பிரிட்டனில் போலி பாலியல் சாமியார் கைது
பிரிட்டனில் போலி பாலியல் சாமியார் கைது
பிரிட்டன் பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி Barnet பகுதியில்,
சாமியாராக வலம் வந்த போலி சாமியார் ,
காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .
மக்களுக்கு உதவி புரிவதாக கூறி பல லட்சம் பணம் ,
மற்றும் ,பெண்களுடன் பாலியல் இச்சையில்
செயல் பட்டு வந்துள்ளார்
இவர் மீது தொடராக முன் வைக்க பட்ட பல குற்ற சாட்டுக்களின் ,
அடிப்படையில் இவர் போலீசாரால் கைது செய்ய பட்டுள்ளார் .
இவரது பாலியல் காணொளிகள் பல சமூக வலைத்தளங்களில்,
வைரலாகிய நிலையில் ,இந்த கைது இடம்பெற்றுள்ளது .
நீதிமன்றில் பாரப்படுத்த பட்டதால்,
இவருக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறும் என்பதாக நம்ப படுகிறது .
பிரிட்டனில் போலி சாமியார் கைது
பாதிக்க பட்ட பெண்கள் உள்ளிட்ட மக்கள் சாட்சிகளாக மாறிய நிலையில் ,
வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .
சாமிகளை நம்பி மோசம் போகும், நம்ம தமிழர்கள் என்று விழித்து கொள்ள போகிறர்கள் ,
பிரிட்டனில் ஜோதிடம் ,கூறவும் ,மாந்திரிகம் செய்திடவும் ,
தடை உள்ளது ,மதம் சார்ந்து மக்களை ஏமாற்றும் இவ்வாறானவர்கள்,
கைது செய்ய பட்டு தண்டிக்க பட வேண்டும் என ஒரு சாரர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
கைதை அடுத்து மேலும் பல முக்கிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
நம்ம சாமியார் இப்டி பன்னிட்டாரு என்ற கடுப்பில் பக்த கோடிகள் உறைந்துள்ளனர் .
இவரால் நீங்க பாதிக்க பட்டவரா தெரிய படுங்கள் ,
ஈரான் புதிய விமானம் சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
ரஷ்ய விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு
ரஷ்ய விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு
நேட்டோ உறுப்பு வான்வெளிக்கு அருகில் பறந்து கொண்டிருந்த
ரஷ்ய விமானங்களை ,நேட்டோ விமானங்கள் இடைமறித்து துரத்தின.
நேட்டோ மற்றும் ஸ்வீடிஷ் வான்வெளிக்கு அருகில் பறந்து கொண்டிருந்த ,
ரஷ்ய விமானப்படைஇயே நேட்டோ விமானங்கள் துரத்தின .
நேட்டோவுக்குள் நுழைந்து உளவு பார்த்தலில் ,
ரஷ்யா விமானிகள் ஈடுபட்டதாக ,நேட்டோ குற்றம் சுமத்தியுள்ளது .
சர்வதேச விதிமுறைகளை மதிக்காது ,ரஷ்ய செயல் பட்டு வருவதாகவும் ,
அத்துமீறலில் ,ஈடுபட்டு வருவதாக நேட்டோ கவலை வெளியிட்டுள்ளது .
நேட்டோ ,ரஷ்ய ஆகியவை மாறி மாறி ,
இவ்வாறான ஊடுருவலை புரிந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க கனடா ஒப்புதல் .
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க கனடா ஒப்புதல் .
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸி அவர்கள் கனடா,
பிரதமரை சந்தித்து கலந்துரையாடினார் .
இந்த சந்திப்பில் உக்ரைன் நேட்டோவில் இணைய,
கனடா என்றும் துணை நிற்கும் ,அதற்கு வேண்டிய ,
யாவற்றையும் செய்யும் என்கிறார் .
மேலும் உக்ரைன் தற்போது தன்னை பாதுகாத்து கொள்ள ,
போருக்கு வேண்டிய ஆயுத உதவிகளை கனடா ,
தொடர்ந்து வழங்கும் என ,கனடா பிரதர் தெரிவித்துள்ளார் . .
மேலும் உக்ரைனுக்கு நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் ,
ஐந்து நாடுகள் அதிகமாக ஆயுதங்களை,
தாராளமாக வழங்கி வருகின்றன .
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க கனடா ஒப்புதல் .
வளமை போல பக்மூட் அண்மித்த முன்னரங்க ,
நிலைகளில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த தின மோதல்களில் , ரஷ்ய போர் விமானங்கள் ,கெமிக்காசி விமானங்கள் ,என்பன வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் படைகள் அறிவித்துள்ளன.இழப்புக்களை மத்தியில் தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ரஷ்ய படைகள் வளமைக்கு மாறாக மிக ஆக்கிரோஷமாக,
தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன ,.ஜெர்மன் ,அமெரிக்கா சிறுத்தை ரக 2 டாங்கிகள் கொத்து கொத்தாக ,எரியும் காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகியவண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
வவுனியாவில் காரில் பயணித்த இருவர் கைது: விசேட அதிரடிப் படை மற்றும் பொலிசார் நடவடிக்கை
வவுனியாவில் காரில் பயணித்த இருவர் கைது: விசேட அதிரடிப் படை மற்றும் பொலிசார் நடவடிக்கை
வவுனியா நகரில் நேற்று (10.06) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்ட போது அதில் விற்பனைச் செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து மீட்க்கப்பட்டது.
வவுனியாவில் காரில் பயணித்த இருவர் கைது: விசேட அதிரடிப் படை மற்றும் பொலிசார் நடவடிக்கை
இதனையடுத்து காரில் இருந்த 26 மற்றும் 23 வயதைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தெஹியந்தர, ஹக்மன பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியன் நினைவாக வவுனியாவில் நடந்த சம்பவம்
யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியன் நினைவாக வவுனியாவில் நடந்த சம்பவம்
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் இன்று (11.06) வவுனியா கற்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
சிவசேனை மற்றும் கற்குளம் மகாவிஷணு ஆலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வு மகாவிஸ்ணு ஆலய நீர் தடாகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியன் நினைவாக வவுனியாவில் நடந்த சம்பவம்
தமிழில் மந்திரமோதி மோட்ச அர்ச்சனை செய்யப்பட்ட இவ் அஞ்சலி நிகழ்வில் சிவசேனை அமைப்பின் வவுனியா அமைப்பாளர் தமிழ்திரு அ. மாதவன் உட்பட கிராமத்தவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நவீன் திஸாநாயக்க ஆளுநராக நியமிக்க நடவடிக்கை
நவீன் திஸாநாயக்க ஆளுநராக நியமிக்க நடவடிக்கை
இலங்கையின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
இவர் பதவி ஏற்க முன்னதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்ய உத்தரவுகள் பணிக்க பட்டுள்ளது .
திஸாநாயக்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான நியமனம் செவ்வாய்கிழமை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது ..
காணாமல் போனவர்கள் எங்கே
காணாமல் போனவர்கள் எங்கே
காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர்
கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த வார இறுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையில் வாழும் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனோரின் குடும்பத்தினர் அனுபத்துவரும் துன்பத்துக்குத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
வீடு புகுந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் அதிகாரி
வீடு புகுந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் அதிகாரி
களுத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த யுவதி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி வீட்டின் சொத்துக்களுக்கு சேதம்
விளைவித்த குற்றச்சாட்டில் மொரந்துடுவ பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீடு புகுந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் அதிகாரி
வஸ்கடுவ பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இரவு சந்தேக நபர்களான சார்ஜன்டும் அவரது மனைவியும் குறித்த யுவதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியிருந்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஈரானை தாக்குவோம் அமெரிக்கா நேரடி மிரட்டல்
ஈரானை தாக்குவோம் அமெரிக்கா நேரடி மிரட்டல்
ஈரான் அதனை செய்தால் கண்டிப்பாக தாக்குவோம் என ,
அமெரிக்கா ஈரானை அழைத்து மிரட்டியுள்ளது ,அமெரிக்காவின் இந்த செயலுக்கு பின்னர் ஈரான் எவ்வாறான பதிலடியை வழங்க போகிறது ,காணொளி பாருங்கள்
அணுகுண்டு எதிரொலி பிரான்ஸ் ஈரான் திடீர் பேச்சு
அணுகுண்டு எதிரொலி பிரான்ஸ் ஈரான் திடீர் பேச்சு
ஈரான் அணுகுண்டு தயாரிப்பதறகான நடவடிக்கையை தீவிர படுத்தி ,
வரும் நிலையில் ,அணுசக்தி தொழில் நுட்பத்தில் ஈரான் வளர்ந்து விட்டதால்,
அது மிக பெரும் ஆபத்தாக மாறி விடும் என்பதால் ,
அதற்கு முன்னதாக ஈரானை அடக்கிவிட வல்லரசுகள் துடித்து வருகின்றன .
.
ஈரான் கடந்த வாரங்களில் நடத்திய ஏவுகணை சோதனை ,
மேலும் பதட்டத்தை அதிகரித்த நிலையில் ,
பிரான்ஸ் ஜனாதிபதி ,ஈரான் அதிபருக்கு இடையில் ,
தொலைபேசி உரையாடல் இடம், பெற்றுள்ளது .
இதன் பொழுது பிற நாடுகள் விவகாரங்களில் தலையிட கூடாது ,
என பிரான்ஸுக்கு ஈரான் அதிபர் காட்டமாக தெரிவித்துள்ளாராம்
அணுகுண்டு எதிரொலி பிரான்ஸ் ஈரான் திடீர் பேச்சு
மேலும் தமது நாட்டின் மீது விதிக்க பட்ட ,பொருளாதார தடைகளை ,
நீக்குமாறு கோரிக்கை விடுத்தார் , ஈரான்ஸ் பிரான்சுக்கு இடையில்,
நேரிய உறவை பேணுவோம் என பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுதல் விடுக்கப்பட்டது . .
இவர்களது இந்த பேச்சு நிலையான உறவை பேணுமா ,
அல்லாது ,ஈரான் அணுகுண்டு தயாரிப்பது முற்றாக தடுத்து ,
பொறிக்குள் சிக்க வைக்கும் முகமாக ,இஸ்ரேலினால் ,
பிரான்ஸ் ஜனாதிபதி சிக்க வைக்க பட்டாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது .
ஆனால் இதில் அணு உலை தொடர்பாக பேச பட்டு இருக்கும் ,
அது தொடர்பாக எதுவும் வெளியிட படவில்லை ,
ஈரான் பிரான்ஸ் ஊடாக ,அமெரிக்காவினால் மிரட்ட பட்டதா
என்ற சந்தேகம் நிலவுகிறது .
மேலதிகமாக அது தொடர்பாக ஏதும் ஈரானும் இதுவரை வெளியிடவில்லை ,
முக்கிய சமாச்சாரம் பற்றி கண்டிப்பாக பேசி இருப்பார்கள் ,
பிரான்ஸ் அவசர பேச்சு என்னமோ நடக்க போகிறது ,
என்பதற்கான ,முன் எச்சரிக்கையாக பார்க்கலாம் .
இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதலை தடுக்கும் முகமான ,
இறுதி பேச்க்கான நகர்வாக பிரான்ஸ்
ஈடுபட்டு இருக்கலாம் ,விடயம் ரெம்ப பெரிதாக உள்ளது என்பதை மட்டும் ,
கால கடிகார அசைவுகள் கட்டியம் இடுகின்றன .
வரும் சில வாரங்களில் இதன் எதிரொலிகள் ,
ஈரானால் வெளிப்படுத்த படலாம் என எதிர் பார்க்கலாம் .
அமெரிக்காவில் வேற்று கிரகவாசி அலறி ஓடிய மக்கள்
அமெரிக்காவில் வேற்று கிரகவாசி அலறி ஓடிய மக்கள்
அமெரிக்கா லாஸ் வேகாஸ் பகுதியில் வீட்டின் பின்புறத்தில்
வேற்று கிரகவாசி ஒருவரை கண்ணுற்ற மக்கள் அலறி அடித்து ஓடினர் .
குறித்த உருவம் பச்சை நிறம் உடையது எனவும் .
எட்டு முதல் 10 அடி உயரமுள்ள உயரமான, ஒல்லியான, பச்சை நிறத்துடன் கூடிய,
வேற்றுக்கிரக உயிரினம் என அதனை கண்ணுற்ற வாலிபன் ,
பதை பதைக்க கூறினார் .
லாஸ் வேகாஸ் குடும்பத்தின் கொல்லைப்புறத்தில் ,
அந்த உருவம் ஒளிந்துகொண்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வேற்று கிரகவாசி அலறி ஓடிய மக்கள்
மே 1 ஆம் தேதி மதியம் 12:25 மணிக்கு 911க்கு போன் செய்து, பெரிய உயிரினங்கள் தனது கொல்லைப்புறத்தில் இருப்பதாக தெரிவித்தனர் .
போலீசார் விரைந்து வந்த பொழுதும் ,அங்கு எவரையும் காணவில்லை ,
வாலிபர்கள் மற்றும் அயலவர்கள் கூறியதை மட்டுமே அவர்கள் செவிமடுத்தனர் .
வேற்று கிரகவாசிகள் வெள்ளை நிறம் உடையவர்களாகவே கேள்வி பட்டு இருக்கிறோம் ,ஆனால்
இந்த உருவம் பச்சை நிறம் என அந்த வாலிபர் பதை பதைப்புடன் தெரிவித்தார் .
மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
லண்டன் மருத்துவமனையில் 40 பேர் மரணம் – போலீசார் விசாரணை
லண்டன் மருத்துவமனையில் 40 பேர் மரணம் – போலீசார் விசாரணை
பிரிட்டன் லண்டன் மாநகர பகுதியில் ,உள்ள ,
ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனையில்,
மருத்துவ அலட்சியம் காரணமாக 40 பேர் மரணமாகியுள்ளனர் .
குறித்த மரணங்கள் தொடர்பான குறித்த குற்றச்சாட்டுகளை ,அடுத்து
துப்பறிவாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் பொது அறுவை சிகிச்சையில்,
தோல்வி காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நோயாளியின் பாதுகாப்பு குறித்து , அறுவை சிகிச்சை நிபுணர்களால் ,
மருத்துவ அலட்சியம் இருப்பதாகக் கூறப்பட்டது என ,
பிரிட்டன் உள்ளூர் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
கெலின்கந்தயில் இருந்து மத்துகம நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மாகெலி எல்ல பிரதேசத்தில் வீதியில் வழுக்கிச் சென்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பஸ்ஸின் சாரதி உட்பட 9 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
அனுராதபுரம் நகருக்கு அருகில் உள்ள ஹால்பானு கால்வாயில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் கொஹொம்பகஸ் சந்தி பகுதியினூடாக பாயும் ஹால்பானு கால்வாயில் மீட்கப்பட்ட குறித்த பெண் உயிரிழந்து சுமார் 5 நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பெண்ணின் சடலம் உருக்குலைந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஹால்பானு கால்வாய் பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் தேடிய போது சடலத்தை கண்டுள்ளார்.
பின்னர் அப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்த விவசாயி இது குறித்து அநுராதபுரம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவருக்கு எச்.ஐ.வி
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவருக்கு எச்.ஐ.வி
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட இருவரும் ஆண்களாவர்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவருக்கு எச்.ஐ.வி
வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்த டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் சிகிச்சைக்கு பிந்திய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர்.
ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
காலி, கராபிட்டிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நடமாடும் பொலிஸ் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொலிஸார் மீது வௌிநாட்டில் தயாரித்த கைக்குண்டு ஒன்றை வீசி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, 105 T-56 ரக தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள கோவில்
33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள கோவில்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் கோவில் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் கோவிலும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
ரஷ்ய வெறி தாக்குதல் உக்ரைன் ஆயுத கூடங்கள் அழிப்பு ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஷ்ய வெறி தாக்குதல் உக்ரைன் ஆயுத கூடங்கள் அழிப்பு ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
கடந்த தினம் இரவு உக்ரைன் பொல்டாவா மாகாணத்தில் உள்ள ,
உக்ரைன் விமான நிலையம் , ஒடேசா மற்றும் கார்கிவ் பகுதிகள் ,ரசியாவால்
அகோரமாக தாக்கப்பட்டன.
வடக்கு மற்றும் தெற்கு முனைகளில் இருந்து கடும் ,
ஏவுகணைக தாக்குதலை மழை போல பொழிந்து தள்ளியது .
இந்த ஏவுகணை தாக்குதலினால்,உக்ரைன் உள்கட்டமைப்பு சிதறியுள்ளது ,
மேலும் ,முக்கிய இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டது .
ரஷ்ய வெறி தாக்குதல் உக்ரைன் ஆயுத கூடங்கள் அழிப்பு ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
கிழக்கு கடற்கரையிலிருந்து ,35 ஈரானிய கெமிகச்சிகள் ,
கரும்புலி விமானங்கள் பறந்து வந்தன .
உக்ரேன் வான் பாதுகாப்பு படையினர் ,அந்த விமானங்களை இடை மறித்து தாக்கின ,அதில் 20 ஈரான் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன,ஏனைய 15 இலக்குகளை வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளன .
இராணுவ நிலைகளை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலினால் ,உக்ரைனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய தெரிவிக்கிறது .
ஈரானில் இருந்து ரஸ்யாவுக்கு குறித்த விமானிகள் வந்தடைந்த சில நாட்களில் ,ரஷ்ய தனது தாக்குதல்களை வேக படுத்தியுள்ளது .
உக்ரைன் டிரோன் தாயுரிப்பு மையங்கள் ,அமெரிக்கா கைமாஸ் பீரங்கிகள்,
மற்றும் பிரிட்டன் புயல் நிழல் ஏவுகணை செலுத்திகள் ,
அழிக்க பட்டுள்ளது என ரஷ்ய தெரிவித்துள்ளது .
தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் பல முனைகள் ஊடாக,
கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
துருக்கியில் வெடித்து சிதறிய ரொக்கட் ஆயுத தொழில் சாலை
துருக்கியில் வெடித்து சிதறிய ரொக்கட் ஆயுத தொழில் சாலை
துருக்கியில் ராக்கெட் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலையில்,
ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகியும் ,
டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .
தலைநகர் அங்காராவின் புறநகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான,
இயந்திரவியல் மற்றும் இரசாயனத் தொழில் கழகத்தின் வளாகத்தில்,
காலை 8.45 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த வெடிவிற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
இது குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
துருக்கியின் அதிபராக எடகோன் ,மூன்றாவது முறையாக,
பதவி ஏற்றதன் பின்னர் ,இடம்பெற்ற முதலாவது
குண்டு வெடிப்பாக இது பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .







































