சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்
சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்
சாணக்கியன் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை (30) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிப்பு.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு முன்னெடுத்த போராட்டம் காரணமாக மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
இன்று காலை மாவட்ட செயலகத்தின், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே, முறுகல் நிலையேற்பட்டதுடன், மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு வாயில் கதவுகள் மூடப்பட்டன.
சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்
இதன்போது மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு மாவட்டச் செயலக கதவினை மறித்து பொதுமக்களும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.
வாகனேரி பகுதியில், சூரிய மின்கல மின்திட்டத்தினை அமைப்பதற்காக, விவசாய காணியை எடுக்க முனையும் செயற்பாட்டைக் கண்டித்தும், வாகரைப் பகுதியில், இல்மனைட் அகழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை நிறுத்தக்கோரியும், வாகரைப் பகுதியில், காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடாத்தாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினை நடாத்தி, காணி தொடர்பான தமக்கு சாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதேநேரம், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை உள் நுழைவதற்கு அனுமதிக்காத நிலையில், பொலிஸாருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையும் காணக்ககூடியதாக இருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதியை பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.
இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.
மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள்வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விளங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால்
வழங்கப்பட்ட போதிலும்,அதனை ஏற்றுக்கொள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்குஆபத்தான
நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவத்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.
அதைத் தொடர்ந்து, இரா. சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, இரா.சாணக்கியனும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமூகமாக
ரஷ்யா வடகொரிய புது டீல் கடுப்பான அமெரிக்கா
ரஷ்யா வடகொரிய புது டீல் கடுப்பான அமெரிக்கா
ரஷ்யா வடகொரிய புது டீல் ஒன்றை புரியும் திட்டமிடல் வகுக்க பட்டு
செயல் பாட்டு காட்சிக்குள் வந்துள்ளன ,இந்த் திடீர் புது டீலினால் கடுப்பாக்கியுள்ளது அமெரிக்கா.
உக்ரைன் போருக்கு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்கிட ,வடகொரியா இணக்கம் தெரிவித்துள்ளது .அதற்கு கைமாறாக அல்லது அதற்கு பண்டமாற்றாக ,உணவு பொருட்கள் வழங்கிட ரஸ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா வடகொரிய புது டீல் கடுப்பான அமெரிக்கா
உணவு பொருட்களை பெற்று கொண்டு, அதற்கு ஆயுதங்களை வாங்கிட ,ரஸ்யா புதிய டீல் செய்துள்ள நிலையாலே, அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் கொதிப்பில் உறைந்துள்ளன .
வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்து ,உலக வரைபடத்தில் இருந்து வடகொரியாவை அழித்துவிட ,அமெரிக்கா கூட்டு நாடுகள் வலையை விரித்த நிலையில் .அந்த வலையை அறுத்தெறிந்து வடகொரியா துணிகரமாக பயணிக்கும் செயலாக ,ரஷ்யா புது ஆடுகளத்தை திறந்து வைத்துள்ளது .
ரஷ்ய வடகொரியாவின் இந்த கூட்டு நகர்வு ,அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்காவில் வானில் மோதிய இரு உலங்கு வானூர்திகள் பலர் மரணம்
அமெரிக்காவில் வானில் மோதிய இரு உலங்கு வானூர்திகள் பலர் மரணம்
அமெரிக்கா கென்டக்கியின் ட்ரிக் கவுண்டியில் இரு இராணுவ உலங்கு வானூர்திகள் நேரெதிர் மோதி வீழ்ந்து நொறுங்கின .
இதன் பொழுது அந்த உலங்குவானூர்தியில் பயணித்த இராணுவத்தினர் பலர் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த உலங்கு வானூர்திகள் மக்கள் வீடுகளுக்குள் மேல் ,
வீழ்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.
இரவு பயிற்சிப் பணியின் போது இரண்டு அமெரிக்க இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள்,பயிற்சியில் ஈடுபட்ட வேளை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .
101வது வான்வழிப் பிரிவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் வீழ்ந்து நொறுங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த விபத்துக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
Mexico அகதி முகாம் தீயில் எரிந்து அழிவு 38 பேர் பலி
Mexico அகதி முகாம் தீயில் எரிந்து அழிவு 38 பேர் பலி
Mexico அகதி முகாம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயில் எரிந்து முற்றாக அழிவு.
தீ பரவல் ஏற்பட்ட வேகத்தில் ,அந்த தீயில் கருகி 38 பேர் பலியாகியுள்ளனர் .
இந்த தீ பரவலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக
தெரிவிக்க படுகிறது .
Mexico நாட்டில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளன .அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ரஷ்யா புதிய ஆயுதங்கள் எரியும் உக்ரைன் நகரங்கள்
ரஷ்யா புதிய ஆயுதங்கள் எரியும் உக்ரைன் நகரங்கள்
ரஷ்யா புதிய ஆயுதங்கள் பயன்படுத்தி அகோர தாக்குதல் ,
எரியும் உக்ரைன் பல நகரங்கள் .முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணை ,எறிகணை ,வான்வழி ,விமான தாக்குதல்களை ,நடத்திய வண்ணம் உள்ளது .
உக்ரைன் ரஷ்ய போர் இன்று கள நிலவரம், தலைகீழாக காட்சியளிக்கிறது .
பல வீடுகள் கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன .மக்கள் மின்சாரம் ,குடிநீருக்கு மிக பெரும்நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி பலமாக்கள் காயமடைந்தும் ,பலியாகியும் உள்ளனர் .தொடர்ந்து கடும் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ரஷ்யா புதிய ஆயுதங்கள் எரியும் உக்ரைன் நகரங்கள்
கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை
கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை
கொஸ்கம மற்றும் கம்பஹாவில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகெவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நபரொருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாகெவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீண்ட நாட்களாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.
இதன்போது கூரிய ஆயுதத்தால் பெண் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை
கொலைச் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனமலேவத்த பகுதியில் தகராறு நீண்டதில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் களுஹக்கல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு
மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு
மிதிகம மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காரில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் குழுவொன்றினால் உணவகம் ஒன்றின் முன்னால் வைத்து அதன் உரிமையாளர் இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த 32 வயதுடைய நபர் உணவகத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த போது வேனில் வந்த குழுவினர் டி-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அஹங்கம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்
இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்
இலங்கை பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்
கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்
நாம் சற்றேனும் நினைத்துப்பார்த்திராத பேரிழப்பாக நிகழ்ந்தேறியுள்ள தம்பி கஜீபரனின் அகாலமறைவு எமக்கு சொல்லொணாத் துன்பம் தருவதாக அமைந்துவிட்டது. மிகத் துடிப்புள்ள இளைஞனாக சமூகப்பணிகளில் தன்னை இணைத்துக்கொண்ட கஜீபரன், இளவயதிலேயே தீவிரமான தமிழ்த்தேசியப் பற்றாளனாகவும் தன்னைப் பதியமிட்டிருந்தான்.
அதன்வழியே, எமது கட்சியின் வாலிபர் முன்னணி உறுப்பினராக இணைந்துகொண்ட கஜீபரன் மிகுந்த நேர்மையும், நெஞ்சுரமும், விசுவாசமும், விடாமுயற்சியும் மிக்க இளைஞன் என்பதை, அவனோடு நெருங்கிப் பழகக் கிடைத்த சந்தர்ப்பங்களில் நான் அறிந்துகொண்டேன்.
மிகக் குறுகிய காலம் எனது அலுவலகத்தில் அவன் பணியாற்றிய நாட்களில், அவனது கடின உழைப்பையும், தன்னார்வத்தையும், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவனது தீரத்தையும் நான் நேரிடையாகக் கண்டிருக்கிறேன்.
கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்
தன் எதிர்காலம் குறித்த முழுமையான கனவுகளோடு பயணப்பட்ட ஒரு இளைய புதல்வனை இயற்கை தன்வசம் எடுத்திருப்பதை அன்பின்பாற்பட்டஎம் இதயங்கள் ஏற்க மறுக்கின்றன.
தான் பிறந்து, வளர்ந்த விசுவமடு மண்ணையும், தருமபுரம் மண்ணையும் முழுமூச்சாய் நேசித்த அவன், அந்த மக்களின் நலவாழ்வுக்காக தன்னாலான பல பணிகளை இக்குறுங்காலத்திலேயே ஆற்றிமுடித்திருக்கிறான்.
கட்சியின் எந்த நிகழ்வாயினும், மக்களின் எந்தத் துயராயினும் அதைத் தன் தோள்மேல் தானாய் ஏற்பதற்கு என்றுமே தயாராயிருந்த என் மனதிற்கு மிக நெருங்கிய தம்பி கஜீபரனின் ஆத்மா அமைதிபெறவும், இந்தப் பேரிழப்பால்
பெரிதும் கலங்கிநிற்கும் அவனது குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள் எல்லோருக்கும் அவனது இழப்பை ஏற்கும் மனவலிமை வாய்க்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி
இஸ்ரேலியர்களை தாக்க ஈரான் போட்ட சாதி முறியடிப்பு இஸ்ரேல்
இஸ்ரேலியர்களை தாக்க ஈரான் போட்ட சாதி முறியடிப்பு இஸ்ரேல்
இஸ்ரேலியர்களை கிரேக்கத்தில் உள்ள யூதர்களின் கடைகளை இலக்கு வைத்தும் ,இஸ்ரேலிய யூத மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான்
மேற்கொண்ட சதி முறியடிக்க பட்டுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த பாகிஸ்தானியர்களைப் பயன்படுத்தி ,
ஏதென்ஸில் யூத எதிர்ப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படும்,
சதித்திட்டத்துடன் எந்தத் தொடர்பும் தமக்கு இல்லை என,
கிரேக்கத்தில் உள்ள ஈரான் தூதரகம் மறுத்துள்ளது.
ஈரான் குடியரசின் தூதரகம் சியோனிச ஆதாரங்களால் ,
பரப்பப்படும் வதந்திகளையும் ,ஈரானுக்கு எதிரான அவர்களின் ஆதாரமற்ற,
குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுக்கிறது என ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியர்களை தாக்க ஈரான் போட்ட சாதி முறியடிப்பு இஸ்ரேல்
இஸ்ரேல் நாட்டின் நெதன்யாகளவிற்கு எதிராக ,
மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
அவரது ஆட்சி கவிழ்க்க படும் நிலை காணப்படுகிறது .
அதனால் அதனை திசையா திருப்ப தற்போது ஈரான் மீது இவ்விதமான ,
அவதூறை பரப்பி வருகிறார் என ஈரான் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக அமெரிக்கா ஜனாதிபதி பைடன் பேசிய பேசினால்
முறுகல் நிலை ஏற்பட்டுள்ள வேளையில் இந்த விடயம் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
நாடு விரைவில் மீளும்- கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை
நாடு விரைவில் மீளும்- கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை
நாடு ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றியடைவதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று (29) முங்காவிலுள்ள மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைபெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கி வைத்தார்.
இதற்குக் காரணமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இஸ்ரேல் ஈரான் மோதல் தாக்குதல் முறியடிப்பு
இஸ்ரேல் ஈரான் மோதல் தாக்குதல் முறியடிப்பு
இஸ்ரேல் மக்கள் மீது ஈரான் நடத்தவிருந்த மிக பெரும் மோதல் தாக்குதல்
ஒன்று முறியடிப்பு செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் மக்கள் மீதான தாக்குதலை நடத்த தயராகி கொண்டிருந்த ஈரான் தாக்குதல் படை
குழுவினர் மடக்கி பிடிக்க பட்டனர் .
யூத பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி, அவரது ஆட்சியை கவிழ்க்கவேட்டை திருவிழாவை ஆரம்பித்துள்ள நிலையில் ,மக்களை திசை திருப்ப ஈரான் மீது இவ்விதமான குற்ற சாட்டு சுமந்த படுவதாக ,பதிலடி தாக்குதல் கருத்தை அரேபிய வல்லரசு தெரிவித்துள்ளது .
click here full video
ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் மீது தொடுத்த ,
ஆக்கிரமிப்பு போரில் சிக்கி துவரை 220,000
இராணுவம் பலியாகியுள்ளனர் என பிரிட்டன் ,
பாதுகாப்பபு மந்திரி தெரிவித்துள்ளார் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் ரஷ்யா வாடகை இராணுவத்தை சேர்ந்த ,
நாற்பது ஆயிரம் முதல் அறுபது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்கிறது .
மேலும் உக்ரைன் முன்னரங்க போர்முனையில் இடம்பெறும் தாக்குதல்களில்,
நாள் தோறும் 1,500 ரஷ்யா படைகள் பலியாகி வருகின்றனர் என்கின்ற,
கூடுதல் தகவலையும் பிரிட்டன் வெளியிட்டுள்ளது .
ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தினரை எதிர்கொண்டு ,
போரில் வெற்றி பெற எமக்கு நான்காவது சந்ததி விமானங்கள் ,
அவசரமாக தேவை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு
கோரிக்கை விடுத்துள்ளது .
காலத்தை வீணடிக்காது உடனே இவ்வகையான விமானங்களை ,
மேற்குலக நாடுகள்தத்துவ வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது .
ரஷ்யா வழமைக்குமாறாக கடந்த தினம் வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை அகோரமாக மேற்கொண்டுள்ளது .
இந்த தாக்குதலில் ஏழு அப்பாவி மக்கள் பலியாகியும் ,
வாழ்விடங்கள் என்பன சேதமாகியுள்ளன .
தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பெல்ஜியத்தில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு
பெல்ஜியத்தில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு
பெல்ஜியத்தில் நடத்தப்பட விருந்த தீவிரவாத தாக்குதல் ஒன்று
முறியடிக்க பட்டுள்ளது .
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,
ஆண்வேர்பன் பகுதியில் பதுங்கி இருந்த ஏழு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் யாவரும் தீவிரவாத குழுவுடன் தொரப்பில் இருந்தவர்கள்
என்கின்ற குற்றம் சுமத்த பட்டுள்ள நிலையில் ,சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .
போலீசார் முந்தி கொண்டதால் இவர்கள் நடத்த படவிருந்த பெரும் தாக்குதல்
முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 315.84 முதல் ரூ. 315.70 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 332.87 முதல் ரூ. 333.49 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று குறைந்துள்ளதுடன், சுவிஸ் பிராங்குக்கு எதிராக சற்று உயர்ந்துள்ளது.
என்னால் உக்ரேன்- ரஷ்யா போரை நிறுத்த முடியும்- டொனால்ட் ட்ரம்ப்
என்னால் உக்ரேன்- ரஷ்யா போரை நிறுத்த முடியும்- டொனால்ட் ட்ரம்ப்
என்னால் 24 மணிநேரத்திற்குள் உக்ரேன் – ரஷ்யா யுத்தத்தை நிறுத்த முடியும் என ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் – ரஷ்யா போரை பேச்சுவார்த்தை மூலம் 24 மணிநேரத்திற்குள் முடிவுக்கக் கொண்டு வர முடியும் என ட்ரம்ப் தெரிவித்தாலும் அது எப்படி என்பதைத் தெரிவிக்கவில்லை.
2024 இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும் இந்த இரு நாடுகளுக்குமிடையேயான போர் முடிவுக்கு வரவில்லை என்றால், தேர்தலில் அதிபராக என்னைத் தேர்வு செய்தால், 24 மணிநேரத்திற்குள் இந்தப் போரை முடிவுக்கக் கொண்டு வருவது எனக்கு மிக இலகுவான காரியம் என ட்ரம்ப் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன். அது தொடர்பான விடயங்களை இரகசியமாக வைத்திருக்கிறேன். அதைப் பகிரங்கப் படுத்தினால் என்னால் அதைப் பயன்படுத்த முடியாமல் போகும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
3 பெண்களை பலாத்காரம் இருவர் கைது
3 பெண்களை பலாத்காரம் இருவர் கைது
மூன்று சக ஊழியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் குறித்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதானவர்களாவர்.
புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட பின் சந்தேக நபர்கள் இருவரும் தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதி செவணப்பிட்டி பகுதியில் கனரக வாகனமும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பட்டை பிரதான வீதி திருக்கோவிலைச் சேர்ந்த 46 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வடிவேல் பரமசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்று கனரக வாகனமும் இன்று (29) அதிகாலை 2 மணிக்கு செவணப்பிட்டி சிரிகம பகுதியில்
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பிரயாணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையவல் அனுமதிக்கப்பட்டுள்ளர்
இதனை தொடர்ந்து கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.
ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பணம் வழங்கி வைப்பு
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பணம் வழங்கி வைப்பு
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாக்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக ரூபா 10,000 ரூபா வீதம் நிதி வழங்கி வைக்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
இத்திட்டத்திற்கமைய இறக்காமம் பிரதே செயலகத்திற்குட்பட்ட 382 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவுகள் (28) இறக்காமம் சமுர்த்தி வங்கியில் வழங்கி வைக்கப்பட்டது.
சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் சமுர்த்தி
தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முகம்மட் இம்தாத் உள்ளிட்ட அதிதிகள் கலந்து பயனாளிகளுக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.
(அபு அலா)











































