
துல்லியமாக தகர்த்து அழிக்கும் ,
வல்லமை பொருந்தியது எனப்படுகிறது .
அவ்வாறான முக்கிய ஆயுத கவச டாங்கிகள்,
முன் அரண் கள நிலைகளுக்கு அனுப்ப பட்டுள்ளது .
இந்த டாங்கிகளினால் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு ,
மிக பெரும் நெருக்கடியை தருவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த டாங்கிகள் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவற்றை ,
உற்பத்தி செய்த்திட ரசியா கவனம் செலுத்தி வருகிறது .
போரை முடிவுக்கு கொண்டுவர உக்கிரேன் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் திடீர் பேச்சு
போரை முடிவுக்கு கொண்டுவர உக்கிரேன் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் திடீர் பேச்சு
ரசியா உக்கிரேன் இராணுவத்தினர் 310நாட்கள் கடந்து நடத்தி வரும் போரை,
முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுக்களை .ஆரம்பித்துள்ளன
அதற்கு முன்னோடியாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சர் ,
மற்றும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சர்கள் .தொலைபேசிசியில் உரையாடினார்கள் .
விரைவில் போரை நிறுத்தி ,
சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேச்சு
இடம்பெற்றுள்ளது .
வேறு ஒரு நாட்டில் ரசியா உக்ரேன் நாடுகள் ,
அதிகாரிகள் பேச்சு மேசையில் கலந்து கொண்ட விடயங்களும் வெளியாகியுள்ளன .
ரசியா உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் ,
என்கின்ற தகவல் இதன் மூலம் உறுதியாகிறது .
ரெஜினோல்ட் குரே காலமானார்
ரெஜினோல்ட் குரே காலமானார்
வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்.
வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவு வண்டி மூலம் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு,
வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து
பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, இன்று காலை சிறுப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் சென்று மோதி விபத்துக்குள்ளாக்கி உள்ளது.
இதனால் வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சுக்களில் கூட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்ட வேளையில் தேர்தலுக்குத் தேவையான
பணத்தைக் கொண்டுள்ளமையால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூhராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கமும் பொஹொட்டுவவும் சதி செய்வதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை
நிராகரித்த அமைச்சர், தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கோ பொஹொட்டுவாவுக்கோ இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
உடுகம்பலையில் அமைந்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அலுவலகத்தில் (12) வேட்புமனு கையொப்பமிடப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 19 ஆகும். இதன்படி 413 பிரதேசங்களுக்கான வேட்புமனுவில் 417 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது 11 மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்
கம்பஹா, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்கள் கைச்சாத்திடப்பட்டன. எதிர்வரும் சனிக்கிழமைக்குள் பொஹொட்டுவ தனது வேட்பாளர் நியமனப் பட்டியலை கையொப்பமிட்டு இறுதி செய்யவுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த திரு.பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது,
“பொஹொட்டுவ என்பது கிராம மட்டத்தில் வலுவான அடித்தளத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கட்சியாகும். இத்தேர்தலில், மற்ற அனைத்து அரசியல் கட்சிகளை விடவும் எதிர்கொள்ளக்கூடிய வலுவான அணி எங்களிடம் உள்ளது
. அந்த வேட்பாளர்கள் அனைவரும் கிராமங்களில் பணிபுரிந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அனுபவமுள்ள, மக்களுக்கு சேவை யாற்றிய, உழைத்த ஒரு குழுவினர் இத்தேர்தலில் முன்னிறுத்தப் பட்டுள்ளனர்.
எங்கள் அணி வாய்ப்பேச்சு மட்டும் கொண்டவர்கள் அல்ல. இந்த தேர்தலில் போட்டியிடுவது ஆணவமும், பயனற்றவர்களும் அல்ல. வேலை செய்து காட்டியவர்கள் தான் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை. மிகவும் கடினமான காலங்களில் இதுபோன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம்.
அரசு என்ற முறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இரண்டு. அரசாங்கம் என்ற வகையில், இந்த பொருளாதார நெருக்கடியுடன் கூடிய அரசாங்க
ஊழியர்களின் சம்பளம், சுபீட்ச சலுகைகள் மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பிரச்சனைகளை நாங்கள் அறிவோம். இன்று பொருளாதாரம் ஓரளவுக்கு நிர்வகிக்கப்பட்டு
மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வரும் இவ்வேளையில் தேர்தலை நடத்துவதா வேண்டாமா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்கின்றனர்.
தேர்தலில் பணம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த காலங்களில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இல்லாமல் அரசாங்க ஊழியர்கள் தேர்தலுக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டது.
அதற்கு தேர்தல் ஆணையாளர் பொறுப்பேற்கத் தயாராக இருந்தால், நாங்கள் தேர்தலைச் சந்திக்கத் தயார். ஒதுக்கீட்டில் சிக்கல் இருப்பதால், எங்கள் அமைச்சுக்களில் பல நிதிக் குறைப்புக்கள் செலவு குறைப்புக்கள் ஏற்பட்டதன்
பின்னணியில் இந்தத் தேர்தலைப் பற்றி பேசுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் பணம் இருப்பதால், வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர்.
தேர்தலுக்குத் தேவையான பணத்தைக் கண்டுபிடிப்பது அவர்களின் பொறுப்பு.
கட்சி என்ற வகையில் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.
யாழில் மீனவர்கள் போராட்டம்
யாழில் மீனவர்கள் போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீளல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாகச் சென்று பல தரப்பினர்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளனர்.
குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டமானது தொடர்ந்து பேரணியாக சென்று யாழ் நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திலும்,
அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களை கையெழுத்துள்ளனர்.
ரஷ்யா கப்பலை துரத்தி செல்லும் பிரிட்டன் கப்பல்
ரஷ்யா கப்பலை துரத்தி செல்லும் பிரிட்டன் கப்பல்
சர்வதேச வட கடல் பகுதியில் பயணித்து கொண்டிருக்கும் ,ரஷ்ய போர்க் கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ் மற்றும் டேங்கர் கமா ஆகியவற்றை பிரிட்டன் போர்க் கப்பல் கண்காணித்த வண்ணம் உள்ளது .
ரஸ்யா கப்பல் அணிகளில் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் கப்பலாக .
இந்த விமான தங்கி கப்பல் அணிகளுடன் 11 கப்பல்கள் பாதுகாப்பு அணிகளாக பயணிக்கின்றன .
இந்த கப்பல் அணிகளையே பிரிட்டன் போர் கப்பல்கள் ,துரத்தி கண்காணித்த வண்ணம் உள்ளன .
இதனால் கடலுக்குள் பிரிட்டன் ரசியா மோதி கொள்ளும் நிலை ஏற்படுமோ, என்கின்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது .











































