வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு நகர் முனைவீதி 2ம் குறுக்கில் வீதியில் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவர் இன்று (24) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் இன்று காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
குறித்த நபர் நகர் பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
முழுமையாக முடங்கிய மன்னார்
முழுமையாக முடங்கிய மன்னார்
வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் இன்று (25) பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேருந்து
உரிமையாளர் சங்கம், பொதுமக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டம் முழுவதும் முற்றாக முடங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள
முழுமையாக முடங்கிய மன்னார்
திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும், மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை
தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றைய தினம் (25) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.
அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம்பெற்ற போதும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
வெப்பமான வானிலை சில நாட்கள் தொடரும்
வெப்பமான வானிலை சில நாட்கள் தொடரும்
நாட்டில் நிலவும் வெப்பமான வானிநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் நீரிழப்பு அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீரிழப்பு அபாயத்தில் உள்ள தரப்பினர் வெயிலில் நடமாடுவதை குறைப்பதுடன், அதிகளவில் நீரை அருந்தி நீரேற்றத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து, குறிப்பாக அத்தியாவசியமற்ற வெளிப்புற செயல்பாடுகளில் இருந்து விலக்கி வைக்குமாறும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெப்பமான வானிலை சில நாட்கள் தொடரும்
இதேவேளை, அனுராதபுரம், இரத்தினபுரி மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் சராசரி வெப்பநிலையை விட அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாவும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை நிலவும் என்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே, பொதுமக்கள் வெப்பம் தொடர்பான நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் கிரிமியா துறைமுகமான செவாஸ்டோபோல்
மீது தாக்குதல் நடத்த வந்த உக்ரைன் ட்ரோன் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
வான்வழி மற்றும் கடல் வழிகள் விமானங்கள் மூலம் ,
ரஸ்யாவின் நீர்மூழ்கிகள் ,மற்றும் ஏவுகணை கப்பல்கள் மீது
தாக்குதல் நடத்த உக்ரைன் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்க பட்டுள்ளதாக ரஷ்ய கடற்படை தெரிவித்துள்ளது.
கருங்கடல் பகுதியில் பத்துக்கு மேற்பட்டதா ரஷ்ய போர் கப்பல்கள் தரித்துள்ளன .
செவாஸ்டோபோல் துறைமுகத்தின் வெளிப்புற பகுதியில் ,
நங்கூரம் இட்ட கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்க பட்டது .
ஆனால் அந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ..
உக்ரைன் இந்த திடீர் தாக்குதலை அடுத்து ,
உக்ரைன் பல பகுதிகள் மீது ரசியா காடும் வான்வழி மற்றும்
ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
.
சீறி பாய்ந்து ஏவுகணைகள் சிதறிய டசின் விமானங்கள்
சீறி பாய்ந்து ஏவுகணைகள் சிதறிய டசின் விமானங்கள்
சீறி பாய்ந்த விமானங்களை ,சுட்டு வீழ்த்திய ஏவுகணைகள் ,
ரஷ்ய துறைமுகத்தில் தாக்குதல் ,
பழி வாங்கும் தாக்குதலை நடத்தும் ரஷ்ய.
வெடித்த கடும் யுத்தம் எரியும் உக்ரைன் நகரங்கள் -ஆயுதம் இன்றி திணறும் இராணுவம்
வெடித்த கடும் யுத்தம் எரியும் உக்ரைன் நகரங்கள் -ஆயுதம் இன்றி திணறும் இராணுவம்
வெடித்த கடும் யுத்தம் எரியும் உக்ரைன் நகரங்கள் ,
ஆயுதம் இன்றி திணறும் இராணுவம் ,
சுற்றி வளைத்து தாக்கும் எதிரி .
வானில் பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்
வானில் பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்
அமெரிக்கா போயிங் ரக விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்த பொழுது
திடீரென தீ பிடித்து கொண்டது .
விமான இயந்திரத்தில் பறவைகள் மோதி கொண்டதால்,
இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
தீயில் எரிந்தவாறே விமான நிலையத்தில் பத்திரமாக தரை
இறக்க பட்டது ,ஆனால்
எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .
அதில் பயணித்த பயணி ஒருவர் பிடித்த காணொளி,
டிக்டாக் பகுதியில் வெளியாகி வைரலாகிய வண்ணம் உள்ளது
அமெரிக்கா போயின்ங் மேக்ஸ் ரக விமானம் ,
பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கிய சம்பவங்கள்,
இடம்பெற்று இருந்தமை குறிப்பிட தக்கது .
சுற்றி வளைத்த ரஷ்யா வெடித்த கடும் போர்
சுற்றி வளைத்த ரஷ்யா வெடித்த கடும் போர்
சுற்றி வளைத்த ரஷ்யா இராணுவம் உக்ரைனில் வெடித்த கடும் போர்
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
கார் ரயில் மோதல் மூவர் மரணம்
கார் ரயில் மோதல் மூவர் மரணம்
வடக்கு ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிராசிங்கில்
ரயில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஹனோவர் நகருக்கு வெளியே உள்ள,
நியூஸ்டாட் ஆம் ரூபென்பெர்ஜ் அருகே,
பிராந்திய வேகமாக பயணித்த ரயிலுடன் கார் மீது மோதியதாக,
காவல்துறை தெரிவித்துள்ளது .
கார் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஐவர் கொலை கத்தி மீட்பு
ஐவர் கொலை கத்தி மீட்பு
நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேகநபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை 2 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று அனுமதியளித்தது.
அதன் அடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் தலைமை பொலிஸ் அதிகாரி மேனன் தலைமையிலான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப்பின் நெறிப்படுத்தலில் மீட்கப்பட்டுள்ளன.
நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12 ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐவர் கொலை கத்தி மீட்பு
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.
வடக்கு கிழக்கில் நாளை ஹர்த்தால்
வடக்கு, கிழக்கில் நாளை ஹர்த்தால்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்கக்கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை செவ்வாய்க்கிழமை (25) இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
அதற்கிணங்க, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள வர்த்தக சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
வடக்கு, கிழக்கில் நாளை ஹர்த்தால்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நாளை (25) சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அன்றைய தினத்தில் வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தமிழ் கட்சிகள் தீர்மானித்தன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரே்ஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியினர், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நடத்திய சந்திப்பின் பின்னர், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு
சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு
சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (23) காலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.
இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாமுக்கு சென்று அந்த கைக்குண்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பாக இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு
இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு
நாவுல –மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரலகொல்ல இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் எல்பிட்டிய பிரசேத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரென தெரிவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
5 பேரின் உயிரை காப்பாற்ற போராடிய நாய் குறித்து வௌியான தகவல்
5 பேரின் உயிரை காப்பாற்ற போராடிய நாய் குறித்து வௌியான தகவல்
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்தவர்கள் வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.
நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து முதியவர்கள் வெட்டுகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஒரு முதியவர் காயங்களுடன் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் நின்ற அவர்களின் வளர்ப்பு நாய் கழுத்தில் வெட்டு காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நாய் பயத்தினால் வீட்டின் ஒரு மூளையில் சுருண்டு படுத்துள்ளதுடன், அதன் கண்களில் மிரட்சியும் தெரிகிறது.
நாய் தனது எஜமானர்களை காப்பாற்ற போராடிய போது நாய் மீது கொலையாளிகள் தாக்குதல் நடத்தி வெட்டி காயமேற்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
5 பேரின் உயிரை காப்பாற்ற போராடிய நாய் குறித்து வௌியான தகவல்
அதேவேளை கொலையான ஒருவரின் அடையாள அட்டை வீட்டின் வெளியே காணிக்குள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் , திறப்பு ஒன்றும் வெளியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொலையானவர்கள் எவரும் தூக்கித்தில் கொல்லப்படவில்லை. ஏனெனில் அவர்களின் இருவரின் சடலங்கள் வீட்டின் வெளியே காணப்படுகிறது. அதனால் அவர்கள் கொலையாளிகளிடம் இருந்து தப்பியோட முற்பட்டு கொலையாகி இருக்கலாம்.
மற்றுமொரு பெண்மணியின் சடலம் கட்டிலின் கீழே அவரது கால்கள் தொங்கிய நிலையில் காணப்படுவதனால் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு வெட்டிய போது அவர் கட்டிலின் மேல் சரிந்து விழுந்தமைக்கு ஏது நிலையே காணப்படுகிறது.
அதேபோன்று ஜன்னல் ஓரமாக மீட்கப்பட்டவரின் சடலம் உள்ள ஐன்னல் குந்து மேல், சுவர் மீது இரத்தம் தெறித்து, வழிந்தோடிய அடையாளங்கள் காணப்படுவதனால் , அவர் நிற்கும் நிலையிலையே வெட்டப்பட்டுள்ளமைக்கான ஏது நிலை காணப்படுகிறது.
எனவே எவரும் நித்திரையில் இருக்கும் போது படுகொலை செய்யப்படவில்லை என நெடுந்தீவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை , வெளிநாடொன்றில் இருந்து அந்நாட்டினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்ட நபர் ஒருவர் , குறித்த வீட்டில் இவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில், அவரை நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு முதல் பொலிஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா போர் வெறியாட்டம் தகர்ந்த உக்ரைன்
ரஷ்யா போர் வெறியாட்டம் தகர்ந்த உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது போர் வெறியாட்டம் ,தகர்ந்த மக்கள் கிராமம் ,,
திணறும் உக்ரைன் இராணுவம் .
வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்
வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்
ரஸ்யாவின் ஐந்து வானூர்திகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
Mi-24 helicopter மற்றும் நான்கு தற்கொலை மற்றும் உளவு விமானங்கள்
விமானங்கள் என்பன வீழ்த்த பட்டுள்ளன .
உக்ரைன் முக்கிய இலக்குகளை தாக்கி அழிக்கும் நோக்குடன் எதிரியினால் ஏவப்பட்ட வான் கலங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்
தொடர்ந்து உக்ரைன் ,கேர்சன் ,டொண்ட்ஸ்க் எல்லை ஓரம் ,
கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பக் மூட் பகுதியை முற்றாக மீட்டு விடும் நோக்கில் ,
ரஷ்ய வாடகை இராணுவமான வாக்னர் குழு தொடர்ந்து
போரை நடத்திய வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது .
பல்லாயிரம் உயிர் பலிகள் மற்றும் ஆயுத இழப்புடன் ,
ஆறு மாதங்கள் கடந்து பக்மூட் பகுதியில் மோதல்கள் ,
இடம்பெற்ற வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .
சிறுமியை கொன்று இழுத்து சென்ற இந்திய பொலிஸ்
சிறுமியை கொன்று இழுத்து சென்ற இந்திய பொலிஸ்
இந்தியா மேற்குவங்கம் கலியகஞ்ச் பகுதியில்
மைனர் சிறுமியின் உடலை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ
காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள்து .
கலியகஞ்சில் மைனர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு ,
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ,
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக சாடியுள்ளது.
சிறுமியை கொன்று இழுத்து சென்ற இந்திய பொலிஸ்
சிறுமியை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோவை ,
குழந்தைகள் உரிமைக் குழுவும், பெண்கள் உரிமைக் குழுவும்
கவனத்தில் எடுத்துள்ளன.
மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள,
கலியாகஞ்ச் என்ற இடத்தில் மைனர் சிறுமி
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே
மோதல் ஏற்பட்டது.
நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில்,
சிறுமியின் உடலை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி ,
அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவ உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
இராணுவ உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
மாலியில் தீவிரவாதிகளை தேடி அழிக்கும் சிறப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டு .முகாம் திரும்பி கொண்டிருந்த இராணுவ
உலங்கு வானூர்தி வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இவ்வேளை அதில் பயணித்த யாவரும் பலியாகியுள்ளனர் .
மாலி தலைநகர் பமாகோவின் குடியிருப்பு பகுதியில் ,
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக ஆயுதப்படைகள்
தெரிவித்துள்ளன .
உங்கள வானூர்தி வீழ்ந்து நொறுங்கியதாக இராணுவம் ,
தெரிவிக்கின்ற பொழுதும் ,தீவிரவாத குழுவினால் ,
பதுங்கி இருந்து சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன .
மாலியில் உள்நாட்டு மோதல்கள் சமீப காலங்களாக ,
அதிகரித்து செல்கின்றது குறிப்பிட தக்கது .
மனைவியை கடத்திய கணவன் பொலிஸில் சரண்
மனைவியை கடத்திய கணவன் பொலிஸில் சரண்
சிலாபம் , முனுவங்கம பிரதேசத்தில் மனைவியைக் கடத்திச் சென்ற கணவர் இன்று (22) சிலாபம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி கடத்திச் சென்ற தனது 18 வயது திருமணமான இளம் மனைவியுடன் அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார்.
இதன்படி, குறித்த பெண்ணின் கணவர் எனக் கூறப்படும் தம்புள்ளையைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்து தமது மகள் கடத்தப்பட்டதாக குறித்த பெண்ணின் பெற்றோர் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிலாபம் தலைமையக பொலிஸ் குழுவொன்று தம்புள்ளை பகுதிக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மனைவியை கடத்திய கணவன் பொலிஸில் சரண்
பொலிஸ் குழுவொன்று தம்புள்ளை பகுதிக்கு சென்றிருந்த போதிலும் சந்தேக நபரான கணவரையும் கடத்தப்பட்ட யுவதியையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் சந்தேக நபரின் உறவினர் ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.
அதன்பிறகு, அந்த சந்தேக நபர் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
குறித்த யுவதி கடத்தப்பட்ட பின்னர் கொழும்பு மாளிகாவத்தை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் சிற்றப்பா திட்டமிட்டு இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி சந்தேக நபரின் சிற்றப்பாவும் குறித்த கடத்தலின் போது இருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிற்றப்பா என்ற சந்தேக நபர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் அண்மையில் சிறைச்சாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மனைவியை கடத்திய கணவன் பொலிஸில் சரண்
கடத்தல் சம்பவத்தையடுத்து அவர் அச்சத்தில் இருப்பதாகவும், இது கடத்தல் அல்ல என பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு சந்தேகநபர்கள் அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
கடத்தல் என்று கூறினால், சிறையிலிருந்து வந்து தன்னையும், தன் பெற்றோரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக, பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கடத்தலில் ஈடுபட சந்தேகநபரின் தந்தை மற்றும் சிற்றப்பா உட்பட ஐவர் இணைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பெண்ணை கடத்த பயன்படுத்திய வேன் வாடகை அடிப்படையில் பெறப்பட்டதாகவும், குறித்த வேன் வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனத்திற்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரினால் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால்
25 ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால்
எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
நேற்றைய தினம் (22) தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ் விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவ மயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இவ் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ் ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா, டெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.










































