இரத்தக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்பு
இரத்தக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்பு
வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவுரலுமுல்ல, நந்துங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றினுள் இரத்தக் காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிவேரிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
யாழ். கடற்றொழிலாளர்கள் மோடிக்கு மகஜர்
யாழ். கடற்றொழிலாளர்கள் மோடிக்கு மகஜர்
வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து நேற்று (13) காலை கலந்துரையாடினர்.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி அ. அன்னராசா தெரிவித்தார்.
யாழ். கடற்றொழிலாளர்கள் மோடிக்கு மகஜர்
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் மீனவர்களுடைய மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றது. இதனால் கடற்றொழிலாளர்களும் மீன் சாப்பிடும் மக்களும் பாதிக்கப்படுவர்.
ரோலர் வருகிறது ஏற்றுமதி இடம்பெறுகிறது என்பதற்காக அரசாங்கம் சட்டவிரோதமான தொழிலை கனகச்சிதமாக அனுமதிக்கிறது.
கடற்றொழில் இருந்து வடக்கு கடற்றொழிலாளர்களை அந்நியப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. சீன கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சட்டவிரோதமான தொழில் மற்றும் சீன கடலட்டைப் பண்ணை விவகாரங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களும் மூன்று கடற்றொழிலாளர் சமாசங்களும் இணைந்து குறித்த மகஜரை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு வழங்கினர்.
ஈரான் அமெரிக்கா பேச்சு குவிக்க படும் ஆயுதங்கள்
வீழ்ந்த அமெரிக்கா விமானம் 22 பேர் காயம்
வீழ்ந்த அமெரிக்கா விமானம் 22 பேர் காயம்
சிரியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா,
உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியது ,
இதன் பொழுது 22 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக ,
அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது .
உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டகாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
அமெரிக்கா படைகள் அது தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை .
சிரியவாயில் 900 அமெரிக்கா படைகள் நிலைகொண்டுள்ளனர் ,இவர்கள் மீது
ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதல் நடத்திய வண்ணம் ,
உளளனர் .
இங்கிருந்து எண்ணெய் திருட்டில் அமெரிக்கா, இராணுவம் ஈடுபட்டு வருவதாக
பல காட்சிகள் வெளியாகி இருந்தமை குறிப்பிட தக்கது .
பிரிட்டனை அதிரவைத்த படுகொலை
பிரிட்டனை அதிரவைத்த படுகொலை
பிரிட்டன் மத்திய நகரமான நாட்டிங்ஹாமில் மூன்று பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டனர் .
மேலும் மூன்று பேர் மீது வான் ஒன்றால் அடித்து படுகொலை செய்ய முற்பட்ட வேளை ,அந்த நபர் மடக்கி பிடிக்க பட்டுளளார் .
தப்பி ஓட முயன்றதைத் தொடர்ந்து கொலையாளி என்ற சந்தேகத்தின் பேரில் ,ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரித்தானியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நகரின் மையத்தில் அதிகாலை 4 மணிக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,இது திட்டஇடப்பட்ட
படுகொலை எனபடுகிறது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஈரான் கண்டுபிடித்த காசு செப்பு மலை
ஈரான் கண்டுபிடித்த காசு செப்பு மலை
ஈரான் ண்டனாது தற்போது புதிய செப்பட்டு மலை ஒன்றை கண்டு பிஇடித்துள்ளது .
இந்த மலையி சுமார் 3 பில்லியன் மெட்ரிக் டன் செப்பு தாதுவைக் கொண்டுள்ளது
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கனிம வைப்பு 93,000 மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, அந்த அறிக்கையின்படி, அப்பகுதியில் சுமார் 106 இடங்களில் ஆய்வு நடவடிக்கைகள் நடத்தப்பட்டுவருகின்றன .
அதே பிராந்தியத்தில் 80,000 மீட்டர் பரப்பளவில் ,
60 இடங்களில் இரண்டாவது கட்ட ஆய்வு நடத்தப்படும் என்றும்,
இந்த செயல்பாட்டின் மூலம் ,டெபாசிட்டின் போர்பிரி காப்பரின் அளவை,
4 பில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
இதனால் ஈரான் காட்டில் இப்பொழுது பணமழை கொட்டுகிறது
தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு
தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு
வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி, சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று (13) நடைபெற்றது. இதன்போதே குறித்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “1994ஆம் ஆண்டு செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் மக்களுக்காக 400 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வழங்குவதாக கூறி குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால், தற்போது வரை அந்த மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை.
தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு
“ஆனால், ஒதுக்கப்பட்ட காணிகளில் 75 சதவீதமான காணிகள், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை சேர்ந்த பெரும்பாண்மையின சிங்கள மக்கள் அபகரித்திருக்கின்றார்கள்.
“இதேவேளை, எமது மதுராகநகரை சேர்ந்த பொதுமக்கள் தெற்கு சிங்கள பிரிவிற்குள் சென்று குடியேறுவதற்காக சிறு துண்டு காணியை கேட்டபோது, அதற்கு அந்தப் பகுதியில் உள்ள பௌத்த மதகுரு சம்மதித்தால் தான் இவர்கள் தமது பிரிவிற்குள் வரமுடியும் என்று மாவட்டச் செயலக மட்டத்தில் அன்று எனக்கு பதில் வழங்கப்பட்டது.
“ஆனால், தற்போது 250 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட காணிகளை தெற்கில் இருக்கும் மக்கள் அபகரித்திருக்கின்றார்கள். எனவே, வீரபுரம் மக்களுக்கு அந்த காணிகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
பேருந்து கட்டணங்களை குறைக்க திட்டம்
பேருந்து கட்டணங்களை குறைக்க திட்டம்
ஜூலை 1 முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20% குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் திகதி பஸ் கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 12 பிரிவுகள் தொடர்பான கணக்கீடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களும் குறைக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
செலவிட்ட பணம் திரும்பிக் கிடைக்காது
செலவிட்ட பணம் திரும்பிக் கிடைக்காது
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை
செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல்
இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை
மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை
உலகின் மிகப்பெரிய மற்றும் சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான்
அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான்
இரு நாடுகளுக்கு இடையில்தொடரும் கடும் மோதல் பெரும்போர் வெடிக்கும் அபாயம் தாக்குதல்
நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நிலச்சரிவு காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தவிர கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் அலபத, நிவித்திகல, கல்வான, அஹெலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு அம்பர் நிறத்துடன் கூடிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகம், கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுல்ல ஆகிய இடங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாகவும் இதற்கு நெளுக்குளம் பொலசம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று கலந்துரையாடப்பட்டதுடன் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன்,
குறித்த பகுதியில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே அவரை இடமாற்றி ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
அதற்கு பதில் அளித்த மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மாடுகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றையதினம் (12.06) கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றில் ஆயர்படுத்தியுள்ளோம்.
அத்துடன், இச்சம்பங்கள் தொடர்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால், அது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்தார்.
ரஷ்ய பின்வாங்கல் உக்ரைன் அறிவிப்பு
ரஷ்ய பின்வாங்கல் உக்ரைன் அறிவிப்பு
உக்ரைன் கிழக்கு பக்மூட் முன்னரங்க பகுதியியல் நிலை கொண்டிருந்த ,
எதிரிகள் மீது மேற்கொள்ள பட்ட கடும் தாக்குதலில் ,
அவர்கள் முன்னரங்களில் இருந்து 250 முதல் 700 மீட்டர் பின்வாங்கி ,
சென்றுள்ளனர் என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
எமது நில மீட்பில் இவை பெரும் முன்னேற்றம் என்கிறது,
உக்ரைன் படைகள் .
இது போன்றே கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் ,
அறிவித்து ,முன்னேறியுள்ளதாக பரப்புரை புரிந்த உக்ரைன்,
படைகளை உள்ளே வறட்டு ,அபாயகர பொறி வெடிகள் மிதிவெடிகள்,
புதைக்க பட்ட பகுதிக்குள் வைத்து ரஷ்ய
படைகள் துரத்தி தாக்கி அவர்கள் முன்னரங்க பகுதிகளை மீட்டனர் .
ரஷ்ய பின்வாங்கல் உக்ரைன் அறிவிப்பு
அதே போன்றே அளவில் இப்பொழுது முன்றியுள்ள ,
உக்ரைன் படைகள் மீது ரஷ்யா உள்ளே விட்டு தாக்கும் ,
தாக்குதலை வரும்க் நாட்களில் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் குள உடைப்பால் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் ,
இதுவரை பது பத்து பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
தொடருந்து இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது,ரஷ்ய படைகள் தொலை தொடர்பு மையம் மீது குண்டு வீசி ,
அழித்துள்ள காட்சிகளை உக்ரைன் வெளியிட்டுள்ளது
ஈரான் ஒயிலை வாங்கும் ஜெரம்னா நேட்டோவுக்குள் குழப்பம்
ஈரான் ஒயிலை வாங்கும் ஜெரம்னா நேட்டோவுக்குள் குழப்பம்
ஈரான் நாட்டிடம் இருந்து எரிபொருள் மற்றும் ஒயிலை,
கொள்வனவு செய்திட ஜெர்மன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது .
நேட்டோ நாடுகளின் முக்கிய பங்காளியாக விளங்கும் ,
ஜெராமன் ,அமெரிக்கா கூட்டு நாடுக்ளின் தடைகளின் பின்னால் ,
ஈரானிடம் இருந்து இவற்றை கொள்வனவு செய்ய உள்ள செயல்,
நேட்டோ நாடுகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் ஒயிலை வாங்கும் ஜெரம்னா நேட்டோவுக்குள் குழப்பம்
அமெரிக்கா,இஸ்ரேலின் கண்மூடித்தனமான பொருளாதார தடை ,
அறிவிப்புகளினால்,தமது நாட்டின் பொருளாதரம் ,மக்கள்
கொந்தளிப்பை தடுக்க வேண்டும் என்றால் ,மலிந்த விலையில் ,
எரிபொருளை பெற்று கொள்ள வேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது .
ஈராக்,சிரியாவில் இருந்து அமெரிக்கா எரிபொருளை கொள்ளையடித்து,
செல்கிறது என ,இரு நாடுகளும் கூறி வரும் நிலையில் ,
ஜெர்மன் இந்த டீலில் களம் குதித்துள்ளது குறிப்பிட தக்கது .
முன்னாள் இராணுவ வீரர் கைது
முன்னாள் இராணுவ வீரர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் தெய்யந்தர பிரதேசத்தில் வைத்து இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் சந்தேகத்தின் பேரில் 44 வயதான முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
மாத்தறை – தெமட்டபிட்டிய, திக்வெல்ல பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த மூவரின் சடலங்களும் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
பிரபாகரனை புகழ்ந்த தமிழ் நடிகை
பிரபாகரனை புகழ்ந்த தமிழ் நடிகை
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்திய தமிழ்
நடிகையை புகழ்ந்து பேசியுள்ளார் .
கனடாவில் இடம்பெற்ற Easy Entertaining Night -2023 நிகழ்வில் ,
கலந்து சிறப்பித்து உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டார் .
பிரபாகரன் விட்ட இடத்தில இருந்து விடுதலை பயணத்தை ,
தமிழர்கள் தொட்டு நகர்த்த வேண்டும் என்கின்ற விடயத்தை அங்கே முன்வைத்தார் .
பிரபாகரனை புகழ்ந்த தமிழ் நடிகை
நாம் தமிழர் கட்சியில் இணைந்த பின்னர் ,ஈழ தமிழர்கள் மத்தியில் ,
நம்பிக்க மிகுந்த ஒருவராக கஸ்தூரி விளங்கி வருகிறார் .
தமிழ் நடிகைகள் அரசியலுக்காக மாற்றி பேசும் இவ்வேளையில் ,
நாம் தமிழர் கட்சியின் வருகையின் பின்னர் ,அதில் சற்று மாற்றங்கள்,
இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது .
இந்த நிகழ்வில் செந்தமிழன் சீமான் அவர்களும்,
காணொளி வாயிலாக உரை நிகழ்த்தினார் .
வெள்ளவத்தையில் வெடிகுண்டு மீட்பு
வெள்ளவத்தையில் வெடிகுண்டு மீட்பு
இலங்கை தலைநகர் கொழும்பின் அருகே உள்ள வெள்ளவத்தை ,
பகுதியில் வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,
மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுது ,
வெளிநாட்டு தயரிப்பிலான கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த குண்டு எவ்வாறு அங்கு வந்தது என்பது தொடர்பில் ,
குற்ற தடுப்பு பிரிவினர் ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் ,மாதம் தோறும் பலர்
கொலை செய்யப்பட்டு வருகின்றமை .குறிப்பிட தக்கது











































