குண்டுவெடிப்பில் சிதறிய ரயில்
குண்டுவெடிப்பில் சிதறிய ரயில்
பாகிஸ்தான் குவெட்டாவில் இருந்து ராவல்பிண்டிக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு,
சிபி அருகே வந்தபோது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தத்தில் ,
ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டதாக ,
பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தூள்ளனர்
பாதிக்கப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த ,
ஆறு பயணிகள் காயமடைந்தனர்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும்,
பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் ,
PR அதிகாரிகள் காயமடைந்தவர்களுக்கு உதவவும்,
ரயில் பாதையை மீட்டெடுக்கவும் அப்பகுதிக்கு விரைந்தனர்.
காயமடைந்தவர்கள் யாவரும்
சிபி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,.
அங்கு காயமடைந்த அனைவரின் நிலையும் ,
சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கிரேன் துருக்கி தலைவர்கள் பேச்சு
உக்கிரேன் துருக்கி தலைவர்கள் பேச்சு
உக்ரைனின் உள்துறை அமைச்சர் உட்பட 14 பேரைக் கொன்ற,
ஹெலிகாப்டர் விபத்துக்கு எர்டோகன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் .
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக செயல்படுவதன் மூலம் ,ஒரு வலுவான சமாதானத்தை ஏற்படுத்த ,
துருக்கி தயாராக உள்ளது என்பதையும் ,
அவர் இந்த தொலைபேசி உரையாடலின் பொழுது தெரிவித்தார் .
ரசியாவின் கோரிக்கையை ஏற்றால் மட்டுமே பேச்சுக்கு இணக்கம் என்கிறது ரசியா .
ஆனால் ரசியாவின் கருத்தை உக்கிரேன் ஏற்க மறுத்து வருகிறது .
போலந்தில் குவிக்க படும் ஜெர்மன் ஏவுகணை
போலந்தில் குவிக்க படும் ஜெர்மன் ஏவுகணை
போலந்து நாட்டில் ஜேர்மன் ஆயுதப் படைகள் ,
ஜேர்மனியில் இருந்து போலந்துக்கு பற்றியோட்,
வான் பாதுகாப்பு ஏவுகணைகளை எதிர் வரும் வாரம்,
அனுப்பிட தயாராகி வருகின்றன .
போலந்து வான்வெளியைப் பாதுகாக்கவும்,
நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தவும் ,
உதவுவதே பன்டேஸ்வேரின் குறிக்கோள் என்று ஜெர்மன் தெரிவிக்கிறது .
ஜெர்மன் இந்த நடவடிக்கை ,
போலந்தில் இருந்து உக்க்ரேனுக்கு உதவும் நோக்குடன் ஜெர்மனி செய்லபடுகிறதா ,
என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது .
பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்
பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்
சனிக்கிழமை வெளியிடப்பட்ட,
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சில் அறிக்கையின்படி,
மோசமான வானிலை குடியரசின் 14 பிராந்தியங்களில்
1.77 மில்லியன் மக்களை பாதிக்க பட்டுள்ளனர் .
இதன் படி, மொத்தம் 261,700 இடம்பெயர்ந்த மக்கள்
465 வெளியேற்றும் மையங்களில் உள்ளனர்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உட்பட 14 பிராந்தியங்களில்
1,300 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வெள்ளத்தால் 1,660 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்ப்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஆப்கானிஸ்தானில் அதிக குளிரினால் 78 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானில் அதிக குளிரினால் 78 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஒன்பது நாட்களில் உறைபனி குளிர் நிலையில் சிக்கி ,குறைந்தது 78 பேர் இறந்துள்ளனர் .
தலிபான் தீவிர இஸ்லாமியவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இப்போது வாழும் மில்லியன் ,கணக்கான மக்கள் பாதிப்பில் உறைந்துள்ளனர் .
எனினும் இந்த மக்களுக்கு, உரிய நடவடிக்கை எதனையும் தலிபான்கள் புரியவில்லை ,என்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது .
வெள்ளத்தில் தவிக்கும் சிறுவர்கள்
வெள்ளத்தில் தவிக்கும் சிறுவர்கள்
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி ,
நான்கு மில்லியன் சிறுவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த சிறுவர்கள் தொடர்ந்து வெள்ள நீரில் ,
சிக்கி தவித்து வருகின்றனர் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது .
இந்த வெள்ள நீரினால் பல்வேறு பட்ட நோய் தொற்றுக்கு உள்ளான நிலையில்
பாகிஸ்தானில் தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகியும், 4 மில்லியன் குழந்தைகள் இன்னும் அசுத்தமான மற்றும் தேங்கி நிற்கும் வெள்ள நீர் அருகே வாழ்கின்றனர்.
அவர்களின் உயிர் மற்றும் நல்வாழ்வை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர், UNICEF செவ்வாயன்று எச்சரித்தது.
மகிந்தராஜா பக்சா இந்தியா வெளியுறவு மந்திரி சந்திப்பு
மகிந்தராஜா பக்சா இந்தியா வெளியுறவு மந்திரி சந்திப்பு
மகிந்தராஜா பக்சா இந்தியா வெளியுறவு மந்திர திடீரென சந்தித்து பேசியுள்ளனர் .
இந்த சந்திப்பில் தமிழர் அரசியல் பிரச்னை தொடர்பாகவும் ,போர்க்குற்ற விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டு இருக்கலாம் என்ற விடயம் கசிந்துள்ளது .
கனடா மகிந்தா கோட்டாவுக்கு தடை விதித்த பின்னர் ,
நடந்த சந்திப்பு என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது எனபடுகிறது .
பேரூந்து விபத்து 7 பேர் பலி 50 பேர் காயம்
பேரூந்து விபத்து 7 பேர் பலி 50 பேர் காயம்
பேரூந்து விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியும் 50 பேர் காயமடைந்துள்ளனர் .
இவ்வாறு காயமடைந்தவர்கல் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
மாணவர்களை உல்லாச பயணத்துக்கு ஏற்றி சென்ற பேரூந்து பிரேக் இயங்காமையினால் ,வாகனம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கி ,பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முள்ளிவாய்க்காலில் துப்பாக்கிகள் மீட்பு
முள்ளிவாய்க்காலில் துப்பாக்கிகள் மீட்பு
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது கிணற்றில் இருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கிய தகவலையடுத்து
குறித்த பகுதிக்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிகளை மீட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
குறிப்பாக பழுதடைந்த துருப்பிடித்த நிலையில் இருந்த ஏ.கே துப்பாக்கி ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றுமே மீட்கப்பட்டுள்ளது.
இதனை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி
சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த தவறினால் நான் சிறைக்கு செல்ல நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதனால், தமக்கு நெருக்கமான மக்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பணத்தை திரட்டுவதற்கு நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி
இவ்வளவு பாரிய தொகையை நட்டஈடாக செலுத்தும் திறன் தன்னிடம் இல்லாததால், மக்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
என்னிடம் சொந்தமாக உந்துருளி கூட இல்லை. நிதியத்தை நிறுவுவதற்காக குழுவொன்றை அமைப்பேன். நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும்” என்று அவர் கூறினார்.
மூன்று ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமான வழியில்லை என்றார்.
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச அதில் ஒரு கட்டத்தில் தன்னால் பாடசாலைக்குளுக்கு வழங்கப்பட்டுவரும் பஸ்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் பட்டியலிட்டார் .
இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, உங்கள் தந்தையான பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு திறைசேரி ஊடாக காசோலைகள்
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்
வழங்கப்பட்டன.அதற்கு நன்றிக்கடனாகவே தற்போது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உங்களுக்கு நிதி உதவி அளிப்பதாகவும்
அதனை வைத்துத்தான் நீங்கள் இவ்வாறு பஸ்களை அன்பளிப்பு செய்வதாகவும் மக்கள் பேசிக்கொள்கின்றனர் என்றார்.
இதற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையிலேயே, இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெயர்ட் பவர் என்பவர் ஹிட்லரின்
படைகளுக்கும் முசோலினியின் படைகளுக்கும் ஆயுதங்களை வழங்கி உதவினார். இது இரு அணியில் உள்ளவர்களையும் பிளவு படுத்தும் தந்திரம்.
அதேபோன்றுதான் விடுதலைப்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் பிரபாகரனோடு மாத்தயாவும் யோகியும் முரண்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சில உதவிகளை வழங்கி அவர்களை மேலும் பிளவடைய வைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளுக்கு எனது தந்தை காசு கொடுத்தது என்றால் 2005
ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவும் விடுதலைப்புலிகளுக்கு காசு கொடுத்துத்தான் தேர்தலில் வெற்றி பெற்றார் என்றார்.
படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு
படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு
காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடமேற்கு பகுதியில் உள்ள ,
ஆற்றில் இரவு நேரத்தில் சரக்குகள் மற்றும் விலங்குகளை ஏற்றிச் சென்ற,
மோட்டார் பொருத்தப்பட்ட படகு மூழ்கியதில் ,
145 பயணிகள் காணாமல் போயுள்ளனர் ,.
அவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் சுமார் 55 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான காங்கோ குடியரசிற்குச் சென்று கொண்டிருந்த படகு,
பசன்குசு நகருக்கு அருகே உள்ள லுலோங்கா ஆற்றில் கவிழ்ந்தது.
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பெலிட் அணியாது காரில் பயணித்த பிரிட்டன் பிரதமர் மன்னிப்பு கோரல்
பெலிட் அணியாது காரில் பயணித்த பிரிட்டன் பிரதமர் மன்னிப்பு கோரல்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், காரில் சீட் பெலிட் ,
அணியாதது பயணித்தமைக்கு ,மக்களிடம் மன்னிப்பு கோரினார் .
சமூக ஊடகங்களில் ஒரு கிளிப்பை படமாக்குவதற்காக,
சீட் பெல்ட் இல்லாமல் காரில் சென்றதால்,
ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
சீட் பெல்ட் அணியத் தவறினால் ,
இங்கிலாந்தில் 500 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேற்படி விடயத்தில் பிரிட்டன் பிரதமர் சுனக் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்
ஈராக் தலைநகர் எல்லோயோரத்தில் பயணித்து கொண்டிருந்த ,
அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து ,
குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதில் அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணியில் பயணித்த ,
கவச வண்டிகள் சிதறின .
அதில் பயணித்த இராணுவத்தினருக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக,
சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா ,
இராணுவம் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை .
எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
ஈரான் நாட்டின் தெற்கு பகுதி கடல் வழியாக
212 000 லீட்டர் எண்ணெய் திருடி சென்ற கப்பல் ஒன்றை ,
ஈரானிய கடற்படையினர் துரத்தி பிடித்தனர் .
இந்த கப்பலில் பயணித்த மாலுமிகள் யாவரும் கைது செய்யப்பட்டு ,
அவர்கள் மீது ஒன்பது குற்ற சாட்டுக்கள் பதிய பெற்றுள்ளன .
ஈரான் கடல் வழியாக அமெரிக்கா நிறுவனங்கள் எண்ணெய் திருடி செல்வதாக ,ஈரான் தொடராக குற்ற சுமத்தி வருவதும் ,
இவ்வாறான கடத்தல் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை தொடர்கிறது .
கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது
கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது
கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வரையான வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளது.
குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கம் வீதியும் பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.
கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
கடந்த 24 மணித்தியாலங்ககளில் உக்ரேனிய ஆயுதப் படைகள் ,
நடத்திய தாக்குதல்களில் சிக்கி ,
760 ரஷ்ய வீரர்களைக் உயிரிழந்துள்ளனர் .
மேலும் 6 டாங்கிகள் மற்றும் 1 ஹெலிகாப்டர் என்பன
அழிக்க பட்டுள்ளன .
தொடர்ந்து பகமூட் பகுதியை முழுமையான ,
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ,
உடைப்பு ஊடுருவல் தாக்குதல்களை,
ரசியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
அந்த தாக்குதல்களை உக்கிரேன் இராணுவம் ,
வெற்றிகரமாக முறியடித்து ,
தமது தாயாக பரப்புக்களை காப்பாற்றி வருகிறது ,
என உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
மேலும் ரஷ்ய இராணுவத்தின்,
ஆயுதங்கள் மற்றும் உடைமைகள் என்பனவற்றையும் காண்பித்துள்ளது .
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்தியா வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்
இந்தியா வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்
இந்தியா வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார் .
இலக்கை வந்த இவருடன் ரணில் விக்கிரமகிங்கா பேச்சில் ஈடுபடுவர்,
என எதிரி பார்க்க படுகிறது .
இலங்கைக்கு நிதி கையளிப்பு மற்றும் ,
பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் ,
பேச்சில் ஈடுபடுவார் என எதிர் பார்க்க படுகிறது .
யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு
யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து,
பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,
அறுபது வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்க பட்டுள்ளது .
இவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது ,
தற்கொலை செய்யப் பட்டாரா என்பது ,
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சிறுமி மற்றும் இளைஞன் சடலமாக மீட்பு
சிறுமி மற்றும் இளைஞன் சடலமாக மீட்பு
கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றின் இருந்து சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாக விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நன்னடத்தையின் பின்னர் சிறுமி சில நாட்களுக்கு முன்னதாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





































